• டாடா சாஃபாரி முன்புறம் left side image
1/1
  • Tata Safari
    + 34படங்கள்
  • Tata Safari
  • Tata Safari
    + 6நிறங்கள்
  • Tata Safari

டாடா சாஃபாரி

with fwd option. டாடா சாஃபாரி Price starts from ₹ 16.19 லட்சம் & top model price goes upto ₹ 27.34 லட்சம். This model is available with 1956 cc engine option. This car is available in டீசல் option with both ஆட்டோமெட்டிக் & மேனுவல் transmission. It's . சாஃபாரி has got 5 star safety rating in global NCAP crash test & has 6-7 safety airbags. This model is available in 7 colours.
change car
129 மதிப்பீடுகள்rate & win ₹ 1000
Rs.16.19 - 27.34 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஏப்ரல் offer
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

டாடா சாஃபாரி இன் முக்கிய அம்சங்கள்

  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்

சாஃபாரி சமீபகால மேம்பாடு

விலை: டாடா சஃபாரி ரூ.16.19 லட்சம் முதல் ரூ.27.34 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் டெல்லி).

வேரியன்ட்கள்: இது நான்கு வேரியன்ட்களில் இருக்கலாம்: ஸ்மார்ட், பியூர், ஃபியர்லெஸ் மற்றும் அக்கம்பிளிஸ்டு.

நிறங்கள்: ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சஃபாரி 7 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: காஸ்மிக் கோல்ட், கேலக்டிக் சபையர், ஸ்டார்டஸ்ட் ஆஷ், ஸ்டெல்லர் ஃப்ரோஸ்ட், ஓபரான் பிளாக், சூப்பர்நோவா காப்பர் மற்றும் லூனார் ஸ்லேட்.

சீட்டிங் கெபாசிட்டி: டாடா 6- மற்றும் 7-சீட்டர் அமைப்பில் இந்த காரை வழங்குகிறது.

பூட் ஸ்பேஸ்: டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மூன்று வரிசைகளையும் பயன்படுத்தும் போது 420 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்குகிறது. மூன்றாவது வரிசை சீட்களை 50:50 ஸ்பிளிட் விகிதம் மூலமாக பிரிப்பதன் மூலமாக 827 லிட்டராக பூட் ஸ்பேஸை அதிகரிக்கலாம்.

இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: இது 2-லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது முன்பு போலவே 170PS மற்றும் 350Nm ஐ உருவாக்குகிறது. இந்த யூனிட் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டின் நிறுவனத்தால் கிளைம் செய்யப்படும் மைலேஜ் இதோ:

     MT - 16.30 கிமீ/லி

     AT - 14.50 கிமீ/லி

அம்சங்கள்: 2023 டாடா சஃபாரி காரில்  வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 10-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. இது ஜெஸ்டர்-எனபில்டு டெயில்கேட், பல வண்ண ஆம்பியன்ட் லைட்ஸ், டூயல் ஜோன் கிளைமேட் ஏசி, ஒரு பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் மற்றும் பின்புறம் (6-சீட்டர் பதிப்பில் மட்டுமே) சீட்கள், ஏர் பியூரிபையர், மெமரி வசதியுடன் 6-வே பவர்டு ஓட்டுநர் இருக்கை ஆகியவற்றைப் பெறுகிறது. மற்றும் வெல்கம் ஃபங்ஷன், மற்றும் எலக்ட்ரிக் பாஸ் மோட் 4-வே வே பவர்டு-டிரைவர் சீட் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு: பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள்), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ( ADAS) அம்சங்கள் இப்போது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலையும் உள்ளடக்கியது.

போட்டியாளர்கள்: ஃபேஸ்லிப்டட் சஃபாரி MG ஹெக்டர் பிளஸ், ஹீண்டாய் அல்கஸார் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்க
சாஃபாரி ஸ்மார்ட்(Base Model)1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.16.19 லட்சம்*
சாஃபாரி ஸ்மார்ட் (o)1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.16.69 லட்சம்*
சாஃபாரி பியூர்1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.17.69 லட்சம்*
சாஃபாரி பியூர் (o)1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.18.19 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.19.39 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் எஸ்1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.20.39 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் எஸ் dark1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.20.69 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.20.69 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர்1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.20.99 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் எஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.21.79 லட்சம்*
சாஃபாரி பியூர் பிளஸ் எஸ் dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.22.09 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ்1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.22.49 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் dark1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.23.04 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் ஏ1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.23.49 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.23.89 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு1956 cc, மேனுவல், டீசல், 16.3 கேஎம்பிஎல்more than 2 months waitingRs.23.99 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு dark1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.24.34 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.24.44 லட்சம்*
சாஃபாரி அட்வென்ச்சர் பிளஸ் ஏ டி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.24.89 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.25.39 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ்1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.25.49 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் 6s1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.25.59 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.25.74 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் dark1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.25.84 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் dark 6s1956 cc, மேனுவல், டீசல்more than 2 months waitingRs.25.94 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் ஏடி
மேல் விற்பனை
1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waiting
Rs.26.89 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் 6s ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.26.99 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் dark ஏடி1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.27.24 லட்சம்*
சாஃபாரி அக்கம்பிளிஸ்டு பிளஸ் dark 6s ஏடி(Top Model)1956 cc, ஆட்டோமெட்டிக், டீசல்more than 2 months waitingRs.27.34 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஒத்த கார்களுடன் டாடா சாஃபாரி ஒப்பீடு

டாடா சாஃபாரி விமர்சனம்

டாடா சஃபாரி என்பது மிக நீண்ட காலமாகவே எஸ்யூவி சந்தையில் நன்கு அறியப்பட்ட பிராண்ட் ஆகும். இந்த பெயர் 2021 ஆண்டில் மீண்டும் களத்துக்கு திரும்பியது, அதன் பிறகு தற்போது ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூவி -க்கான முதல் பெரிய அப்டேட்டை நாம் இப்போது பெற்றுள்ளோம். சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் 2023 தோற்றம், உட்புற அனுபவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.25-30 லட்சம் வரம்பில் பெரிய குடும்ப எஸ்யூவியை வாங்குபவர்களுக்கு, எம்ஜி ஹெக்டர் பிளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஹூண்டாய் அல்காஸர் போன்ற போட்டியாளர்களிடையே சஃபாரி ஒரு வலுவான தேர்வாக உள்ளது.

டாடா மோட்டார்ஸ் இந்த காரில் என்னென்ன மாற்றங்களை செய்துள்ளது என்பதை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

வெளி அமைப்பு

ஃபேஸ்லிஃப்ட் மூலம், சஃபாரியின் அடிப்படை வடிவம் மற்றும் அளவு மாறாமல் உள்ளது. இது ஒரு பெரிய எஸ்யூவி ஆக தொடர்கிறது, கிட்டத்தட்ட 4.7 மீட்டர் நீளம் மற்றும் 1.8 மீட்டர் அகலம் கொண்டது. லைட்டிங் எலமென்ட்கள், முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன.

கனெக்டட் DRL விளக்குகள் மற்றும் கிரில்லில் உள்ள பாடி கலர் எலமென்ட்களுடன் புதிய முன்பக்கம் மிகவும் நவீனமாத் தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் குரோம் அலங்காரங்களை சேர்க்க வேண்டாம் என்று தேர்வு செய்துள்ளது, இது புதிய சஃபாரி நுட்பமாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிக்கிறது. பம்பர் வடிவமைப்பு முழுவதுமாக மாற்றப்பட்டு இப்போது LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் LED ஃபாக் லேம்ப்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பம்பரில் ஒரு செயல்பாட்டு வென்ட் உள்ளது, இது ஏரோடைனமிக் வேரியன்ட்டில் உதவுகிறது.

புதிய அலாய் வீல் வடிவமைப்பைத் தவிர பக்கவாட்டு தோற்றம் மாறாமல் உள்ளது. பேஸ் வேரியன்ட்களில் (ஸ்மார்ட் மற்றும் ப்யூர்) 17-இன்ச் அலாய் வீல்கள் கிடைக்கும், மிட்-ஸ்பெக் அட்வென்ச்சர் மாடல் 18-இன்ச் அலாய் வீல்களை பெறுகிறது, அதேசமயம் டாப்-ஸ்பெக் அகாம்ப்லிஷ்ட் மற்றும் டார்க் வேரியன்ட்களில் 19-இன்ச் அலாய் வீல்கள் கிடைக்கும்.

பின்புறத்தில், புதிய டெயில்லைட் கிராபிக்ஸ் மற்றும் புதிய பம்பர் ஆகியவை நீங்கள் கவனிக்கும்படியாக இருக்கிறது.

டாடா சஃபாரி 2023 காரின் கலர் ஆப்ஷன்கள் பின்வருமாறு:

ஸ்மார்ட் ஸ்டெல்லர் ஃப்ரோஸ்ட், லூனார் ஸ்லேட்
ப்யூர் ஸ்டெல்லர் ஃப்ரோஸ்ட், லூனார் ஸ்லேட்
அட்வென்ச்சர் ஸ்டெல்லர் ஃப்ரோஸ்ட், ஸ்டார்டஸ்ட் சாம்பல், சூப்பர்நோவா காப்பர், கேலக்டிக் சபையர்
அக்கம்பிளிஸ்டு  ஸ்டெல்லர் ஃப்ரோஸ்ட், ஸ்டார்டஸ்ட் ஆஷ், சூப்பர்நோவா காப்பர், கேலடிக் சபையர், காஸ்மிக் கோல்டு
டார்க் ஓபரான் பிளாக்

உள்ளமைப்பு

டாடா மோட்டார்ஸின் புதிய அணுகுமுறையுடன், வேரியன்ட்களுக்குப் பதிலாக ‘பெர்சோனாஸ்’ உருவாக்குகிறது - சஃபாரியின் ஒவ்வொரு வேரியன்ட்டும் ஒரு தனித்துவமான தோற்றம் மற்றும் உணர்வை கொடுக்கிறது. பேஸ்-ஸ்பெக் ஸ்மார்ட்/ப்யூர் வேரியன்ட்கள் எளிய கிரே அப்ஹோல்ஸ்டரியையும், அட்வென்ச்சர் வேரியன்ட்களுக்கு சாக்லேட் பிரவுன் அப்ஹோல்ஸ்டரியும், டாப்-ஸ்பெக் அகாம்ப்லிஷ்ட் வேரியண்ட் பிரீமியம் ஒயிட்-கிரே டூயல் டோன் காம்பினேஷனையும் கொண்டுள்ளது. டார்க் வேரியன்ட் முற்றிலும் பிளாக் கேபின் கொண்ட தீமை பெறுகிறது.

டாடா மோட்டார்ஸ் சஃபாரியின் டேஷ்போர்டை மெலிதாகவும் ஆடம்பரமாகவும் மாற்றியமைத்துள்ளது. டாஷ்போர்டில் உள்ள டச் இப்போது குறைவாகவே உள்ளது, மேலும் சென்ட்ரல் ஏசி வென்ட்கள் இப்போது அகலமாக உள்ளன. ஒரு கிளாஸ்ஸி பிளாக் பேனல் அதன் அடியில் இருக்கிறது மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வாகனத்தில் உள்ள பிற செயல்பாடுகளுக்கான புதிய டச் பேனல் உள்ளது.

மேலும் நான்கு ஸ்போக் ஸ்டீயரிங் வீலும் புதியது. வடிவமைப்பு கம்பீரமானது, மேலும் வெள்ளை-சாம்பல் டூ-டோன் மடிப்புடன் கூடிய வடிவமைப்பு உயர்ந்த கார்களில் இருப்பதை போன்று தெரிகிறது. இது இல்லுமினேட்டட் லோகோ மற்றும் மியூஸிக்/அழைப்புகள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கட்டுப்படுத்தும் பேக்லைட் சுவிட்சுகளையும் பெறுகிறது.

ஃபிட் மற்றும் ஃபினிஷ் அடிப்படையில் பார்க்கும் போதும், குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் உள்ளது. பேனல்கள் ஒன்றிணைக்கும் விதம், பொருள் தரத்தில் நிலைத்தன்மை ஆகியவை முன்பை விட இப்போது முன்னேற்றமடைந்துள்ள மாற்றமாகும்.

இடவசதியை பொறுத்தவரையில், குறை சொல்வதற்கு புதிதாக எதுவும் இல்லை. கதவுகளை அகலமாக திறக்க முடிகிறது, மேலும் காருக்குள் ஏறுவதற்கு பெரிய முயற்சி தேவைப்படுவதில்லை. உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் காரைபயன்படுத்தினால், பக்கவாட்டு படிகளை பொருத்துவது சிறந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். முன் இருக்கை இடம், முன்பு போலவே, ஆறு அடி உயரமுள்ள ஓட்டுநருக்கு பின்னால் வசதியாக உட்காருவதற்கு ஆறு அடிக்கு போதுமானது.

சஃபாரியில் டாடா ஒன்-டச் டம்பிலை சேர்க்கவில்லை - அது ஒரு இங்கே குறைதான். எனவே நீங்கள் கேப்டன் இருக்கை பதிப்பில் நடுவில் இருந்து மூன்றாவது வரிசைக்கு 'நடக்கலாம்' அல்லது இரண்டாவது வரிசை இருக்கையை முன்னோக்கி சாய்த்து மடிக்கலாம். மூன்றாவது வரிசை இடம் பெரியவர்களுக்கு வியக்கத்தக்க அளவில் இடமளிக்கிறது, ஆனால் நீண்ட பயணங்களுக்கு, இது குழந்தைகளுக்கே சிறந்ததாக இருக்கும். இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு அடியில் அதிக கால் இடம் இல்லை, எனவே நீங்கள் மையத்தை நோக்கி குறைந்தபட்சம் ஒரு அடி முன்னால் இருக்க வேண்டும்.

புதிய டாடா சஃபாரி 2023 -ன் குறிப்பிடத்தக்க புதிய அம்சங்கள்.

டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல்: டிரைவர் மற்றும் கோ-டிரைவர் பக்கத்திற்கு தனி வெப்பநிலையை கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கிறது. டச் ஸ்கிரீன் மற்றும் குரல் கட்டளை அல்லது சுவிட்சுகளைப் பயன்படுத்தி வெப்பநிலையை கட்டுப்படுத்தலாம்.

பவர்டு ஓட்டுனர் இருக்கை (மெமரி வசதியுடன்): 6-வே பவர்டு அட்ஜஸ்ட் ஃபங்ஷன். லும்பார் சப்போர்ட் மேனுவலாக கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று மெமரி செட்டிங்க்ஸ் இதில் உள்ளன.

12.3-இன்ச் டச்ஸ்கிரீன்: மெல்லிய பெசல்ஸ் உடன் கூடிய ஃப்ரீ-ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் பிரீமியமாக இருக்கிறது. கிராபிக்ஸ் தெளிவானது மற்றும் மிருதுவானது, ரெஸ்பான்ஸ் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் விரைவானது. இன்ஃடர்பேஸ் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கிறது. கிளைமேட் கன்ட்ரோல், பவர்டு டெயில்கேட் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற பல்வேறு கார் செயல்பாடுகளை அணுகவும் பயன்படுத்தலாம்.

10.25-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்: மூன்று காட்சிகள் உள்ளன: 1 டயல் வியூ, 2 டயல் வியூ மற்றும் டிஜிட்டல். சூரிய ஒளியில் கூட திரையைப் படிக்க எளிதானது. ஸ்டீயரிங் வீலில் உள்ள பட்டன்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

10-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்: நல்ல தெளிவு, சிறப்பான பாஸ். இது AudioWorX -ன் 13 சவுண்ட் புரொபைல்களை இது பெறுகிறது, இது நீங்கள் கேட்கும் இசையின் அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய ஈக்வலைஸர் செட்டப்பை வழங்குகிறது.

360 டிகிரி கேமரா: நல்ல தெளிவுத்திறன் கொண்டதாக இருக்கிறது. டிரைவர் தெளிவான பார்வையைப் பெறுகிறார். இடது/வலது என்று குறிப்பது அந்தந்த கேமராவைச் செயல்படுத்தி, லேன் மாற்றங்களைச் செய்து, இறுக்கமான திருப்பங்களைச் சற்று வசதியாக மாற்றுகிறது.

பவர்டு டெயில்கேட்: பூட்டை இப்போது எலக்ட்ரிக்கலி திறக்க முடியும். நீங்கள் பூட்டில் உள்ள சுவிட்சை அழுத்தலாம், சாவியில் உள்ள பட்டனை பயன்படுத்தலாம் அல்லது மொபைலில் உள்ள ஆப் -பை பயன்படுத்தலாம். மாற்றாக, நீங்கள் டச் ஸ்கிரீன் மற்றும் டச் பேனலில் உள்ள பட்டனையும் பயன்படுத்தலாம். ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஆபரேஷனுக்கு பின்பக்க பம்பரின் கீழும் காலை கொண்டு செல்லலாம்.

முன் இருக்கை வென்டிலேஷன், பவர்டு கோ-டிரைவரின் இருக்கை (பாஸ் மோட் உடன்), பின் இருக்கை வென்டிலேஷன் (6 இருக்கை மாடலில் மட்டும்), பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற மற்ற சிறப்பம்சங்கள் புதிய சஃபாரி 2023 -யிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு

பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்காக சஃபாரியில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறுகிறது. ஸ்டாண்டர்டான பாதுகாப்பு அம்சங்கள் பின்வருமாறு:

6 ஏர்பேக்ஸ் ஆல்-வீல் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள்
ABS உடன் EBD ISOFIX சைல்டு சீட் மவுன்ட்ஸ்
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஹில் ஹோல்ட் கன்ட்ரோல்
டிராக்‌ஷன் கன்ட்ரோல் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம்

அட்வென்ச்சர்+ A, அக்கம்பிளிஸ்டு+ மற்றும் அக்கம்பிளிஸ்டு+ டார்க் வேரியன்ட்களுடன் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வழங்கப்படுகிறது.

அம்சம் எப்படி வேலை செய்கிறது? குறிப்புகள்
ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் + ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் முன்னால் உள்ள வாகனத்தின் மீது சாத்தியமான மோதலைக் கண்டறிந்து, கேட்கக்கூடிய எச்சரிக்கையை உங்களுக்கு வழங்குகிறது. நீங்கள் பிரேக் போடவில்லை என்றால், விபத்தைத் தவிர்க்க வாகனம் தானாகவே பிரேக்கை செயல்படுத்தும்.   விபத்தை தடுக்கும் நோக்கம் கொண்ட செயல்பாடு. அவசர காலங்களில் சரியான நேரத்தில் பிரேக் போடுகிறது. மோதல் எச்சரிக்கை உணர்திறன் தேர்ந்தெடுக்கக்கூடியது; லோ, மீடியம், ஹை.
அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் (ஸ்டாப் மற்றும் கோ செயல்பாட்டுடன்) நீங்கள் அதிகபட்ச வேகத்தை அமைத்து உங்களுக்கும் உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்திற்கும் இடையே உள்ள தூரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். சஃபாரி தூரத்தை பராமரிக்க வேகத்தை நிர்வகிக்கிறது. ஸ்டாப் மற்றும் கோ செயல்பாட்டின் மூலம், அது நின்று கொள்கிறது (0kmph) முன்னால் உள்ள வாகனம் நகரத் தொடங்கும் போது தானாகவே முன்னோக்கி நகரத் தொடங்கும். பம்பர்-டு-பம்பர் டிரைவிங்கில் இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும். இந்திய நிலைமைகளின்படி குறைந்தபட்ச தூரம் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அதே சமயம் சீராக ஓட்டுவதைத் தொடர்கிறது. நீண்ட நேரம் நிறுத்தப்படும் பட்சத்தில், ஸ்டீயரிங் வீலில் உள்ள ‘ரெஸ்’ பட்டனை அழுத்தவும் அல்லது ஆக்ஸிலரேட்டரைத் அழுத்த வேண்டியிருக்கும்
பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் உங்களுக்குப் பின்னால் வரும் வாகனங்கள் உங்கள் கண்ணாடியின் பார்வையில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறியும். கண்ணாடியில் தெரியும் ஆரஞ்சு நிற அறிகுறி. நெடுஞ்சாலை மற்றும் நகர போக்குவரத்தில் பாதைகளை மாற்றும் போது உதவியாக இருக்கும்.
ரியர் கிராஸ் ட்ராஃபிக் அலர்ட் வாகனத்தின் பின்னால் வரும் வாகனங்களைக் கண்டறிகிறது. வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து நீங்கள் திரும்பிச் சென்றாலும், எதிரே வரும் வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியாமலும் இருந்தால் உதவியாக இருக்கும். நீங்கள் சாலையின் ஓரத்தில் நிறுத்தும்போது கதவு திறந்திருக்கும் போது அதை எச்சரிக்கையும் செய்யும்.

ட்ராஃபிக் சைன் ரெக்கனைசேஷன், லேன் டிபார்ச்சர் வார்னிங், பின்பக்க மோதல் எச்சரிக்கை மற்றும் ஓவர்டேக்கிங் அசிஸ்ட் போன்ற மற்ற அம்சங்களும் உள்ளன. டாடா மோட்டார்ஸ் வரும் மாதங்களில் லேன் சென்டரிங் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் ஆகிய வசதிகளை மென்பொருள் அப்டேட்களாக சேர்க்கும்.

செயல்பாடு

சஃபாரி தொடர்ந்து 2 லிட்டர் டீசல் இன்ஜினை பெறுகிறது. இன்ஜினின் டியூனிங்கில் எந்த மாற்றமும் இல்லை - இது முன்பு போலவே 170PS மற்றும் 350Nm அவுட்புட்டை உருவாக்குகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது.

டிரைவிற்கு அதிக வசதியை சேர்க்கும் என்பதால், ஆட்டோமெட்டிக் எடிஷனை வாங்க பரிந்துரைக்கிறோம். சஃபாரி ஓட்டும் விதத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. சிட்டி டிரைவ்களுக்கு இன்ஜின் ரெஸ்பான்ஸ் திருப்திகரமாக உள்ளது மற்றும் நீண்ட நெடுஞ்சாலை டிரைவ்களுக்கு போதுமான சக்தி -யும் உள்ளது. கியர்களை நீங்களே மாற்றிக் கொள்ளும் உணர்வை நீங்கள் விரும்பினால், டாடா மோட்டார்ஸ் இப்போது ஆட்டோமேட்டிக் உடன் பேடில் ஷிஃப்டர்களை வழங்குகிறது.

முன்பு போலவே, சஃபாரி எக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவ் மோடுகளை பெறுகிறது. மூன்று 'டெரெய்ன்' மோட்கள் உள்ளன: ரஃப், வெட் மற்றும் நார்மல்.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

முந்தைய பதிப்பின் 18 இன்ச் -லிருந்து 19 அங்குலமாக வீல் அளவு உயர்ந்துள்ளது. இந்த செயல்பாட்டில், சவாரி வசதி மோசமாகிவிடும் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் அது அப்படி இருப்பதில்லை: டாடா சஸ்பென்ஷனை வசதியாகவும், கடுமையான தாக்கங்களை குறைக்கவும் நன்றாக மாற்றியுள்ளது. சில சமயங்களில் மெதுவான வேகத்தில் மேற்பரப்பை நீங்கள் உணரலாம், ஆனால் மோசமான சாலைகளில் செல்லும்போது பக்கவாட்டாக அசைவுகள் அதிகம் இருக்காது. சஃபாரி மூன்று இலக்க வேகத்தில் நம்பிக்கையுடனும் வசதியுடனும் இருக்கிறது, நெடுஞ்சாலை பயணங்களை இது மிகவும் சுவாரஸ்யமாக மாற்றுகிறது.

டாடா இப்போது எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் -கை பயன்படுத்துகிறது, இது சிறந்த ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸை வழங்க அவர்களுக்கு உதவியுள்ளது. நகரின் உள்ளே குறுகலான இடங்களில் வேகமாக யூ-டேர்ன் செய்வதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்கும் போதுமான அளவுக்கு எளிமையாக உள்ளது. அதே நேரத்தில், அதிக வேகத்தில் எடையும் திருப்திகரமாக இருந்தது.

வெர்டிக்ட்

சஃபாரி எப்போதும் அதன் பக்கத்தில் இருப்பு, வசதி மற்றும் இடம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த அப்டேட் மூலம், டாடா மோட்டார்ஸ் ஒரு சிறந்த வடிவமைப்பு, உட்புறத்தில் அப்மார்க்கெட் ஃபீலிங் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ADAS உடன் சிறந்த தொழில்நுட்ப பேக்கேஜ் ஆகியவற்றுடன் இந்த காரை மிகவும் விரும்பத்தக்கதாக மாற்றியுள்ளது.

டாடா சாஃபாரி இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு ஒரு தைரியமான தோற்றத்தை அளிக்கிறது.
  • பிரீமியம் இன்டீரியர் வடிவமைப்பு மற்றும் சிறந்த அனுபவம்.
  • அனைத்து வரிசைகளிலும் பெரியவர்களுக்கு போதுமான இடம்.
  • சிறந்த வசதிகள்: 12.3" டச் ஸ்கிரீன், 10.25" டிரைவர் டிஸ்பிளே , சீட் வென்டிலேஷன், JBL சவுண்ட் சிஸ்டம் மற்றும் பல

நாம் விரும்பாத விஷயங்கள்

  • பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் அல்லது ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் இல்லை
  • டீசல் இன்ஜின் இன்னும் ரீஃபைன்மென்டாக இருந்திருக்கலாம்

இதே போன்ற கார்களை சாஃபாரி உடன் ஒப்பிடுக

Car Nameடாடா சாஃபாரிடாடா ஹெரியர்மஹிந்திரா எக்ஸ்யூவி700மஹிந்திரா scorpio nடொயோட்டா ஃபார்ச்சூனர்டொயோட்டா இனோவா கிரிஸ்டாமஹிந்திரா ஸ்கார்பியோஎம்ஜி ஹெக்டர் பிளஸ்எம்ஜி ஹெக்டர்ஹூண்டாய் அழகேசர்
டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல் / ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக் / மேனுவல்மேனுவல் / ஆட்டோமெட்டிக்மேனுவல்மேனுவல்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ஆட்டோமெட்டிக் / மேனுவல்ஆட்டோமெட்டிக் / மேனுவல்
Rating
129 மதிப்பீடுகள்
195 மதிப்பீடுகள்
835 மதிப்பீடுகள்
579 மதிப்பீடுகள்
492 மதிப்பீடுகள்
238 மதிப்பீடுகள்
725 மதிப்பீடுகள்
152 மதிப்பீடுகள்
305 மதிப்பீடுகள்
353 மதிப்பீடுகள்
என்ஜின்1956 cc1956 cc1999 cc - 2198 cc1997 cc - 2198 cc 2694 cc - 2755 cc2393 cc 2184 cc1451 cc - 1956 cc1451 cc - 1956 cc1482 cc - 1493 cc
எரிபொருள்டீசல்டீசல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல்டீசல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்டீசல் / பெட்ரோல்
எக்ஸ்-ஷோரூம் விலை16.19 - 27.34 லட்சம்15.49 - 26.44 லட்சம்13.99 - 26.99 லட்சம்13.60 - 24.54 லட்சம்33.43 - 51.44 லட்சம்19.99 - 26.30 லட்சம்13.59 - 17.35 லட்சம்17 - 22.76 லட்சம்13.99 - 21.95 லட்சம்16.77 - 21.28 லட்சம்
ஏர்பேக்குகள்6-76-72-72-673-722-62-66
Power167.62 பிஹச்பி167.62 பிஹச்பி152.87 - 197.13 பிஹச்பி130 - 200 பிஹச்பி163.6 - 201.15 பிஹச்பி147.51 பிஹச்பி130 பிஹச்பி141.04 - 227.97 பிஹச்பி141 - 227.97 பிஹச்பி113.98 - 157.57 பிஹச்பி
மைலேஜ்16.3 கேஎம்பிஎல்16.8 கேஎம்பிஎல்17 கேஎம்பிஎல்-10 கேஎம்பிஎல்--12.34 க்கு 15.58 கேஎம்பிஎல்15.58 கேஎம்பிஎல்24.5 கேஎம்பிஎல்

டாடா சாஃபாரி கார் செய்திகள் & அப்டேட்கள்

  • நவீன செய்திகள்

டாடா சாஃபாரி பயனர் மதிப்புரைகள்

4.3/5
அடிப்படையிலான129 பயனாளர் விமர்சனங்கள்
  • ஆல் (129)
  • Looks (27)
  • Comfort (69)
  • Mileage (14)
  • Engine (41)
  • Interior (37)
  • Space (17)
  • Price (15)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • An Iconic SUV With Unmatched Trustworthiness

    The Tata Safari is energized by an enthusiastic diesel engine that conveys strong execution and abov...மேலும் படிக்க

    இதனால் indresh
    On: Apr 18, 2024 | 105 Views
  • Tata Safari Iconic Design Unrivalled Trustability

    With its Classic looks that epitomizes adventure, the Tata Safari promises Rich gests both on and of...மேலும் படிக்க

    இதனால் nirupam
    On: Apr 17, 2024 | 74 Views
  • Tata Safari Is The Best

    Certainly! Here's an expanded review:"The Tata Safari is an outstanding SUV that combines style, com...மேலும் படிக்க

    இதனால் சன்னி
    On: Apr 17, 2024 | 76 Views
  • Tata Safari Is A Great Value For Money, It Is Loaded With Lastest...

    The Tata Safari is an impressive SUV that suits for a family car. Its spacious interior offers ample...மேலும் படிக்க

    இதனால் aditya
    On: Apr 15, 2024 | 180 Views
  • A Good Car

    The new Tata Safari successfully combines the brand's legacy of ruggedness and reliability with mode...மேலும் படிக்க

    இதனால் surya
    On: Apr 14, 2024 | 40 Views
  • அனைத்து சாஃபாரி மதிப்பீடுகள் பார்க்க

டாடா சாஃபாரி மைலேஜ்

இந்த மேனுவல் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.3 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்மேனுவல்16.3 கேஎம்பிஎல்

டாடா சாஃபாரி வீடியோக்கள்

  • Tata Nexon, Harrier & Safari #Dark Editions: All You Need To Know
    3:12
    டாடா Nexon, ஹெரியர் & சாஃபாரி #Dark Editions: ஆல் you Need To Know
    27 days ago | 13K Views
  • Tata Harrier 2023 and Tata Safari Facelift 2023 Review in Hindi | Bye bye XUV700?
    12:55
    Tata Harrier 2023 and Tata Safari Facelift 2023 Review in Hindi | Bye bye XUV700?
    1 month ago | 6.7K Views
  • Tata Safari vs Mahindra XUV700 vs Toyota Innova Hycross: (हिन्दी) Comparison Review
    19:39
    Tata Safari vs Mahindra XUV700 vs Toyota Innova Hycross: (हिन्दी) Comparison Review
    1 month ago | 12.8K Views
  • Tata Safari Review: 32 Lakh Kharchne Se Pehele Ye Dekh Lo!
    9:50
    டாடா சாஃபாரி Review: 32 Lakh Kharchne Se Pehele Ye Dekh Lo!
    1 month ago | 1.3K Views
  • Tata Safari 2023 Variants Explained | Smart vs Pure vs Adventure vs Accomplished
    13:42
    Tata Safari 2023 Variants Explained | Smart vs Pure vs Adventure vs Accomplished
    5 மாதங்கள் ago | 17.1K Views

டாடா சாஃபாரி நிறங்கள்

  • cosmic கோல்டு
    cosmic கோல்டு
  • galactic sapphire
    galactic sapphire
  • supernova coper
    supernova coper
  • lunar slate
    lunar slate
  • stellar frost
    stellar frost
  • oberon பிளாக்
    oberon பிளாக்
  • ஸ்டார்டஸ்ட் ash
    ஸ்டார்டஸ்ட் ash

டாடா சாஃபாரி படங்கள்

  • Tata Safari Front Left Side Image
  • Tata Safari Front View Image
  • Tata Safari Rear Parking Sensors Top View  Image
  • Tata Safari Grille Image
  • Tata Safari Taillight Image
  • Tata Safari Wheel Image
  • Tata Safari Exterior Image Image
  • Tata Safari Exterior Image Image
space Image

டாடா சாஃபாரி Road Test

கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

What is the Transmission Type of Tata Safari?

Anmol asked on 6 Apr 2024

The Tata Safari has a 6-speed manual or 6-speed automatic transmission.

By CarDekho Experts on 6 Apr 2024

How much waiting period for Tata Safari?

Devyani asked on 5 Apr 2024

For the availability and waiting period, we would suggest you to please connect ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 5 Apr 2024

Is it available in Jaipur?

Anmol asked on 2 Apr 2024

For the availability and waiting period, we would suggest you to please connect ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 2 Apr 2024

How much waiting period for Tata Safari?

Anmol asked on 30 Mar 2024

For the availability and waiting period, we would suggest you to please connect ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 30 Mar 2024

How much waiting period for Tata Safari?

Anmol asked on 27 Mar 2024

For the availability and waiting period, we would suggest you to please connect ...

மேலும் படிக்க
By CarDekho Experts on 27 Mar 2024
space Image
டாடா சாஃபாரி Brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

இந்தியா இல் சாஃபாரி இன் விலை

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs. 20.42 - 34.56 லட்சம்
மும்பைRs. 19.52 - 32.99 லட்சம்
புனேRs. 19.54 - 33.30 லட்சம்
ஐதராபாத்Rs. 19.99 - 33.78 லட்சம்
சென்னைRs. 20.12 - 34.28 லட்சம்
அகமதாபாத்Rs. 18.30 - 30.78 லட்சம்
லக்னோRs. 18.88 - 31.64 லட்சம்
ஜெய்ப்பூர்Rs. 19.47 - 32.04 லட்சம்
பாட்னாRs. 19.33 - 32.41 லட்சம்
சண்டிகர்Rs. 18.24 - 30.91 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா altroz racer
    டாடா altroz racer
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மே 20, 2024
  • டாடா curvv
    டாடா curvv
    Rs.10.50 - 11.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ்ட் 15, 2024
  • டாடா curvv ev
    டாடா curvv ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூலை 16, 2024

Popular எஸ்யூவி Cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
view ஏப்ரல் offer

Similar Electric கார்கள்

Did you find this information helpful?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience