வோல்க்ஸ்வேகன் ஜெட்டா

` 14.6 - 20.8 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்ஜனவரி 25, 2016: வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ஜெட்டா மாடலில் புதிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான பீட்டில் மாடலில் பொருத்தப்பட்டிருந்த அதே இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பே இதிலும் இடம்பெறுகிறது. புதிய டச் ஸ்கிரீன் அமைப்பில், USB, Aux-In, புளு டூத் மற்றும் SD கார்ட் இணைப்புகள் போன்றவை உள்ளன. மேலும், இதில் CD ப்ளேபேக் ஆப்ஷனும் உண்டு. கடந்த வருடம் பிப்ரவரி மாதம், மேம்படுத்தப்பட்ட வோக்ஸ்வேகன் ஜெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இத்தகைய நவீன அம்சம் அதில் இடம்பெறவில்லை. என்ட்ரி-லெவல் ஆடம்பர செடான் பிரிவில் உள்ள, மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பைக் கொண்ட ஜெட்டாவின் விற்பனை இனி சூடு பிடிக்கும் என்று வோக்ஸ்வேகன் நம்புகிறது.
வாழ்க்கையை எது எளிமையாகவும், எளிதாகவும், விரும்பத்தக்கதாகவும், மாற்றுகிறதோ, அது நம்மைக் கவர்ந்து விடுகிறது. அதனால்தான், ஜெட்டா மாடல் வெளிவந்து பல வருடங்கள் ஆனாலும், கவர்ச்சிகரமான வடிவமைப்பில் இல்லை என்றாலும், நம்மை மிகவும் கவர்கிறது. நடுத்தர அளவில் உள்ள ஜெட்டா, அதிகாரபூர்வமாக ஒரு காம்பாக்ட் செடான் மாடலாக இருந்தாலும், இதன் பிரிவிலேயே மிகவும் பெரிய அளவிலானது என்று கூறும் அளவிற்கு பெரிய தோற்றத்தில் உள்ளது. நடுத்தர கார்களைப் போல பெரிய கேபின் பகுதி, நியாயமான விலை மற்றும் ஜெர்மானிய வாகன தொழில்நுட்பத்தில் உள்ள அதே அருமையான டிரைவிங் டைனமிக்ஸ் ஆகியவை இணைந்து, இந்திய வாகன சந்தையில் உள்ள மிகச்சிறந்த முக்கியமான கார்களில் ஒன்றாக இதை மாற்றுகின்றன.

