எக்ஸ்க்ளூஸிவ்: மீண்டும் சாலைகளில் தென்பட்ட Tata Altroz Racer கார்; இதில் 360 டிகிரி கேமரா இருப்பது உறுதியாகியுள்ளது

published on மே 21, 2024 07:22 pm by dipan for tata altroz racer

  • 22 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது, நெக்ஸானின் 120 PS டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறும்

Tata Altroz Racer spied

  • சமீபத்திய ஸ்பை ஷாட்கள் ஹூண்டாய் i20 N லைனைப் போலவே டூயல்-டிப் எக்ஸாஸ்ட் இருப்பதை காட்டுகின்றன.

  • நெக்ஸானில் காணப்படுவது போலவே டாடா ஆல்ட்ரோஸ் ரேசரிலும் பெரிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு கொடுக்கப்படவுள்ளது

  • மேம்பட்ட பாதுகாப்பிற்காக 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர் ஆகியவை உள்ளன

  • புதிய அலாய் வீல் டிசைன் மற்றும் வெள்ளை நிற கோடுகளுடன் கூடிய டூயல்-டோன் ஆரஞ்சு மற்றும் கருப்பு வண்ணங்களில் வழங்கப்படுகிறது

  • 120 PS மற்றும் 170 Nm உடன் நெக்ஸானின் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டை பெறுகிறது

  • 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஜூன் 2024-இல் அறிமுகப்படுத்தப்படும்

வரவிருக்கும் டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் அதன் சந்தை அறிமுகத்திற்கு தயாராக உள்ளது, மேலும் இந்த முறை முற்றிலும் கவர்கள் ஏதுமின்றி சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சமீபத்திய சோதனையின் போது பார்க்கப்பட்ட போது டாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டி வேரியன்ட் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குகிறது.

கவனிக்கப்பட்ட விவரங்கள்

பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024-இல் காட்சிப்படுத்தப்பட்டது போலவே தயாரிப்புக்கு தயாராக இருக்கும் ஆல்ட்ரோஸ் ரேசருக்கான ஆரஞ்சு-கருப்பு கலர் தீமை டாடா தக்க வைத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்திய படங்கள் டூயல் டிப் எக்ஸாஸ்ட் இருப்பதை உறுதிசெய்தன, இது ஒரு ஸ்போர்ட்டியர் சவுண்ட் சிஸ்டத்தை வழங்கக்கூடும். கூடுதலாக இது முன் ஃபெண்டரில் "#racer " பேட்ஜையும், பூட் லிட்டில் "iTurbo+" பேட்ஜையும் பெறுகிறது.

Tata Altroz Racer with dual-tip exhaust

இதன் உட்புறமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது மற்றும் ஆட்டோ எக்ஸ்போ 2023 -இல் காணப்பட்ட அனைத்து புதுப்பிப்புகளையும் இது பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை செய்யப்பட்ட யூனிட் புதிய 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் தற்போதைய ஆல்ட்ரோஸ் மாடலில் இருப்பதைப் போலவே சில்வர் மற்றும் பிளாக் கேபின் தீம் -ஐ இது பெறுகிறது.

Tata Altroz Racer interior

360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர் சேர்க்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகளின் கீழே ஒரு கேமரா பொருத்தப்பட்டிருப்பதையும் நாங்கள் கவனித்தோம்.

பிற வசதிகள்

பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 -ல் காட்சிப்படுத்தப்பட்ட அல்ட்ரோஸ் ரேசரில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் டிரைவருக்கான 7 இன்ச் ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. இது ஆம்பர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்களையும் உள்ளடக்கியது. பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட்  மவுண்ட்கள், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிப்யூஷன் (EBD) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) உடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். ஆல்ட்ரோஸ் ஹேட்ச்பேக்கின் இந்த வெர்ஷன் ஸ்போர்டியர் மற்றும் அனைத்து கூடுதல் வசதிகளையும் இது பெறும்.

2024 Tata Altroz Racer cabin

அதிக சக்தி வாய்ந்த பவர்டிரெய்ன்

டாடா அல்ட்ராஸ் ரேசர் நெக்ஸானின் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெற உள்ளது, அதைப் பற்றிய விவரங்கள்  இதோ:


விவரங்கள்

 

1.2 டர்போ-பெட்ரோல் இன்ஜின்

பவர்

120 PS

 

டார்க்

170 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீட் MT, 7-ஸ்பீட் DCT (எதிர்பார்க்கப்படுகிறது)

மேலும், ஆல்ட்ரோஸ் ரேசர் ஆனது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் நெக்ஸானிலிருந்து பெறப்பட்டுள்ளன. விற்பனையில் உள்ள தற்போதைய வேரியன்ட்களை போல இல்லாமல் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு DCT 1.2-லிட்டர் நேச்சுரல்-ஆஸ்பிரேட்டட் இன்ஜினுடன் ஆல்ட்ரோஸ் ரேசர் மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை வழங்கும். இதற்கிடையில், ஆல்ட்ரோஸ் i டர்போ வேரியன்ட்கள் 110 PS மற்றும் 140 Nm-ஐ அவுட்புட்டை கொடுக்கும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் தொடர்ந்து இயக்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

டாடா ஆல்ட்ரோஸ் ரேசர் நேரடியாக ஹூண்டாய் i20 N லைனுக்கு போட்டியாக இருக்கும், இது 120 PS மற்றும் 172 Nm டார்க் திறனைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பிடுகையில் வழக்கமான ஆல்ட்ரோஸ் வேரியன்ட்கள் ரூ.6.65 லட்சம் முதல் ரூ.10.80 லட்சம் வரை இருக்கும்.

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை

மேலும் படிக்க: Tata Altroz ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா ஆல்டரோஸ் Racer

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience