அதிகளவில் வதந்திகளும், கசிந்த படங்களும் சேர்ந்து ஒரு M பேட்ஜ் கொண்ட 7-சீரிஸ் மாடலை உறுதி செய்த நிலையில், முடிவாக M760Li x டிரைவ்-வை BMW நிறுவனம் வெளியிட்டுள்ளது. வழக்கமான முன்னணி ஆடம்பர அம்சங்களை தவிர, இந்த பிம்மரில் (BMW) ஒரு 12-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் M செயல்திறன் கொண்ட ட்வின் பவர் டர்போ டெக்னாலஜி ஆகியவற்றை, அதன் போனட்டின் கீழே கொண்டுள்ளது. செயல்திறன் மீது ஆவல் கொண்டு, பின்புற சீட்டின் திறந்தவெளியில் விருப்பமுள்ள கார் ஆர்வலர்களை குதூகலப்படுத்துவதற்காக வரும் இந்த காரில், எப்போதாவது ஹேமில்டனை தங்களுக்குள்ளே ஆதரித்து கொள்ளக்கூடும். 7-சீரிஸ் பாரம்பரியத்தின் பிரிமியம் நிலை மற்றும் M பிரிவின் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றின் கலவை, இந்த காரில் உள்ளது கவனிக்கத்தக்கது.
ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான BMW நிறுவனத்தினர் தங்களது மிக பிரபலமான M4 கூப் கார்களை நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக புகழ் பெற்ற ஸ்போர்ட்ஸ் செடான் M3 கார்களின் இரண்டு கதவுகள் கொண்ட வெர்ஷன் தான் இந்த M4 கூப் பெர்பார்மன்ஸ் கார்கள். இந்திய சந்தையில் ரூ. 1.21 கோடிக்கு (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) விற்பனைக்கு வந்துள்ள இந்த கார் அதீத வசதி படைத்த மேல்தட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறது. BMW நிறுவனத்தின் ஸ்டேண்டர்ட் 3 - சீரிஸ் கார்கள் ரூ.1.19 கோடிகளுக்கு கிடைக்கும் நிலையில் , இந்த அசுரத்தனமான 2 கதவு கொண்ட பெர்பார்மன்ஸ் காரின் விலை 3 - சீரிஸ் கார்களை விட சில லட்சங்களே கூடுதல் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
புதுடெல்லியில் நடைபெற்ற 2016 இந்திய கலைக் கண்காட்சியில் (இந்தியா ஆர்ட் ஃபேர்), BMW மூலம் #10 ஆர்ட் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் இது போன்ற 17 “ஓடும் சிற்பங்கள்” (ரோலிங் ஸ்கால்ப்ச்சர்ஸ்) இதுவரை உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 1990 ஆம் ஆண்டு சீஸர் மேன்ரிக்யூ மூலம் பெயிண்ட் தீட்டப்பட்ட இது, அந்த பட்டியலில் 10வது கார் ஆகும். கலை கண்காட்சியில் இருந்த இந்த 1990 BMW 730i ஆர்ட் காரை, BMW குரூப் இந்தியாவின் தலைவரான பிலிப் வான் சார் திறந்து வைத்தார்.
எக்ஸிக்யூட்டிவ் சேடனான 3-சீரிஸின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ரூ.35.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புதுடெல்லி) விலை நிர்ணயத்தில் BMW நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிலும் இதே கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்த காரில் 4 டீசல் வகைகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஒரு பெட்ரோல் பதிப்பும் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே 3-சீரிஸை விட சிறப்பாக விற்பனையாகி வரும் ஆடி A4 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் ஆகியவை உடன் இந்த 3-சீரிஸ் போட்டியிட உள்ளது. இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை குறித்து பார்க்கும் போது, புதிய LED ஹெட்லெம்ப்களுடன் கூடிய LED DRL-களுடன் முழுமையான LED டெயில்லெம்ப்கள் ஆகியவை தவிர, இந்த கார் பெரும்பாலும் அப்படியே தான் உள்ளது. மேலும் இதில் ஒரு ஜோடி புதிய அலாய் வீல்களை பெற்றுள்ளது. இந்த 3-சீரிஸின் உள்புறத்தில், புதிய தலைக்கு மேலான டிஸ்ப்ளே மற்றும் 3D கிராஃபிக்ஸ் உடன் கூடிய ஒரு புதிய நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை காணப்படுகிறது.