விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய Toyota Innova Hycross GX (O) பெட்ரோல் வேரியன்ட்கள்

published on மார்ச் 27, 2024 06:20 pm by rohit for டொயோட்டா இனோவா hycross

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய வேரியன்ட்கள் தற்போதுள்ள GX டிரிமிற்கு மேல் இருக்கும். மேலும் MPV -யின் ஹைபிரிட் வேரியன்ட்களில் கிடைக்கும் வசதிகளுடன் வரும்.

Toyota Innova Hycross

  • புதிய GX (O) வேரியன்ட்கள் 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்டதாக இருக்கும்.

  • 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் ஆட்டோ ஏசி மற்றும் ரிவர்சிங் கேமரா போன்ற வசதிகளை கொண்டிருக்கும்.

  • டொயோட்டா GX (O) வேரியன்ட்டை  2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்குகிறது.

  • MPV ஆனது 2-லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னை பெறுகிறது. ஆனால் ஹையர் வேரியன்ட்களுடன் மட்டுமே.

  • புதிய GX (O) வேரியன்ட்களின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்; விலை ரூ. 19.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் GX டிரிமை விட கூடுதலாக இருக்கலாம்.

ஃபுல்லி லோடட் கார் ஒன்றை நீங்கள் வாங்க விரும்பினால் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஹைகிராஸின் ஹைப்ரிட் பதிப்பு சிறப்பான வசதிகளுடன் உள்ளது. டொயோட்டாவும் இதைப் பற்றி அறிந்திருப்பதாகத் தெரிகிறது, எனவே விரைவில் வழக்கமான பெட்ரோல் வரிசையில் ஃபுல்லி லோடட் வேரியன்ட்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய வேரியன்ட்களின் கூடுதல் விவரங்கள்

டொயோட்டா விரைவில் புதிய மிட்-ஸ்பெக் GX (O) வேரியன்ட்களை அறிமுகப்படுத்தும் இது GX டிரிமிற்கு மேலே அமைந்துள்ளது. இவை எம்பிவியின் பெட்ரோல் பதிப்பிற்கான புதிய டாப்-ஸ்பெக் வேரியன்ட்களாக மாறும். இது 7 மற்றும் 8 இருக்கைகள் கொண்ட அமைப்புகளில் வழங்கப்படும். புதிய வேரியன்ட்களின் விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் அவை GX டிரிம்மை விட விலை கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வேரியன்ட்டில் என்ன கூடுதல் வசதிகள் கிடைக்கும்?

Toyota Innova Hycross 10.1-inch touchscreen

புதிய GX (O) வேரியன்ட்களில் LED ஃபாக் லைட்ஸ், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் (7-சீட்டர் வேரியன்ட் மட்டும்) மற்றும் பின்புறத்தில் உள்ளிழுக்கும் வகையிலான சன்ஷேட் (7-சீட்டர் வேரியன்ட் மட்டும்) போன்ற GX வேரியன்ட்களில் மேலும் சில வசதிகள் கிடைக்கும். டொயோட்டா GX (O) 8-சீட்டர் வேரியன்ட் சிறிய 8 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட் உடன் வழங்கும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை புதிய GX (O) பின்புற டிஃபோகர் ரிவர்சிங் கேமரா மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் வழங்கப்படும். MPV ஏற்கனவே 6 ஏர்பேக்குகள், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (VSC), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுன்ட்கள் ஆகியவற்றை ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளது. ஸ்ட்ராங்-ஹைப்ரிட் வரிசையில் ஃபுல்லி லோடட் ZX (O) வேரியன்ட் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வருகிறது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ரியர் கிராஸ்-ட்ராஃபிக் அலர்ட் ஆகியவையும் அடங்கும்.

தொடர்புடையது: Toyota Innova Hycross விமர்சனம்: இன்னோவா -க்களில் இதுதான் சிறந்ததா ?

இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை

விவரங்கள்

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (பெட்ரோல்)

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (ஹைப்ரிட்)

இன்ஜின்

2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்

2-லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல்

பவர்

174 PS

186 PS (இன்டெகிரேட்டட்)

டார்க்

209 Nm

187 Nm (இன்டெகிரேட்டட்)

டிரான்ஸ்மிஷன்

CVT

e-CVT

புதிய GX (O) வேரியன்ட்கள் MPV உடன் கிடைக்கும் வழக்கமான பெட்ரோல் பவர்டிரெய்னுடன் தொடரும்.

மேலும் பார்க்க: BIMS 2024: தாய்லாந்திற்கான ஃபோர்டு எண்டெவர் (எவரெஸ்ட்) 12 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

விலை மற்றும் போட்டியாளர்கள்

Toyota Innova Hycross rear

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் GX (O) வேரியன்ட்களின் விலை ஏற்கனவே கிடைக்கும் GX டிரிம் விலையை விட அதிகமாக இருக்கும், இதன் விலை ரூ.19.77 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) தொடங்குகிறது. இது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் கியா கேரன்ஸ் ஆகியவற்றுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

 மேலும் படிக்க: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆட்டோமேட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டொயோட்டா இனோவா Hycross

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience