மாருதி SX4 S Cross

` 8.4 - 12.7 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


பிப்ரவரி, 12, 2016: புதுப்பிக்கப்பட்ட SX4 S-கிராஸின் படங்கள், இன்டர்நெட்டில் உலா வருகின்றன. இக்காரின் உள்புற அமைப்பியல் மற்றும் வெளிப்புற அமைப்பியலை காண உதவும் மேற்கூறிய படங்கள், பிரான்ஸில் உள்ள ஒரு டீலரில் காட்சிக்கு வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்டவை ஆகும்.

இந்த புதுப்பிக்கப்பட்ட SX4 S-கிராஸை, 2016 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் அல்லது 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச சந்தையில் சுசுகி நிறுவனம் களமிறக்க உள்ளது. இந்நிலையில் என்ஜின் மேம்பாடுகளை குறித்த எந்த விபரமும் இதுவரை வெளியாகவில்லை.

மாருதி S-கிராஸ் விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்


தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பிரிவு என்றால், அது நகர்புற/கச்சிதமான SUV என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டஸ்டர் மூலம் இப்பிரிவிற்குள் முதலில் ஆழ்ந்து இறங்கிய ரெனால்ட் நிறுவனத்தை தொடர்ந்து, மற்ற பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்களும் அதன் பங்கை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி மட்டும் இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகி இருந்தது.

p1

கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியில் MSIL மூலம், இதன் விலைக்குறைந்த மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் உருவம் கொண்ட தன்மையை ஓரம்கட்டி விட்டு, அதன் பிரிமியம் தயாரிப்புகளை விற்பனை செய்யும் வகையில் நெக்ஸா என்ற ஒரு சப்-பிராண்டை துவக்கியது. இந்த ஷோரூம்களின் துவக்கத்தோடு கூட, ஒரு புதிய S-கிராஸும் அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது, இந்த கார் ஒரு கச்சிதமான SUV-யா அல்லது ஒரு ஹேட்ச்பேக் என்ற நிலையில் நிற்கிறதே என்று மாருதியை கேட்டால், இது ஒரு பிரிமியம் கிராஸ்ஓவர் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த மேற்கோளுக்கு ஏற்ப S-கிராஸ் பொருந்துகிறதா? என்று ஆராய்வோம்.

பிளஸ் பாயிண்ட்ஸ்:1. ஆற்றல்மிக்க 1.6-லிட்டர் டீசல் என்ஜின் உடன் பிரிவிலேயே சிறந்த 320 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையை அளிக்கிறது.
2. விசாலமான கேபினை பெற்று, 5 பேர் ஏற்கக்கூடிய வகையில் இதமாக அமர முடியும்.
3. மேம்பட்ட பயண தரம், கரடுமுரடான சாலைகளையும் எளிதாக சமாளிக்கிறது.
4. பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட், லெதர் சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பல அம்சங்களால் நிறைந்துள்ளது.

மைனஸ் பாயிண்ட்ஸ்:1. பெட்ரோல் என்ஜின் தேர்வு இல்லை. பெட்ரோல் என்ஜின் அளிக்கப்பட்டிருந்தால், துவக்க விலை இன்னும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.
2. சராசரியான பூட் ஸ்பேஸ் – 353 லிட்டர். மிகச்சிறிய ஹோண்டா ஜாஸில் கூட இதற்கு ஒப்பான பூட் வசதி காணப்படுகிறது.
3. ஆட்டோமேட்டிக் வகையோ (க்ரேடாவை போல) அல்லது AWD வகையோ (டஸ்டரை போல) கிடையாது.

தனித்தன்மையுள்ள அம்சங்கள்:1. எல்லா வீல்களிலும் தரமான டிஸ்க்-பிரேக்குகள். இப்பிரிவிலேயே இந்த வசதியை கொண்ட ஒரே கார், இதுதான்.
2. எல்லா வகைகளிலும் தரமான இரட்டை ஏர்பேக்குகளை கொண்டு, துவக்க வகையிலும் (இதில் டிரைவர் ஏர்பேக் மட்டுமே உள்ளது) பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

மேற்பார்வை:


இந்த கார், சர்வதேச அளவில் SX4 S-கிராஸ் என்று அறியப்படும் நிலையில், இந்த கார் தயாரிப்பாளர் மூலம் இந்தியாவில் SX4 நிறுத்தப்பட்டதை நினைவில் கொண்டு, SX4-ன் சேர்ப்பை தவிர்த்துள்ளது. இதுமட்டுமின்றி, பூட் லிட்டில் இருந்த மாருதி சுசுகி என்ற பேட்ஜ் கூட நீக்கப்பட்டுள்ளது. எனவே சுசுகியின் பெயர்பலகை மட்டுமே அங்கே இருக்கிறது.

மாருதியின் வழக்கமான விற்பனை நிலையங்களை தவிர்த்து, அந்நிறுவனத்தின் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும் முதல் மாருதி தயாரிப்பு இதுவே ஆகும். அதே நேரத்தில் சர்வீஸ் வசதிகள் பங்கிடப்பட்டுள்ளது.

வெளிப்புற அமைப்பியல்


S-கிராஸை போல, இப்பிரிவில் உள்ள மற்ற கார்களான டஸ்டர், டெரானோ, க்ரேடா மற்றும் சிறியதான ஈகோஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்தும் கிராஸ்ஓவர்கள் ஆகும். ஆனால் மீதமுள்ளவை அனைத்தும் தடித்த, முரட்டுத்தனமான SUV-களின் அமைப்பை பெற்றுள்ளன. ஆனால் S-கிராஸ் அந்த பட்டியலில் இல்லை.

p2

உண்மையைக் கூறினால் S-கிராஸின் வடிவமைப்பு, மூக்கின் மீது விரல் வைப்பதாகவோ அல்லது மிகவும் மோசமானதாகவோ இல்லை. இது ஒரு எளிதாக காட்சி அளிக்கும் ஒரு கார் என்பதால், பலரின் கண்களை கவர்ந்திழுப்பதாகவோ அல்லது அது கடந்து செல்லும் போது திரும்பி பார்ப்பது போன்றோ இல்லை.

அஜானுபாகுவான தோற்றம் மற்றும் கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு ஆகியவற்றை விரும்புகிறவர்கள், S-கிராஸின் நெருங்கிய ஒரு அட்டகாசமான போட்டியாளரிடம் (க்ரேடா) காண முடிந்தாலும், இந்த மாருதி தயாரிப்பில் அப்படி இல்லை.

S-கிராஸின் முன்புற முகப்பகுதியை பார்த்தால், கைவிடப்பட்ட SX4 சேடனை நினைவுப்படுத்துவதாக உள்ளது. பெரிய அளவிலான ஹெட்லைட்கள் மற்றும் குட்டையான மூக்கு ஆகியவை பழைய SX4-ன் குறிப்புகளை கொண்டுள்ளன. முன்பக்கத்தில் ஹெட்லைட்களில் உள்ள சில்வர் வரிகளின் வடிவில் எண்ணற்ற ஒளிரும் தன்மையும், ஃபேக்லெம்ப்களின் அமைப்பில் கிரோமும் அமைந்துள்ளது.

கிரோம் மூலம் பணித்தீர்க்கப்பட்ட இரு ஸ்லாட் ரேடியேட்டர் கிரில்களை கொண்டு, அதன் நடுவே ஒரு பெரிய 'S' லோகோவை பெற்றுள்ளதை எடுத்து கூற வேண்டிய தேவையில்லை.

p3

இந்த ஒளிரும் கூறுகளை முன்பக்கத்தில் மேட்டி சில்வர் அசென்ட்களாகவும், பின்பக்கத்தில் ஸ்கிட் பிளேட்களாகவும், பக்கவாட்டில் சைடு ஸ்கிர்ட்ஸாகவும் காண முடிகிறது. ரூஃப் ரெயில்கள் கூட சில்வர் நிறத்தில் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து சில நுட்பமான தன்மையை அல்லது ஒளிரும் டிசைனை அளிக்கிறது.

இதன் சாந்தமான வடிவமைப்பை குறித்து பார்க்கும் போது, அலாய் வீல்கள் உண்மையிலேயே வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த 16-இன்ச் வீல்களை பார்த்தால், எளிதில் இவை பிளாஸ்டிக் வீல் கேப்கள் என்று தவறாக புரிந்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் இதை பெலினோவில் கண்ட பிறகு, இதன்மீது எங்களுக்கு விருப்பம் ஏற்பட ஆரம்பித்தது.

p4

பின்பக்கத்தை குறித்து பார்க்கும் போது, ஹெட்லெம்ப்பின் முனையில் இருந்து துவங்கும் ஒரு தடித்த ஷோல்டர் லைன், டோர் ஹேண்டில்களில் நிறுத்தப்பட்டு, மீண்டும் டெயில் லெம்ப்களில் இணைக்கின்றன. ஈக்கோஸ்போர்ட்டின் ஒரு சாடையை, இதன் டெயில் லைட்களில் காண முடிகிறது என்றாலும், நம்மை பொறுத்த வரை இது ஒரு தவறான காரியமல்ல.

டெயில் லெம்ப்களின் அமைப்பின் இடையே ஒரு நேர்த்தியான சிறிய ஹெக்சாஜன் அமைக்கப்பட்டு, பின்புற அழகை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

p5

இந்த S-கிராஸில் ஒரு தாராளமான விகிதாச்சாரங்கள் இருந்தாலும், ஒரு காராக கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விடுகிறது. இதில் அருமையான தன்மைகள் எதுவும் இல்லாததால், உங்களை இரண்டாவது முறையாக திரும்பி பார்க்க வைக்காது.

1

உட்புற அமைப்பியல்


சியஸை போல இல்லாமல், S-கிராஸின் உட்புற அமைப்பியல் முழுமையான கருப்பு தீம்மை கொண்டுள்ளது. சிலருக்கு இதுபோல முழுமையான கருப்பு உட்புற அமைப்பியல் அவ்வளவு கவர்ச்சியாக தெரிவதில்லை. ஆனால் கார்தேக்கோவை சேர்ந்த எங்களுக்கு, அது மிகவும் ஸ்போர்ட்டியாக தெரிகிறது. எனவே அதற்கு வாழ்த்துக்கள்.

வெளிப்புற அமைப்பியலை போலவே, உட்புற அமைப்பியலிலும் ‘அருமையான’ தன்மையை இழந்துள்ளது. ஆனால் சலிப்பூட்டும் முழுமையான கருப்பு நிறத்தை உடைத்தெறியும் வகையில் சில்வர் மேலோட்டங்களுடன் கூடிய இதன் தொல்லையில்லாத டேஸ்போர்டை நீங்கள் நிச்சயம் பாராட்டுவீர்கள்.

நேர்த்தியான கிளாஸ் ஏரியாவை சுற்றிலும் கொண்டுள்ளதால், கேபின் காற்றோட்டமானதாக தெரியவில்லை. டேஸ்போர்டின் மீது ஒரு சிறந்த ரப்பரால் ஆன மிருதுவான பொருளால் மூடப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் இன்னும் கூட தரமானதாக இருந்திருக்கலாம், குறிப்பாக பவர் விண்டோகளுக்கான ஸ்விட்ச்சுகள். முழுமையாக பார்க்கும் போது, கேபின் நேர்த்தியாகவும், பணித்தீர்ப்பு கொண்டதாக அமைந்து சுத்தமாக காட்சியளிக்கிறது.

p6

சென்டர் கன்சோலின் அதிகபடியான இடத்தை, ஒரு 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பயன்படுத்தியுள்ளது. டேஸில் அமையும் பட்டன்களால் அழகு கெடுக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், இந்த யூனிட் ஒரு நீண்ட இடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் க்ரேடாவில் உள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் தனிப்பட்ட பட்டன்கள் இருப்பது போல இல்லாமல், இதில் அனைத்து பயன்பாடுகளும் தொடுதலில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சிஸ்டத்தின் மூலம் ரேடியோ, USB, ஆக்ஸ்-இன் போன்ற ஆதாரங்களை பயன்படுத்தி மீடியாவை இயக்க வைப்பதோடு, இசை கேட்கவும், போன் அழைப்புகளை எடுக்கவும் ப்ளூடூத் வசதியை பயன்படுத்தவும் முடியும். மேலும் இதில் இன்-பில்ட் நேவிகேஷனை கொண்டுள்ளது.

p7

சியஸில் உள்ளதை ஒத்த ஸ்டீரிங் வீல்லையே, இதுவும் கொண்டுள்ளது. இதில் லெதர் சூழ்ந்த நிலையில், பிடிப்பு நன்றாக உள்ளது. இந்த வீல்லில் மீடியா, ப்ளூடூத் டெலிபோனிக் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பட்டன்கள் காணப்படுகின்றன. இந்த வீல்லுக்கு பின்புறம், ஒரு குளிர்ந்த நீல நிறத்திலான பேக்லைட் கொண்ட இரு பாட் இன்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் காணப்படுகிறது.

இதில் உள்ள ஒரு MID-யில், ரெவ் கவுன்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகிய இரு பெரிய டயல்களின் கலவையை காண முடிகிறது. இந்த MID-யில், உடனடியான செயல்திறன், சராசரியான செயல்திறன், டிஸ்டென்ஸ் டூ எம்ட்டி மற்றும் பல தகவல்களை பெறலாம்.

S-கிராஸில் உள்ள அனைத்து சீட்களும் நேர்த்தியாக அமையும் வகையில், கருப்பு லெதர் உடன் கூடிய ஒளிரும் தையலை கொண்ட அப்ஹோல்டரியை பெற்று, உண்மையிலேயே பிரிமியம் தோற்றத்தை அளிப்பதோடு, முழு கருப்பு தீம்மைக் கொண்ட டேஸ் உடன் ஒன்றிணைகிறது.

அதே நேரத்தில், வெப்பம் மிகுந்த கோடை நாட்களில், இந்த சீட்கள் அதிக வெப்பம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்விஃப்ட் காரின் முன்பக்க சீட்களை, நீங்கள் விரும்புவதாக இருந்தால், S-கிராஸையும் நீங்கள் விரும்புவீர்கள். இதில் போல்ஸ்டரிங் மற்றும் குஷனிங் ஆகியவற்றை காண முடிகிறது.

p8

பின்புற இருக்கை பரந்து விரிந்து காணப்படுவதோடு, 3 பெரியவர்களை எளிதாக உட்கொள்ள ஏற்றதாக இருக்கும். க்ரேடாவை விட இதன் லெக்ரூம் சிறப்பானது என்பதில் சந்தேகமில்லை. மேலும் ஹெட்ரூம் உயர்ந்த இடத்தில் உள்ளது.

பின்புறத்தில் உள்ள பயணிகளுக்கான ஒரு வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், ஒரு பின்புற AC அல்லது ஒரு சார்ஜிங் சாக்கெட்டோ கிடையாது. எங்களை பொறுத்த வரை பின்புற AC தவிர்க்கப்பட்டிருக்க கூடாது. குறிப்பாக இந்த கார் முழுவதும் கருப்பு உட்புற அமைப்பியலை பெற்றிருக்கும் நிலையில், அதிகமான வெப்பத்தை ஏற்படுத்தும்.

இதன் பூட் ஸ்பேஸ் சராசரியாக 353 லிட்டரை கொண்டுள்ளது. இதில் சரக்கு கொள்ளளவில் 475 லிட்டரை கொண்ட டஸ்டர், முன்னிலை வகிக்கிறது.

p9

2

இதன் உயர்-மாதிரியான ஆல்ஃபா வகையில், கீலெஸ் என்ட்ரி, புஸ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஷ் கன்ட்ரோல், ஒரு டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் கூடிய நேவிகேஷன், ரிவெர்ஸ் கேமரா, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.

ஹூண்டாயின் மரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி எடுத்து S-கிராஸில் எண்ணற்ற அம்சங்களை, மாருதி நிறுவனம் புகுத்தியுள்ளது போல தெரிகிறது. இந்த தரமான மாருதியின் விலையை விட, இதன் தரம் பல படிகள் கடந்து நிற்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒட்டுமொத்தத்தில் பார்த்தால், ஒரு எளிமையானது. ஆனால் நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளரிடம் இருந்து பட்டுப் போன்ற கேபின் பெறப்பட்டுள்ளது.

செயல்திறன்:


மாருதி நிறுவனம், S-கிராஸ் உருவில் ஒரு மஹிந்திராவை உருவாக்கி உள்ளது என்று கூறலாம். இந்த கிராஸ்ஓவரில் முழுமையான டீசல் என்ஜின் பயன்பாட்டை பெற்றுள்ளது. ஒரு தேர்விற்குரிய ஃபியட்டிடம் பெறப்பட்ட இரு என்ஜின்கள் – பயன்படுத்தி-சோதிக்கப்பட்ட 1,248 cc யூனிட் (1.3-லிட்டர்) மற்றும் அதிக ஆற்றல் வாய்ந்த 1,598 cc மில் (1.6-லிட்டர்) உபயோகிக்கப்பட்டுள்ளது.

3

S-கிராஸ் 1.3 (DDiS200)


1.3-லிட்டர் டீசல், ஒரு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொறுத்தப்பட்டு, சியஸிற்கு நிகரான 4,000 rpm-ல் 89bhp மற்றும் 1,750 rpm-ல் 200 Nm என முறையே ஆற்றல் மற்றும் முடுக்குவிசை புள்ளி விபரங்களை பெற்றுள்ளது. குறைந்த-ஆற்றல் கொண்ட வகை 1.3-லிட்டர் என்ஜினை பெற்று, மாறாக வழக்கமான மற்றும் சாதாரண முறையில் செயல்படுகிறது என்பதை நாங்கள் கூற தேவையில்லை.

இதே என்ஜின், ஒரு ஒத்த நிலையிலான டியூனிங் உடன் சியஸில் காணப்படுகிறது. இந்த என்ஜின் ஒரே மாதிரியாகவே இயங்குகிறது. 2000rpm-க்கு முன் வரை டர்போ லேக் காணப்படுகிறது. அதன்பிறகு மோட்டார் நேர்த்தியான உந்துதலை அளிக்கிறது. ஒப்பீட்டில், க்ரேடாவில் உள்ள 1.4 லிட்டர் மோட்டார், குறைந்த அளவு சத்தத்தை வெளியிடுகிறது. அதே நேரத்தில், மேற்கண்ட இரண்டையும் வைத்து பார்க்கும் போது, S-கிராஸ் அதிக செயல்திறன் கொண்டதாக உள்ளது.

p10

எங்களை பொறுத்த வரை, S-கிராஸின் பெரிய உருவத்திற்கு 1.3 மோட்டார் தகுந்ததாக தெரியவில்லை என்று தான் கூறுவோம். அதே நேரத்தில் சிறந்த செயல்திறனை அளிப்பது வரவேற்பிற்குரியது.

S-கிராஸ் 1.6 (DDiS320)


நீங்கள் செயல்திறன் மீது கவனம் செலுத்துபவராக இருப்பின், இறக்குமதி செய்யப்பட்ட 1.6-லிட்டர் என்ஜின், உங்களை நிச்சயம் கவரும். இதன்மூலம் 3,750 rpm-ல் 118 BHP-யும், இப்பிரிவிலேயே சிறப்பான முடுக்குவிசையாக 1,750 rpm-ல் 320 Nm-யும் அளிக்கிறது. இந்த யூனிட், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொறுத்தப்பட்டுள்ளது.

DDiS320-யை ஓட்டுவதற்கு சிறப்பாக உள்ளது என்றாலும், 2000rpm-க்கு பிறகு தான் ஒரு சிறந்த செயல்பாடு கிடைக்கிறது. நீங்கள் சற்று கவனமாக இருக்காவிட்டால், ஏறக்குறைய 2000rpm-க்கு கீழே இருக்கும் போது S-கிராஸ் நிற்க கூடும். இதன் என்ஜினை தொடர்ந்து செயல்பாட்டிலேயே வைத்திருக்க. தொடர்ச்சியான டவுன்ஷிஃப்ட்கள் தேவை. நெரிசல் மிகுந்த சாலையில், இது சற்று எரிச்சலான காரியமாக இருக்கலாம்.

க்ரேடா 1.6 உடன் ஒப்பிடும் போது, S-கிராஸை ஓட்டுவதற்கு உண்மையிலேயே குதூகலம் மிகுந்ததாக உள்ளது. சில நேரங்களில் அலைப் போல உயரும் முடுக்குவிசை மயக்குவதாகவும், அதை விடும்போது உங்களை கேலி செய்வதாகவும் அமைகிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்:


S-கிராஸில், ஒரு ஒப்பீட்டளவில் மேம்பட்ட தரமான பயணத்தை பெற முடிகிறது. இதன் நேரடி போட்டியாளரான க்ரேடாவை விட, ஒரு படி உயர்ந்தது என்பதை நாங்கள் தைரியமாக கூறுவோம். இதன் கொரியன் போட்டியாளரை போல தூக்கிப் போடும் தன்மை இல்லாமல், ஒரு ஐரோப்பிய தயாரிப்பை போல நெடுஞ்சாலையில் அதிக அமர்ந்த அனுபவத்தை அளிப்பதை நிச்சயம் உணரலாம்.

சஸ்பென்ஷனை பொறுத்த வரை, அதிக மென்மையாகவும் இல்லை, அதிக உறுதியாகவும் இல்லை. சுருக்கமாக கூறினால் ஸ்விஃப்ட்டை போல உள்ளது. சாலையில் உள்ள குழிகளையும், சிதைந்த தன்மைகளையும், எளிதான முறையில் இந்த கார் மேற்கொள்கிறது.

மாருதி சுசுகியிடம் இருந்து இதுவரை வெளிவந்துள்ள தயாரிப்புகளில் சிறந்தது என்று கூறும் வகையில், இதன் நேர்கோட்டு நிலைப்புத்தன்மை (ஸ்ட்ரேட்-லைன் ஸ்டேபிலிட்டி) அட்டகாசமாக உள்ளது. S-கிராஸ் நிலையான உணர்வை அளிப்பதோடு, மூன்றிலக்க வேகத்தில் சென்றால் கூட திசையை திருப்புவதில் ஆர்வமாக செயல்படுகிறது.

ஒரு கிராஸ்ஓவரின் கிரவுண்டு கிளியரன்ஸ் அளவான 180 mm-யை கொண்டுள்ளதால், வேகத்தில் ஒரு முனையில் திரும்பும் போதும் தவிர்க்க முடியாத குட்டிக்கரணம் அடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு டஸ்டர்/ டெரானோ-வில் ஏற்படுவது போல ஏற்படாது.

p11

S-கிராஸில் ஓட்டுதல் மற்றும் கையாளுதல் தன்மைக்கு இடையிலான ஒரு சரியான சமநிலையை, மாருதி நிறுவனம் அளிக்கிறது. இந்த கார் இதமானதாகவும், அதே நேரத்தில் இதை ஒரு மூலையில் நிறுத்தி வைக்க உங்களை அனுமதிக்காததாகவும் உள்ளது.

ஸ்டீரிங் கவர்ச்சிகரமாக உள்ளது. இது ஒரு EPS (எலக்ட்ரிக் பவர் ஸ்டீரிங்) ஆக இருந்தாலும் நன்றாக உள்ளது. நவீன காலத்தின் பெரும்பாலான மாருதி தயாரிப்புகளை போல, இந்த S-கிராஸிலும் ஸ்டீரிங் நேரடியான உணர்வை அளிக்கிறது.

S-கிராஸின் எல்லா வீல்களிலும் தரமான டிஸ்க் பிரேக்குகளை பெற்றுள்ளது. பாதுகாப்பின் மீதான மாருதியின் கவனத்தை, நாம் இங்கேயும் பாராட்ட வேண்டியுள்ளது. இந்த காரில் பிரேக் போட்டவுடன், கோட்டை விட்டு இங்கும் அங்குமாக அல்லாடாமல் விரைவில் வேகத்தை குறித்து நிற்கிறது.

பாதுகாப்பு:


பாதுகாப்பை பொறுத்த வரை, S-கிராஸின் எல்லா வகைகளிலும், ஆன்டிலாக் பிரேக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபூஷன் ஆகியவற்றை காண முடிகிறது. மற்றொரு கூடுதல் இணைப்பு என்னவென்றால், டிஸ்க் பிரேக்குகள் எல்லாவற்றிலும் இருந்தாலும், தேவைப்பட்டால் முன்பகுதியில் மட்டும் டிஸ்க் பிரேக்குகளை பெற்று, பின்பகுதியில் டிரம்களை வைத்து கொள்ளும் வசதி உண்டு.

p12

S-கிராஸில், முன்பக்கத்தில் இரட்டை ஏர்பேக்குகள் (டிரைவர் + பயணி) தரமானதாக அமைந்துள்ளது (துவக்க வகையில் டிரைவருக்கான ஏர்பேக் மட்டுமே கொண்டுள்ளது). இவையெல்லாம் வரவேற்கத்தக்க இணைப்புகள் என்பதோடு, பயணிகளின் பாதுகாப்பின் மீது மாருதியின் கவனம் வளர்ந்து வருவதை காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தியாவிற்கான S-கிராஸ் மாதிரி இன்னும், ஒரு விபத்து சோதனைக்கு (கிரஷ் டெஸ்ட்) உட்படுத்தப்படவில்லை. ஆனால் தென் கிழக்கு ஆசிய சந்தைக்கான மாதிரி, ASEAN NCAP விபத்து சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, முழுமையாக 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. ஆனால், இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வகையில், மொத்தம் 7 ஏர்பேக்குகள் இருந்தன. இது இந்தியாவிற்கு அளிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

4

வகைகள்:


இந்த S-கிராஸ் மொத்தம் 5 வகைகளில் அளிக்கப்படுகிறது. இதில் துவக்க வகையான ஸிக்மாவில் அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்களான பயணி சைடு ஏர்பேக், சீட்பெல்ட் ப்ரீடென்ஷனர்கள் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர்கள் ஆகியவற்றை இழந்துள்ளது. மேற்கூறியவை அனைத்தும் அத்தியாவசியமான பாதுகாப்பு அம்சங்கள் என்று நாங்கள் உணர்வதால், நீங்கள் பட்ஜெட் மிகுந்தவராக இருப்பின், ஸிக்மாவிற்கு பதிலாக, ஸிக்மா(O)-வை தேர்வு செய்யலாம்.

டெல்டா வகையில் ரிவெர்ஸிங் சென்ஸர்கள் மற்றும் பொழுதுபோக்கு சிஸ்டம் போன்ற சில பிரிமியம் அம்சங்களை பெற துவங்குகிறது. எங்களை பொறுத்த வரை, ஸீடா வகையில் பிரிமியம் அம்சங்களின் உண்மையான உணர்வு கிடைப்பதால், அதையே பரிந்துரை செய்கிறோம்.

காரில் உள்ள அம்சங்களில் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால், ஆல்ஃபா வகையை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் ஆப்பிளின் கார்ப்ளே சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒரு பிரிமியம் லெதர் அப்ஹோல்டரி ஆகியவற்றை பெற்றுள்ளது.

5

தீர்ப்பு:


சமீபகாலத்தில் மாருதி சுசுகியின் சிறந்த முயற்சியாக S-கிராஸ் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இப்பிரிவில் உள்ள பெரும்பாலான தயாரிப்புகள், ஹேட்ச்சில் இருந்து உருமாற்றம் பெற்ற கிராஸ்ஓவர்கள் ஆகும். இந்நிலையில் S-கிராஸ் மட்டும் கிராஸ்ஓவராகவே உருவாக்கப்பட்டு, இதனிடையே உயர்ந்து நிற்கிறது.

பிரிவில் முன்னணி வகிக்கும் அம்சங்கள், சிறந்த என்ஜின், நல்ல கட்டமைப்பு தரம் மற்றும் விஸ்தாரமான இடவசதி ஆகியவை சேர்ந்து ஒரு சிறந்த பேக்கேஜ்ஜாக மாற்றுகிறது. அதே நேரத்தில் இதை ஒரு கச்சிதமான SUV அல்லது ஒரு ஆஃப் ரோடர் ஆக இயங்கும் என்று எதிர்பார்க்க கூடாது.

மாருதியின் தரத்தை வைத்து பார்த்தால், உண்மையில் இது ஒரு பிரிமியம் கிராஸ்ஓவர் என்பதில் சந்தேகமே இல்லை. சமீபகால விலை நிர்ணய திருத்தம் மூலம், S-கிராஸ் எல்லா வகையிலும் இன்னும் சிறப்பான தகுந்த பேக்கேஜ் ஆக வருகிறது.