சிறப்பம்சங்கள்


Table 1

வோக்ஸ்வேகன் ஜெட்டா விமர்சனம்


கண்ணோட்டம்


ஜெர்மானிய ஆட்டோமொபைல் நிறுவனமான வோக்ஸ்வேகனின் இந்திய துணை நிறுவனம், தனது பிரிமியம் செடான் வோக்ஸ்வேகன் ஜெட்டாவை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய வெர்ஷனில், புத்துணர்ச்சியூட்டும் உட்புற மற்றும் வெளிப்புற மாறுதல்கள் இருந்தாலும், கடந்த வெர்ஷனில் இருந்த அதே இஞ்ஜின் பொருத்தப்பட்டு வெளிவருகிறது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 1.4 லிட்டர் TSI பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் TDI டீசல் இஞ்ஜின்களே புதிய ஜெட்டாவிற்கும் சக்தியூட்டுகின்றன. இரண்டு இஞ்ஜின்களும் 6 வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் அமைப்புடன் இணைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இதன் டீசல் வெர்ஷனில் மட்டும் 6 ஸ்பீட் DSG ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் உண்டு. ட்ரெண்ட் லைன், கம்ஃபர்ட் லைன் மற்றும் ஹை லைன் என்னும் இதன் டிரிம் லெவல்களைக் கூட மாற்றாமல், வோக்ஸ்வேகன் நிறுவனம் அப்படியே தக்கவைத்துள்ளது. எனினும், முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஒரு சில சிறிய மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளதால், இது புத்தம் புதியதாக, இதன் சர்வதேச மாடலுக்கு இணையாகத் தோற்றம் அளிக்கிறது. மேலும், இதன் ஹெட் லைட் க்லஸ்டரில் ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புற ரேடியேட்டர் கிரில்லில் படுக்கை வசத்தில் மூன்று பட்டைகள் இணைக்கப்பட்டு வருகின்றது. (கடந்த முறை இரண்டு பட்டைகளே இடம்பெற்றது உங்கள் நினைவில் இருக்கலாம்). மூன்று திருநீர் பட்டைகளுக்கு நடுவே குங்குமப் போட்டு போல, கிரில் மீது உள்ள குரோம் பட்டைகள் நடுவே இந்நிறுவனத்தின் சின்னம் பொரிக்கப்பட்டுள்ளது. இதன் பம்பரில் பெரிய ஏர் இன்டேக் பகுதியும், மறுவடிவமைக்கப்பட்டுள்ள ஃபாக் விளக்குகளும் இடம்பெறுகின்றன. உட்புறத்தைப் பொறுத்தவரை, இந்த புதிய மாடலில் புத்தம் புதிய தட்டையான அடிப்பாகம் கொண்ட 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டு, கேபின் பகுதிக்குப் பந்தய காரின் தோற்றத்தைப் பெற்றுத் தருகிறது. உயர்தர AT வெர்ஷனில், இதே ஸ்டியரிங் வீல் பேடில் ஷிப்டர்களுடன் இணைக்கப்பட்டு, கூடுதல் வசதியுடன் வருகிறது. அதே நேரம், உட்புறத்தில் ஒரு சில இடங்களில், முக்கியமாக காக்பிட் பகுதியில் பளபளப்பான கருப்பு நிற வேலைப்பாடுகள் இணைக்கப்பட்டிருப்பதால், உட்புற அமைப்பின் ஒட்டுமொத்த தோற்றமும் மாற்றம் பெறுகிறது. உங்களுக்கு மற்றுமொரு நல்ல செய்தி என்னவென்றால், வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த சீரிஸில் வரும் அனைத்து வேரியண்ட்களிலும் கிருயிஸ் கண்ட்ரோல் அமைப்பை கட்டாயமாக்கி உள்ளது. மேலும், புதிய ஜெட்டாவில் இணைக்கப்பட்டுள்ள பிரதானமான டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பைப் பற்றி கட்டாயம் பேச வேண்டும். இந்த செடான் காரில் தற்போது மேம்படுத்தப்பட்ட் 6 டிஸ்க் CD சேஞ்சர் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட RCD 510 டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு, பயணிகள் அனைவரையும் அற்புதமான இசை வெள்ளத்தில் மிதக்க வைக்கிறது. புதிய மாற்றங்கள் தவிர, பழைய மாடலில் இருந்த பலவிதமான அமைப்புகள் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மிகவும் அதிகப்படியான சொகுசு அம்ஸங்களான இரண்டு இருக்கை வரிசையிலும் இதமான குளிரைப் பரவச் செய்யும் டூயல் ஜோன் க்ளைமாடிரானிக் ஆட்டோமேடிக் ஏ‌சி கருவி, குளிரூட்டப்பட்ட கிலோவ் பாக்ஸ் பகுதி, பக்கவாட்டுப் பகுதி மற்றும் பின்புற ஜன்னல்களில் ஹீட் இன்சுலேட்டிங் கிளாஸ், மின்னியக்கம் மூலம் இயங்கும் ஜன்னல்கள் மற்றும் வெளிப்புற கண்ணாடிகள் ஆகியவற்றையும் இணைத்து, பயணிகள் ஆடம்பரமான சொகுசு வசதிகளை அனுபவிக்கச் செய்துள்ளனர். பாதுகாப்பு அம்சங்கள் என்று பார்க்கும் போது, எலெக்ட்ரானிக் டிஃபரென்ஷியல் லாக், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், 6 காற்றுப் பைகள் மற்றும் இஞ்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் கார்ட் போன்ற அம்சங்கள் இந்த சீரீஸில் உள்ள அனைத்து வேரியண்ட்களிலும் வருகின்றன. இவை தவிர மேம்பட்ட எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஃபங்சன் மற்றும் ஆன்டி-ஸ்லிப் ரெகுலேஷன் போன்றவை, வழுக்கும் நிலப்பரப்பிலும் ஸ்திரத்தன்மையுடன் வண்டி ஓடுவதற்கு உதவுகின்றன. தற்போது இந்திய வாகன சந்தையில் உள்ள டொயோட்டா கரோலா, ஹுண்டாய் எலாண்ட்ரா மற்றும் ரினால்ட் ஃபுளூயென்ஸ் போன்ற கார்களுடன் புதிய ஜெட்டா நேருக்கு நேர் நின்று மோதும் என்று இந்நிறுவனம் கூறுகிறது. வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்ற அனைத்து வாகனங்களைப் போலவே, இந்த புதிய செடானும் கிலோமீட்டர் கணக்கில்லாமல், இரண்டு வருட வாரண்டியுடன் வருவது வரவேற்கத்தக்கதாகும்.

வெளிப்புற அமைப்புகள்:


டாஃபீ ப்ரௌன், பியூர் ஒயிட், டீப் பிளாக், பிளாட்டினம் க்ரே, ரிஃப்லக்ஸ் சில்வர் மற்றும் புளு சில்க் என்ற 6 வண்ணங்களில் வரும் புதிய ஜெட்டாவின் வெளிப்பகுதியில் ஒரு சில மிகச் சிறிய மாற்றங்களே செய்திருந்தாலும், புதிய அமைப்புகளால் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சி பொங்கும் தோற்றம் அனைவரையும் வசீகரிக்கும் விதத்தில் உள்ளது. முன் மற்றும் பின்பகுதிகளில் ஒரு சில மேம்பாடுகள் உங்களுக்குக் கண்கூடாகத் தெரிந்தாலும், இதன் பக்கவாட்டுத் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை என்று இந்நிறுவனம் கூறுகின்றது. ஒரு மாறுதலுக்கு இந்த காரின் பின்பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம். ஜெட்டா செடானில் இரண்டு தட்டுகளாக இருக்கும் புத்தம் புதிய டெய்ல் லைட் க்லஸ்டரில் அழகான பிரேக் லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. பின்புற கதவிலும் சிறிய மாறுதலைக் காண முடிகிறது. ஏராளமான குரோம் வேலைப்பாடுகள் இந்த கதவை அலங்கரிக்கின்றன. அது மட்டுமல்ல, இந்நிறுவனத்தின் பாரம்பரிய சின்னத்தையும் தாங்கி நிற்பதால், மிகவும் அருமையாக உள்ளது. பின்புற பம்பரில் கூடுதல் பாதுகாப்பிற்காக இரண்டு ரிஃப்லெக்டர்கள் தவிர, வேறு எந்த அமைப்பும் மாறாமல் அப்படியே உள்ளது, பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, இது மிகவும் பாங்கான தோற்றத்துடன் உள்ளது. கதவு கைப்பிடிகள் மற்றும் ORVM –களின் மேற்பகுதி பாடி நிறத்திலேயே வருகின்றன. மேலும், வெளியில் உள்ள விங் மிரர்கள் மீது திரும்பும் போது விட்டு விட்டு எரியும் LED டர்ன் பிளிங்கர்கள் இணைக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு மட்டுமல்ல நிரந்தர அழகையும் தருகின்றன. ஜெட்டாவின் அடிப்படை மற்றும் நடுத்தர டிரிம்களில் செடோனா அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன, அதே நேரம், இதன் உயர்தர வேரியண்ட்டில் ஸ்டைலான அட்லாண்டா இலகு எடை ரிம்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பந்தய கார் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. முன்புறம் வந்து பார்த்தால், மறுவடிவமைக்கப்பட்டுள்ள பம்பர் காரணமாக ஜெட்டா புத்தம் புது தோற்றத்துடன் அசத்தலாக உள்ளது. தற்போது, இதன் காற்றை உள்வாங்கும் பகுதி பெரிதாகவும், ஃபாக் விளக்குகள் புது வடிவம் கொண்டதாலும் இதற்கு புது வடிவம் கிடைத்துள்ளது. ரேடியேட்டர் கிரில் பகுதியிலும் புதிய அமைப்பை நீங்கள் பார்க்கலாம். மூன்று பட்டைகளின் நடுவே இந்நிறுவனத்தின் சின்னம் கொண்டு கம்பீரமாக இருக்கிறது. ஹெட் லைட் க்லஸ்டர் மாற்றமில்லாமல் அப்படியே உள்ளது. எனினும், உள்ளே புதிய பை-ஜெனான் ஹெட் லாம்ப்கள் மற்றும் காலையிலும் பளீரென்று எரியும் LED விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கும் இதை, நீங்கள் அடிப்படை டிரிம்மில் எதிர்பார்க்க முடியாது. ஹை லைன் வேரியண்ட்களில் மட்டுமே இந்த அமைப்பு வருகின்றன, ஏனைய டிரிம்களில் ஹாலோஜென் ஹெட்லைட்கள் மட்டுமே கட்டாயமான அம்சமாக வருகின்றன.

வெளிப்புற அளவுகள்:


தற்போது வெளியாகி உள்ள இந்த புதிய செடானின் நீளம் 4659 மிமீ ஆகவும், அகலம் 1778 மிமீ ஆகவும் உள்ளது. மொத்தத்தில் இதன் உயரம் 1453 மிமீ என்ற அளவும், கிரவுண்ட் க்ளியரன்ஸ் 159 மிமீ என்ற அளவும், இதன் நீளமான வீல்பேஸ் 2648 மிமீ என்ற அளவும் சேர்ந்து, இதன் உட்புற கேபின் பகுதியை கால்கள் இடிக்காத விசாலமான பகுதியாக அமைத்து, பயணத்தை இதமாக்குகின்றன.

உட்புற அமைப்புகள்:


புதிய ஜெட்டாவில் உள்ள உட்புற அமைப்புகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இதற்கு முந்தைய மாடலில் இருப்பதையே இந்நிறுவனத்தினர் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். எனினும், டாஷ்போர்டு மற்றும் ஸ்டியரிங் வீல் போன்றவற்றின் மீது உள்ள பளபளக்கும் கருப்பு நிறத்தில் ஜொலிக்கும் புதிய வேலைப்பாடுகள் கண்ணைக் கவருகின்றன. இருக்கைகளின் அமைப்பு சிறந்த முறையில் உள்ளதால், பயணிகள் வசதியாக அமர்ந்து நீண்ட தூரம் வரை பயணிக்கலாம். அது போலவே, பக்கவாட்டில் உள்ள போல்ஸ்டர்கள் மற்றும் ஹெட் ரெஸ்ட்டிரைண்ட்கள் ஆகியவை கழுத்தில் இருந்து தொடைப் பகுதி வரை சரியான விதத்தில் சப்போர்ட் செய்து களைப்பு தெரியாமல் பயணிக்க உதவுகின்றன. கேபின் பகுதியில் இரட்டை வண்ணங்கள் தீட்டப்பட்டு, டாஷ்போர்டு மற்றும் கதவு பேனல்களில் ஒரு சில மரவேலைப்பாடுகள் செய்யப்பட்டு உட்புற அமைப்பிற்கு உயர்தர தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் சென்டர் கன்சோல் மிகவும் பெரிதாக, மேம்பட்ட இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு, ஆடியோ யூனிட் மற்றும் ஏராளமான கட்டுப்பாட்டு ஸ்விட்ச்கள் பொருத்தப்பட்டு வருகின்றது. 3 ஸ்போக்குகள் கொண்டு, தட்டையான அடிப்பகுதியைக் கொண்டு, மெட்டாலிக் வேலைப்பாடுகளைக் கொண்ட இதன் ஸ்டியரிங் வீல் கையாள்வதற்கும் வசதியாக இருக்கிறது. மேலும், இதில் ஒரு சில மல்டி-ஃபங்ஷனல் ஸ்விட்ச்கள் இணைக்கப்பட்டு, ஓட்டுனருக்கு கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டருக்கு டிவின்ட்யூப் வடிவம் தந்து, இதை மெட்டாலிக் வேலைப்பாடுகள் மூலம் அழகு படுத்தியுள்ளனர். இதன் மல்டி-ஃபங்ஷனல் ஸ்கிரீன் மூலம், வாகனத்தின் ஸ்பீட், ஃப்யூயல் அளவு, இஞ்ஜின் தட்பவெட்பம் மற்றும் மேலும் பல எச்சரிக்கை தகவல்கள் என அனைத்து முக்கியமான விவரங்களையும் ஓட்டுனர் இதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நடுத்தர மற்றும் உயர்தர டிரிம்களில் லெதர் விரிப்புகளும், அடிப்படை டிரிம்களில் டோரிக் துணி விரிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள லெதர் பேக்கேஜில் ஸ்டியரிங் வீல் மீது லெதர், கியர் மற்றும் கியர் ஷிப்ட் நாப் மீது லெதர் மற்றும் ஹேண்ட் பிரேக் மீது லெதர் என்று பல இடங்களில் லெதர் மூலம் அலங்கரிக்கப்பட்டு, ஆடம்பரத் தோற்றம் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் மீது உள்ள அளவீட்டுக் கருவிகள் மீது க்ரோமிய வளைவுகள், AC துளைகள் மீது க்ரோம் முலாம் மற்றும் ரோட்டரி லைட் ஸ்விட்ச் மீது குரோம் என்று இதன் கேபின் பளபளக்கிறது. அது மட்டுமல்ல, ஒளியூட்டப்பட்ட மற்றும் பூட்டும் வசதி கொண்ட கிலோவ் பாக்ஸ், பின்புற AC துளைகள், குளிர் கண்ணாடியை வைப்பதற்கான இடைவெளி, மல்டி-ஃபங்சன் டிஸ்ப்ளே மற்றும் 60:40 விகிதத்தில் பிரித்து மடக்கும் வசதி கொண்ட பின்புற இருக்கைகளின் சாயும் பகுதிகள் என பல கவர்ச்சிகரமான வசதிகளை நீங்கள் புதிய ஜெட்டாவில் பார்க்கலாம்.

