டொயோட்டா எதியோஸ்

` 6.6 - 9.2 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

சிறப்பம்சங்கள்:


மார்ச் 2, 2015: இந்த மார்ச் மாதத்தில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா இதியாஸ் செடான் டீசல் வகையினை தங்களது ஹோலி சலுகையில் ரூ.20,000 மதிப்புள்ள TGA – டொயோட்டாவின் அசல் துணைப்பொருட்களுடன் வழங்குகிறது. இதற்கு முன்பு ஜனவரி 2015 இல், தனது துணை நிறுவனமான டொயோட்டா டோ பிரேஸில் LTDA சா போலோவில் உள்ள தனது சோரோகாபா ஆலையில் தனது “இதியாஸ்” வாகன உற்பத்தியை 74,000 இல் இருந்து 108,000 எண்ணிக்கையாக உயர்த்தப்போவதாக டொயோட்டா மோட்டார் கார்பரேஷன் அறிவித்தது. 2016 ஆரம்பத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்த அதிகரிக்கும் திட்டம், பிரேசிலில் அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக செய்யப்பட்டுள்ளது, மேலும் இதன் காரணமாக 100 மில்லியன் பிரேசில் ரியால் கூடுதலாக முதலீடு செய்யப்படும். செப்டம்பர் 2012இல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதியாஸ் காரின் விற்பனை மாதத்திற்கு 2,000 முதல் 3,000 எண்ணிக்கையாக இருந்தது. புதய இருக்கை மேலுறைகள், இருக்கை உயரத்தை மாற்றும் வசதி போன்ற அதன் பல்வேறு அம்சங்களை தொடர்ச்சியாக மேம்படுத்தியதன் விளைவாகவும், இதியாஸ் கிராஸ் போன்ற புதிய வகைகள், 54 புதிய டீலர்களைக் கொண்ட கூட்டமைப்பின் விரிவாக்கம் மற்றும் நடமாடும் கடைகள் போன்றவற்றின் காரணமாக இதன் விற்பனை தற்போது 6,000 முதல் 7,000 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது.

தொகுப்பு:


சந்தையில் அடுத்தடுத்த அறிமுகங்களுக்குப் பிறகு, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தனது செடான் இதியாஸின் புதிதாக மாற்றியமைக்கப்பட்ட வகையினை அறிமுகப்படுத்தியுள்ள கார் நிறுவனமாகும். இது அதன் உள்புறங்கள் மற்றும் வெளிப்புறங்கள் ஆகிய இரண்டு அம்சத்திலும் ஒருசில புதுப்பிக்கப்பட்ட அம்சங்களைப் பெற்றுள்ளது. அதே நேரம், இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் மற்றும் ஓட்டுனர் சீட்பெல்ட் அறிவிப்பு போன்ற அம்சங்கள் எல்லா வகை கார்களிலும் ஒரு அடிப்படை அம்சமாக வருகிறது. அதே இதன் உயர்ரக வகையில் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் மின்சக்தி மூலமாக மாற்றக்கூடிய வெளிப்புற கண்ணாடிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இது தற்போது வாங்குபவர்கள் தேர்வு செய்ய வசதியாக பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் வகைகளில் கிடைக்கிறது. அனைத்து பெட்ரோல் ட்ரிம்களும் ஒரு 1.5-லிட்டர் எஞ்சினைப் பெற்றுள்ளன, ஆதே இதன் டீசல் வகைகள் ஒரு 1.4-லிட்டர் மில்லைப் பெற்றுள்ளன. இந்த இரண்டு எஞ்சின்களும் ஒரு ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த எஞ்சின்கள் யாவும் இதற்கு முந்தைய மாடலில் இருந்து அதன் கட்டுமானத்தில் எந்தவிதமான புதுப்பித்தல்களும் இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் வெளிப்புறங்களைப் பொறுத்தவரை, இந்த செடான் கிரோம் சேர்க்கையுடன் ஒரு புத்தம்புதிய ரேடியேட்டர் கிரில்லைப் பெற்றுள்ளன. அடிப்படை ட்ரிம்மும் ஒரு புதிய கிரில்லைப் பெற்றுள்ளது, ஆனால் அது பாடி நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே மற்ற வெளிப்புற அம்சங்களான முகப்புவிளக்கு தொகுதி, அல்லாய் சக்கரங்கள், பம்பர் மற்றும் டெயில்கேட் மாற்றமேதும் இல்லாமல் அப்படியே உள்ளது. எனினும், இந்த கார் உற்பயத்தியாளர் இதன் உயர்ரக வகையில் மட்டுமே ஒரு அடிப்படை அம்சமாக அல்லாய் சக்கரங்களை வழங்குகிறார்கள். இந்த செடானின் உட்புறங்கள் இப்போது நிறைய க்ரோம் வேலைப்பாடுகளைப் பெற்றுள்ளன, இது இதன் எழிலை இன்னும் அதிகரிக்கிறது. இந்த உற்பத்தியாளர் இதன் இருக்கைகள் மற்றும் கதவுப் பேனல்களில் புதிய ஃபேப்ரிக் உறைகளைக் கொண்டு மூடியதன் மூலம் இதன் உட்புறங்களிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். இதன் டேஷ்போர்டு மற்றும் இதர உட்புற அம்சங்களின் வடிவமைப்பு இதற்கு முந்தைய மாடலில் இருந்தது போலவே பராமரிக்கப்பட்டுள்ளது. இந்த செடான் உட்புறத்தில் நிறைய கால் மற்றும் தோள் பகுதி இடவசதியைப் பெற்றுள்ளது, இது ஐந்து பயணிகள் சௌகரியமாக உட்காரும் இடவசதியை அளிக்கிறது. இது ஒரு ஏசி யூனிட், மின்சக்தியில் இயங்கும் பவர் ஸ்டியரிங், உயரத்தை மாற்றக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் பின்பக்க டிஃபாகர் போன்றவை உள்பட பல சொகுசு அம்சங்களைப் பெற்றுள்ளன. எனினும், இந்த அம்சங்களில் பெரும்பாலானவை இதன் நடுத்தரரக மற்றும் உயர்ரக வகைகளில் மட்டுமே கிடைக்கின்றன. இந்நிறுவனம் இதன் உயர்ரக வகைக்கு ஒரு அடிப்படை அம்சமாக லெதரினால் மூடப்பட்ட பன்முக-செயல்பாட்டு ஸ்டியரிங் வீலை வழங்குகிறது. இந்த டொயோட்டா இதியாஸ் செடான் ஒரு எஞ்சின் இம்மொபிலைசர் அமைப்பு மற்றும் கதவு அஜார் எச்சரிக்கை போன்ற ஒருசில பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றுள்ளன. இந்த கார் உற்பத்தியாளர்கள் இந்த செடானை 3-வருடங்கள் அல்லது 100000 கிலோமீட்டர்கள், (எது முதலில் வருகிறதோ) என்கின்ற கவர்ச்சியான வாரண்டியுடன் வழங்குகின்றனர். தற்போது, இந்த வாகனம் ஆரம்ப நிலை செடான் பிரிவில் இதைப் போன்ற ஃபோர்டு கிளாசிக், செவ்ரோலெ செயில் மற்றும் ஃபியட் லியனா கிளாசிக் போன்ற வாகனத்துடன் போட்டியிடுகிறது.

மைலேஜ் மற்றும் எரிபொருள் சிக்கனம்:


இந்த செடான் அதே பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் வகைகளில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் எஞ்சின் ஒரு மேம்பட்ட மின்னணு எரிபொருள் இன்ஜெக்ஷன் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இந்த செடானை நெடுஞ்சாலைகளில் 16.78 Kmpl என்கின்ற அதிகபட்ச மைலேஜை வழங்க உதவுகிறது, அதுவே நகர்புற சாலைகளில் குறைந்த அளவாக 12 Kmpl வரை செல்கிறது. அதுவே இதன் D-4D எஞ்சின் ஒரு சாதாரண ரெயில் எரிபொருள் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மின் நிலையம் நகர்புற சாலைகளில் குறைந்தபட்ச மைலேஜான 18 kmpl வழங்க முடியும் அதுவே விரைவுப்பாதைகளில் அதிகபட்ச மைலேஜான 23.59 Kmplஐ வழங்குகிறது.

ஆற்றல்:


இதன் டீசல் எஞ்சின் 4-சிலிண்டர்கள் மற்றும் 8-வால்வுகளுடன் ஒரு SOHC வால்வு அமைப்பினை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த மின் நிலையம் அதிகபட்ச ஆற்றலான 67.04bhp மற்றும் அத்துடன் அதிகபம்சமாக 170Nm முறுக்குத்திறன் வெளிப்பாட்டையும் தர வல்லதாகும். அதே, பெட்ரோல் வகை இரட்டை ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வு அமைப்பினை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த மில் 88.73bhp என்ற சக்திவாய்ந்த ஆற்றலையும் அத்துடன் 132Nmயும் வழங்குகிறது.

ஆக்ஸலரேஷன் மற்றும் பிக் அப்:


பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் ஆகிய இரண்டும் ஒரு நவீன ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் டீசல் வகைகள் 100 kmph என்ற வேக எல்லையை தோராயமாக 16 முதல் 17 விநாடிகளில் கடக்க வல்லதாகும். அதேநேரம், இதனால் 160 முதல் 165 kmph என்கின்ற அதிகபட்ச வேகத்தை அடைய முடியும். அதே இதன் பெட்ரோல் வகைகள் நிற்கும் நிலையில் இருந்து 15 விநாடிகளில் 100 kmph வேகத்தினை அடைய முடியும். இது இந்த வாகனம் 155 kmph என்கின்ற அதிகபட்ச வேகத்தை அடைவதைச் சாத்தியமாக்குகிறது, இது மிகவும் சிறந்த ஒன்றாகும்.

வெளிப்புறங்கள்:


இந்த புதுப்பிக்கப்பட்ட வகையின் வெளிப்புறத்தோற்றம் இதற்கு முந்தைய மாடலைப் போன்றுதான் இருக்கிறது. எனினும், இதன் புத்தம்புதிய ரேடியேட்டர் கிரில், இதற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட தோற்றத்தை அளிக்கிறது. இதற்கு ஒரு பிரத்யேகமான தோற்றத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கார் உற்பத்தியாளர்கள் இந்த கிரில்லை கிரோம் கொண்டு இழைத்துள்ளனர். மேலும் இதில் நிறுவனத்தின் லோகோ இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் அடிப்படை வகை ஒரு பாடி நிறத்திலான கிரில்லைப் பெற்றுள்ளது. அத்துடன் மட்டுமல்லாமல், இதன் வெளிப்புறத்திற்கு எந்தவிதமான புதுப்பித்தலும் வழங்கப்படவில்லை. இதன் முகப்புவிளக்கு தொகுதி பெரியதாக இருப்பதுடன் ஹாலோஜன் முகப்புவிளக்குகள் மற்றும் திரும்புவதற்கான இன்டிகேட்டர்களையும் கொண்டுள்ளது. இதன் முன்பக்க பாடி நிறத்திலான பம்பர் படுக்கை நிலையில் பொருத்தப்பட்ட பட்டைகளுடன் ஒரு பெரிய காற்று டேமைக் கொண்டு. இதன் உயர்ரக வகைகளில் ஒரு ஜோடி பனிமூட்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, அதே இதன் அடிப்படை மற்றும் நடுத்தர ரக ட்ரிம்களில் இவற்றைச் சேர்ப்பதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டு அமைப்பு மாற்றம் செய்யப்படாமல் உள்ளது எனினும் இது மதிப்புமிக்க தோற்றத்தை வழங்குகிறது. கதவு கைப்பிடிகள் மற்றும் அத்துடன் வெளிப்புற விங் மிரர்கள் பாடியின் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளன, அதே B பில்லர்கள் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. எனினும், இந்த அழகிய அனைத்து அம்சங்களும் ஆரம்பநிலை ரகத்தில் காணப்படவில்லை. உயர்ரக வகைகள் 15-அங்குல அல்லாய் சக்கரங்களில் ஒரு செட் பொருத்தப்பட்டுள்ளன, அது இதன் புதுமையான தோற்றத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. எனினும், மீதமுள்ள வகைகள் யாவும் முழு சக்கர மூடிகளைக் கொண்ட சமகால ஸ்டீல் சக்கரங்களைக் கொண்டுள்ளன. பின்புற அமைப்பும் இதற்கு முந்தைய வகையில் இருந்ததைப் போன்றே இருக்கிறது. எனினும், நீங்கள் கவனிக்கக்கூடிய ஒரே மாற்றம், இதன் பம்பர் தற்போது பார்க்கிங் சென்சார்களைப் பெற்றுள்ளது. டெயில்கேட் ஒரு படுக்கைநிலையில் உள்ள கிரோம் பட்டை பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதில் நிறுவனத்தின் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இதனைச் சுற்றிலும் பெரிய தெளிவான லென்ஸ் டெயில்கேட் தொகுதி உள்ளது, இது உயர்ந்த ஒளிரும் ஆற்றல்மிக்க பிரேக் லைட்டுகள், கர்டசி விளக்குகள் மற்றும் திரும்புவதற்கான இன்டிகேட்டர்களைக் கொண்டுள்ளது.

வெளிப்புற அளவீடுகள்:


இந்த செடான் 4265mm என்கின்ற ஒட்டுமொத்த நீளத்தையும், 1695mm என்ற மதிப்புமிக்க அகலத்தையும் (வெளிப்புற விங் மிரர்கள் உள்பட) கொண்டுள்ளது. இது 1510mm என்ற ஒட்டுமொத்த உயரத்தையும் 161mm என்ற கிரவுண்டு கிளியரென்சையும் கொண்டுள்ளது. எனினும், இந்த வாகனம் 2550mm என்ற வீல்பேசைக் கொண்டுள்ளது, இது குறிப்பிடும்படியான நீளமாகும்.

உட்புறங்கள்:


இதன் உட்புறங்களுக்கு சிறிய அளவிலான புதுப்பித்தல்கள் செய்யப்பட்டுள்ளன, இது இதற்கு ஒரு புத்துணர்வு மிக்க தோற்றத்தை அளிக்கிறது. எனினும், இதன் டேஷ்போர்டு, சாதன கிளஸ்டர் மற்றும் ஸ்டியரிங் மைய அமைப்பு இதற்கு முந்தைய மாடலில் இருந்தது போலவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இருக்கைகள் மற்றும் கதவு பேனல்கள் புதிய ஃபேப்ரிக் மேலுறைகளால் மூடப்பட்டுள்ளன. இதன் அடிப்படை வகையைத் தவிர, அனைத்து மற்ற ட்ரிம்களும் மாற்றத்தக்க முன்பக்க ஹெட் ரெஸ்ட்ரெயிண்ட்ஸ், தலையணை வகை பின்பக்க இருக்கை மற்றும் ஓட்டுனரின் இருக்கை உயரத்தை மாற்றக்கூடிய வசதி ஆகியவற்றைப் பெற்றுள்ளன. மேலும், ஏசியைச் சுற்றியுள்ள வடிதுளைகள், மைய அமைப்பு மற்றும் கியர் மாற்றும் லிவர் போன்றவை அதிகமான க்ரோம் வேலைப்பாடுகளைப் பெற்றுள்ளன, இது இதன் பிரத்யேகத்தன்மையை வலியுறுத்துகிறது. எனினும், இந்த அம்சங்கள் யாவும் இதன் உயர்ரக வகைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடுதலாக, இந்த கார் உற்பத்தியாளர்கள் இதன் VX ட்ரிம்மை ஒரு லெதர் சுற்றப்பட்ட பல்முனை-செயல்பாட்டு ஸ்டியரிங் வீலை அடிப்படை அம்சமாக வழங்கியுள்ளனர். இது ஒரு மூன்று ஸ்போக் ஸ்டியரிங் வீலைக் கொண்டுள்ளது, அது இப்போது க்ரோம் வேலைப்பாடுகளுடன் வெள்ளி நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மட்டுமல்லாமல், மீதமுள்ள அனைத்து அம்சங்களும் இதன் முந்தைய மாடலில் இருந்தது போலவே பராமரிக்கப்பட்டுள்ளன. இந்த செடான் வெளிப்புறத்தில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் கச்சிதமாக இருந்தாலும், ஒரு நீளமான வீல்பேஸின் மீது அமைக்கப்பட்டுள்ளதால் கேபினுக்குள் அதிகமான இடவசதியைக் கொண்டுள்ளது. இந்த செடானின் முக்கிய சிறப்பம்சம் இதன் 595-லிட்டர் டிக்கி பகுதியாகும், இந்த பிரிவில் இதில்தான் மிகச்சிறந்த இடவதியுள்ளது. இந்த கார் உற்பத்தியாளர் இந்த செடானை ஒரு குளிர்விக்கப்பட்ட கிளவ் பாக்ஸ், டிஜிட்டல் ட்ரிப் மீட்டர், முன்பக்க கேபின் விளக்குகள் மற்றும் கோட் கொக்கியுடன் கூடிய அசிஸ் கிரிப் உள்பட பல்வேறு பயன்பாட்டு அம்சங்களை வழங்குகின்றனர்.

உட்புற சௌகரியம்:


இந்த கார் உற்பத்தியாளர்கள் வாங்குபவர்கள் தேர்வு செய்ய வசதியாக இந்த செடான் வகையை மூன்று ட்ரிம் நிலைகளில் வழங்குகின்றனர். இப்போது, இந்த கார் உற்பத்தியாளர் இதன் உயர்ரக வகைகளை மின்சக்தி மூலமாக மாற்றக்கூடிய வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்களுடன் வழங்குகின்றனர். இதன் அறிமுக நிலை J ட்ரிம்மில் சாய்த்து சரிசெய்யக்கூடிய மின்சக்தியில் இயங்கும் ஸ்டியரிங், முன்பக்க கேபின் விளக்குகள், குளிர்விக்கப்பட்ட க்ளவ் பாக்ஸ், டிஜிட்டல் ட்ரிப்மீட்டர், ஏழு பால்டில் ஹோல்டர்கள், முன்பக்க மற்றும் பின்பக்க கதவு பாக்கெட்டுகள், ரிமோட் மூலமாக இயங்கும் எரிபொருள்-மூடி மற்றும் டெயில்கேட் திறக்கும் வசதி, இரட்டை முன்பக்க சன் வைசர்கள் மற்றும் ஒரு பகல்/இரவுப் பொழுதும் உட்புறத்திலிருந்து பின்பக்கத்தைப் பார்க்கும் கண்ணாடி ஆகிய அம்சங்களை வழங்குகின்றனர். இவை மட்டுமின்றி, இதன் நடுத்தர G வகை கோட் கொக்கியுடன் கூடிய மூன்று அசிஸ்ட் கிரிப்புகள், பயணிகளுக்கான பக்கவாட்டு சன் வைசர்கள், ஓட்டுனர் இருக்கை உயரத்தை சரிசெய்யும் வசதி, தலையணை வகை பின்பக்க ஹெட்ரெஸ்டுகள், 12V துணைப்பொருள் மின் சொருகி, மைய லாக்கிங் அமைப்பு மற்றும் ஓட்டுனர் பக்கம் தானாகவே கீழிறங்கும் அம்சத்துடன் கூடிய பவர் சாளரங்கள் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளன. இந்த கார் உற்பத்தியாளர் இதன் உயர்ரக VX ட்ரிம் வகையில் ஒரு பின்பக்க டிஃபாகர், ஒரு டேக்கோமீட்டர் மற்றும் பன்முக-செயல்பாட்டு ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை வழங்குகின்றனர்.

உட்புற அளவீடுகள்:


இந்த செடான் குறைந்தபட்சம் ஐந்து பயணிகள் அமருவதற்கான அதிகமான இடவசதியை உள்ளே கொண்டுள்ளது. இது 595-லிட்டர்கள் என்கின்ற ஒரு மிகப்பெரிய டிக்கி பகுதியைக் கொண்டுள்ளது, இது இந்த செடான் வகையில் எதிலும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இதே மற்றொருபுரம், இது 45-லிட்டர்கள் என்ற மதிப்புமிக்க இடவசதியைக் கொண்ட எரிபொருள் டேங்க்கினையும் கொண்டுள்ளது.

எஞ்சின் மற்றும் செயல்திறன்:


இதன் பெட்ரோல் வகைகள் ஒரு 1.5-லிட்டர் மின் நிலையம் பொருத்தப்பட்டுள்ளன, அவை 1496cc டிஸ்பிளேஸ்மென்ட் வழங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. இந்த DOHC அடிப்படையிலான எஞ்சின் 4-சிலிண்டர்கள் மற்றும் 16-வால்வுகளைக் கொண்டுள்ளது, அது மின்னணு இன்ஜெக்ஷன் முறை மூலமாக எரிபொருளைப் பெறுகிறது. இந்த மின் நிலையம் 5600rpm இல் 88.73bhp என்ற அதிகபட்ச சக்தியை உற்பத்தி செய்கிறது அதன் விளைவாக வெறும் 3000rpmஇல் ஒரு ஆற்றல்மிக்க 132Nm டார்க் வெளிப்பாடு ஏற்படுகிறது. அதேவேளை, இதன் டீசல் வகைகளில் ஒரு 1.4-லிட்டர் D-4D மின் நிலையம் பொருத்தப்பட்டுள்ளது, அது சாதாரண ரெயில் நேரடி இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது தனி ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வு அமைப்பின் அடிப்படையில் 4-சிலிண்டர்கள் மற்றும் 8-வால்வுகளைப் பெற்றுள்ளது. இந்த மின் 3800rpm இல் அதிகபட்சமாக 67.04bhp ஆற்றலை உற்பத்தி செய்கிறது மேலும் 1800 முதல் 2400rpm இடைப்பட்ட நிலையில் 170Nm என்கின்ற உச்சக்கட்ட முறுக்குத்திறன் வெளிப்பாட்டை வழங்குகிறது. இந்த எஞ்சின்கள் இரண்டுமே ஒரு மேம்பட்ட ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன, அது முறுக்குத்திறன் வெளிப்பாட்டை முன்பக்க சக்கரங்கள் பெற அனுமதிக்கிறது.

ஸ்டீரியோ மற்றும் துணைப்பொருட்கள்:


இந்த கார் உற்பத்தியாளர் இதன் நடுத்தர ரக மற்றும் உயர்ரக வகைகளை ஒரு வானொலி மற்றும் MP3 ப்ளேபேக்குடன் கூடிய CD பிளேயர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு 2-DIN இசை அமைப்பினை வழங்குகின்றனர். இது நான்கு ஸ்பீக்கர்களையும் மேலும் USB சாதனங்களுக்கான போர்ட்டையும் பெற்றுள்ளது. அதே இதன் உயர்ரக வகைகள் ஆடியோ ஸ்ட்ரீமிங்கிற்காக ஒரு AUX-இன் துளை மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதன் VX ட்ரிம் இப்போது ஒரு மூன்று ஸ்போக் ஸ்டியரிங் வீலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, ஆடியோ கட்டுப்பாட்டு ஸ்விட்சுகள் அதன் மீது பொருத்தப்பட்டுள்ளன. எனினும், பாங்குவர்கள் ஒருசில ஸ்டைல் வழங்கும் அம்சங்களான லெதர் இருக்கை மேலுறை, மிதியடிகள், பின்பக்க மைய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் மர வேலைப்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டு தங்களது வாகனத்தின் உட்புறங்களை பிரத்யேகமானதாக அமைத்துக் கொள்ளலாம். அதே இதன் வெளிப்புறங்கள் ஸ்டைலான பாடி டிகால்ஸ், டெக்லிட் ஸ்பாய்லர், சாளர வைசர், பக்கவாட்டு மோல்டிங்குகள், ஒரு செட் ஸ்டைலான அல்லாய் சக்கரங்கள் மற்றும் பக்கவாட்டு ஸ்கட்டுகள் ஆகிய ஸ்டைலான அம்சங்களள் கொண்டு அழகுபடுத்தப்பட முடியும். இவற்றுடன் கூடுதலாக, நேவிகேஷன் வசதியையும் உள்ளடக்கிய ஒரு தொடுதிரை தகவல் பொழுதுபோக்கு அமைப்பு மற்றும் பார்க்கிங் செய்வதற்கான இதர உதவி அமைப்புகள் போன்ற கூடுதல் அம்சங்களை தனிநபர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

சக்கரங்கள்:


இந்த வாகன உற்பத்தியாளர் இதன் அடிப்படை மற்றும் நடுத்தர வகைகளை சமகால ஸ்டீல்கள் சக்கரங்கள் ஒரு செட்டுடன் வழங்குகின்றனர், அதே இதன் உயர்ரக ட்ரிம் 15-அங்குல அல்லாய் சக்கரங்களில் ஒரு செட்டைப் பெற்றுள்ளது. இந்த ரிம்கள் 185/60 R15 என்ற அளவு கொண்ட உயர் செயல்திறன் மிக்க டியூப்லெஸ் ரேடியல் டயர்களைப் பெற்றுள்ளன.

பிரேக் போடுதல் மற்றும் கையாளுதல்:


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செடான் எந்த சீதோஷ்ண நிலையிலும் நன்றாக செயல்படக்கூடிய ஆற்றல்மிக்க பிரேக்கிங் அமைப்பு பொருத்தப்பெற்றுள்ளது. இதன் முன்பக்க சக்கரங்கள் ஒரு செட் காற்றோட்டமுள்ள டிஸ்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, அதே இதன் பின்பக்க சக்கரங்கள் வலிமையான டிரம் பிரேக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து டீசல் வகைகளும் மின்னணு பிரேக் ஆற்றல் விநியோக வசதி உள்பட ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பினைப் பெற்றுள்ளன, இது இந்த அமைப்பினை கண்டிப்பாக மேம்படுத்துகிறது. எனினும், இந்த வசதி இதன் நடுத்தர ரக மற்றும் உயர்ரக பெட்ரோல் வகைகளில் விருப்பத்தேர்வு அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்க ஆக்சில் ஒரு பெக்ஃபெர்ஸன் ஸ்டிரட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது அதே இதன் பின்பக்க ஆக்சில் டார்சன் ஒளி சஸ்பென்ஷன் அமைப்புடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது, அது இந்த செடானை நல்ல சமநிலையுடன் வைத்திருக்க உதவுகிறது. இந்த கார் உற்பத்தியாளர் ஒரு சிறப்பாக மின்சக்தியால் இயங்கும் பவர் அசிஸ்டெட் பவர் ஸ்டியரிங் அமைப்பினையும் சேர்த்துள்ளனர், இது 4.9 மீட்டர்கள் என்ற குறைந்தபட்ச திரும்பும் விட்டத்தைப் பெற உதவுகிறது.

பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மை:


இந்த செடான் மூன்று ட்ரிம் நிலைகளில் கிடைக்கிறது மேலும் இவை அனைத்திலும் முக்கியமான சொகுசு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது இந்த கார் தயாரிப்பாளர்கள் இதன் அனைத்து வகைகளிலும் இரட்டை முன்பக்க காற்றுப் பைகளை அடிப்படை அம்சமாக வழங்குகின்றனர். அறிமுகரக வகையில் கதவு அஜார் எச்சரிக்கை, ஒரு பகல்/இரவு நேரம் உட்புறமிருந்து பின்பக்கம் பார்க்கும் கண்ணாடி, ஓட்டுனரின் சீட்பெல்ட் எச்சரிக்கை மற்றும் ஒரு நவீனமான எஞ்சின் இம்மொபிலைசர் சாதனம் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளன. அதே இதன் நடுத்தர வகையில் கதவு அஜார் எச்சரிக்கை, முகப்பு விளக்கு-எரிவதற்கான அறிவிப்பு, EBD யுடன் கூடிய ABS மற்றும் சாவியில்லாமல் உள்ளே வரும் அம்சம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த கார் உற்பத்தியாளர்கள் இதன் உயர்ரக வகைகளை ஓட்டுனர் சீட்பெல்ட் எச்சரிக்கை அறிவிப்பு உள்பட முன்பக்க பயணிகளுக்கு இரட்டை SRS காற்றுப்பைகள் ஆகியவற்றுடன் வழங்குகின்றனர், இது இதன் பாதுகாப்பு அம்சத்தை மேலும் அதிகரிக்கிறது.

நேர்மறை அம்சங்கள்:1. விற்பனைக்குப் – பிந்தைய சேவை திருப்திகரமாக உள்ளது
2. பெட்ரோல் எஞ்சினின் செயல்திறன் மிகச்சிறப்பாக உள்ளது
3. பின்பக்க பார்க்கிங் சென்சார்களைச் சேர்த்திருப்பது இதற்கு நம்மையை அதிகரித்துள்ளது
4. இதன் டிக்கி சேமிப்பு அளவான 595-லிட்டர் கொள்ளளவு என்பது மிகப்பெரிய பலமாகும்.
5. விலை வாங்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

எதிர்மறை அம்சங்கள்:1. இதன் வெளிப்புறங்களுக்கு கூடுதல் புதுப்பித்தல்கள் வழங்கப்படலாம்.
2. குறைவான எரிபொருள் சிக்கனம் என்பது இதன் முக்கிய பலவீனமாகும்.
3. டீசல் எஞ்சினின் ஆற்றல் மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்படலாம்.
4. கிரவுண்டி கிளியரென்ஸ் மேம்படுத்தப்படலாம்.
5. தானியங்கு டிரான்ஸ்மிஷன் தேர்வு ஒரு எதிர்மறையான விஷயமாகும்.