டாடா Tiago

` 3.2 - 5.7 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

Other Car Models of டாடா

 
*Rs

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


ஏப்ரல் 06, 2016: டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது புதிய ஹாட்ச் பேக் காரான டியாகோ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்ட்டின் ஆரம்ப விலையை ரூ. 3.20 லட்சங்கள் என்றும், டீசல் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ. 3.94 லட்சங்கள் (எக்ஸ் ஷோரூம், புது டில்லி) என்றும், விலை நிர்ணயித்துள்ளது. இந்திய சந்தையில். டியாகோ இப்போதுதான் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இதற்கு முன்னரே ரூ. 10,000 கொடுத்து, பலர் இந்த காரை முன்பதிவு செய்துவிட்டனர். தற்போது வெளிவந்துள்ள டாடாவின் ஹாட்ச் பேக், முன்னெப்போதும் இல்லாத புத்தம் புதிய வடிவமைப்புத் தத்துவத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. டியாகோ, டீசல் மற்றும் பெட்ரோல் என்ற இரண்டு வகை இஞ்ஜின் ஆப்ஷன்களில் வரவுள்ளது. இதன் 1.05 லிட்டர் டீசல் இஞ்ஜின் 69 bhp என்ற அளவு சக்தி மற்றும் அதிகபட்சமாக 140 Nm என்ற அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. அதே சமயம், இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் 84 bhp என்ற அளவு சக்தி மற்றும் 114 Nm என்ற அளவு டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது 20 kmpl என்ற அளவிற்கும் அதிகமான மைலேஜை தரவல்லதாக இருக்கும். இந்திய வாகன சந்தையில் தற்போது உள்ள மாருதியின் செலேரியோ மற்றும் ஹுண்டாயின் i10 ஆகிய கார்களுடன் களத்தில் மோத, டாடா நிறுவனம் டியாகோவை தயார் நிலையில் வைத்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

 

டாடா டியாகோ விமர்சனம்

 

கண்ணோட்டம்


ஜீக்கா என்ற பெயரில் அழைக்கப்பட்ட தற்போதைய டியாகோவை தனது பழைய உத்தியில் டாடா நிறுவனம் தயாரித்துள்ளது. அதாவது, நகரங்களில் வளைய வருவதற்கான சிக்கன விலை ஹாட்ச்பேக் என்ற கோஷத்துடன் டியாகோவை வெளியிட்டுள்ளது. மாபெரும் இந்திய வாகன தயாரிப்பு தொழிற்சாலையான டாடாவின் ஆலையில் இருந்து வெளிவரும் விஸ்டா மற்றும் போல்ட் போன்ற கார்கள் ஆற்றல் வாய்ந்தவையாக இருந்தாலும், அவை டாடா இண்டிகா மாடலின் வெற்றியில் குளிர் காய்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. ஆனால், தற்போதைய டியாகோ நிச்சயமாக அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், சராசரி மக்கள் டாடாவின் கார்களை எப்படி கற்பனை செய்து வைத்திருப்பார்களோ, அது போல இல்லாமல், முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் உள்ளது. 2016 – ஆம் ஆண்டின் முற்பகுதியில், இண்டிகாவைப் போலவே வெற்றிபெறப் போகும் டாடாவின் புதிய கார் இந்திய சந்தையை முற்றுகை இட தயாராகிவிட்டது. எப்படிப்பட்ட சிறப்பம்சங்களுடன் டியாகோ வெளிவரும் என்று ஆவலாக உள்ள டாடாவின் ரசிகர்களுக்காக, நாம் அவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றை விரிவாகத் தெரிந்து கொள்ள மேலும் வாசியுங்கள்:

Image 1 (6)

சாதகங்கள்:1. இண்டிகாவின் வழித்தோன்றல் போல தோற்றமளிக்கும் போல்ட் மற்றும் விஸ்டா போல இல்லாமல், புத்துணர்ச்சியூட்டும் நவீன தோற்றம்.
2. தரமான உட்புற அமைப்பு – செலேரியோவை விட தரமானதாகவும், கிராண்ட் i10 மாடலுக்கு இணையாகவும் உள்ளது.
3. அதிக சக்தி வாய்ந்த பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் அதிகமான டார்க்கை உற்பத்தி செய்யும் டீசல் இஞ்ஜின் - நெரிசலான நகர போக்குவரத்தை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்றாலும் அவ்வப்போது நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்ளலாம்.
4. கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களின் பட்டியல் – ஒருங்கிணைந்த இசை அமைப்பு, குளிரூட்டப்பட்ட க்லோவ் பாக்ஸ், மின்னியக்கம் மூலம் இயங்கும் ஜன்னல் கண்ணாடிகள் போன்ற பல அம்சங்கள்.

பாதகங்கள்:1. பின்புற இருக்கைகளில், அமரும் பகுதி வசதியாக இல்லை. இவை நீண்ட பயணங்களுக்கு ஏற்றதாக இருக்காது.
2. ஆட்டோமேடிக் ஆப்ஷன் இணைக்கப்படவில்லை. செலேரியோ மற்றும் கிராண்ட் i10 போன்ற இரண்டு போட்டியாளர்களும் ஆட்டோமேடிக் வேரியண்ட்டுடன் வருகின்றன.
3. அதிக வேகத்தில் செலுத்தும் போது, இஞ்ஜின்களின் சத்தம் கடுமையானதாக உள்ளது.

தனித்துவமான சிறப்பம்சங்கள்:1. ஹார்மன் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம். விவாதமில்லாமல், இதுவே இந்த பிரிவின் தலைசிறந்த ஆடியோ அமைப்பாகத் திகழ்கிறது.
2. டர்ன் பை டர்ன் (Turn by Turn) நேவிகேஷன் மற்றும் ஜூக் (Juke) கார் செயலி போன்ற சாமர்த்தியமான ஸ்மார்ட் ஃபோன் செயலிகள் டியாகோவிற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.
3. மல்டி-ட்ரைவ் மோடுகள் – எக்கோ மற்றும் சிட்டி என்ற இரண்டு விதமான மோடுகளில் ஒன்றை, சமயத்திற்கேற்றவாறு மாற்றி இஞ்ஜின் இயக்கத்தை மாற்ற முடியும்.

முன்னுரை


இந்திய சாலைகளில் 17 வருடங்களாக சளைக்காமல் வலம் வந்து கொண்டிருக்கும் இண்டிகா மாடலின் வாரிசு என்ற பெருமையுடன் டியாகோ களத்தில் இறங்குகிறது. இண்டிகாவில் உள்ள XO தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், டியாகோவின் தோற்ற அமைப்புகளை இங்கிலாந்து, இத்தாலி மற்றும் புனேயில் உள்ள டாடாவின் பிரெத்தியேகமான வடிவமைப்பு குழு ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். டாடாவின் இம்பாக்ட் தத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள டியாகோ, மிகவும் வலிமையுடனும், அனைத்து வசதிகளியும் உள்ளடக்கிய டாடாவின் அருமையான கார்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அது மட்டுமல்ல, ஹாட்ச்பேக் பிரிவிற்கே புதிதான ஏராளமான அம்சங்கள் இந்த புதிய காரில் இடம்பெறுகின்றன. தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் வசதி மற்றும் காருக்கான சிறப்பு செயலிகள் போன்றவை, இந்த விலை வரம்பில் இதுவரை பார்த்திராத அம்சங்களாகும். ஏற்கனவே, இந்த பிரிவின் தலைமை இடத்தில் வலுவாக வீற்றிருக்கும் மாருதியின் செலேரியோ மற்றும் ஹுண்டாய் கிராண்ட் i10 போன்ற கார்களை வீழ்த்த இவை மிகவும் உதவியாக இருக்கும்.

உருவாக்கத்தின் பின்னணி மற்றும் பரிணாமம்


உள்ளும் புறமும், முற்றிலும் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள புதிய கார் டியாகோ என்று டாடா நிறுவனம் தன்னம்பிக்கையுடன் குறிப்பிடுகிறது, ஏனெனில், இந்த காரை கடந்த 3 வருடங்களாக அடிப்படையில் இருந்து உருவாக்கியுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டாவது தசாப்தத்தை வெற்றிகரமாகத் தொடப் போகும் இண்டிகாவின் XO தொழில்நுட்பத்தில் டியாகோ தயாரிக்கப்பட்டிருந்தாலும், 2016 வருடம் வெளிவரவுள்ள காம்பாக்ட் செடான் மாடலுக்கு இதுவே அடிப்படையாக இருக்கும்.

வெளிப்புறத் தோற்ற அமைப்பு


டாடாவின் வேறு எந்த தயாரிப்பைப் போலவும் இல்லாமல், டியாகோ தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் இதனைப் பற்றி எழுதுவதற்கு நமக்கும் சுவாரசியமாக உள்ளது. போல்ட் மற்றும் விஸ்டா போன்றவை இண்டிகாவின் தோற்றத்தைப் பிரதிபலிப்பதால், அவை அனைத்து விதமான மக்களின் மனதிலும் இடம்பிடிக்கவில்லை. டாடாவின் டிசைன் நெக்ஸ்ட் (DesigNext) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஜெஸ்ட் மற்றும் போல்ட் போலவே தயாரிக்கப்பட்டுள்ள டியாகோவின் தோற்றம் மிகவும் நவீனமாக, புத்துணர்ச்சியுடன், வசீகரத்துடன் உள்ளது. டியாகோ, 1647 மிமீ என்ற அளவில் அகலமாக உருவாக்கப்பட்டு, இந்த பிரிவின் மிகவும் அகலமான கார்களில் ஒன்றாக இருந்தாலும், கிராண்ட் i10 மாடலுக்கு அடுத்ததாகவே உள்ளது. அதே போல, 146 மிமீ நீளத்துடன் உருவாக்கப்பட்டிருந்தாலும், இதன் வீல் பேஸ் செலேரியோ காரின் வீல் பேஸை விட குறைந்ததாகவே இருக்கிறது. எனினும், ஹாட்ச் பேக் பிரிவில் அதிக எடை கொண்ட கார் எது என்றால், அது டியாகோவாகத்தான் இருக்கும்.

Table 2 (4)
டியாகோவின் முன்புற தோற்றத்திற்கு பொலிவைப் பெற்றுத் தருவது சற்றே பின்னால் வரை செல்லும் முன்புற விளக்குகள் என்றால் அது மிகை ஆகாது. ஹ்யூமானிட்டி லைன் என்று டாடா நிறுவனம் குறிப்பிடும் ஒரு வளைந்த குரோம் கீற்று இரண்டு ஹெட் லாம்ப்களையும் நளினமாக இணைக்கிறது. வழக்கமான கிரில் பகுதியாக இல்லாமல், இதன் அகலமான கிரில், ஹெட்  லாம்ப்களை நோக்கிச் செல்லும் போது குறுகலாக மாறுகிறது. நடுவில்  அகலமாகவும், ஓரங்களில் குருகலாகவும் தோற்றமளிப்பதால், டாடாவின் சின்னம் பளிச்சென்று தெரிகிறது. மேலும், இந்த மாறுபட்ட அருங்கோண கிரில் பகுதியின் நடுவே, டாடாவின் சின்னம் முப்பரிணாமத்தில் காட்சியளிக்கிறது. ஏர் டாம் பகுதியும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு, வழக்கமான கோடுகள் இல்லாமல், அருங்கோண வடிவத்தைக் கொண்டுள்ளது. பம்பரின் மீது உள்ள மெலிதான வளைவுகள் பானேட் மீது  உள்ள வளைவுகளோடு ஒத்திருப்பது, டியாகோவின் கம்பீரத்தை அதிகப்படுத்துகிறது.

Image 2 (6)
டியாகோவின் பக்கவாட்டுத் தோற்றத்தில், நம்மை மிகவும் கவர்ந்த அம்சம் கார் முழுவதும் நீண்டு சென்று, பின்புறத்தில் உள்ள ராப் அரௌண்ட் விளக்கில் முடிவடையும் சீரான கேரெக்டர் லைன் ஆகும். B பில்லர்கள்  மற்றும் விங் மிரரில் பொருத்தப்பட்டுள்ள இன்டிகேட்டர்கள் ஆகியவை ஹாட்ச்பேக் பிரிவின் வழக்கமான கருப்பு நிறத்திலேயே வருகின்றன.

  Image 3 (6)
சற்றே தளர்ந்ததது போல இருக்கும் டியாகோவின் தோற்றத்தை, நேர்த்தியாகப் பொருந்தியுள்ள 14 அங்குல சக்கரங்கள் கொண்ட இதன் பக்கவாட்டுத் தோற்றம் அருமையாக எடுத்துரைக்கிறது. எனினும், கிராண்ட் i10 மாடலில் பொருத்தப்பட்டுள்ள டயமண்ட் கட் சக்கரங்களோடு ஒப்பிடும் போது, டியாகோவில் உள்ள அலாய் சக்கரங்களின் வடிவமைப்பு கவர்ச்சிகரமாக இல்லை என்பதே உண்மை.

Image 4 (5)
பின்புற தோற்றமானது நேர்த்தியாகவும் எளிமையானதாகவும் உள்ளது. பாதாம் வடிவத்தில் உள்ள ராப் அரௌண்ட் டெய்ல் லாம்ப்கள் மற்றும் அவற்றை இணைக்கும் எளிமையான கேரக்டர் லைன்கள் ஆகியவை இந்த காருக்கு ஸ்டைலான, அதிநவீனமான தோற்றத்தை அளிக்கின்றன.

Image 5 (6)
பின்புறத்தில் நவீனமான பல அமைப்புகள் இடம் பெற்றிருந்தாலும்,  மிகவும் வசீகரமாகத் தெரிவது ஸ்பாய்லரின் இரு புறங்களிலும் அமைந்துள்ள கருப்பு நிற ஸ்பேட்கள் ஆகும். டியாகோவின் நவீன தோற்றத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமல்ல, இவை காரின் ஏரோடைனமிக்ஸ் அமைப்பிற்கும் உதவுகின்றன என்று டாடா நிறுவனம் குறிப்பிடுகிறது. எக்ஸாஸ்ட் பைப்கள் வெளியே தெரியாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்பர் ப்ளேட் பகுதியில் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருப்பது, இதன் நவீன தோற்றத்தை மேம்படுத்துவதோடு நின்று விடாமல், பின்புறம் முழுவதும் தீட்டப்பட்டுள்ள ஒரே பாடி வண்ணம் சலிப்பூட்டாமல் இருக்கவும் இது உதவுகிறது.

