மாருதி வேகன்-ஆர்

` 3.9 - 5.3 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹை லைட்ஸ்


நவம்பர் 7, 2015: மாருதி நிறுவனம், வேகன் R என்ற தனது புதிய காருக்கு ரூ. 4.76 லட்சங்கள் (புது தில்லி எக்ஸ்-ஷோரூம்) என்று விலை நிர்ணயித்து, வெளியிட்டுள்ளது. எனினும், வெளிவருவதற்கு முன்பே, கார் செய்திகளை வெளியிடும் உளவாளிகளின் கண்களில் இதன் AMT கியர் பாக்ஸ் தென்பட்டது. மாருதி நிறுவனம், தனது பட்ஜெட் கார்களுக்கு AMT சார்ந்த ஆப்ஷனை வழங்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு, வேகன் R அவான்ஸ் என்ற வேகன் R மாடலின் லிமிடெட் எடிஷன் (வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் வரையறுக்கப்பட்ட நாட்களுக்குள் மட்டுமே கிடைக்கும்) காரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. வேகன் R மாடலின் Lxi மற்றும் Lxi CNG வேரியண்ட்களின் அடிப்படையில் அவான்ஸ் உருவாக்கப்படும். மேலும், புளுடூத் வசதியுடன் கூடிய 2 டின் ஸ்டீரியோ, இரட்டை வண்ணத்தில் டாஷ்போர்டு, பீஜ் வண்ணத்தில் வேலைப்பாடுகள் மற்றும் பின்புற இருக்கைகளுக்கு பவர் விண்டோஸ் போன்ற பல புதிய சிறப்பம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன. புதிய பாடி அமைப்பு, கன் மெட்டல் வண்ணத்தில் ரூஃப் ரைல்ஸ், சாவியில்லாமல் உள்ளே நுழையும் வசதி மற்றும் சென்டர் லாக்கிங்க் / பாதுகாப்பு அலாரம் இணைந்த பின்புற ஸ்பாய்லர் ஆகிய முக்கிய அம்சங்கள் இதன் வெளிப்புற தோற்றத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த மாடலின் Lxi வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 4,29,944 என்றும், Lxi CNG வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 4,83,973 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்


Table 1 (5)

மாருதி வேகன் R – விமர்சனம்


முன்னுரை


டால்- பாய் வடிவமைப்பு நுட்பத்தை பின்பற்றிய உலகின் முதல் கார்களின் வரிசையில் வேகன் R இடம் பெற்றுள்ளது. கடலளவு மாடல்கள் கொண்ட ஹாட்ச்பேக் பிரிவில், தனித்துவத்துடன் நிற்க இதன் குறுகிய முகப்பும், நிமிர்ந்து நிற்கும் தன்மையும், உதவுகின்றன. உண்மையில், அறிமுகமான புதிதில் உள்நாட்டு சந்தையில் பாக்ஸி அமைப்பு கொண்ட வேகன் R விலை போகவில்லை. எனினும், ஒரு சில ஆண்டுகளில் வேகன் R மாடலின் மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மூன்றாவது மேம்பாடு பெற்ற வேகன் R, ஒவ்வொரு மாதத்திலும் தொடர்ந்து விற்பனையில் முன்னேற்றம் கண்டு மாருதி நிறுவனத்திற்கு காமதேனுவாகத் திகழ்கிறது. என்னன்ன விஷயங்கள் வேகன் ஆரின் விற்பனையை இந்த அளவு உயர்த்தியது என்பதை நாம் இங்கே கண்டறியலாம்.

சாதகங்கள்1. இடவசதி. இந்த வார்தைக்கு உண்மையான பொருள் கொண்ட விசாலமான ஹாட்ச்பேக் வேகன் R
2. திறமையான பெட்ரோல் இஞ்ஜின்- நகரத்திற்குள் சுலபமாக பயணிக்க சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
3. அனைத்து டிரிம்களிலும் ஏர்பேக்குகள் மற்றும் ABS வசதி ஆப்ஷன் உள்ளது.
4. ஓட்டுவதற்கு எளிதாக இருப்பதோடு ஆப்ஷனலாக AMT வசதியும் உள்ளது.

பாதகங்கள்1. உட்புறத்தில் பயன்படுத்திய பொருட்களின் தரம் மேலும் கூடுதல் சிறப்புடன் இருந்திருக்கலாம். அவை தரம் குறைந்த உணர்வை ஏற்படுத்துகின்றன.
2. NVH நிலைகள் சிறந்ததாக இல்லை. இஞ்ஜின் சத்தம் கேபினுக்குள் அதிகமாகக் கேட்கின்றது.
3. ப்ரேக்குகள் சராசரியாகவே உள்ளன. அதிக தரம் வாய்ந்த நல்ல பெடல் அமைப்பை பொருத்தி இருக்கலாம்.
4. டீசல் இஞ்ஜின் இல்லை. செவ்ரோலெட் பீட் இதே விலையில் டீசல் இஞ்ஜினுடன் கிடைக்கிறது.

தனிச்சிறப்புகள்:1. ஆப்ஷனல் AMT வசதி, நகர பயணித்தை மேலும் எளிதாக்குகிறது.
2. அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு வசதிகளான ஏர் பேக்கள் மற்றும் ABS ஆப்ஷன்கள் உள்ளன.

கண்ணோட்டம்மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் விற்பனையில், மாபெரும் வெற்றி சரித்திரத்தை வேகன் R ஏற்படுத்தி உள்ளது. இதன் மாறுபட்ட வடிவமைப்பாலும், அதற்கு இணையான நடைமுறை சிறப்புகளாலும், இந்த ஹாட்ச் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அபரிமிதமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட வேகன் R, இந்திய சந்தையின் ஹாட்ச் பிரிவில் தனது முழு ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என்றால் அது மிகை ஆகாது. இதற்கு முன்பு ஆதிக்கம் செலுத்திய ஹுண்டாய் சான்ரோவின் இடத்தைத் தற்போது பிடித்துள்ள வேகன் R தனது தனிச்சிறப்பு வாய்ந்த சிறப்பம்சங்களின் மூலம் நீண்ட காலம் சந்தையில் முதன்மையாகத் திகழும் வாய்ப்பு உள்ளது.
உண்மையில், முதலில் வெளியான காரின் பாரம்பரிய வடிவமைப்பு முறையிலேயே தற்போதும் உள்ளது. தற்போதைய வேகன் R முன்பு இருந்த மாடலின் சிறப்புகளான பெரிய கிளாஸ் ஹவுஸ், தட்டையான முகப்பு மற்றும் அதிகமான உயரம் ஆகியவற்றுடனேயே இப்போதும் வலம் வருகிறது. முதன் முதலில், மூன்று சிலிண்டர், k - சீரிஸ் இஞ்ஜின் பொருத்தப்பட்டு அறிமுகமாகிய மாருதி சுசூகியின் முன்னணி கார்களில் வேகன் R மாடலும் ஒன்றாகும். தற்போது சந்தையில் உள்ள மிக சிக்கனமான இஞ்ஜின்கள் மத்தியில், இது பெட்ரோல் மற்றும் CNG எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஹாட்ச் பிரிவில் உள்ள மற்ற கார்களை விட சிறந்த, சிக்கனமான பாக்கெட் ஃப்ரெண்ட்லியான காராக வேகன் R திகழ்கிறது.

பின்னணி மற்றும் பரிணாமம்


வேகன் R மாடல், 1999 -ஆம் ஆண்டு முதல் முதலில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மாருதியின் மற்ற ஹாட்ச் பேக் கார்களான எஸ்டிலோ போன்ற கார்களில் பொருத்தப்பட்ட அதே பெரிய 1 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வெளிவந்தது. மாருதி நிறுவனம், உரிய கால இடைவெளியில் ஒவ்வொரு கால கட்டதிற்கும் ஏற்ப, வேகன் R மாடலை மேம்படுத்திக் கொண்டே இருந்தது. 2006 ஆம் ஆண்டு சிறிதளவு மாற்றங்களுடன் ஷோரூம்களை அலங்கரித்து வெற்றியும் பெற்றது. 2010 –ஆம் ஆண்டில், இந்த ஹாட்ச்பேக் தனது மூன்றாவது தலைமுறை மாடலில் எந்தவொரு பிரதான அலங்கார மேம்பாடுகளும் இல்லாமல் A1 ஹாட்ச்பேக் பிரிவில் வலம் வந்தது. தற்போதைய புதுப்பிக்கப்பட்ட வேகன் R, சற்றே மறு வேலைப்பாடுகள் செய்த கிரில் மற்றும் பம்பர்கள், அனைத்து டிரிம்களிலும் ஆப்ஷனலாக ABS & ஏர்பேக்கள் மற்றும் ஆப்ஷனல் AMT வசதிகள் பொருத்தப்பட்டு வெளிவந்துள்ளது.

வெளிப்புற தோற்றம்


வேகன் R டால் – பாய் வடிவமைப்பு நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது; இந்த கார் குறுகலானது ஆனால் உயரமானது என்பதே இதன் முக்கிய பொருளாகும். உதாரணமாக செவெரோலேட் பீட் மற்றும் ஹுண்டாய் i10 ஆகியவற்றை விட 100 மிமீ குறுகலாக உள்ளது. அதே நேரத்தில், இந்த இரண்டோடும் ஒப்பிடும் போது 180 மிமீ மற்றும் 150 மிமீ என்று முறையே உயரம் கூடுதலாக உள்ளது. இதன் பாக்ஸி அமைப்பு கேபின் பகுதியில் அதிக இடவசதியை தருகிறது, குறிப்பாக தலை தட்டாமல் அதிக உயரத்துடன் உள்ளது. 2400 மிமீ வீல் பேஸ் பெறுவதற்கு, இதன் சக்கரங்கள் சற்றே வெளிப்புறம் தள்ளப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது, எனினும், இதன் வீல் பேஸ் அளவு நிஸ்ஸான் மைக்ரா ஆக்டிவ் மாடலுக்கு அடுத்தபடியாவே வருகிறது.

Table 2 (3) Image 1 (5)
வேகன் R மாடலின் முன்புறத்தை முழுவதுமாக ஆதிக்கம் செய்வது நீல நிறத்தில் உள்ள இதன் பெரிய ஹெட் லாம்ப்கள் ஆகும். நீல நிற விளக்குகள் காரணமாக, மாருதி நிறுவனம், வேகன் R மாடலை ‘நீலக் கண்ணன்’ என்று குறிப்பிடுகிறது. முன்புற விளக்குகள் பெரிதாக இருப்பதால், அடக்கமான தோற்றத்தில் உள்ளது. கிரில்லின் மேல் பகுதியில் மெல்லிய இழை போன்ற க்ரோம் நிறக் கோடு மற்றும் நடுப் பகுதியில் பெரிய அளவிலான மாருதி நிறுவனத்தின் சின்னம் பொரிக்கப்பட்டு வசீகரமாகத் தோற்றமளிக்கிறது. மூன்று பிரிவுகளைக் கொண்ட ஏர் டேம், கீழ் பகுதியில் இடம்பெறுகிறது. அதன் இரண்டு புற விளிம்புகளிலும் ஃபாக் லாம்ப் பொருத்தப்பட்டுள்ளன.

Image 2 (5)
பக்கவாட்டுப் பகுதியைப் பார்வையிடும் போது, செவி பீட்டில் உள்ளதைப் போல அதிகப்படியான மடிப்புகளையோ, கூறிய வரிகளையோ பார்க்க முடியவில்லை. எனினும், இரண்டு மங்கலான கேரக்டர் லைன்கள் கதவுகளில் இடம்பெறுகின்றன. உயரமான தோற்றம் கொண்ட கார்களின் சின்னமான, உயரமான A பில்லர் பகுதியுடனும், மிகப் பெரிய கண்ணாடி ஜன்னல்களையும் வேகன் R கொண்டுள்ளது. ஒளிவீசும் சக்கர வளைவுகள் மற்றும் ரூஃபில் பொருத்தப்பட்டுள்ள ரைல்ஸ் ஆகையவை இணைந்து, இதன் பழைய அலுப்பான பக்கவாட்டுத் தோற்றத்திற்கு சிறிது அழகு சேர்க்கின்றன. எந்த வேரியண்ட்டிலும் அலாய் சக்கரங்கள் ஆப்ஷனாகத் தரப்படவில்லை என்றாலும், உங்களுக்குத் தேவை என்றால் டீலர்களிடம் கூடுதல் அக்சசெரியாகப் பெற்றுக் கொள்ளலாம்.

