டொயோட்டா இனோவா

` 10.3 - 16.5 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்பிப்ரவரி 10, 2016: ஜப்பானிய வாகன தயாரிப்பாளரான டொயோடா நிறுவனம், தனது இன்னோவா மாடலின் அடுத்த ஜெனரேஷனை 2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வெளியிட்டது. புதிய மாடலின் பெயர் இன்னோவா கிரிஸ்டா.
சர்வதேச அளவில், தனது பணியை மிகவும் அக்கறையுடன் செய்யும் நிறுவனம் என்ற நற்பெயரை டொயோடா நிறுவனம் எடுத்துள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வாகனங்களின் உற்பத்தியைப் பற்றி நாங்கள் இங்கு பேசவில்லை, மாறாக, சொகுசாக பயணம் செய்வதற்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ள வாகனங்களைப் பற்றி பேசுகிறோம். டொயோடா இன்னோவாவை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் நாளில் இருந்து அக்கறையுடன் செயல்படுவதால், தன்னிகரற்ற தலைமை பீடத்தில் அமர்ந்துள்ளது. எவ்வளவு அதிகமான நபர்களை ஏற்ற முடியுமோ அவ்வளவு நபர்களையும் ஏற்றிக் கொண்டு பயணிக்கும் பொது போக்குவரத்து வாகனங்களைக் கொண்ட இந்தியாவில், MUV பிரிவு கார்கள் வெற்றி பெற்றுவிடும் என்று நாம் எதிர்பார்த்தோம், ஆனால் மிகப் பெரிய போராட்டத்திற்கு பின்பே டொயோடா இன்னோவா வெற்றி பெற்றது. எனினும், மாற்றத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் இந்திய வாகன சந்தையின் போக்கிற்கு இணங்க, அனைவரும் விரும்பும் இன்னோவாவையும் மாற்றி அமைக்க இந்நிறுவனம் முடிவு செய்து புதிய இன்னோவா கிரிஸ்டாவை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒரு சில ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் வெளிவந்திருந்தாலும், இது தனது முதலிடத்தை விட்டுக் கொடுக்கவில்லை. உண்மையில், MPV பிரிவில் நுழையும் ஒவ்வொரு புதிய மாடலும், இன்னோவாவை உதாரணமாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள இன்னோவா கிரிஸ்டா தோற்ற அளவுகளில் பெரிதாக வருகிறது. 4735 மிமீ என்ற நீளத்தில், 1795 மிமீ என்ற உயரத்தில் மற்றும் 1830 மிமீ என்ற அகலத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் வீல் பேஸ் அளவு மாற்றம் அடையாமல் 2750 மிமீ என்ற அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, உட்புற இடவசதி அதே அளவில் இருக்கும். மர வேலைப்பாடுகள் நிறைந்த டாஷ்போர்டு, நவீன இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் மற்றும் மேம்பட்ட 8 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு ஆகியவை இதன் உட்புறத்தில் இடம்பெறுகின்றன. அது மட்டுமல்ல, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் அமைப்பு, பவர் விண்டோஸ் மற்றும் இல்யூமினேஷன் லாம்ப்கள் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. புதிய இன்னோவா கிரிஸ்டாவில் பொருத்தப்பட்டுள்ள புத்தம் புதிய 2.4 லிட்டர் 2GD FTV 4 சிலிண்டர் டீசல் இஞ்ஜின், 149 PS சக்தி மற்றும் 342 Nm அதிகபட்ச டார்க்கை உற்பத்தி செய்கிறது. பாதுகாப்பு என்று வரும் போது, இதன் உயர்தர வேரியண்ட்டில் 7 காற்றுப் பைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதே நேரம், அனைத்து வேரியண்ட்களிலும் ABS அமைப்பு, EBD அமைப்பு, பிரேக் அஸ்சிஸ்ட் அமைப்பு மற்றும் இரட்டை காற்றுப் பைகள் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள்


Table 1

டொயோடா இன்னோவா விமர்சனம்


கண்ணோட்டம்2005 –ஆம் ஆண்டு, முதல் முறையாக இந்தியாவில் இன்னோவா அறிமுகம் ஆகும் போது 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட ஆப்ஷன்களுடன் வந்தது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் என்ற ஆப்ஷன்களும் இணைக்கப்பட்டே வந்தது. பெட்ரோல் வேரியண்ட்களில் அதிகபட்சமாக 130.1 bhp சக்தி மற்றும் அதிகபட்சமாக 181 Nm அளவு டார்க்கை உற்பத்தி செய்யும் BS-IV 2.0 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. BS-IV மற்றும் BS-III இணைந்த 2.5 லிட்டர் இஞ்ஜின்களில் டீசல் ஆப்ஷன்கள் உள்ளன. மேலும், இவை 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளன. 2013 –ஆம் ஆண்டு அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வெளிப்புறத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படுத்தியதால், கண் கவரும் வசீகரமான தோற்றத்தில் வெளிவந்தது. தற்போது வெளிவந்துள்ள, குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மட்டுமே விற்பனை ஆகும் லிமிடெட் எடிஷனில் எக்கச்சக்கமான கூடுதல் சிறப்பம்ஸங்கள் இடம்பெறுகின்றன. இரட்டை வண்ணங்களில் உயர்தர துணியில் இருக்கை விரிப்புகள், டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், ஸ்டைலான பாடி கிராஃபிக்ஸ் மற்றும் முன் மற்றும் பின்புற லைட் க்லஸ்டரில் க்ரோமிய முலாம் பூசப்பட்டு, இதன் உட்புறம் அழகாக மிளிர்கிறது.
மேலும், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, இந்த லிமிடெட் எடிஷன்களில் ABS அமைப்பு மற்றும் ஓட்டுனருக்கான காற்றுப் பை ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த MPV –ன் முக்கிய சிறப்பம்சம் எது என்று கேட்டால், இதன் விசாலமான கேபின் பகுதி என்று அனைவரும் குறிப்பிடும் அளவிற்கு பெரிதாக உள்ளது. இதில் 7 முதல் 8 நபர்கள் வரை வசதியாக அமர்ந்து பயணிக்கும் விதத்தில் இருக்கை அமைப்பு வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கால்களை வசதியாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு தேவையான இடவசதி, தலை தட்டாமல் உயரமான விதத்தில் அமைக்கப்பட்டுள்ள விதானம் மற்றும் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய பூட் பகுதி என்று அனைத்தும் நீண்ட தூர பயணத்திற்கு தகுதியானதாக உருவாக்கப்பட்டுள்ளன. சொகுசு வசதிகளுக்கும் எந்த விதத்திலும் குறை வைக்காமல், குளிர் சாதன அமைப்பு, ரியர் பார்க்கிங் அஸ்சிஸ்ட் அமைப்புடன் வரும் காமிரா, மல்டி-ஃபங்க்ஷனல் ஸ்டியரிங் வீல், மற்றும் டிஸ்ப்ளே ஸ்கிரீன் அமைப்புடன் வரும் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. பெரிய ரேடியேட்டர் கிரில் மற்றும் நவீனமான அலாய் சக்கரங்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதால், இதன் வெளிப்புறத் தோற்றம் கம்பீரமாகவும் ஸ்டைலாகவும் உள்ளது. சிற்பம் போல செதுக்கப்பட்ட டெய்ல் கேட்டில், குரோம் வேலைப்பாடுகள் இடம்பெற்று அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இன்னோவாவைத் தயாரித்துள்ள டொயோடா நிறுவனம், தனது தயாரிப்புகளில் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தருவதால், GOA பாடி ஸ்ட்ரக்சரில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, விபத்தின் போது ஏற்படும் தாக்கங்களை உள்வாங்கி, உள்ளமர்ந்து பயணிக்கும் பயணிகளை முழுமையாக பாதுகாக்கிறது. அது மட்டுமல்ல, இன்னோவா கிரிஸ்டாவிற்கு 3 வருட அல்லது 100000 கிலோமீட்டர்கள் வரை வாரண்டி தரப்படுகிறது. நீங்கள் விரும்பினால், கூடுதல் பணம் கொடுத்து இந்த உத்தரவாதத்தை மேலும் நீட்டிக்க முடியும். ஆடம்பரமான MPV பிரிவில் இன்னோவா கிரிஸ்டாவை இணைத்துள்ளதால், ஹோண்டா மொபிலியோ, மாருதி எர்டிகா மற்றும் நிஸ்ஸான் இவாலியா போன்ற கார்களுடன் நேருக்கு நேர் நின்று போட்டியிட வேண்டும்.

வெளிப்புறத் தோற்றம்ஸ்டைலான வெளிப்புற தோற்றத்தைப் பெற்றுள்ள இன்னோவா கிரிஸ்டா ஏராளமான நவீன அம்சங்களையும் கொண்டு நேர்த்தியாக உள்ளது. 2013 –ஆம் ஆண்டு பெரிதாக்கப்பட்ட புத்தம் புதிய ரெடியேட்டர் கிரில், பம்பர் மற்றும் ட்வீக் செய்யப்பட்ட ஹெட் லைட் க்லஸ்டர் ஆகியவற்றை கூடுதலாக இணைத்து, இதன் தோற்றத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இது தவிர, இந்நிறுவனம் தற்போது வெளியிடும் லிமிடெட் எடிஷன் மாடலில் ஒரு சில ஸ்டைலான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பருந்தின் இறக்கைகள் வடிவில் உள்ள ஹெட் லைட் க்லஸ்டரில் க்ரோம் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு, டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஹாலோஜென் விளக்குகள் இணைக்கப்பட்டு பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளது. நடுவில் உள்ள ரெடியேட்டர் கிரில் பகுதியில் ஏராளமான க்ரோம் வேலைப்பாடுகள் செய்யபட்டுள்ளன. மேலும், இதில் இந்நிறுவனத்தின் சின்னம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வேரியண்ட் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லிமிடெட் எடிஷன் ஆகியவற்றில் கிரில் மீது பெயிண்ட் செய்யப்பட்டு, அதைச் சுற்றிலும் க்ரோம் சூழ்ந்துள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடி நிறத்திலேயே வரும் முன்புற பம்பர் பகுதியில், இரண்டு ஃபாக் லாம்ப்களும் நேர்த்தியாக இடம்பெறுகின்றன. அவற்றைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு கிளாடிங்க் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர்தர டாப் எண்ட் தவிர, மற்ற அனைத்து டிரிம்களிலும் முன்புற ஃபாக் லாம்ப் பொருத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். முன்புறம் மட்டுமல்ல, இதன் பக்கவாட்டு பகுதியில் பெரிய நேர்த்தியான சக்கர வளைவுகளுக்குள், ஸ்டைலான அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு காண்போரை கவர்ந்திழுக்கும் விதத்தில் உள்ளது. GX வேரியண்ட்டின் சக்கரங்களில், வழக்கமான ஸ்டீல் ரிம்கள் மீது முழு வீல் கேப்கள் உள்ளன. புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆப்ஷன்களின் பக்கவாட்டுப் பகுதியில் ஸ்டைலான பாடி டிகால்களை ஒட்டி, இதன் தோற்றத்தை அதிநவீனமாக மாற்றி உள்ளனர். VX மற்றும் ZX டிரிம்களில் குரோம் பிளேட்டட் சைட் பிரோடெக்டிவ் மோல்டிங் மற்றும் GX டிரிம்மில் பாடி நிறத்திலான மோல்டிங் போன்றவை இருப்பதால், இதன் தோற்றம் மேலும் பொலிவு பெறுகிறது. அது மட்டுமல்ல, பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள விங் மிரரில் டர்ன் இன்டிகேட்டர் பொருத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிவான கம்பீரமான டெய்ல்கேட் வடிவமைப்பு காரணமாக இதன் பின்புற தோற்றம் மனதைக் கவர்கிறது. டெய்ல்கேட் மீது உள்ள ஸ்பாய்லர் பயனற்றதாக இருந்தாலும், புதிய ரிஃப்லெக்டர் ஸ்ட்ரிப் பயனுள்ளதாகவும், பின்புற தோற்றத்திற்கு மெருகேற்றும் விதத்திலும் இருக்கிறது. பின்புற தோற்றத்தில் ஒரு சில அமைப்புகள் நிஸ்ஸான் இவாலியாவைப் பிரதிபலித்தாலும், ஒட்டுமொத்த பின்புற வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை. பின்புறத்தில், லைசென்ஸ் ப்ளேட் பகுதியின் மேற்புறத்தில், க்ரோம் பட்டை மற்றும் இரண்டு ரிஃப்லெக்டர் ஆகியவை இடம்பெறுகின்றன. வழக்கமான வடிவத்திலேயே இதன் டெய்ல் லைட் க்லஸ்டர் உருவாக்கப்பட்டிருந்தாலும், கர்டிசி லாம்ப், பிரேக் லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர் ஆகியவை கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. LE வேரியண்ட்டில் சிறப்பான முறையில் பொருந்தியுள்ள இதன் சின்னம் மற்றும் டெய்ல் லைட் க்லஸ்டரில் இடம்பெறும் குரோம் வேலைப்பாடுகள் ஆகியவை இதற்கு ஆளை மயக்கும் தோற்றத்தைத் தருகின்றன.

வெளிப்புற அளவுகள்


இன்னோவா கிரிஸ்டாவின் மொத்த நீளம் 4585 மிமீ மற்றும் இதன் மொத்த அகலம் 1765 மிமீ ஆகும். MPV பிரிவில் உள்ள கார்களுடன் ஒப்பிடும் போது, இது சிறப்பான அளவாக கணக்கிடப்பட்டுள்ளது. காரின் ஒட்டுமொத்த உயரம் 1760 மிமீ என்ற அளவிலும் மற்றும் குறைந்த பட்ச கிரவுண்ட் க்ளியரன்ஸ் உயரம் 176 மிமீ என்ற அளவிலும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீல் பேஸ் அளவும் பெரிதாக அமைக்கப்பட்டு, 2750 மிமீ என்ற அளவில் உள்ளதால், உட்புற கேபின் பகுதியில் தாராளமான இட வசதி உள்ளது. ஆஜானுபாகமான உருவத்துடன் இருந்தாலும், இது சரியான விகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நேர்த்தியான வடிவத்தில் உள்ளது.

உட்புற அமைப்பு:ஆசிரியர் குறிப்பு: MUV பிரிவிலேயே மிக ஆடம்பரமான உட்புற தோற்றத்தில் இன்னோவா அமைக்கப்பட்டுள்ளது. கேபின் பகுதியை விசாலமாகவும், இருக்கைகளில் வசதியாக அமரும் விதத்திலும் வடிவமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளிவந்த பின், இதில் எந்த குறையும் கூற முடியாத அளவிற்கு, அனைத்து கவர்ச்சிகரமான அம்சங்களும் இடம்பெறுகின்றன.
இரட்டை வண்ணத்தில் வரும் இன்னோவா கிரிஸ்டாவின் உட்புற தோற்றம் உங்களை இதமாக வரவேற்கிறது. 7 அல்லது 8 சீட்டர் என்ற இரு விதமான ஆப்ஷன்களில் உங்களுக்குத் தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். தரமான பொருட்களினால் தயாரான உட்புற தோற்றம் ஆடம்பரமாக உள்ளது. இதில், நம்மைக் கவர்ந்த மிக முக்கியமான அம்சம் எது என்றால், உயர்தர துணியில் ஆன இருக்கை விரிப்புகளைக் கொண்ட சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் ஆகும். உயர்தர ZX வெர்ஷனுக்குள் சென்று பார்த்தால், இது 7 சீட்டர் ஆப்ஷன் மட்டுமே கொண்டு, லெதர் இருக்கை விரிப்பு விரிக்கப்பட்டு வருகிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லிமிடெட் எடிஷன் வெர்ஷனில் உயர்தர இரட்டை வண்ண இருக்கை விரிப்புகள் இடம்பெற்றிருப்பது, இதன் அழகிற்கு மெருகூட்டும் விதத்தில் உள்ளது. அனைத்து 7 சீட்டர் மாடல்களிலும் முதல் மற்றும் இரண்டாம் இருக்கை வரிசைகளில் தனித்தனியான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றின் மூன்றாவது வரிசையில் பெஞ்ச் போன்ற நீளமான இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், 8 சீட்டர் ஆப்ஷனில், இரண்டாவது வரிசையிலேயே பெஞ்ச் போன்ற அமைப்பில் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை 60:40 என்ற விகிதத்தில் பிரித்து மடக்கிக் கொள்ளலாம். இதன் டாஷ் போர்டில் சிறிய பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடவசதி, மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மற்றும் 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவை இடம்பெறுகின்றன. பல விவரங்களைக் காட்டும் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, கடிகாரம், ஆப்டிட்ரான் காம்பிமீட்டர், டாக்கோமீட்டர் மற்றும் ட்ரிப் மீட்டர் போன்ற பல்வேறு அமைப்புகள் இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டரில் இடம்பெறுகின்றன. இதமான பயணத்தை உத்திரவாதம் செய்வதற்கு, இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையின் விதானத்தில் குளிர் சாதன துளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உட்புற வசதிகள்:


பல்வேறு விதத்தில் பயன்படும் இந்த MPV விசாலமானது என்றும், அதிகமான சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டது என்ற பெருமையையும் ஒருசேரப் பெறுகிறது. இன்னோவா கிரிஸ்டா காருக்குள் ஏராளமான சொகுசு வசதிகள் இடம்பெறுகின்றன. முக்கியமாக, ஓட்டுனருக்கான மல்டி-இன்ஃபர்மேஷன் திரையில், முக்கியமான விஷயங்கள் அனைத்தையும் காண்பிப்பதன் மூலம், ஓட்டுனர் எச்சரிக்கையுடன் செயல்பட முடிகிறது. இதில், கடிகாரம், டாக்கோமீட்டர், ட்ரிப் மீட்டர், கதவு மூடாமல் இருந்தால் எச்சரிக்கும் அமைப்பு, இருக்கை பெல்ட்டை போடுவதற்கு ஓட்டுனரை எச்சரிக்கும் அமைப்பு மற்றும் உட்புற வெளிச்சத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகியவை உள்ளன. இன்னோவா கிரிஸ்டாவின் அடிப்படை மாடலான GX வேரியண்ட்டில் முன்புறத்தில் இரட்டை சன் வைசர்கள், கிலோவ் பாக்ஸ், 12 V பவர் சாக்கெட், சிகரெட் லைட்டர், முன்புற மேப் லாம்ப்பின் மேற்புறத்த்தில் பொருட்களை வைத்துக் கொள்ள வசதியாக சிறிய இடம் மற்றும் சாவி இல்லாமல் ரிமோட் மூலம் திறந்து கொள்ளும் அமைப்பு என்று பல கவர்ச்சிகரமான அமைப்புகள் இடம்பெறுகின்றன என்பது ஆச்சர்யமான செய்தியாகும். உங்களை மேலும் ஆச்சர்யப்படுத்த இதில் பேக் சோனார், 4 ஸ்பீக்கர்கள், மின்னியக்கம் மூலம் கதவுகளை மூடும் வசதி, ஹீட்டர் வசதியுடன் வரும் குளிர் சாதன கருவி, டில்ட் அட்ஜஸ்ட்மெண்ட் கொண்ட பவர் ஸ்டியரிங் வீல் மற்றும் பவர் விண்டோஸ் அமைப்பு ஆகியவையும் இடம்பெறுகின்றன. இதில் ஓட்டுனரின் பக்கம் உள்ள ஜன்னல்களில் ஆட்டோ டவுன் செயல்பாடு இணைக்கப்பட்டுள்ளது. இன்னோவா கிரிஸ்டாவின் VX டிரிம்களில் டிஸ்ப்ளே வசதியுடன் உள்ள ரியர் வியூ காமிரா, தானியங்கி குளிர் சாதன அமைப்பு, அதிஉன்னதமான துணி கொண்டு அமைக்கப்பட்டுள்ள இருக்கை விரிப்புகள், பயணியர் சீட் பெல்ட்டை பயன்படுத்த ஞாபகப்படுத்தும் அமைப்பு மற்றும் ஸ்டியரிங் வீல் மீது லெதர் அலங்கரிப்பு போன்ற பலவகை சிறப்பம்சங்கள் இடம்பெறுவதால், பயண களைப்பு தெரியாமல் நீண்ட நெடிய பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும் இதன் உயர்தர ZX வேரியண்ட்டில், கால்களை வைக்கும் இடத்தில் உயர்தர மேட், ஷிப்ட் லீவர் மாற்றும் நாப் மீது லெதர் மற்றும் மர வேலைப்பாடுகள் மற்றும் டாஷ் போர்டு பகுதியில் க்ரே பர்ல் மர வேலைப்பாடு ஆகியவை இதன் ஆடம்பர தொனியை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளன.

உட்புற அமைப்பின் அளவுகள்:


தலை தட்டும் விதத்தில் விதானம், தோள்கள் உராயும் விதத்தில் குறுகலான அமைப்பு மற்றும் உட்கார இடவசதி போதாமல் இருக்கும் பல கார்களைப் போல அல்லாமல், இன்னோவா கிரிஸ்டா MPV விசாலமான உட்புற அமைப்புடன் வருகிறது. இருக்கை வரிசைகளில் மட்டுமல்ல, இதன் பூட் பகுதியும் பெரிதாக, 300 லிட்டர் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது அதிகமான பொருட்களை நீங்கள் எடுத்துச் செல்வதாக இருந்தால், இதன் மூன்றாவது வரிசை இருக்கைகளை 50:50 என்ற விகிதத்தில் மடித்து பூட் பகுதியின் கொள்ளளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். மேலும், இதன் எரிபொருள் டாங்க்கும் பெரியதாகவே இருக்கிறது. நீங்கள் ஒரே நேரத்தில் 55 லிட்டர் பெட்ரோல்/டீசலை ஃபில் செய்து கொள்ளலாம். இதுவும் இன்னோவா கிரிஸ்டாவின் தனிச்சிறப்பான அம்சத்தில் ஒன்றாக திகழ்கிறது..

ஆக்ஸெலரேஷன் மற்றும் பிக்அப்ஆசிரியர் குறிப்பு: இன்னொவா கிரிஸ்டாவின் அப்பட்டமான செயல்திறனை விட சிறந்த முறையில் கையாளும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருப்பதால், இந்த அமைப்பே புதிய இன்னோவாவிற்கு உண்மையான வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என்றால் அது மிகை ஆகாது.
பெட்ரோல் வெர்ஷன்கள் 1998 cc திறனுடன் வருவதால், பிக்அப் மற்றும் ஆக்ஸெலரேஷன் என்ற இரண்டு நிலைகளிலும் இதுவே சிறந்து விளங்குகிறது. இந்த 4 சிலிண்டர் இஞ்ஜினுடன் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளதால், அதிகபட்ச வேகமாக மணிக்கு சுமார் 170 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்ல முடிகிறது. ஸ்டார்ட் செய்த 12.8 வினாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற இலக்கை எட்டச் செய்து, இதை உருவாக்கிய குழுவினரின் மேன்மையை எடுத்துரைக்கிறது. மேலும், இதன் டீசல் வேரியண்ட்டில் 2494 cc திறன் கொண்ட இன்டர்கூலர் டர்போ சார்ஜர் அமைப்பு கொண்ட 2KD-FTV இஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் செய்து வெறும் 15 வினாடிகளில், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடுகிறது. மணிக்கு 149 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தில் பாய்ந்து செல்லும் திறனை இன்னோவா கிரிஸ்டா டீசல் வேரியண்ட்டிற்கு இந்த இஞ்ஜின் அளிக்கிறது.

இஞ்ஜின் மற்றும் செயல்திறன்:ஆசிரியர் குறிப்பு: இன்னோவாவில் உள்ள 2.5 லிட்டர் இஞ்ஜின் 100 bhp சக்தியை மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஆனால், MUV பிரிவின் கீழ் உள்ள பிற கார்களுடன் ஒப்பிடும் போது, அவற்றில் இன்னொவாவை விட அதிக சக்திவாய்ந்த இஞ்ஜின்கள் உள்ளன.
இதற்கு முன்பு கூறியதைப் போலவே, இன்னோவா கிரிஸ்டா MPV -யில் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வித ஆப்ஷன்கள் உள்ளன. அதே நேரம், கூடுதலாக BSIII மற்றும் BSIV என்ற புதிய ஆப்ஷன்களும் டீசல் வேரியண்ட்களில் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், இரண்டு வெர்ஷன்களிலும் அதே 2494 cc திறன் கொண்ட 2.5 லிட்டர் 2KD-FTV இஞ்ஜின் இணைக்கப்பட்டு வருகின்றன. காமன் ரயில் இஞ்ஜெக்ஷன் அமைப்பு மூலம் இயங்கும் 4 சிலிண்டர்கள் மற்றும் மொத்தம் 14 வால்வுகள் ஆகியவை இதில் இணைந்துள்ளன. இந்த DOHC வகை சார்ந்த இஞ்ஜின் 3600 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 100.57 bhp சக்தி மற்றும் 1400 - 3400 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 100200 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது (BSIII வெர்ஷனில்). எனினும் BSIV கொண்ட இஞ்ஜின், 1200 - 3600 rpm அளவில் 200 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இதன் பெட்ரோல் வகையில், எலெக்ட்ரானிக் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் அமைப்பு கொண்ட 2.0 லிட்டர் 1TR-FE இஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இது 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகள் கொண்ட 1998 cc திறன் கொண்ட டபுள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வ் கான்பிகரேஷன் கொண்ட இஞ்ஜின் ஆகும். 5600 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 130.1 bhp சக்தி மற்றும் 4000 rpm அளவில் அதிகபட்சமாக 181 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றன. இரண்டு இஞ்ஜின்களும் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மைலேஜ்ஆசிரியர் குறிப்பு: இன்னோவா கிரிஸ்டா நேர்த்தியான வடிவமைப்பில் இருப்பதால், மக்கள் இதை நெடிய பயணத்திற்கு பயன்படுத்த விரும்புகின்றனர்.
ஏற்கனவே சொன்னது போல, இந்த MPV இரண்டு விதமான இஞ்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது. அனைத்து பெட்ரோல் டிரிம்களிலும், அதிக எரிபொருள் சிக்கனம் தரும், எலெக்ட்ரானிக் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் அமைப்பில் இயங்கும், 2.0 லிட்டர் மோட்டார் பொருத்தப்பட்டு வருகின்றன. நெரிசலான நகர போக்குவரத்தில் அதிகபட்சமாக லிட்டருக்கு 7 கிலோமீட்டர் வரை அட்டகாசமான மைலேஜைத் தருகிறது. அதே நேரம், நெடுஞ்சாலைகளில், அதிகபட்சமாக லிட்டருக்கு 11.4 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருவதற்கு உதவுகிறது. டொயோடா இன்னோவா கிரிஸ்டாவின் டீசல் வேரியண்ட்டில் காமன் ரயில் டைரக்ட் இஞ்ஜெக்ஷன் அமைப்பில் இயங்கும் 2.5 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. நகர சாலைகளில் பயணிப்பதற்கு குறைந்தபட்சம் 9 kmpl மைலேஜும், எக்ஸ்பிரஸ் ரோடுகளில் அதிகபட்சமாக 12.99 kmpl மைலேஜும் கிடைக்கிறது.

டொயோடா இன்னோவாவின் சக்தி


ஆசிரியர் குறிப்பு:இன்னோவாவின் அருமையான கையாளும் திறனுக்கு அருகே இதன் போட்டியாளர்கள் எவரும் வர தடுமாறுவதால், தன்னிகரற்றதாக உள்ளது. 2005 –ஆம் ஆண்டு அறிமுகம் ஆனதில் இருந்து இப்போது வரை விற்பனையில் சிறப்பாகவே உள்ளது.
மேலே சொன்னது போல, டொயோடா இன்னோவா கிரிஸ்டாவின் அனைத்து பெட்ரோல் வேரியண்ட்களிலும் பாரத் ஸ்டேஜ் IV கொண்ட 2.0 லிட்டர் 1TR-FE இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜினில் DOHC வால்வ் கான்ஃபிகரேஷன் கொண்ட 4 இன்-லைன் சிலிண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய அற்புதமான தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த இஞ்ஜின் 130.1 bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த சக்தி அதிகபட்சமாக 181 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. டொயோட்டா இன்னோவாவின் டீசல் வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ள, டபுள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வ் கான்ஃபிகரேஷன் கொண்ட 2.5 லிட்டர் 2KD-FTV இஞ்ஜின் அதிகபட்சமாக 100.1 bhp சக்தியையும், 200 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. BSIV மோட்டார் 1200 -3600 rpm என்ற அளவில் டார்க்கை உற்பத்தி செய்கிறது; அதே நேரம் BSIII டிரிம் 1400 – 3400 rpm என்ற அளவில் டார்க்கை உற்பத்தி செய்கிறது.

ஸ்டீரியோ மற்றும் ஆக்செசரீஸ்ஆசிரியர் குறிப்பு: டச் ஸ்கிரீன் அமைப்பு, புளு டூத் அமைப்பு, ஸ்டியரிங் வீல் மீது ஆடியோ கட்டுப்பாட்டுக் கருவிகள், ரிவர்ஸ் பார்க்கிங் காமிரா போன்றவை புதிய இன்னோவாவின் உயர்தர டிரிம்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
GX வேரியண்ட்டைத் தவிர, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லிமிடெட் எடிஷன் உட்பட மற்ற அனைத்து டிரிம்களிலும் 2-DIN ஆடியோ அமைப்புடன் LCD டிஸ்ப்ளே அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர DVD ப்ளேயர், AUX-in சாக்கெட், USB போர்ட் மற்றும் புளுடூத் கருவிகளை இணைக்க தேவையான கருவிகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இவை அனைத்தையும் பயன்படுத்துவதற்கு ரிமோட் வசதியும் இருப்பதால், நமக்கு வசதியாக உள்ளது. அடிப்படை டிரிம்மை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு லெதர் சீட் கவர்கள், ஸ்டைலான பாடி க்ராஃபிக்ஸ், பின்புறத்தில் வாசிப்பதற்கு உதவும் விளக்கு, ஸ்டைலான அலாய் சக்கரங்கள், கதவிலும் வைசர்கள், மட் ஃபிளாப்கள் மற்றும் ஸ்பாய்லர்கள் போன்ற பயன்பாடுகள் மிகுந்த கவர்ச்சிகரமான அம்சங்கள் இடம்பெறுகின்றன.

பிரேக் அமைப்பு மற்றும் கையாளும் விதம்ஆசிரியர் குறிப்பு: இன்னோவாவில் சஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பாக இருப்பதால், பயணம் செய்வது ஆடம்பரமாகவும், சொகுசாகவும் உள்ளது.
இன்னோவா கிரிஸ்டாவின் முன்புற வீல்கள் இரண்டு வெண்டிலேட்டட் டிஸ்க்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், இதன் பின்புற சக்கரங்களுடன் லீடிங்-ட்ரைலிங் ட்ரம் பிரேக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. வழுவழுப்பான ரோடுகளில் வழுக்காமல் இருப்பதற்காக ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பும் இத்தகைய பிரேக்கிங் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. டொயோடா நிறுவனம் முன்புற ஆக்ஸிலில் டபுள் விஷ்போன் அமைப்பை இணைத்துள்ளது. பின்புற ஆக்ஸிலுடன் லாட்டெரல் ராட் கொண்ட 4 லிங்க் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இதில் துல்லியமாக வேலை செய்யும் ஆற்றலைக் கொண்ட மேம்பட்ட பவர் அஸ்ஸிஸ்டேட் ஸ்டியரிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளதால், குறைந்தபட்சம் 5.4 மீட்டர் டர்னிங்க் ஆரத்தில் திருப்ப உதவுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்:ஆசிரியர் குறிப்பு: இன்னோவா கிரிஸ்டாவில் ABS அமைப்பு போன்ற சக்திவாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, முன்புற பயணிகளுக்கு இரட்டைக் காற்றுப் பைகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த காரின் கட்டமைப்பு GOA பாடி அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. விபத்தின் போது ஏற்படும் மோசமான தாக்கத்தை இந்த அமைப்பு தடுத்து விடுகிறது. அது மட்டுமல்ல, நவீனமான ஆன்டி லாக் பிரேகிங் அமைப்பு, இம்மொபிலைசர் மற்றும் ஓட்டுனர் பக்கம் SRS காற்றுப் பை ஆகியவற்றையும் இணைத்து, பாதுகாப்பை மேம்படுத்தி உள்ளனர். இதன் VX மற்றும் ZX வேரியண்ட்களில் பயணிகளின் பக்கம் காற்றுப் பை இணைக்கப்பட்டுள்ளது.

சக்கரங்கள்:


VX மற்றும் ZX ஆகிய வேரியண்ட்களில் ஸ்டைலான அலாய் சக்கரங்களை இந்நிறுவனம் பொறுத்தியுள்ளது. இதன் அடிப்படை GX வேரியண்ட்டில், ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டு வெளிவருகிறது. ஸ்டீல் ரிம் மீது, 205/65 R15 சைஸில் அதிக செயல்திறன் மிக்க ட்யூப்லெஸ் ரேடியல் டயர் பொருத்தப்பட்டுள்ளதால், சாலைகளில் பயணிக்கும் போது அதிகமான கிரிப் கிடைக்கிறது.

சாதகங்கள்:1. விசாலமான கேபின் பகுதியுடன் உள்ள ஆடம்பர உட்புற அமைப்பு
2. விடுமுறையில் நீண்ட பயணம் செய்ய மிகவும் உகந்ததாக உள்ளது
3. டீசல் இஞ்ஜின் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது
4. டாப் எண்ட் டிரிம்களில் உள்ள சொகுசு வசதிகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளன.
5. GOA பாடி ஸ்ட்ரக்சர் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் அதிக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதகங்கள்:1. விலை சற்றே அதிகமாக உள்ளது.
2. எரிபொருள் சிக்கனம் குறிப்பிடதக்க வகையில் இல்லை
3. உட்புற வடிவமைப்பை மேலும் செம்மை படுத்தி இருக்கலாம்.
4. டீசல் வேரியண்ட்களில் NVH லெவல்களை மேலும் குறைத்திருக்கலாம்
5.அதிகமான பாதுகாப்பு அம்சங்களை கூடுதலாக இணைத்திருக்கலாம்.