ரெனால்ட் லாட்ஜி

` 7.8 - 12.9 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

கண்ணோட்டம்:


ஃபிரெஞ்சு வாகன நிறுவனத்தின் துணைநிறுவனமாக முழுமையாக உரிமை ஏற்கப்பட்ட ரினால்ட் இந்தியா, நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட MPV மாடல், லாட்ஜியை இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அது சமீபத்தில் மும்பை மாநகரத்தில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில் திறந்து வைக்கப் பட்டது. பல்வேறு யூகங்களுக்கிடையில், வாங்குபவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்பத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் மொத்தம் ஏழு விதத்தில் இந்த வாகனம் வருகிறது. இந்த வாகனம் டீசல் இன்ஜினுடன் தற்போது விற்பனைக்கு உள்ளது. இரு பவர்களை இது அளிக்கும். நிறுவனத்தின் பிற பல மாடல்களில் தற்போது செயல்படும் அதே 1.5-லிட்டர் dCi மில்தான் இது. 245Nm டார்கில் 108.45bhp உச்சபட்ச சக்தியை அதன் சக்திமிக்க வகை தருகிறது. இந்த வகைக் காரில் 6 வேக கைமுறை கியர்பாக்ஸும் மற்ற மோட்டாரில் ஐந்து வேக கியர்பாக்ஸும் உள்ளன. மற்றொரு பக்கம், அதன் பேஸும் RxE வேரியண்டுகள் 85PS வகைக் கார்களில் மட்டுமே உள்ளன. ஆச்சரியப்படும் வகையில், அதன் பேஸ் வேரியண்டுகளில் AC யூனிட், EBD-யுடன் உள்ள ABS, பாடி நிறத்தில் உள்ள பம்பர்கள், பவர் ஸ்டீயரிங் மற்றும் இன்ஜின் இம்மொபிலைசர் போன்ற பல மேம்பட்ட அம்சங்கள் ஸ்டான்டர்டாகவே கிடைக்கின்றன. பெட்ரோல் வெர்ஷனை தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை. பின்னர் இதை எதிர்பார்க்கலாம். ஒருவேளை இது அறிமுகப்படுத்தப்பட்டால், 1.6-லிட்டர் மில்லுடன் பெரும்பாலும் வரலாம். மேலும், ஐந்து வேக கைமுறை கியர்பாக்ஸும் வரும். சமீபத்திய MPV-யில் மேம்பட்ட சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் உள்ளது. இது களைப்பின்றி வாகனத்தை ஓட்டும் அனுபவத்தைத் தர உதவுகிறது. ABS மற்றும் EBD-யுடன் மேம்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பங்கள் இதில் உள்ளன. இதனால் துல்லியமாக நிறுத்த முடியும்.

அல்லாய் சக்கரங்கள், குரோம் ரேடியேட்டர் கிரில் மற்றும் அலுமினியத்தாலான பனிமூட்ட விளக்குகள் போன்ற அவசியமான வெளிப்பபுற அழகுசாதனங்களும் இந்த வாகனத்திற்கு அணி சேர்க்கின்றன. இதன் பாடி அமைப்பு பெட்டிபோன்று இருந்தாலுமம், இந்த வகையான வாகனங்களைவிட இது கவர்ச்சிகரமாகவே உள்ளது. காரணம், இதன் அருமையான கட்டமைப்புத் தரமும் மாசட்ட வடிவமைப்புமே. வெளிப்புறங்களைப் போன்றே, இதன் உட்புற வடிவமைப்பும் மிகவும் கவர்ச்சிகரமாகவும் 'கிரில் ஃபியூம் மற்றும் 'பீஜ்' நிறங்களில் வருகிறது. அதே நேரம், கேபினுக்குள் அருமையான தோற்றத்தை சில அழுத்தமான குரோம் பகுதிகள் அளிக்கின்றன. மேலும், உட்பகுதியில் அழுத்தமான பியானோ கருப்பு மத்திய கன்சோலுக்கு ஒரு நவீன தோற்றத்தைத் தருகிறது. புதிதாக வந்துள்ள இந்த வாகனத்தில் ஓட்டுனரின் இருக்கை உயரத்தை சரிசெய்யும் கருவி, பார்க்கிங் சென்சார்கள், ஒரு மேம்பட்ட ஆன்போர்டு டிரிப் கணினி போன்ற சொகுசு அம்சங்கள் பல உள்ளன. இவை தவிர, இந்த மாடல் வரிசைகளில் மேம்பட்ட மீடியாநேவ் (MediaNAV) நேவிகேஷன் சிஸ்டமும் பிற மேம்பட்ட அம்சங்களும் உள்ளன. இவை இந்த வாகனத்தை அதன் வரிசையில் மிக வலுவான போட்டியாளராக ஆக்கியுள்ளது. ஆச்சரியமூட்டும் வகையில் MPV-யில் குரூய்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும், வேகக் கட்டுப்பாட்ட அமைப்பும் அமைந்துள்ளன. இவை அதன் சாதகமான அம்சங்களைக் கூட்டுகின்றன. பாதுகாப்பு விஷயத்தைப் பொறுத்தவரை, அழுத்தத்தை உணர்ந்து தானாக கதவைப் பூட்டும் அமைப்பும், இரு முன்பக்க காற்றுப் பைகளும் போன்ற சில அவசியமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இவை இந்த வகை கார்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் அம்சங்களாகும். வேறு எந்த வாகனத்தையும் போலவே, இதில் பயணம் செய்பவர்களுக்கு அதிகப்படியான பாதகாப்பினை நிச்சயமாக உறுதி செய்யும் திடீர் அழுத்தத்தைப் பாதுகாப்பு பீம்கள் மற்றும் கிரம்பிள் ஸோன்கள் உட்பட்ட உயர் வலிமையுள்ள ஸ்டீலினால் இந்த MPV கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்த MPV மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ மற்றும் மஹிந்திரா சைலோ போன்ற வாகனங்களுக்கு இணையாக இந்திய வாகன சந்தையில் இருக்கும். மற்ற எந்த நிறுவனத்தின் மாடலைப் போன்றே கவர்ச்சிகரமான 2 ஆண்டு அல்லது 100000 கிலோமீட்டர்கள், இவற்றில் எது முந்துகிறதோ அந்த அளவு வாரண்டி இந்த மாடலுக்கும் உண்டு. அதே நேரம், இரண்டு ஆண்டு இலவச சாலையோர உதவியையும் வழங்குகிறது. இது ஒரு கூடுதல் சாதக அம்சமாகும். மற்றோரு புறம், கூடுதலாக 2 ஆண்டு விரிவாக்கப்பட்ட வாரண்டியையும் 24/7 சாலையோர உதவியையும் (வாகனம் நகராமல் இருப்பதற்கும் விபத்துக்களுக்கும்) தயாரிப்பாளர் வழங்குகிறார்.

மையிலேஜும் எரிபொருள் சிக்கனமும்:


இந்த வாகனத்தில் டீசல் இன்ஜின் மட்டுமே வந்துள்ளன. இருப்பினும், எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும் பல்வேறு பவர் நிலைகள் உள்ளன. எரிபொருள் சிக்கனத்திற்கும் ஒட்டுமொத்த பவருக்கும் உதவும் மேம்பட்ட காமன் ரெயில் ஃபூயல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் இந்த டீசல் இன்ஜினில் உள்ளது. 85PS வாகனம் அதிகபட்ச மையிலேஜான 21.04 Kmpl தரக்கூடியது என நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், அதன் சக்திமிக்க 110PS வகை அதிகபட்சமாக 19.98 Kmpl மையிலேஜ் தரக்கூடியது. இதுவும் அருமையானதுதான்.

சக்தி:


இந்த வாகனத்தில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தற்போது உள்ளது. இரு பவர்களை இது அளிக்கும். 200Nm முறுக்கு விசையினை வழங்கும் ஒரு உச்சபட்ச சக்தியான 83.8bhp-யினை 85PS வகையில் உள்ள 4 சிலிண்டர் மில் வழங்க முடியும். இருப்பினும், 245Nm ஹேமரிங் முறுக்கு விசையுடன் அதிகபட்சமாக 108.45bhp சக்தியை 110PS வகையில் உள்ள மில் தருகிறது.

அக்சிலரேஷனும் பிக்கப்பும்:


110PS வகையின் முகப்பு மூடிக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் ஆறு வேக கைமுறை டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 170 Kmph என்ற உச்ச வேகத்தை அடைய இது உதவுகிறது. அதே நேரம், ஏறக்குறைய 13 நிமிடங்களில் 100Kmph தடையை உடைத்து விடும். மற்றொரு புறம், அதன் குறைந்த சக்தியுள்ள மில்லில் 160Kmph உச்ச வேகத்தை வாகனம் எட்ட ஐந்து வேக கைமுறை கியர்பாக்ஸ் அனுமதிக்கிறது. பிக்கப்பைப் பொறுத்தவரை, நிறுத்திய நிலையிலிருந்து 15 நொடிகளில் 100Kmph வேகத்தை எட்ட முடியும்.

வெளிப்புறங்கள்:


இந்த புதிதாக வெளிவந்துள்ள வாகனத்திற்கு ஓரளவு நல்ல பாடி அமைப்பு உள்ளது. ஆனால், இதன் வகையினங்களில் தனித்ததாகத் தோன்றச் செய்யும் சில கண்கவர் வெளிப்புற அம்சங்களும் உள்ளன. தயாரிப்பாளரின் தயாரிப்புப் பட்டியலில் உள்ள வேறு எந்த மாடலையும் போலல்லாமல் இதன் ரேடியேட்டர் கிரில் ஒரு வித்தியாசமான வடிவமைப்புடன் உள்ளது. இது பெரியது இருந்தாலும் மிக கவர்ச்சிகரமாகவும் குரோம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் மையத்தில் உள்ள நிறுவனத்தின் லோகோ அதற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது. இதைச் சுற்றி உள்ள, சிறிய முகப்பு விளக்குத் தொகுதி மிக அருமையாக அமைந்துள்ளது. அதன் முகப்புக்கு மெருகூட்டுவதாக உள்ளது. இதற்குக் கீழ், கருப்புநிற பட்டைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது கவர்ச்சிகரமான இரட்டை நிற பம்பர் உள்ளது. அதே நேரம், காற்றை உள்ளிழுக்கும் பகுதி இரு வட்ட வடிவ பனிமூட்ட விளக்குகள் குரோம் அலங்கரிப்புடன் உள்ளன. மேல்புறத்தில் உள்ள போனெட் சிறியதாகத் தோன்றினாலும், அதன் வெளிப்படையான வடிவமைப்பு முன்புறத்தில் ஒரு நவீனகரமான தோற்றத்தைத் தருகிறது. அதன் இரு பக்கங்களையும் பொறுத்தவரை, ஒரு பெட்டிபோன்ற அமைப்பைக் கொண்டிருந்தாலும், அதன் ஸ்கை ரேக்குகள் மற்றும் ஸ்டைலான அல்லாய் வீலகளின் காரணமாக மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றுகிறது. இருப்பினும், இவை உயர் விலையுள்ள வகைகளில் மட்டுமே ஒரு ஸ்டான்டர்டான அம்சமாக வருகிறது. அதன் விலை குறைவான மத்திய மற்றம் அடிப்படை வகைகளில் ஸ்டீல் ரிம்முகளே உள்ளன. C பில்லர்கள் மற்றும் கருப்பு B, பாடி நிறத்தில் உள்ள ORVM-கள் மற்றும் கதவு கைப்பிடிகள் உட்பட்ட பல மரபுசார்ந்த வெளிப்புற அம்சங்களும் இந்த வாகனத்தில் உள்ளன. அதன் இரு புறங்களிலும் மிருதுவான பாடி அமைப்பு உள்ளதால் சைடு மோல்டிங்குகள் எடுப்பாக உள்ளன. அதே நேரம், அதன் ஃபெண்டர்களின் மேல் உள்ள டர்ன் பிளிங்கர்கள் அதன் பாதுகாப்பினை மேலும் அதிகரிக்கின்றன. அதன் பின்புறத்தைப் பொறுத்தவரை, அம்பு வடிவ டெய்ல்லைட் தொகுதி அதன் தனித்தன்மையை எடுத்தியம்புகிறது. அதன் டெய்ல்கேட் மிகமிகப் பெரியது. மாடலின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள குரோம் பிளேட் பட்டையைக் கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. முன் பம்பரைப்போன்றே, பின்புறத்திலும் இரட்டை நிற வடிவமைப்பும் ஒரு ஜோடி ரிஃப்ளக்டர்களோடு பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரம் பின்புற விண்டுஸ்கிரீனுக்கு மேல் மூன்றாவது பிரேக் லைட் பொருத்தப்பட்டு பாதுகாப்பினை மேம்படுத்துகிறது. லைசென்ஸ் பிளேட் கன்சோலுக்கு மேல் பொதியப்பட்டுள்ள நிறுவனத்தின் லோகோவால் வாகனத்தின் ஒட்டுமொத்த தோற்றமும் பொலிவடைந்துள்ளது.

வெளிப்புற அளவுகள்:


1751 மிமீ சராசரியான அகலமும் உள்ள வகையில் இந்த வாகனம் தயாரிப்பாளரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த உயரம் 1697 மிமீ. ஆனால், கிரவுண்டு கிளியரன்ஸ் 174 மிமீ அளவுக்கு மிகவும் தாழ்வானது. இருப்பினும், 2810 மிமீ அளவுள்ள மிக நீண்ட வீல்பேஸ் உள்ளது. இது ஒரு MPV-க்கு ஒரளவு நல்லது.

உட்புறம்:


உட்புறத்தைப் பொறுத்தவரை, புதிதாக வந்துள்ள இந்த வாகனத்தின் கேபின் உங்களுடைய எதிர்பார்ப்புகளை விஞ்சும் அளவிற்கு அதிக இடவசதியுடன் உள்ளது. ஏழு மற்றும் எட்டு இறுக்கைககளுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாங்குபவர்களுக்கு நல்ல தெரிவுகளை வழங்குகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளில் குறைந்தது ஆறு பயணிகள் அமர முடியும். அதன் முன் பகுதியில் இருவர் அமர முடியம். ஓட்டுனரின் இருக்கையின் உயரத்தை ஏற்ற இறக்க முடியும். இது இந்த வாகனத்தின் கூடுதல் சாதகமான அம்சமாகும். மற்றொரு புறம், ஏழு இறுக்கை வகையில் உள்ள இரண்டாவது வரிசையில் கேப்டன் இறுக்கைகள்ஆம்ரெஸ்டுன் உள்ளன. இருப்பினும், RxZ வகையில் மட்டுமே ஏழு இறுக்கை வகை தெரிவு உள்ளது. இவை தவிர, இதன் உயர்ந்த விலை மாடல் வகைகளில் லெதர் இன்செட்டுகளுடன் துணி மேலுறைகளை தயாரிப்பாளர் வழங்குகிறார். இது சுவாரசியமானஅம்சமாகும். நிறுவனத்தின் கார் பட்டியலில் உள்ள பிற பல மாடல்களைப் போன்று, இந்த MPV-யிலும், இரட்டை நிற ஸ்கீம் மெட்டாலிக் அழுத்த்துடன் வருகின்றன. இது தவிர, கேபினுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தரும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ரிங்குகளுடன் இதன் டேஷ்போர்டு குரோம் அழகைப் பெறுகின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எளிமையான வடிவில் இரு அனலாக் மீட்டர்களும் ஒரு டிஜிட்டல் டிஸ்பிளேயும் ஒருசில சுட்டு விளக்குகளும் உள்ளன. சேமிப்பு பெட்டி, ஏர் வெண்டுகள் மற்றும் ஒரு சில கட்டுப்பாட்டு விசைகள் போன்ற சில பயன்பாட்டு அம்சங்களுடன் டேஷ்போர்டு ஒரு அடுக்குபோன்ற வடிவமைமப்பில் உள்ளது. ஸ்டீயரிங் வீலில் மரபுரீதியான மூன்று ஸ்போக் வடிவமைப்பு நிறுவனத்தின் பேட்ஜுடன் ஒரு சில மெட்டாலிக் ஆக்செண்டுகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அம்சம் விலை உயர்ந்த டிரிம்மிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்றொரு புறம், டிரிங்க் ஹோல்டர்கள், ஸ்டோரேஜ் யூனிட், சன் வைசர்கள், தரை விரிப்புகள் மற்றும் அக்சஸரி பவர் சாக்கெட்டுகள் உட்பட்ட பல உபயோக அம்சங்கள் கேபினுக்குள் வழங்கப்பட்டுள்ளன.

உட்புற சொகுசு:


மொத்தம் ஏழு வேரியண்டுகளில் இந்த வாகனத்தை தயாரிப்பாளர் வழங்குகிறார். தொடக்கத்தில், வாகன சந்தையில் உள்ள ஒவ்வொருவரும், ஒரே ஒரு டிரிம் லெவலில் மட்டுமே வரும் என நினைத்தனர். ஆனால், அனைத்து வதந்திகளையும் முறியடிக்கும் வகையில் தற்போது ஏழு டிரிம்முகளில் கிடைக்கின்றன. ஏழு மற்றும் எட்டு இறுக்கைத் தெரிவுகளை அளித்துள்ளதன் மூலம் இறுக்கை வடிவமைப்புக்கு தயாரிப்பாளர் மிக அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். அதே நேரம், ஏழு இறுக்கை வகையில் உள்ள இரண்டாவது வரிசையில் கேப்டன் இறுக்கைகள் மேம்பட்ட டிரைவிங் சொகுசிற்காக அளிக்கப்பட்டுள்ளன. லம்பர் சப்போர்ட் மற்றும் ஆர்ம் ரெஸ்டுடன் உள்ள உயரத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யும் அமைப்பு ஓட்டுனர் இறுக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.இது ஓட்டும்போது மிக அதிக சௌகரியத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த அம்சம் விலை உயர்ந்த டிரிம்மிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. விலை குறைந்த வேரியண்டுகளில் பவர் அசிஸ்டடு ஸ்டீயரிங், கையால் இயக்கப்படும் குளிர் சாதன அமைப்பு, கப் ஹோல்டர்கள் மற்றும் ஸ்டோரேஜ் யூனிட்டுகள் போன்ற வழக்கமான அம்சங்கள் உள்ளன. நடுத்தர வேரியண்டுகளில் மின்சாரத்தால் இயக்கும் வெளிப்புற ரியர் வியூ மிரர்கள், எலக்ட்ரோ-ஹைடிராலிக் பவர் ஸ்டீயரிங் அமைப்பு, ஆன்டி-பின்ச் ஃபங்ஷன் மற்றும் வேறு பிற அம்சங்களுடன் உள்ள மின்சாரத்தால் இயங்கும் ஜன்னல்கள் உள்ளன. கேபின் ஃபில்டர் மற்றும் கூரையில் பொருத்தப்பட்ட ஏர் வென்டுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இது அந்தச் சூழலை சுகமானதாக ஆக்கக்கூடியவை. இவை தவரி, விலை உயர்ந்த வகைகளில், அகற்றக்கூடிய மூன்றாம் வரிசை இறுக்கைகளும், ஃபிளைட் டிரேயும், இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசை இறுக்கைகளில் கவிழ்க்கும் அமைப்பும் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, வேகக் கட்டுப்பாட்டு அமைப்புடன் உள்ள ஒரு மேம்பட்ட மோதல் கட்டுப்பாட்டு அமைப்பினை தயாரிப்பாளர் பொருத்தியுள்ளார். இது வாகனத்தை ஓட்டுவதை எளிதாக்கி களைப்பைக் குறைக்கிறது.

உட்புற அளவுகள்:


இந்தப் புதிய MPV அதன் வெளிப்புறத்திலிருந்து, சொகுசாகத் தோன்றுகிறது. அதன் கேபினுக்குள் உள்ள இடவசதி ஆச்சரியமளிக்கும் விதத்தில் மிக அகன்றதாக உள்ளது. குறைந்தது ஏழு பயணிகளும் அதிகபட்சமாக எட்டுப் பேரும் அமரும் வகையில் இதன் கேபின் அம்சமாக கட்டப்பட்டுள்ளது. அதே நேரம், 207 லிட்டர் நடுத்தர பூட் கொள்ளளவுடன் கட்டப்பட்டுள்ளது. பின்புற இறுக்கையை மடிப்பதன்மூலம் 589 லிட்டர்வரை அதிகரிக்க முடியும். இரண்டாவது வரிசை இறுக்கைகளையும் மடிப்பதால் 1861 லிட்டர்வரையும்கூட சேமிப்பிடத்தை அதிகரிக்க முடியும்.

இன்ஜினும் செயல்திறனும்:


ஃபிரெஞ்சு வாகன தயாரிப்பாளரிடமிருந்து வரும் இந்த சமீபத்திய MPV-யில் 1.5-லிட்டர்டீசல் இன்ஜின் தெரிவுகளும் உள்ளன. வாகன துறையில் டஸ்டர் SUV மற்றும் வேறு சில மாடல்களுக்கும் இதே மில்தான் தற்போது சக்தியளிக்கிறது. 1461cc-யினை மாற்றும் ஒரு இரட்டை ஓவர்ஹெட் கேம்ஷேஃப்ட் வால்வு வடிவமைப்பின் அடிப்படையில் 4 சிலிண்டர்கள் மற்றும் பதினாறு வால்வுகள் உள்ளன. 1750rpm-ல் 245Nm ஹேமரிங் முறுக்கு விசையுடன் 4000rpm-ல் அதிகபட்சமாக 108.45bhp-யினை இந்த மோட்டார் சக்தியளிக்கிறது. முன் சக்கரங்களுக்கு முறுக்கு விசையினை வழங்கும் ஒரு மேம்பட்ட ஆறு வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் இந்த மில்லில் உள்ளது. மற்றொரு புறம், 85PS வகையிலும் இந்த மில் உள்ளது. எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. ஆனால், குறைந்த சக்தியையே தருகிறது. 1900rpm-ல் 200Nm முறுக்கு விசைடனும் 3750rpm-ல் 83.8bhp ஆற்றலை வழங்கக்கூடியது இந்த மில். அதன் 100PS வகை போலன்றி, தவறாத திறனை அளிப்பதற்கு இந்த மோட்டார் ஐந்து வேக கைமுறை கியர்பாக்ஸ் உதவுகிறது. மற்றொரு புறம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் பெட்ரோல் வகையை எதிர்பார்க்கலாம். இந்த கவர்ச்சிகரமான MPV வகையில் ஒரு போட்டிமிக்க மாடலாகுவதற்கு இது உதவும். இருப்பினும், டீசல் வகைகளுக்கான தேவையை கருத்தில்கொண்டு, பெட்ரோல் வகையை அறிமுகம் செய்ய நிறுவனம் நினைக்காமல் இருக்கலாம்.

ஸ்டீரியோவும் பிற இணைப்புகளும்:


இடையூறல்லாத ஆடியோ ஸ்டிரீமிங்கிற்கு பல்வேறு தொடர்பு தெரிவுகள் உட்பட்ட பல்வேறுஒரு மேம்பட்ட மீடியாநேவ் தொடுதிரை இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டத்துடன் இந்த மாடல் வரிசையை தயாரிப்பாளர் வழங்குகிறார். அதில் USB போர்ட் மற்றும் ஒரு AUX-இன் சாக்கெட்டுகள் மற்றும் புளூடூத் ஆகியவை அடங்கும். இவை பயனர்களுக்கு வசதியை வழங்கும். இருப்பினும், அதன் நடுத்தர வேரியன்டுகளில் ஒரு சி.டி பிளேயருடன் மேம்பட்ட ஆர்கமிஸ் டியூன்டு மியூசிக் சிஸ்டம் உட்பட ஒரு ஸ்டான்டர்டு 2-DIN மியூசிக் சிஸ்டம் உள்ளன. மற்றொரு புறம், வீடியோ மற்றும் விசூவல் பார்க்கிங் உதவியளிக்கும் சிறந்த தரமுள்ள இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டத்தை வாங்குபவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மற்றொரு புறம், நட்ஜ் கார்டுகள், சைடு ஸ்கர்ட்டுகள், பாடி டிகால்ஸ் மற்றும் பானெட் ஸ்கூப்புகள் போன்ற அழகான வெளிப்புற அழகுசாதனங்களை இந்த வாகனத்தில் பொருத்த முடியும். அதன் அழகை மேலும் அதிகரிக்கும் வகையில் வைரத்தால் வெட்டப்பட்டது போன்று தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட அல்லாய் சக்கரங்களையும் வாங்குபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். மற்றொரு புறம், குறிப்பாக இறுக்கமான இடங்களில் விசூவல் பார்க்கிங் உதவியளிக்கும் ஒரு ரிவர்ஸ் பார்க்கிங் கேமராவையும் வாங்குபவர்கள் பொருத்திக் கொள்ளலாம்.

சக்கரங்கள்:


மற்ற எந்த MPV மாடலைப் போன்றே, ரினால்ட் லாட்ஜியின் விலை அதிகமான RxZ-ல் 15 இஞ்சு அல்லாய் சக்கரங்கள் ஸ்டான்டர்டாக அளிக்கப்படுகின்றன. இந்த எடைகுறைவான அல்லாய் சக்கரங்கள் மேலும் 185/65 R15 அளவுள்ள டியூப்லஸ் ரேடியல் டயர்களுடன் வருகின்றன. மற்றொரு பக்கம், குறைந்த நடுத்தர விலை டிரிம்களில் 15 இஞ்சு ஸ்டீல் ரிம்கள் முழு சக்கர கவர்களுடன் வருகின்றன.

பிரேக் போடுதல் மற்றும் கையாளுதல்:


பிரேக் போடும் அம்சங்களைப் பொறுத்தவரை, முன் சக்கரங்களில் வென்டிலேட்டட் டிஸ்குகளுடன் சமகால பிரேக்கிங் தொழில் நுட்பத்தையும் பின் பக்கத்தில் திறம்பட உழைக்கும் டிரம் பிரேக்குகளும் MPV-யில் வருகின்றன. அதே நேரம், பிரேக்கிங் திறனை அதிகரிப்பதற்காக எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிரிபியூஷன் ஃபங்ஷனுடன் உள்ள ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தையும் தயாரிப்பாளர் வழங்குகிறார். ஆச்சரியமூட்டும் வகையில், இந்த அம்சம் எல்லா வேரியன்டுகளிலும் ஸ்டான்டர்டாகவே கிடைக்கின்றன. மற்றொரு புறம், எஃபர்ட்லஸ் டிரைவிங் அனுபவத்தைத் தரும் வேகம் சார்ந்த செயல்பாட்டை அளிக்கும் பவர் அசிஸ்டடு ஸ்டீயரிங் இந்த MPV -யில் கிடைக்கின்றன. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, அதன் முன் ஆக்சிலில் மெக்பர்சன் ஸ்டிரட்டும் பின் ஆக்சிலில் வாகனத்தை நிலையாகப் பிடித்திருக்கும் டார்சன் பீம் சஸ்பென்ஷனும் வருகின்றன. கூடுதலாக, இந்தMPV-யின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் ஆன்டி ரோல் பாரும்கூட உள்ளது.

பாதுகாப்பு:


சாலைப் பாதுகாப்பினை பயணிகளுக்கும் வாகனத்திற்கும் வழங்க அவசியமான பல பாதுகாப்பு அம்சங்களை இந்த MPV வரிசை கார்கள் பெற்றுள்ளன. EBD-யுடன் ABS, மூன்று புள்ளி ELR இருக்கைபட்டைகள், பக்கவாட்டு பாதுகாப்பு பீம்கள், கதவி திறந்திருப்பதற்கான எச்சரிக்கை, சக்திவாய்ந்த முகப்பு விளக்குகள் மற்றும் உயர்ந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது பிரேக் லைட்டுகள் போன்றவை இதன் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களுள் சில. அதே நேரம், ரியர் வைப்பர், ரியர் பார்க்கிங் சென்சார்கள், டிரைவரின் சீட்பெல்ட் ரிமைன்டர், தானியங்கு கதவு பூட்டு மற்றும் இம்பேக்ட் சென்சிங் தானியங்கு கதவு திறப்பு ஆகியவையும் இதில் உள்ளன. இவையல்லாமல், சாவியில்லாது நுழையும் செயல், இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள், ரியர் டிஃபாகர், முன் சீட்பெல்ட் ஹைட் அட்ஜஸ்டர் மற்றும் வாஷர் அடங்கிய ஒரு ரியர் வைப்பர் ஆகியவையும் இதில் உள்ளன. இருப்பினும், இந்த அம்சங்களுள் பல RxZ வேரியன்டுகளில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற எந்த நான்கு சக்கர வாகனங்களைப் போன்றே MPV-யிலும் திருட்டு அல்லது வேறு எந்த உத்தரவில்லாத அணுகலிலிருந்து வாகனத்தைப் பாதுகாப்பதற்கு உதவ இன்ஜின் இம்மொபிலைசரும் வருகின்றன.

நிறைகள்:1. நுட்பமான வெளிப்புற தோற்றமே இதன் மிகப்பெரிய பலம்.
2. டீசல் இன்ஜினின் செயல்திறன் நன்றாக உள்ளது.
3. போதிய கால் இடவசதி உள்ள மிகப்பெரிய கேபின் இடவசதி
4. எல்லா வேரியண்டுகளுக்கும் EBD-யுடன் ABS ஒரு ஸ்டான்டர்டு அம்சமாக வருகிறது.
5. வாங்குவதற்கான தொடக்கச் செலவு ஓரளவு குறைவே.

குறைகள்:1. தாழ்வான கிரவுண்டு கிளியரன்ஸ் மேடுபள்ளமான சாலைகளில் ஓட்டுவதைக் கடினமாக்கலாம்.
2. புரொஜெக்டர் முகப்பு விளக்குகளை வழக்கமான அம்சமாகவே கொடுக்கலாம்.
3. எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்க முடியும்.
4. தானியங்கு டிரான்ஸ்மிஷன் இல்லாதிருப்பது ஒரு குறையே.
5. உட்புற வடிவமைப்பு இன்னும் சிறிது டிரென்டியாக இருந்திருக்கலாம்.