Image 3 (5)
பின்புறம் இருந்து பார்த்தால், வேகன் R காரின் உயரமான வடிவமைப்பு நன்றாகத் தெரிகிறது. இதற்கு முன்பு வெளியான வேகன் R காரின் பரிணாம வளர்ச்சியோ என்று என்னும் அளவிற்கு, பின்புற விளக்குகள் ஒரே மாதிரியாக உள்ளன. மிக அகலமான பின்புறத்தில், வாஷ்-வைப் அமைப்பு உயர் ரக வேரியண்ட்டான VXi டிரிம்மில் மட்டுமே வருகிறது, வழக்கமாக, இந்த ரக கார்களில் மட்டுமே இத்தகைய உயர் அம்சம் இடம்பெறுகின்றது. ஒரு அகலமான குரோம் பட்டையின் மீது வேகன் R என்ற பெயர் பொரிக்கப்பட்டு மின்னுகிறது. மேலும், உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டாப் விளக்கு மற்றும் கூடுதலாக கீழ் புறத்தில் இடம்பெறும் பிரேக் ஆகியவை இணைந்து, இதன் அழகை அதிகரிக்கின்றன. முன்புற கேபின் பகுதியை அதிகப்படுத்தியதால், பொருட்களை வைத்துக் கொள்ள உதவும் பூட் பகுதியானது 180 லிட்டர் மட்டுமே உள்ளது.

Table 3 (3)
வேகன் R காரின் முன்புறத் தோற்றம், செவ்ரோலெட் பீட் மாடலைப் போல பளபளப்பானதாகவோ வித்தியாசமானதாகவோ இல்லை என்றாலும், எளிமையான தோற்றத்தில் அனைவரையும் கவர்கிறது. இதன் தெளிவான, சாதாரணமான தோற்றம் ஆர்ப்பரிக்கும் அழகுடன் இல்லை என்றாலும், குறை கூறும் விதத்தில் இல்லை என்பதே உண்மை.

உட்புறத் தோற்றம்


வேகன் R கதவுகள் அனைத்தும் அகலமாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ளன. எளிதாக உள்ளே செல்லவும் வெளியே வரவும் முடியும் என்பது, வேகன் R மாடலின் தனிச்சிறப்பாகும். நிஸ்ஸான் மைக்ரா காருக்குள் உள்ளே சென்றவுடன் நீங்கள் அமர்ந்து விடுவீர்கள், ஆனால், வேகன் R காரின் உட்பகுதியானது நீங்கள் நடக்கும் அளவிற்கு உயரமாக உள்ளது. அதே சமயம், இருக்கைகளும் உயரமாகப் பொருத்தப்பட்டிருப்பதால், முன்புற கண்ணாடி வழியாக சாலை நன்கு தெரிகிறது.

image 4 (4)
கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்தில் மிளிரும் இதன் உட்புறம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. சென்டர் கன்சோல், கதவு கைப்பிடிகள் மற்றும் ஸ்டியரிங் வீல் போன்ற பகுதிகளில் ஆங்காங்கே அலுமினிய வண்ணத்தில் வேலைப்பாடுகள் மிளிர்கின்றன. டாஷ் போர்டின் டிசைன் பற்றி எழுத புதிதாக எதுவும் இல்லை என்றாலும், இதற்கு முந்தைய தலைமுறை கார்களுடன் ஒப்பிடும் போது, இதன் தரம் அற்புதமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த பிரிவிலேயே டாஷ் போர்டின் தரத்தில் ராஜாவாகத் திகழும் ஹுண்டாய் i10 –னுடன் ஒப்பிடும் போது, இதன் தரம் குறைந்ததுதான் என்பதையும் நாம் இங்கே ஒப்புக் கொள்ள வேண்டும்.

Image 5 (5)
உள்ளே நுழைந்ததும் முதலில் கவரும் அம்சம் எது என்று கேட்டால், ஆரஞ்சு வண்ணத் திட்டுக்களுடன் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் என்று நிச்சயமாகக் கூறலாம். இது ஒரு 3 பாட் கருவி, ஏனெனில், இது டாகோமீட்டர், ஸ்பீடோமீட்டர் மற்றும் இன்டிகேட்டர்கள் போன்ற மூன்று விதமான கருவிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, ஸ்பீடோவின் கீழே, எரிபொருள் அளவைக் காட்டும் டிஜிட்டல் கருவி மற்றும் ஒரு ஓடோமீட்டர் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சிறிய LCD ஸ்ட்ரிப் பொருத்தப்பட்டுள்ளது.

Image 6 (5)
சென்டர் கன்சோல் பகுதியில், ம்யூசிக் சிஸ்டம் மற்றும் குளிர் சாதன கருவிக்கான கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. டயல்கள் மற்றும் ஸ்விட்ச்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ள விதம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. அவை கைக்கு எட்டும் தூரத்திலும், உபயோகிக்க எளிதாகவும் உள்ளன என்பது கூடுதல் சிறப்பாகும். ஆடியோ சிஸ்டத்துடன் CD, USB, ரேடியோ மற்றும் 4 நான்கு ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டுள்ளன. ம்யூசிக் சிஸ்டத்தின் தரம் சராசரியாகவே உள்ளது.

Image 7 (5)
கேபினின் முன்புறத்தில் இணைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சொகுசாக இல்லை என்றாலும், வசதியாகவே உள்ளன. சற்றே குண்டாக இருக்கும் நபர்கள் கூட வசதியாக அமர்ந்து பயணிக்கலாம். 1700 மிமீ என்ற அளவிலான உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், முன்புறம் மட்டுமல்ல பின்புறத்திலும் தலை தட்டும் விதத்தில் இல்லாமல், மேல் பகுதி உயரமாக இருக்கிறது. எனினும், இதன் அகலம் சற்றே குறைவாகவே இருப்பதால், ஓட்டுனர் சக பயணியின் தோள்களை இடித்துக் கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஸ்டியரிங் வீல் பெரிதாக வடிவமைக்கப்பட்டு, நெருநெருவென்ற அமைப்பில் உள்ளதால், வலுவான பிடியுடன் வண்டியைச் செலுத்த முடிகிறது. மேலும், ஸ்டியரிங் வீலின் கோணங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். எனவே, ஓட்டுனரால் தனக்கு வசதியான கோணத்தை எளிதாகக் கண்டறிந்து, உடனுக்குடன் அதனை அமைத்துக் கொள்ளவும் முடிகிறது.

Image 8 (3)
பின்புற கேபின் பகுதியிலும், இதே கதைதான் தொடர்கிறது. இந்திய சந்தையில் உள்ள இந்தப் பிரிவு கார்களிலேயே, வேகன் R மாடலில் மட்டுமே, தலைக்கு மேல் உள்ள பகுதி இவ்வளவு உயரமாக இருக்கிறது. எனினும், கால்களை வைக்கும் வசதி மற்ற கார்களில் உள்ளதைப் போலவே உள்ளது. வேகன் R மாடலில் 4 நபர்கள் வசதியாக அமர்ந்து செல்ல முடியும். அகலம் குறைவாக இருப்பதால், பின்புற இருக்கைகளில் மூன்றாவது நபர் அமர்ந்தால், இடித்துக் கொண்டே பயணிக்க வேண்டும். இது நிச்சயம் அசவுகர்யமாக இருக்கும். மேலும், இருக்கைகளின் சாய்ந்து கொள்ளும் பகுதி ஒப்பீட்டளவில் நேராக இருப்பதால், நீண்ட நேர பயணங்களை மேற்கொள்வது இதமாக இருக்காது.

Image 9 (5)
உட்புறத்தில், சிறிய பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடைவெளிகள் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டு க்லோவ் பாக்ஸ்கள், சென்டர் கன்சோல் மற்றும் கியர் லீவர் பகுதிகளில் இடம் பெற்றுள்ள சிறு சிறு இடைவெளிகள் போன்றவை பாராட்டுக்குரியவை. பல இடங்களில் இடைவெளிகள் இருந்தாலும், நம்மை மிகவும் வசீகரித்ததென்னவோ முன்புற பயணியர் இருக்கையின் கீழ் உள்ள இடவசதியாகும். இது, வேகன் R மாடலின் தனிச்சிறப்பாகும். சற்றே குழிவுடன் உள்ள இந்தப் பகுதியில் நீங்கள் ஒரு சிறிய மளிகை சாமான் மூட்டையை வைத்துக் கொள்ளும் அளவிற்கு இட வசதி இருக்கிறது.
வேகன் R காரின் கேபின் பகுதியிலும், உங்களால் எந்த விதமான ஸ்டைலான அமைப்புகளையும் கண்டுபிடிக்க முடியாது. எனினும், இனிய பயணத்திற்குத் தேவையான அனைத்து அமைப்புகளும் இதில் இடம்பெறுகின்றன. நடைமுறை நன்மைகள் பல இருப்பதால், தினமும் பயணிப்பதற்கு இது சிறந்த வாகனமாகும். அகல அளவுகள் சற்றே சமரசம் செய்யப்பட்டுள்ளதால், உள்ளே இருப்பவர்கள் ‘சிக்’கென்று அமர்ந்து வரவேண்டும் என்ற ஒரு சிக்கலைத் தவிர, இந்த பிரிவு கார்களில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் வேகன் R மாடலில் நிறைந்திருக்கின்றன.

செயல்திறன்


முதல் முறையாக, MSIL (மாருதி சுசுகி இந்தியா லிமிடெட்) நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள முழுவதுமாக அலுமினியத்தால் ஆன K சீரிஸ் மோட்டார் பொருத்தப்பட்ட கார்களில் வேகன் R மாடலும் ஒன்றாகும். இவ்வகைப் புதிய மோட்டார் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதாக மட்டுமல்லாமல், சீரிய தரம் மற்றும் அதிக வேகத்துடன் செயல்படும் திறன் ஆகியவற்றுடன் வருகிறது. வேகன் R ஹாட்ச் பேக் காரில், 67 bhp என்ற அளவு சக்தி மற்றும் 90 Nm என்ற அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எண்களை வாசிக்கும் போது திருப்தியாக இல்லை என்றாலும், அன்றாட தேவைகளை இது நன்றாகவே பூர்த்தி செய்கிறது.

Image 10 (5)
சாவியைத் திருகி இஞ்ஜினை முடுக்கியவுடன், 3 சிலிண்டர் இஞ்ஜினுக்கே உரிய அதிர்வுகளை நீங்கள் உணர முடியும். மைக்ரா மற்றும் i10 ஆகிய கார்களுடன் ஒப்பிடும் போது, NVH அதாவது ஒலி, அதிர்வு மற்றும் கடுமை ஆகியவற்றின் அளவுகள் வேகன் R மாடலில் அதிகமாக உள்ளன. காரை ஸ்டார்ட் செய்யும் போதும், வேகத்தைக் கூட்டும் போதும், இந்த இஞ்ஜின் மூலம் உற்பத்தி ஆகும் டார்க் அளவு குறைவாக உள்ளது (லோ எண்ட் கிரண்ட் இல்லை). எனவே, நெருக்கடியான போக்குவரத்தில் பயணிக்கும் போது, வண்டியைச் செலுத்துவதற்கு சிரமாக உள்ளது. அதே நேரம், வேகத்தைக் கூட்டும் போது, கேபினுக்குள் அதிகப்படியான சத்தம் வருகிறது. அதிக வேகத்தில் கணிசமான அளவு டார்க்கை உற்பத்தி செய்ய முடியாததால், வேகன் R காரில் நெடுஞ்சாலைகளிலும் வேகமாக பயணம் மேற்கொள்ள முடியாது. இந்த இஞ்ஜின், சிறப்பான விதத்தில் நகரத்திற்குள் ஓட்டுவதற்கும், எரிபொருள் சிக்கனம் தருவதற்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டதாகும். எனவே, மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பயணங்களுக்கு இது உறுதுணையாக இருக்கிறது. லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் என்ற மைலேஜ் தருகிறது என்று ARAI மதிப்பிட்டுள்ளது. நிச்சயமாக, இதன் பிரிவிலேயே இது சிறந்த மைலேஜ் அளவீடாகக் கருதப்படுகிறது.

Table 4 (3)

ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் (AMT)வேகன் R மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு பெடல்கள் உள்ளன. இதன் செயல்பாடுகள் வழக்கமான தானியங்கி வாகனம் போலவே உள்ளது. ட்ரைவ் பகுதியில் உள்ள கியர் லீவரை முடுக்கிவிட்டு, பிரேக்கில் இருந்து கால்களை எடுத்தால், கார் சீராக முன்னேறிச் செல்கிறது. உங்களது இடது காலுக்கு வேலை இல்லை, ஏனெனில் கிளட்ச்சின் செயல்பாடுகளை ஹைட்ராலிக் ஆக்சுவேட்டர் கட்டுப்படுத்துகிறது. சிறிய ரக மாருதி கார்களில், AMT அமைப்பு மேம்பட்டதாக இல்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
காரின் வேகத்தை உடனடியாகக் குறைக்கும் போதும், அதிகப்படுத்தும் போதும் சிறிய அதிர்வுகளை உணர முடிகிறது. எனினும், அனுதின பயணத்திற்கு உறுதுணையாக இருப்பதால், இது பெரிய பாதகமாகத் தெரியவில்லை என்பதே உண்மை. கியர்களை மேனுவல் மோடுக்கு மாற்றுவதன் மூலம், கியர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

சவாரி மற்றும் கையாளும் திறன்


மாருதி கார்களின் அடையாளமான இலகு எடை கொண்ட ஸ்டியரிங் வீல் வேகன் R மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசல்களை சமாளிப்பதற்கும், பார்க்கிங் பகுதியில் நிறுத்துவதற்கும் மிகவும் எளிதாக உள்ளது. எனினும், இதன் வேகத்தை அதிகரிக்கும் போது வேகத்தைச் சமாளிக்கத் தேவையான எடை ஸ்டியரிங்கில் இல்லாததால், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் சஸ்பென்ஷன் இயக்கமும் சுமாராகவே உள்ளது. அவ்வப்போது வரும் மேடுகளையும், குறைந்த வேகத்தில் செல்லும் போது வரும் குழிகளிலும் ஏற்றி இறக்கும் போது நன்றாகவே இயங்குகிறது. ஆனால், அதிவேக பயணத்திற்கு இது உகந்ததாகவும் வசதியாகவும் இல்லை என்பதை நாம் இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டியுள்ளது. மற்ற கார்களுடன் ஒப்பிடும் போது, மைக்ரா மட்டுமே அதிவேக பயணத்தில் தடுமாற்றம் இல்லாமல் ஓடுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்:


Image11 (10)
விபத்து ஏற்படும் போது பெரிய தாக்கம் ஏற்படும் முக்கிய பகுதிகளில் தேவையான அளவு பீம்கள் மற்றும் கிரம்ப்பில் சோன்கள் போன்றவை பொருத்தப்பட்டு, அதிகமான தாக்கத்தைத் தானே ஈர்த்துக் கொள்ளும் விதத்தில் உள்ள பாடி அமைப்புடன் வேகன் R உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மேம்பாட்டில், முன்புறத்தில் இரட்டை காற்றுப் பைகள் மற்றும் ஆண்ட்டி-லாக் பிரேக்கிங் அமைப்பு போன்றவை CNG வேரியண்ட் தவிர அனைத்து டிரிம்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Table 5 (3)

வேரியண்ட்கள்


Table 6 (3)

தீர்ப்பு


உங்களது பணத்திற்கு சரியான மதிப்பீடாக வேகன் R, குறிப்பாக LXi (O) வேரியண்ட் திகழ்கிறது. வசீகரிக்கும் அழகோ, கூடுதல் சிறப்பம்சங்களோ இல்லாமல் இருந்தாலும், இது நடைமுறைக்கு உகந்த வாகனமாகச் செயல்படுகிறது. இது தவிர, அதிகமான இட வசதி, எரிபொருள் சிக்கனம் மற்றும் மாருதி சுசுகி நிறுவனத்தின் சிறந்த ஆஃப்டர் சேல்ஸ் நெட்வொர்க் போன்றவை உங்களுக்கு சாதகமான அம்சங்களாகும். ஸ்டைலுக்கு முக்கியத்துவம் தராமல் நடைமுறை பயன்பாட்டிற்கும், அழகுக்கு முக்கியத்துவம் தராமல் செயல்திறனுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. நீங்கள் சாதகமான நடைமுறை செயல்பாட்டை விரும்புபவராக இருந்தால், உங்களது அடுத்த ஹாட்ச் பேக் காரின் செயல்திறனே முக்கியம் என்று கருதுபவராக இருந்தால், உங்களின் தேர்வு வேகன் R மாடலாக இருக்கும்.