டொயோட்டா Innova Crysta

` 13.5 - 22.1 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


மே 19, 2016: டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா காரை ரூ. 13.8 லட்சம் என்ற விலை நிர்ணயத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் இந்த வாகனத்தின் வகைகளில் உயர் தர வகையை ரூ. 20.78 லட்சம் (எல்லா விலைகளும் எக்ஸ் –ஷோரூம் மும்பையைச் சார்ந்தது) என்ற ஒரு தூள் கிளப்பும் விலை நிர்ணயத்தில் வெளி வந்து உள்ளது. இது போன்ற ஒரு விலை நிர்ணயத்தை இதற்கு முன் இனோவா கார் கண்டதே இல்லை! முந்தைய இனோவா கார் உடன் ஒப்பிடும் போது, அதை விட இந்த புதிய பதிப்பு இன்னும் அதிக அளவிலான தடித்த வடிவமைப்பை கொண்டதாக தெரியும் வகையில், தற்போதைய புதிய இனோவா காரில் எண்ணற்ற அதிக ஸ்டைலான காரியங்கள் உட்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் ஒரு 4.2 –இன்ச் TFT ஸ்கிரீன், லெதர் சூழ்ந்த நிலையில் அமைந்த ஸ்டீரிங் வீல் மற்றும் லாங்கு லைட்டிங் உள்ளிட்ட சந்தையில் நவீன அம்சங்களாக உள்ள ஒரு கூட்டம் காரியங்களை பெற்றதாக உள்ளது. தற்போதைய இனோவா கிரிஸ்ட்டா காரில், ஒரு 2.4 –லிட்டர் அல்லது ஒரு 2.8 –லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவை ஆற்றலகங்களாக அளிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பெரிய டீசல் கார்களுக்கு தற்போது டெல்லியில் அமலில் உள்ள தடையை கருத்தில் கொண்டு, வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஒரு 2.7 –லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்ட ஒரு பதிப்பையும் கொண்டு வரும் யோசனையில் டொயோட்டா நிறுவனம் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது.

டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்டொயோட்டா இனோவா கார் முடிவாக, அதன் உருவ அமைப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மேம்பாட்டை பெற்று உள்ளது. வாகன சந்தையில் இனோவா காரின் இரண்டாவது ஆட்டத்தை துவக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கிரிஸ்ட்டா என்ற பெயரில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த MPV அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே இது உட்பட்டு உள்ள பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, ஒரு சராசரி ஹேட்ச்பேக் வாகனத்தின் வழக்கமான விற்பனையை விட அதிகமான விற்பனையை பெற்ற வருவது குறிப்பிடத்தக்கது. இதை தெளிவாக கூற வேண்டுமானால், இனோவா காரை இந்திய மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்!
தற்போது இனோவா கார், முழுமையாக மேற்கொள்ளும் வகையில், பணிவான இந்த வாகனம் டொயோட்டா நிறுவனத்தின் மூலம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் முதல் தலைமுறையைச் சேர்ந்த பயன்பாட்டு வாகனத்தின் உருவ அமைப்பை போல இல்லாமல், இந்த புதிய இனோவா கார் தற்போது ஒரு பிரிமியம் தோற்றத்தை கொண்டதாக ஜொலிக்கிறது. மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை படைக்கும் திறமை, மேற்கண்ட இந்த கிரிஸ்ட்டா பதிப்பிற்கு உண்டா? என்பதை நாம் இங்கே கண்டறிவோம்!

சாதகங்கள்1. ஆடம்பரமான, இதமான மற்றும் விஸ்தாரமான உட்புற அமைப்பியலை கொண்டு உள்ளது. தற்போதைய மாடலில் காணக் கிடைக்காத சந்தையில் மேன்மையாக விளங்கும் ஒரு கேபின் அமைப்பை, இந்த இனோவா கிரிஸ்ட்டா காரில் காண முடிகிறது.
2. இதில் உள்ள புதிய 2.4 –லிட்டர் மற்றும் 2.8 –லிட்டர் ஆகிய டீசல் என்ஜின்கள், அதிக சக்தி வாய்ந்தவை என்பதோடு, அதிக செயல்திறன் மிக்கவையாகவும் உள்ளன. இது தவிர உங்களுக்கு ஒரு ஆட்டோமேட்டிக் அமைப்பை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
3. டொயோட்டா நிறுவனத்தின் பிராண்டு நம்பகமானது மற்றும் விற்பனைக்கு பிறகு சுமூகமான உறவையும் பெற்று உள்ளது. இனோவா காரை எப்போது ஒரு நம்பகமான வாகனமாக திகழ்கிறது. மேலும் நீண்ட பயணங்களில் ஈடுபடுபவர்களின் விருப்பத்தை கவர்ந்த வாகனமாக உள்ளது.
4. பலமான மறுவிற்பனை மதிப்பு. கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தற்போதைய பழைய மாடல் இனோவா ரூ. 6.80 இருந்து ரூ. 10 லட்சம் வரை என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இப்போது கூட, அதாவது இப்போது 11 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ரூ. 4 முதல் ரூ. 5 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அம்பியன்டு லைட்டிங், புஸ் பட்டன் ஸ்டார்ட், ஸ்மார்ட் கீ, லெதர் அப்ஹோல்டரி மற்றும் பல அம்சங்களை இந்த வாகனம் தாங்கி வருகிறது.

பாதகங்கள்1. பெட்ரோல் என்ஜின் எதுவும் அளிக்கப்படவில்லை.
2. குறைந்த திறன் கொண்ட 2.4 –லிட்டர் என்ஜினில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி அளிக்கப்படவில்லை.
3. டீசல் என்ஜின்களில் மறுசீரமைப்பை (ரீஃபைன்மெண்ட்) இழந்து உள்ளதோடு, வாகனத்தில் ஒலி, அதிர்வு மற்றும் குலுங்கும் நிலைகள் ஆகியவற்றை சகித்துக் கொள்ள வேண்டி உள்ளது.
4. நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்துவதற்கு இதன் ஸ்டீரிங் வீல் மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. அதேபோல கியர் லிவர் கூட திறம்பட செயலாற்றுவதற்கு ஏற்றதாக இல்லை.
5. இதன் துவக்க நிலை மாடல்கள், தகுந்த முறையிலான அம்சங்களை கொண்டதாக இல்லை. பெரும்பாலான அம்சங்கள் அனைத்தும், உயர் தர வகைகளில் மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளன. அவை அதிக பொருட்செலவு மிகுந்தவையாக உள்ளன.

தனித் தன்மையான அம்சங்கள்1. 8 வழிகளில் மின்னோட்ட முறையில் மாற்றி அமைக்கும் வசதிக் கொண்ட (பவர் அட்ஜஸ்டபிள்) ஒரு டிரைவர் சீட்டை பெற்று உள்ளது.
2. மூன்று ஏர்பேக்குகள் பொதுவானதாகவும், உயர் தர வகைகளில் மொத்தம் 7 ஏர்பேக்குகளும் அளிக்கப்படுகின்றன.
3. அம்பியன்டு லைட்டிங்
4. பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள்
5. நேவிகேஷன் உடன் கூடிய 7 – இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே காணப்படுகிறது.

வெளிப்புற அமைப்பியல்


நாம் ஏற்கனவே கூறியது போல, பழைய இனோவா காரிடம் இருந்து, ஒரு முழுமையான மாற்றத்தை இந்த புதிய பதிப்பு அடைந்து உள்ளது. இந்த பதிப்பிற்கு ஒரு பிரிமியம் தோற்றத்தை அளிக்கும் வகையில், இதில் உள்ள எல்லா காரியங்களும் விரிவான முறையில் மறுசீரமைப்பை பெற்று உள்ளது. இனோவா கிரிஸ்ட்டா காரின் புத்தம் புதிய வடிவமைப்பு, ஒரு விரிவான அளவு மற்றும் அதிக தடித்த தன்மையை கொண்ட நிலைப்பாடு ஆகியவற்றின் மெல்லிய விகிதாச்சாரத்தில் அமைந்ததாக உள்ளது. நாம் சுருக்கமாக, அதே நேரத்தில் உறுதியாக கூற வேண்டுமானால், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த வாகனத்திற்கு பல்வேறு புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள் வெளி வந்த போதிலும், அவற்றுடன் இது வடிவமைப்பு கூறுகளில் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் காணப்படுகிறது. அதே நேரத்தில் மேற்கண்ட இந்த மேம்பாட்டை சரியான நேரத்தில் வெளியிட, டொயோட்டா நிறுவனம் தவறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த புதிய டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா காரின் முன் பகுதியை இப்போது, ஒரு கவனிக்கத்தக்க அறுங்கோண வடிவிலான (ஹெக்ஸாகோனல்) கிரில் அமையப் பெற்று, பிராஜெக்டர் ஹெட்லெம்ப்களை ஊடுருவி கடந்து செல்லும் இரு தடித்த கிரோம் ஸ்லாட்களை பெற்று உள்ளது. பெரும்பாலான வாகனங்களின் அமைப்பில் காணப்படுவது போல, இதன் முன் பகுதியிலும் ஒரு பெரிய பம்பரை பெற்று உள்ளது. இதில் குறிப்பாக, புகைமூட்டத்தை பெற்ற ஹெட்லெம்ப்கள் மற்றும் LED பைலட் லெம்ப்கள் வைக்கப்பட்டு உள்ள இடம் ஆகியவற்றை குறித்து விரிவாக விளக்க நாங்கள் விரும்புகிறோம். கிரிலின் கீழ் பாதி பகுதி நேர்த்தியான கருப்பு (கிளோஸி பிளாக்) நிறத்தில் அமைந்து உள்ளதால், பெரிய அளவில் முன் பகுதியை பிரித்து அறிவதற்கு உதவியாக உள்ளது.

table-1
இந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதிக்கு வரும் போது, கிரிஸ்ட்டாவில் வேன் போன்ற விகிதாச்சாரங்கள் உள்ளதை கண்டறிய முடிகிறது. இந்த பகுதியில் உள்ள பெரிய 17 –இன்ச் வீல்களை தவிர, மற்றபடி இந்த பகுதியில் வேறு எந்த விறுவிறுப்பான தகவல்களும் கூறுவது போன்ற நிலையில் இல்லை. இந்த பகுதியை எளிமையாகவும், நேர்த்தியாகவும் டொயோட்டா நிறுவனம் அமைத்து உள்ளதை கண்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வாகனத்தின் டோர் ஹேண்டில்கள் மற்றும் வெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் (அவுட்சைடு ரேர் –வியூ மிரர்) ஆகிய இடங்களில் மெல்லிய கிரோம் வரிகளை கொண்டு இருப்பது, இதன் சுய விவரத்திற்கு மேலும் மெருகூட்டும் காரியமாக உள்ளது.


முந்தைய இனோவா பதிப்பில் இருப்பதை விட, இதன் ஹெட்லைட் செட் அப் பெரியதாகவும், அதே நேரத்தில் நவீன கால வழக்கத்திற்கு ஏற்றதாகவும் அமைந்து காட்சி அளிக்கிறது. இதில் பெரும்பாலும் பிராஜெக்டர் லெம்ப்கள் மற்றும் LED டே டைம் ரன்னிங் லைட்கள் ஆகிய அம்சங்களை பெற்று காணப்படலாம். இந்த புதிய ஒருங்கிணைப்பு சிறப்பாக தோற்றம் அளிப்பதோடு, இனோவா கிரிஸ்ட்டாவின் முன்பக்க அழகியல் தன்மையை இன்னும் ஸ்டைல் மிகுந்ததாக மாற்றுகிறது.


டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டாவின் பம்பர்களில் காணக் கிடைக்கும் மற்றொரு குறிப்பிட்ட மாற்றம் என்னவென்றால், இது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமானதாகவும், தற்போது உள்ள பதிப்பை காட்டிலும் சிறப்பாகவும் உள்ளது. இதன் பம்பர் மட்டுமல்ல, இதில் உள்ள அதன் ஃபேக் லெம்ப்களின் வடிவமைப்பு கூட மாற்றத்தை சந்தித்து உள்ளதை கவனித்து பார்த்தால் கண்டுக் கொள்ள முடியும்.


மற்றொருபுறம், பெரும்பாலும் 17 –இன்ச் அளவில் அமைந்த ஒரு புதிய ஜோடி அலாய் வீல்கள், இந்த வாகனத்தில் இடம் பெற செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் இதை நாம் உயர் தர வகைகளில் மட்டுமே எதிர்பார்க்க முடியும் என்பது நமக்கு எளிதாக யூகிக்க கூடிய ஒன்று ஆகும். அதை தவிர இந்த வாகனத்தின் வகைகள் வரிசையில் உள்ள மற்றவைகளில், 16 இன்ச் ரிம்களை பெற்றதாக அமைய வாய்ப்பு உள்ளது.


இந்த வாகனத்தின் வெளிப்புறத்தில் அமைந்து உள்ள மிரர்களில், டேன் இன்டிகேட்டர்கள் இடம் பெற்று உள்ளதோடு, டோர் ஹேண்டில்களில் நேர்த்தியான கிரோம் பணித் தீர்ப்பை கொண்டு உள்ள தன்மை, இந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதியின் தோற்ற அழகை மேலும் மெருகூட்டுவதாக அமைகிறது.
இந்த வாகனத்தின் பின் பகுதியில், சப்பர்டூத்தை தழுவிய வடிவமைப்பாக, முக்கோண வடிவிலான (ட்ரைஆங்குலார்) டெயில் –லெம்ப்கள் அமையப் பெற்று, ஒரு அதிக அளவிலான கவர்ச்சி மிகுந்த தன்மையை பெற்று உள்ளது. இந்த வாகனத்தின் பின்பகுதி சுயவிவரத்தில் நேர்த்தியான முறையில் பரவிய ஒரு பெரிய கிளாஸ் ஹவுஸ் காணப்பட்டு, பெரும்பாலான இடத்தை எடுத்துக் கொண்டு உள்ளது. இதில் மறுசீரமைக்கப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் ஷார்க் –ஃபின் ஆன்டினா போன்ற காரியங்கள், பின்பக்க சுய விவரத்திற்கான சில விறுவிறுப்பான தன்மைகளை அளிக்கிறது. மேற்கண்ட இவையும் இல்லாவிட்டால், இந்த வாகனத்தின் பின்பக்க சுயவிவரம் பார்ப்பதற்கு மந்தமான ஒன்றாக காட்சி அளித்து இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
பின்பக்கத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பம்பர், ஒரு ஜோடி எதிரொளிப்பான்களை (ரிஃப்ளெக்டர்ஸ்) கொண்டு உள்ளது. அதே நேரத்தில் இதன் டெயில் கேட் கூட ஒரு சில மாற்றங்களை பெற்று உள்ளது.
இந்த வாகனத்தில் உள்ள பூட் ஸ்பேஸ் குறித்து, இது வரை எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், இந்த வாகனத்தின் விஸ்தாரமான அளவீடுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, சரக்குகளை வைப்பதற்கான ஒரு மிகப் பெரிய இடவசதியை கொண்டு இருக்கும் என்பதை நாம் நம்பலாம். ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள மாடலின் சரக்கு கொள்ளளவு ஏறக்குறைய 300 லிட்டர் மட்டுமே காணப்படுகிறது. இந்த வாகனத்தின் பின்பக்கத்தில் உள்ள சீட்களை மடித்துக் கொள்வதன் மூலம், இந்த சரக்கு கொள்ளளவை மேலும் அதிகரித்து கொள்ள முடியும்
ஒட்டு மொத்தமாக நாம் பார்க்கும் போது, தற்போது பயன்பாட்டில் உள்ள பதிப்பை விட, இந்த கிரிஸ்ட்டாவின் தோற்றம் அதிக கவர்ச்சி மிகுந்ததாக உள்ளது. என்ன தான் இருந்தாலும், இந்த வடிவமைப்பு எந்த வகையிலும் எல்லாவற்றிலும் மேன்மையானது என்று கூற முடியாது. ஆனால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை இது கட்டாயம் கவர்ந்து இழுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உட்புற அமைப்பியல்


டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டாவின் வெளிப்புற அமைப்பியல் முழுமையாக மாற்றம் அடைந்து உள்ளது என்ற எண்ணம் உங்களுக்கு வருவதாக இருந்தால், காருக்கு உள்ளே காலடி எடுத்து வைப்பது வரை சற்று பொறுத்து இருங்கள்! ஏனெனில் இனோவா கார் ஒரு பொருளாதார வகையைச் (எக்னாமி கிளாஸ்) சேர்ந்த கேபினில் இருந்து, தற்போது ஒரு வியாபார வகையைச் சேர்ந்த வாகனமாக (பிஸ்னஸ் கிளாஸ்) மாறி உள்ளது. இந்த வாகனத்தில் உயர் தர பொருட்களை டொயோட்டா நிறுவனம் பயன்படுத்தி உள்ளதை, அதன் நடவடிக்கைகளின் மூலம் தெள்ளத் தெளிவாக காட்டி உள்ளது. இதனுள் உள்ள எந்த ஒரு பொருளை நீங்கள் தொட்டாலும், உணர்ந்தாலும், எந்த பக்கம் திரும்பினாலும், அதில் ஒரு சிறந்த கட்டமைப்பை காண முடிகிறது. டேஸ்போர்டின் கீழ் பாதி என்ற ஒரே ஒரு இடத்தில் மட்டுமே எங்களால் தரம் குறைந்த தன்மையைக் காண முடிந்தது.


தற்போதைய பழைய இனோவா காரில் இருப்பது போலவே, இதன் கேபினிற்குள் ஒருவர் நடந்து செல்லக் கூடிய அளவில் உட்புற அமைப்பு காணப்படுகிறது. நீங்கள் காருக்குள் நுழைந்த உடனேயே உங்கள் கவனத்தை முதலில் கவர்ந்து இழுக்கும் ஒரு காரியமாக, எதிர்காலத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ள டேஸ்போர்டு இருக்கிறது. இது லேசாக எப்போதும் டிரைவரை நோக்கியது போன்ற தோற்றத்தை பெற்று உள்ளது. இதில் உள்ள பல வெட்டுகள், வரிகள் மற்றும் வளைவு நெளிவுகள் போன்றவை உட்படும் ஒரு கூட்டம் காரியங்கள் அமையப் பெற்று, பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக காட்சி அளிக்கிறது. இனோவா கிரிஸ்ட்டாவின் சென்டர் கன்சோலின் மீது ஆதிக்கம் செலுத்தும் டச் ஸ்கிரீன் ஆடியோ யூனிட் உடன் நேவிகேஷன் மற்றும் ரிவெர்ஸ் கேமரா ஆகியவையும் இணைந்து கொள்ள ஸ்கிரீன் இரு மடங்காக மாறி உள்ளது. அதற்கு நேர் கீழாக தானியங்கி தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்தியின் (ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்) கன்ட்ரோல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நடைமுறை தன்மையை வைத்து பார்க்கும் போது, இனோவா கார் உண்மையில் அதிக மதிப்பெண்களை பெறுகிறது. இந்த வாகனத்தில் உள்ள கேபினின் முன் பகுதியில் ஏராளமான குட்டி துளைகள் (ஹோல்ஸ்) ஏகமாக அமைக்கப்பட்டு உள்ளன. இதை பயணிகளின் சின்ன சின்ன பொருட்களை வைத்து கொள்ள பயன்படுத்தி கொள்ளலாம்.


இந்த வாகனத்தின் முன்பகுதி சீட்களில் குஷனிங் மற்றும் அளிக்கப்படும் ஆதரவு ஆகியவை சிறப்பாக அமைந்து உயர் தரத்திலான இதமான பயணத்தை அளிக்கிறது. இந்த பிரிவிலேயே இதை ஒரு சிறந்த தன்மையாக நாங்கள் கருதுகிறோம். டிரைவரின் சீட்டை மின்னூட்ட முறையில் மாற்றி அமைக்கும் வசதி காணப்படுவதோடு, அதை அடையவும், அதன் உயரமும் ஒரு ஆரோக்கியமான நிலையில் உள்ளது. அதே நேரத்தில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள வாடிக்கையாளர்கள், பின்பக்க சீட்டில் தான் அமர்ந்து இருப்பார் என்பதால், அது எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.


இனோவா கார்கள் வழக்கமாக நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்த கூடிய வாகனம் என்பதை கருத்தில் கொண்டு உள்ள டொயோட்டா நிறுவனம், பின்பக்க இருக்கையை மறுவடிவமைப்பு செய்து உள்ளது. இந்த சீட்களுக்கு தற்போது பெரிய அளவிலான பிரேம்கள் அளிக்கப்பட்டு உள்ளதோடு, குஷனிங் கூட சிறந்த முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பாளர், தகுந்த முறையில் தனது வாகனத் தயாரிப்பின் விலையை உயர்த்தி உள்ளார் என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.


பின்பக்க சீட்களில் உள்ள பயணிகளுக்கு, அவர்களுக்கே உரிய தனிப்பட்ட ஆம்ரெஸ்ட் மற்றும் தானியங்கி தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்தும் அமைப்பு (ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்) ஆகியவை அளிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, கீழே இறக்கிக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்த ட்ரேக்கள், முன்பக்க சீட்டிற்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதை லேப்டாப்கள் அல்லது புத்துணர்வு ஊட்டும் உணவு வகைகள் ஆகியவற்றை வைத்து கொள்ள பயன்படுத்தி கொள்ள முடியும். கடைசியாக நாங்கள் மறந்து போன ஒரு காரியம் என்னவென்றால், லாங்கு லைட்டிங் கூட இதில் காணப்படுகிறது.


இனோவா கிரிஸ்ட்டாவில் உள்ள மூன்றாவது வரிசையில் காணப்படும் சீட்கள், குழந்தைகளின் பயன்பட்டிற்கு ஏற்றதாக உள்ளது. ஏனெனில் நீண்ட பயணங்களின் போது, நீண்ட நேரத்திற்கு தங்களின் முட்டியை உயர்த்திய நிலையிலேயே வைத்து ஒருவர் உட்காருவது என்பது அசவுகரியத்தை உண்டாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிரிஸ்ட்டாவில் வரவேற்பிற்கு உரியதாக உள்ள முழுமையான அகலம் காணப்படுவதால், இந்த வரிசையில் மூன்று பேரை கூட அமர வைக்க முடியும். இது ஒரு சிறந்த தன்மை இல்லையா!


இந்த வாகனத்தில் உள்ள லெதர் மூலம் சூழ்ந்த நிலையில் தடித்ததாக காணப்படும் ஸ்டீரிங் வீல்லை பிடித்து இயக்குவதற்கு நன்றாக உள்ளது. இதில் ஆடியோ, போன் அழைப்புகள் மற்றும் MID ஆகியவற்றின் பட்டன்களை பெற்று உள்ளது. இதில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரை குறித்து பார்க்கும் போது, அதில் டச்சோமீட்டர் மற்றும் MID உடனான ஸ்டோமீட்டர் ஆகியவற்றை பெற்று, இதன் நடுவே ஒரு சான்விச்சின் அமைப்பில் அமைந்து உள்ளது. இதில் எரிப்பொருள் பயன்பாடு (ஃபியூயல் கன்சேப்ஷன்), க்ரூஷிங் ரேஞ்சு, சராசரி வேகம் மற்றும் ஒரு காம்பஸ் ஆகியவற்றின் அளவீடுகளை காட்டுகிறது.


டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டாவில் உள்ள உட்புற அமைப்பியலை கூட்டி கழித்து பார்த்தால், உண்மையிலேயே ஒரு புதுமையான காற்றை நாம் சுவாசிக்க முடிகிறது. பயன்பாட்டு அம்சங்களை கொண்டு இருந்த சிறந்த பழைய இனோவா காருக்குள், எப்படியோ பிரிமியம் அம்சங்களை டொயோட்டா நிறுவனம் புகுத்தி இருப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.

செயல்திறன்


இந்த கிரிஸ்ட்டா வாகனத்தில் இரண்டு புதிய டீசல் என்ஜின்களை டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. இதில் சிறியதான 2.4 –லிட்டர் என்ஜின் மூலம் 150 PS ஆற்றலும், ஒரு பாராட்டத் தகுந்த 343 Nm அளவிலான முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இந்த மேட்டார் ஒரு 5 –ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டதாக அமைந்து உள்ளது. இந்த என்ஜின் உடன் இணைந்து செயலாற்றும் வகையில், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் எதுவும் அளிக்கப்படவில்லை. இந்த 2.4 –லிட்டர் மோட்டார் மூலம் 1400 rpm என்ற மிகக் குறைந்த நிலையிலும் முடுக்குவிசையை வெளியிடப்படுவதால், ஓட்டும் திறன் மிகவும் அருமையாக உள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட அளவு வரை டர்போலாக்கின் ஒரு குறிப்பை அறிய முடிகிறது என்பதால், எப்போதும் 1500 rpm –க்கு மேலான நிலையை அளவாக வைத்துக் கொண்டால், இதை குற்றப்படுத்தும் வகையில், எந்த விதமான காரியமும் உங்களுக்கு இருக்காது. இந்த இனோவா கிரிஸ்ட்டாவில் உள்ள உயர் NVH நிலை என்ற ஒரே ஒரு காரியம் மட்டுமே, எங்களுக்கு வேண்டா வெறுப்பாக தெரிகிறது.


இந்த வாகனத்திற்கு அளிக்கப்பட்டு உள்ள மற்றொரு என்ஜின், பெரிய அளவிலான ஒரு 2.8 –லிட்டர் என்ஜின் ஆகும். இது ஒரு ஆறு –ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது. இந்த என்ஜின் மூலம் ஒரு ஆரோக்கியமான 174 PS என்ற அளவிலான ஆற்றலும், 360 Nm முடுக்குவிசையும் பெறப்படுகிறது. இதை ஒரு மென்மையான அழுத்தத்தை பயன்படுத்தி ஓட்டும் போது, இதில் உள்ள முடுக்குவிசை மாற்றி அமைப்பு (டார்க் கன்வெட்டர் செட்அப்) அற்புதமாக பணியாற்றி, இது வெளியிடும் ஆற்றல் உடன் ஒருங்கிணைந்து செயலாற்றுகிறது. ட்ரோட்டிலை கடினமான முறையில் குறைக்கும் போது, கியர் பாக்ஸில் பெரும் குழப்பம் நிலவுவதால், சரியான கியருக்கு கொண்டு வருவதற்கு நிதானிக்கும் வகையில், ஒரு சில வினாடிகளை எடுத்து கொள்ளும் சரியான நடவடிக்கையை மேற்கொள்கிறது. கடினமான ஆக்ஸிலரேஷன் சூழ்நிலையில், இந்த என்ஜின் அதிக அளவில் அல்லாடுகிறது. வலது காலில் அளிக்கப்படும் அழுத்தத்தை தகுந்த முறையில் அளிக்கும் போது, இந்த புதிய இனோவா கார் மூலம் நெடுஞ்சாலையில் ஒரு இதமான சீறிப் பாயும் பயணத்தை பெற முடியும்.
இந்த இனோவா கிரிஸ்ட்டாவின் என்ஜின்கள், பவர் மற்றும் ஈக்கோ என்ற இரு டிரைவ் மோடுகளையும் கூட பெற்று உள்ளன. இந்த ஈக்கோ மோடில் என்ஜின் டிட்யூன் செய்யப்பட்டு, ட்ரோட்டில் வெளியீட்டை மந்தமான ஒன்றாக அளிக்கிறது. அதே நேரத்தில் இனோவா காரை ஒரு படி அதிக கவனமாக பார்த்து கொள்கிறது. உங்களுக்கு கூடுதல் ஆற்றல் வெளியீடு தேவைப்படும் நேரத்தில் பவர் மோடை பயன்படுத்தி கொள்ளலாம்.

table-2

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்இந்த மிகப் பெரிய வாகனத்தில் ரிம்களில் வென்ட்டிலேட்டேடு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டிரம் பிரேக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் இதில் மேம்பட்ட ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கூட எதிர்பார்க்கலாம். இதன் மூலம் இந்த வாகனத்தின் பிரேக்கிங் செயல்திறன் இன்னும் முன்னேறி அதன் அடுத்த நிலையை அடைவதாக வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த வாகனத்தின் முன் பக்க ஆக்ஸிலில், இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு இரட்டை விஸ்போன் சிஸ்டத்தை கொண்டதாகவும், பின்பக்கத்து ஆக்ஸிலில் தற்போது தயாரிப்பில் இருந்து வெளியேற உள்ள மாடலில் உள்ள ஒரு நான்கு லிங் சிஸ்டத்தையும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த MPV –யில் ஒரு பவர் அசிஸ்டேட்டு ஸ்டீரிங் அமைப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதன் மூலம் சமமான மற்றும் சமசீரற்ற சாலைகளில் கூட மிக எளிதாக வாகனத்தை செலுத்த, உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

பாதுகாப்புஇந்த பன்முக பயன்பாட்டு வாகனத்தில் (மல்டி –பர்பஸ் வெஹிக்கிள்) ஒரு என்ஜின் இம்மொபைலைஸர், இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் இதில் உள்ள மூன்று வரிசைகளிலும் சீட் பெல்ட்கள் வசதி போன்ற பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை காண முடிகிறது. இது தவிர கிரிஸ்ட்டாவில் ISOFIX குழந்தை சீட் இணைப்பு (சைல்டு சீட் மவுண்டிங்ஸ்), ABS உடன் கூடிய EBD, வாகன நிலைத் தன்மை கட்டுப்பாட்டு அமைப்பு (வெஹிக்கிள் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல்) மற்றும் மற்ற எச்சரிக்கை அளிக்கும் லெம்ப்கள் ஆகிய அம்சங்களின் பங்களிப்பில் வாகன ஓட்டுநரை எப்போதும் உஷாராக செயல்பட செய்கிறது.

table-3

வகைகள்


டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா வாகனம் 2.4 G MT, 2.4 GX MT, 2.8 GX AT, 2.4 VX MT, 2.4 ZX MT மற்றும் 2.8 ZX AT உள்ளிட்ட ஆறு வகைகளில் கிடைக்கப் பெறுகிறது.

தீர்ப்பு


இவ்வளவு நீண்டகால காத்திருப்பிற்கு பிறகு அளிக்கப்பட்டு உள்ள இந்த இனோவா கிரிஸ்ட்டா அதற்கு ஏற்ற மதிப்புக் கொண்டதாக உள்ளதா? இந்த கேள்விக்கான பதிலாக, ஒரு பெரிய உற்சாகமான ஆம் என்று கூற வேண்டும். ஏனெனில் MPV வாகனத்தில் எப்போதும் இல்லாத வகையில், முழுமையான மறுசீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.
எனவே உங்களுக்கு ஒரு பெரிய, இதம் அளிக்கும் மற்றும் ஆடம்பரமான ஏழு அல்லது எட்டு பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சீட்களை கொண்ட வாகனம் தேவைப்படுவதாக இருந்தால், இந்த புதிய இனோவா அதற்கு ஏற்றதாக இருக்கும் என்று உறுதியாக நம்பி, இதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். நமது குறிப்புகளில் இருந்து வெளியேறி மறைய உள்ள பழைய தலைமுறையைச் சேர்ந்த வாகனத்திற்கு, ஒரு கச்சிதமான மாற்றாக இது அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!