• English
  • Login / Register

Kia Sonet காரை விட Mahindra XUV 3XO காரில் கிடைக்கும் முக்கியமான 5 வசதிகள்

published on மே 16, 2024 08:02 pm by dipan for மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO

  • 39 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த செக்மென்ட்டில் முன்னணியில் இருக்கும் கியா சோனெட் உடன் போட்டியிடுவதற்காக 3XO கார் ஏராளமான வசதிகளுடன் களமிறங்கியுள்ளது.

Mahindra XUv 3XO

மஹிந்திரா XUV 3XO சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது புதிய வடிவமைப்பு மற்றும் இந்த பிரிவில் முதல் வசதிகளை பெறுகிறது. இது சப்-4m எஸ்யூவி பிரிவின் அதிக பங்கிற்கு போராட போதுமானது என்று மஹிந்திரா கூறுகிறது. அதன் போட்டியாளர்களில் மிக முக்கியமான காரான - கியா சோனெட் ஃபேஸ்லிப்ட் 2024 -ம் ஆண்டில் அறிமுகமானது. XUV 3XO காரின் சில முக்கிய வசதிகள் இது இந்தியாவில் என்ட்ரி-லெவல் கியா காரை விட கூடுதலாக சில வசதிகளை கொண்டுள்ளது:

இந்த பிரிவில் சிறந்த செயல்திறன்

Mahindra XUv 3XO ENgine

மஹிந்திரா XUV 3XO மற்றும் கியா சோனெட் ஆகிய இரண்டும் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்கின்றன. இரண்டு எஸ்யூவிகளிலும் நேச்சரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், டர்போ பெட்ரோல் யூனிட் மற்றும் டீசல் இன்ஜின் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

விவரங்கள்

மஹிந்திரா XUV 3X0

கியா சோனெட்

இன்ஜின்

1.2-லிட்டர் (டேரக்ட் இன்ஜெக்‌ஷன்) டர்போ-பெட்ரோல்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.2 லிட்டர் பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

130 PS

112 PS

117 PS

120 PS

83 PS

116 PS

டார்க்

230 Nm

200 Nm

300 Nm

172 Nm

115 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6MT, 6AT

6MT, 6AT

6MT, 6AMT

6iMT, 7DCT

5MT

6MT, 6iMT, 6AT

செயல்திறனில் XUV 3XO முன்னிலையில் இருப்பதை இங்கே நாம் பார்க்க முடிகின்றது.

மேலும் பார்க்க: டாடா நெக்ஸான் காரை விட மஹிந்திரா XUV 3XO -யில் உள்ள 7 விஷயங்கள்

பனோரமிக் சன்ரூஃப்

Mahindra XUV 3XO Panoramic Sunroof

இப்போதைய காலகட்டத்தில் சன்ரூஃப் கொண்ட கார்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் இன்னும் விரும்பத்தக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால் XUV 3XO காரில் சப்-4m எஸ்யூவி செக்மென்ட்டில் முதன்முதலில் இது வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கியா சோனெட் போன்ற மற்ற போட்டியாளர்கள் சிங்கிள்-பேன் சன்ரூஃபையே கொண்டுள்ளன.

Mahindra XUv 3XO Dashboard

3XO காரின் கேபினை சுற்றியுள்ள மற்ற பிரீமியம் எலமென்ட்கள் சோனெட் காரின் கேபினில் இல்லாத சாஃப்ட்-டச் பொருட்கள் அடங்கும்.

டூயல் ஜோன் ஏசி

Mahindra XUV 3XO Dual-zone AC

மற்றொரு பாயிண்ட் மஹிந்திரா XUV 3XO -க்கு செல்கிறது, அதன் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகும். இது முன்னர் ஃபேஸ்லிப்டட் XUV300 காரில் கூட இருந்தது. காம்பாக்ட் எஸ்யூவி களுடன் மேலே உள்ள பிரிவில் இந்த வசதி பொதுவானதாகி வரும் நிலையில், சப்-4m எஸ்யூவி பிரிவில் மஹிந்திரா மட்டுமே இதை வழங்குகிறது. இருப்பினும் சோனெட்டின் ஃபேஸ்லிஃப்ட்டுடன் கூட இந்த வசதி கொடுக்கப்படவில்லை..

மேலும் பார்க்க: மஹிந்திரா XUV 3XO MX1 பேஸ் வேரியன்ட் 5 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

Mahindra XUV 3XO Electronic Parking Brake

​​ஒரு மெக்கானிக்கல் ஹேண்ட்பிரேக் அதன் வேலையை நன்றாகச் செய்யக்கூடியதுதான் என்றாலும் கூட, இது பிரீமியம் கேபின் தோற்றத்தை நோக்கமாகக் கொண்ட மாடல்களில் அதை பார்க்க நீங்கள் விரும்பமாட்டீர்கள். எனவே XUV 3XO ஆனது எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்கை வழங்குகிறது. இது சிலருக்குப் பயன்படுத்த எளிதானது. ஹேண்ட்பிரேக் லீவரை பயன்படுத்த அல்லது துண்டிக்க ஒரு பட்டன் கொண்டு மாற்றப்படுவதால் சென்டர் கன்சோலை தெளிவான தோற்றத்தை கொண்டுள்ளது.

அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்

Mahindra XUV 3XO ADAS

ஹூண்டாய் வென்யூ சப்-4m எஸ்யூவி பிரிவில் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வசதியை முதன்முதலில் வழங்கியது. அதே போன்ற பாதுகாப்பு வசதிகள் பின்னர் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட்டிலும் சேர்க்கப்பட்டன. மஹிந்திரா தனது என்ட்ரி-லெவல் SUV, XUV 3XO க்கு ADAS வசதியை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் வசதிகளின் தொகுப்பில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சேர்க்கப்பட்டிருப்பதன் மூலம் ஒரு படி மேலே சென்றுள்ளது. இந்த வசதி க்ரூஸ் கன்ட்ரோல் முன்னால் செல்லும் காருடன் பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க உதவுகிறது. இதன் பொருள் லீட் கார் செய்தால் எஸ்யூவியின் வேகம் குறையும். தூரம் அதிகரித்தால் மீண்டும் வேகத்தை அதிகரிக்கும்.

அறிமுக விலையில் கூட மஹிந்திரா XUV 3XO ஆனது டாப் எண்டில் விலை உயர்ந்ததாக இருக்கிறது, மேலும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கியா சோனெட்டை விட அதிகமான நன்மைகளை உங்களுக்கு வழங்கும் வகைகளாகும். குறிப்புக்கு 3XO விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரையிலும், சோனெட் ரூ.7.99 லட்சம் முதல் ரூ.15.75 லட்சம் வரையிலும் உள்ளது(விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், டெல்லி -க்கானவை). நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் பதிவிடுங்கள்.

மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO AMT

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மஹிந்திரா XUV 3XO

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience