ரெனால்ட் டஸ்டர்

` 8.4 - 14.3 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


மார்ச் 2, 2016: புதுப்பிக்கப்பட்ட டஸ்டர், ரூ.8.47 லட்சம் என்ற விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த SUV-யின் வரிசையில் அமைந்த உயர்ந்த வகையான AWD(4x4)-க்கு, ரூ.13.57 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 6-ஸ்பீடு ஈஸி-R AMT-யின் துவக்க விலையாக 11.67 லட்சம் (எல்லா விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லியை சார்ந்தது) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட டஸ்டரில், புதிய ‘CMO10’ & ‘T4 E&E’ கட்டிடக்கலையை கொண்டு, இந்த SUV-யின் பாதுகாப்பு, சிறந்த பயணம் மற்றும் கையாளும் திறன் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் டீசல் மற்றும் பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகளுடன் ஸ்டேண்டேடு, RXE, RXL, RXS மற்றும் RXZ என்ற 5 வகைகளில் கிடைக்கிறது.

ரெனால்ட் டஸ்டர் விமர்சனம்


மேற்பார்வை


“இந்த டஸ்டரில் இரு வகையான திறன்களை காண முடிகிறது. இது ஒரு மென்மையான ஆஃப்-ரோடராகவும், அதே நேரத்தில் நெடுஞ்சாலையில் சிறப்பான செயல்பாட்டையும் அளிக்கிறது.”

அறிமுகம்:


கடந்த 2007 ஆம் ஆண்டு மஹிந்திரா உடன் கைகோர்த்த நிலையில், ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தைக்குள் நுழைந்தது. கடந்த சில ஆண்டுகளில், ஒரு கூட்டம் வாகனங்களை சந்தையில் முதலீடு செய்த இந்நிறுவனம், ஒரு சக்தி வாய்ந்த பங்குத்தாரராக வளர்ந்து நிற்கிறது.

p1
கடந்த 2012 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகமான டஸ்டர், இந்தியாவில் குறுகிய கால அளவில் ரெனால்ட் நிறுவனத்தின் மீது கவனத்தை திருப்பச் செய்தது. இப்போது இப்பிரிவில் எண்ணற்ற புதிய தேர்வுகள் வந்துவிட்ட நிலையில், போட்டியில் உள்ளவைகளின் மத்தியில் டஸ்டர் காலம் கடந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இக்காரின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை சமீபத்தில் இந்த வாகனத் தயாரிப்பாளரால் வெளியிடப்பட்டது. எனவே இந்த புதிய மாடல் எப்படியெல்லாம் மதிப்பை பெறும் என்பதை கண்டறிவோம்.

பிளஸ் பாயிண்ட்ஸ்:1. அருமையான பயணத் தரம். சீரற்ற நிலையில் உள்ள சாலைகளையும் கடந்து செல்லும் தன்மை.
2. சமநிலையில் இல்லாத பகுதிகளை கூட AWD வகை எளிதில் கடந்து செல்கிறது. பெரும்பாலான மென்மையான சாலைகளில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு, 210mm கிரவுண்டு கிளியரன்ஸ் என்பது போதுமானதாக உள்ளது.
3. இந்த பிரிவிலேயே நெடுஞ்சாலையில் செல்லும் தன்மையில், இன்னும் சிறப்பானதாக நிலைநிற்கிறது. அதிக வேகத்திலும் நிலைத்தன்மையை இழக்காமல் உள்ளது. வளைவுகளிலும் நடுநிலையாக செயல்படுகிறது.
4. நகர்ப்புற பயணங்களுக்கு AMT ஏற்றதாக உள்ளது. மேனுவல் உடன் ஒப்பிட்டால், செயல்திறனில் எந்த மாற்றமும் இன்றி செயல்படுகிறது.

மைனஸ் பாயிண்ட்ஸ்:1. உட்புற அமைப்பியலின் தரம், பொருந்தும் தன்மை மற்றும் பணித்தீர்ப்பு ஆகியவை பெரும்பாலும் எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக உள்ளது. இதனுடன் க்ரேடாவின் கேபினை ஒப்பிட்டால், அது சிறப்பானது என்ற உணர்வை அளிக்கிறது.
2. இந்த வாகனத்தின் அளவீடுகளுக்கு இதன் பெட்ரோல் மோட்டார் ஏற்றதாக இல்லாமல், மந்தமானது போன்ற உணர்வை அளிக்கிறது.
3. AMT-யில் கியர் மாற்றங்களின் போது குலுங்குகிறது. க்ரேடாவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற மென்மையான தன்மை இல்லை.
4. 110PS 4x2 வகையோடு AMT நிறுத்தப்படுகிறது. 85PS பதிப்பிற்கு மேனுவல் அளிக்கப்பட்டுள்ளது.

தனிச்சிறப்பு அம்சங்கள்:1. இந்தியாவில் 6-ஸ்பீடு AMT அம்சங்களை கொண்ட ஒரே கார். இந்தியாவில் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஹில் அசிஸ்ட் போன்ற அம்சங்களை கொண்ட முதல் AMT இதுவே ஆகும்.
2. AWD-யை கொண்ட ஒரே கச்சிதமான SUV. க்ரேடாவோ அல்லது டெரானோவோ, ஒரு 4WD வகையை மட்டுமே அளிக்கிறது.

வெளிப்புற அமைப்பியல்:


“இந்த பிரிவில் மாற்றங்கள் நிலவி வரும் சூழ்நிலையிலும் நிலைநிற்க தக்கதாக, புதிய டஸ்டருக்கு அதன் புதுப்பிக்கப்பட்ட தோற்றம் உதவுகிறது”

p2
வெளிப்புற வடிவமைப்பை பொறுத்த வரை, முன்னோடியில் இருந்து தன்னை வேறுப்பட்டதாக புதுப்பிக்கப்பட்ட டஸ்டர் காட்டுகிறது.

p3
முன்பக்கத்தில் உள்ள இரட்டை-விங் கிரோம் கிரில் உடன் கூடிய கூர்மையான புதிய மறுவடிவமைப்பு பெற்ற ஹெட்லெம்ப்களின் மூலம் தற்போதைய டஸ்டருக்கு ஒரு கவர்ச்சிகரமான தோற்றம் கிடைத்துள்ளது. இதன் ஃபவுக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட் தற்போது பம்பரின் முன்பக்கம் வரை நீட்டிக்கப்பட்டு, இந்த காருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கிறது.

p4
பக்கவாட்டு பகுதிக்கு சென்றால், இந்த பதிப்பில் வெறும் அழகியல் மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதை கண்டறியலாம்.

p5
இதன் 16 இன்ச் அலாய்களின் வடிவமைப்பில் ஒரு மேம்பாட்டை பெற்று, OEM செட்அப்பின் ஒரு நகைச்சுவையான பங்களிப்பாக உள்ளது. மற்றபடி, பக்கவாட்டு பகுதியில் மேம்பாட்டை பெற்ற ரூஃப் ரெயில் உடன் டஸ்டர் பிராண்டிங் மற்றும் விங் மிரர்கள் ஆகியவை AWD அவதாரத்திற்கு ஏற்ப இப்போது கார்பன் ஃபைபர் மூலம் மூடப்பட்டுள்ளது.

p6
சதைப்பிடிப்பான வீல் ஆர்ச்சுகளின் மூலம் டஸ்டரில் அதே தடித்த உருவம் தொடர்கிறது. க்ரேடா மற்றும் ஈகோஸ்போர்ட் உள்ளிட்ட கடல் போன்ற மற்ற தேர்வுகள், SUV-களை விட ஹேட்ச்பேக்குகளின் தோற்றத்தை அதிகளவில் ஒத்துள்ளதால், தடித்த டஸ்டரை நாங்கள் விரும்புகிறோம்.

p7
பின்பக்கத்தில் உள்ள LED டெயில் லெம்ப்கள், இப்போது ஒரு நீர்வீழ்ச்சியின் வடிவமைப்பை பெற்றுள்ளது. பின்பக்கத்தில் செய்யப்பட்டுள்ள மற்ற மாற்றங்கள் என்னவென்றால், புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் மற்றும் முன்புறத்திற்கு செல்லும் ஒரு பெரிய ஃபவுக்ஸ் ஸ்கிட் பிளேட் ஆகியவை ஆகும். முந்தைய பதிப்பை போல இதன் பின்பக்கமும் சுத்தமாக உள்ளது. மேலும் இப்போது குறைந்தபட்ச பேட்ஜ்ஜிங் மட்டுமே செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் சிறப்பாக தெரிகிறது.

p8
பின்பக்கத்தில் கிரோமின் உள்ளீடுகளை கொண்ட ஒரு போர்டு சென்டர் பிளேட் உடன் டஸ்டர் என்று பொறிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு கிரோம் டிப் எக்சாஸ்ட்டும் காணப்படுகிறது.

1
அளவீடுகளை பொறுத்த வரை, டஸ்டரின் நீளத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே 4315mm-ல் உள்ளது. இதன் உறவினரான டெரானோவை விட, இது 16mm நீளம் குறைந்தது ஆகும். ஆனால் இரண்டும் பேட்ஜ்ஜில் வடிவமைக்கப்பட்டவை (ஸ்டைலில் மாற்றங்களை கொண்ட ஒரே தயாரிப்பை வேறுபட்ட தயாரிப்பாளர்கள் அளித்துள்ளனர்). டெரானோவில் காணப்படும் தடித்த பம்பர்களால், இவ்விரண்டிற்கும் இடையிலான நீள வேறுபாட்டிற்கு காரணமாக அமைந்திருக்கலாம். இப்பிரிவில் உள்ள மற்ற கார்களை பொறுத்த வரை, இதன் நீளத்தை விட க்ரேடா 45mm-மும், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் 315mm-மும் குறைவானது. அகலத்தை பொறுத்த வரை, டஸ்டரை விட 178 mm கூடுதலாக பெற்றுள்ள டெரானோவே முன்னணி வகிக்கிறது. மற்றவை, டஸ்டரை விட 42-57mm வரையிலான அளவில் பின்தங்கி உள்ளன.

p9
உயரத்தை பொறுத்த வரை, டஸ்டர் 1695mm என்ற அளவில் உள்ளது. இவற்றில் எல்லாவற்றின் உயரத்தை விட 13mm அதிகமாக உள்ள ஈகோஸ்போர்ட் கார் முதன்மை வகிக்கிறது. போட்டியில் உள்ள மற்றவைகளுடன் ஒப்பிட்டால், டெரானோவுடன் சேர்ந்துள்ள டஸ்டர் 205mm அதிகமான கிரவுண்டு கிளியரன்ஸையும், நீளமான வீல்பேஸில் 2673mm-மும் பெற்றுள்ளன.

உள்புற அமைப்பியல்:


“உட்புற அமைப்பியலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் மூலம் டஸ்டர், எப்போதும் இல்லாத வகையில் அதிக செயல்பாட்டிற்கு உரியதாக உள்ளது”

p10
கேபினுள் நுழைந்தவுடன் ஒரு பழக்கப்பட்ட தோற்றமே, உங்களை வரவேற்கிறது. முந்தைய டஸ்டரின் உரிமையாளர்கள் அளித்த புகார்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு அதை நீக்குவதற்கான நடவடிக்கைகளாக டேஸில் எளிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. AWD வகையில் ஒரு கருஞ்சிவப்பு தழுவிய கருப்பு நிறத்திலான தீம் அப்ஹோல்டரியும், வழக்கமான மற்றும் AMT வகைகளில் ஒரு வழக்கமான கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிற அப்ஹோல்டரியும் அளிக்கப்பட்டுள்ளது.

p11
ஒரு விரிவான ஹார்ன்பேட் உடன் கூடிய அதே பெரிய துண்டான (சன்கி), ஸ்டீரிங் வீல் காணப்படுகிறது. ஸ்போக்ஸில் தெரியும் சில்வர் பிட்களின் சேர்ப்பு மட்டுமே வெளியே தெரியும் ஒரே மாற்றமாக உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோலின் கன்ட்ரோல்கள், ஸ்டீரிங்கில் காணப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்டீரிங் வீல்லின் பின்புறத்தில் ஆடியோ கன்ட்ரோல்கள் செங்குத்தாக அளிக்கப்பட்டுள்ளன.

p12
இதன் இன்ஸ்ரூமெண்ட் கிளெஸ்டர், முந்தைய டஸ்டரில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். இதன் மூன்றுமுக பேரல் வடிவமைப்பில் கிரோம் வெளியீடுகளை கொண்டு, முறையே ஸ்பீடோ, ரெவ் கவுன்ட்டர் மற்றும் MID டிஸ்ப்ளே ஆகிய பணிகளை மேற்கொள்கின்றன. இதன் MID-யில் ODO, ட்ரிப் மீட்டர், சராசரி வேகம், டிஸ்டென்ஸ் டு எம்ட்டி, ப்யூயல் எஃப்பிஷேன்ஸி, எரிப்பொருள் பயன்பாடு மற்றும் ஒரு கியர் இன்டிகேட்டர் ஆகியவற்றை காட்டுகிறது.

p13
சென்டர் கன்சோலில் பெரிய அளவிலான மாற்றங்களை நாம் காண முடிகிறது. நேர்த்தியான செங்குத்தான வடிவமைப்பை கொண்டு, ஒரு பியானோ பிளாக் பணித்தீர்ப்பை காணலாம்.

p14
இதிலுள்ள ஏர் திறப்பிகளில் ஒரு மேம்பட்ட வடிவமைப்பை பெற்று, மூடும் போது ஒரு சிறிய அளவிலான கிரோமின் குறுக்கீட்டை காண முடிகிறது. இந்நிலையில் AWD பதிப்பில் இது சிவப்பு பிஸில்களால் மூடப்பட்டுள்ளது. வழக்கமான FWD மற்றும் AMT டஸ்டரில் உள்ள கிரோம் சூழ்ந்த தன்மை, எளிதில் நம் கண்களில் படுவதாக உள்ளது.

p15
அபாய விளக்குகள் (ஹஸ்சார்டு லைட்கள்) மற்றும் சென்ட்ரல் லாக்கிங் ஆகியவை டச்ஸ்கிரீன் சிஸ்டத்திற்கு மேலே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்டர்பேஸில் கூட ஒரு மேம்பாடு காணப்படுகிறது. ரெனால்ட் கார்களின் அணிவகுப்பில் நாம் காணும் வழக்கமான ஹார்டுவேர் தான் இதிலும் உள்ளது. AWD-யில் தரமான டச்ஸ்கிரீன் காணப்படுகிறது. இதன் 7 இன்ச் சிஸ்டம் மூலம் CD-க்கள், USB, AUX மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றில் இருந்து மீடியாவை இயக்க முடியும். டச்ஸ்கிரீன் சிஸ்டத்தில் CD பயன்பாட்டை தவிர, மற்ற எல்லா அம்சங்களும் காணப்படுகிறது. இந்த டச்ஸ்கிரீன் யூனிட் பயன்பாட்டிற்கு எளிதாகவும், ஏற்புடையதாகவும் உள்ளது. அதே நேரத்தில் இது கொஞ்சம் கூட தெளிவாக இருந்திருந்தால் (அவசரத்தில் / நேரடி சூரிய ஒளியில் படிப்பதற்கு தகுந்ததாக இல்லை) நன்றாக இருந்திருக்கும். இந்த சிஸ்டத்தை கொஞ்சம் கூட உயரத்தில் வைத்திருந்தால், நம்மால் சாலையில் இருக்கும் பார்வையை அதிகளவில் இதற்கு செலுத்த வேண்டிய தேவை ஏற்படாமல் இருந்திருக்கும் என்ற ஒரே ஒரு காரியம் மட்டுமே இதை குறித்த எனது புகார் ஆகும்.

p16
இதில் காணப்படும் மிகப்பெரிய மாற்றம் மற்றும் மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம் என்பது ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோலின் இணைப்பு ஆகும். மற்ற சிஸ்டங்களில் காணப்படும் வழக்கமான ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய ஸ்கிரீனுக்கு பதிலாக, இந்த சிஸ்டத்தில் ஒரு ஹிப் லேஅவுட்டை பெற்று, ஒவ்வொரு பட்டனும் தனிப்பட்ட டாகுல் லைட்டை பெற்றுள்ளது. தட்பவெப்பநிலை பிரிவில் ஒரு பெரிய துண்டு கினாப் உடன் ஒரு வரிசையில் அமைந்த லைட்களின் மூலம் தட்பவெப்நிலையின் தேர்வை குறிக்கப்படுகிறது.

p17
இதன் கிளோவ் பாக்ஸ், ஒரு பெரிய மற்றும் ஒளிரும் யூனிட்டாக உள்ளது. டேஸ்போர்டின் மேற்பகுதியில் ஒரு திறந்த நிலையில் அமைந்த ஸ்டோரேஜ் இடம் அளிக்கப்பட்டு, கூடுதல் பொருள் வைப்பு இடமாக திகழ்கிறது. இருவருக்கும் இடையே பயணிக்கான பக்கவாட்டு ஏர்பேக் அமைக்கப்பட்டு, அதில் ஒரு தெளிவான டஸ்டர் பிராண்டிங் காணப்படுகிறது.

p18
முன்பக்க டோரின் உட்புறத்தில், பியானோ பிளாக் நிறத்தை கொண்டு, ஒரு கிரோம் ஹேண்டிலை பெற்றுள்ளது. இதன் கீழே உள்ள ஒரு யூனிட்டில் ஸ்பீக்கர் மற்றும் விண்டோ கன்ட்ரோல்கள் காணப்படுகின்றன. இங்கே ஒரு பொருள் வைப்பு இடத்தை கொண்டு, அதில் 1-லிட்டர் பாட்டில்களை வைக்க ஏதுவாக உள்ளது. டோரில் உள்ள பவர் விண்டோ சுவிட்ச்சுகளுடன் கூட இப்போது எலக்ட்ரானிக் மிரர் அட்ஜஸ்மெண்ட்களும் காணப்படுகின்றன. இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும். ஏனெனில் முந்தைய பதிப்பில் இவை ஹேண்டு பிரேக் லீவரின் கீழே அமைக்கப்பட்டு, ஓடிக் கொண்டிருக்கும் போது அதை மாற்றியமைப்பது கிட்டதட்ட முடியாத காரியமாகவே இருந்தது. இதை ஒவ்வொரு முறை மாற்றியமைக்கும் போதும், அதை நீங்கள் இழக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. கீழ் முதுகு பகுதிக்கு ஏற்ப, டிரைவரின் சீட்டை மாற்றியமைக்க முடியும். தற்போது டஸ்டரில் ஒரு ஆட்டோமேட்டிக் (AMT) வகையும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், டிரைவருக்கென ஒரு தனிப்பட்ட சென்டர் ஆம்ரெஸ்ட்டின் சேர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது ஒரு அத்தியாவசிய இணைப்பாகும். பின்பக்க சீட்களுக்கு சென்றால், அதே அப்ஹோல்டரி வடிவமைப்பை பெற்றுள்ளது. பின்பக்கத்தில் உள்ள இரு பயணிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள ஹெட்ரெஸ்ட்களும் மாற்றியமைக்கும் தன்மையைக் கொண்டது. ஆனால் நடுவே உள்ள ஹெட்ரெஸ்ட் நிரந்தரமானது. பின்பக்கத்தில் உள்ள ஆம்ரெஸ்ட் உடன் கூட ஒரு பின்பக்க ஏர் கண்டீஷன் திறப்பியும் அமைக்கப்பட்டுள்ளது. சீட்கள் நன்றாக சாய்ந்த நிலையில் உள்ளது. ஆனால் லெக்ரூம் சிறந்தவற்றில் நல்லதாக உள்ளதே தவிர, பெரியது அல்ல. உட்புற அமைப்பியலை சிறப்பாக அமைக்கும் திறன் கொண்ட ரெனால்ட் நிறுவனம், இன்னும் கூட அதிக இடவசதியை அளித்திருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். இதனால் காரில் ஏறும் 5வது பயணி, மிகவும் சிரமத்தை சந்திக்க வேண்டிருக்கும். முன்பக்கத்தை போல, பின்புற டோர்களிலும் டோர் பாக்கெட்டை தவிர, அதே தன்மைகளை தாங்கியுள்ளது.

2

p19
பின்பக்கத்தில் ஒரு பெரிய சரக்கு வைப்பு இடவசதியை (பார்சல் ஷில்வ்) பெற்று, பெரும்பாலான உங்கள் சரக்குகளை வைத்தால் கூட, பின்புறத்தில் உள்ள பொருள் வைப்பு பகுதியில் இடம் காணப்படும். இன்னும் பின்னால் சென்றால், விசாலமான 475 லிட்டர் அளவிலான பூட் காணப்படுகிறது. இது டெரானோவிற்கு சமமாக இருந்தாலும், க்ரேடாவை விட 75 லிட்டரும், ஈகோஸ்போர்ட்டை விட 130 லிட்டரும் அதிகமாக உள்ளது. உங்கள் வீடு மாற்றமோ அல்லது மற்ற காரியங்களின் போதோ, உங்களுக்கு அதிக இடவசதி தேவைப்படும் பட்சத்தில், பின்பக்க சீட்களை கீழ்நோக்கி மடக்கி 1064 லிட்டர் இடவசதியை பெற்று பயன்படுத்தி கொள்ளலாம்.

செயல்திறன்:


“ஒரு பெட்ரோல் மற்றும் இரு டீசல் எனஜின்களுடன், ஒரு AWD மற்றும் AMT தேர்வுகளையும் அளித்து, எல்லாருக்கும் உரியதாக டஸ்டர் விளங்குகிறது”

பெட்ரோல்:


3 இதில் உள்ள ஒரு 1.6-லிட்டர் யூனிட் பெட்ரோல் மில் மூலம் 5750 rpm-ல் 102.53bhp ஆற்றலும், 3750 rpm-ல் 148 Nm முடுக்குவிசையும் கிடைக்கிறது. இந்த என்ஜின் அதிக எரிப்பொருளை செலவிடும் தன்மை கொண்டது என்பதோடு, இந்த காரின் அளவிற்கு ஏற்றதாக இல்லை என்ற உணர்வை அளிக்கிறது. இந்த பதிப்பின் கிளெச் மென்மையாகவும், நகரை வலம் வர லே என்டு போதுமானதாகவும் உள்ளது. ஆனால் இதை நெடுஞ்சாலைக்கு கொண்டு சென்றால், நாம் அவ்வப்போது கியரை குறைத்து கொண்டே இருந்து, ரெவ் ரேஞ்சை அதிகமாகவே வைத்திருந்தால் மட்டுமே, அதன் அதிகபட்ச ஆற்றலை பெற முடியும். எரிப்பொருளை மிகவும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் இந்த பதிப்பை, நகரப்புற பகுதிகளுக்கு உட்பட்டு ஓட்டுவது சாலச் சிறந்தது.

டீசல்:


4 85ps:
110ps பதிப்பின் அதே என்ஜினை அது பெற்றிருந்தாலும், அதுவே ஒரு வித்தியாசமான முறையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் ஸ்காலா / நிசான் சன்னியில் காணப்படும் ட்யூனிங்கை இது ஒத்துள்ளது. இந்த என்ஜின் மூலம் 84bhp ஆற்றல் மற்றும் 200Nm முடுக்குவிசை பெறப்படுகிறது. 110ps பதிப்புடன் ஒப்பிட்டால், இது தரம் குறைந்ததாக தெரிந்தாலும், ஆச்சரியப்படுத்தும் வகையில் நகர்புறங்களை வலம் வர இது போதுமானதாக உள்ளது. நகர்புறங்களில் ஒட்டும் போது, என்ஜினுக்கு அதிகளவிலான கியர் குறைப்புகள் தேவைப்படுவதில்லை. மேலும் டர்போ லாக் கூட கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் டர்போ லாக் மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்படுவதால், இதன் அதிக சக்திவாய்ந்த உடன்பிறப்பை விட, நகர்புறங்களில் ஓட்டுவதற்கு இது ஏற்றதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். ஒரு நெடுஞ்சாலை பயணத்தை பொறுத்த வரை, அதிக ஆற்றல் கொண்ட 110ps பதிப்பை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இந்த என்ஜின் எந்த வகையிலும் ஆற்றல் குறைந்தது அல்ல. ஆனால் ஒரு 110ps பதிப்பு அளிக்கப்படும் போது, இது அப்படி தோன்றும். ஒட்டுமொத்தமாக, இது ஒரு சிறந்த என்ஜின் எனலாம். ஏனெனால் டஸ்டரை பொறுத்த வரை அதன் பெரும்பாலான காலத்தை நகர்புறத்தில் தான் செலவிடுவதால், ஆற்றலை வெளியிட ஏற்றதாக இருக்கும்.

