Volkswagen Taigun 1.0 TSI AT Topline: 6000 கி.மீ ரேப்-அப் ரிவ்யூ

Published On மார்ச் 14, 2024 By alan richard for வோல்க்ஸ்வேகன் டைய்கன்

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் கடந்த ஆறு மாதங்களாக சோதனைக்காக எங்களிடம் இருந்தது. டைகுனை 6000 கி.மீ -க்கு மேல் ஓட்டிய பிறகு அது எப்படி இருந்தது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

டைகுன் என்னுடன் இருந்த ஆறு மாதங்களில் நிறையவே இதை பற்றிய விஷயங்களை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டருக்கும் அதிகமாக போக்குவரத்து நெரிசலுக்கிடையே தினசரி அலுவலகப் பயண சூழ்நிலைகளில் காரை ஓட்டியிருக்கிறேன். மேலும் பல நகரங்களுக்கு இடையேயான சாலைப் பயணங்கள் மற்றும் மும்பைக்கு விரைவுச் சாலை வழியாக  புதிய வீட்டிற்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஒரு பயணம். கோவாவிற்கும், மகாராஷ்டிரா கடற்கரைக்கும் சில பயணங்கள் மற்றும் ஏராளமான வார இறுதிப் பயணங்களை இந்த காரின் மூலமாக மேற்கொண்டேன். அதன் மூலமாக  இந்த காரை பற்றி தெரிந்து கொண்ட விஷயங்கள் இங்கே.

சாலை தோற்றம்

மார்க்கெட்டில் நீண்ட காலம் விற்பனையில் இருந்தாலும் கூட காரின் தோற்றத்தை பொறுத்தவரை டிகுவான் எனக்கு இன்னும் பிடித்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இது கொஞ்சம் கடினமான எஸ்யூவி போன்ற தோற்றம் கொண்டது. இன்னும் சிறப்பாக என்ன இருக்கிறது சாலைகளில் அதிகமாக டைகுன் காரை பார்க்க முடிவதில்லை அதன் போட்டியாளர்களை போலல்லாமல் அது இன்னும் அவ்வப்போது தலையை காட்டுகின்றது. குர்குமா மஞ்சள் என் ரசனைக்கு முற்றிலும் பொருந்தாதவில்லை என்றாலும் இந்த பிரகாசமான நிறம் எனக்கு உறுதியாக தெரிகின்றது.

நடைமுறைத்தன்மை

நடைமுறை தன்மை என்பது ஜெர்மன் கார்களில் எப்போது சிறப்பாக இருக்கும் ஒரு விஷயம். டைகனின் கேபினில் பயன்படுத்தக்கூடிய ஸ்டோரேஜ் இடங்கள் ஏராளமாக உள்ளன மேலும் கேபின் வடிவமைப்பு மற்றும் உள்ளே இருக்கும் தொழில்நுட்பம் ஆகியவை நன்றாகவே உள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங் ஏர்-கூல்டு இருக்கைகள் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் டேஷ் போர்டில் ஏராளமான தகவல்கள் மற்றும் ஸ்டீயரிங் வீலில் நிறைய கன்ட்ரோல்கள் உள்ளன. எனவே நான் ஸ்டீயரிங் வீலில் இருந்து கைகளை எடுக்க வேண்டியதில்லை. பட்டன் அமைப்பின் லாஜிக் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நான் தொடர்ந்து வெவ்வேறு கார்களை ஓட்டுவதால் ஏற்பட்ட குழப்பமாக இருக்கலாம்..

மேலும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க நேரடி பட்டன் இல்லை, அழைப்பை துண்டிக்க பட்டன் எதுவும் இல்லை. ஒரு உரிமையாளராக இது உங்களுக்குப் பழக்கமான ஒன்று. 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் தெளிவாக உள்ளது. ஆனால் இதில் உள்ள சப்வூஃபரில் பன்ச் போதுமான அளவு இல்லை.

