ரெனால்ட் KWID

` 2.6 - 4.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


மார்ச் 08, 2016: தற்போது தனது துவக்க நிலை ஹேட்ச்சான க்விட் காரின் மூலம் சர்வதேச சந்தைக்குள் காலடி எடுத்து வைக்க ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் சர்வதேச இலக்கு மொரிஷியஸ் ஆக இருக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, இந்த பிரான்ஸ் நாட்டு வாகனத் தயாரிப்பாளர், பிரேசில் நாட்டிற்குள் விற்பனை முயற்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தது. அதேபோல இதன் விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மற்ற சார்க் நாட்டுகளையும் இந்நிறுவனம் குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2016 மார்ச் மாதம் முதல் தனது உற்பத்தியை 10,000 யூனிட்டாக உயர்த்தி, தற்போதைய காத்திருப்பு காலத்தை ஏறக்குறைய 35 முதல் 40 சதவீதம் வரை குறைக்க, ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது கார்களின் வகையை பொறுத்து, 4-5 மாதங்கள் வரை இந்நிறுவனம் காத்திருப்பு காலமாக எடுத்துக் கொள்கிறது. சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் க்விட் காரின் ஒரு AMT வகையையும், ரெனால்ட் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இந்த ஹேட்ச்பேக்கை ஒரு 0.8-லிட்டர் என்ஜின் இயக்க, அதிகபட்ச ஆற்றலாக 53bhp-யையும், ஒரு உயர்ந்த முடுக்குவிசையாக 72Nm-யையும் அளிக்க வல்லது.

ரெனால்ட் க்விட் விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்


இந்த சிறிய கார், இந்தியாவின் மொத்த உணர்வாக திகழ்கிறது. நாம் சந்திக்கும் நெரிசலில் மூழ்கிய சாலைகள், எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் பழுதுகளை மலிவாக தீர்க்க கூடிய தன்மை மற்றும் நீண்டப் பயணங்களுக்கு நம்பகமானது என்று இந்த கார் செய்முறைக்கு (பிரேக்டிக்கல்) ஏற்ப அமைந்துள்ளது. இது போன்ற தன்மைகளை கொண்ட ஹேட்ச்பேக்குகள் தான் இந்தியாவில் அதிக அளவிலான விற்பனையை பெறுகிறது என்பதை குறிப்பிட்டு கூற தேவையில்லை. மிக நீண்டகாலமாக மாருதி நிறுவனம் அளிக்கும் ஆல்டோ, இந்த பிரிவின் அசைக்க முடியாத மன்னனாக இருந்து வருகிறது. அந்த நிலையில் இருந்து ஆல்டோவை நீக்க, ஹூண்டாய் இயான், டாடா நானோ மற்றும் டாட்சன் கோ ஆகிய கார்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் அவை அனைத்தும் மண்ணை கவ்வியது தான் மிச்சம்.

p1

அதை மேற்கொள்ளும் திறனை கொண்ட ஒன்றாக க்விட் விளங்கும் என்பதை ரெனால்ட் நிறுவனம் முழுமையாக நம்புகிறது. எனவே ஒரு சர்வாதிகார மாடலை வீழ்த்தும் திறன், இதற்கு உண்டா என்பதை குறித்து இங்கே கண்டறிவோம்!

பிளஸ் பாயிண்ட்ஸ்:1. கச்சிதமான விலை நிர்ணயம். எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.7 லட்சத்தில் இருந்து துவங்கி, உயர் வகையின் ரூ.3.6 லட்சத்தில் முடிவடைகிறது.
2. SUV-யை தழுவிய ஸ்டைலிங். இதில் உள்ள கிளாடிங் மற்றும் தடித்த கூறுகளை கொண்டு, இந்த பிரிவில் இதை போன்ற எதுவும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
3. இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த எரிபொருள் சேமிப்பு கொண்ட பெட்ரோல் என்ஜின். ARAI மூலம் லிட்டருக்கு 25.17 கி.மீ என்று அளவிடப்பட்டுள்ளது.
4. சமகாலத்தை சேர்ந்த வாகனங்களுடன் ஒப்பிட்டால், இடவசதி கொண்ட கேபினை கொண்டுள்ளது.

மையினஸ் பாயிண்ட்ஸ்:1. உயர் வகையில் கூட ABS தேர்வு அளிக்கப்படவில்லை.
2. விலைக் குறைப்பை முன்னிறுத்திய உட்புற அமைப்பியல் மூலம் எரிச்சல் ஏற்படுகிறது. பொருட்களின் தரம் இன்னும் கூட மேம்பட்டதாக அளித்திருக்கலாம்.
3. சத்தம் எழுப்பும் என்ஜின் மற்றும் தாங்க முடியாத அதிர்வுகள் உண்டாகிறது.
4. நகரப்புறத்திற்கு மட்டுமே சிறப்பாக ஒத்துவர கூடியது. நெடுஞ்சாலை பயணங்களில் திணறுகிறது.
5. இதன் போட்டியாளர்களான ஆல்டோ, K10 மற்றும் இயான் 1.0 ஆகியவை கூடுதல் ஆற்றல் கொண்ட என்ஜின் தேர்வுகளை அளிக்கின்றன.

தனித்தன்மையான அம்சங்கள்:1. பிரிவிலேயே சிறந்த டச் ஸ்கிரீன் மீடியா – நேவிகேஷன் சிஸ்டம்.
2. இந்த பிரிவில் இதுவரை காணப்படாததும், ஒரு கூட்டம் கேள்விப்படாத அம்சங்களை உட்கொண்ட அட்டகாசமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரை கொண்டுள்ளது. இதில் டிஸ்டென்ஸ் டு எம்ட்டி சராசரி மற்றும் ரியல்-டைம் ஃபியூயல் கன்ஷெப்ஷன் ஆகியவை உள்ளன.

மேற்பார்வை:


வரும் 2017 ஆம் ஆண்டின் முடிவில், இந்திய வாகன சந்தையின் 5% பங்குகளை பெறுவதற்கு ரெனால்ட் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில், வாகன ஆர்வலர்களிடம் இருந்து இதுவரை மிக அதிகளவிலான முன்பதிவுகளை க்விட் கார் பெற்றுள்ளது. இதன்மூலம் மாருதிக்கு ஒரு கடினமான போட்டியாளராக தற்போது திகழ்கிறது. கடந்த 2014 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த க்விட் காரின் தொழிற்நுட்பத்தை நாம் முதன் முதலில் கண்டோம். இதன் எதிர்காலத்திற்கு ஏற்ற வடிவமைப்பு மூலம் உண்மையிலேயே ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.

க்விட் கார் அடிப்படையில் ஒரு ஹேட்ச்பேக் என்ற பொய்க்காலில் நிலைநிற்கிறது. இதனால் இதை ஒரு SUV என்று அழைத்தால், அது தவறாகிவிடும். இதை நாம் ஒரு கிராஸ்ஓவர் என்றும் அழைக்க முடியாது. இதில் ஊடுருவி செல்லும் தடித்த லைன்கள் மற்றும் கருப்பு பிளாஸ்டிக் கிளெட்டிங் ஆகியவை சேர்ந்து, இதற்கு ஒரு SUV-யை போன்ற உணர்வை அளிக்கிறது. டஸ்டரின் 70% அமைப்பை யாரோ அப்படியே நகல் எடுத்து (காப்பியர்) வைத்துள்ளதாக கூட சிலர் கூறலாம். இந்த ஸ்டைலிங்கை நாங்கள் விரும்புவதோடு, புதுப்பொலிவுடன் தோற்றம் அளிக்கும் கார்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

இந்த க்விட்-டை உண்மையிலேயே ஒரு சர்வதேச கார் என்று நீங்கள் அழைக்க முடியும். மும்பையில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் டிசைனிங் சென்டரில், கொரியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்ட உள்ளீடுகளையும் சேர்த்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டினரும் தங்களது துறையில் சிறந்த பங்களிப்புகளை, இந்த காரின் கட்டமைப்பிற்கு அளித்து, அதை ஓடச் செய்துள்ளனர்.

இதன் விலையை கருத்தில் கொண்டு பணியாற்றுவதில் அவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் க்விட் காரின் தயாரிப்பில் 98%, உள்ளூரிலேயே நடைபெற செய்துள்ளனர். ஒரு 0.8-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் ஆற்றலை பெறும் இந்த வாகனம், ஒரு உயர் அளவு எரிபொருள் சேமிப்பை அளிக்கும் வகையில், லிட்டருக்கு 25.17 கி.மீ (ARAI) மைலேஜை அளிக்கிறது. இதை ஒரு மிகச்சிறந்த பேரமாக நாம் உணர முடியும்! சமீபத்தில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016-வில், க்விட் காரின் அதிக ஆற்றல் மிகுந்த வகையான 1.0-லிட்டர் பெட்ரோல் என்ஜினை தன்னகத்தே கொண்ட வாகனத்தை, இந்நிறுவனம் வெளியிட்டது. இந்த என்ஜின், ஒரு 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஒரு AMT டிரான்ஸ்மிஷன் கொண்டதாக அமையப் பெற்று, ரெனால்ட் நிறுவனம் மூலம் இஸி- R AMT என்று அழைக்கப்படுகிறது. இதனை குறித்த தகவல்கள் இன்னும் உறுதிச் செய்யப்படாமல் இருந்தாலும், அடுத்து வரவுள்ள பண்டிகை காலத்தில் இவ்வாகனம் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வெளிப்புற அமைப்பியல்


துவக்க நிலை ஹேட்ச்பேக் பிரிவிற்குள் ஒரு SUV-யின் உணர்வை ரெனால்ட் நிறுவனம் தான் முதன் முதலில் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே பழக்கப்பட்ட ஆல்டோ உடன் ஒப்பிட்டால், இது புத்தம் புதியதாக காட்சி அளிக்கிறது. உயர் நிலை மற்றும் தடித்த கருப்பு பிளாஸ்டிக் வீல் ஆர்ச்சுகள் ஆகியவை இணைக்கப்பட்டு, ஒரு SUV-யின் தோற்றத்தை பெறுகிறது.

p2

முன்பக்கத்தில் உள்ள கிரில், எதிர்காலத்திற்குரிய ஒரு மாதிரியில் அமைந்துள்ளது. முன்பக்கத்தில் உள்ள ஒரே கிரோம், ரெனால்ட் நிறுவனத்தின் டைமண்ட் லோகோ மட்டுமே. நீங்கள் கிரோமை விரும்புபவராக இருந்தால், இதை ஹனிகோம் கிரில் மூலம் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். சாலையில் பயணிக்கும் எதிலும் இல்லாத வகையில், உங்கள் க்விட் காரை முழுமையாக மாற்றியமைக்கும் தேர்வுகளை, ரெனால்ட் நிறுவனம் அளிக்கிறது.

p3

ஃபேக் லெம்ப்களை சூழ்ந்து அமையும் வகையில், இதன் பம்பர்களில் கூடுதல் தடித்த தன்மையை கொண்டுள்ளது. கீழ்பகுதியில் காணப்படும் சிறிய ஏர் டாம், தொடர்ந்து கிரில்லின் அதே ஸ்டைலிங்கை அளிக்கிறது.

p4

இந்த கார் அதிக உயரம் கொண்டதல்ல என்பதோடு, பக்கவாட்டு பகுதியில் ஒரு உயர்ந்த விண்டோ லைன் மற்றும் பெரிய விண்டோக்களை கொண்டுள்ளது. கீழ்பகுதியில் காணப்படும் கருப்பு ஸ்லாட்கள் பிளாஸ்டிக் அல்ல. ஆனால் சாதாரண ஒரு வினைல் ஸ்டிக்கர் ஆகும். டீலர்ஷிப் நிலையில் இருந்து கிடைக்கும் உதிரிப் பாகங்களில், ஒரு பிளாஸ்டிக் கிளெடிங்காக இதை நீங்கள் மேம்படுத்தி கொள்ள முடியும்.

p5

இந்த கார் 13-இன்ச் ரிம்களைப் பெற்று, அதில் 155mm ரப்பர் உடன் 3 லுக் நட்களை கொண்டு காரின் இயக்கத்திற்கு உதவுகிறது. 4 போல்ட்கள் அளிக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எங்களுக்கு தோன்றுகிறது. இந்த 3 லுக் நட்களை பார்க்கும் போது, டாடா நானோ தான் நம் நினைவிற்கு வருகிறது. இதே போன்ற டயர் மற்றும் ரிம் கலவையை தான் இயான் காரிலும் காணப்படுகிறது. ஆனால் நானோ மற்றும் ஆல்டோ 800 ஆகியவற்றில் சற்று மெலிந்ததாக முறையே 135 மற்றும் 145 mm டயர்களை, 12 இன்ச் ரிம்களில் பெற்றுள்ளன.

வெளிப்புற மிரர் மற்றும் டோர் ஹேண்டில்கள் வழக்கமான முறையில் அமைந்து, கருப்பு நிறத்தில் காட்சி அளிக்கின்றன. இதன் பிளாஸ்டிக் தரம் சற்று குறைந்ததாக இருப்பதோடு, மிரர்களை உள்ளே இருந்து மாற்றியமைக்க முடியாது. ஆனால் இந்த வசதி ஆல்டோ 800-ல் அளிக்கப்படுகிறது. சைடு டேன் இன்டிகேட்டரின் பல்புகளை, முன்பக்க வீல் ஆர்ச்சின் மீது அமைக்கப்பட்டுள்ளது. பின்புற விண்டோவின் கீழே பக்கவாட்டு பகுதியில் வகையின் பேட்ஜை நீங்கள் காணலாம்.

p6

பின்புறத்தில் உள்ள பேட்ஜ், சிறிய அளவில் உள்ளது. இதில் டெயில் லெம்ப்கள், ஒரு துவக்க வகையை சேர்ந்ததாக உள்ளது. பின்புறத்தில் ரெனால்ட் மற்றும் க்விட் பேட்ஜ்கள் நடுவே இடம்பெறுகின்றன. அதே நேரத்தில் ஒரு சிறிய ரெனால்ட் பேட்ஜ் இடதுபுறத்திலும் காணப்படுகிறது. பம்பரின் கீழ் பகுதி, தரமான கருப்பு கிளாட்டிங்கை பெற்றுள்ளது. உயர் வகையில் கூட பாடி நிறத்திலான பம்பர்களுக்கான தேர்வு அளிக்கப்படவில்லை.

p7

காரின் மேலே உள்ள ரூஃப்பில் ஒரு U வடிவிலான பள்ளம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மெல்லிய ஷீட் பயன்பாட்டை சமரசம் செய்யும் வகையிலும், கடினத் தன்மையை அதிகரிக்கவும் இப்படி செய்யப்பட்டுள்ளது. எல்லா வகைகளிலும் ஒரு ஒருங்கிணைந்த ரூஃப் ஸ்பாயிலர் அளிக்கப்பட்டுள்ளது, இதன் மதிப்பை அதிகரிப்பதாக உள்ளது. இதனுடன் ஒரு நீண்ட FM ஆன்டினாவும் அளிக்கப்படுகிறது. மேலும் டீலர்ஷிப்-பின் உதிரிப்பாகங்களின் ஸ்டோரில் இருந்து ரூஃப் ரெயில்களை கூட நீங்கள் பெற்று கொள்ளலாம்.

p8

க்விட் காரின் முன்பக்கத்தில் உள்ள ஒரே ஒரு வைப்பர் மட்டுமே காணப்படுகிறது. பின்புறத்திற்கு வைப்பர் தேர்வு எதுவும் கிடையாது. இது ஒரு விலைக் குறைப்பு நடவடிக்கை என்றாலும், அதன் ஒவ்வொரு துடைப்பிலும் விண்டுஷில்டின் பெரும்பாலான இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்திருக்கும். இந்த வசதியை உயர் வகையில் (RXT) மட்டுமே பெற முடிகிறது. இதன்மூலம் நீராவிக்கு பதிலாக, ஒரு சிறிய அளவிலான கழுவும் நீர் (வாஷர் ஃப்ளூய்டு) தெளிக்கப்பட்டு, ஒரு விரைவான வைப்பரின் துடைப்பு அளிக்கப்படுகிறது. இந்த பிரிவில் உள்ள மற்ற எந்த கார்களிலும், இந்த வசதி அளிக்கப்படுவதில்லை.

p10

க்விட் காரின் அளவீடுகளை பொறுத்த வரை, இப்பிரிவில் 2வது இடத்தை பெறும் வகையில், அதன் நீளம் 3679mm உள்ளது. இப்பிரிவில் முன்னணி வகிக்கும் டாட்சன் கோ, இதைவிட 100mm அதிக நீளத்தை பெற்றுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸாக 180mm-யை கொண்டு, அதிலும் உயர்ந்து காணப்படுவதால், வேகத்தடைகளுக்கு இது சிறந்ததாக அமையும் என்றாலும், இதுவே இந்த காருக்கு முட்டுக்கட்டையாக உள்ளதா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வீல் பேஸாக 2422mm-யை கொண்டுள்ளது. இது இயான் மற்றும் ஆல்டோவை விட அதிகமாகும். கிரிப் வெயிட்டின் அளவு 660 கிலோ உள்ளது. இது நானோவை விட ஏறக்குறைய 50 கிலோ குறைவாகும். இந்த பிரிவிலேயே சிறந்த பூட் ஸ்பேஸாக, இது 300 லிட்டர் அளவை கொண்டுள்ளது.

க்விட் காரின் SUV-யை போன்ற வடிவமைப்பின் மூலம் ஏற்படுத்தும் கவர்ச்சியை நாங்கள் விரும்புவதோடு, அது சரிவிகிதத்தில் அமைந்துள்ளது. தற்போதைய சந்தையில் ஹேட்ச்பேக்கில் இருந்து கிராஸ்ஓவர்கள் மற்றும் SUV-களின் மீதான ஆர்வம் திசைமாறி வரும் நிலையில், இந்த காருக்கு ஒரு சிறந்த வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

1
href="http://bloglang.cardekho.com/wp-content/uploads/2015/10/22.png">2


உட்புற அமைப்பியல்:


க்விட் காருக்கு அளிக்கப்பட்டுள்ளது போன்ற விலை நிர்ணயத்திற்கு பின்னணியில், சில காரியங்களில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டியுள்ளது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதிக விலை குறைவில் ஈடுபடும் போது, பொதுவாக உட்புற அமைப்பியலில் குறைப்புகள் இடம்பெறும். ஆனால் க்விட் காரில் அப்படியல்ல. டிரைவரின் மூலம் தினந்தோறும் பயன்பாட்டில் உள்ள எந்த காரியங்களிலும் சமரசம் செய்வதை வடிவமைப்பாளர்கள் விரும்பவில்லை என்பது உறுதியாக தெரிகிறது. ஆனால் இதில் பயன்படுத்தியுள்ள பிளாஸ்டிக், சற்று குறைந்த தரத்தில் அமைந்ததாக உள்ளது.

p11

க்விட் காருக்குள் நீங்கள் நுழைந்த உடனேயே முதலில் உங்கள் கண்களில் படுவது டஸ்டரிடம் இருந்து பெறப்பட்ட 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் தான். இந்த சிஸ்டத்தை ஒரு பியானோ பிளாக் பிசில் சூழ்ந்து இருப்பதோடு, ஒற்றை டோன் க்ரே டேஸில் பேதம்காட்டும் (கான்ட்ராஸ்ட்) கிரோமின் ஒரு லேசான வரி காணப்படுகிறது. இந்த சிஸ்டத்தின் மூலம் நேவிகேஷன், USB, ஆக்ஸ் மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகியவற்றை பெற முடிகிறது. தொழிற்சாலையில் இருந்து டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்று வரும் ஒரு தேர்வை, இப்பிரிவிலேயே இந்த காரில் மட்டும் தான் அளிக்கப்படுகிறது.

p12

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கு கீழே, ஏர் கண்டீஷன் செயல்பாடுகளை கொண்டுள்ளது. இந்த கினாப்களில் கிரோம் மேலோட்டங்களை பெற்று, பயன்பாட்டிற்கு எளிதாக உள்ளன. இருபுறத்திலும் உள்ள ஏர் வென்ட்கள், வட்ட வடிவில் அமைந்து, கிரோம் உள்ளீடுகளை பெற்றுள்ளது. நடுவில் உள்ளது செவ்வக வடிவில் அமைந்து, கினாப்களில் லேசான கிரோம்களை பெற்றுள்ளது. இவை அனைத்தையும் தனிப்பட்ட முறையில் மூட முடியும். இதன் துவக்க வகையில், ஏர் கண்டீஷனிங் வசதி அளிக்கப்படுவதில்லை.

அதற்கு கீழே லைட்கள், பவர் விண்டோக்கள் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் ஆகியவற்றின் பட்டன்கள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் டிரைவர் மற்றும் பயணிகள் பக்கத்தில் தனித்தனியாக சுவிட்சுகளை வைக்கும் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை மேற்கூறிய இரு தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இதனிடையே ஒரு வட்ட வடிவிலான வெற்று இடம் அமைந்துள்ளது எதற்கு என்பது தெரியவில்லை. இங்கே தான் AMT (ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) கினாப் வைக்கப்படும் என்று செவிவழி செய்திகள் மூலம் அறியப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை நாங்கள் ஏற்பதாக இல்லை!

இந்த கன்சோலின் கீழே கியர் ஸ்டிக் அமைந்து, அதன் முன்னே கப் ஹோல்டர் மற்றும் ஒரு 12v சார்ஜிங் பாயிண்ட் ஆகியவை உள்ளன. ஹேண்டு பிரேக் மற்றும் கியர் ஸ்டிக் ஆகியவற்றின் இடையே, உங்களுக்கு ஒரு சின்ன இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே இது ஒரு சிறந்த ஆலோசனை.

p13

டிரைவரின் கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒரு சிறந்த சிறிய ஸ்டீரிங் வீல்லை நீங்கள் பெற முடிகிறது. பார்ப்பதற்கு ஸ்டைலாக தோற்றமளிக்கும் இது, பிடிப்பதற்கும் நன்றாக இருக்கிறது. இக்னிஷன் உள்ளே உங்கள் சாவியை செலுத்தி பார்த்தால், க்விட் என்பது வெறும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்ட ஒரு தந்திரமான குதிரை வண்டி அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர், பிரிவிலேயே சிறந்ததாகும். வேகத்தை சரியாக காட்டும் இது, நாம் புறப்பட்ட இடத்தில் இருந்து உள்ள தூரத்தை ஒரு சிறிய ஸ்ட்ரிப் குறிப்பிடுகிறது. இதில் ஓடோமீட்டர், டிஸ்டன்ஸ் டு எம்ட்டி மற்றும் ஒரு டிரிப் மீட்டர், ரியல்-டைம் ஃபியூயல் கன்சப்ஷன், சராசரி எரிபொருள் பயன்பாடு, பயணித்த தூரம், டிரிப் பியூயல் கன்சப்ஷன் மற்றும் சராசரி வேகம் ஆகியவையும் காட்டப்படுகிறது. எரிபொருள் அளவை காட்டுவதன் அருகே உள்ள ரீசெட் பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கண்ட எல்லா அளவீடுகளையும் மாற்றி அமைத்து கொள்ள முடியும்.

p14

ஹெட்லைட் மற்றும் இன்டிகேட்டர் ஸ்டாக்குகள் ஆகியவை, ஸ்டீரிங் வீல்லில் இருந்தே பயன்படுத்தும் வகையில் எளிதாக உள்ளது. இதில் ஒரு லேன் மாற்றும் அம்சமும் உள்ளது. இது ஒரு சிறிய அளவில் அமைந்து, இன்டிகேட்டரை மூன்று முறை மின்னும்படி செய்து, தானாக அணைந்துவிடும்.

பயணிகள் பகுதியில், இரு கிளெவ் பாக்ஸ்கள் காணப்படுகின்றன. மேலே காணப்படும் ஒன்றில், ஒரு வாட்டர் பாட்டிலை வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு கட் அவுட்டை பெற்றுள்ளது. கீழே உள்ள கிளெவ் பாக்ஸ் சற்று பெரியதாக உள்ளது. இது தவிர இவை இரண்டிற்கும் நடுவே ஒரு திறந்த பொருள் வைப்பு ஷெல்ப் காணப்படுகிறது.

p15

முன்பக்கத்தில் உள்ள ஸ்பீக்கர்கள், டேஸ்போர்டின் இருபுறத்திலும் மேலாக வைக்கப்பட்டுள்ளது. சவுண்டின் தரம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனால் இதன்மூலம் அடித்து உடைப்பது போன்று பாஸை உயர்த்தி கடினமான முறையில் இசையை கேட்க முடியாது. இசைப் பிரியர்கள், இதை மேம்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. முன்பக்க சீட்கள், கருப்பு, சிவப்பு, சாம்பல் ஆகிய மூன்று நிறங்களில் ஒன்றிணைந்த அப்ஹோல்டரியை பெற்றுள்ளது. ஹெட்ரெஸ்ட்கள் நிலையானவை, அவற்றை மாற்றியமைக்க முடியாது. ஆல்டோவில் உள்ளதை விட சீட்கள் அதிக இதமானவை. மேலும் அதிக விஸ்தாரமாகவும், தொடைகளின் கீழே சிறந்த ஆதரவாகவும் உள்ளன.

p16

பின்பக்கத்திற்கு செல்லும் போது, ஆல்டோ மற்றும் இயான் ஆகியவை உடன் ஒப்பிட்டால், இது நிச்சயமாக வெற்றியாளராக விளங்கும். போட்டியில் உள்ள மற்ற வாகனங்களுடன் ஒப்பிட்டால், அதிக உயரம் உள்ளவர்கள் கூட, இதில் இதமாக அமர்ந்து பயணிக்க முடியும். பின்புறத்தில் 3 பேர் சற்று நெரிசலுடன் அமர முடியும். ஆனால் வசதிக் குறைவாக இருக்கும். பின்புறத்தில் 2 பேருக்கு தாராளமாக அமர ஏற்றதாக இருக்கும். முன்புறத்தை போலவே, பின்புறத்தில் உள்ள சீட்களிலும் 3 நிறக் கலவையிலான அப்ஹோல்டரியை பெற்றுள்ளது. சீட்களில் வரையறைகள் இல்லாமல், இதமான முறையில் குஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீட்டிங் சற்று உயரமாக இருப்பதால், ஒரு எளிதான பார்வைக்கு வழிவகுக்கிறது. இதன் சீட் பெல்ட்களில் உள்ளிழுக்கும் தன்மை இல்லை என்பதால், இது ஒரு காலம் கடந்த யோசனையை போல தோன்றுகிறது. எப்போது கதவை மூடினாலும், அவற்றை பின்புறத்திற்கு அழுத்த வேண்டியது அவசியமாகிறது. மேலும் இது பின்புறத்தில் அமைந்த குளறுபடியாக உள்ளது. பின்புறத்தில் பவர் விண்டோக்களின் வசதி கிடையாது என்பதால், அவற்றை நீங்கள் கையால் தான் இயக்க வேண்டும். உயர்தர வகையிலாவது இதற்கு ஒரு தேர்வு அளிக்கப்படலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இப்பிரிவில் சிறந்த பின்புற இருக்கைகளை கொண்ட கார்களில் இதுவும் ஒன்று.

p17

பின்புறத்தில் உள்ள பூட்டை திறக்க, முன்பக்க சீட்டின் கீழே உள்ள கினாப் அல்லது கீ-யை பயன்படுத்தலாம். பூட் ஸ்பேஸ் மிகப்பெரியதாகும். இதன் 300-லிட்டர் பூட் என்பது இந்த துவக்க-நிலை பிரிவிலேயே சிறந்தது என்பதோடு மட்டுமில்லாமல், முழு ஹேட்ச்பேக் பிரிவிலேயே சிறந்த ஒன்று என்று கூறலாம். இதிலும் நீங்கள் விரும்பும் இடவசதி போதாக்குறையாக இருந்தால், பின்பக்க சீட்களை முழு மட்டமாக மடக்கி கொண்டு, நீங்கள் விரும்பும் இடவசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் வீல் ஆர்ச்சுகள் வெறும் உலோகமாக அமைந்து, அழகற்றதாக காட்சி அளிக்கின்றன. ஆனால் நீங்கள் இப்பகுதியில் அதிக நேரம் செலவிடப் போவதில்லை. பூட் லைனிங் கீழே, ஒரு முழு அளவிலான ஸ்பேர் வீல் காணப்படுகிறது.

p18

உட்புற அமைப்பியலை குறித்த எங்களின் கடைசி கருத்து: உங்களின் பணத்தை செலவிட்டால், எண்ணற்ற அம்சங்களை நீங்கள் பெற முடியும். ஆனால் இந்த காரின் உட்புற அமைப்பியலை, ரெனால்ட் நிறுவனம் இனிமையாக (ஒரு குறைந்த செலவீனத்தில்) செய்துள்ளது. எனவே காருக்குள் நீங்கள் செலவிடும் நேரத்தை, இடையூறு மிகுந்த அனுபவமாக இருக்காது.

p19

செயல்திறன்


பெட்ரோல்


3

க்விட் காரில் உள்ள என்ஜின், ஒரு புதிய 800cc யூனிட் ஆகும். இங்கு கவனிக்க வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால், க்விட் காரின் மொத்த உருவாக்க செலவில், 50% பணத்தை இந்த என்ஜின் உருவாக்கத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு என்ஜின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு தான், இந்தியாவிலேயே அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட பெட்ரோல் என்ஜினை ரெனால்ட் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ARAI அளவீடுகளின்படி, இது லிட்டருக்கு 25.17 கி.மீ மைலேஜை அளிக்கிறது. இதனுடன் ஒப்பீடும் போது, ஆல்டோவிற்கான ARAI அளவீடு லிட்டருக்கு 22.74 கி.மீ எனவும், இயான் லிட்டருக்கு 21.1 கி.மீ எனவும் மைலேஜ் அளிக்கின்றன. ஒரு 3 சிலிண்டர் யூனிட்டான இந்த என்ஜின், 4,386rpm-ல் 53.3 bhp ஆற்றலையும், 74Nm முடுக்குவிசையையும் வெளியிட்டு, ஆல்டோ 800-யை விட 6bhp அதிக வெளியீட்டை அளிக்கிறது. இதைவிட இயான் 2bhp கூடுதலாக அளித்தாலும், எடை அதிகம் கொண்டதாக உள்ளது.

p20

இந்த என்ஜின் ஒரு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. கியர் விகிதங்கள் சரியாக உகந்தவையாக உள்ளன. வாகனத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் இருந்தால் என்ஜின் இதமாக செயல்படுகிறது. ஆனால் பயணிகள் மற்றும் சில சரக்குகளையும் ஏற்றி, சுமையை அதிகரிக்கும் போது, அது திணற துவங்குகிறது. ரீபைன்மெண்ட்டை பொறுத்த வரை, இந்த பிரிவில் இருக்கும் மற்றவையுடன் ஒப்பிட்டால், இது மிகவும் சிறப்பாக இருப்பதால், இது குறித்து அதிகமாக குற்றப்படுத்த எதுவும் இல்லை. அவ்வப்போது ஒருசில அதிர்வுகளை காண முடிகிறதே தவிர, உயர் rpm-களில் கூட என்ஜின் சிறப்பாக தான் செயல்படுகிறது. இந்த தனிமைப்படுத்துதல் மூலம் ரெனால்ட் நிறுவனம், மக்களிடையே ஏற்படுத்திய அதிர்வுகளையும், ஒலியையும், நாங்கள் வெகுவாக விரும்புகிறோம்.

இதன் கேபினை பார்த்தால், இதனுடன் போட்டியில் உள்ளவைகளிடம் இருந்து எவ்வளவோ மைல்களை கடந்து முன்னணி வகிக்கிறது. நகர் பகுதியில் ஓட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த கார், தனது பணியை சிறப்பாக செய்கிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் சரிவுகளில் பயணிக்கும் போது அழுத்தம் மிகுந்தாக செயல்படுகிறது. ஏனெனில் இந்த காரை அப்படிப்பட்ட இடங்களில் அவ்வப்போது ஓட்டுவதற்கென வடிவமைக்கப்படவில்லை. நாம் யாவரும் அறிந்தது போல, டெல்லி ஆட்டோ ஷோ 2016-ல் க்விட் காரின் 1.0-லிட்டர் பதிப்புகளை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டது. அதில் ஒன்று மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், மற்றொன்று ஒரு ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (இஸி-R AMT) தொழிற்நுட்பம் பொறுத்தப்பட்டதாகவும் உள்ளது. மேற்கண்ட மாடல்களை குறித்த தகவல்கள், தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த தொழிற்நுட்ப மாடலை தவிர, இதன் நெருங்கிய போட்டியாளர்களில் எதிலும் அதிக சக்தி வாய்ந்தவை இல்லை. 0.8-லிட்டர் பெட்ரோல் மில்லுக்கு அடுத்தப்படியாக, புதியதான 1.0-லிட்டர் மோட்டார் ஏறக்குறைய 70bhp ஆற்றலுடன், 90Nm முடுக்குவிசையையும் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்துவரவுள்ள பண்டிகை காலத்திலோ அல்லது இந்தாண்டின் முடிவிலோ, இவ்வாகனத்தின் வருகையை எதிர்பார்க்கலாம். ஓட்டுதல் மற்றும் கையாளுதல்

டஸ்டர் மற்றும் லாட்ஜியின் மூலம் எப்போதும் சிறந்த பயணம் மற்றும் கையாளும் திறனை அளிப்பதில், ரெனால்ட் நிறுவனம் பெயர்பெற்றது. இந்த விசேஷ குணத்தை க்விட் காரிலும் தெளிவாக காண முடிகிறது. ஒரு நகர்புற காரான இதில், சஸ்பென்ஸனை மென்மையான பகுதியில் பொறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அகன்ற பள்ளங்கள் மற்றும் இடையிடையே காணப்படும் மோசமான சாலைகள் ஆகியவற்றை சிறப்பாக கடந்து செல்கிறது. இதன் உயர்ந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் தன்மையை பாடி ரோல்களாக பரிமாற்றம் செய்யப்பட்டு, கடினமான முனைகளை எட்டி சேர்கிறது. இந்த கையாளும் திறன் யூகிக்க கூடியதே என்பதால், அதை பற்றி கூறுவது இன்னும் இனிமையாக உள்ளது. பெரிய 5m டேனிங் ரேடியஸை கொண்டிருப்பது, ஒரு பின்னடைவாகும். இதனுடன் ஒப்பிடும் போது, ஆல்டோ 800-ல் ஒரு குறைந்த 4.6m மட்டுமே டேனிங் ரேடியஸ் காணப்படுகிறது. க்விட் காரின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் இறுக்கமான இடவசதி உள்ளதால், சற்று கூடுதல் முயற்சிக்கு வழிவகுக்கிறது. இந்த காரின் பிரேக்குகள் கச்சிதமாக பிடித்து கொள்வதால், நிறுத்துவதில் எந்த தடுமாறலும் ஏற்படுத்துவதில்லை. இதிலிருந்து பொறுமையாக ஓட்டுபவர்களுக்கு மட்டுமே இந்த க்விட் வாகனம் கச்சிதமாக பொருந்துமே தவிர, ஆக்ரோஷமாக ஓட்டுபவர்களுக்கு அல்ல என்பது விளங்குகிறது. இதில் ABS இல்லாத நிலையில், அதிக கடினமாக பிரேக் பிடிப்பது முன்பக்க வீல்களுக்கு லாக்அப் நிலையை ஏற்படுத்துகிறது.