உட்புறம் உள்ள சொகுசு வசதிகள்:


வோக்ஸ்வேகன் ஜெட்டா ஆடம்பர செடான் கார் தற்போது மொத்தம் 3 டிரிம் லெவல்களில் வருகின்றது. அவை ட்ரெண்ட் லைன், கம்ஃபர்ட் லைன் மற்றும் ஹை லைன் ஆகியவையாகும். இவை அனைத்திலும் தற்போது கிருயிஸ் கண்ட்ரோல் அமைப்பு பொருத்தப்பட்டு, கார் ஓட்டுவதை எளிதாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில், ட்ரெண்ட் லைன் என்னும் அடிப்படை வேரியண்ட்டியே அனைத்து சொகுசு அம்சங்களும் இடம்பெறுகின்றன. முன்புறத்தில் இருக்கைகளுக்கு நடுவே ஆர்ம் ரெஸ்ட் பகுதி மற்றும் அதன் கீழே, சிறிய பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடைவெளி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அது மட்டுமல்ல, ஸ்டியரிங் வீல் மீது கியர் மாற்றும் கியர்ஷிப்ட் செலெக்டர் உட்பட அனைத்து பகுதியிலும் லெதர் பேக்கேஜ், க்ரூயிஸ் கண்ட்ரோல் அமைப்பு, தானாக மங்கும் உட்புற கண்ணாடி, ஹெட் லாப்ஸ் ஆக்டிவேஷன், முன்புற விளக்குகளில் கம்மிங்க் ஹோம் அண்ட் லீவிங்க் ஹோம் வசதி (நீங்கள் வெளியே வரும் போது, அனைத்து லைட்களும் தானாகவே அணைக்கபட்டு, பின்பு, நீங்கள் ரிமோட் மூலம் திறக்கும் போது தானாக எரியும் வசதி),, முன்புறத்தில் 12 V சாக்கெட், ஒளிரும் முகம் பார்க்கும் கண்ணாடி, முன் பற்றும் பின்புறங்களில் அக்கோஸ்டிக் வார்னிங்குடன் வரும் பார்க் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல் அமைப்பு, மழையை உணரும் அமைப்பு, பிரித்து மடக்கும் வசதி கொண்ட பின்புற இருக்கையின் பேக் ரெஸ்ட், ஒளிரும் கிலோவ்பாக்ஸ், மல்டி-ஃபங்ஷனல் டிஸ்ப்ளே அமைப்பு மற்றும் உயர்தர துணியால் ஆனா இருக்கை விரிப்புகள், கைபேசிகளுக்காக புளு டூத் இணைப்பு, கிலோவ் கம்பார்ட்மெண்ட் பகுதியில் கைப்பேசிகளுக்காக MEDIA-IN அடாப்ட்டர் கேபிள் என பல சொகுசு வசதிகள் இணைக்கப்பட்டு புதிய ஜெட்டா வருகிறது. அது மட்டுமல்ல, இதில் குளிரூட்டப்பட்ட கிலோவ் பாக்ஸ், சாய்த்து மடக்கக் கூடிய ஸ்டியரிங் வீல், ஹீட் இன்சுலேடிங் விண்ட் ஸ்கிரீன், லைட் இணைந்த முகம் பார்க்கும் கண்ணாடி, முன்புற இருக்கைகளின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி மற்றும் மின்னியக்கம் மூலம் மாற்றி அமைக்கக் கூடிய வெளிப்புற மிரர்களின் ஹீட்டிங்க் அமைப்பு, காரின் உட்புறம் உள்ள தட்பவெப்பத்தை இதமாக்குவதற்கு க்ளைமேடிரானிக் ஆட்டோமேடிக் டூயல் ஜோன் AC கருவி மற்றும் பின்புறத்தில் காற்றுத் துளைகள் என பல அம்சங்கள் இடம்பெறுகின்றன. இது தவிர, இதன் நடுத்தர கம்ஃபர்ட்லைன் டிரிம்மில் சன்கிளாஸ் ஹோல்டர், லெதர் விரிப்புகள், ரெயின் சென்சார்கள், பார்க்கிங் அஸ்சிஸ்டன்ஸ், ஓட்டுனரின் இருக்கைக்கு மட்டும் லம்பர் சப்போர்ட், சிறிய பொருட்களை வைத்துக் கொள்ள முன்புற சீட்டின் பின்புறம் பாக்கெட்கள், புத்தகம் வாசிக்க உதவும் முன்புற விளக்குகள், மற்றும் ஆட்டோமேடிக் ஹெட் லைட் ஆக்டிவேஷன் ஃபங்சன் ஆகியவை இடம்பெறுகின்றன. அதே நேரம், இதன் உயர்தர வேரியண்ட்டில் 12 விதமாக ஓட்டுனரின் இருக்கையை மாற்றி அமைக்கும் வசதி, லம்பர் சப்போர்ட், மற்றும் பேடில் ஷிப்டர்களுடன் கூடிய மல்டி-ஃபங்ஷனல் ஸ்டியரிங் வீல் ஆகியவை பொருத்தப்பட்டு ஆடம்பரமான சொகுசான பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உட்புற அமைப்பின் அளவுகள்:


இதற்கு முன்பு சொன்னது போல்வே, புதிய வெர்ஷன் ஜெட்டாவில் விசாலமான இடவசதி உள்ளது. கால்கள் இடிக்காமல், தோள்கள் உராயாமல் சுகமாக பயனிக்கலாம். இதன் பூட் பகுதி கொள்ளளவும் பெரிதாகவே உள்ளது. பூட் அளவை மேலும் அதிகரிக்க, பின்புற இருக்கையை உங்களுக்கேற்ற விகிதத்தில் பிரித்து மடக்கிக் கொள்ளலாம். அதே நேரம், நீங்கள் நெடுந்தூரம் பயணிக்கும் வேளைகளில் இதில் உள்ள பெரிய 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டாங்க் மிகவும் உதவியாக இருக்கும்.

ஆக்ஸெலரேஷன் மற்றும் பிக்அப்:


வோக்ஸ்வேகன் நிறுவனம், ஜெட்டாவின் டீசல் வெர்ஷனில் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் DSG ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் ஆகிய இரண்டு விதமான ட்ரான்ஸ்மிஷன்களை ஆப்ஷன்களாகத் தருகிறது. மேனுவல் வெர்ஷன் மணிக்கு 210 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தில் இயங்குகிறது. அதே நேரம், இதன் ஆட்டோ கியர் பாக்ஸ் மணிக்கு 208 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் செல்கிறது. இவற்றின் அதிகபட்ச வேகத்தில் சிறிய மாற்றம் இருந்தாலும், இவை இரண்டும் ஸ்டார்ட் செய்த சுமார் 9 வினாடிகளில் 100 kmph என்ற வேகத்தைத் தொட்டு விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஜெட்டாவின் பெட்ரோல் இஞ்ஜின் பற்றி குறிப்பிடும் போது, அது 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டு அதிகபட்சமாக 202 kmph என்ற அளவு வேகத்தில் செல்கிறது என்று இந்நிறுவனம் உறுதி கூறுகிறது. அதே நேரம், ஜெட்டாவின் பெட்ரோல் வெர்ஷன் சுமார் 10 வினாடிகளில் 100 kmph அளவு வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டதாகும்.

இஞ்ஜின் மற்றும் செயல்திறன்:


வோக்ஸ்வேகன் நிறுவனம், ஜெட்டா மாடல் சீரீஸில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் என்ற இரண்டு ஆப்ஷன்களையும் இணைத்துள்ளது. டைரக்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் அமைப்பில் இயங்கும் 1.4 லிட்டர் TSI இஞ்ஜின் இதன் பெட்ரோல் டிரிம்களில் பொருத்தப்பட்டுள்ளது. டபுள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வ் கான்பிகரேஷன் அடிப்படையில் உருவான இந்த இஞ்ஜினில் 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகள் பொருத்தப்பட்டு, 1390 cc திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இஞ்ஜினுடன் டர்போ சார்ஜர் இணைக்கபப்ட்டு, இதன் சக்தி மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 5000 rpm என்ற அளவில் 120.33 bhp அதிகபட்ச சக்தி மற்றும் 1500 – 4000 rpm என்ற அளவில் 200 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த மோட்டோரை மிகவும் நேர்த்தியாகவும் திறனுடனும் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் இணைத்து, முன்புற சக்கரங்களுக்கு டார்க்கை செலுத்தும்படி செய்துள்ளது. அதே நேரம், 1968 cc திறன் கொண்ட 2.0 லிட்டர் TDI இஞ்ஜின் இதன் டீசல் டிரிம்களில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது டர்போ சார்ஜருடன் இணைக்கப்பட்டு, காமன் ரைல் டைரக்ட் இன்ஜெக்ஷன் அமைப்பு மூலம் இயங்குகிறது. DOHC அடிப்படையில் இயங்கும் 4 சிலிண்டர்கள் கொண்ட இந்த இஞ்ஜின், 4200 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 138.1 bhp சக்தி மற்றும் 1750 – 2500 rpm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. நீங்கள், இந்த இஞ்ஜினுடன் இணைப்பதற்கு, 6 ஸ்பீட் மேனுவல் அல்லது DSG ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் என்ற இரண்டு வித ட்ரான்ஸ்மிஷனில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மைலேஜ்:வோக்ஸ்வேகன் ஜெட்டாவின் 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் ஸ்ட்ராட்டிஃபைட் டைரக்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், நகர சாலைகளில் பயணிக்கும் போது இது 12 kmpl என்ற அளவு குறைந்தபட்ச மைலேஜும், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, 15 kmpl என்ற அளவு அதிகபட்ச மைலேஜும் தருகிறது. அதே நேரம், இதன் 2.0 லிட்டர் இஞ்ஜின் காமன் ரைல் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் அமைப்பின் உதவியுடன் இயங்குவதால், இது அதிட்டபட்சமாக சுமார் 17 kmpl என்ற அளவில் இருந்து 19.33 kmpl என்ற அளவு மைலேஜ் தருகிறது. இதற்கு மாறாக, இதன் டீசல் ஆட்டோமேடிக் டிரிம், 16.96 kmpl என்ற அளவு மைலேஜ் தருகிறது. நாங்கள் இங்கே விவரித்திருக்கும் மைலேஜ் அளவுகளை, ARAI நிறுவனம் தகுந்த சோதனைகளின் பின் வெளியிட்ட அதிகாரபூர்வமான அளவுகள் என்பதை நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.

வோக்ஸ்வேகன் ஜெட்டாவின் சக்தி:


ஜெட்டாவின் பெட்ரோல் இஞ்ஜினில் 4 இன்-லைன் சிலிண்டர்கள் உள்ளன. மேலும் இது டர்போ சார்ஜர் மற்றும் ஒரு இன்டர் கூலருடன் இணைக்கப்பட்டுள்ளது. 1390 cc திறன் கொண்ட இந்த இஞ்ஜின் அதிகபட்சமாக 120.33 bhp என்ற அளவு சக்தி மற்றும் 200 Nm என்ற அளவு டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மற்றொருபுறம், 4 சிலிண்டர்கள் கொண்ட இதன் டர்போ சார்ஜ்ட் டீசல் இஞ்ஜின் DOHC வால்வ் கான்பிகரேஷன் அடிப்படையில் இயங்குகிறது. இது, அதிகபட்சமாக 138.1 bhp சக்தியும், 320 Nm என்ற அளவு அதீத டார்க்கையும் உற்பத்தி செய்து இந்த காரை இயக்குகிறது.

ஸ்டீரியோ மற்றும் ஆக்செசரீஸ்:


ஜெட்டாவின் அடிப்படை டிரிம்மில் மேம்பட்ட RCD 220 ஆடியோ யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு CD ப்ளேயர், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் USB மற்றும் AUX-in ஆகியவற்றிற்கான இணைப்புகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. அதே நேரம், இதன் நடுத்தர டிரிம்மில் RCD 320 ஆடியோ அமைப்பு புளுடூத் வசதியுடன் வருகிறது. மேலும், இதன் டாப் எண்ட் வெர்ஷனில் RCD 510 டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 டிஸ்க் CD சேஞ்சர் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங் வசதிக்காகவும், கைகளை பயன்படுத்தாமல் வேலை செய்யவும் மேம்பட்ட புளு டூத் வசதி போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பிற்கான கட்டுப்பாட்டு ஸ்விட்ச்கள் புதிய வடிவத்தில் உள்ள ஸ்டியரிங் வீல் மீது பொருத்தப்பட்டுள்ளன. இவை கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கப்பட்டு, எளிதாக பயன்படுத்தும் விதத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, ஜெட்டாவின் வெளிப்புறம் மற்றும் உட்புற அமைப்புகளை பாடி கிராஃபிக்ஸ், ரூஃப் ரைல்ஸ், பின்புற கதவு மீது ஸ்பாய்லர், சைட் ஸ்கேர்ட்ஸ் மற்றும் டோர் வைசர்கள் போன்ற ஏராளமான நவீன ஸ்டைலான அமைப்புகளால், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அலங்கரித்துக் கொள்ளலாம்.

பிரேக் அமைப்பு மற்றும் கையாளும் விதம்:


வோக்ஸ்வேகன் பொறியாளர்கள் ஜெட்டாவின் முன் மற்றும் பின்புற சக்கரங்களில் உறுதியான டிஸ்க் பிரேக்குகளைப் பொருத்தி, அவற்றில் உயர்தர பிரேக் கேலிப்பர்களைப் பொருத்தி உள்ளனர். இது தவிர, கூடுதலாக ஒரு ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் அமைப்பு மற்றும் பிரேக் அஸ்சிஸ்ட் வசதி ஆகியவை இடம்பெறுவதால் பிரேக் அமைப்பு சிறப்பாக இயங்குகிறது. அதே நேரம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதால், ஸ்திரத்தன்மை அதிகரிக்கப்பட்டு வேகமாக ஓடுவதற்கு உதவுகிறது. ஜெட்டா செடானில் அருமையான சஸ்பென்ஷன் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புற ஆக்ஸிலில் ஷாக் அப்ஸார்பர்கள் மற்றும் ஸ்டெபிலைசர்கள் இணைந்த காயில் ஸ்பிரிங் அமைப்பு இடம்பெறுகிறது. அதே நேரம், இதன் பின்புற ஆக்ஸிலில் ஸ்டெபிலைசர் பார்கள் இணைந்த மல்டி-லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெறுவதால், நன்றாக பேலன்ஸ் செய்யப்பட்டு, ஸ்திரத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ரேக் மற்றும் பினியான் அடிப்படையில் ஆனா பவர் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 5.5 மீட்டர்கள் டர்னிங் விட்டம் அளவில் இயங்கும் இதன் பவர் ஸ்டியரிங்கில் ஸ்பீட் சென்சிடிவ் ஃபங்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக, ஜெட்டாவில் பயணம் செய்வது சுகமான அனுபவமாகவும், கையாளும் விதம் எளிமையானதாகவும் இருப்பது இதன் பலமாகக் கருதப்படுகிறது. எனவே, புதிய ஜெட்டாவிலும் வோக்ஸ்வேகன் நிறுவனம் அதைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:ஜெட்டி சீரீஸில் உள்ள அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது, இந்நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலில், 4 கதவுகளிலும் ரெட்ரோ ரிப்லெக்ட்டர்கள், ஆறு காற்றுப் பைகள், பிரேக் பேட் வியர் இன்டிகேட்டர், இஞ்ஜின் கார்ட், 2 ரிமோட் கண்ட்ரோல் சாவிகளுடன் வரும் சென்ட்ரல் லாக்கிங் அமைப்பு, பின்புறம் 3 ஹெட் ரெஸ்ட்டிரைண்ட்கள் மற்றும் ஒரு மேம்பட்ட இஞ்ஜின் இம்மொபிலைசர் ஆகியவை இடம்பெறுகின்றன. இவை தவிர, இந்த பட்டியலின் சிறப்பு இடத்தில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் அமைப்பு, பிரேக் அஸ்சிஸ்ட் அமைப்புடன் வரும் ABS, ஆன்டி-ஸ்லிப் ரெகுலேஷன், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் அமைப்பு மற்றும் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதியுடன் வரும் முன்புற சீட் பெல்ட்கள் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. எப்போதுமே பயணிகளின் பாதுகாப்பை முக்கியமாகக் கருதும் வோக்ஸ்வேகன் நிறுவனம், இதில் மேற்சொன்னத்தைத் தவிர ஃபெடீக் டெடெக்ட்டிஷன் அமைப்பு, பின்புறத்தில் நடுவே மும்முனை சீட் பெல்ட், பின்புற இருக்கையில் ISOFIX மௌண்டிங் பாய்ண்ட்ஸ் கொண்ட குழந்தைகளுக்கான இரண்டு இருக்கைகள், முன்புற பயணிக்கான காற்றுப் பை டி-ஆக்டிவேஷன் அமைப்பு, முன் மற்றும் பின்புற பயணிகளுக்கான கர்ட்டன் ஏர்பேக்குகள், முன்புறம் பக்கவாட்டு காற்றுப் பைகள் போன்ற பல நவீன அம்சங்கள் பொருத்தியுள்ளதால், விபத்து சேதங்கள் குறைக்கப்படுகின்றன என்பதை விட தவிர்க்கப்படுகின்றன என்றே கூறலாம். ஆடம்பர செடான் பிரிவில் உள்ள மற்ற கார்களான டொயோட்டா கரோலா ஆல்டிஸ் போன்ற கார்களை விட, ஜெட்டாவில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

சக்கரங்கள்:


ஜெட்டாவில் உள்ள அனைத்து வேரியண்ட்களிலும் உறுதியான 16 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் மீது வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சின்னம் பொரிக்கப்பட்டு, அவை அழகாகச் சுழல்கின்றன. இதன் ரிம்கள் மீது அதிக செயல்திறன் மிகுந்த ட்யூப் லெஸ் ரேடியல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. எப்படிப்பட்ட சாலையில் பயணிக்கும் போதும், அதிகப்படியான ஸ்திரத்தன்மையை இவை தருகின்றன.

சாதகங்கள்:1. பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறையும் காண முடியாத அளவில் அருமையாக அமைக்கப்பட்டு உள்ளன.
2. டீசல் இஞ்ஜினின் செயல்திறன் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.
3. ஆக்ஸெலரேஷன் மற்றும் பிக்அப் ஆகியவை பாராட்டைப் பெறுகின்றன.
4. இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பை மேம்படுத்தி இருப்பது இதன் பலமாகும்.
5. புதுப்பிக்கப்பட்டுள்ள வெளிப்புற அமைப்புகள் இதற்கு புதிய தோற்றத்தை அளிக்கின்றன.

பாதகங்கள்1. விலை அதிகமாக உள்ளது.
2. இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, எரிபொருள் டாங்க் மற்றும் பூட் பகுதி கொள்ளளவு ஆகியவை குறைவாகவே உள்ளன.
3. குறைவான கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவு பாராட்டைப் பெருவதில்லை.
4. எரிபொருள் திறனில் எந்த முன்னேற்றமும் இல்லை
5. உட்புற அமைப்புகளில் மேலும் கவனம் செலுத்தி, அவற்றை மேம்படுத்தி இருக்கலாம்.