மாருதி Vitara Brezza

` 7.2 - 9.9 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


மார்ச் 29, 2016: ப்ரீஸ்ஸா காருக்கான தேர்விற்குரிய உதிரிப் பாகங்களை, மாருதி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. மேற்கண்ட உதிரிப் பாகங்களில் வழக்கமான வாகனப் பாகங்களுக்கு பல்வேறு வகையில் மாற்றாக அமையும் வண்ணம் அமையும் பாகங்களை உட்கொண்டு, பல்வேறு நிலைகளில் ஆன விலை நிர்ணயத்தில் கிடைக்க பெறுகின்றன. இதன் மூலம் அதிக அளவிலான வாகனங்களின் கூட்டத்தின் இடையே தான் வைத்து உள்ள கார் மட்டும் தனித்தன்மை உடன் கூடிய ஒன்றாக நிற்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களின் ஆசையை பூர்த்தி செய்யப்படும் வகையில் அமையும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த காருக்கு உரிய கிளாமர் தீம், தற்போது வாடிக்கையாளருக்கு ஒரு கிட் ஆக கிடைக்க பெறுகிறது. வெறும் 23,490 ரூபாய் என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கப் பெறும் இந்த மேற்கூறிய கிட்டில், பாடி கிராஃபிக்ஸ், ஃபேக் லெம்ப் கார்னிஷ், டோர் விஸர் கிரோம் உள்ளீடுகள் உள்ள அம்சங்கள் உள்ளிட்டவை தவிர, ORVM கார்னிஷ் கூட கூடுதல் ஆக உட்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த காரில் பின்பக்கம் உள்ள சீட்டிற்கே உரிய பொழுதுப் போக்கு அமைப்பு (எண்டர்டெயின்மெண்ட் சிஸ்டம்) உடன் கூடிய ஒரு DVD பிளேயர், ஒரு கழுத்திற்கு இதமான அனுபவத்தை அளிக்கக் கூடிய தலையணை (நெக் பில்லோ), ஸ்டீரிங்கின் மேற்புறத்தில் சூழ்ந்து காணப்படும் கவர், காரின் உட்புறத்தின் தரையில் பயன்படுத்த கூடிய விரிப்புகள் (ஃப்ளேர் மேட்ஸ்), குஷன் செட் மற்றும் டோர் சில் பிளேட்கள் ஆகியவை இந்த காருக்கான உள்புற அமைப்பியலில் அடங்கி உள்ள பாகங்களாக கிடைக்கப் பெறுகின்றன.

மாருதி விட்டாரா ப்ரீஸ்ஸா விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்பிரபலமான ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மூலம் துவக்கி வைக்கப்பட்ட இந்த துணை -கச்சிதமான SUV பிரிவிற்குள் (சப் –காம்பேக்ட் SUV செக்மெண்ட்) இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்திற்கு ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி தந்த பெருமை மேற்கண்ட மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸ்ஸா காரையே சாரும். இந்த SUV –யில் நாம் பார்க்கும் போது, மொத்தம் ஆறு வகைகள் காணப்படுகின்றன. அவை LDi, LDI (O), VDi, VDi (O), ZDi மற்றும் ZDi+ என்ற ஆறு வகைகள் ஆகும். அதேபோல நம் நாட்டில் ஒரு திறமை வாய்ந்த SUV ஆக இருந்தும், எதிர்பார்ப்பை குலைத்து போட்டு மிகக் குறைந்த அளவில் மட்டுமே விற்பனை ஆகி மறைந்துவிட்டது என்ற நிலையில் இருந்த ‘விட்டாரா’ மோனிக்கரை, இந்த கச்சிதமான SUV மூலம் மீண்டும் உயிர்த்தெழ செய்யப்பட்டு உள்ளது. கார்களை வாங்க போகும் வாடிக்கையாளர்களை பொறுத்த வரை, எந்த தயாரிப்பாக இருந்தாலும் பரவாயில்லை அதை வாங்கி ஓட்டி பார்ப்போம் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கும் பட்சத்தில், மேற்கூறிய இந்த விட்டாரா ப்ரீஸ்ஸா கார் தனது சிறகுகளை விரித்துக் கொண்டு சாலைகளில் சீறிப் பாய்ந்து பறந்து செல்ல தயாரான நிலையில் உள்ளதாக தெரிகிறது.
ஆனால் அந்த அளவிற்கு இந்த காரில் என்னென்ன உதிரிப் பாகங்களை, தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது என்பதை குறித்த ஒரு உன்னிப்பான கண்ணோட்டத்தை இங்கு கீழே காண்போம்.

P1 (4)

சாதகங்கள்:1. இந்த காரின் அட்டகாசமான வடிவமைப்பு (ஸ்டைலிங்). தடித்ததாகவும், திரண்டதாகவும் காட்சி அளிக்கும் இந்த விட்டாரா ப்ரீஸ்ஸா கார், ஒரு கச்சிதமான SUV எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அப்படியே இருக்கிறது.
2. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சுய இயக்க தட்பவெப்ப நிலை கண்காணிப்பு அமைப்பு (ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்), காரின் ஸ்டீரிங் வீல்லில் ஏறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள கன்ட்ரோல்கள், பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு நிறைந்து காணப்படுகிறது.

பாதகங்கள்:1. இந்த காரில் பெட்ரோலை பயன்படுத்தி இயங்கும் என்ஜினை கொண்டது என்ற எந்த ஒரு வகையும் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஈகோஸ்போர்ட் காரில் பார்க்கும் போது, இரு வகையான பெட்ரோல் கொண்டு இயங்கும் என்ஜின்களின் தேர்வு அளிக்கப்படுவதை காண முடிகிறது.
2. இந்த காரில் ஆட்டோமேட்டிக் இயக்கம் கொண்ட எந்த ஒரு வகையும் பயன்பாட்டிற்கு என அளிக்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் TUV300 மற்றும் ஈகோஸ்போர்ட் ஆகிய இரண்டு கார்களிலும் பார்க்கும் போது, ஒரு சுமூகமான தன்மையுடன் இயங்க கூடிய ஆட்டோமேட்டிக் என்ஜின்களை கொண்டு இருப்பதை காண முடிகிறது.

தனித் தன்மையான அம்சங்கள்:1. இந்த பிரிவிலேயே இரட்டை -டோன் பெயிண்ட் நிறத் திட்டத்தில் அமைந்த முதல் கார் என்றால் அது இதுவே ஆகும். இந்த காரின் உயர் மாதிரி ஆன ZDi+ வகையில் உள்ள ரூஃப்பை, கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் பணித் தீர்ப்பு செய்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.
2. இந்த பிரிவிலேயே வைத்து பார்க்கும் போது, ப்ரீஸ்ஸா காருக்கு தான் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள் கச்சிதமான முறையில் பொருந்தும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

மேற்பார்வை:


உயர் தர சப் 4-மீட்டர் கச்சிதமான SUV பிரிவில், பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியின் ஈடு இணையற்ற ஒரு தயாரிப்பாக விட்டாரா ப்ரீஸ்ஸா விளங்குகிறது என்று கூறினால் அது மிகை அல்ல. இந்த காரை குறித்து காகித தாளில் வெளியிடப்பட்டு உள்ள விபரங்களை வைத்து பார்க்கும் போது, அது ஒரு அடிப்படையான விஷயங்களை மட்டுமே பெற்று இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கிறது. இந்த காரின் வெளிப்புற அமைப்பியல் தடித்ததாகவும், கவர்ச்சிகரமாகவும் காட்சி அளிக்கிறது. அதேபோல உட்புற அமைப்பியலில் குறிப்பாக நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விதமான இதமான தன்மைகளையும் அள்ளித் தரும் வகையில் அமைந்து உள்ளது. இது மட்டுமின்றி இந்த கார் அடங்கி உள்ள பிரிவிலேயே வைத்து சிறந்த எரிப்பொருள் சிக்கனம் கொண்ட கார் என்ற சிறப்பை கொண்டதாக இது அமையலாம் என்று தெரிகிறது.

வெளிப்புற அமைப்பியல்


இன்றைய மாருதியின் ஷோரூம்களில் விற்பனையில் உள்ள வேறு எந்த மாருதி நிறுவனத்தின் தயாரிப்பை போலவும், விட்டாரா ப்ரீஸ்ஸா கார் இல்லை என்ற கருத்தின் பின்னணியை குறித்து நாம் முதலில் காண்போம். இந்த வாகனத்தின் அளவீடுகள் சிறப்பான அளவில் அமையப் பெற்று, கச்சிதமான ஒரு SUV-க்கு ஏற்ற, ஒரு சிறந்த நிலைப்பாட்டை அதன் தோற்றத்தில் நிச்சயம் வெளிப்படுத்துகிறது. இந்த ப்ரீஸ்ஸா ஒரு சப் 4 -மீட்டர் காராக அமைந்து, குறைந்த வரி சுமையை பெறும் வகையில் ஆன விதிமுறைகளுக்கு உட்பட்டதாக வரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர, இந்த வாகனத்தின் வடிவமைப்பு ஒரு சரிசமமான நிலையைக் கொண்டு உள்ளது. இந்த காரை எந்த வகையில் பார்த்தாலும் ஒரு திரிந்த தன்மையை காண முடிவது இல்லை.

P2 (4)
இந்த காரின் முன் பகுதியில் பெரும்பாலான முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களுடன் கூடிய தடித்த பம்பரை கொண்டதாக அமைந்து, முன் பகுதியே கவர்ந்து இழக்கும் வகையில் காட்சி அளிக்கிறது. இதில் பெரிய ஏர்டாம் மற்றும் கிளாடிங்கின் நேர்த்தியான பயன்பாடு ஆகியவை சேர்ந்து காரின் ஒரே நிறத்திலான தகவமைப்பை முறித்து ஏறிவதாக அமைந்து உள்ளது. இந்த வாகனத்தின் கிரில், இரட்டை கிரோம் ஸ்லாட்டை கொண்டு, அதில் மாருதி நிறுவனத்தின் அடையாளத்தை பெற்று உள்ளது. இந்த விட்டாரா ப்ரீஸ்ஸாவின் கிரில், ஏறக்குறைய XA ஆல்ஃபா தொழிற்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட ஒரு நகலாக காணப்படுகிறது.

P3 (3)
இதில் ஒரு புகை மூட்டத்துடன் கூடிய ஹெட்லெம்ப்களை பெற்று உள்ளதோடு, அதில் பிராஜெக்டர்கள் உடன் கூடிய டேடைம் ரன்னிங் லெம்ப்களையும் பெற்று உள்ளது.

P4 (3)
இந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதியை குறித்து அறிய நாம் செல்லும் போது, நகரும் வகையில் அமைந்த ரூஃப் (ஃப்ளோட்டிங் ரூஃப்) போன்ற தன்மையைக் கொண்டு வரும் முயற்சியில் மாருதி நிறுவனம் ஈடுபட்டு உள்ளதை உடனடியாக கண்டறிய முடிகிறது. இந்த காரில் உள்ள A, B மற்றும் C ஆகிய பில்லர்களுக்கு கருப்பு நிறம் அளிக்கப்பட்டு உள்ளதால், இந்த காரின் மீதான ரூஃப் நகரும் தன்மைக் கொண்டது என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது. அதேபோல மற்றொரு காரியத்தை மற்ற வாகனங்களில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளது என்பதை உங்களால் எளிதில் கண்டறிய முடிகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, இதில் உள்ள வெளிப்புற மிரர்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள் ஆகியவை ஸ்விஃப்ட் / டிசையர் / எர்டிகா காரில் இருப்பதை, அப்படியே இந்த காரிலும் காணப்படுவதை அறிய முடிகிறது.

P5 (2)
இதில் காணப்படும் விரிவான ஃபென்டர்கள், முழுமையான கிளாடிங் மற்றும் பெரிய 16 இன்ச் வீல்கள் ஆகிய தகவமைப்புகள் சேர்ந்து, விட்டாரா ப்ரீஸ்ஸா காருக்கு உள்ள ஒரு SUV நிலையை மேலும் அதிகரிப்பதாக அமைகிறது. இந்த காரை குறித்து நாம் ஏதாவது குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், குறிப்பாக சதுர வடிவிற்கு ஒத்த வீல் ஆர்ச்சுகளை சுட்டிக் காட்டலாம். இந்த சதுர வடிவில் அமைந்த வீல் ஆர்ச்சுகள் நம் பார்வைக்கு வித்தியாசமாக தெரிகிறதே தவிர, மற்றபடி கவர்ச்சிகரமான உருவத்தை கொண்டு தெளிவான கட்டமைப்பை கொண்டு உள்ளது.

P6 (2)
இந்த வாகனத்தின் பின்புறத்தை பார்த்தால் அது சுத்தமாக காட்சி அளிப்பதோடு, எந்த ஒரு வகையிலும் மடிப்புகளை (ஃபிரில்) கொண்டதாக இல்லாமல் காணப்படுகிறது. பிரிந்த டெயில் – லெம்ப்களைக் கொண்ட ஹேட்ச்சின் பின்பக்கத்தை ஒத்ததாக அமைந்து, ஹூண்டாய் க்ரேடா காரின் உருவத்தை தழுவி உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவது போன்ற தோற்றத்தை கொண்டு உள்ளது. இந்த ஹேட்ச்சின் பின்பக்கத்தின் நடுப்பகுதியில் பதிக்கப்பட்டதாக உள்ள ஒரு மிகப் பெரிய கிரோம் ஸ்லாப்பில் ‘விட்டாரா ப்ரீஸ்ஸா’ என்ற பெயர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளதை காண முடிகிறது.

P7 (2)
இந்த வாகனத்தின் பம்பரில் ஒரு சிறப்பான தன்மையுடன் கூடிய மேட்டி பிளாக் கிளாடிங் மற்றும் ஒரு ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றை கொண்டு உள்ளது. இது தவிர, பின்பக்க பார்க்கிங் சென்சர்கள், ஒரு பின்பக்க வைப்பர் மற்றும் ஒரு டிஃபோக்கர் போன்ற இதர கூறுகளையும் இதில் காண முடிகிறது.

table-1 (1) table-2 (1)

உட்புற அமைப்பியல்:


இந்த விட்டாரா ப்ரீஸ்ஸா காரின் உட்புற அமைப்பியல் மிக நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. நீங்கள் கேபினுக்குள் நுழைந்த உடனேயே உங்கள் கண்களில் காண கிடைக்கும் முதல் காரியமே, அதன் தீம்மில் அமைக்கப்பட்டு உள்ள நிறத் திட்டம் தான். ஒரு முழுமையான கருப்பு தீம் இந்த காரின் கேபினை சூழ்ந்ததாக காணப்படும் நிலையில், ஆங்காங்கே இங்கும் அங்குமாக ஒரு சில இடங்களில் மங்கின சில்வர் மற்றும் பியானோ பிளாக் ஆகிய நிறங்களில் அமைந்த மேலோட்டங்கள், உள்ளே உள்ள பொருட்களின் மீது அள்ளித் தூவியது போன்ற காட்சி அளிக்கிறது. இந்த காரில் உள்ள டேஸ்போர்டின் அமைப்பு அப்படியே சரிந்து கீழே உள்ள கியர் லிவர் அமைப்பு உடன் ஒன்றி சேர்வது போன்று அமைக்கப்பட்டு இருப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். இதை பார்க்கும் போது, நமக்கு ஸ்விஃப்ட் காரில் உள்ள அதன் தகவமைப்பு தன்மையை நினைவுப்படுத்தும் வகையில் இருந்தாலும், அந்த ஸ்லைடு கூட செயல்படும் தன்மையை பெற்று உள்ளது என்பதை நாங்கள் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

P8 (2)
இந்த வாகனத்தில் உள்ள டேஸின் நடுப் பகுதியில், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம் பெற்று உள்ளது. இந்த யூனிட்டை அப்படியே, சியஸ், பெலினோ மற்றும் S -கிராஸ் ஆகிய கார்களில் ஏற்கனவே நாம் கண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்கிரீன் நான்கு கால் பாகங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இசை (மியூஸிக்), நேவிகேஷன், ஃபோன் மற்றும் அழைப்புகள் ஆகியவற்றை குறித்த தகவல்களை வெளிக் காட்டுகிறது. மியூஸிக் சிஸ்டத்திற்கு நேராக கீழே உள்ள இடத்தில் ஒரு தன்னிச்சையாக செயல்படும் தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்தும் அமைப்பு (ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் யூனிட்) காணப்படுகிறது. அதனுடன் இது வரை நாம் பார்த்து உள்ளதிலேயே வைத்து மிகப் பெரிய ‘ஆட்டோ’ பட்டனை இது கொண்டு இருப்பதை காண முடிகிறது. இந்த பகுதியில் இருக்கும் குறிப்பிட்ட காரியங்களை குறித்த தகவல்களின் மீது உங்களின் கவனத்தை திருப்ப நாங்கள் விரும்புகிறோம். இதில் உள்ள சிறிய தொடுதல்கள் (டச்சஸ்), ஆட்டோ பட்டனுக்கு கீழே கிரோம் மூலம் சூழந்த நிலையிலும், தட்பவெப்ப நிலை (டெம்பரேச்சர்) ஏரோக்கள் - சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களை கொண்டு அமைந்ததாகவும் உள்ள தன்மை, இந்த காரில் நல்ல உணர்வை அளிக்கும் காரியங்களுக்கு கூடுதல் மெருகேற்றுவதாக உள்ளன.

P9 (1)
இந்த காரில் உள்ள ஸ்டீரிங் வீல், சியஸ் காரில் இருக்கும் பாகங்களின் குவியலில் இருந்து அப்படியே நேரடியாக எடுக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இதை பிடிப்பதற்கு நல்ல உணர்வை அளிப்பதோடு, லெதர் சூழப்பட்டதாகவும் உள்ளது. இந்த வாகனத்தின் வீல்லை உயரத்தை மட்டுமே மாற்றி அமைக்கும் வசதியை கொண்டு உள்ளது. இதனால் இதன் உறவுமுறை வாகனமான பெலினோவில் உள்ளது போன்று, நம்மிடத்திற்கு எட்டிச் சேர்த்து கொள்ளும் தன்மை இதில் இல்லை. அந்த காரில் மேற்கண்ட இரு வசதிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

P10 (1)
இந்த வாகனத்தில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் கூட ஒரு வித்தியாசமான முறையில் இரு பாட் யூனிட்டாக அமைந்து, அதன் உடன் ஒரு MID -யை நடுப்பகுதியில் பெற்று உள்ளது. இந்த MID -யில் ஒரு டிஜிட்டல் பியூயல் கவுஜ், தட்பவெப்பநிலை (டெம்பரேச்சர்) கவுஜ் ஆகிய அம்சங்களை கொண்டதாக உள்ளது. இதன் உடன் நேரம் (டைம்), விரிவான தட்பவெப்ப நிலை, ட்ரிப் மீட்டர்கள் மற்றும் பல்வேறு காரியங்களை சேர்த்த ஒரு கூட்டம் அம்சங்களின் வெளியீடுகளை பெறுவதற்கும், மேற்கண்ட இந்த அமைப்பை நாம் சுழற்சி முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வசதி காணப்படுகிறது.

P11 (1)
கேபினுக்கு உள்ளே உள்ள இடவசதி (இன் -கேபின் ஸ்பேஸ்) மற்றும் பணிச்சூழலியல் (இர்கோநோமிக்ஸ்) ஆகியவை நடுத்தரத் தன்மை வாய்ந்ததாகவே உள்ளன. எடுத்துக்காட்டாக, விட்டாரா ப்ரீஸ்ஸா காருக்குள் நீங்கள் நுழையும் போது ஏறிச் செல்வது போன்ற அனுபவத்தை அளிக்காமல், கேபினுக்கு உள்ளே நீங்கள் நடந்து செல்வது போன்ற உணர்வை தான் அளிக்கிறது. இந்த பிரிவில் உள்ள கார்களில் வைத்து முன் பக்க சீட்டை சிறந்த இடவசதி மற்றும் இதமான சீட்களாக கொண்ட வாகனங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. சீட்களின் பக்கவாட்டு பகுதிகள் உங்களை சிறப்பான முறையில் தழுவுவதாக அமைந்து உள்ளதை உணர முடிகிறது. மேலும் தகுந்த பக்கவாட்டு ஆதாரமும் உங்களுக்கு கிடைக்கிறது.

P12 (1)
இந்த காரின் பின்பக்க இருக்கையில் இரு வளர்ந்த பெரியவர்களை எளிதாக அமர வைக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் மூன்றாவது நபரை இருக்கையில் உட்கொள்வதற்கு இடவசதியில் சற்று சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உருவாகிறது. இந்த பிரிவில் உள்ள வாகனங்களில் இரண்டாவது வரிசையில் 3 வளர்ந்த பெரியவர்களை எந்த நெருக்கடியும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் ஒரே வாகனமாக TUV300 மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த வாகனத்தின் முட்டி ரூம் இடவசதி ஒரு பெரிய பிரச்சனைப் போன்று தெரியவில்லை. இயங்கக் கூடிய ரூஃப், ஷேஸ்சியாரூம்மின் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து கொண்டு உள்ளது. மேலும் இதன் விண்டோக்கள் ஒப்பீட்டில் சிறியதாக உள்ளதால், வெளியே உள்ளவற்றை பார்ப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைகிறது.

P13 (1)
இந்த வாகனத்தின் பூட் ஸ்பேஸ் ஒரு மதிப்பிற்குரிய வகையில் 328 லிட்டரை கொண்டு உள்ளது. அதே நேரத்தில் மேற்கண்ட அளவு TUV300 காரின் அளவை எட்டிச் சேர முடியவில்லை என்றாலும், விட்டாரா ப்ரீஸ்ஸாவை கச்சிதமான காராக சுட்டிக் காட்டும் வகையில், இதில் நேர்த்தியான அளவில் அமைந்த இடவசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

என்ஜின் மற்றும் செயல்திறன்:தற்போதைக்கு இந்த விட்டாரா ப்ரீஸ்ஸா காரை இயக்க, ஒரு டீசல் என்ஜின் மட்டுமே மாருதி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து வரும் நாட்களில் மாருதி நிறுவனத்தின் மூலம் இந்த வாகனத்திற்கு பெட்ரோல் என்ஜின்களும் அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதால், எதிர்காலத்தில் இந்த வாகனத்திற்கான தேவை பெரும் அளவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் மேற்கண்ட இந்த கச்சிதமான SUV-யை இயக்க, அந்த நிறுவனத்தின் மூலம் சோதிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட 1.3 லிட்டர் DDiS200 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட இந்த டீசல் மூலம் இயங்கும் தன்மை கொண்ட இந்த மோட்டாரின் மூலம் 89bhp ஆற்றலும், 200Nm முடுக்குவிசையும் பெறப்பட்டு, இந்த வாகனம் அமைந்து உள்ள வாகனப் பிரிவிலேயே வைத்து ஒரு சிறந்த எரிப்பொருள் சிக்கனம் என்று கூறும் வகையில், லிட்டருக்கு 24.3 கி.மீ என்ற அளவிலான அதிகபட்ச மைலேஜ்ஜை அளிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
ஒரு பொருள் நமது கைகளுக்கு கிடைத்து, அதை பயன்படுத்திப் பார்த்த பிறகே, அதை குறித்து தெரிந்து கொள்ள முடியும். அதுவரை காத்திருக்க வேண்டுமானால் அதற்கு பொறுமை கட்டாயம் அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே இந்த காரின் ஓட்டும் தன்மை, சவாரிகள் மற்றும் கையாளுதல் (ஹேண்டலிங்) ஆகியவற்றை குறித்த ஒரு ஆழமான ஆய்வுகளை அறிய கார்தேக்கோ இணையதளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.

table-3 (1)

பாதுகாப்பு:


மாருதி நிறுவனத்தின் தயாரிப்பான விட்டாரா ப்ரீஸ்ஸாவின் பாதுகாப்பு அம்சங்களை குறித்து விரிவாக நாம் ஆய்வு செய்தால், இந்த ப்ரீஸ்ஸா காரின் துவக்க வகையான LDi -யில் டிரைவர் ஏர்பேக் பொதுவான ஒன்றாகவும், அவரது பக்கத்தில் இருக்கும் பயணிக்கான ஏர்பேக் தேர்விற்கு உரிய ஒன்றாகவும் அளிக்கப்படுவதை காணலாம். ZDI மற்றும் ZDI + ஆகிய இரண்டு வகைகளிலும் பொதுவானதாக ஆன்டி -லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் – ஃபோர்ஸ் டிஸ்டிஃபியூஷன் ஆகியவை அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பார்க்கிங் சென்ஸர்கள் பயன்பாட்டு வசதியை VDI வகைக்கு மேற்பட்ட வகைகளுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளன. மேலும், இந்த காரில் உள்ள வகைகளின் நிலையில் உயர்ந்த ஆக உள்ள ZDI + வகையில் ரிவெர்ஸ் பார்க்கிங் கேமரா வசதி பெற்று உள்ளது. இதை எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, இந்த SUV ஒரு சிறந்த பாதுகாப்பு பேக்கேஜ் கொண்ட கார் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் இந்த காரில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு உயர் தர நிலையில் அமைந்த பாதுகாப்பை நிச்சயம் அளிக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

table-4 (1)

வகைகள்:


ஏற்கனவே நாங்கள் யூகிப்பு கருத்தில் கூறியது போல, இந்த SUV –யில் மொத்தம் LDi, LDi (O), VDi, VDi (O), ZDi மற்றும் ZDi + என்ற ஆறு பெயர்களில் அமைந்த வகைகளை கொண்டு உள்ளது. இதில் எந்த வகையை தேர்ந்தெடுக்கலாம் என்பதை குறித்து நாம் இன்னும் விரிவாக பார்க்கும் போது, மேற்கண்ட வகைகளில் உயர்ந்த வகையாக உள்ள ZDI + -யில், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் கூடிய உள்ளார்ந்த (இன் ஃபில்ட்) நேவிகேஷன் ஆகிய அம்சங்கள், இந்த பிரிவிலேயே சிறந்த செயல்பாட்டை கொண்ட வசதிகளாக காணப்படுகின்றன. துவக்க வகையில் இருந்து துவங்கும் எல்லா வகைகளிலும் டிரைவர் ஏர்பேக் வசதி பொதுவான ஒரு அம்சமாக அளிக்கப்படுவதை காண முடிகிறது. அதே நேரத்தில் இந்த காரின் உயர் தர வகையில், எல்லா விதமான அலங்கார அம்சங்களையும் கொண்டு இருக்கும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் அதிக செலவீனத்தை தவிர்க்க விரும்பி திட்டமிடும் வாடிக்கையாளர்களை பொறுத்த வரை, துவக்க நிலை வகைகளை தான் அதிகமாக விரும்புவார்கள் என்பது மட்டும் உறுதியாக கூற முடியும்.

table-5

தீர்ப்பு:


இந்திய மண்ணில் அதிக கார் விற்பனையையும், சிறந்த சர்வீஸையும் அளிக்கும் பிரபல மாருதி நிறுவனத்திடம் இருந்து வெளியிடப்பட்டு உள்ள தயாரிப்புகளில் இந்த விட்டாரா ப்ரீஸ்ஸா கார், மக்களின் புகழ்ச்சிக்கு உரிய ஒரு காராக உள்ளது. இந்த கார் எந்த விதமான தேவை இல்லாத காரியங்களும் கொண்டிராத ஒரு நல்ல பேக்கேஜ்ஜை இது விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த கார் அம்சங்களால் உயர்ந்ததாக இருந்தாலும், சிறப்பான சீட்டிங் அமைப்பு போன்ற நடைமுறைக்கு ஒத்துப் போகும் காரியங்களையும் இது கொண்டு இருப்பதை காண முடிகிறது. ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட மற்றும் சிறப்பான என்ஜின் உடன் விற்பனைக்கு பிறகு அளிக்கப்படும் ஒரு சக்தி வாய்ந்த சர்வீஸ் நெட்வார்க் ஆகியவை சேர்ந்து விட்டாரா ப்ரீஸ்ஸா காரை ஒரு அதிகபட்ச கவர்ந்து இழுக்கும் பேக்கேஜ் ஆக மாற்றி உள்ளது. இதன் மூலம் எல்லா தரப்பை சேர்ந்த மக்களின் கண்களும் பதிக்கப்பட்டு, அதிக அளவு விருப்பங்களை பெற்ற ஒரு பிரிவிற்குள் மாருதி நிறுவனம் காலடி எடுத்து வைத்து உள்ளது. இந்த வகையில் விட்டாரா ப்ரீஸ்ஸா காரை சிறந்ததாக மாற்ற, தனக்கு இருக்கும் எல்லா விதமான அனுபவங்களையும் இந்த நிறுவனம் பயன்படுத்தி உள்ளது என்பதை காண முடிகிறது.