டொயோட்டா கொரோலா-ஆல்டிஸ்

` 14.3 - 19.5 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 


சிறப்பம்சங்கள்:


ஏப்ரல் 22, 2015: டெயோட்டா நிறுவனம் சீனாவில் தற்போது நடைபெற்றுவரும் 2015 ஆட்டோ ஷங்காயில் கொரோலா ஹைப்ரிட் காரினை முதன் முறையாக ஜப்பானுக்கு வெளியே வெளிக்காட்டியுள்ளது. இந்த வாகனம் டெயோட்டா FAW கூட்டு முயற்சியில் உற்பத்தி செய்யப்படும் மேலும் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். கடந்த வாரத் துவக்கத்தில், கொரோலா ஆக்ஸியோ மற்றும் கொரோலா ஃபீல்டருக்கு ஜப்பானில் உள்ள JNCAP தடுப்புப் பாதுகாப்பு செயல்திறன் மதிப்பீட்டின் மூலமாக உயர்ந்த ASV+ (மேம்பட்ட பாதுகாப்பு வாகனம்) என்ற மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டொயோட்டா சேஃப்ட்டி சென்ஸ் C மோதல் தடுப்பு பேக்கேஜை கார்களில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருப்பதை ஒரு வகையில் இந்த சாதனைக்கு காரணமாகக் கூறலாம். இந்த தடுப்புப் பாதுகாப்பு செயல்திறன் மதிப்பீடு மோதல் தடுப்பு மற்றும் மோதல் சேதத்தினைக் குறைக்கும் திறனிலும், மேலும் செல்லும் சாலை வழித்தடத்தைக் கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அளிக்கும் ஆற்றல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

தொகுப்பு:


TKMPL (டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட்) கார் சந்தையில் மிகச் சிறப்பாக விற்பனையாகும் செடான்களில் ஒன்றான கோரோலா ஆல்டிசின் புதிய வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்கோடா ஆக்டேவியா, ஹுண்டாய் எலாண்ட்ரா, ஃபோல்க்ஸ்வேகன் ஜெட்டா மற்றும் இந்த பிரிவில் உள்ள பிற வகைகளுடன் போட்டியிடும். இது 11வது ஜெனரேஷன் மாடலாகும் மேலும் நேவிகேஷன் அமைப்புடன் கூடிய 7.1-அங்குல தொடு திரை ஆடியோ, ECO டிரைவ் இன்டிகேட்டர் மற்றும் வேகக் கட்டுப்பாட்டு இயக்கம் போன்றவை உள்பட பல்வேறு புதுமையான அம்கங்களுடன் வருகிறது. ஓட்டுனரின் வசதிக்காக இந்த கார் உற்பத்தியாளர்கள் பொத்தானை அழுத்துவதன் மூலம் துவக்கும்/நிறுத்தும் வசதியுடன் கூடிய ஒரு ஸ்மார்ட் எண்ட்ரி அமைப்பையும் வழங்குகிறார்கள். இந்த வாகனத்தின் வெளிப்புறங்கள் மற்றும் உட்புறங்கள் சில முக்கியமான புதுப்பிக்கப்பட்ட அமைப்புகளுடன் வருகின்றன, அவை இதன் ஒட்டுமொத்த தோற்றத்தையே முழுமையாக மாற்றியமைத்துள்ளன. வெளிப்புறங்களைப் பொறுத்தவரை, இது மாற்றி வடிவமைக்கப்பட்ட முகப்புவிளக்கு தொகுதியைக் கொண்டுள்ளது. அதில் பகல்பொழுதில் இயங்கும் LED விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மற்றொரு ஸ்டைல் மிக்க அம்சம் ஒரு செட் நவீனமான மல்ட்டி-ஸ்போக் அல்லாய் சக்கரங்களாகும் (இதன் அடிப்படை வகையைத் தவிட மற்றவற்றில்), அது இதன் பக்கவாட்டுப் பகுதிகளுக்கு ஒரு பிரத்யேகமான தோற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த புத்தம்புதிய வகை மேம்படுத்தப்பட்ட 100mm வீல்பேஸுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது போதுமான அளவுக்கு காலுக்கான மற்றும் தோள் பகுதிக்கான இடவசதியையும் வழங்குகிறது. மேலும் இதன் நீளம், அகலம் மற்றும் உயரத்தில் ஒருசில மாற்றங்களுடன் வருகிறது, அதன் காரணமாக இந்த கார் இதற்கு முந்தையவற்றைக் காட்டிலும் பெரியதான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் உட்புறங்களைப் பொறுத்தவரை, இதன் டேஷ்போர்டு ஒரு மறுவடிவமைக்கப்பட்ட மைய தொகுதியுடன் புதிய வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. இந்த கார் உற்பத்தியாளர்கள் இதன் கியர்ஷிஃப்ட் தொகுதியையும் புதுப்பித்துள்ளனர் மேலும் இது நிறைய உலோக வேலைப்பாடுகளையும் சேர்க்கப்பெற்றுள்ளது, இது ஒரு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. இதன் உட்புற பகுதி பெய்ஜ் மற்றும் பியானோ கருப்பு நிற அமைப்புடன், லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல், அதன் மீது அமைக்கப்பட்ட ஆடியோ மற்றும் அழைப்புக் கட்டுப்பாட்டு பொத்தான்கள், க்ரோம் பூச்சுள்ள உட்புற கதவு கைப்பிடிகள் மற்றும் இது போன்ற பல்வேறு இதர அம்சங்களுடன் வருகிறது. அனுமதியின்றி மற்றவர் வாகனத்திற்குள் நுழைவதைத் தடுக்க ஒரு மேம்பட்ட அலாரத்துடன் கூடிய எஞ்சின் இம்மொபிலைசரைப் பெற்றுள்ளது. அதுவே, இதன் உயர்ரக வகையில் கேமராவுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன இது வாகனத்தின் பாதுகாப்பு அம்சத்தினை மேம்படுத்துகிறது. வாங்குபவர்கள் தேர்வு செய்யக்கூடிய வகையில் இது ஐந்து பெட்ரோல் மற்றும் நான்கு டீசல் வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, அவற்றின் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் அவற்றின் அமைப்புகளில் எந்தவிதமான புதுப்பித்தல்களும் இல்லாமல் அப்படியே பராமரிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் வகைகள் ஒரு 1.8-லிட்டர், 2ZR-FE எஞ்சினைப் பெற்றுள்ளது, இது 138.08bhp மற்றும் அத்துடன் 173Nm என்ற உச்ச முறுக்குத்திறனை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. அதே இதன் டீசல் வகை 1364cc டிஸ்பிளேஸ் செய்யக்கூடிய ஒரு 1.4-லிட்டர், D-4D டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் மில் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்ச மறுக்குத்திறன் வெளிப்பாடான 205Nm உடன் அதிகபட்ச ஆற்றலான 87.1bhp சக்தியை வெளிப்படுத்த வல்லதாகும். இந்த இரண்டு எஞ்சின்களுமே ஒரு அறு வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்சுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன, அதேவேளை இரண்டு பெட்ரோல் ட்ரிம்கள் ஒரு சூப்பர் CVT-i, 7-வேக தானியங்கு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. நிறுவனம் இந்த மாதிரி வகைகளை 3-ஆண்டுகள் அல்லது 100000 கிலோமீட்டர்கள், இவற்றில் எது முன்னே வருகிறதோ அது என்கின்ற நிர்ணயிக்கப்பட்ட வாரண்டியுடன் வழங்குகின்றனர். வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலமாக ஒரு விரிவுபடுத்தப்பட்ட வாரண்டியையும் பெற முடியும்.

மைலேஜ்:


பெட்ரோல் வகைகள் ஒரு 1798cc எஞ்சினைப் பெற்றுள்ளன, இவை ஒரு EFI (மின்னணுசார் எரிபொருள் இன்ஜெக்ஷன்) விநியோக அமைப்பினைக் கொண்டுள்ளது, இது நகர்புற போக்குவரத்து நெரிசல் சூழ்நிலைகளில் 9.5 Kmpl வழங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது மேலும் நெடுஞ்சாலைகளில் இது ஏறக்குறைய 14.53 Kmpl மைலேஜை வழங்க முடியும். அதே இதன் தானியங்கு ட்ரிம்கள் அதிகபட்ச மைலேஜான 13.5 Kmplஐ வழங்க முடியும். அதே மற்றொருபுரம், டீசல் வகை ஒரு 1364cc எஞ்சினால் ஆற்றலைப் பெறுகிறது, இதில் ஒரு சாதாரண ரெயில் நேரடி இஞ்செக்ஷன் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்த செடானுக்கு நகர்புற எல்லைக்குள் 18.4 Kmpl மற்றும் பெரிய சாலைகளில் 21.43 Kmpl என்ற மைலேஜை வழங்குவதை சாத்தியமாக்குகிறது, இதற்கு ARAI (ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) மூலமாக அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளின் எரிபொருள் டேங்கின் கொள்ளளவு முறையே 55 மற்றும் 50 லிட்டர்களாகும், இது நீண்டதூர பயணங்களைத் திட்டமிட உதவி செய்கிறது.

ஆற்றல்:


இந்த 1.8-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6400rpm இல் அதிகபட்சமாக 138.08bhp ஆற்றலை உருவாக்க வல்லது அத்துடன் சேர்த்து 4000rpmஇல் 173Nm என்ற சக்திமிக்க முறுக்குத்திறன் வெளிப்பாட்டினை உருவாக்குகிறது. அதேவேளை, இதன் டீசல் ட்ரிம் 1.4-லிட்டர் D-4D மின்நிலையம் ஒரு டர்போசார்ஜிங் அமைப்பினையும் பெற்றுள்ளது. இந்த எஞ்சின் 3800rpm இல் 87.1bhp ஆற்றலை உருவாக்க வல்லது இதன் விளைவாக 1800 முதல் 2800rpm க்கு இடையில் அதிகபட்ச முறுக்குத்திறனான 205Nm வழங்குகிறது, இது இந்த வாகனத்தை நகர்புற சாலை சூழ்நிலைகளுக்கும் ஏற்றதாக்குகிறது.

ஆக்ஸலரேஷன் மற்றும் பிக் அப்:


இதன் 1.8-லிட்டர் பெட்ரோல் மோட்டார் ஒரு ஆறு வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது இந்த எஞ்சினை அதிகபட்ச வேகமான 190 Kmph வேகத்தில் துரிதமாகசெல்ல அனுமதிக்கிறது. இதனால் நின்ற நிலையில் இருந்து 100 Kmph வேக எல்லையை 11 முதல் 13 விநாடிகளில் கடக்க முடியும். அதுவே இதன் தானியங்கு வகைகள் (7-வேக டிரான்ஸ்மிஷனுடன்) ஏறக்குறைய 10.42 விநாடிகளிலேயே 0-100 Kmph என்ற அளவுக்கு வேகத்தை அதிகரிக்க முடியும் மேலும் 205 Kmph என்கின்ற அதிகபட்ச வேகத்தை அடைய முடியும், இந்த வேகம் இந்த பிரிவில் ஒரு சாதனையளவாகும். இதன் டீசல் வகை ஒரு 1.4-லிட்டர் எஞ்சினின் சக்தியைப் பெற்றுள்ளது அத்துடன் அதே ஆறு வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்சையும் பெற்றுள்ளது. இது 13 முதல் 14 விநாடிகளில் 0 முதல் 100 Kmph என்ற வேக எல்லைக்குச் அதிகரிக்க உதவி செய்கிறது. அதே நேரம், அது இந்த செடானை 160 முதல் 170 Kmph என்கின்ற அதிகபட்ச வேகத்தை அடையக்கூடிய ஆற்றலைத் தருகிறது.

வெளிப்புறங்கள்:


டெயோட்டா கோரோல்லா ஆட்டிசின் 2014 வகை ஸ்டைல் மிக்க அம்சங்களுடன் ஒரு புத்தம் புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளது மேலும் ஒரு ஏரோடைனாமிக் உடற்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்த செடானில் உள்ள மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் இதன் கவர்ச்சிமிக்க முன்பக்க வடிவமைப்பாகும். அது ஒரு பெரிய வின்ட்ஸ்கிரீனுடன் வருகிறது, மேலும் அவற்றுக்கிடையே நேரத்தை மாற்றியமைக்கக்கூடிய தன்மை கொண்ட ஒரு ஜோடி வைப்பர்களைக் கொண்டுள்ளது. இதன் உயர்ரக ட்ரிம் தானியங்கு மழை உணரும் வைப்பர்களையும் பெற்றுள்ளது. இதன் அழுத்தமான ரேடியேட்டர் கிரில் சில கிரோம் ஸ்லேட்டுகளைப் பெற்றுள்ளது மேலும் ஒரு தெளிவான நிறுவன லோகோவும் இதன் மையப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது சக்திமிக்க ஹாலோஜன் விளக்குகள் மற்றும் பக்கவாட்டில் திரும்பும் இன்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முகப்புவிளக்கு தொகுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உயர்ரக வகைகள் தானியங்கு LED முகப்புவிளக்குகள் மற்றும் பகல் நேரம் இயங்கும் விளக்குகளையும் பெற்றுள்ளன. இதன் பம்ப்பருக்கு இதன் பாடியின் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் எஞ்சினை குளிர்விப்பதற்காக ஒரு விரிவான காற்று உள்வாங்கும் பிரிவினைக் கொண்டுள்ளது மேலும் பாடி நிறத்தினைக் கொண்ட அடிப்பகுதி-கார்டையும் இது பெற்றுள்ளது. இதன் ஏர் டேம் ஒரு ஜோடி ஒளிமிக்க பனிமூட்ட விளக்குகளால் சூழப்பட்டுள்ளது ஆனால் இதன் அடிப்படை வகையில் இந்த அம்சம் காணப்படவில்லை. இதன் முன்பகுதி நிறைய க்ரோம் உலோக பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளது அது இதற்கு ஒரு மதிப்புமிக்க தோற்றத்தை வழங்குகிறது. இதன் பக்கவாட்டுத் அமைப்பு உறுதிமிக்க இதன் கோடுகள் மற்றும் கருப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள விண்டோ சில் ஆகியவற்றால் விளக்கப்படுகிறது. கதவின் கைப்பிடிகள் மற்றும் வெளிப்பக்கமுள்ள பின்புறம் காணும் கண்ணாடிகள் ஆகியவை பாடியின் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளன. வெளிப்புற விங் மிரர்கள் மின்சக்தி மூலமாக மாற்றக்கூடியவை மேலும் பக்கவாட்டில் திரும்பும் ப்ளிங்கருடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. J மற்றும் JS வகைகளின் சக்கர ஆர்ச்சுகள் முழு சக்கர மூடிகளைக் கொண்ட சக்திமிக்க ஸ்டீல் சக்கரங்களின் ஒரு செட்டைக் கொண்டுள்ளன. அதுவே, மற்ற ட்ரிம்கள் அழகுமிக்க பல-ஸ்போக்குகளைக் கொண்ட அல்லாய் சக்கரங்களின் ஒரு செட்டைப் பெற்றுள்ளன, அது இந்த வாகனத்தின் பக்கவாட்டு அமைப்பிற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. இதன் பின்பக்க அமைப்பு ஒரு புத்தம்புதிய டெயில்லைட் தொகுதியுடன் முக்கிய மாற்றத்தைப் பெற்றுள்ளது மேலும் ஒரு புதுவடிவம் கொண்ட டிக்கி மூடியைக் கொண்டுள்ளது, அது ஒரு அடர்த்தியான கிரோம் வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. இது மாடல் பேட்ஜுடன் ஒரு கிரோம் பிளேட் செய்யப்பட்ட நிறுவனத்தின் அடையாளமும் பொறிக்கப்பட்டுள்ளது, இதன் தோற்றப் பொலிவிற்கு இது மேலும் வலு சேர்க்கிறது. பாடி நிறத்திலான பம்ப்பரில் ஒரு ஜோடி ரிஃப்லெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பெரிய விண்ட்ஸ்கிரீன் ஒரு டீஃபாகருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மேலும் அதில் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு நிறுத்த விளக்கும் உள்ளது.

வெளிப்புற அளவீடுகள்:


பெரிய வீல்பேஸ் 2700mm ஆக உள்ளது. இது கேபினுக்குள்ளே போதுமான அளவுக்கு கால் இடவசதியை அளிக்கிறது. இதன் குறைந்தபட்ச கிரவுண்டு கிளியரன்ஸ் 175mm ஆகும். இதன் ஒட்டுமொத்த நீளம் 4620mm அத்துடள் ஒட்டுமொத்த உயரம் 1475mm மேலும் 1775mm என்ற நல்ல அகலத்தையும் கொண்டுள்ளது, இதில் இரண்டு வெளிப்புற பின்பக்கம் காணும் கண்ணாடிகளும் அடங்கும். இது 470 லிட்டர்களைக் கொண்ட ஒரு இடவசதிமிக்க டிக்கி பிரிவையும் கொண்டுள்ளது, இதனை பின்பக்க இருக்கையை மடக்குவதன் மூலம் அதிகரிக்க முடியும். இதன் ஸ்டியரிங் வீல் 5.4 மீட்டர்கள் என்ற குறைந்தபட்ச திரும்பும் விட்டத்தைக் கொண்டுள்ளது.

