மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கேரள மாநிலம் கோழிகோட்டில் புதிய டீலர்ஷிப் ஒன்றை துவக்கியது.

published on ஆகஸ்ட் 28, 2015 01:36 pm by konark

மும்பை: மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கேரள மாநிலம் கோழிகோட்டில் புதிய டீலர்ஷிப் ஒன்றை தொடங்கியுள்ளது.எபர்ஹார்ட் கேர்ன், நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ, போரிஸ் பிட்ஸ், துணை தலைவர், விற்பனை மற்றும் நெட்வொர்க் மேம்பாட்டு துறை, அஜ்மல் அப்துல் வஹாப், நிர்வாக இயக்குனர் மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா ஆகியோர் இந்த துவக்க விழா  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

 விழாவில் பேசிய மெர்சிடீஸ் பென்ஸ்  இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ எபர்ஹார்ட் கேர்ன், “ இந்த இரண்டு அதி நவீன மையங்களை மேலான கோழிக்கோடு மக்களுக்காக அர்பணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  மேலும் இந்த மையங்கள் வட கேரள பகுதியில் நாங்கள் வலுவாக காலூன்ற வழி வகை செய்யும்.  இந்த ஷோரூம்களின் வாயிலாக நாங்கள் எங்களது உலக பிரசித்தி பெற்ற தயாரிப்புகளை நேரிடையாக உங்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி உயர்தரமான எங்கள் ப்ரேன்ட் அனுபவத்தையும் நீங்கள் உணரச்செய்வோம்.  எங்களது சொகுசான கார்களை   வெளிநாடுகளில் ஓட்டி மகிழ்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான் இந்த பகுதியில் அதிகரித்து உள்ள சொகுசு கார்களுக்கான தேவைக்கு முக்கிய காரணமாகும்”.” 

   கோழிகோடு நகரில் உள்ள  ஏராளமான வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர்கள் வெளிநாட்டில் இருக்கும் போது  சொகுசு கார்களை பயன்படுத்தி மகிழ்ந்தவர்கள். அவர்கள் இந்தியா வந்த பிறகும் அதைப்   போன்றதொரு அனுபவத்தையே விரும்புவதால் மெர்சிடீஸ் பென்ஸ் கார்களை நாடுவார்கள். 28,000  சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த டீலர்ஷிப்பிற்கு பிரிட்ஜ்வே மோட்டார்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. நன்கு தேர்ந்த பணியாளர்கள் குறித்த நேரத்தில் தரமான விற்பனை மற்றும் சர்வீஸ் சம்மந்தமான சேவைகளை வழங்குவதற்கென நியமிக்கப்பட்டுள்ளார்கள். வசதி மிக்க வாடிக்கையாளர்கள் நிறைந்த இந்த சந்தையில் டீலர்ஷிப் தொடங்குவதற்கு முன்னதாகவே 30 பென்ஸ் கார்கள் புக் செய்யப்பட்டுவிட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.  இந்த டீலர்ஷிப் பென்ஸ் நிறுவனத்தால் இந்த ஆண்டில் துவக்கப்படும் 11 ஆவது டீலர்ஷிப் மையமாகும்.  பென்ஸ் நிறுவனத்தின் '15 ல் 15'  என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த டீலர்ஷிப் துவக்கமும் சேர்கிறது. இந்த திட்டத்தின் படி பார்த்தால் இந்த வருட இறுதிக்குள் இன்னும்4 மையங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பென்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்படுள்ளது என்பதை புரிந்துக் கொள்ளலாம்.  இதன் மூலம் அதிக விலை சொகுசு கார்கள் தயாரிப்பாளர்களின் மத்தியில் மிக அதிகமாக 39 வெவ்வேறு இந்திய நகரங்களில் 79  விற்பனை அல்லது சர்வீஸ் நிலையங்களை பெற்று முதல் இடத்தைப் பெறுகிறது மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம்.  

     

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience