டொயோட்டா ஃபார்ச்யூனர்

` 25.7 - 31.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


மார்ச் 27, 2016: டொயோட்டா நிறுவனம், தனது இரண்டாவது ஜெனரேஷன் ஃபார்சூனர் காரை, தற்போது தாய்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2016 பாங்காக் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் வெளியிட்டது. ஒரு பிரிமியம் SUV காரில் என்னவெல்லாம் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கொண்ட காராக இது திகழ்கிறது. மேலும், பெரிய பிரிமியம் SUV கார் வாங்க வேண்டும், அதே சமயம் ஆடி, BMW மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த காரை வாங்க முடியாது என்பவர்களுக்கு, டொயோட்டா ஃபார்சூனர் சிறந்த தீர்வாக இருக்கிறது. கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபார்சூனரில் பொருத்தப்பட்டிருந்த 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் இதன் TRD வெர்ஷனில் பொருத்தப்பட்டுள்ளது. 177 bhp என்ற அளவு சக்தி மற்றும் 450 Nm என்ற அளவு டார்க் ஆகியவற்றை இந்தப் புதிய டீசல் மோட்டார் உற்பத்தி செய்கிறது. பேடில் ஷிஃப்டர்களுடன் இணைந்த 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் அமைப்புடன் இந்த இஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறனை மேம்படுத்த ஸிக்மா 4WD அமைப்பு, TRD ஸ்போர்டிவோ சஸ்பென்ஷன் யூனிட்கள் மற்றும் பெரிய டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த கார், இதற்கு முன்பு வந்த மாடலை விட நீளத்தில் 90 மிமீ கூடுதலாக மட்டுமல்லாமல், மிகவும் அகலமாகவும், விசாலமாகவும் உள்ளது. புதிய ஃபார்சூனர், இந்திய சந்தையில் உள்ள போட்டியாளர்களைச் சந்திக்க அடுத்த வருடம் (2017) சிறந்த விலை நிர்ணயிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும்.

சிறப்பம்சங்கள்


Table 1 (1)

டொயொட்டோ ஃபார்சூனர் விமர்சனம்


கண்ணோட்டம்


முன்னுரை:


முதல் முதலாக ஃபார்சூனர் மாடலை அறிமுகப்படுத்தும் போது, அதன் விலை சுமார் ரூ. 18 லட்சங்களாக இருந்தது. கடந்த பல வருடங்களில், டொயோட்டா நிறுவனம் இதன் விலையை அதிகப்படுத்திக் கொண்டே வந்தது. இன்றைய தேதியில், ஃபார்சூனர் SUV மாடலின் விலை ரூ. 25 லட்சங்கள். இதன் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும், இதன் விலை உயர்ந்த அளவு இதன் சிறப்பம்சப் பட்டியல் அதிகமாகவில்லை என்பதே உண்மை. எனவே, மிக அதிகமாக விற்றுக் கொண்டிருந்த இந்த மாடலின் விற்பனை எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்திருக்கிறது. எனவே, புத்துணர்ச்சியூட்டப்பட்ட ஃபார்சூனர் 2016 –ஆம் ஆண்டின் இரண்டாவது பகுதியிலேயே அறிமுகப்படுத்தப்படும். 2009 –ஆம் ஆண்டு வெளியான முதல் தலைமுறை ஃபார்சூனர் விற்பனையில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி, முன்மாதிரியாகவே திகழ்ந்தது. இந்தியாவில் சக்திவாய்ந்த காராக, எந்தவித போட்டியுமின்றி வலம் வந்த இந்த கார் தற்போது சாண்டா ஃபே, டிரைல் பிளேசர் மற்றும் ஃபோர்ட் எண்டேவர் போன்ற கார்களுடன் மோதும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. பல முனைத் தாக்குதலில் திண்டாடிக் கொண்டிருக்கும் இந்த ஜப்பானிய காரை மேம்படுத்த வேண்டிய தருணத்தில் இந்நிறுவனம் உள்ளது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஃபோர்ட் எண்டேவர் மாடலின் சிறந்த சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விலை ஆகியவற்றோடு போட்டியிட புதிய ஃபார்சூனருக்குத் தகுதி உள்ளதா என்பதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.

சாதகங்கள்:1. எப்படிப்பட்ட நிலப்பரப்பிலும் பயணம் செல்லத் தகுதியான உறுதியான மற்றும் வலிமையான தோற்றம்
2. வசீகரமான ஸ்டைலில் உள்ள இதன் தோற்ற அமைப்பு – வருடங்கள் பல உருண்டோடிவிட்டாலும், சாலையில் செல்வோரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவர்ச்சியான தோற்றம்.
3. இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, சிறந்த எரிபொருள் திறன்.

பாதகங்கள்1. லாடர் ஆன் ஃபிரேம் அமைப்பு இதன் கையாளும் திறனை சமரசம் செய்கிறது. மோனோகோக் பாடி அமைப்பு கொண்ட சான்டா ஃபேயில் உள்ள கையாளும் திறனை விட இதில் குறைவாகவே உள்ளது.
2. உட்புற தோற்ற அமைப்பு நவீனமாக இல்லை மற்றும் இதன் சிறப்பம்சப் பட்டியல் சிறியதாகவே உள்ளது.

தனிச்சிறப்புகள்:1. கேபின் பகுதி விசாலமாக உள்ளது. குடும்பத்துடன் பயணம் செய்வதற்கு மிகவும் ஏற்ற வாகனமாகத் திகழும்.
2. SUV பிரிவில் உள்ள இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, இதன் செயல்திறன் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாகவே உள்ளது.

கண்ணோட்டம்


இதற்கு முந்தைய பாடி-ஆன்-ஃபிரேம் கட்டமைப்பை உபயோகப்படுத்தி, புத்தம் புதிய லாடர்-ஃபிரேம் சேசிஸில், புதிய ஃபார்சூனர் உருவாக்கப்பட்டுள்ளது, எனினும், இதன் தோரணை அற்புதமாகவும் டாம்பீகமாகவும் உள்ளது. புதிய 2016 ஃபார்சூனர் முற்றிலும் புதிதாக இருப்பதால், நம்மை முதல் பார்வையிலேயே கவர்ந்துவிடுகிறது. முந்தைய ஜெனரேஷனின் சாயல் சிறிதும் இல்லாமல், இது புதுமையான தோற்றத்தில் வருகிறது. புதிய ஃபார்சூனரில், அசல் 3.0 லிட்டர் மற்றும் இன்னோவா மாடலில் உள்ள 2.5 லிட்டர் என இரண்டு இஞ்ஜின் ஆப்ஷன்கள் வருகின்றன. நான்கு விதமான டிரிம்களில் 3.0 லிட்டர் வெர்ஷன் இடம்பெறுகிறது. ஒரு 4x2 மற்றும் ஒரு 4x4 ஆகிய மாடல்களில், ஆட்டோமேடிக் அல்லது மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு வரும். மேனுவல் கியர் பாக்ஸ் அமைப்பில் உள்ள இதன் ஸ்மார்ட் நுண்மதி தொழில்நுட்பம், இஞ்ஜின் வேகத்தையும் ட்ரான்ஸ்மிஷன் வேகத்தையும் சமன் செய்வதால், மென்மையாக கியர் மாற்ற முடியும் என்று வாக்களிக்கிறது. இந்த SUV காரில், பார்ட்-டைம் 4x4 அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதை நீங்கள் டயல் வழியாக அணுக முடியும். SUV பிரிவின் ரசிகர்களை ஈர்க்க, உட்புறத்தில் 3 வரிசை இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் போட்டியாளர்களிடம் உள்ள ஒரு சில கவர்ச்சிகரமான சிறப்பம்சங்கள் இந்த மாடலில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். அவற்றில், பொழுதுப்போக்கு அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் ஆகியவை அடங்கும். அது போலவே, தற்போதைய போட்டி கார்களுடன் போட்டியிட முடியாத அளவு, இதன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டமும் சற்றே பழமையாக உள்ளது. உண்மையில், இந்தப் பிரிவில் உள்ள மற்றும் இந்த விலையில் உள்ள கார்களின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, அவற்றைப் பூர்த்தி செய்ய டொயோட்டா நிறுவனம் தனது முயற்சியைப் பல மடங்கு அதிகப்படுத்த வேண்டும்.

வெளிப்புறத் தோற்றம்:


உயரமாகவும், அகலமாகவும் தோற்றமளிக்கும் ஃபார்சூனர் முதல் பார்வையிலேயே நம்மை வளைத்து போட்டுவிடுகிறது. இதன் வடிவமைப்பு நம்மை மிரட்டும் விதத்தில் உள்ளது.

அளவுகள்:1. நீளம் - 4,795 மிமீ
2. அகலம் - 1,855 மிமீ
3. உயரம் - 1,835 மிமீ
4. வீல் பேஸ் - 2,745 மிமீ
5. எரிபொருள் டாங்க் கொள்ளளவு - 80 லிட்டர்கள்
6. கிரவுண்ட் க்ளியரன்ஸ் -225 மிமீ

கலர் ஆப்ஷன்கள்:


7 விதமான நிறங்களில், நீங்கள் உங்களுக்குப் பிடித்த நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம்:


1. டார்க் ப்ரௌன்
2. சூப்பர் ஒயிட்
3. ஆட்டிட்யூட் பிளாக்
4. ஆவாந்த் கிரேடு ப்ரௌன் மெட்டாலிக்
5. டார்க் க்ரே மைக்கா மெட்டாலிக்
6. ஃபாண்டோம் ப்ரௌன் மெட்டாலிக்
7. சில்வர் மெட்டாலிக்

Image 1 (1)
முன்புறத்தில், சற்றே தூக்கலான அமைப்புடன் உள்ள மிகப் பெரிய முகப்பு, கண்ணைக் கவரும் பெரிய டிவின்-ஸ்லாட் குரோம் கிரில் மற்றும் மனதை ஆக்கிரமிக்கும் பம்பர் ஆகியவை சேர்ந்து கம்பீரத் தோற்றத்தைத் தருகின்றன. அத்தோடு முடிந்து விடாமல், இதன் கம்பீரத்தன்மை இதன் பக்கவாட்டுத் தோற்றம் மற்றும் பின்புறத் தோற்றம் என அனைத்து பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. சாலையில் பயணிக்கும் வேளைகளில், மிகவும் பெரிதாக சாலையை அடைத்துக் கொண்டு இருப்பதால், உங்களை எதிர்த்து எவரும் வராமல் விலகிச் செல்வார்கள்.

Image 2 (1)
புதிய ஃபார்சூனரைப் பற்றி விவரிக்கும் போது, முகப்பில் இருந்து தொடங்கலாம். இரட்டை வண்ணத்தில் உள்ள ரேடியேட்டர் கிரில், இதன் முன்புறத்திற்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது. கிரில்லின் இரு ஓரங்களிலும் க்ரோம் வேலைப்பாடுகள் கொண்ட ஹெட் லாம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. மெல்லிய ஆடம்பர தொனியில் இவை உருவாக்கப்பட்டிருப்பது, நம்மை மிகவும் கவர்கிறது. காலையிலும் பளீரென்று எரியும் LED லைட்களைக் கொண்ட பை-LED லைட்டிங் ஆப்ஷனலாக பொருத்தப்படுகிறது.

Image 3 (1)
ஃபாக் லாம்ப்களைத் தனது இரண்டு ஓரங்களிலும் கொண்ட ஏர் டேம் கருப்பு நிற தீமில் வருகிறது. கருப்பு நிறத்தில், நேர்த்தியான க்ரோம் சூழ்ந்த ஃபாக் லாம்ப் பளிச்சென்று தோற்றமளிக்கிறது. முகப்பில் உள்ள பானேட் மீது உள்ள சற்றே தூக்கலான வடிவமைப்பு இந்த மாடலுக்கு பந்தய காரின் தோற்றத்தை அளிக்கிறது. அதே நேரம், பானேட் மீது உள்ள மெலிதான கோடுகள் அதை சரி செய்கின்றன.

Image 4 (1)
பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, க்ரோம் வேலைப்பாடுகள் கொண்ட கதவு கைப்பிடிகள் நம்மைக் கவர்கின்றன. கருப்பு நிற ஜன்னல் ஃபிரேம்கள் மற்றும் காரின் மேற்பகுதியில் உள்ள ரைல்ஸ் இதன் தோற்றத்தை மேம்படுத்தி கவர்ச்சியாக மாற்றுகின்றன. பிரமாண்டமான வீல் ஃபெண்டர்கள் இதன் பக்கவாட்டு தோற்றத்தையும் கம்பீரமாகக் காட்டுகின்றன. 17 மற்றும் 18 அங்குல ரேடியல்களைக் கொண்ட மெஷிண்ட் அலாய் சக்கரங்கள் ஆப்ஷனலாக வருகின்றன. கடந்த முறை சற்றே வெளியே வந்திருந்த சக்கர வளைவுகள் இந்த முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய ஃபார்சூனரில் C பில்லரில் உள்ள ஜன்னல் பார்வையில் படும் விதத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால், D பில்லர் அமைப்பை தற்போதைய ஜெனரேஷனில் உள்ள ஃபிலோடிங் வகையிலேயே உருவாக்கியுள்ளனர்.

Image 5 (1)
பின்புறம் சென்று பார்த்தால், இதன் பின்புற விளக்குகள் துல்லியமான வடிவமைப்பில் உள்ளன. அதே நேரம், சக்திவாய்ந்த தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, டெய்ல் லாம்ப் முழுவதும் க்ரோம் முலாம் பூசப்பட்டு கம்பீரமாக மிளிர்கின்றன. ராப் அரௌண்ட் அமைப்பில் வரும் டெய்ல் லைட் க்லஸ்டரில் LED லைட்களே பொருத்தப்பட்டுள்ளன.

Image 6 (1) Table 2 (1) Table 3 (1)

உட்புறத் தோற்றம்


புதிய ஃபார்சூனரின் உள்ளே நுழைந்தவுடன் உங்களை இரு கரம் நீட்டி வரவேற்பது விசாலமான கேபின் பகுதி ஆகும். மகத்தான அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேபின் அறை, 7 பெரியவர்கள் வசதியாக அமர்ந்து பயணம் செய்ய ஏற்றதாக உள்ளது. எங்களது உயரமான, குண்டான மற்றும் பருமனான உறுப்பினர்கள் கொண்ட குழு, இந்த காரில் பயணித்த போது சின்னஞ்சிறிய குறைகள் மட்டுமே எழுந்தன. டாஷ் போர்டு ஒரே நிறத்தில், கருப்பு வண்ணத்தில் வருகிறது. எனினும், ஆங்காங்கே சில்வர் நிற வேலைப்பாடுகள் மற்றும் மர வேலைப்பாடுகள் போன்றவை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Image 7 (1)
எளிமையான சரிவாக வடிவத்தில் உள்ள குளிர் சாதன துளைகளைத் தனித்தனியாக இயக்க முடியும். இதன் உட்புற அமைப்பில் கரோலா ஆல்டிஸ் மாடலில் உள்ள கேபின் அமைப்பின் தாக்கத்தை நாம் நன்கு உணர முடிகிறது. டாஷ் போர்டின் லேஅவுட் மற்றும் வண்ணங்கள் ஆகியவையும் நமக்கு கரோலா ஆல்டிசை நினைவூட்டினாலும், அவை மோசமாக இல்லை என்றே கூற வேண்டும். தற்போதைய ஃபார்சூனரில் உள்ள பழைய மந்தமான அமைப்புகள் போயே போய்விட்டன. அதுவும் நன்மைக்குதான், ஏனெனில், இளைஞர்களை ஈர்பதே புதிய ஃபார்சூனரின் முக்கிய நோக்கமாகும்.

Image 8 (1)
சென்டர் கன்சோல் அமைப்பு இந்த உலகத்தில் எங்கேயும் இல்லாதது போல இல்லாமல், யதார்த்தமாக, சாதாரணமாக உள்ளது என்பது எமது பணிவான கருத்து. டச் ஸ்கிரீனுடன் வரும் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் பல்வேறு நாப்கள் மற்றும் பட்டன்கள் புடைசூழ பொருத்தப்பட்டுள்ளது.

Image 9 (1)
டாஷ் போர்டின் வலது புறத்தில், ஸ்டியரிங் வீல் 4 ஸ்போக்குகளுடன் இருப்பதால், ஓட்டுவதற்கு எளிதாக உள்ளது. ஓட்டும் போது பிடி நழுவுவதற்கான வாய்ப்பே இல்லை என்பது எமது கருத்து. ஸ்டியரிங் வீலை அழகுபடுத்த லெதர் கவர் மற்றும் ஆங்காங்கே சில்வர் வண்ண வேலைப்பாடுகளை உபயோகப்படுத்தியுள்ளனர். ஸ்டியரிங் வீலின் இரண்டு புறங்களிலும் இன்ஃபோடைன்மெண்ட், MID மற்றும் குரல் மூலம் கட்டுப்படுத்தும் கருவிகள் (வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம்) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
கண்களில் எளிதாகத் தென்படும் விதத்தில் முன்னே உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டரில், ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவைக் காட்டும் மூன்றாவது டயல் ஆகியவை இடம்பெறுகின்றன. குரோம் வளையங்களுக்குள் ஸ்பீடோமீட்டர் உள்ளது. டயல் மீது பட்டுத் தெறிக்கும் வெளிச்சத்தினால், அதில் உள்ள விவரங்களை எப்போதும் எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

Image 10 (1)
உள்ளே சென்று அமர்ந்த அடுத்த நொடியே, அருமையான இருக்கை அமைப்பை உருவாக்கியதை வைத்துப் பார்க்கும் போது, இந்த ஜப்பானிய நிறுவனத்திற்கு வடிவமைப்பு அறிவியலில் உள்ள பரிச்சயம் மற்றும் அனுபவம் ஆகியவை நமக்கு நன்கு விளங்குகிறது.

Image 11 (1)
இருக்கைகள் அனைத்தும் அகலமாகவும் வசதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றைப் பற்றி புகார் செய்யப் பெரிதாக எதுவும் இல்லை. இருக்கைகளின் மேல் மற்றும் விதானத்திலும் உள்ள ஆடம்பரமான மெத்தென்று உள்ள லெதர் விரிப்புகள், பயணத்தின் தரத்தை மென்மேலும் உயர்த்துகின்றன. அதே போல, இருக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஹெட் ரெஸ்ட்கள் மற்றும் ஆர்ம் ரெஸ்ட்கள் போன்றவை, இதன் வசதிகளை மேலும் அதிகப்படுத்துகின்றன. இரண்டாவது இருக்கை வரிசையில் அமர்ந்து வந்த நமது குழு உறுப்பினர்கள், கால் வைப்பதற்கான இடம் விசாலமாக இருந்ததால், மகிழ்ச்சியாகப் பயணித்தனர். அதே நேரம், மூன்றாவது இருக்கை வரிசையை சற்றே மேம்படுத்தியிருக்கலாம். பின்புறம் சாயும் பகுதி அருமையாக இருந்தாலும், அமரும் பகுதியில் வசதி குறைவாகவே உள்ளது.

Image 12 (1)

செயல்திறன்


புதிய ஃபார்சூனரில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில், 2982 cc என்ற அளவு திறனுடன் வரும் D-4D டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், சுற்றுசூழலுக்கு இதமான, அதிக சக்திவாய்ந்த மற்றும் அதிக சிக்கனத்தைத் தரும் புத்தம் புதிய GD 4 சிலிண்டர் டீசல் இஞ்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டர்போ சார்ஜ்ட் இஞ்ஜின்களில் ESTEC தொழில்நுட்பம் (எகானமி வித் சுபீரியர் தெர்மல் எஃப்பிகிஎண்ட் கம்பஷன்) இணைக்கப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியான சிறப்பம்சங்களுடன் வரும் இந்த இஞ்ஜின் நம்மைக் கவர்கிறது. 1400 rpm – 3400 rpm என்ற அளவிற்குள் 343 Nm டார்க் மற்றும் 3400 rpm என்ற அளவில் 142 bhp சக்தி ஆகியவற்றை உற்பத்தி செய்வது அளப்பரிய செயலாகும். மொத்தத்தில், இந்த இஞ்ஜினின் செயல்திறனை எண்ணி நாம் வியக்கும் அளவில் இது அற்புதமாக உள்ளது. குறைவான டர்போ லேக் (lag) மற்றும் லீனியர் பவர் டெலிவரி ஆகியவை பெரும்பான்மையான மக்களுக்கு இனிய பயண அனுபவத்தை தரவல்லதாக உள்ளன. டவுன் ஷிஃப்டிங்க் இல்லாமலே, முன்னே செல்லும் வாகனங்களை எளிதாக முந்தி செல்வது, நம்மை பிரமிக்க வைக்கிறது. எனினும், அதிகமான இஞ்ஜின் சத்தம், உங்களது உற்சாகத்தைக் குறைக்கும் வாய்ப்பு உள்ளது. அதிவேகமாக செல்லும் வேளைகளில் இதை நீங்கள் புறக்கணிப்பது நல்லது.

இஞ்ஜின் விவரம்:1. இஞ்ஜின் வகை - டர்போ டீசல்
2. டிஸ்பிளேஸ்மெண்ட் - 2755 cc
3. ட்ரான்ஸ்மிஷன் - 6 ஸ்பீட் மேனுவல் / 6 ஸ்பீட் ஆட்டோமேடிக்
4. எரிபொருள் வகை - ஹை பிரஷர் டைரக்ட் இஞ்ஜெக்ஷன்
5. 4x4 அமைப்பு - பார்ட்-டைம்
6. முன்புற சஸ்பென்ஷன் - டபுள் விஷ்போன், ஸ்டெப்லைசர் பார்
7. பின்புற சஸ்பென்ஷன் - 5 லிங்க், காயில் ஸ்ப்ரிங்குகள், ஸ்டெபிலைசர் பார்

Image 13 (1) Image 14 (1)

பயணம் மற்றும் கையாளும் திறன்


அநேகமாக அனைத்து டொயொட்டோ மாடல்களும், அருமையான இயக்கவியலுடன் வருகின்றன. இதன் காரணமாகவே, இவை கரடுமுரடான இந்திய சாலைகளில் எளிதாகவும் சுமூகமாகவும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களைக் கவர்கின்றன. ஃபார்சூனரும் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில், டொயோட்டா நிறுவனத்தினர் இந்த மாடலின் இயக்கும் திறனை மேலும் மேம்படுத்தியிருக்கும் என்று நாம் நம்புகிறோம். நமது இந்திய சாலைகளில் பயணிப்பதற்கு இதன் சேசிஸ் அமைப்பு மிகவும் உதவியாக இருக்கும். சீரற்ற நிலப்பகுதிகளில் பயணிக்கும் வேளைகளிலும் கூட எப்போதாவது தான் நாம் அதை உணர்கிறோம். இதற்கு, நாம் இதன் சேசிஸ் அமைப்பிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். இந்த வாகனத்தின் பாடி அமைப்பு கூடுகள் இல்லாமல், அடர்த்தியாக உள்ளதால், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போதும், ஸ்திரத்தன்மையுடன் ஓடுகிறது. அது மட்டுமல்லாமல், இதன் பிடிப்பு தன்மையும் அதிகமாக உள்ளது. எனவே, சாலையோடு உறுதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதா என்று தோன்றும் அளவிற்கு நீண்ட தூர பயணங்களிலும் கிரிப்பாக ஓடுகிறது. நீண்ட தூர பயணங்களிலும் குலுங்காமல் இதமாகச் செல்கிறது. பிரமாண்டமான அளவில் வரும் SUV கார்களில் நிறுத்தும் திறன் சற்றே மட்டுப்பட்டிருக்கின்றது. ஃபார்சூனரிலும் இதை நாம் உணரலாம். டொயோட்டா நிறுவனம், இதன் நிறுத்தும் திறனை சற்றே அதிகப்படுத்தியிருந்தால் மேலும் வசதியாக இருந்திருக்கும் என்பது நமது கருத்து. கடந்த முறை பயன்படுத்தப்பட்ட KD சீரிஸ் இஞ்ஜின்கள் இல்லாமல், GD டீசல் இஞ்ஜின்கள் உபயோகப் படுத்தப்பட்டிருப்பதால், 10% அதிக எரிபொருள் சிக்கனத்தை நாம் அனுபவிக்கலாம். குறைவான எடையில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கையாண்டுள்ளதாலும், அதிக மைலேஜ் கிடைக்கிறது. புதிய டொயோடா ஃபார்சூனர் இந்தியா மாடலில், நாம் 12 - 14 kmpl வரை மைலேஜ் எதிர்பார்க்கலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்:


