டாடா நானோ

` 2.2 - 3.2 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்டுகள்:


மே 05, 2015: டாடா மோட்டார் நானோ ஜென்Xஐ மே 19, 2015ல் அறிமுகம் செய்கிறது; நாடு முழுவதிலிமிருந்து டீலர்கள் ரூபாய் 5,000 முன்பணத்துடன் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். புதிய நானோ ஜென்X நான்கு டிரிம்களில் XE, XM, XT மற்றும் AMT மாடல் XTAகளில் அறிமுகம் செய்யப்படும் என்று வீதியெங்கும் பேசப்படுகிறது. கடந்த வாரம், கம்பெனியானது இப்போது இருக்கிற நானோ வாடிக்கையாளர்களுக்கு விசேஷித்த திட்டத்தை அறிமுகம் செய்து இந்த ஜென்X நானோவுக்கான முன்-அறிமுக ஏற்ப்பாடுகளை தொடங்கியுள்ளது. சலுகையின் கீழ், தற்போதைய உரிமையாளர்கள் போனஸ் தொகை ரூபாய் 20,000-யுடன் அவர்கள் கார்களுக்கான சிறந்த எகஸ்சேன்ஜ் விலையை பெறுவார்கள். வாடிக்கையாளர்கள் கம்பெனியின் பரிந்துரை திட்டத்தின் கீழ் ரூபாய் 5,000 பரிசுத்தொகையை வென்றெடுக்கலாம். இது தவிர, ஜென்X நானோ AMT யை வாங்குவதில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குவதற்காக டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ் பார்ட்னர்களுடன் கூட்டு வைத்துள்ளது.

மேலோட்டம்:


டாடா மோட்டார்ஸ் உலகத்திலேயே மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது மேலும் ஆட்டோமெபைல் தயாரிப்பில் நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. நீடித்து உழைக்கக்கூடிய, எளிதாக பராமரிக்கக்கூடிய மற்றும் எளிதில் வாங்கக்கூடிய கார்களை தயாரிப்பதற்காக இது இந்திய வாகன சந்தைகளில் மிகவும் புகழ்ச்சியாக பேசப்படுகிற கம்பெனிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வணிக மற்றும் பயணிகள் கார் தயாரிக்கும் கம்பெனி டாடா சஃப்பாரி, டாடா அரியா, டாடா இன்டிகா மற்றும் பல வடிவத்தில் மிகவும் தரமான சில மாடல்களை தயாரித்துள்ளது. உலகத்திலேயே மலிவான மிகச் சிறிய காராக அறியப்படுகிற டாடா நானோவை டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ளது மேலும் இது இந்தியாவின் சாதாரண மனிதனை குறி வைத்துள்ளது. டாடா நானே 2009ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு பட்ஜெட் கார் வாங்கும் இந்தியர்களை சுண்டி இழுக்க வைத்தது ஆனால் பின்னர் இது கடினமான தருணங்களை சந்தித்தது. மிக அதிகமான தயாரிப்பு செலவு மற்றும் அரசின் வரிகள் அதனுடைய விலையை உயர்த்தும்படியாக டாடா மோட்டார்ஸை நிர்பந்தப்படுத்தியது. எனினும், பிற எந்த வகையையும் விட தனது விலையை குறைவாக வைத்துக்கொள்ளுமாறு கம்பெனி பார்த்துக்கொண்டது. குறைந்த விலை கொண்ட சிறிய காராக இருந்தாலும், உள்ளே சில கிளர்ச்சியூட்டக்கூடிய அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. விற்பனையை அதிகரிக்கவும் டாடா நானோவுக்கு ஒரு இளமையான தோற்றத்தை கொடுக்கவும், கார் ஆர்வலர்களை சுண்டி இழுக்க டாடா நானோவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை கம்பெனி அறிமுகம் செய்துள்ளது. எனினும், இந்த புதிய பதிப்பானது இந்திய வாகன ஆர்வலர்களுக்கு இந்த வருடத்தின் இறுதியில் கிடைக்கும். இந்த புதிய பதிப்பு ஆற்றல், முறுக்குதிறன் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதனுடைய எரிபொருள் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது, இது உண்மையிலேயே ஆச்சரியமானதாக இருக்கிறது. இந்த உள்நாட்டு தயாரிப்பு வாகனம் எஞ்சின் தொழில்நுட்பங்கள், அம்சங்கள் மற்றும் வெளிப்புறங்களில் மட்டும் பணியாற்றாமல் இந்த வகையின் உட்புற வடிவத்திலும் கூட அது மேம்பட்டுள்ளது.

2013 டாடா நானோ புத்தம் புதிய அவதாரத்தில் வருகிறது இது உள்நாட்டு உற்பத்தியாளரை இந்திய ஆட்டோமெபைல் பிரிவில் அதனுடைய முதல் இடத்தை திரும்பவும் பிடிக்க இது உதவப்போகிறது. மிக அதிகப்படியான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் ஸ்டைலுடன், அதனுடைய இளமையான தோற்றத்தின் வாயிலாக இளைய தலைமுறையை குறிவைக்க கம்பெனி முயற்சிக்கும். புதிய டாடா நானோவின் ஆற்றல் மற்றும் மைலேஜ் இரண்டிலும் மேம்பட்டுள்ளதாக சில நெருக்கமான கூட்டாளிகள் தெரிவித்துள்ளார்கள். நம்பப்படும் ஆதராங்களின் படி, (ARAI சான்று வழங்கியது போல) ஏறக்குறைய 25.40 Kmpl என்ற ஒரு சிறந்த முன்னேற்றமான மைலேஜை 2013 டாடா நானோ கொடுக்கும். மறுபுறம், முறுக்குதிறன் வெளிப்பாடு 48Nm யிலிருந்து 51Nmக்கு உயர்த்ப்பட்டுள்ளதால் எஞ்சின் 34.5 bhp க்கு பதிலாக 37.5bhpயை உற்பத்தி செய்யும். குறைவான கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுவதை உறுதிசெய்யும் உலகத்தின் மலிவான காரின் எரிபொருள் திறனை மேம்படுத்த கம்பெனி கடினமாக உழைத்துள்ளது.

இந்த உள்நாட்டு ஆட்டோமொபைல் கம்பெனி ஆட்டோமொபைல் பிரிவில் மிகவும் எரிபொருள் திறனுடைய ஒன்றாக நம்பப்படும் ஆற்றல்மிக்க 642cc பெட்ரோல் + CNG சார்ந்த எஞ்சின் கொண்ட டாடா நானோவின் CNG பதிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஊக்கமுள்ள எஞ்சின் ஒரு சிறந்த முன்னேற்றமான மைலேஜ்க்கு திரும்ப உதவும் MPFI (பன்முனை எரிபொருள் இஞ்செக்ஷன்) எரிபொருள் விநியோக அமைப்பு கொண்ட இரண்டு சிலிண்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இதனுடைய CNG பதிப்பில் அதன் எஞ்சின் ஆற்றல் குறைந்துள்ளது. பெட்ரோல் பதிப்பில் 37.5bhp 51Nm உடன் ஒப்பிடுகையில் 45Nm முறுக்குதிறன் கொடுக்கும்போது டாடா நானோ CNG பதிப்பு ஏறக்குறைய 32bhp ஆற்றலையே உற்பத்தி செய்கிறது. எனினும் இந்த எஞ்சின் அதனுடைய எரிபொருள் ஆற்றல் மற்றும் செயல்திறனை அதிகரிப்பதில் பங்கெடுக்கும் ஒரு 5 வேக (4 முன்பாக செல்லும் மற்றும் 1 பின்பாக செல்லும்) கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. நானோவின் இந்த புதிய 2013 பதிப்பு சிறந்த அக்ஸலரேஷன் மற்றும் பிக் அப் உடன் வருகிறது. இந்த சிறிய பொருளாதார கார் அதனுடைய அதிகபட்ச வேகமாக ஏறக்குறைய 105 Kmph ஐ அடையும் திறனுடையதாக இருக்கிறது. இந்த புதிய நானோ பதிப்பு மாபெரும் கையாளும் திறன் மற்றும் ஓட்டும் வசதிகளுடன் கூடிய ஒரு உயரிய செயல்பாட்டாளராக அறியப்பட்டுள்ளது. முன்புற அக்ஸிலில் உள்ள ஒரு அனைத்து புதிய ஆன்டி ரோல் பாரை கொண்டுள்ள அதனுடைய சஸ்பென்ஷன் அமைப்பில் ஒரு சில சிறிய மாற்றங்களை கம்பெனி செய்துள்ளது.

2013 டாடா நானே முன் மற்றும் பின் இரண்டு முனைகளிலும் அநேக பிரிமியம் பொருட்களை கொண்ட ஒரு புதிய தோற்றத்தை கூட்டுகிற ஒரு குரோம் ஸ்டிரிப்பை பெற்றிருக்கிறது. டாடா நானோவின் இந்த 2013 பதிப்பின் உட்புறங்களில் கம்பெனி அழகாக வேலை செய்துள்ளது. உள்ளிருந்து வலிமையான மற்றும் போட்டிமனப்பான்மை உணர்வை உண்டாக்கும் அடர்த்தியான கலர்களை நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. அதிக சவுகரியத்தை உண்டாக்குவதற்காகவும் உள்ளிருப்பவர்கள் அனைவரும் ஓய்வுற்றிருக்கவும் பிரிமியம் தரம்கொண்ட துணிகளால் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அநேக மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் நானோ 2013 பதிப்பு இந்திய சந்தைகளில் இறங்கியிருக்கிறது, இது பிற உற்பத்தியாளர்களை அவர்களுடைய பணத்திற்காக ஓட வைக்கிறது. கம்பெனி 4 வருட/60,000 கிலோமீட்டர் வாரண்டியை இந்த குறைந்த விலை காருக்கு கொடுக்கிறது, இது மிகவும் ஆச்சரியமானதாக இருக்கிறது.

மைலேஜ்:


இந்திய வாகன தலைவர் டாடா நானோ சிறிய கார் ஒருவேளை சந்தையில் கிடைக்கும் எரிபொருள் சிக்கனம் நிறைந்த வாகனமாக இருக்கலாம். 23.6 Kmpl மைலேஜ் கொடுக்கிற முந்தின பதிப்பை ஒப்பிடுகையில் டாடா நானோவின் சமீபத்திய 2013 பதிப்பு ஏறக்குறைய 25.35 Kmpl க்கு திரும்பும் ஒரு திறனுடனான எரிபொருள் ஆற்றல் அடிப்படையில் மேம்பட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனைக்காக தற்போது உள்ள காரிலேயே மிகவும் எரிபொருள் ஆற்றல் பெட்ரோல் காராக நானோவை இது உண்டாக்குகிறது. கம்பெனியின் கடின உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அனுகுமுறை மிகவும் எரிபொருள் ஆற்றல்மிக்க பெட்ரோல் சக்திகொண்ட காரை உற்பத்தி செய்ய வைத்திருக்கிறது. அதிக மைல்கள் கொடுக்கும் மற்றும் குறைவான கார்பன்டைஆக்சைடை உமிழச் செய்வதற்காக அதனுடைய திறனை மேம்படுத்த ஏறக்குறை 3 Nm முறுக்குதிறன் அதிகரிப்பு பங்கெடுத்துள்ளது. இந்த சிறிய பொருளாதார காரின் மற்றொரு உண்மை என்னவென்றால் பாரத் ஸ்டேஜ் IV இன் விதிமுறைகளை நிறைவேற்ற இந்த கார் ஆதரவாக வேலை செய்கிற அதனுடைய குறைந்த கட்டுப்பாட்டு எடை ஏறக்குறைய 600 கிலோவாகும், அதேநேரத்தில் மாபெரும் எரிபொருள் ஆற்றலை பெறுகிறது. உலகத்தின் மிக மலிவான கார் ஏறக்குறைய 15 லிட்டர்கள் எரிபொருள் சேமிப்புக் கொள்கலன் வடிவமைப்பில் ஒரு பின்னடைவை பெற்றுள்ளது.

ஆற்றல்:


எட்டினுடைய எடுத்தல்: நானோ உற்பத்தி செய்கிற ஆற்றல் பேப்பரில் மிக குறைவாக இருக்கலாம், ஆனால் எடை விகிதத்திற்கான ஆற்றல் அதனுடைய வேலையை செய்வதே உண்மையாயிருக்கிறது. CNG நகர மற்றும் நெடுஞ்சாலையில் போதுமான ஆற்றலை பெற்றிருக்கிறது. டாடா நானோவின் இந்த 2013 பதிப்பு அதனுடைய வெளிப்புறங்கள், உட்புறங்கள் மற்றும் எரிபொருள் ஆற்றலில் மேம்பட்டது மட்டுமல்லாமல் அதனுடைய ஆற்றலும் மேம்பட்டுள்ளது. MPFI (பல்முனை எரிபொருள் இன்ஜெக்ஷன்) எரிபொருள் விநியோக அமைப்பின் இணைப்பு சிறந்த ஆற்றல் மற்றும் சிறந்த மைலேஜை கொடுக்க உதவுகிறது. இந்த சிறிய கார் 2 சிலிண்டர்கள், 624 cc சார்ந்த பெட்ரோல் மில் பொருத்தப்பட்டு வருகிறது, இது மேலும் MPFI எரிபொருள் இன்ஜெக்ஷன் அமைப்பை இணைக்கிறது. இது இந்த பெட்ரோல் மில் 5200 முதல் 5500rpmல் அதிகபட்சமாக ஏறக்குறைய 37.5bhp ஸ்திரமான ஆற்றலை கொடுக்க உதவுகிறது, அதேசமயம் 3500rpm யிலிருந்து 4000rpmக்குள் அதிகபட்சமாக 51Nm முறுக்குதிறன் வெளிப்பாட்டை வெளியிடுகிறது. CNG பதிப்பு பெட்ரோல் பதிப்புடன் ஒப்பிடுகையில் அது 32bhpயை உற்பத்தி செய்வதினாலும் கிட்டத்தட்ட 45Nm முறுக்குதிறனை கொடுப்பதனாலும் கொஞ்சம் ஆற்றல் குறைந்ததாக இருக்கிறது. சிறந்த எரிபொருள் ஆற்றலை CNG பதிப்பில் எதிர்பார்க்கிறவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்காது.

அக்ஸலரே ன்:


எட்டினுடைய எடுத்தல்: நானோவின் தடையற்ற அக்ஸலரேஷன் நகர ஓட்டுதலுக்கு போதுமானவிதத்தில் சிறப்பானதாக உள்ளது. நெடுஞ்சாலையை நீங்கள் சென்றடையாத வரை நீங்கள் ஒரு திறந்த சாலையில் சென்றால் அது நன்றாக இருக்கும். பிக்அப் மற்றும் அக்ஸலரேஷனுக்கு இந்த 2013 டாடா நானோ ஒரு மோசமான காராக இருக்காது. இந்த 2013 டாடா நானோவின் முழு அக்ஸலரேஷனும் நகர ஓட்டுதலுக்கும் நெடுஞ்சாலைக்கும் உகந்ததாக இருக்கிறது. அதனுடைய 624cc, MPFI எரிபொருள் விநியோக அமைப்பு சார்ந்த பெட்ரோல் டிரிம் போதுமான அளவு முறுக்குதிறன் மற்றும் ஆற்றலை சக்கரங்களுக்கு கொடுக்கும் ஒரு ஐந்து வேக (4 முன்புறம் செல்லும் மற்றும் 1 பின்புறம் செல்லும்) கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட செயல்திறன் எஞ்சின் இந்த சிறிய காரை ஏறக்குறைய 29.7 வினாடிகளில் 100 Kmph அளவை அடைய உதவுகிறது. இந்த கார் உச்ச வேகமாக கிட்டத்தட்ட 105 Kmphஐ அடைய முடியும், இது நகர ஓட்டுதல் நிலைகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.

வெளிப்புறங்கள்:


அனைத்து புதிய 2013 டாடா நானே கார்களும் அதை முழுவதும் புத்துணர்ச்சியுடையதாக தோன்றச் செய்யும் சில சிறிய ஒப்பணைப் பொருட்களில் மாற்றங்களை பெற்றிருக்கிறது. முதல் முறையாக கார் வாங்குபவர்களை குறி வைக்கிற மலிவு விலை சிறிய வசதியான காராக இது இருக்கிறது. நடுத்தர வர்க்க குடும்பங்களில் அவர்களுடைய கனவை நனவாக்குவதற்காக மிகவும் குறைந்த விலையிலான இந்த சிறிய காரை கம்பெனி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடைய விலை மிகவும் குறைவானதாக இருந்தாலும், அதனுடைய வெளிப்புறங்களின் வடிவமைப்பு மற்றும் ஒப்பணைப்பொருட்களை அழகுபடுத்துவதில் கம்பெனி கவனம் செலுத்தியுள்ளதால் இது ஒரு மலிவான காராக தோற்றமளிக்காது. முந்தைய பதிப்பை விட சமீபத்திய பதிப்பு சிறிய மேம்பாடுகளுடன் மிகவும் சிறந்ததாக தோன்றுகிறது. இந்த சிறிய காரின் முன் முகப்பு அதில் பொருத்தப்பட்ட குரோம் பூசப்பட்ட கம்பெனி சின்னத்துடனான ஒரு உணர் வரிசை கொண்ட மிகைப்பாடான பானட்டால் அடையாளம் காணப்படுகிறது. பானட்டுடன் இணைக்கப்பட்டுள்ள டயமண்ட் வடிவ தலைவிளக்குகளை நீங்கள் பார்க்கலாம், இது மேலும் ஒரு திரும்புதலுக்கான இன்டிகேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனுடைய பானட் சிறியதாக இருந்தாலும், அது நானோவுக்கு ஒரு இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. இந்த பானட்டின் அடி முனையில் ஒரு குரோம் ஸ்டிரிப் பொருத்தப்பட்டுள்ளது அது பிற பிரிமியம் கார் வரிசையிலுள்ள தோற்றத்தை உண்டுபண்ணுகிறது. முன் கண்ணாடியில் இரண்டு வேகமான விட்டுவிட்டு செயல்படும் வைப்பர் ஒரு வாஸருடன் இடம்பெற்றுள்ளது. பானட்டுக்கு கீழே வருகையில், காற்றுக் கலனுடன் இணைகிற உடற்கட்டு கலர் பம்பரை காணலாம். அழகை கூட்டும் அதிக துளைகளை பம்பர் கொண்டிருக்கிறது, அதே சமயம் டயமண்ட் வடிவ பனிமூட்ட விளக்குகள் முன் முகப்பை அலங்கரிக்கிறது. எனினும், இந்த பனிமூட்ட விளக்குகள் நானோவின் உச்ச முனை பதிப்பில் பொருத்தப்பட்டுள்ளது. இப்போது, பக்கவாட்டு தோற்றத்திற்கு வரும்போது, ஓட்டுநர் பக்கமும் பயணியினுடைய பக்கமும் உடற்கட்டு நிறமுடைய வெளிப்புறத்திலுள்ள பின்புறம் காணும் கண்ணாடியை நீங்கள் பார்க்கலாம். கதவின் கைப்பிடிகளும் கூட உடற்கட்டு நிறத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது, இது அதை மிகவும் அழகாக்குகிறது. பின் சக்கரத்தின் வளைவின் மேல் ஒரு சிறிய காற்றுக் குழாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது அது மேம்பாட்டுக் கூறுகளை சேர்க்கும்போது எஞ்சினை குளிரூட்டுவதற்கான காற்றை உள்ளே எடுக்கிறது. மறுபக்கம், நானோவின் 2013 பதிப்பு சக்கர மூடி மீது ஆறு பெடல் வடிவ ஆரங்கள் கொண்ட ஒரு புதிய சக்கர மூடியை பெற்றிருக்கிறது. அதனுடைய பக்கவாட்டு தோற்றத்தை நீங்கள் ஒரு நெருக்கமான பார்வையை ஏறெடுத்தால், நானோ ஒரு உயரமான தரை தளத்தை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயமாக காண்பீர்கள், இது முரட்டுத்தனமான தெருக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது மேலும் இது எல்லா வகையான ரோடுகளிலும் ஓடக்கூடியதாயிருக்குகிறது. காருக்குள்ளிருக்கிற பயணிகள் சாலைகளில் ஏற்படுகிற குலுக்கலை தவிர்க்க அது உதவும். இந்த சிறிய காரின் பின் முனை ஒரு குரோம் ஸ்டிரிப்பை டிக்கி மூடியில் பெற்றிருக்கிறது அது பின்புறத்திற்கு மேலும் பிரிமியம் அழகை கூட்டுகிறது. மற்ற வடிவமைப்பு முந்தின பதிப்பில் உள்ளது போலவே இருக்கிறது.

வெளிப்புற அளவீடுகள்:


உலகிலேயே மிக மலிவான டாடா மோட்டாரின் காரான டாடா நானோ மொத்தத்தில் கிட்டத்தட்ட 3099மிமீ நீளமும் மற்றும் கிட்டத்தட்ட 1495மிமீ அகலமும் (பின்புறம் காணும் வெளிப்புற கண்ணாடி இல்லாமல்) கொண்டதாக வருகிறது. அது கிட்டத்தட்ட 1652மிமீ அளவு மிக நல்ல உயரத்தை கொண்டிருக்கிறது மற்றும் அது கிட்டத்தட்ட 2230மிமீ இடவசதி கொண்ட வீல்பேஸ் மீது வடிவமைக்கப்பட்டுள்ளது, இது நீங்கள் எதிர்பார்ப்பதைவிட மிக அதிகமான இடவசதியை உட்புறங்களுக்கு உண்டாக்குகிறது. மறுபக்கம், அதனுடைய தரை தளம் 180மிமீ ஆக கணக்கிடப்பட்டிருக்கிறது, இது மேடுபள்ளமான சமமற்ற சாலைகளில் காரை ஓட்டிச் செல்வதற்கு உதவியாக இருக்கிறது. (பின்புற இருக்கை மடிப்பு இல்லாமல்) கிட்டத்தட்ட 80-லிட்டர்கள் டிக்கி இடவசதியை கொண்டிருக்கிறது மற்றும் பின் இருக்கை மடிப்புடன் 500-லிட்டர்கள் சேமிப்பு இடவசதியை நீங்கள் பெறுவீர்கள்.

உட்புறங்கள்:


உலகத்திலேயே மிக மலிவான காரினுடைய உட்புற கேபின் பிரிவை வடிவமைக்கும்போது டாடா மோட்டார் மிக அதிக அக்கறை எடுத்துள்ளது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு அது சிறியதாகவும் கச்சிதமானதாகவும் இருக்கிறது ஆனால் பெரிய கால் வைக்கும் இடவசதி, தோள் வைக்கும் இடவசதி மற்றும் தலை வைக்கும் இடவசதியை காண்பதற்கு ஒருவர் உள்ளே சென்று பார்க்க வேண்டும். இந்த சிறிய காரின் கேபின் இடவசதி தனித்தன்மைவாய்ந்ததாக இருக்கிறது மற்றும் கேபினுக்கு உள்ளே உள்ள அம்சங்கள் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது அது விலையினுடைய ஒவ்வொரு பணத்தையும் மதிப்புடையதாக்குகிறது. டாடா நானோவின் 2013 பதிப்பு LX டிரிம்மின் ஒரு தேர்வாக ஒரு கருப்பு உட்புறத்தை பெறுகிறது, அதற்கு அதகப்படியான போட்டித்தன்மையான தோற்றத்தை உள்ளிருந்து கொடுக்கிறது. இந்த காரின் உள் வசதி நிலைகள் பிரிமியம் துணி விரிப்பு, நேர்த்தியான வடிவ டேஸ்போர்டு மற்றும் இதுபோன்றவைகளால் ஒரு புதிய உயரத்தை அடைந்திருக்கிறது. உயர் நிலை LX டிரிம் வெளிறிய துணி விரிப்பை கொடுக்கிறது அதே சமயம் நடுத்தர பதிப்பு CX நவநாகரீக கருப்பு விரிப்பை வழங்குகிறது. மாறுபட்ட நிற விளைவை ஏற்ப்படுத்துவதற்காக, இந்த சிறிய காரின் டேஸ்போர்டு மிதமான கிராபைட், பார்லி பழுப்பு மற்றும் கருங்காலி கருப்பு நிறங்களில் முறையே நானோ CX, நானோ LX மற்றும் CX வகைகளில் செய்யப்பட்டுள்ளது. இந்த டாடா நானோவின் உட்புற டேஸ்போர்டு அதனுடைய சுத்தமான நேர்த்தியான பொருட்களின் அமைப்பில் அதிக கவர்ச்சிகரமாகிவிட்டது. நுழைவில் மற்றும் நடு நிலை டிரிம்மில் ஒரு 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் உள்ளது அதேசமயம் உயர் நிலை டிரிம் இலகுவாக திருப்பும் அமைப்புடன் வருகிற முன்று ஸ்போக் ஸ்டியரிங் வீலை கொடுக்கிறது. போகையில் ஒரு பெரிய தோற்றத்திற்கான பிரகாசமான ஒளியை கொண்டிருக்கிற டேஸ்போர்டின் மைய பணியகத்தின் மேல் கருவி தொகுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி தொகுதி ஸ்பீடா மீட்டர், மின்னணு டிரிப் மீட்டர், டிஜிட்டல் எரிபொருள் மானி, குறைந்த எரிபொருள் எச்சரிக்கை விளக்கு மற்றும் பிறவைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி தொகுதிக்கு சரியாக கீழே ஹீட்டருடன் ஒரு ஏசி உள்ளது. மையப் பூட்டமைப்பு உயர் நிலை பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது அதேசமயம் ஓட்டுநர் பக்கம் உள்ள கதவு பூட்டும் வசதி எல்லா வகைகளிலும் நிலையானதாயிருக்கிறது. காரானது குறைந்தது 4 பயணிகளுக்கு இடமளிக்கும் என்று கம்பெனி சொல்கிறது ஆனால் அதனுடைய பெரிய உட்புற இடவசதியை கருதி குறைந்தது 5 பேர் இருக்கலாம், இது வசதியாக இருக்கை செய்யப்பட்டுள்ளது. முன் பணியகத்திலுள்ள கப் பிடிப்பான்கள், கியர் மாற்று பணியக நாணய பிடிப்பான்கள் மற்றும் எல்லா கதவுகள், மற்றும் இன்னும் சிலவைகள் உட்பட மற்ற பல குறிப்பிடத்தக்க அம்சங்களும் காருக்கு உள்ளே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த காருக்கு உள்ளே உள்ள இருக்கைகள் மடக்கக்கூடியது, இது அதிகப்படியான லக்கேஜை எடுத்துச்செல்வதற்கு டிக்கியின் இடவசதியை பெருக்க உதவியாக இருப்பதை நிரூபிக்கும். வாசிப்பதற்கான பார்வையை மேம்படுத்தும் இந்த காரின் உட்புறம் ஒரு கேபின் விளக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறது அதேநேரத்தில் பின்புறம் காணும் கண்ணாடி ஓட்டுநருக்கான சிறந்த பார்வைக்கு உதவுகிறது.

உட்புற வசதி:


டாடா நானோவின் இந்த 2013 பதிப்புக்கு உள்ளே அடி எடுத்து வைத்த உடனே, சுற்றிலும் மாபெரும் வசதி வாய்ப்புகள் கொண்ட அதனுடைய உயர்தரமான பட்டுபோன்ற உட்புறங்களால் நீங்கள் ஆச்சரியப்படுத்தப்படுவீர்கள். கேபினின் வெப்பநிலையை கவனித்துக் கொள்ளும் ஹீட்டருடன் கூடிய ஒரு குளிர் சாதனம் இருக்கிறது. இந்த வகையின் முன் சாளரமானது மின்சாரத்தினால் ஆற்றலூட்டப்பட்டிருக்கிறது, இது உண்மையிலேயே ஆச்சரியமானதாகும். பயணியும் ஓட்டுநரும் இருக்கை மீது பொருத்தப்பட்ட தலைசாய்ப்பு மீது அவர்களுடைய தலையை சாய்க்கலாம். பயணியும் ஓட்டுநரும் முன் இருக்கை மீதுள்ள சன் வைசர்களினால் சூரிய கதிரிடமிருந்து பாதுகாக்கப்படுவார்கள். ஓட்டுநரின் உயரத்தை சரிசெய்யலாம் ஆனால் அது நடு மற்றும் உயர் நிலை வகைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்புற பார்சல் அலமாரி, பிரிமியம் இருக்கைகள், A மற்றும் B பில்லர் டிரிம்கள், மின்னணு டிரிப் மீட்டர், கூரை வரிசை மற்றும் பல அம்சங்கள் உட்பட இந்த சிறிய காருடன் பிற சில குறிப்பிட்ட அம்சங்களும் வழங்கப்படுகிறது. இந்த கிளர்ச்சியூட்டும் வசதி அம்சங்கள் இந்த வகையில் நீங்கள் செலவழிக்கிற ஒவ்வொரு பணத்தையும் திரும்ப கொடுக்கும்.

உட்புற அளவீடுகள்:


டாடா நானோ அனைத்து புதிய 2013ம் வெளியிலிருந்து ஒரு சிறிய காராகவே தோன்றுகிறது ஆனால் இந்த காரின் தலைசாய்க்குமிடம் தோள்சாய்க்குமிட வசதி என உட்புறமுள்ள இடவசதி பெரியதாக இருக்கிறது. கம்பெனி கொடுத்துள்ள கூற்றுப்படி, இந்த சிறிய வகை குறைந்தது 4 பயணிகளுக்கு இருக்கை கொடுக்கும் ஆனால் இந்த கார் 5 பயணிகளுக்கு எளிதாக இடமளிக்க முடியும். முன் வரிசையிலுள்ள தலை சாய்க்கும் வசதி மிகவும் நன்றாக உள்ளது அது முன் வரிசை ஓட்டுநர் மற்றும் உடன் ஓட்டுநரின் வசதிகளை அதிகரிக்கிறது. இரண்டாவது வரிசையில் கால் வைக்கும் இடவசதி நன்றாக உள்ளது அது பயணத்தின்போது பயணிகள் மாபொரும் வசதிகளை அனுபவிக்க உதவுகிறது.

எஞ்சின் மற்றும் செயல்திறன்:


இந்திய வாகன தலைவர் டாடா மோட்டார்ஸ் அதனுடைய நானோ விலையை குறைப்பதற்காக சிறிய அளவு எஞ்சினை கொடுத்துள்ளது. இது சிறிய அளவுடைய எஞ்சினாக இருந்தாலும், டாடா நானோவில் உற்பத்தி செய்யப்படுகிற செயல்திறன் மிகவும் திருப்திகரமானதாக இருக்கிறது. இந்த வகை 100 Kmph வேகத்தை அடையும் திறனை பெற்றிருக்கிறது, இது 624cc எஞ்சின் காரின் நினைத்துப்பார்க்க முடியாத நிலையாக இருக்கிறது. டாடா நானோ சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் எரிபொருள் ஆற்றல் கொண்டதாகவும் மற்றும் வேகமானதாகவும் இருக்கிறது. இந்த சிறிய காரினுடைய எஞ்சின் MPFI எரிபொருள் இன்ஜெக்ஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, இதுவே அது மிகவும் எரிபொருள் ஆற்றல் கொண்டதாக இருப்பதற்கான மற்றுமொரு காரணமாக இருக்கிறது. இந்த 0.6-லிட்டர் 2-சிலிண்டர் 62cc MPFI பெட்ரோல் டிரிம் 5200 முதல் 5500rpmல் அதிகபட்சமாக 37.5bhpயை உற்பத்தி செய்யும் திறனுடையதாக இருக்கிறது மேலும் 3500rpm லிருந்து 4000rpm இல் உச்ச முறுக்குதிறன் வெளிப்பாடு 51Nmஐ கொடுக்கிறது. இந்த உயர் செயல்திறன் எஞ்சின் அதனுடைய திறனை வேகமாக்கவும் எரிபொருள் ஆற்றலுடையதாகவும் செய்யும் ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் ஒன்று மேலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. டாடா நானோவின் CNG பதிப்பு அதே எஞ்சினுடன் வருகிறது ஆனால் 5500rpmல் 32bhpயை மட்டுமே உற்பத்தி செய்கிறது மேலும் 3500rpmல் அதிகபட்சமாக 45Nm முறுக்குதிறனை கொடுக்கிறது. இந்த எஞ்சினுடன் CNG எரிபொருள் அமைப்பை பொருத்துவது அதனுடைய ஆற்றலை குறைத்திருக்கலாம் ஆனால் எரிபெருள் ஆற்றல் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டீரியோ மற்றும் துணைப்பொருட்கள்:


சில கூடுதல் அம்சங்கள் கொண்ட டாடா நானோ 2013 மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது இது முந்தைய மாடலை விட அதிக கிளர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கிறது. புதிய அம்சங்கள் கொண்ட ஒரு அணிவகுப்பு இந்த 2013உடன் சேர்க்கப்பட்டுள்ளது இது சாவியில்லாத ரிமோட் நுழைவு, டேஸ்போர்டு மீது இரட்டை கிளவ் பாக்ஸ்கள், நான்கு ஸ்பீக்கர்கள், USBயுடன் கூடிய மேம்பட்ட ஆம்பி-ஸ்ட்ரீம் மியுசிக் அமைப்பு, AUX-இன், மற்றும் புளுடூத் இணைப்பு போன்றவைகளை உள்ளடக்கியுள்ளது. இந்த வகையின் உட்புறங்கள் புதிய நிறங்களால் புத்துணர்வூட்டப்பட்டிருக்கிறது. கம்பெனியானது தனிப்பட்டதாக்கும் கருவிகளை வழங்குகிறது இது உரிமையாளர்களை அவர்களுடைய விருப்பமான காரை நான்கு தனித்துவமான அடையாளங்களில் மாற்றியமைக்க உதவுகிறது. இவைகள் ஜெட், ரெமிக்ஸ், அல்பா மற்றும் பீச்சை உள்ளடக்கியுள்ளது.

சக்கரங்கள்:


டாடா நானோ 2013 டியுப்பில்லாத ரேடியல் டயர்களுடன் கூடிய 4B x 12 ஸ்டீல் சக்கரங்களை கொண்டிருக்கிறது. முன் டயர்களின் அளவு 135/70R12 அதே வேளையில் அதனுடைய பின்புற டயர்கள் அளவு 155/65R12 ஆக இருக்கிறது.

பிரேக் போடுதல் மற்றும் கையாளுதல்:


டாடா நானோ எல்லா நிலையிலும் அறிமுக நிலை சிறிய காராக இருக்கிறது மற்றும் இது ஒரு நம்பகமான 624cc பெட்ரோல் மில்லால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. இது எடை குறைவாகவும் அளவில் சிறியதாகவும் இருப்பதால் இந்த காரை கையாளுவது உண்மையில் கடினமாக இருப்பதில்லை. இந்த சிறிய கார் உடனே செயலாற்றும் மற்றும் ஓட்டிச் செல்லுதலை சிறந்ததாக உணரச் செய்யும் மிக கச்சிதமான ஸடியரிங் வீல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய காரின் கையாளுதல் மற்றும் ஓட்டுதல் அனுபவம் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஸன் அமைப்பால் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகையின் முன் அக்ஸில் வாயு நிரம்பிய தடைகள் வகை சஸ்பென்ஷன் கொண்ட மேக்பெர்ஷன்னுடன் பொருத்தப்பட்டுள்ளது இது மேலும் சுதந்திரமான தாழ்வான விஸ்போன் மற்றும் ஆன்டி ரோல் பார் வகை அமைப்பினால் உதவப்படுகிறது. இவ்வகையின் பின்புற அக்ஸில் காயில் ஸ்பிரிங் மற்றும் வாயு நிரம்பிய ஷாக்அப்ஸர்பர்கள் கொண்ட ஒரு சுதந்திரமான பாதி டிரய்லிங் ஆர்ம்மினால் செய்யப்பட்டிருக்கிறது. இப்பிரிவிலுள்ள மற்ற காரைப் போலவே ஓட்டுதலுக்கு அதிக சவுகரியத்தையும் குலுக்கல் இல்லாத நிலையையும் உண்டாக்குகிறது.

பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மை:


கையாளுதல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பொறுத்த வரையில், 2013 நானோ கார் வெற்று பூஸ்டர் கொண்ட ஒன்றுக்கு பின் ஒன்றான மூல சிலிண்டரால் இயக்கப்படுகிற இரட்டை சுற்று செங்குத்து பிளவு வடிவிலான மேம்பட்ட பிரேக் போடுதல் செயல்பாடுகளை பெற்றிருக்கிறது. இந்த சிறிய காரின் முன்புற மற்றும் பின்புற சக்கரங்கள் இரண்டும் டிரம் பிரேக் போடும் அமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது, இது மிகவும் பயனுள்ளதாகவும் இவ்வகைக்கு மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது. கம்பபெனி இந்த சிறிய காரின் பாதுகாப்பு அமைப்புகளில் சமரசம் செய்துகொள்வதில்லை. இந்த நானே உள்ளேயுள்ள அனைத்து பயணிகளுக்கும் சீட் பெல்ட்களை வழங்குகிறது. இப்படிப்பட்ட மலிவு விலை காரில் சீட் பெல்ட்டுகளை ஒருவரும் எதிர்பார்க்க முடியாது ஆனால் கம்பெனி அதனுடைய பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிகபட்ச முக்கியத்துவத்தை கொடுக்கிறது. மறுபுறம், இது ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மாபெரும் பாதுகாப்பு அம்சங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. மையப் பூட்டிடுதல், லேமினேஷன் செய்யப்பட்ட கண்ணாடி திரை, மைய உயரமான இட நிறுத்த விளக்கு, ஓட்டுநர் மற்றும் பயணிகள் பக்கமுள்ள கதவு பூட்டு, முன் மற்றும் பின் இருக்கை பெல்ட்டுகள், பூஸ்டர் உதவும் பிரேக்குகள், கூடுதல் உடற்கட்டு பலங்கள், இன்ட்ரியுஸன் பீம், டியுப்பில்லாத ரேடியல் டயர்கள் மற்றும் பல மேம்பட்ட செயல்களை அதனுடைய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்குகிறது.

நேர்மறை அம்சங்கள்:1. ஒரு சிறிய குடும்பத்திற்கான ஒரு உயரிய வாகனம்.
2. CNG பதிப்பின் எரிபொருள் திறன் நன்றாக உள்ளது.
3. கேபின் இடவசதி மிகவும் திருப்திகரமானதாக உள்ளது.
4. ஆக்டிங் திருப்புதல் செயல்பாட்டுடன் கூடிய மின் ஆற்றல் ஸ்டியரிங்.
5. விலைப் பட்டியல் மிகவும் சிக்கனமானதாக இருக்கிறது.

எதிர்மறை அம்சங்கள்:1. அதனுடைய பெட்டி வடிவ உடல் வடிவமைப்பு ஒரு பெரிய குறையாக உள்ளது.
2. அதிகப்படியான வசதி அமைப்புகள் ஒரு சிலவற்றையும் சேர்க்கலாம்.
3. மிக மோசமான பாதுகாப்பு அமைப்புகள்.
4. டிக்கி பகுதி கொள்ளளவு மிகவும் குறைவாக உள்ளது.
5. எஞ்சின் செயல்திறன் நன்றாக்கப்பட வேண்டும்.