உட்புறங்கள்:


இந்த டொயோட்டா கொரெல்லா ஆல்டிஸ் வகையின் உட்புற கேபின் இரட்டை நிற (பெய்ஜ் மற்றும் கருப்பு) அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அதிகமான க்ரோம் பாகங்களும் சேர்க்கப்பட்டிருப்பது இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது. இதன் மெல்லிய டேஷ் போர்டு ஏசி வடிதுளைகள், தகவல் பொழுதுபோக்கு அமைப்பு, ஒரு பெரிய கிளவ் பாக்ஸ் மற்றும் பன்முனை ஸ்விட்சுகள் மற்றும் வெள்ளி நிறத்திலான உலோக வேலைப்பாடுகளைக் கொண்ட ஒரு லெதர் சுற்றப்பட்ட ஸ்டியரிங் வீல் ஆகிய புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு திருத்தியமைக்கப்ப்ட சாதன தொகுதியினையும் பெற்றுள்ளது, இது சமகால வகையைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது டிஜிட்டல் டேக்கோமீட்டர், பன்முக-ட்ரிப்மீட்டர், எரிபொருள் குறைவாக இருப்பதற்கான எச்சரிக்கை விளக்கு, ஸ்பீடோமீட்டர், டோர் அஜார் எச்சரிக்கை, டிஜிட்டர் கடிகாரம் மற்றும் ஓட்டுனருக்கு தெரிவிப்பதற்கான இன்னும் பல தகவல்களை தன்னிடத்தில் கொண்டுள்ளது. இதில் நல்ல மெத்தென்ற இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன, இவை ஒழுங்குபடுத்தக்கூடிய தலை சாய்த்துக்கொள்ளும் அமைப்புடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. JS மற்றும் GL வகைகளின் இருக்கைகள் ஃபேப்ரிக் மேலுறைகளால் மூடப்பட்டுள்ளன, அதேநேரம் உயர்ரக ட்ரிம்கள் பிரிமியம் லெதர் இருக்கைகளைப் பெற்றுள்ளன. ஓட்டுனர் இருக்கை ஒரு லம்பார் சப்போர்ட்டுடன் மின்னாற்றல் மூலமாக 8-வகையில் ஒழுங்குபடுத்தக்கூடிய செயல்முறையைப் பெற்றுள்ளது. உள்பக்க கேபின் அதிகமான க்ரோம் வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது, முக்கியமாக இதன் இதன் மைய கன்சோல், ஸ்டியரிங் வீல், கியர் நாப் மற்றும் கதவு கைப்பிடிகள் ஆகியவற்றில் அவற்றைக் கொண்டுள்ளது, இது கேபினுக்கு ஒரு எழில்மிகு தோற்றத்தை அளிக்கிறது. இது ஒரு சேமிப்பகத்துடன் கூடிய முன்பக்க தனிநபர் விளக்கு, மின்னியக்க பவர் ஸ்டியரிங், ECO டிரைவ் இன்டிகேட்டர், படிக்கும் விளக்குகள் மற்றும் பின்பக்க சன்ஷேடு ஆகிய ஒருசில சொகுசு அம்சங்களைப் பெற்றுள்ளது.

உட்புற வசதி:


இந்த செடானில் அனைத்து வகைகளும் புதுமையான வசதி அம்சங்களின் ஒரு செட்டைப் பெற்றுள்ளது, அது தங்களது பயணம் முழுவதையும் பயணிகள் மிகவும் சௌகரியமாக செய்ய வழிவகுக்கிறது. இது ஒரு நவீன இன்-டேஷ் 5.8-அங்குல DVD பிளேயருடன் கூடிய தொடுதிரை ஆடியோ காட்சித்திரையைக் கொண்டுள்ளது, மேலும் இது USB போர்ட் மற்றும் ஆக்ஸ்-இன் சாக்கெட்டையும் பெற்றுள்ளது. இவற்றுடன் அடிப்படை வகையில் நான்கு ஸ்பீக்கர்கள் உள்ளன மேலும் மற்ற ட்ரிம்களில் ஆறு ஸ்பீக்கர்கள் உள்ளன. இதன் உயர்ரக (VL) ட்ரிம் நேவிகேஷன் அமைப்புடன் கூடிய 7.0-அங்குல தொடுதிரை காட்சித்திரையைப் பெற்றுள்ளது. அடிப்படை வகை ஒரு கைமுறை HVAC யூனிட்டைப் பெற்றுள்ளது, அதே நேரம் மற்ற வகைகள் கேபினை விரைவாக குளிர்விக்கக்கூடிய ஒரு தானியங்கு குளிர்சாதன அமைப்பினைப் பெற்றுள்ளது. மேம்பட்ட காற்று சுழற்சிக்காக ஏசி வடிதுளைகள் செவ்வக வடிவில் உள்ளன மேலும் டேஷ்போர்டின் இரண்டு முனைகளிலும் பொருத்தப்பட்டுள்ளன. உயர்ரக ட்ரிம்மில் மட்டும் வேகக் கட்டுப்பாட்டு இயக்கம் உள்ளது. முன்பக்க சேமிப்பு வசதியுடன் கூடிய தனிநபர் விளக்கு, கப் ஹோல்டருடன் கூடிய பின்பக்க மைய ஆர்ம்ரெஸ்ட், டோர் மேட் பாக்கெட்டுகள், முன்பக்க இருக்கையின் பின்புற பாக்கெட்டுகள் மற்றும் ஒரு பெரிய கிளவ் பாக்ஸ் என்று இந்த வகைக்கு பல்வேறு சேமிப்பு இடவசதியை நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மைய கன்சோலில் மொபைல்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக ஒரு ஜோடி 12V மின் துளைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பன்முனை-செயல்பாட்டு ஸ்டியரிங் வீல் மேல் ஆடியோ, க்ரூஸ் மற்றும் அழைப்புக் கட்டுப்பாட்டு பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாய்க்கக்கூடிய மற்றும் டெலெஸ்கோப்பிக் மாற்றத்தக்க ஸ்டியரிங் வீல் கையாள்வதை மிகவும் சுலபமாக்குகிறது. இவை மட்டுமல்லாமல், இது ஓட்டுனர் பக்கத்தில் தானியக்க முறையில் கீழே செல்லத்தக்க சாளரம் உள்பட நான்கு பவர் சாளரங்கள், ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி, உள்பக்கம் அமைந்துள்ள ஆன்டி-கிளார் பின்பக்கத்தைப் பார்க்கும் கண்ணாடி, ரிமோட்டில் இயங்கும் எரிபொருள் மூடி மற்றும் டெயில் கேட் ஓப்பனர், மின்சக்தி மூலமாக மாற்றத்தக்க வெளிப்பக்கமுள்ள பின்பக்கம் பார்க்கும் கண்ணாடிகள், சிகரெட் லைட்டர், சன்கிளாஸ் ஹோல்டர், பின்பக்க டிஃபாகர், மைய லாக்கிங் அமைப்பு மற்றும் சாவியில்லாமல் உள்ளே செல்லும் வசதி என்பன போன்ற அம்சங்கள் பொருத்தப்பெற்று வருகின்றன.

உட்புறு அளவீடுகள்:


இந்த மாடல் வகைகள் மேம்பட்ட கால் தோள் மற்றும் தலைப்பகுதி இடவசதியுடன் கூடிய பெரிய கேபினைக் கொண்டுள்ளன. இந்த கார் உற்பத்தியாளர் இதன் வீல்பேஸை 100mm அதிகரித்து தற்போது மொத்தம் 2700mm என்று ஆக்கியுள்ளனர், இது கேபினுக்குள் போதுமான அளவுக்கு காலுக்கான இடவசதியை வழங்கியுள்ளது. இது ஒரு இடவசதிமிக்க டிக்கி பிரிவைக் கொண்டுள்ளது, பின்பக்க சீட்டை மடக்குவதன் மூலமாக இதனை மேலும் அதிகரிக்கலாம்.

எஞ்சின் மற்றும் செயல்திறன்:


பெட்ரோல் வகைகள் ஒரு டீயூவல் VVT-i தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சக்திமிக்க 1.8-லிட்டர் மின்நிலையத்தைப் பெற்றுள்ளது. இது DOHC அடிப்படையிலான வால்வு அமைப்பினைப் பயன்படுத்தி 4-சிலிண்டர்கள் மற்றும் 16-வால்வுகளுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இது 1798cc டிஸ்பிளேஸ்மென்ட்டை வழங்கக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது மேலும் 6400rpm இல் 138.08bhp என்ற அதிகபட்ச சக்தி வெளிப்பாட்டையும் அத்துடன் சேர்த்து 4000rpmஇல் 173Nm என்ற அதிகபட்ச முறுக்குதிறனையும் வழங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது. இந்த பெட்ரோல் மோட்டார் புத்திசாலித்தனமாக 6-வேக கைமுறை மற்றும் 7-வேக சூப்பர் CVT-I சீக்வென்ஷியல் ஷிஃப்ட்மேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் ஆகிய இரண்டுடனும் இணைக்கப்பட்டுள்ளது, இது எஞ்சின் ஆற்றலை முன்பக்க சக்கரங்களுக்கு அனுப்புகிறது. டீசல் ட்ரிம் ஒரு ஆற்றல்மிக்க 1.4-லிட்டர் D-4D எஞ்சினைப் பெற்றுள்ளது, இது 1364cc டிஸ்பிளேஸ்மென்ட் ஆற்றலுடன் வருகிறது. இதில் ஒரு டர்போசார்ஜர் மற்றும் இன்டர்கூலர் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன, இது இதன் வாழ்நாளை அதிகரிக்கிறது. இதனால் 3800rpm இல் 87.2bhp ஆற்றலை உருவாக்க முடியும், அதன் விளைவாக 1800 முதல் 2800rpm இடைப்பட்ட நிலையில் ஒரு அதிகபட்ச முறுக்குத்திறன் வெளிப்பாடான 205Nm ஏற்படுகிறது. இந்நிறுவனம் மிகவும் திறமையாக இந்த டீசல் மில்லை ஒரு 6-வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்சுடன் இணைத்துள்ளது.

ஸ்டீரியோ மற்றும் துணைப்பொருட்கள்:


இந்த புதிய வகையை இந்த உற்பத்தியாளர்கள் ஒரு மேம்பட்ட தகவல் பொழுதுபோக்கு அமைப்புடன் வழங்குகின்றனர். அது CD/MP3 பிளேயர், வானெலி ஆகியவற்றை இயக்குகிறது மேலும் ஆக்ஸ்-இன் போர்ட் மற்றும் USB துளைகளுக்கும் இணைப்பினை வழங்குகிறது. மேலும் இது ப்ளூடூத் இணைப்பையும் இயக்குகிறது, இதனால் பயன்படுத்துவோரால் தங்களது தொலைபேசிகளை இத்துடன் இணைத்து அழைப்புகளை செய்ய முடியும். இதன் அடிப்படை வகை ஒரு 5.8-அங்குல LCD தொடுதிரை காட்சியமைப்பினைப் பெற்றுள்ளது, அதுவே மற்ற ட்ரிம் ஒரு 7.1-அங்குல தொடுதிரை ஆடியோ அமைப்பினைப் பெற்றுள்ளது அது நேவிகேஷன் அமைப்பாகவும் செயல்படுகிறது. இதன் உயர்ரக வகைகள் ஒரு பின்பக்கம் பார்க்கும் கேமராவுடன் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களையும் பெற்றுள்ளது, இது பார்க்கிங் செய்யும்போது ஓட்டுனருக்கு தலைசிறந்த உதவியை அளிக்கிறது. அடிப்படை வகை பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் வாங்குபவர்கள் ஒரு அழகிய இருக்கை உறைகள், பிரிமியம் தரத்திலான மேலுறைகள், மிதியடிகள், பின்பக்க பார்க்கிங் கேமரா, நேவிகேஷன் அமைப்பு, மட்கார்டு கவர்கள், படி கிராஃபிக்ஸ் மற்றும் அல்லாய் சக்கரங்கள் என்று பல்வேற உற்சாகமான அம்சங்களைக் கொண்டு தங்களது விருப்பத்தைப் போல் அமைத்துக் கொள்ளலாம்.

சக்கரங்கள்:


இந்த கார் தயாரிப்பாளர்கள் டொயோட்டா கொரெல்லா ஆல்டிஸ் மாடல் வகையின் உயர்ரகத்தில் ஸ்டைல் மிக்க 16 அங்குல பன்முனை ஸ்போக்குள்ள அல்லாய் சக்கரங்களை வழங்குகிறது. அவை உயர் செயல்திறன் மிக்க டியூபில்லாத டயர்களைக் கொண்டுள்ளன. மேலும் இந்த ரிம்கள் 205/55 R16 அளவுள்ள டியூபில்லாத ரேடியல் டயர்களால் மூடப்பட்டுள்ளன. இதன் J மற்றும் JS ட்ரிம்கள் ஒரு செட் 15 அங்குல ஸ்டீல் சக்கரங்களைப் பெற்றுள்ளன, இவற்றில் முழு சக்கர மூடிகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள வகைகள் யாவும் ஒரு செட் 15 அங்குல அல்லாய் சக்கரங்களைப் பெற்றுள்ளன. இந்த ரிம்கள் எந்த சாலையிலும் செல்லும் ஆற்றல் பெற்ற 195/65 R15 அளவுள்ள டியூபில்லாத ரேடியல் டயர்களில் ஒரு செட்டைப் பெற்றுள்ளன, இது சாலைகளில் சிறந்த படிமானத்தை அளிக்கிறது மேலும் வாகனத்தை ஸ்திரமாக வைக்கிறது.

பிரேக் போடுதல் மற்றும் கையாளுதல்:


இந்த வாகன உற்பத்தியாளர்கள் இதன் புதிய வகையை ஒரு ஆற்றல் மிக்க பிரேக்கிங் அமைப்புடன் வழங்கியுள்ளனர். முன்பக்க சக்கரங்களில் ஒரு செட் காற்றோட்டமான டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன, அதே இதன் பின்பக்கத்தில் சமகால டிஸ்க் பிரேக்குகள் ஒரு செட் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பு மற்றும் மின்னணு பிரேக் ஆற்றல் விநியோக அமைப்பையும் பெற்றுள்ளது. இந்த செடான் மின்னணு ஸ்திரத்தன்மை அமைப்பையும் பெற்றுள்ளது, அது இதன் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துகிறது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பினைப் பார்க்கும்போது, அது மிகவும் ஆற்றல் மிக்கதாகவும் வாகனத்தை சமநிலையில் வைத்திருப்பதாகவும் உள்ளது. முன்பக்க ஆக்சிலில் மெக்பெர்சன் ஸ்டிரட் பொருத்தப்பட்டுள்ளது மேலும் பின்பக்கத்தில் ஒரு முறுக்கு ஒளி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சாலைகளில் ஏற்படக்கூடிய அனைத்து அதிர்வுகளையும் கையாள உதவுகிறது மேலும் ஒரு சௌகரியமான ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது. இதில் மிகவும் சிறப்பாக இயங்கக்கூடிய மின்சக்தியில் இயங்கக்கூடிய ஸ்டியரிங் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதில் சாய்த்தல் மற்றும் டெலெஸ்கோப்பிக் சரிசெய்யும் அமைப்பும் இடம்பெற்றுள்ளது, அது 5.4 மீட்டர்கள் என்கின்ற குறைந்தபட்ச திருப்பும் விட்டத்தைக் கொண்டிருக்கும் அதே வேளை மென்மையான முறையில் கையாளவும் உதவியாக இருக்கிறது.

பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மை:
இதில் உள்ளவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இந்த மாடல் வகைகளில் அதிகமான எண்ணிக்கையில் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர் மற்றும் சக-பயணிக்கு இரட்டை நிலையைக் கொண்ட முன்பக்க காற்றுப்பைகள் உள்ளன, ஒருவேளை விபத்து நடந்தால் இவை அவர்களுக்கு பாதுகாப்பினை அளிக்கின்றன. இது மின்னணு பிரேக் ஆற்றல் விநியோக அமைப்புடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் அமைப்புடன் வருகிறது, இது இதன் பிரேக் அமைப்பினை மேம்படுத்துகிறது மேலும் வாகனம் சறுக்குவதைத் தடுக்கிறது. இதன் மின்னணு எஞ்சின் இம்மொபிலைசர் அமைப்பு வாகனத்திற்குள் அனுமதியின்று நுழைவதைத் தடுக்கிறது. இவற்றுடன் கூடுதலாக, இது ஒரு மைய லாக்கிங் அமைப்பு, உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது பிரேக் விளக்கு, கதவு அஜார் எச்சரிக்கை விளக்கு மற்றும் ஓட்டுனர் சீட்பெல்ட் அறிவிப்பு ஆகியவற்றையும் பெற்றுள்ளது.

நேர்மறை அம்சங்கள்:1. அதிகரிக்கப்பட்டுள்ள வீல் பேஸினால் கேபின் இடவசதி அதிகரித்துள்ளது
2. இதன் வசதி அம்சங்கள் யாவும் மற்ற போட்டியாளர்களுக்கு இணையாக உள்ளது.
3. வசதிமிக்க உட்புற வடிவமைப்பு ஒரு பெரிய பலம்.
4. பெட்ரோல் எஞ்சினின் செயல்திறன் மிகவும் அற்புதமாக உள்ளது.
5. பாடியில் உள்ள மெல்லிய மற்றும் வசீகரமான கோடு இதன் நேர்மறை அம்சத்திற்கு வலு சேர்க்கிறது.

எதிர்மறை அம்சங்கள்:1. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் ஆகிய இரண்டின் எரிபொருள் சேமிப்பு மேம்பட வேண்டும்.
2. இன்னும் ஒருசில அம்சங்களை சேர்க்க முடியும்.
3. எந்த எஞ்சினுக்கும் எந்தவிதமான மேம்பாடும் செய்யப்படவில்லை.
4. கிரவுண்டு கிளியரென்ஸ் மிகவும் தாழ்வாக உள்ளது.
5. விலை மிகவும் போட்டிமிக்கதாக இல்லை.