வோல்க்ஸ்வேகன் வென்டோ

` 8.0 - 13.8 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


பிப்ரவரி 08, 2016: ஆட்டோ எக்ஸ்போவிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாகவே, புதுப்பிக்கப்பட்ட போலோ மற்றும் வென்டோ ஆகியவற்றை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட காரில், திரிந்த நிலையிலான ஹெட்லெம்ப்களுடன் கூடிய டேடைம் ரன்னிங் LED-கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இதன் அறிமுகத்தின் போது, இந்த மேம்படுத்தப்பட்ட ஹெட்லெம்ப்களை குறித்து, ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் தரப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை 2016 வென்டோவில் இதை கொண்டு வந்து போலோவிற்கும், அடுத்துவரவுள்ள கச்சிதமான சேடனான அமினோவிற்கும் இடையிலான வேறுபாட்டை காட்டுவதற்கு வோல்க்ஸ்வேகன் நிறுவனம் நினைக்கலாம் என்று தோன்றுகிறது. அப்படியானால், இது வென்டோவை தனித்தன்மையுடன் நிற்க செய்வதோடு, ஜெட்டா மற்றும் அடுத்து வரவுள்ள பாஸ்அட் ஆகியவற்றின் வரிசையில் இணைக்கப்பட வாய்ப்பு உருவாகும். இந்த ஹெட்லைட்கள் பெரும்பாலும், உயர்தர வகையிலோ அல்லது தேர்விற்குரிய ஒன்றாகவோ அளிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. வோல்க்ஸ்வேகன் வென்டோ விமர்சனம்

கண்ணோட்டம்


அறிமுகம்


2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு சற்று முன்னதாக, தனது பிரபலமான சேடனான வென்டோவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வோல்க்ஸ்வேகன் இந்தியா அறிமுகம் செய்தது. இதில் லேசான புதுப்பிப்பு செய்யப்பட்டு ரூ.7.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற துவக்க விலையில், அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. நாடெங்கிலும் உள்ள எல்லா வோல்க்ஸ்வேகன் டீலர்ஷிப்களை தவிர, அடுத்து நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிக்காக வைக்கப்பட்டது. இந்த நவீன பதிப்பில், ஒரு சில விறுவிறுப்பான அம்சங்கள் சேர்க்கப்பட்டு, பயணிகளுக்கு இன்னும் அதிக பயன்பாட்டை அளிக்கக் கூடிய வகையில் இந்த வாகனம் மாற்றப்பட்டிருந்தது. எனவே அப்படி என்னென்ன அம்சங்கள், அதில் அளிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை காண்போம்!

பிளஸ் பாயிண்ட்ஸ்1. டைனாமிக் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம். இதன்மூலம் முந்தைய பதிப்பில் இல்லாமல் இருந்த பொழுதுப்போக்கு அம்சத்தை, இது பூர்த்திச் செய்வதாக அமைகிறது.
2. செயல்திறன் உடன் தொடர்புடைய என்ஜின்கள். இதன் மூன்று மோட்டார்களும் ஒரு நேர்த்தியான எரிப்பொருள் சிக்கனத்தை கொண்டுள்ளதோடு, சிறந்த ஆற்றல் வெளியீட்டையும்அளிக்கின்றன.
3. 7-ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன். இதன் இரட்டை கிளெச் மெக்கானிஷம், ஆற்றல் வெளியீட்டில் தங்குதடையில்லாத ஒரு ஆட்டோமேட்டிக் கியர் ஷிஃப்ட்டை அளிக்கிறது. மைனஸ் பாயிண்ட்ஸ்1. அழகியலில் எந்த மேம்பாடும் செய்யப்படவில்லை. புதிய பதிப்பில், ஒரு பழைய வெளிப்புற அமைப்பியல் வடிவமைப்பையே கொண்டிருப்பது சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
2. கிரவுண்டு கிளியரன்ஸ். மிகவும் தாழ்ந்த நிலையை கொண்டிருப்பதால், பெரிய வேகத்தடைகள் வரும் போது, கடப்பதற்கு அசவுகரியமாக தெரிகிறது.
3. துவக்க மற்றும் இடைப்பட்ட வகைகளில், புதிய சேர்ப்புகள் இடம் பெறவில்லை என்பதால், நுகர்வோருக்கு ஒரு சிறப்பான தயாரிப்பாக கிடைக்க வாய்ப்பில்லை.

தனித்தன்மையான அம்சங்கள்1. இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் கூடிய ஒரு டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஓட்டுவதற்கு இதமான அனுபவத்தை அளிக்கின்றன.
2. மிரர் லிங் கனெக்ட்டிவிட்டியின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை, காருடன் இணைக்க செய்து, பல செயல்பாடுகளை நடப்பிக்க எளிதாக உள்ளது.

மேற்பார்வை


அடுத்து நடைபெறவுள்ள ஆட்டோ ஷோவில், தங்களின் நவீன மாடல்களை வெளியிடும் வகையில், பெரும்பாலான வாகனத் தயாரிப்பாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ஒரு படி முன்னே சென்று, ஏற்கனவே தனது பிரபலமான சேடனான வென்டோவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நவீன மேம்பாடுகள் அனைத்தும், அதன் உயர்-மாதிரியான ஹைலைன் வகைக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள் ஆகும். அதை தவிர, அதன் வெளிப்புறம், தொழிற்நுட்பம் அல்லது உட்புறத்தின் முன்புறம் ஆகியவற்றில் எந்த மாற்றத்தையும் அது பெறவில்லை. போர்ட்டில் ஒரு புதிய அம்சமாக தெரியும் மிரர் லிங் கனெக்ட்டிவிட்டியின் மூலம் ஆடியோ யூனிட் டிஸ்ப்ளே, உங்கள் போன் ஸ்கிரீல் எதிரொலிக்கிறது. மற்றொரு அம்சமான ரெயின் சென்ஸர், தற்போது ஆட்டோ டிம்மிங் IRVM உடன் ஒருங்கிணைந்துள்ளது. பாதுகாப்பை பொறுத்த வரை, தற்போதைய மாடலில் காணப்படும் அதே அம்சங்களையே இதுவும் தாங்கி

வருகிறது.


இதில் எலக்ட்ரானிக் என்ஜின் இம்மொபைலைஸர், எலக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் ப்ரோகிராம் மற்றும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் ஆகியவை உட்படுகின்றன. மற்றொருபுறம், தேர்ந்தெடுக்கும் வகையிலான 3 என்ஜின் தேர்வுகள் அளிக்கப்படுகின்றன. இதில் இரு பெட்ரோல் என்ஜினும், மற்றொன்று டீசல் மோட்டாரும் ஆகும். இவை அனைத்தும் சிறப்பான ஆற்றலையும், முடுக்குவிசையும் அளிப்பதை தவிர, சாலைகளில் கூடுதலான செயல்திறனையும் அளிக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரிவில் உள்ள சந்தையில் சிறந்த விற்பனையைக் கொண்ட மற்ற கார்களான ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சியஸ் போன்றவைகளுடன் இது போட்டியிட

உள்ளது.


இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக வெளிவரவுள்ள அமினோ, ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் அதன் அறிமுகத்தை பெற தயாராகி வருகிறது. தற்போது வென்டோவில் உள்ள பெரும்பாலான அம்சங்களை, இந்த புதிய மாடலும் தாங்கி வரலாம் என்று தெரிகிறது.

பின்னணி மற்றும் பரிணாமம்


கடந்த 2010-ல் தனது புனே தொழிற்சாலையில், வென்டோவின் உற்பத்தியை வோல்க்ஸ்வேகன் இந்தியா துவக்கியது. டிரென்டுலைன், கம்ஃபோர்ட்லைன் மற்றும் ஹைலைன் ஆகிய மூன்று வகைகளில், அது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் தொழிற்நுட்ப ரீதியாக, அதன் ஹேட்ச்பேக் உறவுத் தயாரிப்பான வோல்க்ஸ்வேகன் போலோவின் ஒரு விரிவாக்கம் பெற்ற பதிப்பாக உள்ளது. அப்படியிருந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. போலோவிடம் இருந்து பெறப்பட்ட ஒரு 1.2-லிட்டர் TSI மோட்டாரின் மூலம் ஒரு தனிப்பட்ட TSI மாடலையும், இந்நிறுவனம் சேர்த்துள்ளது. இதிலுள்ள ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒரு டச்ஸ்கிரீன் ரேடியோ போன்ற சில அம்சங்களின் மூலம் இந்த சேடன், பலரையும் ஈர்த்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த தயாரிப்பாளரின் மூலம் ‘ஸ்டைல்’ லிமிட்டேட் பதிப்பு வகை கொண்டுவரப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக, கடந்த 2014-ல் கோனிக்ட் பதிப்பு கொண்டுவரப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த மாடலின் வெளிப்புற அமைப்பு மற்றும் உட்புற அமைப்பு ஆகியவற்றில் சில மாற்றங்களை தாங்கிய, ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளிவந்தது. இந்தாண்டின் புதுப்பிக்கப்பட்ட மாடலில் கூட, இதன் எந்த முன்னோடிகளிடமும் இல்லாத சில கூடுதலான கூறுகளை பெற்றுள்ளது.

வெளிப்புற அமைப்பியல்


எப்போதும் ஒரு கச்சிதமான சேடனாக காட்சி அளிக்கும் வென்டோவின் வடிவமைப்பில், நேர்த்தி மற்றும் ஸ்டைல் ஆகிய இரண்டையும் காண முடிகிறது. 2016 பதிப்பில் வெளிப்புற அமைப்பியலில் எந்த மாற்றத்தையும் பெறவில்லை. அதே நேரத்தில், அதில் உள்ள சில கவர்ச்சிகரமான கூறுகளின் மூலம் சாலையில் செல்வோரை திரும்பி பார்க்க வைக்கும் திறனை பெற்றுள்ளது.

p1

அளவீடுகளை பொறுத்த வரை, வோல்க்ஸ்வேகன் வென்டோவை விட, அதன் போட்டியாளரான மாருதி சியஸ் 100 mm நீளமாகவும், 31 mm அகலமாகவும் காணப்படுகிறது. உயரத்தை பொறுத்த வரை, இதன் எல்லா போட்டியாளர்களும் வென்டோவை விட வளர்ந்தவர்கள். கிரவுண்டு கிளியரன்ஸ் மற்றும் வீல்பேஸ் அளவுகளில் கூட, மற்ற மாடல்களை விட இது குறைவானதாக உள்ளது.

1

முன்பக்கத்தில் உங்களின் கவனத்தை முதலில் ஈர்க்கும் காரியம் என்றால், மூன்று கிடைமட்டமான நிலையில் உள்ள ஸ்லாட்களை கொண்டு பரந்து விரிந்த ரேடியேட்டர் கிரில் என்பதை உறுதியாக கூறலாம். இதில் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது, கிரிலில் சரியாக நடுப்பகுதியில் காணப்படும் இதன் கவர்ச்சிகரமான லோகோ ஆகும். மெல்லிய ஸ்லாட்கள் மற்றும் இன்சிக்மா ஆகியவற்றில் உள்ள நேர்த்தியான கிரோம் பணித்தீர்ப்பு மூலம் பார்வைக்கு இன்னும் கவர்ச்சிகரமாக தெரிகிறது.

p2

கருப்பு நிறத்தில் பணித் தீர்க்கப்பட்டு கிரிலின் இருபுறமும் காணப்படும் ஹாலோஜன் ஹெட்லெம்ப்கள், மதிப்பு மிகுந்தவை என்று குறிப்பிடத் தகுந்த மற்றொரு கூறு ஆகும். இதன் ஹெட்லைட் கிளெஸ்டர் அளவில் பெரியதாக இருந்தாலும், காரின் கிரில் வடிவமைப்புடன் சரியாக பொருந்துகிறது. இடைப்பட்ட மற்றும் உயர் மாதிரி வகைகளில், இரட்டை பீம் ஹெட்லெம்ப்கள் அளிக்கப்படுகின்றன.

p3

ஒரு வெப்பம் தாக்காத கிளாஸ் (ஹீட் இன்சுலேட்டிங் கிளாஸ்) கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இதன் விண்டுஸ்கிரீன், தற்போது ரெயின் சென்ஸிங் வைப்பர்களை பெற்று, முன்பக்கத்து காட்சியை அதிக தெளிவானதாக பெற உதவுகிறது. போனட்டை குறித்து பார்க்கும் போது, அது கீழ்நோக்கி சரிந்ததாக அமைக்கப்பட்டு, குறைந்த மடிப்புகளை பெற்று, ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்தை பெற்றுள்ளது.

p4

இதன் 15-இன்ச் ஸிர்கோனியா அலாய் வீல்களை தவிர, பக்கவாட்டு பகுதியின் தகவமைப்பில் வர்ணிப்பதற்கு வேறொன்றும் இல்லை. அதில் உயர் செயல்திறன் கொண்ட 185/60 R145 அளவிலான டியூப்லெஸ் டயர்களை பெற்றுள்ளது. இதே அளவிலான டியூப்லெஸ் டயர்களே, கம்ஃபோர்ட்லைன் வகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றபடி வரிசையில் உள்ளவைகளில் ரோபஸ்ட் ஸ்டீல் ரிம்களை பெற்றுள்ள நிலையில், டிரென்டுலைன் வகையில் இது 14 இன்ச் அளவுக் கொண்டுள்ளது. இந்த ரேடியல் டியூப்லெஸ் டயர்கள், 175/70 R14 அளவை கொண்டவை.

p5

நன்கு வடிவமைக்கப்பட்ட வெளிப்புற ரேர் வியூ மிரர்கள், நேர்த்தியான பாடி நிறத்தில் அமைந்து இப்பட்டியலில் இடம் பெறுகின்றன. சைடு டேன் இன்டிகேட்டர்கள், எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளது.

p6

இந்த சேடனின் பின்புறம் வெறுமையாக காணப்பட்டு, ஸ்டைலை இழந்தது போன்ற தோற்றத்தை அளித்தாலும், ஒரு சில கூறுகள் மூலம் அதை பார்ப்பதற்கு விருப்பம் உண்டாகிறது.

p7

இதன் டெயில்லைட் கிளெஸ்டர் அதிக வெளிச்சம் கொண்டதாக அமைந்து, 3D தன்மைக் கொண்ட லெம்ப்கள் மற்றும் டேன் இன்டிகேட்டர்களை ஒருங்கிணைய பெற்றதாக உள்ளது.

p8

இதன் பின்புறத்தில் உள்ள பம்பர் நேர்த்தியாக செதுக்கப்பட்டதாகவும், அந்நிறுவனத்தின் குறியீட்டை (இன்சைனியா) பொறிக்கப்பட்டதாகவும் அமைந்து, பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த கவர்ச்சியாக விளங்குகிறது.

p9

இதன் பூட் கம்பார்ட்மெண்ட்டிற்கு வரும் போது, அது ஏறக்குறைய 494 லிட்டர் அளவில் அமைந்து, அதிகளவிலான பேக்குகளை வைப்பதற்கு போதுமானதாக உள்ளது. அதே நேரத்தில் ஹோண்டா மற்றும் மாருதி ஆகியவற்றை ஒப்பிடும் போது, அவை அதில் சிறப்பாக விளங்கி, வென்டோவை விட அதிக பொருள் வைப்பு இடவசதியை அளிக்கின்றன.

2

உட்புற அமைப்பியல்


இந்த புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் உட்புற அமைப்பியல் பிரிவின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் விடப்பட்டாலும், உட்புறத்தில் சில மேம்பட்ட கருவிகள் அதன் அம்சங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. கேபின் நேர்த்தியாகவும், சிறந்த தரமான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டையும் கொண்டுள்ளது. இதனுள்ளே 5 பேருக்கான இடவசதி செளகரியமாக இருப்பதை உணரும் வகையில், அதன் ஹெட், லெக் மற்றும் ஷோல்டர் ரூம்கள் தாராளமாக உள்ளது.

p10

அந்நிறுவனத்தின் வடிவமைப்பாளர்களின் அருமையான பணித்திறனை, இக்காரின் உள்ளே உங்களால் தெளிவாக காண முடிகிறது. அவர்களால் இரட்டை டோன் நிறத்திட்டம் மற்றும் கிரோம் கூறுகள் ஆகியவற்றின் கலவை அளிக்கப்பட்டு, இதற்கு ஒரு நேர்த்தியான தோற்றம் கிடைத்துள்ளது. குறிப்பாக, இதன் டேஸ்போர்டை எடுத்துக் கொண்டால், அது நன்றாக வடிவமைக்கப்பட்டதாக காட்சி அளிப்பதோடு, அதன் கருவிகள் அனைத்தும் சரியான நிலையில் அமைக்கப்பட்டுள்ளதால், காரில் உள்ள பல்வேறு செயல்பாடுகளை எளிமையான முறையில் டிரைவரால் கூடுதல் செளகரியமாக கையாள முடிகிறது.

p11 டேஸ்போர்ட்டின் நடுவே அமைந்துள்ள ஒரு ஸ்டைலான சென்டர் கன்சோலில், கிளைமேட்ரோனிக் ஆட்டோமேட்டிக் ஏர் கன்டீஷனிங் யூனிட் உடன் செவ்வக வடிவிலான ஏர் திறப்பிகள் போன்ற அம்சங்கள், மியூஸிக் சிஸ்டத்திற்கு சற்று மேலே அமைக்கப்பட்டுள்ளன. தூசி, போலன் பில்ட்டர் மற்றும் பின்பக்க AC திறப்பி ஆகியவையும் காணப்படுகிறது.

p12

இதில் முக்கியமான மேம்பாடுகளில், டைனாமிக் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே-யும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த மேம்பட்ட யூனிட் உடன் ஒரு டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேயும், அதனுடன் ரேடியோ, நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ஒரு சில மற்ற செயல்பாடுகளும் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், உங்கள் போன் உடன் காரை இணைக்க உதவும் மிரர் லிங் கனெக்ட்டிவிட்டி உண்மையிலேயே ஒரு சிறந்த சேர்ப்பாக விளங்கி, எந்த கஷ்டமும் இல்லாமல் காரின் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுகிறது.

p13

அதில் அளிக்கப்பட்டுள்ள டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜஸ்மெண்ட் செயல்பாடுகளுடன் கூடிய ஒரு பவர் அசிஸ்டேட் ஸ்டீரிங் காலம் மூலம் அதன் நிலையை சரியான முறையில் திருத்தியமைக்க டிரைவருக்கு உதவுகிறது. அதற்கு பின்புறத்தில் ஒரு ஸ்டைலான இன்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் அமைந்து, ஒரு டச்சோமீட்டர், ட்ரிப்மீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

p14

செயல்திறன்


டீசல்


ஒரு DOHC வால்வு கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட ஒரு 1.5-லிட்டர் டர்போசார்ஜ்டு ஆயில் பர்னரை, டீசல் பதிப்புகள் பெற்றுள்ளன. இந்த என்ஜின் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றலான 103.5bhp-யும், 250Nm முடுக்குவிசையும் பெற முடிகிறது. அதில் ஒரு கூடுதல் அனுகூலமாக, 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் என்ற இரு தேர்வுகளில் கிடைக்கிறது. மேலும் மேனுவல் வகையில் ஒரு சிறந்த மைலேஜ்ஜாக லிட்டருக்கு 20.64 கி.மீட்டரும், AT வகைகளில் இதைவிட சிறப்பான எரிப்பொருள் சேமிப்பாக, ஏறக்குறைய லிட்டருக்கு 21.5 கி.மீட்டரும் அளிக்கிறது.