ஸ்டீரிங்கை பொறுத்த வரை, குறைந்த வேகத்தில் லேசாகவும், அதிக வேகங்களில் அதே நிலையில் தொடர்ந்து இருப்பது, சற்று பின்னடைவு தன்மை ஆகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், நகர் பகுதிகளில் இந்த காரை மணிக்கு 100 கி.மீ வேகத்திற்குள் ஓட்டி சென்றால், புகார் கூற உங்களுக்கு எதுவும் இருக்காது. பாதுகாப்பு இதுவரை க்விட்டை காரை, ஒரு கிரஷ் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அப்படியே சோதனைக்கு அனுமதிக்கப்பட்டாலும், இது அதிகளவில் மதிப்பெண்களை பெறும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இல்லை. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை, க்விட்டின் உயர் நிலை வகையில் (RXT-O), ஒரு ஒற்றை டிரைவர் பக்க ஏர்பேக் தேர்வை பெற்றுள்ளது. மற்றபடி, ஒரு பயணி பக்க ஏர்பேக் தேர்வுக் கூட அளிக்கப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் விரும்புகிறோம். மற்றொரு குறைபாடு என்னவென்றால், இதன் எந்த வகையிலும் ABS கிடையாது.

வகைகள்:


p21

4

க்விட் கார், மொத்தம் 6 வகைகளில் அளிக்கப்படுகிறது. துவக்க வகை (STD) அதிக வசதிகள் இல்லாத ஒரு பதிப்பாகும். இதில் பவர் ஸ்டீரிங் அல்லது AC ஆகியவை அளிக்கப்படவில்லை. இதற்கு அடுத்த வகையில் (RXE), ஒரு சில அம்சங்களுடன் கூடிய AC-யும் அளிக்கப்பட்டாலும், பவர் ஸ்டீரிங் வசதி கிடையாது. இதனால் ஓட்டுவதற்கு மிகவும் சோர்வை ஏற்படுத்துகிறது. இவ்வகையில், 2 டின் பொழுதுபோக்கு சிஸ்டத்தை ஒரு தேர்விற்குரிய கூடுதல் வசதியாக அளிக்கப்படுகிறது.

இடைப்பட்ட வகையான RXL-ல் ஒரு எலக்ட்ரானிக் பவர் ஸ்டீரிங் மற்றும் ஏற்புடைய வழக்கமான பயணத்திற்கு தேவையான குறைந்தபட்ச அம்சங்களை மிகச்சிறந்த மதிப்பு கொண்டவையாக வழங்கப்படுகிறது. 7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், உயர் (RXT) வகையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. இந்த வகையில் முன்பக்க பவர் விண்டோக்கள் மற்றும் ஃபேக் லெம்ப்களையும் பெற்றுள்ளது. நகரத்தில் வழக்கமாக பயணிக்கும் 2வது காராக க்விட்டை பயன்படுத்தி, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க தயாராக இருக்கும் மக்களுக்கு, இந்த வகை சரியான முறையில் ஏற்புடையதாக இருக்கும்.

நாம் செலவிடும் பணத்திற்கு ஏற்ப இடைப்பட்ட மாதிரி (RXL) வகை மதிப்புடையதாக உங்களுக்கு இருக்கும் என்று நாங்கள் கருதுவதால், அதையே வாங்குவதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஆனால் உங்களுக்கு டச்ஸ்கிரீன் அம்சம் மற்றும் ஏர்பேக் ஆகியவை தேவைப்பட்டால், RXT-O வகையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. தீர்ப்பு இப்பிரிவின் சிறந்த தேர்வுகளில் க்விட் காரும் ஒன்றாக விளங்குகிறது. ஒரு ஒட்டுமொத்த பேக்கேஜ்ஜாக பார்க்கும் போது, இதில் தனித்துவமான ஸ்டைலிங், சிறந்த டிரைவிங் செயல்திறன் மற்றும் ஒரு சிறந்த உதிரிப் பாகங்களின் ஒரு பட்டியல் ஆகியவற்றை கொண்டுள்ளது. தனது போட்டியாளர்களை, உட்புற அமைப்பில் உள்ள இடவசதி மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவை மூலம் இது எதிர்கொள்கிறது. ரெனால்ட் நிறுவனம் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் என்னவென்றால், அதன் விதிவிலக்கான சர்வீஸ் மற்றும் விற்பனைக்கு பிறகு அளிக்கப்படும் சர்வீஸ் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டியுள்ளது. அதை செய்தால், அதற்கான தேவையை மேலும் அதிகரிக்க முடியும். மாருதி சுசுகி ஆல்டோ, உனக்கு நிகரான வாகனத்தை கடைசியாக சந்தித்துவிட்டாய்!