டொயோட்டா எதியோஸ்-லிவா

` 4.9 - 7.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்அக்டோபர் 16, 2015: டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், இந்த விழாக்காலத்தில் தனது மேம்படுத்தப்பட்ட எடியோஸ் லிவா மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 5.76 லட்சங்கள் (பெட்ரோல் வேரியண்ட்) மற்றும் ரூ. 6.79 லட்சங்கள் (டீசல் வேரியண்ட்) என்ற டில்லி எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள லிவா, இன்றிலிருந்து நாடு முழுவதும் உள்ள டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் இடம்பெறும் முக்கியமான மாற்றம் என்னவென்றால், லிவாவின் பாடியில் இரண்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு வருகிறது. மேலும், இரட்டை வண்ணத்திலும் இரண்டு ஆப்ஷன்கள் தரப்படுகின்றன. வெள்ளை அல்லது சிவப்பு வண்ணத்தில் பாடி நிறமும், மேற்புற விதானத்தில் மட்டும் கருப்பு நிற வண்ணம் இணைந்து வருவது பார்ப்பவர் மனதைக் கவர்கிறது. விதானம் தவிர கிரில், ORVM (வெளியே உள்ள ரியர் வியூ மிரர்) மற்றும் ரூஃப் ஸ்பாய்லர் ஆகிய பகுதிகளும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 185/60 க்ராஸ்-செக்ஷன் 15 அங்குல ரேடியல்கள் பெற்ற புதிய டயமண்ட் கட் அலாய் சக்கரங்கள் மீது இந்த கார் கம்பீரமாக வலம் வருகிறது. உட்புறத்தில், புதிய செயற்கையான மர வேலைப்பாடு மற்றும் இரண்டு வண்ண இருக்கை விரிப்புகள் ஆகியவை புதிதாக இணைக்கப்பட்டு, நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.
மிகவும் புகழ் பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா நிறுவனம் ஹாட்ச் பேக் பிரிவில் நுழைவதற்கு எடியோஸ் லிவாவைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய சந்தையில், ஹாட்ச் பேக் கார்களைத் தயாரிப்பதில், மாருதி சுசுகி மற்றும் ஹுண்டாய் போன்ற நிறுவனங்கள் இந்தப் பிரிவில் கொலோச்சிக் கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், டொயோட்டா நிறுவனத்திற்கு ஹாட்ச்பேக் கார்களைத் தயாரிப்பதில் அதிக அனுபவம் இல்லை என்றாலும் தீவிரமாக இந்திய சந்தை நிலவரத்தை ஆராய்ச்சி செய்து, அனைவரும் விரும்பும் விதத்தில் உள்ள ஹாட்ச்பேக் காரை உருவாக்கி வெளியிட்டுள்ளது என்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம் ஆகும். வாடிக்கையாளர்களைக் கவரும் முக்கியமான அம்சங்களைப் பற்றிய தகவல்களை, மிகவும் நம்பகமான ஆதாரம் மூலம் திரட்டிய பின், இந்த வியப்பிற்குறிய சிறிய வாகனமான எடியோஸ் லிவாவைத் தயாரித்துள்ளது. சீரிய ஆராய்ச்சிக்குப் பின் தயாரித்துள்ளதால், லிவா இந்திய மக்களின் மனதைக் கொள்ளை அடித்து, நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

சிறப்பம்சங்கள்:


Table 1

டொயோட்டா எடியோஸ் லிவா விமர்சனம்


கண்ணோட்டம்காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஏற்ப, கடந்த சில மாதங்களாக ஏராளமான கார் தயாரிப்பாளர்கள் தங்களது புதிய தயாரிப்புகளையும், மேம்படுத்தப்பட்ட மாடல்களையும் இந்த விழாக்காலத்தில் தொடர்ந்து வெளியிட்டவண்ணம் உள்ளனர். டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இதில் கலந்து கொள்ளாமல், அமைதி காத்து வந்தது. இறுதியாக, தனது மௌன விரதத்தை முடித்து, எடியோஸ் லிவா ஹாட்ச் பேக் காரின் புதிய லிமிடெட் எடிஷன் (குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்) மாடலை வெளியிட்டுள்ளது.
டொயோட்டா எடியோஸ் சேடான் மாடலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹாட்ச் பேக், சேடான் மாடலில் உள்ள பல அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. வெளிப்புற தோற்றத்தில் பல வசீகரமான மாற்றங்கள் மற்றும் ஒரு சில உட்புற மாற்றங்களையும் தாங்கி, புதிய எடியோஸ் லிவா வெளிவந்துள்ளது. இரட்டை வண்ணத்தில் உள்ள இதன் தோற்றம் நவீனமாக உள்ளது. சிவப்பு மற்றும் வெள்ளை என்ற இரண்டு வித ஆப்ஷன்களில் ஒன்றை, வாடிக்கையாளராகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனினும், இதன் விதானம் பளபளப்பான கருப்பு நிறத்தில் இருப்பது, இந்த காருக்கு வசீகரமான தோற்றத்தை அளிக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. கருப்பு நிற அமைப்பை விதானத்தைத் தவிர, இதன் பில்லர்கள் மற்றும் வெளியே உள்ள ரியர் வியூ மிரர்கள் ஆகியவற்றிலும் டொயோட்டா நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது.
விசாலமான உட்புற அமைப்பு கொண்ட எடியோஸ் லிவாவில் 5 நபர்கள் வசதியாக அமர்ந்து பயணிக்கலாம். கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தையும் எளிதாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலான அமைப்பு, ஸ்டியரிங் வீல் டில்ட் செய்து பயன்படுத்தும் அமைப்பு மற்றும் உடனடியாக செயல்படும் கிளட்ச் அமைப்பு ஆகியவை கொண்டு இந்த கார் புதுபிக்கப்பட்டுள்ளது. அற்புதமாக செயல்படும் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு பாதுகாப்பான மற்றும் சுகமான பயணத்திற்கு பயன்படுகிறது. மேலும், விற்பனைக்குப் பின் வழங்கப்படும் சேவையில் எப்போதுமே டொயோட்டா நிறுவனம் சிறந்த முறையில் செயல்படுவதால், இது உங்களுக்குக் கிடைக்கவுள்ள கூடுதல் பயனாகும்.
மேற்சொன்னது தவிர, இதில் நவீனமான ஹெட் லைட் க்லஸ்டர், முன்புறத்தில் இரண்டு இன்டர்மிட்டெண்ட் வைப்பர் கொண்ட விண்ட்ஸ்கிரீன், டொயோட்டாவின் முத்திரை கொண்ட பின்புற பூட் லிட் மற்றும் பாடி நிறத்திலேயே வரும் பம்பர்கள் ஆகியவை இணைக்கப்பட்டு எடியோஸ் லிவா அம்சமாக வருகிறது. கேபின் பகுதியில் உள்ளே நுழைந்தவுடன், புதிதாக இடம்பெறும் அம்சங்களை நீங்கள் எளிதாக கண்டுகொள்ளலாம். டாஷ்போர்டின் மீது நேர்த்தியான செயற்கை மர வேலைப்பாடு நம் கண்களைக் கட்டிப் போடுகிறது. மேலும், இரட்டை வண்ண இருக்கை விரிப்புகள் அலங்காரமான தோற்றத்தை அளிக்கின்றன.
மேற்சொன்ன அம்சங்கள் தவிர மற்ற அனைத்தும் ஏற்கனவே இருந்தவையாக உள்ளன. கேபினில் உள்ள 12V ஆக்செசரி சாக்கெட், முன்புற கேபின் லைட்கள், டாக்கோமீட்டர், ஸ்பீக்கர்கள், சிறிய பொருட்களை வைத்துக் கொள்ள இடவசதி மற்றும் கிலோவ் பாக்ஸ் ஆகியவை இதற்கு முன்பே பார்த்த அம்சங்களாம். சொகுசாக, சுகமாக பயணம் செய்வதற்காகவே இணைக்கப்பட்டுள்ள அம்சங்களில் முன்புற சன்வைசர்கள், மின்னியக்கம் மூலம் இயங்கும் ஜன்னல்கள், அதிக குஷன் பொருத்தப்பட்ட இருக்கைகள், இருக்கை மேல் பொருத்தப்பட்டுள்ள மாற்றி அமைக்கக் கூடிய ஹெட் ரெஸ்ட்கள் மற்றும் குளிர் சாதன கருவி ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். பயணங்களின் போது மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் அளிக்கும் விதத்தில், அதிநவீனமான ம்யூசிக் சிஸ்டம் மற்றும் அதனுடன் இணைந்து வரும் CD மற்றும் MP3 பிளேயர், மற்றும் கூடுதல் இன்புட் ஆப்ஷன்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
இஞ்ஜின்களில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டு, அவை 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்சுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. 1000 கிலோவுக்கும் சற்றே குறைவாக இருப்பதால், இலகுவான எடையுடன் வரும் லிவாவைக் கையாளுவது எளிதாக உள்ளது. பாதுகாப்பு அமைப்புகளில் முன்புறத்தில் SRS காற்றுப் பைகள் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர் மற்றும் ப்ரீ-டென்ஷனர் கொண்ட முன்புற சீட் பெல்ட்கள் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இஞ்ஜின் இம்மொபிலைசர், EBD அமைப்புடன் வரும் ABS மற்றும் பின்புற டி-ஃபாகர் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தி, பயணிகள் அமைதியான பயணத்தை மேற்கொள்ள டொயோட்டா நிறுவனம் வழிவகை செய்துள்ளது. தற்போது, 1,00,0000 கிலோமீட்டர் அல்லது 3 வருடங்கள் என்ற இரண்டு வகைகளில் எது முதலில் வருகிறதோ அதுவரை இந்த காருக்கான உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

டொயோட்டா எடியோஸ் லிவாவின் போட்டியாளர்கள்:


B பிரிவு ஹாட்ச்பேக் பிரிவில் வரும் டொயோட்டா எடியோஸ் லிவாவுடன் நேருக்கு நேர் போட்டியிட பல போட்டியாளர்கள் தயாராக உள்ளனர். முக்கியமாக மாருதி சுசுகி ரிட்ஸ், மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹுண்டாய் i10, ஹுண்டாய் i20, வோக்ஸ்வேகன் போலோ, ஸ்கோடா ஃபேபியா, ஃபியட் புண்ட்டோ, ஹோண்டா ஜாஸ், நிஸ்ஸான் மைக்ரா மற்றும் பல கார்கள் புதிய டொயோட்டா எடியோசுடன் போட்டியிட தயாராக உள்ளன.

வெளிப்புறத் தோற்ற அமைப்பு:எட்டியோஸ் புதிய எடிஷனில் வரும் இரண்டு விதமான நிறங்களில் பாடி அமைப்பு, மற்றும் அவற்றில் இரண்டு வண்ண ஆப்ஷன்களோடு வரும் அமைப்பே இதில் உள்ள முக்கியமான மாற்றம் என்று சொல்லலாம். கருப்பு - வெள்ளை மற்றும் கருப்பு - சிவப்பு என்ற இரண்டு வகை ஆப்ஷன்களிலும் இந்த கார் அழகாக மிளிர்கிறது. முகப்பில் உள்ள நேர்த்தியான கிரில் மீது இந்நிறுவனத்தின் சின்னம் க்ரோம் முலாம் பூசப்பட்டு, தனியே தெரியும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நடுவே, டொயோட்டாவின் சின்னம், அதன் இருமருங்கிலும் கிரில், அவற்றின் இரு ஓரங்களிலும் ஹெட் லாம்ப் க்லஸ்டர் பொருத்தப்பட்டு, முன்புறம் ஜெகஜ்ஜோதியாய்த் திகழ்கிறது. ஹெட் லைட் க்லஸ்டர் அமைப்பில், டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் அதிக சக்தி வாய்ந்த விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டு, மிக நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. விண்ட் ஸ்கிரீன் அகலமாக இருப்பதால், இந்த ஹாட்ச்பேக் கார் அகலமாகத் தெரிகிறது. இதில் இரண்டு இன்டர்மிட்டெண்ட் வைப்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன. பாடி நிறத்திலேயே உருவாக்கப்பட்டுள்ள முன்புற பம்பர், செதுக்கப்பட்டது போன்ற அழகில் உள்ளது. அது மட்டுமல்ல, பம்பர் மீது ஏர் டேம் மற்றும் பளீரென்று எரியும் ஃபாக் விளக்குகள் ஆகியவை இடம்பெறுகின்றன. எடியோஸின் அழகை மேலும் அதிகப்படுத்த, பானேட் மீது தெள்ளத் தெளிவான லைன்கள் இணைக்கப்பட்டுள்ளன. மெதுவாக நகர்ந்து, பக்கவாட்டிற்கு சென்றால் வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் மற்றும் B பில்லர் ஆகியவை பளபளப்பான கருப்பு நிறத்தில் வருகின்றன. அதே நேரம், கதவு கைப்பிடிகள் அனைத்தும் பாடி நிறத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதன் சக்கர வளைவுகளுக்குள் உள்ள 15 அங்குல அலாய் சக்கரங்களின் மீது ட்யூப்லெஸ் ரேடியல் டயர்கள் பாந்தமாகப் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டுத் தோற்றத்தில், கூடுதலாக ஒரு ஸ்பாய்லர் என்ற ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. கம்பீரமான தோற்ற அமைப்புடன் உள்ள பின்புற பம்பர் பகுதியில், லைசென்ஸ் ப்ளேட் இடம் பெறுகிறது. டெய்ல் கேட் பகுதியில் வைப்பருடன் கூடிய சிறிய விண்ட் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. மெல்லிய துடுப்பு போன்ற தோற்றத்தில் உள்ள பின்புற விளக்குகள் இந்த வாகனத்தின் நவீன தோற்றத்தை மேம்படுத்துகின்றன. பெரிய ஸ்டைலான 12 ஸ்போக் அலாய் சக்கரங்கள் இதற்கு பந்தய கார் போன்ற தோற்றத்தைத் தருகின்றன. மடக்கி வைக்கக் கூடிய ஆன்டெனா லிவாவின் விதானத்தின் மேல் பொருத்தப்பட்டுள்ளது. பூட் பகுதியின் மீது உள்ள க்ரோம் வேலைப்பாடுகள் லிவாவை கவர்ச்சிகரமாக்குகின்றன. மேலும், பின்புறம் உள்ள இந்நிறுவனத்தின் சின்னத்தைத் தன்னகத்தே தாங்கி நிற்கும், படுக்கை வசத்தில் உள்ள க்ரோம் பட்டை, நம்மை இமைக்காமல் பார்க்க வைக்கும் அழகு கொண்டதாகும். இவை அனைத்தையும் விட அதிமுக்கியமான மாற்றம் எது என்று கேட்டால், நம் இதயத்தைக் கவரும் விதத்தில் உள்ள பளபளப்பான கருப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள விதானம் ஆகும்.

வெளிப்புற அளவுகள்:மொத்தத்தில் 3775 மிமீ என்ற நீளத்தில், 1510 மிமீ என்ற தேவையான அளவு உயரத்தில் மற்றும் 1695 மிமீ அகலத்தில் (ORVM -கள் இல்லாமல்) உருவாக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 170 மிமீ அளவில் கிரவுண்ட் க்ளியரன்ஸ் உயரம் கொண்டு, 2460 மிமீ வீல் பேஸ் அகலம் கொண்டு, லிவா ஒய்யாரமாக நிற்கிறது.
ரூ. 4.54 லட்சங்களில் இருந்து ரூ. 7.12 லட்சங்கள் வரை என்ற நியாயமான விலையில் வரும் எட்டியோஸ் மாடல், கிளாசிக் க்ரே, வெள்ளை, சிம்ஃபனி சில்வர், ஹார்மனி பீஜ், செலெஸ்டியல் கருப்பு, வெர்மிலியான் சிவப்பு மற்றும் அல்ட்ரா மரைன் புளு ஆகிய வண்ணங்களில் வருகிறது.

உட்புற அமைப்புகள்:ஆசிரியர் குறிப்பு: எடியோஸ் செடானில் உள்ள அனைத்து உட்புற அமைப்புகளும் இந்த ஹாட்ச் பேக்கிலும் இடம்பெறுகின்றன. வசீகரமான வெளிப்புற தோற்றத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில், இதன் உட்புற அமைப்பும் கவர்ச்சிகரமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. வீல் பேஸ் சிறியதாக இருந்தாலும், 5 நபர்கள் சவுகர்யமாக அமர்ந்து பயணம் செய்யும் அளவிற்கு இதில் இடம் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் குறைவான தரம் மற்றும் டாஷ் போர்டின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் என்ற ஒரு சின்னஞ்சிறு குறைகள் தவிர வேறு பெரிய குறைகள் எதுவும் கண்கூடாகத் தெரியவில்லை.
தரமான துணியினால் ஆனா இருக்கை விரிப்புகள் எடியோசிற்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. மாற்றம் என்று பார்த்தால், டாஷ் போர்டில் புதிய செயற்கை மர வேலைப்பாடு மற்றும் இரட்டை வண்ணத்தில் வரும் உயர்தர துணியில் ஆன இருக்கை விரிப்புகள் போன்றவை அப்பட்டமாக தெரிந்தவை ஆகும். இது தவிர, வேறு எந்த மாற்றங்களும் செயல்படுத்தப்படவில்லை. கதவு பேனல்களிலும் துணியினால் ஆன வேலைப்பாடுகள் கொண்டு, உட்புற தோற்றத்திற்கு பொலிவு தருகின்றன. AC துளைகள், ஸ்டியரிங் வீல் மற்றும் கியர்ஷிப்ட் லீவர் போன்ற அனைத்து அமைப்புகளும் க்ரோம் வேலைப்பாடுகளில் மிளிர்கின்றன. இருக்கைகளில் அதிகமான குஷன் பொருத்தப்பட்டு மெத்தென்று உள்ளன. பயணத்தை மேலும் இதமாக்குவதற்கு, இருக்கைகள் மீது ஹெட் ரெஸ்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஓட்டுனரின் இருக்கை உயரத்தை மாற்றி அமைக்கும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், பின்புறம் உள்ள இருக்கையை மடக்கும் வசதி உள்ளதால், பூட் பகுதியின் கொள்ளளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். டாஷ் போர்டில், 2-DIN ம்யூசிக் சிஸ்டம், குளிர் சாதன கருவி மற்றும் சிறிய பொருட்களை வைத்துக் கொள்ள சிறிய இடைவெளிகள் ஆகிய நடைமுறைக்குத் தேவையான முக்கிய அம்சங்கள் இடம்பெறுகின்றன. இது தவிர, 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மீது டொயோட்டா நிறுவனத்தின் சின்னம் க்ரோம் முலாம் பூசப்பட்ட பிளேட்டில் பொரிக்கப்பட்டுள்ளது. டாஷ் போர்டின் மையத்தில் நீல வண்ண பின்னனி ஒளியில் மின்னும் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர், டிஜிட்டல் ட்ரிப்மீட்டர் மற்றும் ஒரு சில எச்சரிக்கை விளக்குகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஓட்டுனர் சீட் பெல்ட் மாட்டவில்லை என்றால் எச்சரிக்கும் கருவி, கதவு திறந்திருந்தால் எச்சரிக்கும் கருவி மற்றும் ஹெட் லாம்ப் எரிந்தால் காட்டிக் கொடுக்கும் கருவி என பல முக்கிய அமைப்புகள் இடம்பெறுகின்றன. அகலமாகவும், வீல் பேஸ் அளவு பெரியதாகவும் இருப்பதால், கேபின் பகுதியில் கால் வைக்கவும், தோள்கள் உராயாமலும், தலை தட்டாமாலும் இருப்பதற்குத் தேவையான இடவசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

உட்புற சொகுசு அமைப்புகள்:


ஏராளமான நடைமுறைக்குத் தேவையான அம்சங்களை டொயோட்டா நிறுவனம் லிவாவில் பொறுத்தியுள்ளதால், ஒவ்வொரு பயணமும் சொகுசான பயணமாக உள்ளது. அவற்றில் பின்புறம் சென்று பார்க் செய்ய உதவும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், மின்னியக்கம் மூலம் சாய்த்துக் கொள்ளும் வசதி கொண்ட ஸ்டியரிங் அமைப்பு, குளிரூட்டப்பட்ட கிலோவ் பாக்ஸ், முன்புற கேபின் லைட்கள், டிஜிட்டல் ட்ரிப்மீட்டர், 7 பாட்டில் ஹோல்டர்கள், பகலிலும் இரவிலும் இயங்கும் ரியர் வியூ மிரர் மற்றும் கதவில் சிறிய பொருட்களை வைத்துக் கொள்ள பாக்கெட்கள் ஆகியவை உட்புற சொகுசு அம்சங்களின் உதாரணங்கள். அது மட்டுமல்ல, முன்புறம் இரட்டை சன் வைசர்கள், குளிர் சாதன வசதி, கோட் ஹூக் கொண்ட அஸ்சிஸ்ட் கிரிப், டெய்ல் கேட் மூடி மற்றும் எரிபொருள் டாங்க் மூடியைத் திறப்பதற்காக பயன்படும் ரிமோட் ஆகியவை நீண்ட நேர பயணங்களையும் இனிதாக மாற்றவல்ல அம்சங்களாக இருக்கின்றன. ஓட்டுனரின் அருகே ஆட்டோ-டவுன் அமைப்பு கொண்ட பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் அமைப்பு, 12V பவர் சாக்கெட், மாற்றி அமைக்கக் கூடிய ஹெட் ரெஸ்ட்ஸ், டிஜிட்டல் ட்ரிப்மீட்டர், உயரத்தை மாற்றும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை மற்றும் பயணியர்கள் பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றைப் பொருத்தி, டொயோட்டா நிறுவனம் பயணிகளை குஷிப்படுத்துகின்றது. நாள் முழுவதும் பயணம் செய்தாலும் அலுப்புத்தட்டாமல் இருக்க மேம்பட்ட இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பில் உள்ள ம்யூசிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இசை மழையில் நனையலாம். நல்ல இசையை கேட்டுக் கொண்டு பயணிக்கும் போது, அடிவானம் கூட தூரம் இல்லை.

உட்புற அளவுகள்:


லிவாவின் உட்புறத்தில் விசாலமான இடவசதி இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் பெரிய வீல் பேஸ், அகலம் மற்றும் போதுமான அளவு உயரம் ஆகும். 5 நபர்கள் மட்டுமல்ல அவர்களின் பயண சாமான்களையும் வைத்துக் கொள்வதற்குத் தேவையான இடம் லிவாவில் உள்ளது. 251 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் பகுதியை மேலும் அதிகரிக்க, பின்புற இருக்கைகளை மடக்கி வைத்துக் கொள்ளலாம். 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் எரிபொருள் டாங்க் அளவும் கணிசமான அளவு பெரிதாகவே உள்ளது. டாங்க் முழுமையாக நிரப்பப்பட்டால், டீசல் வேரியண்ட்டில் 1061.55 கிலோ மீட்டர் வரை மற்றும் பெட்ரோல் வேரியண்ட்டில் 797 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.

ஆக்செலரேஷன் மற்றும் பிக்அப்:


ஆசிரியர் குறிப்பு: எடியோஸ் லிவாவின் ஆக்செலரேஷன் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இதன் சக்தி மற்றும் எடையின் விகிதம் அருமையாக உள்ளது. குறைவான சக்தி உற்பத்தியிலும் அருமையான ஆக்செலரேஷன் கிடைக்கிறது. இந்த காரை அனைவருக்கும் உகந்ததாக மாற்றுவது, இதமாகவும் சீராகவும் இயங்கும் இதன் டிரைவபிலிட்டி ஆகும். லிவாவை இயக்கும் இரண்டு வகை இஞ்ஜின்களும் மேம்பட்ட 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1197 cc திறன் கொண்ட இதன் மோட்டார் ஸ்டார்ட் செய்த 15 வினாடிகளில் 0 – 100 kmph வேகத்தை எட்டச் செய்கிறது. அதே நேரம், அதிகபட்சமாக மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லக் கூடியதாக லிவாவின் திறனை கூடுகிறது. D-4D டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள வேரியண்ட்கள் எளிதாக 155 – 165 kmph வேகத்தை அடைந்து சிறுத்தைப் புலியைப் போல பாய்ந்து செல்ல லிவாவிற்கு உதவுகிறது.

இஞ்ஜின் மற்றும் செயல்திறன்:ஆசிரியர் குறிப்பு: லிவாவில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு விதமான இஞ்ஜின்களுமே சிறந்த முறையில் இயங்குகின்றன. உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் எதை வேண்டும் என்றாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். டொயோட்டா நிறுவனம் மிக கவனத்துடன் செயல்பட்டு, தனிச்சிறப்புடைய இஞ்ஜின்கள் பொருத்தியுள்ளதால், நீங்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இஞ்ஜினைத் தேர்ந்தெடுக்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் என்ற இரண்டு ஆப்ஷன்களை டொயோட்டா லிவாவில் தருகிறது. இதன் டீசல் வேரியண்ட்டில் காமன் ரயில் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட 1.4 லிட்டர் D-4D இஞ்ஜின் பொருத்தப்பட்டு வெளிவருகிறது. இதில் உள்ள சிங்கிள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வ் கான்ஃபிகரேஷன் கொண்ட 4 சிலிண்டர்கள் மற்றும் 8 வால்வுகள், 1364 cc திறனை உற்பத்தி செய்கின்றன. 3800 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 67.06 bhp சக்தி மற்றும் 1800 – 2400 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 170 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மற்றொரு புறம் பார்க்கும் போது, லிவாவில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் 1197 cc திறன் கொண்டதாக இருக்கிறது. பெட்ரோல் இஞ்ஜினில் உள்ள 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகள் ஆகியவை DOHC வால்வ் கான்ஃபிகரேஷன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை எலெக்ட்ரானிக் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் அமைப்புடன் இயக்கப்படுவதால், 5600 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 78.9 bhp சக்தி மற்றும் 3100 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 104 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இத்தகைய சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தில் இயங்கும் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வித இஞ்ஜின்களுமே மேம்பட்ட 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டு, முன்புற சக்கரங்களுக்கு டார்க் செலுத்தப்படுகிறது.

மைலேஜ்:ஆசிரியர் குறிப்பு: இலகுவான எடையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், எடியோஸ் மற்றும் எட்டியோஸ் லிவா என்ற இரண்டு மாடல்களும் அதிக செயல்திறன் கொண்ட வாகனங்களாக செயல்படுகின்றன. இதன் டீசல் வேரியண்ட்கள் ஆச்சர்யப்படும் வகையில் எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது. பெட்ரோல் வகையும் பாராட்டும்படி செயல்படுகின்றது.
மேம்பட்ட D-4D இஞ்ஜின் காமன் ரயில் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. நகரங்களில் பயணிக்கும் போது, இது அதிகபட்சமாக லிட்டருக்கு 20.32 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. அதே சமயம், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, அதிகபட்சமாக லிட்டருக்கு 23.59 கிலோமீட்டர் என்ற அளவு மைலேஜ் தருகிறது. எலெக்ட்ரானிக் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் அமைப்பில் இயங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் 15.1 – 17.71 kmpl மைலேஜ் தருகிறது.

டொயோட்டா எடியோஸ் லிவாவின் சக்திஆசிரியர் குறிப்பு: எடியோஸ் லிவாவின் பெட்ரோல் மற்றும் டீசல் ரக கார்கள் உற்பத்தி செய்யும் சக்தி பாராட்டுக்குரியதாகும். எனினும், சுமுகமாகவும் இதமாகவும் செல்ல உதவும் இதன் டிரைவபிலிட்டி உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தரும் விதத்தில் உள்ளது. டீசல் இஞ்ஜின் பெட்ரோல் இஞ்ஜினை விட அதிக சக்தியை உற்பத்தி செய்கிறது.
எட்டியோஸின் D-4D டீசல் இஞ்ஜின் SOHC வால்வ் கான்ஃபிகரேஷன் தொழில்நுட்பத்தில், 4 சிலிண்டர்கள் மற்றும் 8 வால்வுகளைக் கொண்டு இயங்குகிறது. அதிகபட்சமாக 67.06 bhp என்ற அளவு சக்தி மற்றும் 170 Nm என்ற அளவு டார்க்கையும் இந்த டீசல் இஞ்ஜின் உற்பத்தி செய்கிறது. அதே நேரம், இதன் 1197 cc திறன் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் டபுள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வ் கான்ஃபிகரேஷன் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது, அதிகபட்சமாக 78.9 bhp சக்தி மற்றும் 104 Nm என்ற அளவு டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

ஸ்டீரியோ மற்றும் ஆக்செசரிகள்ஆசிரியர் குறிப்பு: டொயோடா நிறுவனம் இந்த காரைத் தயாரிக்கும் போதே, இதனுள் ம்யூசிக் சிஸ்டம், ஸ்டியரிங் வீல் மீது ஆடியோ கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் அலாய் சக்கரங்கள் ஆகியவற்றை இணைத்துள்ளது. எனினும், இதன் அடிப்படை மாடல்கள் சாதாரண வெண்ணிலா ஐஸ் கிரீம் போல, கூடுதல் கவர்ச்சிகள் எதுவும் இல்லாமலேயே வருகின்றன.
நவீனமான 2-DIN ம்யூசிக் சிஸ்டத்துடன் CD ப்ளேயர் மற்றும் ரேடியோ போன்ற கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, USB இணைப்பு, 4 ஸ்பீக்கர்கள், Aux-in சாக்கெட் மற்றும் ஆடியோ ஸ்ட்ரீமிங்க் செய்வதற்கு வசதியாக புளுடூத் அமைப்பு போன்றவையும் இடம்பெறுகின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் கருவிகள் அனைத்தும் ஸ்டியரிங் வீல் மீது பொருத்தப்பட்டுள்ளன. டொயோட்டா நிறுவனம் இணைத்துள்ள இந்த வசதிகள் போதாதென்று நினைக்கும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விதத்தில், ஏராளமான ஸ்டைலான அம்சங்களை இணைத்து, இதன் நவீன உட்புற தோற்றத்தை அதிநவீனமாக மாற்றிக் கொள்ளலாம். வெளிப்புறத்திலும், உங்கள் வசதிகளுக்கு ஏற்ற வண்ணம் புதிய இணைப்புகளைப் பொருத்திக் கொள்ளலாம். உதாரணமாக, ரூஃப் ரைல்ஸ், சைட் ஸ்கர்ட்கள், பாதுகாப்புக்கு ப்ரொடெக்டிவ் மோல்டிங்கள் மற்றும் ஸ்டைலான பாடி கிராஃபிக்ஸ் ஆகியவற்றை இணைத்து மெருகூட்டிக் கொள்ளலாம். அதே நேரத்தில், உட்புறத்தில் இருக்கைகள் மீது லெதர் விரிப்புகள் மற்றும் கால் வைக்கும் இடத்தில் கார்பெட் போன்றவற்றை இணைத்து ஆடம்பர காராக மாற்றி அமைக்கலாம். இது மட்டுமல்ல, இந்த காரின் சொகுசு வசதிகளையும் உங்களுக்கு பிடித்த வகையில் மாற்றி அமைக்கலாம். உட்புறத்தில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், உங்கள் ஸ்மார்ட் ஃபோனை பாதுகாப்பாக வைக்க மொபைல் ஹோல்டர் மற்றும் பல வசதிகளை இணைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரேக் மற்றும் கையாளும் வசதி:ஆசிரியர் குறிப்பு: எடியோஸ் லிவாவில் குறைந்த வேகத்தில் பயணிக்கும் போது பயணம் சிறப்பாக உள்ளது. குழிகளில் ஏறி இறங்கும் போதும் இது அலுங்காமல் குலுங்காமல் பயணிக்கிறது. வீல் பேஸ் சிறிதாக இருப்பதால், கையாளுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. எனினும், அதிக வேகத்தில் செல்லும் வேளைகளில் அதிர்வுகளை நாம் உணர முடிகிறது.
டொயோட்டா எட்டியோஸின் முன்புற சக்கரங்களுடன் வெண்டிலேட்டட் டிஸ்க்குகள் இணைக்கப்பட்டுள்ளன. பின்புற சக்கரங்களுடன் சக்தி வாய்ந்த ட்ரம் பிரேக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. எட்டியோஸின் மிட் ரெஞ்ச் வேரியண்ட்களில் ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பு மற்றும் எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் ஆகிய அமைப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன் சஸ்பென்ஷன் அமைப்பைப் பொறுத்தவரை, முன்புற ஆக்ஸிலில் மாக் ஃபெர்சன் ஸ்ட்ரட் (McPherson Strut) மற்றும் பின்புற ஆக்ஸிலில் டார்சன் பீம் பொருத்தப்பட்டுள்ளதால், சமச்சீருடன் செயல்பட உதவுகிறது. டொயோட்டாவின் ஹாட்ச் பேக்கில் உடனடியாக செயல்படும் எலக்ட்ரிக் பவர் அஸிஸ்டட் ஸ்டியரிங் அமைப்பு இடம்பெறுகிறது. இந்த அமைப்பு குறைந்தபட்ச டர்னிங்க் விட்டமாக 4.8 மீட்டர் அளவில் இயங்குகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்:ஆசிரியர் குறிப்பு: எடியோஸ் லிவா பெட்ரோல் வேரியண்ட்டில் காற்றுப் பைகள் மற்றும் ABS அமைப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களை, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு டொயோட்டா நிறுவனம் இணைத்துள்ளது. எனினும், இவை அனைத்தும் டீசல் வெர்ஷனில் ஆப்ஷனல் பேக்கேஜில் வருகின்றன.
அனைத்து வேரியண்ட்களிலும் இரட்டை காற்றுப் பைகள் மற்றும் ஓட்டுனர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் எச்சரிக்கை தரும் கருவி போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது தவிர, லிமிடெட் எடிஷன் டிரிம்களில் முன்புற சீட் பெல்ட்களில் ப்ரீ-டென்ஷனர்கள் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர்கள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. அடிப்படை என்ட்ரி லெவல் வேரியண்ட்டில், இஞ்ஜின் இம்மொபிலைசர் மற்றும் கதவு மூடாமல் இருந்தால் எச்சரிக்கும் கருவி ஆகியவை இடம்பெறுகின்றன. G டிரிம்மில், சாவி இல்லாமல் உள்நுழையும் அமைப்பு, எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் அமைப்புடன் வரும் ஆன்டி லாக் பிரேகிங் வசதி போன்றவை மட்டுமல்லாமல், ஓட்டுனர் சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்கும் கருவி, கதவு திறந்திருந்தால் எச்சரிக்கும் கருவி மற்றும் ஹெட் லாம்ப் எரிந்தால் எச்சரிக்கும் கருவி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. அதே நேரம், இதன் டாப் எண்ட் வேரியண்ட்டில் EBD அமைப்புடன் இணைந்து வரும் ABS அமைப்பு, பின்புறம் சென்று பார்க் செய்ய உதவும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், முன்புறத்தில் ஃபாக் விளக்குகள் போன்றவை உள்ளே அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

சக்கரங்கள்:லிவாவின் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களில் நவீனமான 15 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரங்கள் இணைக்கப்பட்டு, இந்த காருக்கு பந்தய காரின் தோற்றத்தைப் பெற்றுத் தருகின்றன. அதே நேரம், இதன் டாப் எண்ட் வேரியண்ட்களில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, அவற்றின் மீது 185/60 R15 அளவிலான ட்யூப்லெஸ் ரேடியல் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து டிரிம்களிலும் வழக்கமான 14 அங்குல ஸ்டீல் சக்கரங்களும், முழுமையான வீல் கவர்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இவற்றில் 175/65 R14 அளவிலான ரேடியல் ட்யூப்லெஸ் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் பயணிக்கும் போது அதிகமான ஸ்திரத்தன்மையுடன் செல்கின்றன.

சாதகங்கள்:1. பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகள் அதிக செயல்திறனுடன் செயல்படுகின்றன
2. பளபளக்கும் கருப்பு நிற விதானம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதத்தில் உள்ளது.
3. லிவா நியாயமான விலையில் கிடைக்கிறது.
4. டீசல் இஞ்ஜினின் செயல்திறன் பாராட்டுக்குரியதாகும்
5. விசாலமான பூட் பகுதி
6. பெரிய எரிபொருள் டாங்க்

பாதகங்கள்1. எரிபொருள் சிக்கனம் மற்ற ஹாட்ச் பேக் கார்களைப் போல இல்லாமல் சற்றே குறைவாக உள்ளது.
2. தொழில்நுட்ப அம்சங்களில் எந்தவிதமான மேம்பாடுகளும் இல்லை.
3. உட்புற அமைப்புகளில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம்.
4. பாதுகாப்பு அம்சங்கள் பாராட்டும்படி இல்லை
5.அனைத்து வேரியண்ட்களிலும் ம்யூசிக் சிஸ்டத்தைப் பொருத்தி இருக்கலாம்.


இந்திய சாலைகளுக்கு ஏற்ற சஸ்பென்ஷன் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. தடிமனான இன்சுலேஷன், இஞ்ஜின் சத்தம், அதிர்வு மற்றும் கடுமை (NVH) அளவுகளைக் குறைக்க ஹைட்ராலிக் இஞ்ஜின் மவுண்ட்கள், சற்றே அதிகரிக்கப்பட்டுள்ள கிரவுண்ட் க்ளியரன்ஸ், உறுதியான பம்பர் மற்றும் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் ஆகியவை முக்கியமான மாற்றங்களாம். எனினும், இதன் உட்புற அமைப்பின் தரத்தை அதிகப்படுத்தி இருக்கலாம். குறைவான சக்தியை உற்பத்தி செய்தாலும், குறைவான எடையில் உருவாக்கப்பட்டுள்ளதால் சக்தி மற்றும் எடை விகிதத்தில் மற்ற கார்களை விட சிறந்ததாகவே இருக்கிறது. ஸ்விஃப்ட் மற்றும் ரிட்ஸ் போன்ற கார்களில் இல்லாத பாதுகாப்பு அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. லிவாவில், பிராண்ட் நம்பிக்கை, அதிக மைலேஜ், விசாலமான கேபின் பகுதி மற்றும் பெரிய பூட் பகுதி ஆகியவை உங்கள் பணத்திற்கு ஈடாக தரப்படுகிறது.