3

பெட்ரோல்


இந்த மாடலில் அளிக்கப்படும் இரு தேர்வுகளில், இயல்பாக உள்ளிழுப்பை கொண்ட 1.6-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஒன்றாகும். இதில் 103.5bhp ஆற்றலும், 153Nm முடுக்குவிசையும் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், ஏறக்குறைய லிட்டருக்கு 16.09 கி.மீ மைலேஜூம் அளிக்கிறது. இது ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. மற்றொன்று 1.2-லிட்டர் பெட்ரோல் மில் ஆகும். இதில் அதே அளவு ஆற்றல் வெளியிடப்பட்டாலும், 1500 - 4100rpm-க்கு உட்பட்ட இடைவெளியில் 175Nm முடுக்குவிசையை அளிக்கிறது. இந்த மில், ஒரு 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டு, முன்பக்க வீல்களுக்கு ஆற்றலை வழங்குகிறது.

4

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


பிரேக்கிங்கை பொறுத்த வரை, அதன் முன்பக்க வீல்களில் ஒரு ரோபஸ்ட் ஜோடியான வென்டிலேட்டேட் டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கத்தில் வலிமையான ட்ரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அளிக்கப்பட்டுள்ள ஆன்டி லாக்கிங் பிரேக்கிங் செயல்பாடு மூலம் இந்த அமைப்பிற்கு கூடுதல் பலம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், வாகனம் சருக்குவதையும் தடுக்கிறது. அதே நேரத்தில் முன்பக்க ஆக்சிலுக்கு மெக்பெர்சன் ஆதாரமாகவும், பின்பக்கத்திற்கு செமி-இன்டிபென்டென்டேட் டிரைலிங் ஆர்மும் சேர்ந்து, இந்த சேடனில் செல்லும் உங்கள் பயணத்தை மிகவும் இதமானதாக அமைகிறது. சாலையின் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், மேற்கண்ட சஸ்பென்ஸன் சிஸ்டம் மூலம் உங்கள் பயணம் மென்மையானதாக அமைவது உறுதி செய்யப்படுகிறது. மற்றொருபுறம், ஒரு ஸ்பீடு சென்ஸிங் எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் காலம் மூலம், குறைந்த மற்றும் அதிக வேகங்களில் கூட சிறந்த கட்டுப்பாடும், வளைவுகளை எடுப்பதற்கு எளிதாகவும் உள்ளது.