110ps:
இந்த பதிப்பின் தற்போதைய புதிய தேர்வாக ஒரு AMT கியர்பாக்ஸ் அளிக்கப்பட்டு, மிகப்பெரிய சாலை நெரிசலிலும் கடந்து செல்ல உதவுகிறது. என்ஜின் மற்றும் மற்ற சிறப்பம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இதன் 110ps என்ஜின் ட்யூன் செய்யப்பட்டு, 109bhp ஆற்றலையும், 248Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இதன் அறிமுகத்தின் போது NVH (ஒலி, அதிர்வு மற்றும் கடுமையானத் தன்மை) நிலைகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் இப்பிரிவில் உள்ள நவீனத் தயாரிப்புடன் (ஹூண்டாய் க்ரேடா) ஒப்பிட்டால், கடுமையாகவும், சத்தம் கொண்டதாகவும் தெரிகிறது.

p20
இந்த என்ஜின் ஒரு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. 85ps பதிப்புடன் ஒப்பிட்டால், ஒரு கூடுதல் கியரை பெற்று, நெடுஞ்சாலைகளில் காற்றாக சீறிப் பாய்ந்து செல்கிறது. இதில் உள்ள கடுமையான கிளெச் மூலம் ஆங்காங்கே நின்று செல்லும் சாலை நெரிசல்களில் நமது தசைகளை பதம் பார்த்து விடுவது, ஒரு குறையாக உள்ளது. இந்த ஒரு காரியத்தை மேம்பாட்டின் மூலம் மாற்றப்பட வேண்டியதாக நாங்கள் எடுத்துக் காட்டுகிறோம். டஸ்டர் தொடர்ந்து ஒரு தேர்வாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், அதன் தற்போதைய போட்டியாளர்களிடம் இருந்து அளிக்கப்படும் மெருகேறிய தன்மைகளை இது இழந்துள்ளது. எனவே இந்த மேம்பாட்டின் மூலம் ரெனால்ட் நிறுவனம் ஒரு வாய்ப்பை இழந்துள்ளது மட்டும் தெளிவாக தெரிகிறது.

AWD:
110ps பதிப்பில் மட்டுமே AWD (ஆல் வீல் டிரைவ்) பதிப்பு அளிக்கப்படுகிறது. இந்த AWD பதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பின்வருமாறு: என்ஜின் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ட்யூன் செய்யப்பட்டு, கியர் விகிதங்கள் குறைக்கப்பட்டு, ஒரு எலக்ட்ரோ-ஹைட்ராலிக் பவர் ஸ்டீரிங் மற்றும் பின்பக்க சஸ்பென்ஸனுக்கு ஒரு சிறந்த மல்டி-லிங்க் சஸ்பென்ஸன் யூனிட் அளிக்கப்பட்டு, வழக்கமான முறையில் முன்பக்க வீல்களுக்கு மட்டும் ஆற்றலை அளிக்காமல், ஒரு AWD சிஸ்டமாக 4 வீல்களுக்கும் ஆற்றல் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டும் விதத்தை (மோடு ஆப் டிரைவிங்), 2WD, ஆட்டோ மற்றும் லாக் ஆகியவற்றில் இருந்து தேர்ந்தெடுந்து கொள்ளலாம். இதில் ஆட்டோ தேர்வு, டிரைவிங்கில் மிகவும் துல்லியமாக செயல்படும் யூனிட்டாக இருந்து, எந்த வீல்லில் ஆற்றல் குறைகிறது என்பதை சரியாக கணித்து, அதை சரியான முறையில் ஈடு செய்கிறது. இதில் லாக் பதிப்பு கூட சிறப்பாக செயல்பட்டாலும், மணிக்கு 50 கி.மீ. வேகத்தை கடக்கும் போது, தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்கிறது.

p21
இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்ற சவால் உங்கள் முன் இருந்தால், AWD பதிப்பே உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். கரடுமுரடான பாதைகளில் பயணிக்க உண்மையாக நீங்கள் விரும்பும் நபராக இருந்தால், உங்கள் பணத்தை கரடுமுரடான சாலைகளில் பயணிப்பதில் முதலிடத்தில் உள்ளதில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டு தார். எங்களை பொறுத்த வரை, ஒரு தினசரி பயன்பாட்டிற்கு தார் மிகவும் ஆக்ரோஷமாக தெரிகிறது. மற்றபடி க்ரேடா, ஈகோஸ்போர்ட் மற்றும் மற்ற போலி SUV-களில், ஒரு 4x4 தேர்வு அளிக்கப்படுவதில்லை. இவ்விரண்டிற்கு நடுநிலையான தன்மையை டஸ்டர் பெற்றுள்ளது.

AMT:
டஸ்டரின் முதலீட்டில் AMT என்பது ஒரு வரவேற்கத்தக்க சேர்ப்பாகும். ZF உடன் இணைந்து செயலாற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த கியர்பாக்ஸ், இந்தியாவின் முதல் 6-ஸ்பீடு AMT ஆகும். அதேபோல டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஹில் அசிஸ்ட் போன்ற அம்சங்களை கொண்டுள்ள ஒரே AMT-யும் இதுவே.

p22
இந்த கியர்பாக்ஸ், 110PS 4x2 வகையில் மட்டுமே அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு AWD + AMT கலவை அளிக்கப்படவில்லை. ஒரு வழக்கமான டார்க் கன்வெட்டரை போல, இதன் கியர் மாற்றங்கள் சுமூகமாக இல்லை. ஒரு DSG-ன் இதமான கியர் மாற்றங்களுக்கு முன்னால், இது மிகவும் தொலைவில் இருப்பதாக தெரிகிறது. கியர் குறைப்புகளில் குறிப்பாக, 2வது கியரில் இருந்து 1வது கியருக்கு குறைவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சாலை நெரிசலில் நின்றுநின்று செல்லும் போது, கியர்பாக்ஸில் 1வது அல்லது 2வது கியரா என்ற தொடர் குழப்பம் நிலவுவதால், சற்று எரிச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தவிர, இடதுகாலிற்கு இது முழு பாரமாக அமைகிறது. நெடுஞ்சாலையில் செல்லும் போது, கியர்பாக்ஸில் ஏற்படும் கியர் உயர்வுகளை அரிதாகவே நம்மால் உணர முடிகிறது. 3வதில் இருந்து 4வதிற்கும், அதற்கு மேலும் கியர் உயர்த்தப்படுவது மிகவும் மென்மையாகவும், புலப்படாத வகையிலும் உள்ளது. நீங்கள் பெடல் அழுத்தத்தை நிறுத்தும் போது மட்டுமே, AMT-ல் பெரும் குழப்பம் நிகழ்வதாக தெரிகிறது. உங்களுக்கு தேவைப்படும் ஆக்ஸிலரேஷனை அளிக்க, அதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த குறையை தவிர்க்க, எங்கெல்லாம் உங்களுக்கு விரைவான கியர் மாற்றங்கள் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் கியர் லிவரை உங்களை விட்டு அகற்றி நகர்த்துவதன் மூலம் மேனுவல் மோடிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு கியர் ஏற்றத்திற்கு லிவரை பின்னோக்கியும், கியர் குறைப்பிற்கு லிவரை முன்னோக்கியும் நகர்த்தி செயல்படுத்தலாம். ஆனால் இந்த மேனுவல் முறையில் கூட கியர் மாற்றங்களை தெளிவாக உணர முடிகிறது என்பது பரிதாபமான செய்தி ஆகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால், AMT என்பது இந்த பேக்கேஜ்ஜிற்கு ஒரு சிறந்த சேர்ப்பாகும். நீங்கள் நகர்புறத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமாக பயணங்களை மேற்கொள்வதால் ரூ.60 ஆயிரம் அதிக செலவிட்டு AMT-யை வாங்குவதற்கு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதேபோல மேனுவல் டஸ்டரின் கிளெச்சை பயன்படுத்தி நீண்ட தொலைவு பயணிக்கும் போது, மோசமான முழங்கால் வலியை ஏற்படுத்தலாம்!

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்:


முந்தைய டஸ்டரை வைத்து ஒப்பிட்டால், சஸ்பென்ஸனில் எந்தவிதமான மேம்பாடுகளும் இல்லை. ரெனால்ட் நிறுவனம் செய்துள்ள கையாளும் திறன் சிறப்பாக உள்ள நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்டிருப்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய சாலைகளில் உள்ள சீரற்ற பகுதிகளையும் இந்த வாகனம் சாதுர்யமாக கடந்து செல்கிறது. நமது நெடுஞ்சாலையில் பயணங்களில், இது காற்றாக சீறிப் பாய்ந்து, பெரும்பாலான சேடன்களை பின்னுக்கு தள்ளுகிறது. இதில் செய்யும் பயணம் சிறப்பாகவும், சமமாகவும், எளிய அசைவுகளை மட்டுமே கொண்டிருப்பதாகவும் உள்ளது.

p23
SUV-களில் காணப்படும் உயர்ந்த நிலையை, மற்ற திசைத்திருப்பும் வாகனங்களிடம் காணக் கிடைப்பதில்லை. பாடி ரோல் என்பது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், டிரைவருக்குள் இந்த கார் அதிக நம்பிக்கையை வளர்க்கிறது. இதில் காணப்படும் வரவேற்பிற்குரிய 5.2 m டேனிங் ரேடியஸ் மூலம் நெருக்கமான பார்க்கிங் இடங்களில் கூட எளிதாக நகர்த்தி சென்று முடியும் தன்மை, நாங்கள் விரும்பிய இதன் மற்றொரு சிறப்பாகும்.

p24
இதில் ஒரே காரியம் குறையாக இருப்பது என்னவென்றால், அதிக வேகத்தில் செல்லும் போது கேபினிற்குள் வரும் காற்றின் ஒலி மற்றும் கிளெச் மிகவும் கடினமாக உள்ளது.

பாதுகாப்பு:


“இதன் பெரும்பாலான வகைகளில் ABS மற்றும் EBD ஆகியவற்றின் இணைப்பு அளிக்கப்பட்டிருப்பது, ஒரு வரவேற்பிற்குரிய மாற்றமாகும்” இந்த புதிய பதிப்பின் துவக்க வகையை தவிர, மற்ற எல்லா வகைகளிலும் பொதுவாக ABS மற்றும் EBD அளிக்கப்பட்டிருப்பது, ஒரு சிறப்பான முன்னேற்றம் என்று நாங்கள் நினைக்கிறோம். இதனுடன் பயணிகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் புதிய 'CMO10' கட்டக்கலையும் சேர்க்கப்பட்டுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. இதை தவிர, பாதுகாப்பு துறையில் ஒரு பின்பக்க கேமிரா, பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரோனிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம் மற்றும் ஹில் அசிஸ்ட் போன்ற மற்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

5
டஸ்டரின் துவக்க வகையில் ஏர்பேக்குகள் பொதுவாக அளிக்கப்படவில்லை. உயர் வகையில் மட்டுமே முன்பக்க இரட்டை ஏர்பேக்குகளை பெற்றுள்ள நிலையில், அதன் கீழே உள்ள இரு வகைகளில் ஒரு டிரைவர் ஏர்பேக் மட்டுமே காணப்படுகிறது. குறைந்த வகைகளில் ஏர்பேக்குகளே கிடையாது.

வகைகள்:


டஸ்டரின் வகைகளின் அணிவகுப்பில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் துவக்க வகையை தவிர, மற்ற எல்லாவற்றிலும் ABS மற்றும் EBD ஆகியவை பொதுவானதாக இருப்பது, முக்கிய மாற்றம் ஆகும். துவக்க வகையான RxE-யில் குறைந்த ஆற்றலுள்ள டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய தேர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டு, சென்ட்ரல் லாக்கிங், என்ஜின் இம்மொபைலைஸர், கீலெஸ் என்ட்ரி, பவர் விண்டோக்கள், பவர் ஸ்டீரிங் மற்றும் முன்பக்க ஏர் கண்டீஷனிங் ஆகிய குறைந்தபட்ச அம்சங்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, பார்சல் ட்ரே, ரூஃப் ரெயில்கள் மற்றும் டில்ட் ஸ்டீரிங் போன்ற மற்ற அம்சங்களை கூட இதில் காண முடிகிறது. அடுத்த வகையான RxL-ல், ஒரு AWD பதிப்பு உட்பட எல்லா விதமான என்ஜின் தேர்வுகளும் அளிக்கப்படுகிறது. துவக்க வகையில் உள்ளவைகளை தவிர, ஒரு 2 டின் எண்டர்டெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ABS ஆகியவையும் உங்களுக்கு கிடைக்கிறது. ஆனால் ஏர்பேக்குகள் இதில் கிடையாது. அதற்கு நீங்கள் தேர்விற்குரிய பேக்கை தேர்வு செய்ய வேண்டும். உயர் வகையில், கிரோம் மிரர்கள் மற்றும் கிரோம் பக்கவாட்டு படிகள் ஆகியவற்றை நீங்கள் பெற முடிகிறது. மற்றொரு முக்கியமான சேர்ப்பாக டிரைவர் சீட்டை மாற்றியமைக்கும் வசதி உடன் லும்பார் சப்போர்ட் அட்ஜஸ்ட்மெண்ட் ஆகியவை உள்ளன. எல்லா வகையில் உள்ள எல்லா பாதுகாப்பு அம்சங்களும் தரமானவை என்பதோடு, தேர்விற்குரிய பேக் மூலம் உங்களுக்கு லெதர் சீட்கள் கிடைக்கிறது. இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் மேம்பாடு செய்யப்பட்டு, ஒரு டச்ஸ்கிரீன் யூனிட்டாக அமைந்துள்ளது.

6
எங்களை பொறுத்த வரை, தேர்விற்குரிய பேக் உடன் கூடிய RxL சிறந்த தேர்வாகும். ஏனெனில் அதில் எல்லாவிதமான அடிப்படை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளதோடு, அளிக்கும் பணத்திற்கு தகுந்த மதிப்புள்ளதாக உள்ளது.