வசதிகள்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பற்றி பேசுகையில் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் நன்றாகவும் பயன்படுத்துவதற்கு ஸ்னாப்பியாகவும் இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவையும் கொண்டுள்ளது. கார்பிளேவை பற்றி என்னால் கருத்து தெரிவிக்க முடியவில்லை. ஆனால் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு கொஞ்சம் சிக்கலாக உள்ளது. சில நேரங்களில் அது அழைப்பில் தடையை ஏற்படுகிறது. அதை சரி செய்வதற்கு நீங்கள் இக்னிஷனை ஆன் செய்து ஆஃப் செய்ய வேண்டியிருக்கும்.

எனவே நான் புளூடூத் இணைப்பை மட்டுமே பயன்படுத்தினேன். சிஸ்டம் தொடர்ந்து உங்கள் மொபைலில் உள்நுழைய முயற்சிப்பதால் ஆண்ட்ராய்டு ஆட்டோ -லிருந்து துண்டிக்கப்படுவதும் ஒரு சிக்கலாக மாறும். எனவே புளூடூத்தை பயன்படுத்துவதற்கான ஒரே வழி கனெக்டிவிட்டி மெனுவில் உங்கள் மொபைல் ஆப்ஷனை தவிர்த்து விடுவது நல்லது.

மற்றொரு நவீன வசதி Type-C சார்ஜிங் போர்ட் ஆகும். என்னிடம் ஒரே ஒரு Type-C முதல் Type-C கேபிள் மட்டுமே உள்ளது இது எனது ஃபோனுடன் கொடுக்கப்பட்டது. எனவே நீண்ட பயணங்களில் இந்த கேபிளை எடுத்துச் செல்ல நான் நினைவில் வைத்துக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது.இந்த சிறிய சிக்கல் காலப்போக்கில் ஓரிரு வருடங்களில் மறைந்துவிடும். 

அதிர்ஷ்டவசமாக வயர்லெஸ் சார்ஜிங் பேட் உள்ளது. இது மிகவும் விரைவாக சார்ஜ் ஏற்றிக் கொள்ள பயன்படுகின்றது. அழைப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது புளூடூத் பயன்பாட்டில் இருந்தாலும் கூட ஃபோனை நன்றாக சார்ஜ் செய்கிறது. ஒரே ஒரு குறை சிறிது நேரம் கழித்து ஃபோன் வெப்பமடைகிறது. எனவே இங்கே ஒரு குளிரூட்டும் பகுதி கொடுக்கப்பட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.

தரம்

சிறப்பாக இருந்திருக்கலாம் என நினைக்ககூடிய சில பிட்கள் உள்ளன. பிளாஸ்டிக் பேனல் மற்றும் IRVM -ஐ சுற்றியுள்ள சுவிட்சுகள் சற்று தரம் குறைவானதைப் போல தோன்றின. ஆனால் எதுவும் மோசமாக இல்லை. எனவே இது ஒரு உணர்வு மட்டுமே என்பதை மட்டுமே தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பின்புற லைட் சுவிட்சுகளின் தரம் உங்கள் பின் இருக்கை பயணிகள் கருத்து தெரிவிக்க வேண்டிய ஒன்று.

ஓட்டுநர் அனுபவம்

இது நம்மை ஓட்டும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கின்றது. நீண்ட பயணங்களில் டைகுன் உடனான எனது நேரத்தின் போது நிறையவே நேர்மறையான விஷயங்களை பார்க்க முடிந்தது. சில சாலைகள் மற்றும் திறந்த நெடுஞ்சாலைகளைக் செல்லும் போது கூட 1-லிட்டர் பெட்ரோலுடன் கூட டைகுன் உண்மையில் ஜொலிக்கிறது. டர்போ மோட்டார் நிறைய பவரை கொண்டுள்ளது (லோடு இருந்தாலும் கூட) மிகவும் ஃபன் ஆக இருக்கும். கார் உங்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் மற்றும் நீங்கள் டைகுனை மிகவும் ஸ்போர்ட்டியான பாணியில் டிரைவிங் செய்யலாம்.

நகரத்தில் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஒரு பெரிய வரமாக இருந்தது. இது எனது பயணங்களை அமைதியாகவும் சலசலப்பு இல்லாததாகவும் வைத்திருந்தது. ஆனால் சில குறைபாடுகளும் இருக்கின்றன. டர்போ லேக்கை எதிர்ப்பதற்கு கியர்பாக்ஸ் மெதுவான நகர வேகத்தில் முதல் மற்றும் இரண்டாவது இடையே நிறைய மாற்றங்களைச் செய்கிறது. ஆட்டோமெட்டிக்காக இருந்தாலும் இது கொஞ்சம் தாமதத்தை கொண்டுள்ளது. நீங்கள் ஆக்ஸலரேஷனை விரும்பும் போது ​​உங்களுக்குத் தேவையான வேகத்தை பெறுவதற்கு முன் கியர்பாக்ஸ் முதலில் கீழே குறைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் அடிக்கடி உணரலாம்.

நகரத்தின் மைலேஜை பற்றி ஏற்கெனவே நான் முன்பு புகார் செய்திருக்கிறேன். எனது ஸ்டாப்-ஸ்டார்ட் சிட்டி டிராஃபிக்கின் மைலேஜை இரட்டை இலக்கத்தில் இருப்பதை நான் பார்த்ததில்லை. ட்ராஃபிக் குறைவாக இருக்கும்போது இரவு நேரத்தில்தான் 10 கிமீ/லி ஐ விட அதிகமாக இருப்பதைப் பார்த்தேன். எனவே 'சிறிய' இன்ஜின் கொண்ட காருக்கு இது கொஞ்சம் ஏமாற்றமான ஒன்று.

சாலைகள் காலியாக இருக்கும் போது செயல்திறன் அதிகரிக்கிறது. நீண்ட சாலைப் பயணங்களில் 15 கிமீ/லி மேல் மீட்டர் ரீடிங் பார்ப்பது சகஜம். எனவே சிறிய இன்ஜினை தேர்ந்தெடுக்க நீங்கள் முடிவு செய்தால் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று. மேலும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் 1.5 லிட்டர் ஸ்கோடா குஷாக்கை ஓட்டி சிறந்த நகர மைலேஜை பெற்றுள்ளோம். சுவாரஸ்யமாக பெரிய மோட்டாரிலிருந்து அதிக பவர் மற்றும் டார்க் ட்ராஃபிக்கை சிறப்பாகவும் திறமையாகவும் கையாள உதவுகிறது.

இறுதி தீர்ப்பு

டைகுன் நகரத்துக்கு ஏற்ற ஒரு அற்புதமான கார். இது நடைமுறைக்கு ஏற்றது, அகலமானது மற்றும் பயன்படுத்தக்கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது. டெக் பேக்கேஜ், காலியான சாலைகளில் டிரைவிங் அனுபவம், ஏர்-கூல்டு சீட்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் வசதி ஆகியவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மைலேஜ் என்று வரும் போது இந்த கார் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு 'சிறிய' இன்ஜின் எனக்கு இவ்வளவு குறைந்த மைலேஜ் தருவதைக் காட்டிலும் 1.5-லிட்டர் இன்ஜினுக்காக கொஞ்சம் கூடுதல் பணத்தைச் செலவிடலாம் என்பதையே நான் விரும்புவேன். இருப்பினும் நீங்கள் தரமான ஓட்டுநர் அனுபவம், நடைமுறை, குடும்பத்துக்கு ஏற்ற இடவசதி, தொழில்நுட்ப விஷயங்களின் தொகுப்பு மற்றும் நீண்ட பயணங்களுக்கு ஏற்ற காரை தேடினால் டைகுனை தேர்வு செய்யலாம்.

வாங்கிய தேதி: ஜூலை 20 2022
வாங்கியபோது கிமீ ரீடிங்: 6000
இதுவரை ஓட்டிய கிமீ: 12000
மைலேஜ்: 8.5 கிமீ/லி (நகரம்); 15.5கிமீ/லி (வார இறுதி பயணங்கள்)

வோல்க்ஸ்வேகன் டைய்கன்

வகைகள்*Ex-Showroom Price New Delhi
1.0 comfortline (பெட்ரோல்)Rs.11.70 லட்சம்*
1.0 highline (பெட்ரோல்)Rs.13.88 லட்சம்*
1.0 ஜிடி line (பெட்ரோல்)Rs.14.08 லட்சம்*
1.0 highline ஏடி (பெட்ரோல்)Rs.15.43 லட்சம்*
1.0 ஜிடி line ஏடி (பெட்ரோல்)Rs.15.63 லட்சம்*
1.0 topline (பெட்ரோல்)Rs.16.12 லட்சம்*
1.0 topline இஎஸ் (பெட்ரோல்)Rs.16.31 லட்சம்*
1.0 topline sound எடிஷன் (பெட்ரோல்)Rs.16.51 லட்சம்*
1.5 ஜிடி (பெட்ரோல்)Rs.16.77 லட்சம்*
gt edge trail edition (பெட்ரோல்)Rs.16.77 லட்சம்*
1.5 ஜிடி dsg (பெட்ரோல்)Rs.17.36 லட்சம்*
1.0 topline ஏடி (பெட்ரோல்)Rs.17.64 லட்சம்*
1.0 topline ஏடி இஎஸ் (பெட்ரோல்)Rs.17.88 லட்சம்*
1.0 topline ஏடி sound எடிஷன் (பெட்ரோல்)Rs.18.08 லட்சம்*
1.5 ஜிடி பிளஸ் க்ரோம் (பெட்ரோல்)Rs.18.18 லட்சம்*
1.5 gt plus edge (பெட்ரோல்)Rs.19.74 லட்சம்*
1.5 gt plus edge matte (பெட்ரோல்)Rs.18.44 லட்சம்*
1.5 ஜிடி பிளஸ் க்ரோம் இஎஸ் (பெட்ரோல்)Rs.18.54 லட்சம்*
1.5 ஜிடி பிளஸ் ஸ்போர்ட்ஸ் (பெட்ரோல்)Rs.18.54 லட்சம்*
1.5 ஜிடி edge ஸ்போர்ட் (பெட்ரோல்)Rs.18.74 லட்சம்*
1.5 gt plus edge es (பெட்ரோல்)Rs.18.38 லட்சம்*
1.5 ஜிடி edge ஸ்போர்ட் matte (பெட்ரோல்)Rs.18.80 லட்சம்*
1.5 gt plus edge matte es (பெட்ரோல்)Rs.18.80 லட்சம்*
1.5 ஜிடி பிளஸ் க்ரோம் dsg (பெட்ரோல்)Rs.19.44 லட்சம்*
1.5 gt plus edge dsg (பெட்ரோல்)Rs.19.64 லட்சம்*
1.5 gt plus edge matte dsg (பெட்ரோல்)Rs.19.70 லட்சம்*
1.5 ஜிடி பிளஸ் க்ரோம் dsg இஎஸ் (பெட்ரோல்)Rs.19.74 லட்சம்*
1.5 ஜிடி பிளஸ் ஸ்போர்ட்ஸ் dsg (பெட்ரோல்)Rs.19.74 லட்சம்*
1.5 ஜிடி edge ஸ்போர்ட் dsg (பெட்ரோல்)Rs.19.94 லட்சம்*
1.5 gt plus edge dsg es (பெட்ரோல்)Rs.19.94 லட்சம்*
1.5 ஜிடி edge ஸ்போர்ட் matte dsg (பெட்ரோல்)Rs.20 லட்சம்*
1.5 gt plus edge matte dsg es (பெட்ரோல்)Rs.20 லட்சம்*

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

வரவிருக்கும் கார்கள்

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

×
We need your சிட்டி to customize your experience