டாடா போல்ட்

` 4.7 - 7.2 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

Other Car Models of டாடா

 
*Rs

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


அக்டோபர் 12, 2015: டாடா நிறுவனம் தன்னுடைய ஜென்எக்ஸ் நானோ, போல்ட் மற்றும் செஸ்ட் கார்களின் விழாக்கால சிறப்பு பதிப்புக்களை வெளியிட்டது. டாடா நிறுவனம் ஜென்எக்ஸ் நானோ , சபாரி ஸ்டார்ம் ,செஸ்ட் மற்றும் இண்டிகோ மாடல் கார்களை மேம்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து கடந்த விழாக்கால விற்பனையை அதிகரிக்க முயற்சித்தது.

டாடா போல்ட் விமர்சனம்


கண்ணோட்டம்


டாடா நிறுவனத்தின் இந்த போல்ட் கார்கள் , இந்நிறுவனம் தங்களது பழைய வடிவமைப்பு உத்தியை கைவிட்டு புதிய இக்காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பை பின்பற்ற தொடக்கி இருப்பதை உலகுக்கு பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. தங்களது சமீபத்திய ஹேட்ச்பேக் பிரிவு தயாரிப்பான போல்ட் கார்களில் அனைத்து விதமான சிறப்பு அம்சங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. எப்போதுமே குறைந்த விலையில் தரமான தயாரிப்புக்களை வெளியிடுவதில் பெயர் பெற்று விளங்கும் டாடா நிறுவனம், செஸ்ட் மற்றும் இண்டிகா கார்களுடன் இணைந்து இந்த போல்ட் கார்களும் சந்தையில் தங்கள் நிறுவனத்திற்கான இடத்தை வலுப்படுத்தும் என்று நம்புகிறது.

ப்ளஸ் பாய்ண்டுகள்1. பின்புற பெஞ்ச் இருக்கைக்கான லெக்ரூம் இந்த பிரிவு கார்களிலேயே போல்ட் - ல் தான் சிறப்பாக உள்ளது என்று சொல்லலாம்.
2. அனைத்து முக்கியமான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. காற்று பைகள் , ஆன்டி - லாக் ப்ரேகிங் சிஸ்டம் , எலெக்ட்ரானிக் ப்ரேக் -போர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் மற்றும் கார்னர் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் .
3. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்புகள் , டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உட்பட ஏராளமான சிறப்பம்சங்கள் .

மைனஸ் பாய்ண்டுகள்1. ஆட்டோமேடிக் வேரியன்ட் இல்லை. இதே பிரிவு கார்களான பீகோ மற்றும் க்ரேண்ட் i10 கார்களில் ஆடோமேடிக் வேரியன்ட் உள்ளது.
2. பொருட்களை வைப்பதற்கு தேவையான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மிகவும் குறைவாக உள்ளது. ஒரே ஒரு கப் ஹோல்டர் மற்றும் சீட் - ன் கீழே ஒரு ட்ரே ஆகியவை மட்டுமே உள்ளன.

தனித்துவமான அம்சங்கள்
1. கனெக்ட்நெக்ஸ்ட் டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்பு வாய்ஸ் கமேன்ட் உட்பட பல அதிநவீன சிறப்பம்சங்கள் உள்ளன.
2. இதன் பிரிவில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் இந்த போல்ட் கார்களில் தான் சிறந்த செயல்திறன் மிக்க 1.2 லிட்டர் ரிவோட்ரான் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டு வெளியாகி உள்ளது.

முன்னோட்டம்


டாடா நிறுவனம் பயணிகள் கார் பிரிவில் நல்ல பிரபலமான ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் . ஆனாலும் உட்புற கேபின் வசதிகளைப் பொறுத்தவரை பேசும்படியாக இந்நிறுவன தயாரிப்புக்கள் இருந்ததில்லை. ஆனால் இந்த போல்ட் கார்களில் நாங்கள் அமர்ந்த போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் அளவிற்கு நல்ல நவீன சிறப்பம்சங்கள் பல இருப்பதை காண முடிந்தது. இந்திய நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்பை இந்த போல்ட் கார்கள் பூர்த்தி செய்யும் என்றே தோன்றுகிறது. காரணம், நேர்த்தியான வடிவமைப்பு, ஸ்டைல், செயல்திறன் ஆகிய இந்த மூன்று விஷயங்களின் சரியான கலவையாக இந்த போல்ட் கார்கள் உள்ளன. அதே சமயம் , இதன் பிரிவில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் போல்ட் கார்களின் விலையும் குறைவாகவே உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பின்புலம் மற்றும் எவல்யூஷன்


முதல் தலைமுறை போல்ட் கார்கள் மட்டுமே வெளி வந்துள்ள நிலையில் விஸ்டா கார்களுக்கு மாற்று இந்த போல்ட் கார்கள் என்று அறியப்படுகிறது.

உட்புற அமைப்பியல் (எக்ஸ்டீரியர்ஸ்)


சராசரி மக்களை முதல் பார்வையிலேயே இந்த கார் கவர்ந்திழுக்காமல் இருக்கலாம். ஆனால் சற்று கூர்ந்து பார்க்கையில் இந்த காரின் வடிவமைப்பில் உள்ள முழுமையை யாரும் உணர்ந்துக் கொள்ளலாம். முன்புறம் நேர்த்தியாக வளைந்து போநெட் பின் ஹூட் வரை நீண்டு பின்புறம் முடிகிறது.

image 1

முன்புறம் உள்ள மெலிதான க்ரில்- ன் நடுவே பொறிக்கப்பட்டுள்ள டாடா நிறுவன சின்னம் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக எங்களுக்கு தோன்றுகிறது. க்ரில்-ன் மேல்புறம் உள்ள கோடு டாடாவின் பிரத்தியேகமான வடிவமைப்பாகும் . முன்புறம் உள்ள ஷார்ப்பான வடிவமைப்புடன் கூடிய மல்டி ரிப்லக்டர் ஹெட் லேம்ப் - கள் இந்த காரின் முன்புற தோற்றத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

image 2

டாப் - எண்டு ட்ரிம் - ல் மட்டும் பளிச்சென்று தெரியும் குரோம் பேசல் எபெக்ட் உடன் கூடிய ஃபாக் விளக்குகள் உள்ளன.

image 3

போனட் மற்றும் ஹூட் பகுதிகளுக்கு நல்லதொரு எடுப்பான தோற்றத்தை தர இரண்டு நிறங்களில் ஆன பம்பர் பயன்படுகிறது. அகலமான ஹூட் மற்றும் அதில் உள்ள கோடுகள் இந்த காரின் வடிவமைப்பு சிறப்புக்கு வலு சேர்க்கிறது. அகலமாக உள்ள காற்றை உள்ளெடுத்துக் கொள்ளும் செக்க்ஷன் இந்த காரின் முன்புற வடிவமைப்புடன் கச்சிதமாக பொருந்தி போகிறது.

image 4

போநெட் - ன் மெட்டேலிக் ஸ்கின் பக்கவாட்டு பகுதி வரை இழையோடி வலுவான வீல் ஆர்ச்- ஐ சுற்றி முடிகிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள அல்லாய் சக்கரங்கள் தான் இந்த கார்களின் சிறப்பான தோற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

image 5

காரின் உடல் பகுதி நிறத்திலேயே கதவு கைப்பிடிகளும் , கண்ணாடிகளும் உள்ளது பார்ப்பதற்கு அழகாக உள்ளது. அதே சமயம் பக்கவாட்டு பகுதியில் முன்புறம் தொடக்கி பின்புறம் வரை கதவின் மேலும் இழையோடும் கோடுகள் காரின் ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றத்தை மேம்படுத்தி காட்டுகிறது. மேலும் காரின் பக்கவாட்டு பகுதியில் இருந்து பார்க்கையில் ,சரிந்து போநெட் உடன் இணையும் முன்புற விண்டோவில் உள்ள கண்ணாடியின் வடிவமைப்பு வித்தியாசமான அழகுடன் உள்ளது. இளைய சமுதாயத்தினரை இந்த கார் நிச்சயம் கவரும் என்பதே எங்கள் கணிப்பு. கதவு ப்ரேம் - கள் கருப்பு கண்டிஷனிங் செய்யப்பட்டிருப்பதும் அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது.

image 6

காரின் பின்புறம் அகலமாக இருக்கிறது. இது காருக்கு ஒரு நல பேலன்ஸ்டு தோற்றத்தை தருகிறது. லைசென்ஸ் ப்ளேட்டில் உள்ள LED ஒளிர்வு (இலுமினேஷன்) நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இந்த அம்சம் ஜாஸ் கார்களில் கூட இன்னும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுடர் வடிவிலான டெயில் விளக்குகளும் ஒருங்கிணைக்கப்பட்ட பின்புற ஸ்பாயிலர்களும் இந்த காரின் பின்புறத்திற்கு ஸ்போர்டியான தோற்றத்தை தருகிறது.

image 7

இந்த காரின் நீளம் 3850 மி.மீ, அகலம் 1695 மி.மீ மற்றும் உயரம் 1530 மி.மீ ஆகும்.

1

இந்த கார் டிக்கியின் கொள்ளளவு 210 -லிட்டர்கள் ஆகும். இது இதன் பிரிவில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் குறைவு தான். இருப்பினும் நீங்கள் அதிக தூரம் அதிக பொருட்களை எடுத்து செல்லாதவர் என்றால் இந்த அளவே போதுமானதாக இருக்கும். ஆனால் அதிகமான சுமைகளை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் உள்ளவராக நீங்கள் இருந்தால் இந்த பிரிவில் உள்ள க்ரேண்ட் i10 (256 லிட்டர் கொள்ளளவு ) அல்லது பீகோ (257 லிட்டர் ) கார்களை தான் நாங்கள் உங்களுக்கு சிபாரிசு செய்வோம். 2

உட்புற அமைப்பியல் (இன்டீரியர்ஸ்)


மிகுந்த ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரின் உட்புறம் ஆடம்பரமாக இல்லை என்றாலும் அதே சமயம் மிக சாதரணமாக உள்ளது என்றும் சொல்லி விட முடியாது.இந்த காருக்கு நீங்கள் தரும் விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயம் இந்த காரில் போதுமான சிறப்பம்சங்கள் உள்ளன என்றே சொல்ல வேண்டும்.

image 8

அமரும் போது முதுகு பகுதியை பிடித்தாற்போல் போல் உள்ள இருக்கை அமைப்பு வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பயணிப்பவர் இருவருமே எதிர்பார்க்கும் வசதியுடன் இருக்கிறது. கூடுதல் வசதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் முன்புறம் மற்றும் பின்புறம் இருக்கைகளில் ஹெட்ரேஸ்ட் இணைக்கப்பட்டுள்ளது.

image 9

உண்மையில் இந்த காரின் உட்புற அமைப்பியலில் எங்களை வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால் முற்றிலும் ஜாவா கருப்பு நிறத்தில் உள்ள இன்டீரியர் லேஅவுட் -ஐ தான் சொல்ல வேண்டும். இது ஒரு ஸ்போர்ட்ஸ் காரின் தோற்றத்தை இந்த போல்ட் காருக்கு தருகிறது. பேப்ரிக் போர்த்தப்பட்ட இருக்கைகளை சுத்தம் செய்வது எளிதாகவே இருக்கும் என்று தெரிகிறது. பேயஜ் மற்றும் மற்ற விலை மிகுந்த அப்ஹோல்ஸ்ட்ரி கொண்ட மற்ற கார்களை விட இந்த போல்ட் காரின் உட்புறத்தை மெய்ன்டைன் செய்வது எளிதாக இருக்கும்

image 10 மத்திய கன்சோல் பயன்படுத்த வசதியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது கப் ஹோல்டர் மற்றும் பவர் அவுட்லெட் கன்சோல் - ன் உட்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கன்சோல் பகுதியில் உள்ள பொத்தான்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பொருத்தப்பட்டுள்ளன. குளிர் சாதனத்தை இயக்க பெரிய திருகிகள் (நாப்) உள்ளன.

image 11

இன்போடைன்மென்ட் சிஸ்டம் இந்த கன்சோல் -ன் நேர் மேலே கச்சிதமாக பொருந்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் - ஐ ஒருங்கிணைத்துக் கொள்ள கூடிய வசதி கொண்ட நேவிகேஷன் அமைப்பையும் டாடா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த காரில் கொடுத்து உள்ளது. இதைத் தவிர , வீடியோ ப்லேபேக் வசதி , இமேஜ் வியூவிங் ஆப்ஷன்கள் ஆகியவையும் இந்த காரில் உள்ளன. நீங்கள் விரும்பும் இசையை USB ,ஆக்ஸ்- இன் ப்ளூடூத் மற்றும் ரேடியோ உதவியுடன் கேட்டு மகிழலாம்.

image 12

காற்று திறப்பான்கள் (ஏயர் வெண்ட்ஸ் ) மற்றும் பார்கிங் ப்ரேக் லீவர் முனை ஆகியவற்றில் லேசான குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது, இது காரின் உட்புறத்தை ப்ரீமியம் கார்களுக்கு இணையாக உயர்த்திக் காட்டுகிறது. கதவின் உட்புறம் உள்ள பேப்ரிக் செருகல்கள் காரின் உட்புற கேபின் வடிவமைப்புக்கு சிறப்பு சேர்க்கிறது.

image 13

இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் -ல் இரண்டு டயல்கள் உள்ளன. ஒன்று ஸ்பீடோமீட்டர் டயல் மற்றொன்று டேகோமீட்டர் டயல் ஆகும். இதைத் தவிர என்ஜின் வெப்பத்தைக் காட்டும் டிஸ்ப்ளே -வும் ப்யூயல் காஜ் ஆகியவையும் உள்ளன. இந்த க்ளஸ்டருக்கு வெள்ளை நிற பேக்லைட் கொடுக்கப்பட்டிருப்பதால் எழுத்துக்களை எளிதில் படிக்க முடிகிறது. கார் பயணித்துக் கொண்டிருக்கும் கியர் , ட்ரிப் A/B ,ஓடோமீட்டர் மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்ற அடிப்படை தகவல்களை MID காட்டுகிறது. MID -ன் கீழ் பகுதியில் உள்ள கிடைமட்ட கோடு (பார் ) உடனுக்குடன் எரிபொருள் சிக்கனத்தை தெரிவிக்கிறது.

image 14

ஸ்டீரிங் சக்கரம் வலது பக்கமாக உள்ளது. நிறைய மெட்டாலிக் ஹைலைட்ஸ் உடன் உள்ள இந்த ஸ்டீரிங் சக்கரம் ஸ்போர்ட்டியாக உள்ளது. நடுவே டாடா நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. சரியான அளவில் உள்ள இந்த ஸ்டீரிங் சக்கரம் பிடிப்பதற்கும் கைக்கு கச்சிதமாக உள்ளது. ஆடியோ மற்றும் போன் - ஐ கண்ட்ரோல் செய்வதற்கான பொத்தான்கள் இந்த ஸ்டீரிங் சக்கரத்தில் உள்ளன. அவை இயக்குவதற்கும் எந்த விதமான சிரமமும் இன்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உட்புற அமைப்பியல் நல்ல சிறப்பம்சங்களுடன் இருந்தாலும் பொருட்கள் வைப்பதற்கான இடவசதி மிகவும் குறைவாக உள்ளதை நாம் இங்கே குறிப்பிட்டு காட்ட வேண்டியது அவசியமாகிறது. ஒரே ஒரு கப் ஹோல்டர் மற்றும் சீட் அடியில் ஒரு ட்ரே ஆகியவை மட்டுமே உள்ளன. கதவின் உட்புறம் பாக்கெட் கொடுக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிடும்படியாக அவை இடவசதியுடன் இல்லாதாதால் எந்த பொருளையும் சரிவர வைக்க இயலவில்லை.

செயல்திறன் (ஃபெர்பார்மன்ஸ்):


டீசல்:


3

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள குவாட்ராஜெட் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் BSIV எமிஷன் விதிகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த காரின் உரிமையாளர் எமிஷன் விதிகள் குறித்து எந்த விதமான கவலையும் கொள்ள தேவை இல்லை. இந்த என்ஜின் 4 சிலிண்டர்கள் -ஐ கொண்டுள்ளது. 1248 சி.சி திறனை கொண்டுள்ளது. இந்த என்ஜினில் ரயில் டைரெக்ட் இன்ஜெக்க்ஷன் என்று அழைக்கப்படும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் இன்ஜெக்க்ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 - வேக மேனுவல் கியர் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. வேகமான உறுமலுடன் ஸ்டார்ட் ஆகும் இந்த என்ஜின் நமது எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் செயல்படுகிறது. 4000rpm -ல் 74bhp சக்தியையும் 1750rpm முதல் 3000rpm -ல் 190 nm அளவு டார்க்கையும் வெளியிடுகிறது.

image 15

இதே 1.3 லிட்டர் என்ஜின் தான் மாருதியின் ஸ்விப்ட் கார்களிலும் இருந்தாலும் ,கியரிங் விஷயத்தில் மாருதி சற்று சிறப்பாகவே உள்ளது எனலாம். மேலும் 1800rpm வரை என்ஜின் லேக் உணரபட்டாலும் டர்போ அதிகமானவுடன் ஸ்மூத்தாக நல்ல முறையில் பவர் டெலிவரி நடக்கிறது.

பெட்ரோல்:


4

பெட்ரோல் ட்ரிம் - ல் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட ரிவோட்ரான் 1.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜினும் BSIV எமிஷன் விதிகளுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் எமிஷன் குறித்து எந்த விதமான கவலையும் கொள்ள தேவை இல்லை. என்ஜின் செயல்பாட்டில் மிக லேசான ஒரு தொய்வு இருந்தாலும் 1193 cc திறன் இந்த என்ஜினுக்கு உள்ளது. 5000rpm – ல் 89bhp சக்தியையும் 1500rpm முதல் 4000rpm -ல் 140Nm அளவு டார்க்கையும் இந்த என்ஜின் வெளியிடுகிறது. டீசல் ட்ரிம் - ல் உள்ளது போன்றே 5 - வேக கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கியர் மாற்றுதலும் மிகவும் ஸ்மூத்தாக உள்ளது. என்ஜின் எழுப்பும் லேசான சத்தம் ஒன்று உங்கள் பயணம் முழுக்க தொடர்ந்து வந்தாலும் மொத்தத்தில் பார்த்தால் உங்கள் பயண அனுபவம் இந்த போல்ட் கார்களில் வசதியாகவே இருக்கும் என்று சொல்லலாம்.

இந்த 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட யூனிட் மல்டி ட்ரைவ் மோட்- உடன் வருகிறது. ஓட்டுனர் தனது தேவைக்கேற்ப மோட் - ஐ தேர்வு செய்துக் கொள்ளலாம். சிட்டி மோட் என்பது டிபால்ட் மோட் ஆகும். இதைத் தவிர ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு மோட் - களும் உள்ளன. திராட்டில் ரெஸ்பான்ஸ் ஈகோ மோடில் சற்று மந்தமாகவும் (நெடுந்தூர பயணத்திற்கு மட்டுமே இது பொருந்தி வரும் ) , ஸ்போர்ட்ஸ் மோட் - ல் நல்ல ரெஸ்பான்ஸ் -உடன் ஷார்ப் ஆகவும் , சிட்டி மோட் - ஐ தேர்ந்தெடுக்கையில் முன்னர் நாம் குறிப்பிட்ட இரண்டு மோட் - களுக்கும் இடைபட்ட நிலையிலும் உள்ளது.

பயனித்தல் மற்றும் கையாளுதல்


டிஸ்க் மற்றும் ட்ரம் ப்ரேக் - ன் காம்பினேஷன் நல்ல முறையில் செயல்பட்டு ப்ரேகிங் சிஸ்டத்தை சிறப்பாக்குகிறது. வேகமாக ஓட்டி திடீரென்று ப்ரேக் போடுகையில் சற்று நிலை தடுமாற்றம் ஏற்படுகிறது, இந்த காரின் எடையுடன் ஒப்பிடுகையில் இது தவிர்க்க முடியாததாகிறது .சில காலமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கரடு முரடான இந்திய சாலைகளை சமாளிக்கும் வகையில் தனது கார்களில் திறன்மிக்க சஸ்பென்ஷன் அமைப்புக்களை பொருத்தி வருகிறது. இதன் முன்புறம் மேக்பெர்சன் ஸ்டர்ட் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் சீரிய செயல்பாட்டிற்கு உதவும் காயில் ஸ்ப்ரிங் மற்றும் ஆன்டி ரோல் பார் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் சேஸிஸ் - ன் பின்புற ஆர்ம் ட்விஸ்ட் பீம் ,காயில் ஸ்ப்ரிங் மற்றும் ஷாக் அப்சார்பர் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த சேஸிஸ் அமைப்பு அனைத்து வித சாலை குண்டு குழிகளையும் தன்னுள்ளே வாங்கிக் கொண்டு ச்மூதான பயணத்தை உறுதி செய்கிறது. அதே சமயம் எந்த வித அதிர்வும் இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் ஓர் சாராசரி இந்திய ஓட்டுனர் இந்த அதிர்வுகளுக்கு தயாரான மனநிலையுடனே வாகனத்தை இயக்குவார் என்று சொல்லலாம்.

பாதுகாப்பு


image 16

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை டாடா நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று சொல்லலாம். அதற்கு இந்த போல்ட் ஒரு சரியான உதாரணமாக விளங்குகிறது. அதே சமயம் டாப் - எண்டு மாடல் - களில் மட்டுமே பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. லோ - எண்டு மாடல் -களில் பின்புற கதவில் குழந்தைகளுக்கான லாக் மற்றும் இம்மொபிலைசர் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே உள்ளன. அதே சமயம் டாப் -எண்டு மாடல்-களில் வேகத்தைப் பொறுத்த ஆட்டோ டோர் லாக் - குகள், ப்ரீ டெண்ஷ்னர் உடன் கூடிய முன்புற சீட் பெல்ட் - கள், ஓட்டுனர் மற்றும் அவரது பக்கத்தில் அமரும் பயணிக்கான காற்று பைகள் உள்ளன.

5

வேரியன்ட்கள் (வகைகள்)


மொத்தம் நான்கு வேரியன்ட்- கள் வெளியிடப்பட்டுள்ளன. XE என்பது என்ட்ரி லெவல் ட்ரிம் ஆகும். அதிக பணத்தை செலவிட விரும்பாதவர்களுக்கு இந்த வேரியன்ட் பொருத்தமாக இருக்கும். இந்த ட்ரிம் - ல் மிகக் குறைந்த சிறப்பம்சங்கள் மட்டுமே உள்ளன.

அதே சமயம் டாப் எண்டு மாடல் XT -யில் நிறைய நவீன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இன்போடைன்மென்ட் சிஸ்டம் , நேவிகேஷன் சிஸ்டம், வாய்ஸ் கமேன்ட் போன்ற அம்சங்களும் , அதிமுக்கிய பாதுகாப்பு அம்சங்களான காற்றுப்பைகள் , பெரிமீட்டார் அலார்ம் சிஸ்டம் பின்புற டீபாகர் மற்றும் ஃபாக் விளக்குகள் ஆகியா அம்சங்களும் உள்ளன. இவைத் தவிர ஆட்டோமேடிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல் , ஓட்டுனர் பக்க ஜன்னல் கண்ணாடியை மின்சார உதவியுடன் சட்டென்று இறக்கும் வசதி மற்றும் டிக்கியில் விளக்கு ஆகிய பிரத்தியேக அம்சங்களும் உள்ளன. ஆனால் இந்த வேரியன்ட் - ன் விலை மிக அதிகமாக உள்ளது.

XM மற்றும் XMS ட்ரிம் -கள் டாப் எண்டு மற்றும் லோ - எண்டு வேரியன்ட்களுக்கு இடைப்பட்ட நிலையில் உள்ளன. அதிகமான விலை கொடுக்காமலும் அதே சமயம் ஓரளவு சிறப்பம்சங்களும் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் XM அல்லது XMS ட்ரிம்களில் ஏதாவது ஒன்றை சொந்தமாக்கிக் கொள்ளலாம். சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ,பவர் விண்டோஸ், ப்ளூடூத் வசதி , வேகத்தைச் சார்ந்த ஆடியோ கண்ட்ரோல் , மின்சார உதவியுடன் இயக்கக் கூடிய வெளிப்புற கண்ணாடிகள் , ABS,EBD மற்றும் CSC சிஸ்டம் போன்றவை பேஸ் (அடிப்படை) வேரியண்டில் இல்லை. ஆனால் இந்த நடுத்தர வேரியன்ட்களில் உள்ளது.

6

தீர்ப்பு


பெரும்பான்மையான கார்களைப் போல இந்த போல்ட் கார்களிலும் குறை நிறைகள் உள்ளன. இந்த காரை வாங்க விரும்புவோர், தங்களுக்குரிய வேரியன்ட் - ஐ தேர்ந்தெடுப்பதற்கு முன்பே தெளிவாக தங்கள் எதிர்பார்ப்புக்களை முடிவு செய்துக் கொள்வது சரியாக இருக்கும். . நல்லதொரு இன்போடைன்மென்ட் சிஸ்டம் , நேர்த்தியான உட்புற அமைப்பியல் (இன்டீரியர்ஸ்) மற்றும் எக்ஸ்டீரியர்ஸ் ஆகியவற்றை நீங்கள் விரும்பினால் இந்த கார் உங்களை நிச்சயம் குஷி படுத்தும். மொத்தத்தில் ஒரு நடுத்தர இந்திய குடிமகனின் கனவில் இந்த போல்ட் இடம் பெறும். அதே சமயம் ஒரு சொகுசான ஓட்டும் அனுபவத்தை நீங்கள் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்றால் நிச்சயம் அதற்கு இந்த போல்ட் பொருத்தமாக இருக்காது என்பதே எங்கள் தீர்ப்பு.