மாருதி ரிட்ஸ்

` 4.5 - 6.9 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 


சிறப்பம்சங்கள்:


ஏப்ரல் 17, 2015: இந்த ஆண்டான 2015-ல், மாருதி சுஸுகி ரிட்ஸின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இந்த வாகனத்தின் 34,500 யூனிட்டுகளை 2014-15-ம் நிதியாண்டில் மாருதி நிறுவனம் விற்பனை செய்தது, ஆனால் மற்ற பிரபல மாடல்கள் இந்த பிராண்டிற்காக சாதித்திருப்பதைவிட இந்த விற்பனை அளவு மிகவும் குறைவாகும். வாகனங்களின் வரிசையிலிருந்து இந்த மாடலை நீக்கும் முடிவானது, வளர்ச்சிக்கு குறைவாக உள்ள YRA-க்கு வழியை ஏற்படுத்தும். முன்னதாக, இந்நிறுவனம், தனது உயரமான வாகனமான ஹாட்ச் ரிட்ஸின் வரம்புக்குட்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தி, மேலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பதற்காக அதற்கு ரிட்ஸ் எலேட் என்று பெயர் சூட்டியது, அது மட்டுமின்றி, அதன் விலையில் ரூ. 65,000 தள்ளுபடியையும் வழங்கியது.

தொகுப்பு:


மாருதி இந்தியா, இந்திய வாகனத் தொழில்துறையில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினராலும் வாங்க முடிகின்ற மிகச் சிறந்த கார்களை வழங்குவது என்று வரும்போது, எப்போதுமே பொது மனிதனின் சிறந்த நண்பனாக இருந்து வருகிறது. இந்நிறுவனம் மேற்கொண்ட மற்றொரு மிகப் பெரிய முயற்சி, ஒரு ஹாட்ச்பேக்கில் இயன்றவரை அனைத்து வசதிகளையும் சேர்க்கின்ற தனித்துவமான கலவையை உருவாக்குவதாகும், இதனை அது வெற்றிகரமாக நிறைவேற்றி, அதனை மாருதி ரிட்ஸ் மாடல் வாகனங்களில் வழங்கியுள்ளது. இந்த ஹாட்ச்பேக் கொண்டுள்ள அனைத்து நன்மைகளையும் விளக்குவதற்கு வார்த்தைகள் போதாது. ஒரு முறை எட்டிப் பார்த்தாலே போதும், அதன் உட்புறங்கள் மனதைக் கொள்ளை கொண்டுவிடும். இதில், இரட்டைச் சாயல் கொண்ட வண்ண ஸ்கீமில், பிரமிப்பூட்டும் தோற்றத்துடன் வித்தியாசமான கவர்ச்சியுள்ள அழகான இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இது கொண்டுள்ள ஒரு புதுமையான முகப்பு வடிவம், வாகனத்திற்கு ஒரு தனித்தன்மை வாய்ந்த பாணியைத் தருவதுடன், இவ்வகையில் உள்ள மற்ற கார்களை தோற்கடிக்கும் பிரமாதமான தோற்றத்தையும் அளிக்கிறது. நுட்பம் முழுவதும் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் வண்ணம் பாதுகாப்பு அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹாட்ச்பேக்கில் பொருத்தப்பட்டுள்ள ஆற்றல்மிக்க பிரேக் அமைப்புடன், ஒரு மின்னணுசார் பிரேக்-ஃபோர்ஸ் விநியோக அமைப்புடன் சேர்ந்து வேலை செய்கின்ற ஓர் ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பும் உள்ளது, இது வாகனத்தின் மீது ஓட்டுனருக்கு அதிகக் கட்டுப்பாடு இருப்பதற்கு உதவுகிறது. புதிய முதல்தர SRS காற்றுப்பைகள், ஸ்டியரிங் வீல் அல்லது ஜன்னல்களுக்கு ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள எந்தவொரு மோதலுக்கு எதிராகவும், ஓட்டுனரையும், துணை ஓட்டுனரையும் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வசதி என்று வரும்போது, ஏறக்குறைய அனைத்து அம்சங்களுமே நெகிழ்தன்மை கொண்டவையாக இருக்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 236 லிட்டர் பூட் இடவசதியானது, 60:40 என பிரிக்கப்பட்டுள்ள பின்புற இருக்கை மூலம் மேலும் அதிகரித்துக் கொள்ளும் சாத்தியத்தை உடையதாகும். இதை நீங்கள் மடித்துவிட்டு, மேலும் பல பொருட்களை அங்கு வைத்துக் கொள்ளலாம். இந்த ஹாட்ச்பேக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஏராளமான அறிவிப்புகளைக் கொண்ட ஒரு புதிய பல்தகவல் காட்சித்திரை உள்ளது. USB இடைமுகத்துடன், நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட ஒரு புதிய ஆடியோ சிஸ்டம் உள்ளது. மிகவும் பராட்டப்பட்ட இந்த வாகனத்தை பல இடங்களிலும் தோன்றச் செய்வதற்கு, இந்த ஹாட்ச்சை வித்தியாசமான முறையில் அலங்கரிப்பதற்காக, வழக்கமான பல அம்சங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றாக இருப்பது, தான் அமைக்கப்பட்டுள்ள குரோம் அடிப்படையிலான ஃபினிஷிங்குடன், கேபினின் மையத்தில் அமைந்துள்ள பகல் மற்றும் இரவு பின்புறம் பார்க்கும் கண்ணாடிகூட பிரமாதமான தோற்றத்தைப் பெற்றுள்ளது. ஓட்டுனருக்கு மிகவும் வசதியாக இருக்கும் வகையில், ஸ்டியரில் வீலில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ கட்டுப்பாடுகள் போன்ற அம்சங்களால், வசதிகள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, பாதுகாப்பு நிர்ணயங்களை உயர்ந்த நிலையில் வைப்பதற்கு, சாவியில்லா நுழைவும்கூட உதவுகிறது. இந்த ஹாட்ச்பேக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாதுர்யமான இடவசதிகள், இதில் வழங்கப்பட்டுள்ள சேமிப்பிட அளவை மேலும் அதிகரிக்கின்றன. மேலும், கடைசியான, ஆனால் முக்கியமான ஒன்றாக இருப்பது, அதன் டீசல் பதிப்புகள் லிட்டருக்கு 23.2 கிமீ சிறந்த மைலேஜ் தருவதாகும், இது அன்றாடம் பயணம் செய்பவர்களுக்கு ஒரும். வரப்பிரசாதமாக அமைகிறது. இது ஒரு வழக்கமான வாரண்டியையும் கொண்டுள்ளது, இதனை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் கிடைக்கும் விரிவுபடுத்தப்பட்ட வாரண்டி திட்டங்களின் கீழ் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

மைலேஜ் மற்றும் எரிபொருள் சிக்கனம்:


ஓர் ஒருங்கிணைந்த பன்முனை இஞ்செக்ஷன் எரிபொருள் விநியோக அமைப்பு ஒன்றின் மூலம் இதன் பெட்ரோல் மில், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு சுமார் 18.5 கிமீ மைலேஜும், நகர சாலைகளில் லிட்டருக்கு 14.7 கிமீ மைலேஜும், தருகின்ற திறன் கொண்டது. தானியங்கு பதிப்பு பெரிய சாலைகளில் லிட்டருக்கு 17.16 கிமீ மைலேஜ் மற்றும் நகரத்தில் லிட்டருக்கு 13 கிமீ மைலேஜ் மட்டுமே தருகிறது. டீசல் வாகனங்களில், ஒரு பொது ரெயில் அடிப்படையிலான நேரடி எரிபொருள் இன்ஜெக்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இது, நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு அதிகபட்சமாக 23.2 கிமீ மைலேஜும், நகர சாலைகளில் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜும், தருகின்ற திறன் கொண்டது.

ஆற்றல்:


பெட்ரோல் மாடல்கள் 4000 rpm-ல் 114Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 6000 rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 85.80bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளன. அதே சமயம், அதன் டீசல் மோட்டார், 2000 rpm-ல் 190Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 4000 rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 73.97bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளது.

அக்ஸலரேஷன் மற்றும் பிக் அப்:


இநத ஹாட்ச்பேக், உயர்ந்தபட்ச வேகமான மணிக்கு 175 கிமீ அளவை எட்டக்கூடியது மற்றும் நின்ற நிலையிலிருந்து சுமார் 13.3 நொடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்திற்கு உயரக்கூடியது. அதே நேரத்தில், இதன் டீசல் மாடல் உயர்ந்தபட்ச வேகமான மணிக்கு 155 கிமீ அளவுக்கு உயரக்கூடியது மற்றும் வெறும் 14.2 நொடிகளில் பூஜ்யத்திலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டக்கூடியது.

வெளிப்புறம்:


தனித்துவமான உயரமான பாடி வடிவமைப்பை வழங்கியிருப்பதன் மூலம், உயரமான நபர்களை உள்ளடக்குவதை இலக்காகக் கொண்டு இதன் முழு வடிவத்தையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. பக்கவாட்டிலுள்ள வார்ப்புகள், பக்கவாட்டிலிருந்து வரக்கூடிய ஏதேனும் குறுக்கீடுகளிலிருந்து பாதுகாக்கின்றன. பாடி நிறத்திலேயே உள்ள வெளிப்புற கதவுக் கைப்பிடிகள், ஒட்டுமொத்த அலங்காரங்களுடன் வெகுவாகப் பெருந்துகின்றன. மின்சார் முறையில் சரிசெய்யக்கூடிய வெளிப்புறத்தில் அமைந்த பின்புறம் பார்க்கின்ற கண்ணாடிகள் உள்ளன. கதவின் இருபக்கங்களிலும் உள்ள கண்ணாடிகளை கைமுறை ரிமோட்டால் கட்டுப்படுத்த முடியும். அதன்பின், முன்புறம் பல் எதிரொளிப்பு கொண்ட தலைவிளக்கு ஒன்றுள்ளது. கூரையில் ஒரு ஆன்டெனா பொருத்தப்பட்டுள்ளது. பனிமூட்டமுள்ள பருவநிலைகளில் பயன் தரும் வகையில், பின்புற வின்ட்ஸ்கிரீனில் ஒரு பனிநீக்கி செயல்பாடு பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, பின்புற கண்ணாடியில் ஒரு வைப்பரும், வாஷரும் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறம் கடைசியிலுள்ள ஸ்பாயிலர், பின்புறத் தோற்றத்தை வெகுவாக மேம்படுத்துகிறது. உயர்ரக மாடல், அல்லாய் சக்கரங்களுடன் அழகாகவும், நவநாகரீகமாகவும் தோற்றமளிக்கிறது.

வெளிப்புற அளவீடுகள்:


இதன் ஒட்டுமொத்த நீளம் 3775மிமீ, அகலம் 1680மிமீ மற்றும் நிற்கும் உயரம் 162மிமீ ஆகும். வீல்பேஸ் 2360மிமீ ஆகும், இது சிறப்பானது மற்றும் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டுள்ளது. இது 4.7 மீட்டர் என்ற சிறப்பான திரும்புகின்ற ஆரத்தைக் கொண்டுள்ளது.

உட்புறம்:


பூட் அறையில் மேலும் லக்கேஜை வைப்பதற்கு பின் இருக்கைகளின் 60:40 பிரிவு மிகவும் உதவியாக உள்ளது. ஓட்டுனரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், ஓட்டுனர் பக்கத்து இருக்கையின் உயரத்தை சரிசெய்து கொள்ள முடியும். ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனர் இருக்கைகளுக்குப் பின்னால் பாக்கெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. துணை ஓட்டுனரின் பக்கத்து முன்புற இருக்கைக்கு ஓர் அடிப்புற டிரே வழங்கப்பட்டுள்ளது. பின்புற இருக்கைகள் மட்டுமின்றி முன்புற சீட்டுகளிலும் தலைக் கட்டுப்பாடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், வானொலி டியூனர், ஒரு CD மற்றும் USB-க்கு ஆதரவளிக்கும் ஓர் ஆடியோ அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இதில் நான்கு ஸ்பீக்கர்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கமான பகல் மற்றும் இரவு நேர உட்புறம் பொருத்தப்பட்ட பின்புறம் பாக்கும் கண்ணாடி ஒரு குரோம் கட்டமைப்பில் பொருத்தப்பட்டுள்ளது. விளக்கு அணைத்தல், சாவியை எடுத்தல், இருக்கை பெல்ட் நினைவூட்டிகள் மற்றும் கதவை மூடும் எச்சரிக்கை விளக்கு ஆகியவையும் உள்ளன. அதே நேரத்தில், பல தகவல் காட்சித் திரையானது, எரிபொருள் பயன்பாடு மற்றும் டாக்கோமீட்டர் போன்ற மற்ற அறிவிப்புகளையும் கொண்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் பயணியின் பக்கத்திலுள்ள சாதன பேனலில் பாக்கெட்டுகள் உள்ளன மற்றும் இவை டேஷ்போர்டில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏராளமான பொருட்களை உள்ளடக்கும் வசதி கொண்டவை. அதன்பின், கான்சோலில் உள்ள கப் ஹோல்டர்கள் மற்றும் கிளவ் பாக்ஸும் இக்காரின் கொள்திறனை அதிகரிக்கின்றன. இவ்வனைத்து உட்புற அம்சங்களும், இருண்ட சாம்பல் மற்றும் வெளிர் சாம்பல் அல்லது இருண்ட சாம்பல் மற்றும் சிவப்பு என் மாடலுக்கு தக்கவாறு இரட்டை சாயல் உட்புற வண்ணக் கலவையைக் கொண்டவையாகும்.

உட்புற வசதி:


சொந்தமாக்கிக் கொள்வதற்கு கச்சிதமான வசதி கொண்ட ஒரு வாகனமாக இதனை ஆக்குகின்ற அம்சங்கள் அனைத்தையும் இந்த ஹாட்ச்பேக் கொண்டுள்ளது. முக்கியமான சொகுசு அம்சமாக இருப்பது, டிஜிட்டல காட்சித் திரை மற்றும் ஒலி எச்சரிக்கைகளுடன்கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சர்களாகும். அதன்பின், வெப்பநிலையை சரிசெய்வதற்காக, கேபினில் சிறப்பாக பொருத்தப்பட்ட வென்ட்களுடன்கூடிய ஒரு குளிர்சாதன அமைப்பும் உள்ளது. மேலும், ஒரு மியூசிக் சிஸ்டமும் உள்ளது, இதன் கட்டுப்பாடுகள், ஸ்டியரிங் வீல் மீது ஏற்றப்பட்டுள்ளன மற்றும் உயர்ரக மாடல்களில் இது CD பிளேயர், ஸ்பீக்கர்கள் மற்றும் வானொலி டியூனருக்கும்கூட ஆதரவளிக்கிறது. மேலும் உயர்ரக மாடல்களில், வசதியான கௌச் போன்ற இருக்கைகள் சரிசெய்யக்கூடிய தலைக் கட்டுப்பாடுகளுடனும், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை சரிசெய்யக்கூடிய வசதியுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. முன்புற இருக்கைக்கான பின்புற பாக்கெட்டுகள், ஓர் அடிப்புற டிரே, கான்சோலில் கப் ஹோல்டர்கள், ஒரு கிளவ் பாக்ஸ் மற்றும் முன்புற கதவுகளிலுள்ள ஒரு கதவு பாக்கெட் ஆகியவை அதன் பொருட்களை சேமித்து வைக்கும் திறனுக்கு பங்களிக்கின்றன. கூடுதலாக, ஓட்டுனரின் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கு ஒரு துணை மின்துளையும் உள்ளது. சாவியின்றி உள்நுழைதல் மற்றும் பகல் மற்றும் இரவு நேர உட்புற பொருத்தப்பட்ட பின்பக்கம் பார்க்கிற கண்ணாடி ஆகியவை நிலையான அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுனர் மற்றும் பயணி ஆகிய இருவரின் பக்கத்திலும் உள்ள சூரிய ஒளி வைஸர்களில் வானிட்டி கண்ணாடிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

உட்புற அளவீடுகள்:


இதில், 43 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஓர் எரிபொருள் டேங்க் உள்ளது. 236 லிட்டர் கொள்திறனுடன் பூட் இடவசதி நன்றாகவே உள்ளது, மேலும் பின்புற இருக்கையை மடக்கிவிடுவதன் மூலம் இதை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். உயர்ந்த தனித்துவமான வடிவத்துடன், தலைக்கான நல்ல இடவசதியுடன், இது உயரமான பயணிகளுக்கும்கூட சௌகரியத்தை அளிப்பதுடன், ஐந்து நபர்களுக்கு வசதியாக இடமளிக்கக்கூடிய ஒரு விசாலமான கேபினையும் கொண்டுள்ளது.

எஞ்சின் மற்றும் செயல்திறன்:


இந்தக் கார் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு பதிப்புகளிலும் வழங்கப்படுகிறது மற்றும் BS-IV மாசு வெளிப்பாட்டு விதிமுறைகளுக்கேற்ப அமைந்துள்ளது. இதில் சுமார் 1248சிசி இடமாற்றத் திறன் கொண்ட நான்கு சிலிண்டர்களும், மொத்தம் பதினாறு வால்வுகளும் இடம்பெற்ற ஒரு 1.3-லிட்டர், டீசல் மில் பொருத்தப்பட்டுள்ளது. இதில், உள்ளன. இந்த மோட்டார் 2000rpm-ல் 190Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 4000rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, சுமார் 73.97bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டது. இதன் 1.2 லிட்டர் K- சீரீஸ் பெட்ரோல் மோட்டாரில் 1197சிசி இடமாற்றத் திறன் கொண்ட நான்கு சிலிண்டர்களும், பதினாறு வால்வுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த மில், 4000rpm-ல் 114Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 6000rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, சுமார் 85.80bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டது.

ஸ்டீரியோ மற்றும் துணைப்பொருட்கள்:


இவ்வாகனத்தில் ஒரு மேம்பட்ட மியூசிக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இதில் USB ஆதரவளிக்கின்ற ஓர் ஆடியோ அமைப்பும் அடங்கும். ஆடியோ கட்டுப்பாடுகள் ஸ்டியரிங் வீல் மீது ஏற்றப்பட்டிருப்பது, பிளேயர்களை சுலபமாகக் கட்டுப்படுத்த உதவும். இந்த ஆடியோ அமைப்பு, CD-க்கு ஆதரவளிப்பதுடன், வானொலி வசதியையும் கொண்டுள்ளது. கேபினில் நான்கு ஸபீக்கர்கள் கொண்ட தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு முன்புறமும், மற்ற இரண்டு பின்புற கேபினிலும் உள்ளன. இந்த வாகனத்தில் கூடுதலாக சேர்க்கக்கூடிய துணைப் பொருட்கள், கேளிக்கை பிரிவில் பொருத்தப்படுகின்ற ட்வீட்டர், ஊஃபர்கள் மற்றும் ஆம்ப்ளிஃபயர்கள் ஆகும். மேலும், ப்ளூடூத் இல்லாத வாகனங்களில் அதை சேர்த்துக் கொள்ள முடியும். சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பதற்காக, கதவு வைஸர்களையும், ஈரமான சாலைகளிலிருந்து பாதுகாப்பு பெற மட்கார்டுகளையும் பொருத்திக் கொள்ளலாம்.

சக்கரங்கள்:


உயர்ரக வாகனங்களில், 185/70 R14 அளவு கொண்ட நல்ல தரமான டியூபில்லாத ரேடியல் டயர்களால் முழுமையாக மூடப்பட்ட, 14 அங்குல அளவுள்ள அல்லாய் சக்கரங்களின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது அதே நேரத்தில் நுழைவு நிலை மற்றும் நடுத்தர மாடல்களில் 165/80 R14 அளவு கொண்ட டியூபில்லாத ரேடியல் டயர்களால் முழுமையாக மூடப்பட்ட, 14 அங்குல அளவுள்ள, ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஒரு மாற்று சக்கரம் வழங்கப்பட்டு, இது பூட் அறையில் மற்ற அவசியமான கருவிகளின் தொகுப்புடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.

பிரேக் போடுதல் மற்றும் கையாளுதல்:


மின்னணுசார் பிரேக்-ஃபோர்ஸ் விநியோக அமைப்புடன் இணைந்த ஓர் ஆன்டி லாக் பிரேக்கிங் முறையுடன், பாதுகாப்பு அம்சம் நன்றாகக் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிரேக் அமைப்பு பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாட்டுடன்கூடிய ஓட்டுதலை உறுதி செய்கிறது. இதன் முன்புற சக்கரங்களில் காற்றோட்டமுள்ள டிஸ்க் பிரேக்குகளும், பின்புற சக்கரங்களில் டிரம் பிரேக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, அதன் முன்புற ஆக்சிலில் மெக்ஃபெர்ஸன் ஸ்டிரட்டும், பின்புற ஆக்சிலில் காயில் ஸ்பரிங்குகளுடன்கூடிய ஒரு டார்ஸியன் பீமும் பொருத்தப்பட்டுள்ளது. பவரால் இயங்குகின்ற, சாய்வை சரிசெய்யக்கூடிய ஒரு ஸ்டியரிங் அமைப்பு இக்காரில் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த குறைந்தபட்ச திரும்பும் ஆரமான 4.7 மீட்டரைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:


இவ்வாகன தயாரிப்பின் உற்பத்தியில் மிகச் சிறந்த அம்சமாக உள்ளது, இக்காரில் பொருத்தப்பட்டுள்ள குழந்தை பாதுகாப்பு பூட்டமைப்பாகும், இது அங்கீகாரமற்ற முறையில் வெளியேறுவதைத் தடுக்கிறது. இதில் மேலும் ஒரு சாதுர்யமான iCATS என்றழைக்கப்படும் ஒரு திருட்டுத் தடுப்பு அமைப்பு உள்ளது, இது எந்தவொரு திருடப்படுகின்ற வாய்ப்பிலிருந்தும் வாகனத்தைக் காக்கிறது. பின்புறமுள்ள பயணி பாதுகாப்பு அமைப்பில், மும்முனை அவசரக்கால பூட்டு ரிட்ராக்டர் மட்டுமின்றி, ஒரு தொடை பெல்ட்டும் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில், முன்புறமுள்ள இருக்கை பெல்ட்டுகள், தோளில் சரிசெய்யக்கூடியவை. இந்தக் காருக்கும், ஏற்பட வாய்ப்புள்ள இடர்களுக்கும் இடையே சுவர்போல நிற்கின்ற மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதிலுள்ள மின்னணுசார் பிரேக்-ஃபோர்ஸ் விநியோக அமைப்புடன் சேர்ந்து வேலை செய்கின்ற ஓர் ஆன்டி லாக் பிரேக்கிங் முறையைக் கொண்ட, ஓர் ஆற்றல்மிக்க பிரேக் அமைப்பாகும். உயர் ரக வாகனங்களில், ஓட்டுனருக்கு மட்டுமின்றி சக பயணிக்கும் துணைக் கட்டுப்பாட்டு அமைப்பின் காற்றுப்பைகள் வழங்கப்படுகின்றன. உயரத்தில் அமைக்கப்பட்ட நிறுத்த விளக்கு, இந்த வாகனம் இருப்பதை நீண்ட தூரத்திலேயே மற்ற வாகனங்களுக்கு எச்சரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இரட்டை ஹாரன், அது உருவாக்கும் ஒலி மூலம் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கதவு மூடும் எச்சரிக்கை விளக்கும், ஓட்டுனர் இருக்கை பெல்ட் நினைவூட்டலும்கூட வழங்கப்படுகின்றன.

நேர்மறை அம்சங்கள்:


1. மனதைக் கவரும் தோற்றத்தைக் கொண்டுள்ளது.
2. டீசல் வாகனத்தின் மைலேஜ் நன்றாக உள்ளது.
3. கேபின் விசாலமாக உள்ளது.
4. ஆற்றல்மிக்க பிரேக் அமைப்பு.
5. ஏராளமான சொகுசு அம்சங்கள் உள்ளன.

எதிர்மறை அம்சங்கள்:


1. பாதுகாப்புத் தேவைகள் இன்னும் நன்றாக கவனிக்கப்பட வேண்டும்.
2. மிகச் சில வசதி அம்சங்களே வழங்கப்பட்டுள்ளன.
3. தானியங்கு பதிப்பில் எரிபொருள் சிக்கனம் போதிய அளவில் இல்லை.
4. விலை நியாயமானதாக இல்லை.
5. பொருட்கள் வைக்குமிடம் (பூட்) மிகக் குறைவாக உள்ளது.