மாருதி ஸ்விஃப்ட்

` 4.7 - 7.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


ஏப்ரல் 01, 2016: முதல் முதலாக 2005 –ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது முதல், மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இந்திய ஹாட்ச்பேக் பிரிவை ஆதிக்கம் செய்தது என்றால் அது மிகை ஆகாது. அருமையான வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கார், இந்திய வாகன தொழில்துறையின் போக்கையே மாற்றி அமைத்தது என்று நாம் தைரியமாகக் கூறலாம். பல முக்கிய மாற்றங்களைப் பெற்ற இதன் மேம்படுத்தப்பட்ட மாடல் 2007 –ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. மீண்டும் ஒரு வெற்றி சரித்திரம் படைக்க 2007 ஸ்விஃப்ட் உதவியது. 2011 – ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த பிரிமியம் ஹாட்ச்பேக் மாடல் உருவாவதற்கு பின்னனியில் செயல்பட்ட விரிவான வாகன ஆய்வு பணி செய்த பொறியியலாளர் குழுவின் புத்திசாலித்தனமான உழைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. இந்த முறை, இவர்களின் முக்கிய நோக்கம் என்னவென்றால், இதற்கு முன் வெளிவந்த வெர்ஷனில் இருந்த ஒரு சில குறைகளை நிவர்த்தி செய்து, தற்போது வளர்ந்து வரும் இந்திய வாகன சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதே ஆகும். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்விஃப்ட்டின் அடுத்த ஜெனரேஷன், சர்வதேச சாலைகளில் சோதனை ஓட்டத்தின் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. முக்கிய சாரங்கள் எதுவும் மாற்றப் படாமல், வடிவத்தில் மட்டும் மாற்றங்களைக் கொண்டுவந்து, புதிய 2017 ஸ்விஃப்ட்டின் ஒட்டுமொத்த தோற்றத்தை மாற்றி அமைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புத்தம் புதிய கிரில், ஃபிலோடிங் ரூஃப் மற்றும் ஓபன் சின் போன்ற புத்துணர்ச்சி ஊட்டும் அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளதால், இதன் தோற்றம் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. வெளியாகியுள்ள புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது, இதில் சற்றே வெளியே வந்துள்ள சக்கர வளைவுகள், பெரிய சக்கரங்கள் மற்றும் சரிந்து வழியும் தோற்றத்தில் உள்ள ரூஃப் லைன் ஆகியவை இணைந்து, 2017 ஸ்விஃப்ட் மாடலுக்கு பந்தய காரின் தோற்றத்தைத் தருகிறது. மேலும், இதன் தோற்றத்தை வைத்துப் பார்க்கும் போது, முன்னதை விட அதிக ஸ்திரத்தன்மை பெற்று வரும் என்று தெரிகிறது. தோற்றங்களில் மாற்றம் பெற்றாலும், இதனை இயக்கும் இஞ்ஜின்களில் எந்த மாற்றமும் இல்லை. எனினும், இந்த கார் அடுத்த கட்டத்தில் காலேடுத்து வைக்கும் போது, மாருதி நிறுவனம் இதில் 1 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் போன்ற மோட்டார்களை இணைக்கும் என்று தெரிகிறது.

சிறப்பம்சங்கள்:


Table 1

மாருதி ஸ்விஃப்ட் விமர்சனம்


கண்ணோட்டம்


முன்னுரைஇந்திய வாகன சந்தையில் முன்னணி இடத்தை மாருதி சுசுகி பற்றியது பழைய கதை. தற்போது, ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ K10 ஆகிய கார்கள் இந்தியர்களின் செல்லப் பிள்ளையாகவே வலம் வருகின்றன. பலீனோ மற்றும் விட்டாரா பிரேஸ்ஸா போன்ற கார்களின் வெற்றிக்குப் பின், இந்நிறுவனம் அடுத்த ஜெனரேஷன் மாருதி ஸ்விஃப்ட் மாடலை தயாரிக்க ஆயத்தம் ஆகிவிட்டது. தற்போது வெளிவந்துள்ள விவரங்கள் மேலோட்டமாகவே உள்ளன. மேலும், புதிய ஸ்விஃப்ட்டின் அறிமுக தேதி பற்றிய விவரத்தை இந்நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. சந்தையில் இப்போது உள்ள ஸ்விஃப்ட் மாடலை விட அடுத்த ஜெனரேஷன் நவீனமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்திய சந்தையின் நாடியை இந்நிறுவனம் எப்படி புரிந்து வைத்திருக்கிறது என்பது புதிய ஸ்விஃப்ட் வெளிவந்தவுடன் நமக்குத் தெரிந்துவிடும். உண்மையில், இந்திய வாடிக்கையாளர்களின் நாடியை தெரிந்து வைத்திருப்பதால்தான், இந்த மாடல் தரம் மற்றும் விலை ஆகியவற்றில் எந்தவித சமரசமும் இன்றி வெளிவந்து, அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இதன் மேம்படுத்தப்பட்ட மாடல், பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்ததை விட அருமையான செயல்திறனைப் பெற்று சிறப்பாக செயல்பட்டது என்பதை நாம் இங்கு நினைவு படுத்துகிறோம்.
சமீபத்தில், ஐரோப்பிய சாலைகளில் தென்பட்டுள்ள 2017 மாருதி ஸ்விஃப்ட் முதலில் ஐரோப்பாவில் வெளியிடப்படும், அதன் பின்னரே, இந்தியாவில் வெளியாகும் என்று தெரிகிறது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பாரிஸ் மோட்டார் ஷோவில் புதிய ஸ்விஃப்ட் 2017 காட்சிபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், ஸ்விஃப்ட் மாருதி நிறுவனத்திற்கு கண்ணின் கருமணியாகும், எனவே, எந்தவிதமான சமரசமும் இல்லாமல் அற்புதமான மாடலாகவே வெளிவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதன் நேரடி போட்டியாளர்கள்:1. ஹுண்டாய் கிராண்ட் i10
2. புதிய ஃபோர்ட் ஃபிகோ
3. நிஸ்ஸான் மைக்ரா
4. ஃபியட் புண்ட்டோ
5. டாடா போல்ட்

Image 1

சாதகங்கள்:1. நியாயமான விலை
2. அனைவரும் விரும்பும் விதத்தில் உள்ள இதன் உட்புற அமைப்பு

பாதகங்கள்1. இரண்டாவது வரிசையில் கால் வைக்கும் இடத்தில், இட வசதியை அதிகரித்திருக்கலாம்.
2. இந்தப் பிரிவின் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது, இஞ்ஜின் விவரங்கள் குறைந்த தரத்தில் உள்ளன.

தனிச்சிறப்பான அம்சம்1. ரேடியோ மற்றும் CD சார்ஜர் கொண்ட ஸ்டீரியோ அமைப்பு பயணத்தின் போது பெரிய போனசாக இருக்கும்.
நான்கு விதமான வேரியண்ட்களில் வரும் ஸ்விஃப்ட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் டிரிம்கள் உள்ளன. பெட்ரோல் வெர்ஷனில், K சீரிஸ் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்படும். அதே நேரம், டீசல் டிரிம்மில் 1248 cc திறன் கொண்ட DDiS இஞ்ஜின் இணைக்கப்படும். இதன் உட்புற அமைப்பானது பெரும்பாலான மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட்டில் சொகுசு வசதிகளுக்கும் குறைவில்லை. மாற்றி அமைக்கும் வசதி கொண்ட சீட்கள், ஆக்செசரி சாக்கெட், பவர் விண்டோஸ், புளுடூத் அமைப்பு மற்றும் இது போன்ற பல அம்சங்கள் இடம்பெறுவதால் பயணக் களைப்பு தெரியப் போவதில்லை. ஸ்விஃப்ட்டின் வரலாறை புரட்டிப் பார்க்கும் போது, இந்திய வாகன சந்தையில் மாற்றம் நிகழ்வதற்கு உறுதுணையாக இருந்த முக்கியமான கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பதும் நமக்குத் தெரியவருகிறது.

வெளிப்புறத் தோற்ற அமைப்பு:


புதிய ஸ்விஃப்ட் பந்தய காரின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இத்தகைய மாற்றத்தை இந்நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பிற வெற்றிகரமான மாடல்களின் தாக்கங்களையும் நாம் இதில் பார்க்க முடிந்தாலும், இது நம்மைக் கவர்கிறது என்பதை மறுக்க முடியாது.

Image 2
சுசுகியின் சின்னத்தை நடுவே தாங்கிக் கொண்டிருக்கும் பெரிய கருப்பு நிற கிரில், 2017 ஸ்விஃப்ட்டின் முகப்பை அலங்கரிக்கிறது. கிரில்லின் இரு ஓரங்களிலும் உள்ள ஹெட் லாம்ப் க்லஸ்டர்கள் மேற்புறமாக நீண்டு, அலை போன்ற வடிவத்தில் உள்ளது. முன்புறத் தோற்றத்திற்கு ஒரு தனித்தன்மையான வடிவத்தை ஹெட் லாம்ப் க்லஸ்டர்கள் ஏற்படுத்தித் தருகிறது.

Image 3
முகப்பின் கீழ் பகுதியில் இடம்பெற்றுள்ள பெரிய ஏர் டேம் அமைப்பு மற்றும் அதன் இரு ஓரங்களிலும் பொருத்தப்பட்டுள்ள ஃபாக் லாம்ப்கள் ஆகியவை சீராக ஒருங்கிணைக்கப்பட்ட தோற்றத்தை இதன் முகப்பிற்குத் தருகிறது. அகலமான, டிசைன் லைன் எதுவும் இல்லாத, நேர்த்தியான மற்றும் மாசில்லாத பானேட் பகுதி நேர்த்தியாக வழுக்கி, வசீகரமான தோற்றத்தை இந்தக் காருக்குப் பெற்றுத் தருகிறது.
அதே நேரம், மென்மையான ஃபெண்டர்கள், பாடி நிறத்திலேயே உள்ள கதவு கைப்பிடிகள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை இதன் பக்கவாட்டு தோற்றத்தின் அழகை மிகைப் படுத்தி காண்பிக்கின்றன. மேலும், சீராக வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் சக்கரங்கள் மற்றும் நேர்த்தியான சக்கர வளைவுகள் ஆகியவை இதன் பக்கவாட்டுத் தோற்றத்தை வசீகரமாக்குகின்றன. ஜன்னல் ஃபிரேம்களின் மீது உள்ள கருப்பு நிற ஃபிரேம் பிரமாதமாக உள்ளது.

Image 5
பெரும்பாலான கார்களின் பக்கவாட்டில் உள்ள கேரக்டர் லைன்கள் புதிய 2017 ஸ்விஃப்ட்டில் இடம்பெறவில்லை. இத்தகைய தனித்தன்மையை நாம் பாராட்ட வேண்டியது அவசியமாகிறது. செவ்ரோலெட் பீட் மாடலில் உள்ளதைப் போல, பின்புற கதவு கைப்பிடிகள் C பில்லரில் பொருத்தப்பட்டுள்ளது.

Image 6
2017 ஸ்விஃப்ட்டின் பின்புறத்தில் அதிகமான எடை சேர்க்கப்பட்டுள்ளதால், சீரான தோற்றத்தைப் பெற்றுள்ளது. பின்புற டெய்ல் லாம்ப்கள் சற்றே வெளியே வந்தது போன்ற வடிவமைப்பில் உள்ளன. மேலும், அவற்றின் நுட்பமான வடிவமைப்பு இதன் தோற்றத்தை அழகாக்குகின்றன.

Image 7
மெலிதான பாடி கிளாடிங்க் பின்புறத்தில் கவர்ச்சியாக நீண்டு செல்கிறது. அதே சமயம், பெரிய பம்பர்கள் பின்புறத்திற்கு கம்பீரமான தோற்றத்தைப் பெற்றுத் தருகின்றன.

Image 8 Table 2 Table 3

உட்புற அமைப்பு:


ஒரு சிலர் கேபின் பகுதியில் நுழைந்தவுடன் உட்புறத்தின் இடவசதியை சற்றே அதிகரித்திருக்கலாம் என்று நினைக்கலாம், ஆனால் நம்மைப் பொறுத்தவரை 2017 ஸ்விஃப்ட்டின் உட்புறம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புற வரிசையில் கால்களை சிரமமில்லாமல் வைத்துக் கொள்வதற்கு தேவையான இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பின் வரிசையில் அமரும் உயரமான நபர்கள் இடப்பற்றாக்குறையால் சற்றே அவதிக்குள்ளாவர். உயரமானவர்களும் தலை இடிக்காமல், தோள்கள் உராயாமல் அமர்ந்து பயனிக்கத் தேவையான இடவசதி உள்ளதால், நம்மைக் கவர்கிறது.

Image 9
கன்னங்கருப்பாக உள்ள உட்புற அமைப்பு சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் நம்மைப் பொறுத்தவரை நன்றாகவே இருந்தது. பெரிய டாஷ் போர்டு முன்புறம் முழுவதும் நீண்டு நளினமாக உள்ளது. இதில் உள்ள கிலோவ் பாக்ஸ் பகுதி மட்டும் பயணிகளின் கால்கள் வரை கீழ்புரமாக நீண்டுள்ளது.

Image 10
சென்டர் கன்சோல் அமைப்பில் சிறிய காட்சித் திரை கொண்ட ஸ்டீரியோ கருவி மற்றும் அதன் அருகில் அதனைக் கட்டுப்படுத்தும் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் கீழே, குளிர் சாதன அமைப்பின் கட்டுப்பாட்டு கருவிகள் இடம்பெறுகின்றன.

Image 11
சிறிய பொருட்களை வைத்துக் கொள்வதற்காக, கன்சோல் பகுதியின் கீழே ஒரு சிறிய இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ஓட்டுனர் மற்றும் முன்புறத்தில் உள்ள பயணி ஆகியோர், சிரமிமில்லாமல் இதனை பயன்படுத்த முடியும். 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், பிடிப்பதற்கு வசதியாகவும், ஓட்டுவதற்கு எளிதாகவும் இருக்கிறது என்பது எமது கருத்தாகும். சுசுகி நிறுவனத்தின் சின்னம் பாந்தமாக இதன் நடுவே பொரிக்கப்பட்டுள்ளது. சின்னத்தை வேறுபடுத்தி பளீரென்று காட்டுவதற்காக, சில்வர் வண்ணத்தில் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

Image 12
ஓட்டுனரின் பார்வையில் படும் இடத்தின் மேலே, டாக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகியவை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் இடம்பெறுகிறது. டாக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகியவை கண்களை உறுத்தாத விதத்தில் பளிச்சென்று அமைத்திருப்பதை நாம் பாராட்ட வேண்டும்.

Image 13
இதம் தரும் விதத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பயணத்தின் போது நீங்கள் சொற்பமான சிரமமே அனுபவிப்பீர்கள். ஹெட் ரெஸ்ட் அமைப்புகள், பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துகின்றன. இருக்கை விரிப்புகள் இதமானதாக உள்ளன, எனினும், லெதர் பயன்படுத்தாத காரணத்தால், சிலருக்கு இது குறைந்த தரத்தில் உள்ளதைப் போல தோணலாம்.

Image 14

செயல்திறன்:


டீசல்:புதிய பலீனோவில் பயன்படுத்தப்பட்ட அதே இலகுவான எடை தொழில்நுட்பத்தையே புதிய மாடல் 2017 ஸ்விஃப்ட்டிலும் பயன்படுத்தி உள்ளனர். புதிய தொழில்நுட்பம் எடையை மட்டும் குறைக்கவில்லை, விபத்தின்போதும் அதிகமாகப் பாதுகாக்கிறது. கெர்ப் எடையும் குறைவாக இருப்பதால், அடுத்த ஸ்விஃப்ட் மாடல் அதிக எரிபொருள் சிக்கனத்தைத் தந்து, அதிக மைலேஜ் தரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
புதிய 2017 மாருதி ஸ்விஃப்ட்டில், சியாஸ் மாடலின் டீசல் வேரியண்ட்டில் பயன்படுத்தப்பட்ட SHVS ஹைபிரிட் அமைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனினும், தற்போதைய 1.3 லிட்டர் மல்டி ஜெட் டீசல் இஞ்ஜினுக்கு பதிலாக அதிக சக்தி உற்பத்தி மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்காக, சுசுகியின் பிரத்தியேகமான 1.5 லிட்டர் டீசல் மோட்டார் பொருத்தப்படலாம். கார் தேக்கோ வலைதளத்தில், 2017 ஸ்விஃப்ட்டில் 1248 cc திறன் கொண்ட DDiS இஞ்ஜின் பொருத்தப்படும் என்று தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இஞ்சினில், 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகள் ஆகியவை இடம்பெறுகின்றன. மேலும், இன்டர்கூலர் வசதியுடன் வரும் ஃபிக்ஸ்ட் ஜ்யோமெட்ரி டர்போ சார்ஜரை இந்நிறுவனம் இந்த மோட்டாருடன் இணைத்துள்ளது. எரிபொருள் சாதாரண ரயில் டைரக்ட் இன்ஜெக்ஷன் நுட்பம் மூலம் செலுத்தப்படுகிறது. 4000 rpm என்ற அளவில் 74 bhp சக்தி மற்றும் 2000 rpm என்ற அளவில் 190 Nm டார்க் ஆகியவற்றை இந்த இஞ்ஜின் உற்பத்தி செய்கிறது. இஞ்ஜின் திறனை அதிகரிக்க 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு ஆச்சர்யம் தரும் உண்மை என்னவென்றால், இஞ்ஜினின் சத்தம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வேளையில் கூட இஞ்ஜின் சத்தம் கேட்காததால், பயணம் இதமாகவும் அமைதியாகவும் உள்ளது. த்ராட்டில் ரெஸ்பான்சும் அருமையாக உள்ளதால், கியர் மாற்றுவது மென்மையாக உள்ளது.

Image 15 Table 4

பெட்ரோல்:


பெட்ரோல் வேரியண்ட்டில் VVT அமைப்பு இணைந்த 1197 cc திறன் கொண்ட K சீரிஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 6000 rpm என்ற அளவில் 83.11 bhp சக்தி மற்றும் 4000 rpm என்ற அளவில் 115 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இதில் நேச்சுரலி ஆஸ்பிரெட்டட் ஏர் சேஞ்சிங் அமைப்பு இடம்பெறுகிறது. இதில் உள்ள மல்டி-பாய்ண்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் அமைப்பு சீரான எரிபொருள் பயன்பாட்டிற்கு உதவுகிறது. டீசல் வேரியண்ட் போலவே, இந்த இஞ்சினும் அதே 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதமான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்நிறுவனம் செயல்திறன் மிகுந்த கிளட்ச் மற்றும் கியர் மாற்றும் முறையை பொருத்தி உள்ளதால், ஓட்டுனரின் வேலை எளிதாகிறது. மிக எளிதாக மணிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தை எட்டி விடலாம். டீசல் வேரியண்ட்டை விட அதிவிரைவாக இது அதிகபட்ச வேகத்தை எட்டிவிருகிறது. எனினும், அதிக வேகத்தில் செல்லும் போது, ஓட்டுனர் லேசாக குலுங்குவது உறுதி.

Table 5

சவாரி மற்றும் கையாளும் திறன்:


2017 ஸ்விஃப்ட்டின் பிரேக் அமைப்பை வெண்டிலேட்டட் டிஸ்க்குகள் மற்றும் ட்ரம்களின் கலவை மேம்படுத்துகின்றது. இதற்கிடையில், முன்புற ஆக்ஸிலில் மேக் ஃபெர்சன் ஸ்ட்ரட் மற்றும் பின்புற ஆக்ஸிலில் டார்சன் பீம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மேலும், சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களை அருமையாக சமாளிக்கிறது. மொத்தத்தில், புதிய ஸ்விஃப்ட்டில் சவாரி செய்வது சுகமான அனுபவமாக இருக்கிறது. மூலை முடுக்குகளில் பயணிப்பதும் கடினமாக இருக்கப்போவதில்லை. எனினும், அதிவிரைவில் செல்லும் வேளைகளில் சற்றே கடினமாக இருக்கும் என்று தெரிகிறது. நவீனமாகத் தோற்றமளிக்கும் எலெக்ட்ரானிக் பவர் ஸ்டியரிங் உங்கள் அனுபவத்தை மேலும் இனிமையாக்கும். ஸ்டியரிங் வீலின் உடனடி ரெஸ்பான்சைப் பார்த்து நிச்சயமாக நீங்கள் வியந்து போவீர்கள்.

Image 16

பாதுகாப்பு அம்சங்கள்:


2017 ஸ்விஃப்ட் மாடலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், இதன் போட்டியாளர்களுக்கு நிகராகவே உள்ளன. இதில் உள்ள ABS மற்றும் EBD போன்ற அமைப்புகள் போனசாகவே வருகிறது என்று நாம் கருதுகிறோம். ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், முன்புற பாதுகாப்பு காற்றுப் பைகள், பிரேக் அஸ்சிஸ்ட் அமைப்பு, 3-பாய்ண்ட் ELR கொண்ட முன்புற சீட் பெல்ட்கள் மற்றும் பாதுகாப்பு அலார்ம் அமைப்பு போன்றவை நமது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கின்றன. அது மட்டுமல்ல இரட்டை ஹார்ன் வசதி, உயரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டாப் லாம்ப், பக்கவாட்டு கதவில் இம்பாக்ட் பீம்கள், ஹெட் ரெஸ்ட்டிரைன்கள் மற்றும் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன.

Table 6

வேரியண்ட்கள்:


2017 ஸ்விஃப்ட் மாடலில், 4 வேரியண்ட்கள் வெளிவரவுள்ளன. அவை LXi, LXi (O), VXi மற்றும் ZDi ஆகும். அடிப்படை வேரியண்ட்டான LXi -ல் மிகவும் அடிப்படையான அம்சங்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. எனவே, பெரும்பாலான மக்கள் இந்த அடிப்படை வேரியண்ட்டைத் தேர்ந்தெடுக்கத் தயங்குவார்கள். பாடி நிறத்திலேயே பம்பர்கள், முன்புறத்தில் 2 ஸ்பீட் இன்டர்மிட்டண்ட் வைப்பர்கள், ஒரு இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர், விளக்குகளை நிறுத்துவதற்கு ஞாபகப்படுத்தும் பஸ்ஸர், எரிபொருள் குறைந்தவுடன் எச்சரிக்கும் விளக்கு, டிஜிட்டல் கடிகாரம் மற்றும் பல சாதாரண அமைப்புகள் இந்த வேரியண்ட்டில் வருகின்றன. LXi (O) வேரியண்ட்டிலும் முதல் அடிப்படை வேரியண்ட்டில் உள்ள அதே அம்சங்களே இடம்பெறுகின்றன. VXi டிரிம்மில் கூடுதலான கவர்ச்சி அம்சங்கள் உள்ளன. CD ப்ளேயர் மற்றும் ரேடியோ கொண்ட ஸ்டீரியோ கருவி, நுண்ணறிவு கொண்ட வேகம் சார்ந்த ஆடியோ வால்யூம் அமைப்பு, Aux-in மற்றும் USB வசதிகள், முன்புறத்தில் ஃபாக் விளக்குகள் மற்றும் திரும்பும் போது எரியும் டர்ன் இண்டிகேட்டர்களுடன் வரும் OVRM-கள் போன்றவை இடம்பெறுகின்றன. உயர்தர டாப் எண்ட் ZDi டிரிம்மில் நீளமான சிறப்பாம்ச பட்டியல் இடம்பெறுகிறது. இதில் மேப் லாம்ப், ஸ்டியரிங் வீல் மீது பொருத்தப்பட்டுள்ள புளுடூத் மற்றும் ஆடியோ ஸ்விட்ச்கள், முன்புற சீட் பெல்ட்டை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, பின்புற ஜன்னலில் டி-ஃபாகர் வசதி, பின்புற வாஷர் மற்றும் வைப்பர் மற்றும் எலக்ட்ரோமேக்னடிக் மூலம் பின்புற கதவைத் திறக்கும் வசதி ஆகியவை உள்ளன. சிக்கன விலையில், சொகுசு வசதிகள் எதுவும் இல்லாமல், அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட காரை வாங்கவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் புதிய ஸ்விஃப்ட்டின் அடிப்படை வேரியண்ட்டிலேயே திருப்தி அடைவீர்கள். செயல்திறன் மற்றும் அடிப்படை வசதிகள் தவிர சொகுசு வசதிகள் மற்றும் பொழுதுப்போக்கு அம்சங்கள் ஆகியவை இணைந்த காரை சொந்தமாக்கிக் கொள்ள நீங்கள் முடிவெடுத்திருந்தால், இதன் டாப் எண்ட் டிரிம்மை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இவற்றிக்கு இடைப்பட்ட ரகம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே 2017 ஸ்விஃப்ட்டின் மிட் ரெஞ்ச் டிரிம்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

Table 7

தீர்ப்பு:


இந்தியர்கள் அனைவரும் விரும்பும் காராக ஸ்விஃப்ட் திகழ்கிறது. அதிக பணம் செலவளிக்காமல் அருமையான பயண அனுபவத்தைத் தருவதில் சிறந்த கார் என்ற பெருமையையும் ஸ்விஃப்ட் பெறுகிறது. புதிய ஜெனரேஷன் காரில் பல மேற்கத்திய பாணியையும் இணைத்துள்ளதால், நீங்கள் அதிநவீன காரில் பயணிக்கலாம். எனினும், குறை என்று பார்க்கும் போது, இதன் இஞ்ஜின் விவரங்கள் நெருடலாகவே உள்ளன. அது போலவே, இந்திய சந்தையில் உள்ள ஏனைய மாடல்களில் உள்ள ஆடம்பர வசதிகள் எதுவும் இதில் இடம் பெறாததால், ஒரு சிலர் இதை வாங்க யோசிக்கலாம். எங்கள் கருத்துப் படி, அனுதினமும் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குச் செல்லவும், அங்கிருந்து திரும்பி வரவும் ஒரு சிறந்த வாகனம் வேண்டும் என்று விரும்பினால், 2017 ஸ்விஃப்ட் உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும். ஆனால், உங்களது பயணத்தில் எக்கச்சக்கமான ஆடம்பர வசதிகள் மற்றும் சொகுசான பயண அனுபவம் வேண்டும் என்றால், அதை வாங்குவதற்கான பண வசதி உங்களிடம் இருக்கிறது என்றால், நீங்கள் உங்கள் தேடலை ஸ்விஃப்ட்டுடன் நிறுத்தி விடாமல், மேலும் தொடரலாம்.

Image 17