வோல்க்ஸ்வேகன் போலோ

` 5.4 - 9.3 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


மார்ச் 09, 2016: LED டே டைம் ரன்னிங் லைட்கள் உடன் கூடிய புதிய ஹெட்லெம்ப்களை கொண்ட வோல்க்ஸ்வேகன் போலோ கார் தற்போது வேவுப் பார்க்கப்பட்டு உள்ளது. இதனோடு கூட ஒரு சில மற்ற மேம்பாடுகளையும் சேர்த்து இந்த ஆண்டிலேயே, மேற்கண்ட புதுப்பிக்கப்பட்ட தயாரிப்பை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த மாதத்தின் துவக்கத்திலேயே புதுடெல்லியில் நடைபெற்ற 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் போலோ GTI வாகனம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த ஹேட்ச்பேக்கின் அதிகாரபூர்வமான அறிமுகம் வரும் செப்டம்பர் மாதத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், அபார்த் புண்டோ இவோ காரை எதிர்த்து இந்த கார் போட்டியிடலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. போலோ GTI –யின் போனட்டிற்கு கீழே நாம் பார்க்கும் போது, வோல்க்ஸ்வேகனின் 1.8 –லிட்டர் TSi டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பெற்று, அதன் மூலம் 192 PS ஆற்றல் வெளியீட்டையும், 250 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. அதே நேரத்தில் 1.8 –லிட்டர் யூனிட் ஒரு 7 –ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டதாக வருகிறது.

வோல்க்ஸ்வேகன் போலோ விமர்சனம்


மேற்பார்வை


ஒட்டு மொத்தம்:


உலக வாகன அரங்கில் ஒரு சிறப்பான தாக்கத்தை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நம் நாடான இந்தியாவில் இந்த நிறுவனத்தின் ஆதிக்கம், ஒரு கூட்டம் மலிவான மற்றும் அதிகம் விரும்பக் கூடிய உள்ளூர் பிராண்டுகளின் மூலம் மறைக்கப்படுகிறது. நம் நாட்டில் இந்த நிறுவனத்திற்கான சந்தையின் வளர்ச்சி நிலையை தொடர்ந்து தாக்குபிடிக்கவும், அதை மேலும் வலுப்படுத்தவும் உதவும் வாகனங்களில் இந்த போலோ காரும் ஒன்றாக உள்ளது எனத் தெரிகிறது. இங்கே இந்த வாகனம் அட்டகாசமான ஒன்றாக திகழ்கிறது. இந்த வாகனத்தில் நீங்கள் ஒரு முறையில் பயணம் செய்து பார்த்தால், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் உறுதிமொழியின்படி, தொழிற்நுட்பத்தில் எந்த அளவிற்கு உண்மையாக செயல்பட்டு உள்ளது என்பதை உங்களால் உணர முடியும். இந்த வாகனத்தின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ள நிலையில், இந்த பழைய பள்ளி மாடலை (ஓல்டு ஸ்கூல் மாடல்) மீண்டும் ஒரு முறை சந்தித்து, ஆய்வு செய்வது பார்ப்பதற்கான தகுந்த நேரம் வந்துவிட்டது.

சாதகங்கள்:1. பார்வைக்கு சிறப்பாக தோற்றம் அளிக்கும் சுயவிவரத்தை கொண்ட வாகனம் என்பதால், இன்றைய இளம் தலைமுறையினரின் மனதை நிச்சயம் கவர்ந்து இழக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
2. இன்றைய கால பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையிலான மாடலாக விளங்கும் வகையில், இதம் அளிக்கும் வித்தியாசமான பல கூறுகளை இது கொண்டு உள்ளது.

பாதகங்கள்:1. ஒரு விஸ்தாரமான கேபினை பெற்றதாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு, இதற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.
2. செயல்திறன் பகுதியில் இன்னும் கூட ஒரு சில மேம்பாடுகளை பெற்றதாக இருக்க வேண்டி உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்.

தனித் தன்மையான அம்சங்கள்:1. இந்த புதிய இன்ஃபோடெயின்மெண்ட் டச் –ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் மிரர் லிங் சிஸ்டம் ஆகியவை சேர்ந்து கேபினிற்கு இருக்கும் இனிமையான தன்மையை கூட்டுவதாக அமைந்து உள்ளது.
2. இதில் உள்ள ABS, EPS மற்றும் மற்ற தொழிற்நுட்ப வசதிகளின் மூலம் இது ஒரு உயர்தர பாதுகாப்பு அம்சங்களை கொண்ட வாகனமாக விளங்குவதால், நுகர்வோர் இடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

மேற்பார்வை:


இந்த போலோ காரின் புதிய பதிப்பில் ஒரு சில எளிய அளவிலான மேம்பாடுகள் செய்யப்பட்டு, அதிலும் குறிப்பாக உட்புற அமைப்பியலில் மாற்றங்களை பெற்று உள்ளது. இந்த காரின் வெளிப்புறத்தை பொறுத்த வரை, பெரும் அளவில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே விடப்பட்டு உள்ளது. ஏனெனில் இந்த காரில் உள்ள அழகியல் தன்மைக் கொண்ட பாடி அமைப்பு மற்றும் கிரோம் மேலோட்டங்கள் ஆகியவற்றை பார்வையாளர்கள் பெரிதும் விரும்பும் காரியங்களாக இருப்பவை என்பதால், தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவை அப்படியே விடப்பட்டு உள்ளன. இதன் உட்புற அமைப்பியலை பொறுத்த வரை, அதே புத்துணர்வு மிக்க வடிவமைப்பை கொண்டு உள்ளதோடு, ஒரு இரட்டை நிறத் திட்டம், ஃபெப்ரிக் மூலம் சூழப்பட்ட சீட்கள் மற்றும் பியானோ பிளாக் சென்டர் கன்சோல் ஆகிய அம்சங்களை கொண்டு உள்ளது. நீங்கள் ஒரு பழைய போலோவின் ரசிகராக இருக்கும் பட்சத்தில், இந்த புதிய பதிப்பின் மீது உங்கள் கைகளை வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரை சற்று பொறுத்து இருங்கள். இந்த காரில் உள்ள கேபினின் வசதிகளை ஒரு கூட்டம் புதிய அம்சங்களால் இந்த நிறுவனம் மேம்படுத்தி உள்ளதால், இவை அனைத்தும் நுகர்வோர் இடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. மற்றப்படி, இதில் உள்ள என்ஜின், பிரேக்கிங், சேசிஸ் மற்றும் இந்த காரின் மற்ற தகவமைப்புகள் ஆகியவை பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் பெறாமல் அப்படியே விடப்பட்டு உள்ளன. ஆனால் இது தவிர, இந்த வாகனத்திற்கு ஒரு கூடுதலாக என்ஜின் வகை சேர்க்கப்பட்டு உள்ளது. இது ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 1.6 –லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆகும்.

வெளிப்புற அமைப்பியல்:


இந்த காலத்தில் ஸ்டைலான முறையில் தீம் அளிக்கப்பட்ட கார்களின் நடுவே, அதிக நவீனத் தன்மையோடு கூடிய தோற்றத்துடன் கூடிய கார்களின் இடையே இதுவும் ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை என்று சிலர் கூறக் கூடும். அப்படி கூறுபவர்களுக்காக இந்த செய்தியைக் கூற விரும்புகிறோம், இன்றைய இந்திய சந்தையில் உள்ள எல்லா ஹேட்ச்பேக்குகளிலும் வைத்து, அதன் தோற்ற பொலிவிற்காக அதிகம் தேடப்படும் ஒரு கார் எது என்றால், அது போலோ தான்.


இது ஒரு ஹேட்ச்பேக் என்பதில் உங்களுக்கு எந்த உதவியும் பெற முடியாது என்றாலும், ஒரு நேர்த்தியான அமைப்பையும், ஸ்போட்டியான கவர்ச்சி மிகுந்த துவக்கத்தையும் இந்த வாகனத்தில் பெற முடிகிறது. இந்த காரில் ஒரு சாந்தமான தன்மை காணப்படுவதோடு, காண்பவர்களை ஆசைப்பட வைக்கும் வகையிலான மேம்பட்ட அங்க அடையாளங்களை பெற்று உள்ளது. இந்த காரில் உள்ள 3971 mm நீளம், 1682 mm அகலம் மற்றும் 1469 mm அளவில் அமைந்த உயரம் ஆகியவை மூலம் சரிசமமான பாடி அளவீடுகளை பெற்று உள்ள தன்மை, அதன் தோற்றத்தை பொலிவை மேலும் கூட்டுவதாக அமைகிறது.


இந்த காரின் அழகியல் தன்மையில் கார் தயாரிப்பு நிறுவனம் சிறப்பாக பணியாற்றி உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். இந்த வாகனத்தின் ரூஃப், விண்டு ஸ்கிரீனை நோக்கி கீழே இறங்கி செல்லும் முன் இருந்து, போனட்டை நோக்கி செல்லும் வரையும் மேற்புறத்தில் மென்மையான முறையில் செல்கிறது.


இந்த காரின் முன்பக்கத்தை பொறுத்த வரை, மெல்லிதாக காணப்படும் கிரிலில் சில்வர் நிறத்திலான மேலோட்டங்களை கொண்டு உள்ளது. அதே நேரத்தில் இதன் நடுவே பெரிய VW பிராண்டு எம்பளம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மற்றொருபுறம் பார்க்கும் போது, கூர்மையான ஹெட்லெம்ப் கிளெஸ்டர்களை பெற்று உள்ளதால், காரின் முன்பக்கத் தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சி கிடைத்து உள்ளது. காரில் உள்ள லைட்களின் தன்மையில், இரட்டை தூண் லைட் அமைப்புகள் (டயல் பீம் லைட் சிஸ்டம்ஸ்) மற்றும் ஒரு கருப்பு நிற பணித் தீர்ப்பு ஆகியவை மூலம் காரின் வடிவமைப்பு ஒரு அதிக சுவை மிகுந்த தயாரிப்பாக மாற்றப்பட்டு உள்ளது.


இந்த காரின் முன் பக்கத்தின் கீழ் பகுதியில் ஒரு பெரிய ஏர் டேம் மற்றும் ஏர் டேமின் மேலே கடந்து செல்லும் ஒரு மெல்லிய கிரோம் சேர்ப்பு, இந்த காரின் தோற்றத்திற்கு அதிக பொலிவை அளிக்க கூடியதாக விளங்குகிறது என்று நாங்கள் கருதும் ஒரு வடிவமைப்பு அடையாளம் (டிசைன் மார்க்) ஆகியவை இணைந்து காரின் முன் பக்கத்திற்கு அழகு சேர்க்கின்றன.


இந்த காரின் தயாரிப்பு நிறுவனம் மூலம் அதன் தனித்துவம் வாய்ந்த செயல்பாடாக அளிக்கப்பட்டு உள்ள விரிவான போனட், விண்டு ஸ்கிரீனில் இருந்து மென்மையான முறையில் கீழ் நோக்கி இறங்கி வருவதாக உள்ளது. இந்த காரின் முன் பகுதியில் உள்ள ஹீட்டின் மீது கடந்து செல்லும் கவனிக்கத்தக்க பாடி லைன்களின் மூலம் காரின் முன் பகுதிக்கு ஒரு அட்டகாசமான தோற்றம் கிடைத்து உள்ளது.


இந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதியின் சுயவிவரத்தை நோக்கி நம் கவனத்தை செலுத்தினால், இதன் தோற்றத்தில் எண்ணற்ற ஸ்போர்ட்டியான காரியங்கள் குவிந்து கிடைப்பதாக நாம் உணர முடியும். இந்த மாடலில் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ள லேஅவுட் மூலம் உங்களுக்குள் இருக்கும் இளமை உள்ளம் எழுந்து தாண்டவம் ஆட ஆரம்பிக்கிறது. அதே நேரத்தில் மறுசீரமைப்பை பெற்ற வளைவு நெளிவுகளின் மூலம் இந்த காரின் அசத்தலான தன்மை மேலும் அதிகரிப்பதாக உள்ளது. தடித்த வீல் ஆர்ச்சுகளின் மேலே செல்லும் முன்பக்க விராப்கள் மெல்லிய தோல் போல அமைந்து, ஒரு அதிக கவனிக்கத்தக்க வகையிலான தோற்றத்தை பெற்று தருகிறது.


அதே நேரத்தில், இந்த வாகனத்தில் உள்ள 15 இன்ச் ‘எஸ்ட்ராடா’ அலாய் வீல்கள் மூலம் ஒரு அதிக சக்தி வாய்ந்த காட்சி அமைப்பை பெறுகிறது. மேலும் இந்த அம்சத்தை பெரும்பாலான இளம் வயது பார்வையாளர்கள் விரும்பக் கூடிய ஒன்று என்பது நாம் அறிந்ததே.


இந்த காரின் டோர் பக்கவாட்டில் (டோர் சைடு) வழியாக செல்லும் சாந்தமான பாடி லைன்கள் கூட, இந்த காரின் வடிவமைப்பிற்கு அழகை கூட்டும் ஒரு கூறாக உள்ளது. இந்த காரின் பின்பக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மற்றும் சதுர வடிவில் அமைந்த ஹெட்லெம்ப்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து, வாகனத்தின் பின் பகுதிக்கு ஒரு அதிக அசத்தலான தோற்றத்தை பெற்று தருகிறது. இதன் உடன் டெயில் –கேட்டின் நடுவே கார் தயாரிப்பு நிறுவனத்தின் அடையாளத்தை இடம் பெற்று உள்ளது, இந்த கவர்ச்சி மிகுந்த தாக்கத்தை மேலும் கூட்டுவதாக அமைகிறது.

table-1 table-2

உட்புற அமைப்பியல்:


இந்த காரில் உள்ள உட்புற அமைப்பியலை பொறுத்த வரை, மிகவும் குறுகலான அமைப்புடனும் இல்லை, அதே நேரத்தில் மிகவும் விஸ்தாரமான அமைப்பு உடனும் அமைக்கப்படவில்லை. எனவே நீங்கள் நன்கு விரிவான ஒரு ஆடம்பரமான அமைப்பை எதிர்பார்க்கும் நபராக இருக்கும் பட்சத்தில், இந்த காரின் கேபின் உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கக் கூடும். இந்த காரின் புதிய பதிப்பில் பயணத்தின் தன்மையை இன்னும் சிறப்பாக மாற்றும் வகையில், ஒரு சில எளிய அம்சங்களை கொண்டதாக கிடைக்கிறது. முன்பக்கத்தின் வரிசையில் சிறப்பான லெக் ரூம் காணப்படுகிறது. இதனால் எங்கள் அணியைச் சேர்ந்த உயரமான நபர்களிடம் இருந்து கூட எந்த விதமான புகார்களும் எழவில்லை. ஆனால் பின்புறத்தை பொறுத்த வரை, இன்னும் கூட சற்று அதிக அளவிலான இடவசதியை அளித்து இருக்கலாம் என்பது எங்களின் கருத்து.


இந்த காரின் உள்ளே உள்ள இரட்டை டோன் நிறத் திட்டத்தின் மூலம் உட்புற சூழ்நிலை சக்தி வாய்ந்ததாக மாறி உள்ளது. இந்த தகவமைப்பு உண்மையிலேயே சிறப்பாக உள்ளது என்பதற்கு எங்கள் தரப்பில் இருந்து ஒப்புதல் அளிக்கிறோம். டேஸ்போர்டின் நடுப்பகுதியில் ஒரு பியானோ பிளாக் நிறத்தில் பணித் தீர்ப்பு பெற்று சிறப்பாக காட்சி அளிக்கும் சென்டர் கன்சோல் அமைந்து உள்ளது.


இந்த கன்சோலின் மேற்புறத்தில் ஒரு ஜோடி ஏர் கன்டீஷனிங் திறப்பிகள் காணப்படுகின்றன. இந்த மாடலின் பதிப்பில், முற்றிலும் புத்தம் புதிய ஒரு டைனாமிக் டச் –ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டதாக வருகிறது. ஒரு தரமான கேபினின் உள்ளே அமைந்த (இன் –கேபின்) பொழுது போக்கு அம்சத்தை எதிர்பார்க்கும் நபராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், இது நிச்சயம் உங்களை குதூகலப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் இதில் முற்றிலும் புத்தம் புதிய ஒரு மிரர் லிங் இணைப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த அமைப்பு உடன் உங்களின் ஸ்மார்ட் போனை இணைந்து கொள்ள முடியும் என்பதால், உங்களின் போனின் ஸ்கிரீனை அப்படியே காரின் டிஸ்ப்ளேயில் கொண்டு வந்து காட்சியகப்படுத்த முடிகிறது.


கீழ் பகுதியில் ஒரு மெல்லிய டிஸ்ப்ளே உடன் கூடிய ஒரு கிளைமேட்ரோனிக் ஏர் கன்டீஷனிங் சிஸ்டத்தை கொண்டு உள்ளது. கன்சோலுக்கு கீழே ஒரு பெரிய அளவிலான பொருள் வைப்பு இடத்தின் திறப்பு (ஸ்டோரேஜ் ஸ்பேஸ்) அமைந்து உள்ளது. இதில் பெரும்பாலும் உங்களின் போன் மற்றும் மற்ற சிறிய பொருட்களை மட்டுமே வைத்து கொள்ள முடியும்.


வலதுபுறத்தின் முனையில், லெதரை அணிந்த நிலையில் அமைந்த தட்டையான அடிப்பகுதியை கொண்ட ஸ்டீரிங் வீல் காணப்படுகிறது. இதன் மீது கிரோம் மேலோட்டங்களும் சேர்ந்து கொள்ள, இதற்கு ஒரு ஆடம்பரமான தோற்றம் கிடைத்து உள்ளது. இந்த ஸ்டீரிங் வீல்லை பிடித்து பார்த்த போது, அது தகுந்த அளவிலான பிடிப்பு (கிரிப்) கொண்டு இருந்ததால் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். இந்த ஸ்டீரிங் வீல்லின் மீது ஏறிச் செல்லும் வகையில் ஆடியோ சிஸ்டத்திற்கான கன்ட்ரோல்கள் அமைக்கப்பட்டு உள்ளதால், காருக்குள் இருக்கும் செயல்பாடுகளை எளிதாக இயக்க முடிகிறது.


இந்த ஸ்டீரிங் வீல்லுக்கு நேராக வலதுபுறத்தில் இணைந்த வண்ணம் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் அமைந்து உள்ளது. இதன் மூலம் சாலையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நபருக்கு, இதில் உள்ள அளவீடுகளை பார்ப்பதற்கான சிரமம் இல்லாத நிலை உருவாகிறது. இந்த கிளெஸ்டரில் ஒரு ஸ்பீடோமீட்டர், ஒரு டச்சோமீட்டர் மற்றும் ஒரு MID ஆகியவற்றை கொண்டு உள்ளதோடு, இதில் உடனடி மற்றும் சராசரி எரிப்பொருள் பயன்பாடு (இன்ஸ்டன்டு அண்டு அவரேஜ் கன்ஸ்சப்ஷன்), டிஸ்டென்ஸ் டு எம்ட்டி, அடுத்த சர்வீஸ் நாளுக்கான கவுண்டு டவுன், சராசரி வேகம் மற்றும் பல அளவீடுகள் காட்டப்படுகிறது.


இந்த பதிப்பில் உள்ள ஒரு புதிய அம்சமாக, ஒரு ஆட்டோ டிம்மிங் இன்டீரியர் ரேர் வியூ மிரர் அமைந்து உள்ளது. இதன் மூலம் டிரைவருக்கு எளிதாக மற்றும் சுமூகமாக பணியாற்ற எதுவாக அமைகிறது. இந்த காரில் உள்ள சீட் அமைப்பை குறித்து பார்க்கும் போது, ஹெட்ரெஸ்ட்கள் உடன் கூடியதாக அமைந்து உள்ள எர்கோனோமிக்ஸ் சீட்களை கொண்டு உள்ளதால், அசவுகரியமான அனுபவத்தை நீங்கள் நிச்சயம் பெற வாய்ப்பு இல்லை என்பது உறுதி.


இந்த வாகனத்தில் உள்ள ஃபெப்ரிக் அப்ஹோல்டரியின் மூலம் உங்களின் பயண அனுபவம் பாதிக்கப்படவோ அல்லது தடைப்படவோ செய்யாது என்பதோடு, அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இதை தவிர இதமான பயணத்திற்கு வழிவகுக்கும் மற்ற பல அம்சங்களான, ஒரு செம்மையான கிளோவ் பாக்ஸ், டோர் –சைடு ஸ்டோவேஜ் ஏரியாக்கள், அம்பியண்ட் லைட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், USB மற்றும் ஆக்ஸ் –இன் வசதிகள் மற்றும் ஒரு SD கார்டு உள்ளீடு ஆகியவற்றை பெற்று உள்ளது.

செயல்திறன்:


டீசல்:


இந்த வாகனத்தின் உட்புற இயந்திரவியலில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. எனவே டீசல் வகையை பொறுத்த வரை, 1498 cc வெளியீட்டை கொண்ட அதே பழைய 1.5 –லிட்டர் TDI என்ஜின் அளிக்கப்பட்டு உள்ளது. இது இன்-லைன் சிலிண்டர்களை கொண்டதாக அமைந்து, ஒரு 5 –ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு, சிறப்பான முறையில் பணியாற்றுகிறது. இதன் மூலம் 4400 rpm-ல் 104 bhp ஆற்றல் வெளியீடு உடன், 1500 rpm-ல் இருந்து 2500 rpm வரையிலான இடைப்பட்ட நிலையில் 250 Nm முடுக்குவிசையும் அளித்து, ஒரு நேர்த்தியான சிறப்பு அம்சங்களை கொண்ட அளவீடுகளை கொண்டு உள்ளது. இந்த வாகனத்தை ஓட்டுவதற்கு மென்மையாக உள்ளது. என்ஜின் பணியாற்றுவதில் எந்த விதமான குறிப்பிடத் தகுந்த குறைப்பாட்டையும் காண முடிவதில்லை என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும். வாகனத்தின் ஓடும் திறன் சீரானதாக அமைந்து உள்ளதோடு, கியர் மாற்றங்களும் எளிதாக உள்ளது.

table-3

பெட்ரோல்:


இந்த வாகனத்தின் பெட்ரோல் வகையை பொறுத்த வரை, 4 இன் –லைன் சிலிண்டர்கள் உடன் கூடியதாக வரும் அதே 1.2 –லிட்டர் TSI என்ஜினையே பெற்று உள்ளது. 1197 cc வெளியீட்டை பின்னணியில் கொண்டதாக உள்ள இந்த என்ஜினின் புள்ளி விபரங்கள், ஒப்பீட்டில் பலவீனமான ஒன்றாக தெரிகிறது. ஆற்றல் வெளியீட்டு அளவிலும் எந்த மாற்றமும் இல்லாமல், 5000 rpm-ல் 104 bhp-யை அளிப்பதோடு, 1500 rpm-ல் இருந்து 4100 rpm வரையிலான இடைப்பட்ட நிலையில், 175 Nm என்ற மிஞ்சின முடுக்குவிசையையும் பெற முடிகிறது. மேற்கண்ட இந்த ஆற்றலகத்திற்கு ஒரு 7 –ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், அதன் கியர் மாற்றங்கள் மென்மையாகவும், எளிதாகவும் அமைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

table-4

பயணம் மற்றும் கையாளுதல்:


இந்த வாகனத்தின் சேசிஸ் மற்றும் பிரேக்கிங் அமைப்புகள் ஆகியவை எந்த மாற்றமும் பெறாமல் அப்படி அளிக்கப்பட்டு உள்ளன. சேசிஸின் முன்பகுதி ஒரு மெக்பெர்சன் ஸ்ட்ரூட் உதவியோடும், ஒரு தாக்குபிடிக்கும் (ஸ்டேபிலைஸர்) பார் மூலம் மேலும் வலுவான கட்டுப்பாட்டையும் பெற்று உள்ளது. அதே நேரத்தில் பின்பக்கத்திற்கு ஒரு பாதி சுதந்திரமான (செமி இன்டிபென்டன்டு) ட்ரையலிங்கை பெற்று உள்ளது. இந்த வாகனத்தின் ஒட்டு மொத்த பயண தரம் அட்டகாசமாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இருப்பினும் நாம் பயணிக்கும் சாலையில் அவ்வப்போது கடந்து செல்ல வேண்டிய குண்டும் குழியும் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் தப்புவது சிரமமே. இந்த வாகனத்தை அதிக வேகத்தில் செலுத்தும் போது, குறைந்தபட்ச பாடி ரோல் மற்றும் மென்மையான இன்னர்டியல் ப்ளோவும் மட்டுமே ஏற்படுவதால், சிறிய அளவிலான அசவுகரியங்களை நிச்சயம் தவிர்க்க முடியும். கார்னரிங் மற்றும் பிரேக்கிங் ஆகியவற்றில் ஒரு தெளிவான செயல்பாட்டை கொண்டு உள்ளது. மேலும் இந்த காரின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் / டிரம் ஒருங்கிணைப்பில் கிடைக்கும் பலனை நிச்சயம் உங்களால் உணர முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் பெற்று இருப்பதால், கையாளுவதில் மென்மையான தன்மை உணர முடிகிறது. இதனால் இந்த வாகனத்தின் ஸ்டீரிங் வீல்லின் செயல்பாடு சிறப்பானது அல்லது மிகவும் அற்புதமானது என்ற உணர்வை நாம் பெற முடிகிறது.

பாதுகாப்பு:


இந்த வாகனத்தில் உள்ள பாதுகாப்பு அளவீடுகளை பொறுத்த வரை, இதன் முந்தைய பதிப்பின் சில செயல்பாடுகளை சார்ந்த நிலையில் உள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த புதிய பதிப்பில் உள்ள இந்த பகுதியை குறித்து தயாரிப்பு நிறுவனம் கவனம் செலுத்தி உள்ளதாக தெரிகிறது. மேற்கண்ட இந்த புதிய பதிப்பில் பாதுகாப்பு தன்மைகளை அதிகரிக்கும் வகையில், ஒரு ரெயின் சென்ஸர் மற்றும் ஒரு ஆட்டோ டிம்மிங் இன்டீரியர் மிரர் உள்ளிட்டவை காணப்படுகின்றன. தொழிற்நுட்ப ரீதியாக பார்க்கும் போது, ABS மற்றும் EBD ஆகியவை பாதுகாப்பை வலுப்படுத்துவதாக உள்ளன. சுமூகமான சாலைகளில் செல்வதற்கான அம்சங்களை தவிர, இந்த பிராண்டு மூலம் எலக்ட்ரானிக் ஸ்டேபிலைசேஷன் ப்ரோகிராம் மற்றும் ஹில் –ஹோல்டு கன்ட்ரோல் உள்ளிட்டவை அளிக்கப்பட்டு உள்ளன. கார்னர் லெம்ப்கள் உடன் கூட முன்பக்க ஃபேக் லெம்ப்களும் இடம் பெற்று, ஓட்டும் போது பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துவதாக அமைகின்றன. மேலும் தற்போதைக்கு இந்த பதிப்பில் இரட்டை ஏர்பேக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்ஸர்கள், மின்னோட்ட முறையில் மாற்றி அமைக்க கூடிய (எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள்) மற்றும் மடிக்க கூடிய வசதி கொண்ட வெளிப்புற (ஃபோல்டபிள் அவுட்சைடு) மிரர்கள் மற்றும் காரை ஓட்டுவதில் தொடர்புடைய எண்ணற்ற புள்ளி விபரங்களை அள்ளி தரும் ஒரு பன்முக பயன்பாட்டு (மல்டி –ஃபங்க்ஷன்) டிஸ்ப்ளே ஆகியவை அளிக்கப்படுகிறது.

table-5

வகைகள்:


இந்த காருக்கு GT TDI மற்றும் GT TSI ஆகிய இரு வகைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதில் முதல் வகையில் 1.5 –லிட்டர் டீசல் என்ஜினை பெற்று உள்ள நிலையில், இரண்டாவது வகையில் 1.2 –லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்று உள்ளது. இந்த இரண்டு வகைகளும் ஒரு சில குறிப்பிட்ட வேறுபாடுகளை தவிர, மற்றபடி பெரும்பாலான அம்சங்களை பெற்று ஒத்ததாக காணப்படுகின்றன. இதில் GT TDI வகையை பொறுத்த வரை, ஒரு க்ரூஸ் கன்ட்ரோல், சிறப்பான கிளெவ் பாக்ஸ், USB உடன் கூடியதாக வரும் CD / MP3 மற்றும் ஆக்ஸ் –இன், ப்ளூடூத் இணைப்பு ஆகியவற்றை பெற்று உள்ளது. அதே நேரத்தில் GT TSI வகையில் மேற்கண்ட அம்சங்களை தவிர மேலும் இரு அம்சங்களாக எலக்ட்ரானிக் ஸ்டேபிலைசேஷன் ப்ரோகிராம் மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் ஆகியவற்றை கூடுதலாக பெற்று உள்ளது. மேற்கண்ட இந்த இரு வகைகளில் எந்த வகையை தேர்ந்தெடுக்கலாம் என்று நீங்கள் யோசிப்பதாக இருந்தால், காரில் உள்ள அம்சங்களை விட, அதன் என்ஜின் தகவமைப்பின் வரிசையை பொறுத்து நீங்கள் முடிவு செய்தால் நன்றாக இருக்கும் என்பது எங்களின் கருத்து.

table-6

தீர்ப்பு:


இந்த காரை நாங்கள் கையாண்டு பார்த்தோம். இதன் மூலம் ஒரு சிறந்த உறுதியான அறிக்கையை வெளியிடும் வகையில் இது உள்ளது. இதன் வெளிப்புற அமைப்பியலின் மூலம் உங்களை தன்னிடமாக கவர்ந்து இழக்கும் இந்த கார், தனது ஸ்டைலான தகவமைப்பு மற்றும் இதமான தன்மையைக் கொண்ட உட்புற அமைப்பியல் மூலம் மனதை நெகிழ செய்வதாக உள்ளது. இந்த காரில் ஏற்கனவே உள்ள இதமளிக்கும் அம்சங்கள் உடன் சேர்ந்து இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் மிரர் –லிங் சிஸ்டம் ஆகியவை இணைந்து கொள்ள, இந்த புதிய பதிப்பின் மேம்பாடுகளின் ஒட்டு மொத்த மதிப்பெண்கள் உயர்கிறது. இந்த காரின் கையாளும் தன்மை சிறந்ததாக உள்ளது என்பதோடு, காரின் ஒட்டு மொத்த ஓட்டும் அனுபவம், நம்மை ஏமாற்றம் அடைய செய்த நிலையில் உள்ளது. குறைந்த அளவில் அமைந்த கேபினின் இடவசதி, சுமாரான செயல்திறன் மற்றும் நம் நாட்டில் ஒரு சர்வீஸிற்கு அளிக்க அரிதான தன்மை ஆகியவற்றின் மூலம் இந்த கார் பிரச்சனைகளை சந்திக்கிறது. இளம் வயதினர் மற்றும் ஒரு நவீன ரசனை உடன் கூடிய ஒரு அட்டகாசமான வாகனத்தை எதிர்பார்க்கும் மக்கள் ஆகியோருக்கு, இந்த போலோ கார் உண்மையிலேயே ஒரு கவர்ச்சிகரமான தயாரிப்பு என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் எந்த வகையிலும் சமரசத்திற்கு வாய்ப்பு அளிக்க விரும்பாமல், எல்லாவற்றிலும் சிறந்த தயாரிப்பையே எதிர்பார்க்கும் நபராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், நாங்கள் இந்த வாகனத்திற்கு பதிலாக வேறு மாடல் தான் பரிந்துரை செய்ய முடியும்.