Image 6 (6)
240 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் பூட் பகுதி, செலேரியோ மாடலின் பூட் பகுதிக்கு நிகராகவும், கிராண்ட் i 10 மாடலுக்கு சற்றே குறைவாகவும் உள்ளது.

Image 7 (6) Table 3 (4)
டாடாவின் டிசைன்களில் இன்றளவும் இல்லாத சிறந்த வடிவமைப்பை டியாகோ பெற்றுள்ளது என்று, ஒருபடி மேலே சென்று நாம் தைரியமாக முழங்கலாம், ஏனெனில், இதன் அளவுகள் மற்றும் நேர்த்தியான வளைவுகள் ஆகியவை பெரும்பாலான மக்களின் கவனத்தை நிச்சயமாகக் கவர்ந்துவிடும் என்பது உறுதி.

உட்புறத் தோற்றம்டியாகோவிற்கு முன்பு வெளிவந்த ஜெஸ்ட் மற்றும் போல்ட் மாடல்களில் உள்ள அதே உட்புற வடிவமைப்பைப் பின்பற்றியே இதிலும் வடிவமைக்கபட்டுள்ளது. ஆனால், இதன் கேபின் அளவு மற்றும் தரம் ஆகியவற்றை மேம்படுத்த, டாடா நிறுவனம் நிறைய நேரத்தை செலவு செய்திருகிக்கிறது என்பது, கேபின் உள்ளே சென்றவுடன் நமக்கு நன்கு விளங்குகிறது
கேபின் உள்ள சென்றதும் உங்களை இதமாக வரவேற்பது, டாஷ் பகுதியை அலங்கரிக்கும் இனிமையான கருப்பு-க்ரே நிற தீமாகும். டாடா நிறுவனம் எதற்காக தனது வழக்கமான பீஜ் வண்ணத்தை விட்டுக் கொடுத்தது என்பது அதைப் பார்த்ததும் நமக்குப் புரிகிறது. உண்மையில், இந்த முடிவை நாம் பாராட்டியே ஆக வேண்டும். உட்புறத்தில், முக்கியமாக டாஷ் போர்டின் மேல் பாதியில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் பிளாஸ்டிக்கின் தரம் மிக மிக அருமையாக இருக்கிறது. சென்டர் கன்சோலில் ஒரு சில இடங்கள், பக்கவாட்டு ஏசி துளைகள் மற்றும் பல சின்னஞ்சிறு இடங்களில், பியானோ கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருப்பது இதன் அழகிற்கு மேலும் மெருகூட்டுவதாக உள்ளது. பக்கவாட்டில் உள்ள ஏசி துளைகளின் ஓரங்களில் வெளிப்புற பாடி வண்ணத்தை டாடா நிறுவனம் அழகாகத் தீட்டியுள்ளது.

Image 8 (4)
ஓட்டுனரின் இருக்கையில் நீங்கள் அமரும்போது, டாடாவின் வழக்கமான ஸ்டியரிங் வீல் உங்களை வரவேற்கிறது. தடிமனாக உள்ள ஸ்டியரிங் வீல் அமைப்பு, நன்றாகப் பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக உள்ளது. மேலும், இதன் மீது ஆடியோ மற்றும் தொலைபேசி கட்டுப்பட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 9 மணி நிலையிலும், 3 மணி நிலையிலும், இந்த ஸ்டியரிங் வீல் தடித்ததாக இருக்கிறது. எனினும், நீங்கள் இதை சாய்த்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Image 9 (6)
போல்ட் மாடலில் உள்ள டூ பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டரின் சிறிய வெர்ஷன் போல டியாகோவில் உள்ள டூ பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் தோற்றம் அளிக்கிறது. டாக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகியவற்றின் மத்தியில் MID இடம் பெறுகிறது. நேரம், பயண தூரம், எரிபொருள் உபயோக அளவு, சராசரி எரிபொருள் நுகர்வு அளவு, மற்றும் எரிபொருள் முற்றிலும் தீர்வதற்குரிய அளவு ஆகியவற்றை உடனடியாகவும், தெளிவாகவும் MID பிரதிபலிக்கிறது. டக்கோமீட்டரில் அருமையான யுக்தி ஒன்று உள்ளது, அதாவது நீங்கள் சிவப்பு எல்லையைத் தொடும் போது, இதன் முள் சிவப்பாக மாறி விடுகிறது.

Image 10 (6)
அருங்கோண வடிவமைப்பானது, கிரில் மற்றும் ஏர் டேம் போன்ற பகுதிகளில் மட்டுமல்லாது, சென்டர் கன்சோல் பகுதியிலும் தொடர்கிறது. சென்டர் கன்சோலின் இரண்டு முனைகளிலும் ஏசி துளைகள் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமான ஹர்மான் நிறுவனத்தின் இசை அமைப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. 8 ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இசை அமைப்பில் இருந்து வெளிப்படும் இசையின் தரம் மிகவும் அற்புதமாக உள்ளது. சிக்கன விலையில் வரும் ஹாட்ச் கார்களில் இத்தகைய உயர்தர இசை அமைப்பை நாம் எளிதில் காண முடியாது என்பதையும் நாம் இங்கு நினைவு படுத்த விரும்புகிறோம். ஸ்மார்ட் ஃபோனுடன் இந்த இசை அமைப்பை இணைக்கும் போது, அருமையான நேவிகேஷன் அமைப்பு இயங்க ஆரம்பிக்கிறது. டர்ன் பை டர்ன் நேவிகேஷன் (Turn  by Turn Navigation) என்று அழைக்கப்படும் இந்த செயலி, பாதைகள் மற்றும் திசைகள் ஆகியவற்றை LCD திரையில் செவ்வனே காட்டுகிறது. உங்களை மகிழ்ச்சியூட்டும் மற்றுமொரு அதிநவீன அமைப்பு என்னவென்றால், அது  ஜூக் கார் ஆப் ஆகும். 10 தொலைபேசிகளை ஒரே நேரத்தில் இணைக்கக் கூடிய அருமையான WiFi ஹாட்ஸ்பாட்டை, இந்த செயலி காருக்குள் உருவாக்குகிறது. மேலும், இதனை ம்யூசிக் ஸ்ட்ரீம் செய்யவும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஹாட்ச் பேக் பிரிவில், இப்படிப்பட்ட அருமையான இரண்டு செயலிகளின் இயக்கத்தை நாம் இதுவரைக் கேட்டறிந்தது இல்லை. டியாகோவில் தான் முதல்முறையாக இவை பொருத்தப்பட்டுள்ளன.

Image 11 (5)
சென்டர் கன்சோல் பகுதியின் கீழே குளிர்சாதன அமைப்பின் கட்டுப்பாட்டுக் கருவிகள் இடம்பெறுகின்றன. டியாகோவின் எந்த டிரிம்மிலும் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் அமைப்பு இடம் பெறவில்லை. சொல்லப் போனால், இதன் போட்டியாளர்களின் மத்தியிலும் இந்த அமைப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் i10 மாடலில் வருவதைப் போன்ற பின்புற இருக்கைகளுக்கு ஏசி துளைகள் டியாகோவில் அமைக்கப் பெறவில்லை, எனினும், வெகு வேகமாக கேபின் முழுவதும் குளிரூட்டப் பெறுகிறது. இந்தியாவின் கடுமையான கோடை காலங்களிலும், கேபின் முழுவதையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளக் கூடிய அளவு இந்த குளிர் சாதன அமைப்பு சக்திவாய்ந்ததாக இருக்கிறது.

Image 12 (5)
முன்புற இருக்கைகள் அனைத்தும் நன்றாக வடிவமைக்கப்பட்டு, தேவையான அளவு வசதியைக் கொடுக்கின்றன. செலேரியோ மற்றும் கிராண்ட் i10 ஆகியவற்றில் உள்ளதைப் போல ஹெட் ரெஸ்ட்கள் இணைக்கப்படவில்லை. அமரும் இடத்தில் ஆடம்பரமான குஷன் வசதிகள் இல்லாததால் பருமனான உடலமைப்பு கொண்ட நபர்களுக்கு சற்றே சிரமமாக இருக்கலாம், மற்றபடி முன்புற இருக்கைகளைப் பற்றிய வேறு எந்த விதமான முறையீடுகளும் எழாது. மேலும், டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதியும் இணைத்து, டாடா நிறுவனம் டியாகோவை போட்டிக்குத் தயார் படுத்தியத்தியுள்ளது.

Image 13 (5)
இரண்டு நபர்கள் அமர்ந்து பயணம் செய்வதற்கு ஏதுவான முறையில் பின்புற இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது நபரை திணித்து அமர வைக்கலாம், ஆனால், அதை நாங்கள் பரிந்துரைக்க விரும்பவில்லை, ஏனெனில், சீட் அகலம் மட்டுமல்ல, தோள்பட்டை அகலமும் குறைவாக இருப்பதால், மூன்று நபர்கள் அமரும் போது தோள்பட்டையையும் இடித்துக் கொண்டுதான் பயணிக்க வேண்டும். உட்புறமானது, கருப்பு நிற தீமில் உருவாக்கப்பட்டிருந்தாலும், பெரிய கண்ணாடி பொருத்தியிருப்பதால், பின்புறம் நெரிசலாகத் தெரியவில்லை. பொதுவாக, சிறிய கார்களில் கால் வைப்பதற்கான இடம் கட்டாயம் தாராளமாகவே உள்ளது. வழக்கத்தை மாற்றாமல், டியாகோவின் முன்புற இருக்கைகளின் சாயும் பகுதிகள் சற்றே முன்தள்ளி இருப்பதால், பின்புறத்தில், கால் வைக்கும் இடம் தாராளமாக உள்ளது. எனவே, கிராண்ட் i10 மாடலுக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தை டியாகோ பிடித்துக் கொள்கிறது.

Image 14 (3)
சிறிய பொருட்களை வைத்துக் கொள்ள வசதியாக, கேபின் பகுதி முழுவதும் மொத்தம் 22 சிறிய இடைவெளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கியர் லீவர் பகுதியில் பொருட்களை வைத்துக் கொள்ள அதிகமான இடம் உள்ளது. நான்கு கதவுகளிலும், தண்ணீர் பாட்டில்களை வைத்துக் கொள்வதற்கு வசதியாக பாக்கெட்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிராண்ட் i10 மாடலில் வருவதைப் போலவே, க்லோவ் பாக்ஸ் பகுதி ஆழமாகவும், குளிரூட்டப்பட்டும் வருகிறது. இவை மட்டுமல்ல, டாஷ் போர்டின் கீழ் பாதியில் மற்றும் மளிகை சாமான்கள் பையைத் தொங்கவிட ஒரு சிறிய கொக்கி என்று இது போல பல மனதைத் தொடுகிற அமைப்புகள் உள்ளே இடம்பெறுகின்றன.


ஹாட்ச் பேக் பிரிவில் மிகச் சிறந்த உட்புறத் தோற்றத்தை டியகோ பெறுகிறது. உட்புறத்தின் தரம், அமைப்பு மற்றும் நேர்த்தி ஆகியவை, இந்தப் பிரிவின் முதலிடத்தில் உள்ள கிராண்ட் i10 காரைப் போலவே உள்ளன. ஹாட்ச் பேக் பிரிவிலேயே முதல்முறையாக இடம்பெறும் ஹார்மன் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர் கொண்ட இசை அமைப்பு மற்றும் அதனைச் சார்ந்த செயலிகள் போன்றவை இணைந்து டியாகோ பாக்கேஜிற்கு முழுமையைத் தருகின்றன. மொத்தத்தில், இதன் விலையில், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் அதிகமான சிறப்பம்சங்கள் இடம்பெறும் அற்புதமான காராக டியாகோ திகழ்கிறது.

செயல்திறன்:


டியாகோவில் இரண்டு புதிய இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்து வெளிவரவுள்ள காம்பாக்ட் சேடான் மாடலிலும் இவற்றையே பொறுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் இஞ்ஜின் முற்றிலும் புதிதாக இருந்தாலும், இதன் டீசல் மோட்டார் தற்போதுள்ள இண்டிகா மாடலை இயக்கிக் கொண்டிருக்கும் CR4 இஞ்ஜின் வகையில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.

டியாகோ டீசல் (ரெவோடார்க் – 1.05 லிட்டர்)ஹாட்ச் பேக் பிரிவில் உள்ள செயல்திறன் மிக்க டீசல் இஞ்ஜின்களில், கிராண்ட் i10 மாடலுக்கு அடுத்த இடத்தை டியாகோ டீசல் இஞ்ஜின் பிடித்துக் கொள்கிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், அனைத்து போட்டியாளர்களுடனும் ஒப்பிட்டாலும், டியாகோவில் பொருத்தப்பட்டுள்ள டீசல் இஞ்ஜினே மிகவும் அதிகமான எடை கொண்டதாக இருக்கிறது. எனினும், இது மாருதி செலேரியோ மற்றும் செவ்ரோலெட் பீட் ஆகிய கார்களை விட வேகமாகவே செயலாற்றுகிறது. மிகவும் குறைவான 1800 rpm அளவில் அதிகபட்ச டார்க்கை இது அருமையாக உற்பத்தி செய்கிறது. எனவே, இதன் வேகம் அதிக அளவில் உள்ளது. நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது இந்த இஞ்ஜின் சீராவே இயங்குகிறது. அதே சமயம், நகரத்தின் எல்லைகளுக்குள் பயணிக்கும் போதும், அருமையான இயக்கத்துடன் இதமான பயணத்தை உறுதி செய்கிறது. ஒரே ஒரு குறை என்னவென்றால், அதிகமான வேகத்தில் பயணிக்கும் வேளைகளில் கடுமையான சத்தம் கேட்கிறது. இது இனிய பயண அனுபவம் கிடைப்பதைத் தடுக்கிறது.

Table 4 (4)

டியாகோ பெட்ரோல் (ரெவோட்ரான் – 1.2 லிட்டர்)அதிவிரைவாக காரைச் செலுத்த விரும்புபவர்கள், டியாகோவின் பெட்ரோல் வேரியண்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த விலையில் வரும் ஏராளமான ஹாட்ச் கார்களைப் போலவே, அதிகமான செயல்திறன் பெறுவதற்கு டாடா டியாகோவையும் சற்றே அதிகமான வேகத்தில் செலுத்த வேண்டியுள்ளது. ஹாட்ச் பிரிவில், மிகவும் சக்திவாய்ந்த கார் எது என்று கேட்டால், டியாகோ என்று கூறும் அளவிற்கு இதன் செயல்திறன் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குகிறது. டீசல் இஞ்ஜின் போலவே, பெட்ரோல் இஞ்ஜினின் பேலன்சை சாய்ப்பதுவும் இதன் அதிக எடையாகும். டியாகோவை விட கிராண்ட் i10 77 கிலோ எடை குறைவாகவும், செலேரியோ கிட்டத்தட்ட 200 கிலோ எடை குறைவாகவும் உள்ளன. எனினும், அதிகமான எடையுடன் பயணிக்கும் போதும், சீராகவே இயங்குகிறது. உதாரணமாக, ஒரு சில பயணிகள் மற்றும் சில காமிரா உபகரணங்களை இதில் ஏற்றிக் கொண்டு, செங்குத்தான பாதையில் ஏறுவது சிரமாமாக இல்லை என்பதை நாம் இங்கு எடுத்துரைக்க வேண்டும்.

Table 5 (4)

குறிப்பு: மல்டி-ட்ரைவ் மோடுகள்


*
டியாகோவிற்கு முன்பு வெளியான போல்ட் மாடலில் உள்ளதைப் போலவே இதிலும் மல்டி-ட்ரைவ் மோடுகள் இடம்பெறுகின்றன. சிட்டி மற்றும் எக்கோ என்ற இரண்டு மோடுகள் கொண்டிருந்தாலும், போல்ட் மாடலில் வந்த ஸ்போர்ட் மோடு இதில் இடம்பெறவில்லை. கார் ஓட ஆரம்பிக்கும் போது, இது இயல்பாக சிட்டி மோடில் ஓடுகிறது. ‘எக்கோ’ பட்டனை அழுத்தினால் எக்கோ மோடுக்கு மாறிவிடுகிறது. மீண்டும் அதே பட்டனை அழுத்தினால், சிட்டி மோடுக்குத் திரும்பி விடுகிறது. இரண்டு மோடுகளை மாற்றும் போது, இஞ்ஜின் தனது இயக்கத்தை த்ரோட்டில் இன்புட்டிற்கு ஏற்றார்போல இயங்குகிறது. மோடுகளை மாற்றும் போது, இஞ்ஜினின் சக்தி மற்றும் செயல்திறனை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்.

சவாரி மற்றும் கையாளும் திறன்ஸ்டியரிங் வீலின் எடை, நகரத்தில் பயணம் மேற்கொள்ளத் தேவையான அளவு எடையுடன் இல்லாமல் சற்றே குறைவாகவே உள்ளது. ஆனால், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது இதன் எடை போதுமான அளவில் உள்ளது. எனினும், மூலைகளில் எளிதாகத் திரும்புவதற்கு, கிராண்ட் i10 மாடலைப் போல எளிதாகவும், எடை குறைந்ததாகவும் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். பயணம் மற்றும் கையாளுதல் என்ற இரண்டிற்கும் சரியான சமநிலையை இதன் சஸ்பென்ஷன் தருகிறது. சஸ்பென்ஷன் உறுதியாக இருப்பதால், உடைந்த சாலைகளிலும் குழிகள் நிறைந்த சாலைகளிலும் பயணிப்பது கடினமாக இல்லை என்றே கூற வேண்டும். டியாகோவின் டீசல் வெர்ஷனை விட பெட்ரோல் வெர்ஷனில் சஸ்பென்ஷன் நன்றாக இயங்குகிறது. 20 கிலோ கூடுதலான எடையுடன் இதன் டீசல் இஞ்ஜின் இருப்பதால், டாடா அதனைச் சரி செய்ய விறைப்பான முன்புற ஸ்பிரிங்குகள் மற்றும் டேம்பர்கள் போன்றவற்றை உபயோகித்துள்ளது. மூன்று இலக்க வேகத்தில் பயணிக்கும் வேளைகளில், ஹுண்டாய் போல குதிக்காமல், ஒப்பீட்டளவில் பயணம் சுமூகமாக உள்ளது. அதிகமான வேகத்தில் செல்லும் போது எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் இயங்குவதற்கு இதன் கூடுதல் எடை காரணமாக உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:டியாகோவின் பாடி அமைப்பு, விபத்து நேரங்களில் தோன்றும் கடினமான சக்தியை தன்னகத்தே எடுத்துக் கொண்டு, அதனை உட்புற கேபினுக்குள் அனுமதிக்காமல் பயணிகளைப் பாதுகாக்கிறது. மேலும், முன்புறத்தில் EBD அமைப்புடன் ABS அமைப்பு மற்றும் இரட்டைக் காற்றுப் பைகள் ஆகியவை பாதுகாப்பை மேம்படுத்தப் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை டாடா நிறுவனம் டியாகோவின் அடிப்படை வேரியண்ட்டில் இருந்து அனைத்து வேரியண்ட்களிலும் இணைக்குமா என்பது இப்போது தெரியவில்லை. இது வரை விபத்து சோதனையில் டியாகோ ஈடுபடுத்தப்படவில்லை. இதன் பாதுகாப்பு மதிப்பீடை இப்போது ஊகம் செய்ய முடியாவிட்டாலும், இதன் முக்கிய போட்டியாளராக இருக்கும் கிராண்ட் i10 (அடிப்படை வேரியண்ட்டில் ஏர் பேக்குகள் இல்லை) லத்தீன் NCAP விபத்து சோதனையில் ஐந்துக்கு ‘0’ எடுத்து தோல்வி அடைந்துவிட்டது.

Table 6 (4)

வேரியண்ட்கள்


Table 7 (1)
டியாகோவின் அடிப்படை XB டிரிம்மில் இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு மற்றும் பல பாதுகாப்பு அமைப்புகள் இடம்பெறவில்லை. இவை ஆப்ஷனாக கூட தரப் படவில்லை என்பதால், இந்த வேரியண்ட்டை நாம் தவிர்த்து விடுவதே சிறப்பாகும். XE வேரியண்ட்டிலும் அடிப்படை XB டிரிம்மில் உள்ளதை விட மிகவும் அதிகமான சிறப்பம்சங்கள் இடம்பெறவில்லை. எனினும், நீங்கள் விரும்பினால் முன்புற இரட்டைக் காற்றுப் பைகள் மற்றும் சீட் பெல்ட் ப்ரீ-டென்ஷனர் போன்றவற்றை இணைத்துக் கொள்ளலாம் என்பதால், இதன் மதிப்பு கூடுகிறது. XM மற்றும் XT என்ற இரண்டு நடுத்தர வேரியண்ட்களும், உங்களது பணத்திற்கு அதிகமான மதிப்பைத் தருவதாக உள்ளன என்பது எங்களின் கருத்து. இவற்றில், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் வசதி மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. XT வேரியண்ட், உயர்ரக வாகனங்களுக்கு இணையான அற்புதமான இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பைப் பெற்று வருகிறது. உயர்தர XZ வேரியண்ட்டில், மேற்சொன்ன அம்சங்களுடன் கூடுதலாக ஸ்டியரிங் வீல் மீது பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கட்டுப்பாட்டுக் கருவிகள், ஆடியோ மற்றும் ஃபோன் ஆகியவற்றின் கட்டுப்பட்டு கருவிகள் இணைந்த ஸ்டியரிங் வீல், முன்புற இரட்டைக் காற்றுப் பைகள், ABS, EBD, CSC, முன்புற ஃபாக் விளக்குகள், பின்புற டி-ஃபாகர், பின்புற வைப் + வாஷ், குளிரூட்டப்பட்ட க்லோவ் பாக்ஸ், பூட் பகுதியில் விளக்கு போன்றவையும் இடம் பெறுகின்றன. எமது கருத்துப்படி, XT வேரியண்ட்டில் ABS அமைப்பு இணைக்கப்பட்டிருந்தால், இதை விட சிறந்த பேக்கேஜாக இருந்திருக்கும்.

தீர்ப்பு:இந்திய சந்தையில், டியாகோ மிகக் குறைந்த விலைப் பட்டியலுடன் அதிரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விலையாக ரூ. 3.2 லட்சங்கள் என்று நிர்ணயித்துள்ளதால், இதன் போட்டியாளர்களான செலேரியோ மற்றும் கிராண்ட் i10 ஆகிய கார்களுடன் நேருக்கு நேர் நின்று மோதத் தயாராக உள்ளது.
மொத்தத்தில், டியாகோ நவீனமாக, ஏராளமான சிறப்பம்சங்கள் மற்றும் அதிகமான இட வசதியுடன் வருகிறது. டியாகோவின் மாபெரும் வெற்றியை தடுப்பது ஒன்றே ஒன்றுதான், அது டாடா நிறுவனத்தின் விற்பனைக்குப் பின்தரும் வாடிக்கையாளர் சேவையாகும். எனினும், டாடாவின் மிகச் சிறந்த தயாரிப்பில் இருந்து மேம்பட்டதாகவே டியாகோ திகழ்கிறது என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.