பாதுகாப்பு


இந்த மேம்படுத்தப்பட்ட வென்டோவில், பாதுகாப்புக் கூறுகள் தேவைக்கு நிறைவாக உள்ளது. துவக்க நிலை மாடல்களில் கூட, முன்பக்க இரட்டை ஏர்பேக்குகள், மூன்று பாயிண்ட் சீட் பெல்ட்களில் முன்பக்கத்தில் உள்ளவற்றின் உயரத்தை மாற்றியமைக்கும் வசதி மற்றும் ஃபிளோட்டிங் கோடு உடன் கூடிய எலக்ட்ரானிக் என்ஜின் இம்மொபைலைஸர் போன்ற அம்சங்களை நீங்கள் காணலாம். பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள் சிறப்பாக பணியாற்றி, ஏதாவது தடைகள் வந்தால் அதை ஒலியெழுப்பு சிக்னல்கள் (ஆடியோபில் சிக்னல்ஸ்) மூலம் டிரைவருக்கு தெரியப்படுத்துகிறது. மாற்றியமைக்க கூடிய முன்பக்க மற்றும் பின்பக்க ஹெட் ரெஸ்ட்ரெயின்ட்கள் மூலம் உங்கள் கழுத்திற்கு ஆதரவும், பாதுகாப்பும் கிடைக்கிறது. இடைப்பட்ட மற்றும் உயர் மாதிரி வகைகளில் கூடுதலாக ஹில் ஹோல்டு கன்ட்ரோல் மற்றும் பவர் விண்டோக்கள் உடன் எல்லா டோர்களிலும் பின்ச் கார்டு செயல்பாட்டை கொண்டுள்ளன. இதை தவிர, மேம்பட்ட பண்புகளான ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிலைசேஷன் ப்ரோகிராம் போன்றவை, பாதுகாப்பு தரத்தின் அடுத்த நிலைக்கு நம்மை அழைத்து செல்கின்றன.

5

வகைகள்


இந்த மாடல் சீரிஸ், தற்போதைக்கு 3 நிலைகளில் அளிக்கப்படுகிறது.

6

இதன் துவக்க நிலை டிரென்டுலைன் வகையில் அம்சங்களின் ஒரு அணிவகுப்பை காண முடிகிறது. அவை அனைத்தும் அளிக்கும் பணத்திற்கு ஏற்ப மதிப்பு மிகுந்தவையாக உள்ளன. இந்த மாடலில் ஒரு மல்டி பங்க்ஷன் டிஸ்ப்ளே, மாற்றியமைக்கும் வசதியுடன் கூடிய டிரைவர் சீட் மற்றும் ஸ்போர்ஸ் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல் ஆகியவை முக்கியமாக காணப்படுகின்றன. கம்ஃபோர்ட்லைன் வகையில், இன்னும் ஒரு சில கூடுதல் சேர்ப்பு அம்சங்களான க்ரூஸ் கன்ட்ரோல், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் மற்றும் 15-இன்ச் ஸ்டீல் ரிம்கள் ஆகியவை உள்ளன. உயர்தர ஹைலைன் வகையில் மேம்பட்ட மற்றும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ள அம்சங்களாக, மிரர் லிங் கனெக்ட்டிவிட்டி, ஆட்டோ டிம்மிங் இன்சைடு ரேர் வியூ மிரர் மற்றும் ஸ்டீரிங் வீல்லில் ஏறிச் செல்லும் ஆடியோ கன்ட்ரோல்கள் ஆகியவை உள்ளன.

தீர்ப்பு


இந்த புதுப்பிக்கப்பட்ட வோல்க்ஸ்வேகன் வென்டோவின் வெளிப்புற அமைப்பியல், உட்புற அமைப்பியல் மற்றும் தொழிற்நுட்ப விபரங்களில் எந்த மேம்பாட்டை பெறாமல் விடப்பட்டது, கார்த்தேக்கோ-வை சேர்ந்த எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம். இந்த புதிய தயாரிப்புகள் மற்றும் மேம்பாடுகள் மூலம் சந்தையில் உள்ள தரத்தை, இந்த வாகனத் தயாரிப்பாளர் தொடர்ந்து முன்னேற்றுவதற்கான உழைப்பை செலுத்தி வருகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு சில புதிய அம்சங்களை மட்டுமே வைத்து கொண்டு, பல நுகர்வோரின் பார்வையில் கவர்ந்திழுப்பதாக இருக்க முடியாது. ஏனெனில் அடுத்து நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ மற்றும் மற்ற எல்லா தயாரிப்பாளர்களும் புதிய அம்சங்களுடன் களமிறங்குவதை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் விலை மற்றும் செயல்திறன் ஆகிய புள்ளி விபரங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த நுகர்வோரின் விருப்பப்பட்ட தேர்வாக இது அமைய வாய்ப்புள்ளது.