ப்ரீ-டென்ஷனர்கள் மற்றும் பெல்ட் ஃபோர்ஸ் லிமிட்டர்கள் ஆகியவை இணைக்கப்பட சீட் பெல்ட்கள் மற்றும் ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இதற்கிடையில், சராசரியாக அனைத்து வாடிக்கையாளர்களும் எதிர்பார்க்கும் ஆன்டி-லாக் பிரேக்கிங் அமைப்பு, எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் அமைப்பு மற்றும் வெஹிக்கில் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் போன்ற பல மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகளும் இதில் இடம்பெறுகின்றன. பயணிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு உரித்தானதாக இல்லாமல், திருட்டு மற்றும் வேறு சில பாதுகாப்பற்ற முறைகளில் இருந்து இந்த காரைப் பாதுகாப்பதற்கு இம்மொபிலைசர் போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

Image 15 (1) Table 5 (1)

வேரியண்ட்கள்:


4x4 AT, 4x4 MT, 4x2 AT, 4x2 MT என்ற 4 விதமான வேரியண்ட்களில் டொயோட்டா ஃபார்சூனர் வெளிவருகிறது. தோற்றம், வசதிகள் மற்றும் சொகுசு அம்சங்கள் அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியாகவே வருகின்றன. எனினும், இவை ட்ரைவ் ஃபார்மட் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் ஆகியவற்றில் வேறுபடுகின்றன.

Table 6 (1)

தீர்ப்பு:உயர்தர SUV பிரிவின் முன்னோடியான கார்கள் எவை என்று ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் கேட்டிருந்தால், ஃபார்சூனரையும் அவற்றில் ஒன்றாக நாம் முன்மொழிந்திருப்போம். தற்போது, இதன் போட்டியாளரான ஃபோர்ட் எண்டேவருடன் ஒப்பிடும் போது, ஃபார்சூனரின் விலை அதிகமாகவும், மனதைக் கவரும் சிறப்பம்சங்களுடன் வரவில்லை என்றே தோன்றுகிறது. எனினும், எவ்வித நிலப்பரப்பிலும் பறந்து செல்லக் கூடும் என்ற உணர்வை ஏற்படுத்தும் இதன் கம்பீர தோற்றத்திற்கு எந்த விதமான பங்கமும் வரவில்லை.
புதிய ஃபார்சூனரின் தயாரிப்பு செலவை குறைக்க வேண்டும் என்பதற்காக, டொயோடா நிறுவனம், கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடாடியில் உள்ள இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் இதன் டீசல் இஞ்ஜின்களை அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 சதவிகித வேலை இங்கேயே நடைபெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள பிரிமியம் SUV கார்களான மிட்சுபீஷி பஜெரோ ஸ்போர்ட், ஹுண்டாய் சாண்டாஃபே, ஃபோர்ட் எண்டேவர் மற்றும் செவ்ரோலெட் டிரைல் பிளேசர் ஆகிய கம்பீரமான கார்களுடன் நேருக்கு நேர் நின்று ஃபார்சூனர் போட்டியிடும். இந்தியாவில் அறிமுகமாகும் போது, இதன் விலை சுமார் ரூ. 25 லட்சங்கள் - ரூ. 35 லட்சங்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உண்மையை உணர புதியது வெளிவரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்பது எங்களது தாழ்மையான கருத்து.