மாருதி எர்டிகா

` 6.1 - 10.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

சிறப்பம்சங்கள்:


டிசம்பர் 17, 2014: 2015 மாருதி எர்டிகா புதுப்பிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது மற்றும் இந்நிறுவனம் இப்புதுப்பித்த MPV-யை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் புதுப்பித்த பதிப்பானது, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்விஃப்ட் ஹாட்ச்சின் ஒத்த அம்சங்களைப் பெறுகின்ற வாய்ப்புள்ளது மற்றும் இதுவும் அதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. விலைகள் அதிகரிக்கக்கூடிய வாயப்புள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பெட்ரோல் மாடலுக்கு ரூபாய் 6.76 லட்சம் மற்றும் CNG மற்றும் டீசல் மாடல்களுக்கு முறையே ரூபாய் 7.34 லட்சம் மற்றும் 8.05 லட்சம் என்ற விலையில் இந்த வாகனத்தின் வரம்புக்குட்பட்ட பதிப்பினை MSIL அறிமுகப்படுத்தியது. இந்த வரம்புக்குட்பட்ட பதிப்பில், நவநாகரீக லிமிடெட் எடிஷன் பாடி அலங்காரங்களும், சித்திரங்களும், பின்புற ஸ்பாயிலரும் இடம்பெற்றிருந்ததுடன், இதற்கு புதிய வர்ண சாயலான பேர்ல் பிளேஸ் ப்ளூ அளிக்கப்பட்டிருந்தது. உட்புறத்தில். சாதன பேனல் மீது மர டிரிம், டிஜிட்டல் காட்சித்திரையுடன்கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சர் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன. இந்த வரம்புக்குட்பட்ட பதிப்பின் எஞ்சின் அம்சங்கள், தற்போதுள்ள மாடல்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.

தொகுப்பு:


சந்தையின் அனைத்துப் பிரிவுகளிலும் தனது நிலையான வாகனங்களுக்காக MSIL புகழ் பெற்றுள்ளது. அதற்கு குறிப்பாக இந்தியச சந்தைகளில் ஒரு பிரமாண்டமான வாடிக்கையாளர் அடித்தளம் உள்ளது. நடப்பு நுகர்வோர் விரும்பும் அனைத்து வகையான தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் தயாராக தன்வசம் ஏராளமான புதிய தயாரிப்புகளை அது வைத்துள்ளது. அத்தகைய ஒரு முயற்சிதான் மாருதி எர்டிகா, வாங்குவோருக்கு தரம் மற்றும் செயல்திறனின் ஒரு கச்சிதமான கலவையை வழங்கும் பொருட்டு, இவ்வாகனம் மிகுந்த கவனம் மற்றும் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை, பெட்ரோல், டீசல் மட்டுமின்றி, CNG பதிப்புகளிலும் வழங்கப்படுகிறது. அனைத்து மாடல்களிலும் மிகச்சிறந்த அம்சங்கள் ஏராளமாக வழங்கப்பட்டிருப்பது, தோற்றம், பாதுகாப்பு மற்றும் வசதி ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் இவ்வாகனத்தைத் தனித்துத் தெரியும்படி செய்கிறது. தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக, இவ்வரிசை ஏழு வண்ணங்களில் வழங்கப்படுகிறது, மேலும் ஒவ்வொரு வண்ணமும் மாடலுடன் கச்சிதமாகப் பெருந்தி, அம்மாடலுக்கு பிரமாதமான தோற்றத்தைத் தருகிறது. இந்நிறுவன மாடல்களின் விற்பனைக்குப்பின் சேவையைப் பற்றி அனைவரும் அறிவார்கள், மேலும் வாடிக்கையாளரைக் கவர்ந்திழுக்கின்ற ஓர் அம்சமாகவும் இது அமையும். நடப்பு சந்தைகளில், வாகனங்களின் இப்பிரிவில் உள்ள மற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது, மைலேஜும் சிறப்பாகவே உள்ளது. சஸ்பென்ஷன் ஆற்றல்மிக்கது மற்றும் பிரேக்கிங் பிரிவில், ABS மற்றும் EBD போன்ற அவசியமான அனைத்து அமைப்புகளும் உள்ளன. இது ஓர் ஏழு இருக்கைகள் கொண்ட வாகனமாகும், மேலும் தனது சிறந்த வீல்பேஸ் காரணமாக பயணிகள் அனைவரையும் நல்ல இடவசதியுடன், சௌகரியமாக வைக்கிறது. தலைத்தாங்கிகள் மற்றும் இருக்கை பெல்ட்டுகளுடன்கூடிய இருக்கைகளுக்கு உயரத்தை சரிசெய்கின்ற வசதி உள்ளது. உட்புறம் பொருட்களை வைப்பதற்கு கப் ஹோல்டர்கள் மற்றும் பின்புற பாக்கெட்டுகள் உள்ளன. மிகப் பெரிய பூட் இடம் வழங்கப்படுகிறது, இது இவ்வாகனத்தில் நீண்ட பயணம் செய்யும்போது மிகப் பெரிய நன்மையாக அமையும். நாடு முழுவதும் ஏராளமான சேவை அங்காடிகள் பரவலாக உள்ளது இதன் பயனாளர்களுக்கு மிகுந்த நன்மையைத் தருகிறது. பாதுகாப்பு என்று வரும்போது, இம்மொபிலைஸர், காற்றுப்பைகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலியமைப்பு போன்ற அமசங்களும் உள்ளன. இத்தகைய பல மனம் கவரும் அம்சங்களுடன், இவ்வாகனம் தனது போட்டியை சிரமமின்றி எதிர்கொள்கிறது.

மைலேஜ் மற்றும் எரிபொருள் சிக்கனம்:


இவ்வரிசை பெட்ரோல், டீசல் மற்றும் CNG பதிப்புகளில் கிடைக்கிறது. டீசல் வாகனங்களில், ஒரு பொது ரெயில் அடிப்படையிலான நேரடி எரிபொருள் இன்ஜெக்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது, நகர சாலைகளில் லிட்டருக்கு 17.2 கிமீ மைலேஜும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு சுமார் 20.77 கிமீ மைலேஜும், தருகிறது. பெட்ரோல் வாகனங்களில் பன்முனை இஞ்செக்ஷன் எரிபொருள் விநியோக அமைப்பு ஒன்றுள்ளது. இது, நகர சாலைகளில் லிட்டருக்கு 12.3 கிமீ மைலேஜும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு சுமார் 16.2 கிமீ மைலேஜும் தருகின்ற திறன் கொண்டது. CNG மாடல்கள் கிலோவுக்கு 22.8 கிமீ என்ற எரிபொருள் சிக்கனத்தைக் கொண்டிருப்பது சிறப்பான ஒன்றாகும்.

ஆற்றல்:


பெட்ரோல் மாடல்களில் நான்கு சிலிண்டர்களும், பதினாறு வால்வுகளும் கொண்ட ஒரு K-சீரீஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 4000 rpm-ல் 130Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 6000 rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 93.7bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. CNG மாடல்களிலும் அதே K-சீரீஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதனால் 80.9bhp ஆற்றலும், 110Nm முறுக்குத்திறனையும் உருவாக்க முடியும். டீசல் வாகனங்களில் நான்கு சிலிண்டர்களும், பதினாறு வால்வுகளும் கொண்ட DDiS எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், 1750 rpm-ல் சுமார் 200Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 4000 rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 88.8bhp-ஐ உருவாக்க முடியும். CNG மாடல்களிலும் அதே K-சீரீஸ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

அக்ஸலரேஷன் மற்றும் பிக் அப்:


பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில், ஓர் ஆற்றல்மிக்க ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உள்ளது. பெட்ரோல் வாகனங்கள் வெறும் 14 நொடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டுகின்ற ஆற்றல் பெற்றவை மற்றும் இவற்றால் உச்ச வேகமான மணிக்கு 155 கிமீயை எட்டமுடியும். சேல் வாகனங்களால் நின்ற நிலையிலிருந்து 15 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். இதனால் அதிகபட்ச வேகமான மணிக்கு 160 கிமீயை எட்டமுடியும். அதே நேரத்தில், CNG மாடல்களால் உச்ச வேகமான மணிக்கு 150 கிமீயை எட்டமுடிவதுடன், 16 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்ட முடியும்.

வெளிப்புறம்:


பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைக்கின்ற அளவுக்கு இந்த MPV சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தனை சீக்கிரத்தில் மெருகு மங்கிவிடாத, பாடியின் பளபளப்பு மற்றும் மினுமினுப்பில் உயர்ந்த தரத்தைக் கொண்ட மிகச்சிறந்த பாடி பெயின்ட் இதற்குப் பூசப்பட்டுள்ளது. இவ்வாகனம், மனம் கவரும் ஏழுவிதமான வண்ணங்களில் வழங்கப்படுகிறது. முன்புறம் ஒரு ரேடியேட்டர் கிரில் உள்ளது, இது அகலமாகவும், கருப்பு நிறத்தில் கிடைநிலை ஸ்லாட்களையும் கொண்டுள்ளது. இந்த ரேடியேட்டர் கிரில்லில், சுஸுகியின் சின்னம் கொண்ட வில்லை பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் கொண்ட ஒரு மிகப் பெரிய தலைவிளக்குத் தொகுதி, பம்பரின் இரு பக்கங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இவற்றில் திரும்புதலுக்கான இன்டிகேட்டர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. காற்றணையும மிகப் பெரிதாக உள்ளதால், எஞ்சினைக் குளிர்விப்பதற்கு அது மிகவும் உதவுகிறது. முன்புற பம்பர், பாடி வண்ணத்திலேயே அமைக்கப்பட்டிருப்பது, அதற்கு ஓர் உயர்ந்த தோற்றத்தைத் தருகிறது. நடுத்தர மற்றும் உயர்தர வாகனங்களில் பனிமூட்ட விளக்குகள் பொருத்தப்பட்டு, ஒரு பனிமூட்ட விளக்கு பெஸலும் அதில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் பக்கவாட்டுத் தோற்றம் மிகவும் எழிலானது மற்றும் மனம் கவரும் வகையில் அமைந்துள்ளது. B-பில்லர் கருப்பு வண்ணத்திலிருப்பது, ஜன்னல் பகுதிக்கு நேர்த்தியான வடிவத்தை அளிக்கிறது. வெளிப்புறம் அமைந்த பின்புறம் பார்க்கும் கண்ணாடிகளுடன், கதவுக் கைப்பிடிகளும் பாடி வண்ணமே பூசப்பட்டுள்ளன. இது வாகனம் முழுவதற்கும் ஒரே மாதிரியான சீரான தோற்றத்தைத் தருகிறது. திரும்புதலுக்கான இன்டிகேட்டர்களுடன்கூடிய வெளிப்புறம் அமைந்த பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள், இருபக்கங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. அடிப்படை மற்றும் நடுத்தர வாகனங்களில், ஸ்டீல் சக்கரங்களின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் அதே நேரத்தில், உயர்ரக வாகனங்களில், நவநாகரீக தோற்றம் கொண்ட அல்லாய் சக்கரங்களின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம், உயர் ரக மாடல்களின் தோற்றத்தை மேலும் மேம்படுத்துவதாக அமைகிறது. இதன் பின்புற வின்ட்ஸ்கிரீனில் ஒரு மூன்றாவது பிரேக் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில், எழில்மிகு டெயில்கேட் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது, இது பின்புறத்திலிருந்தும் வாகனத்தின் தோற்றத்தை அழகுறச் செய்கிறது. பூட் மூடியானது குரோம் வடிவங்கள் மற்றும் உரிம பிளேட்டினால் அலங்கரிக்கப்பட்டள்ளது. பின்புற பம்பரில் ரிஃப்ளெக்டரின் தொகுதி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. பின்புற வின்ட்ஸ்கிரீனில், ஒரு பனிநீக்கி மட்டுமின்றி, வைப்பர் மற்றும் வாஷர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அம்சம் உயர் மாடல்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் உயர் ரக வாகனங்களில், முன்புறம் மட்டுமின்றி, பின்புறத்திலும் ஒரு ஜோடி பனிமூட்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்விளக்குகள் ஓட்டுனருக்கு நல்ல பார்வைத் திறனை வழங்குகின்றன. இவ்வாகனங்களில், கூடுதலாக முன் மற்றும் பின் பம்பர்களில் மண் காப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இக்காப்பு மறைப்புகள் பாடி நிறத்திலேயே உள்ளதுடன், அழுக்கு எதுவும் வாகனத்தின் தோற்றத்தைக் கெடுத்துவிடாமல், சுத்தமான தோற்றத்தைப் பராமரிக்க உதவுகின்றன.

வெளிப்புற அளவீடுகள்:


இடவசதிமிக்க விசாலமான உட்புறங்களுக்கு வகை செய்வதற்காக, மிகவும் சிறப்பாக வடிவமக்கப்பட்ட பரிமாணங்கள் இவ்வரிசைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதன் ஒட்டுமொத்த நீளம் சுமார் 4265மிமீ மற்றும் ஒட்டுமொத்த அகலம் 1695மிமீ ஆகும். சிறப்பான சுமார் 1685மிமீ உயரத்துடன் அது மிகப் பெரிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. இவ்வரிசை சுமார் 2740 மிமீ அளவுள்ள மிகப் பெரிய சக்கர இடைவெளிளைக் கொண்டுள்ளது, இது ஒரு நன்மையாகும். அதன் முன்புற டிராக் 1480மிமீ மற்றும் பின்புற டிராக் 1490மிமீ ஆகும். இந்த வாகனத்திற்கு, போதிய அளவு கிரவுன்ட் கிளியரன்ஸான சுமார் 185மிமீ வழங்கப்பட்டுள்ளது.

உட்புறம்:


இவ்வாகனத்தின் மிகப் பெரிய வீல்பேஸ் காரணமாக, இதன் கேபின் மிகுந்த இடவசதி கொண்டது. இதன் உட்புறங்கள் உயர் ரக பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருப்பது, அறையை மிகவும் நேர்த்தியாகத் தோற்றமளிக்கச் செய்கிறது. டேஷ்போர்டு இரட்டைச் சாயலைக் கொண்டிருப்பதால், அது கேபினுக்கு ஒரு வேறுபட்ட தோற்றத்தைத் தருகிறது. அறையின் வெப்பநிலையை ஒழுங்கமைப்பதற்காக, அனைத்து வாகனங்களிலும் ஒரு குளிர்சாதன அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் உயர்ரக மாடல்களில், ஒரு மியூசிக் சிஸ்டமும் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுனருக்கு மிகவும் பயன் தருகின்ற பல அறிவிப்புகளைக் காட்டும் சாதன பேனல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கேபினில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சூழியல் முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், மிகவும் வசதியாக உள்ளன. இருக்கைகளில் தலைத் தாங்கிகள் பொருத்தப்பட்டிருப்பதுடன், அவை சரிசெய்யக்கூடிய வசதியையும் கொண்டுள்ளன. ஏழு பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில், கேபினில் ஏழு இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பின்புற பெஞ்ச் இருக்கை மடக்கக்கூடிய வசதியை உடையதாக இருப்பதால், பொருட்கள் வைக்கும் இடத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஸ்டியரிங் வீல் மூன்று கிளைகளைக் கொண்டது மற்றும் உயர்ரக வாகனத்தில், இதன் மீது ஆடியோ கன்ட்ரோல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாடலில், பின்புற இருக்கைக்கும் கூடுதலாக வென்ட்கள் உள்ளன. சாதன தொகுதியில், கதவு திறந்திருக்கும் நினைவூட்டல், குறைவான எரிபொருள் உபயோகம், வெளிப்புற வெப்பநிலை, டிஜிட்டல் கடிகாரம் மற்றும் ஒரு டாக்கோமீட்டரும் இடம்பெற்றுள்ளன. பாக்கெட்டுகள் மற்றும் கப் ஹோல்டர்களுடன் கேபினுக்குள்ளும் ஏராளமான சேமிப்பிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாதனங்களை சார்ஜ் செய்வதற்குப் பயன்படுத்தும் வகையில் ஒரு துணை மின் துளையும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு சூரியஒளி வைஸர்கள், ஒன்று ஓட்டுனருக்கும், மற்றொன்று சக பயணிக்கும், வழங்கப்பட்டுள்ளன. உள்புற ஒளியமைப்பின் ஒரு பகுதியாக கேபின் விளக்குகளும் நிறைய வழங்கப்பட்டுள்ளன.

உட்புற வசதி:


பயணிகள் அனைவருக்கும் நிறைந்த வசதியைத் தரும் வகையில், இந்த வாகன வரிசையில் ஏராளமான பாராட்டுக்குரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முன்புற பயணிகளுக்காக சூரியஒளி வைஸர்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், பயணி பக்க வைஸரில் கூடுதல் வசதிக்காக ஒரு வானிட்டி கண்ணாடியும் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களிலும், ரிமோட் எரிபொருள் மூடி ஓபனர் வழங்கப்பட்டிருப்பது, ஓட்டுனருக்கு ஒரு பயனுள்ள அம்சமாக அமைந்துள்ளது. ஒரு நிலையான அம்சமாக, கேபினுக்குள் ஒரு பகல் மற்றும் இரவு பின்புறம் பார்க்கின்ற கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. வெளிப்புறத்திலுள்ள பின்புறம் பார்க்கின்ற கண்ணாடிகளை அடிப்படை மாடலில் கையால் இயக்கலாம் மற்றும் இதர மாடல்களில் அவற்றை மின்முறையில் சரிசெய்து கொள்ள முடியும். இந்த வெளிப்புற கண்ணாடிகளில், கூடுதல் வசதிக்காக பக்கவாட்டு திரும்புதலுக்கான இன்டிகேட்டர்கள் உள்ளன. பின்புற கதவைத் திறப்பதற்கு, எல்லா வாகனங்களிலுமே ஒரு ரிமோட் பின்புறக் கதவு ஓபனர் வழங்கப்படுகிறது. அதன்பின், நடுத்தர மற்றும் உயர்ரக வாகனங்களில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள அம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில், அனைத்து கதவுகளுக்கும் பவர் ஜன்னல்கள் இருப்பதும் அடங்கும். இது ஓட்டுனருக்கு மட்டுமின்றி, பயணிகள் அனைவருக்கும்கூட ஒரு வசதியான அம்சமாகும். மேலும், ஓட்டுனர் பக்கத்து ஜன்னலில், ஒரு தானியங்கு இறக்குதலுக்கான விசை உள்ளது. இம்மாடல்களில் இடம்பெற்றுள்ள மையப் பூட்டமைப்பு, மிகப் பெரிய வசதியைத் தருவது மட்டுமின்றி, ஒரு பாதுகாப்பு அம்சமுமாகும். சாவியுடன் உள்ளே நுழையும் மரபுவழி முறைக்கு பதிலாக சாவியில்லா நுழைவு இருப்பது, வாகனத்திற்குள் சுலபமாக நுழைவதற்கு வழிசெய்கிறது. ரிமோட் பின்புறக் கதவு ஓபனர் வழங்கப்பட்டிருப்பது மிகவும் வசதி தருவதாக அமைந்துள்ளது. கூடுதலாக, சௌகரிமாகத் திறக்கும் வகையில் பின் கதவில் ஒரு கைப்பிடியும் உள்ளது. நன்கு அமையப் பெற்ற வென்ட்களை உடைய ஒரு குளிர்சாதன அமைப்பு பொருத்தப்பட்டு, பின்புற இருக்கைக்கும் ஒரு ஜோடி வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. நடுத்தர மற்றும் உயர்ரக கேபின்களில், பொழுதுபோக்கிற்காக ஒரு ஆடியோ அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இது, வானோலி, USB மற்றும் CD பிளேயருக்கு ஆதரவளிக்கிறது. இருக்கைகள் சரிசெய்கின்ற வசதி கொண்டவை, தனிநபர் விருப்பத்திற்கு ஏற்றவாறு வசதிப்படி உயரத்தை சரிசெய்து கொள்ளும் வசதி ஓட்டுனர் இருக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் முன்புறத்திலுள்ள இருக்கைகளுக்கு இருக்கை பெல்ட்டுகள் இருப்பதுடன், இவற்றின் உயரத்தையும் சரிசெய்து கொள்ள முடியும். முன்புற இரண்டு இருக்கைகளிலும் பின் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன, இவற்றில் ஏராளமான பொருட்களை வைக்கலாம். மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளில் தலைப்பிடிப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டிருப்பது, பயணிகள் அனைவருக்கும் மிகவும் வசதியான ஓர் அம்சமாகும். அனைத்து மாடல்களுக்கும் பவர் ஸ்டியரிங் வழங்கப்பட்டிருப்பது, வழக்கமாக ஓட்டுவதற்கு ஓட்டுனர் மேற்கொள்ள வேண்டிய அதிக முயற்சியை வெகுவாகக் குறைக்கிறது. மேலும், மிகவும் பயனுள்ள இன்னொரு அம்சமும் ஓட்டுனருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்டியரிங் வீல் வரிசைக்கு, சாய்வை சரிசெய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்ரக மாடல்கள், ஸ்டியரிங வீலில் அமைக்கப்பட்டுள்ள ஆடியோ கட்டுப்பாடுகளினால் மிகுநத பயனடைகின்றன. இந்த மாடங்களில் இது நிச்சயமாக ஒரு சிறப்பம்சமாகும். எவ்வகையான மின்னணு சாதனத்தையும் சார்ஜ் செய்வதற்கு, கேபினுக்குள் ஒரு மின் துளை உள்ளது. கூடுதலாக, முன்புற கான்சோலில், சாதன பேனலில் ஒரு கப் ஹோல்டர் உள்ளது, இதனை பின்னுக்குத் தள்ளுகின்ற வசதியும் உள்ளது.

உட்புற அளவீடுகள்:


இவ்வாகனத்தின் கேபின், விசாலமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், எதிர்பார்த்த அளவிற்கு எல்லா பயணிகளையும் மிகவும் வசதியாக இதில் இடம்பெறச் செய்ய முடியும். அகலமான வீல்பேஸ் காரணமாக, கால் வைக்கும் இடவசதி நன்றாக உள்ளது. இதனால், உயரமான பயணிகளின் தலைக்கான இடவசதியும், தோளுக்கான இடவசதியும்கூட நன்றாகவே உள்ளன. பிரமாண்டமான 300 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் அறை வழங்கப்பட்டுள்ளது, இது மிகப் பெரியது. பின்புற இருக்கைகளை மடிப்பதன் மூலம் இதனை மேலும் அதிகரித்து, அதிக பேக்கேஜை வைத்துக் கொள்ள முடியும். சுமார் 45 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு கொண்ட ஒரு எரிபொருள் டேங்கும் இதிலுள்ளது.

எஞ்சின் மற்றும் செயல்திறன்:


பெட்ரோல் மாடல் வாகனங்களில் சுமார் 1373சிசி இடமாற்றத் திறன் கொண்ட ஒரு 1.4-லிட்டர், K-சீரீஸ், எஞ்சின் பொருத்தியுள்ளது. இதில், நான்கு சிலிண்டர்களும், பதினாறு வால்வுகளும் உள்ளன. மற்றும் இவை இரட்டை ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வு உள்ளமைவு அடிப்படையிலானவை. இதில் ஒரு பன்முனை இஞ்செக்ஷன் எரிபொருள் விநியோக அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இது லிட்டருக்கு 12.3 முதல் 16.2 கிமீ வரையிலான மைலேஜைத் தருகிறது. இந்த மோட்டார் 4000rpm-ல் 130Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, அதிகபட்ச ஆற்றலான, சுமார் 93.7bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டது. இதன் CNG எஞ்சின், 4000rpm-ல் 110Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 6000rpm-ல் அதிகபட்ச ஆற்றலான 80.9bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டது. டீசல் வாகனங்களில், 1.3-லிட்டர் DDiS மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, 1750rpm-ல் 200Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 4000rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, சுமார் 88.8bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டது. இதில் ஒரு பொது ரெயில் அடிப்படையிலான நேரடி எரிபொருள் இன்ஜெக்ஷன் அமைப்பும், நான்கு சிலிண்டர்களும், பதினாறு வால்வுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் இடமாற்ற அளவு 1248சிசி ஆகும். அனைத்து எஞ்சின்களிலும், ஓர் ஆற்றல்மிக்க ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உள்ளது.

ஸ்டீரியோ மற்றும் துணைப்பொருட்கள்:


இந்த MPV வகையின் அனைத்து மாடல்களிலும், FM/AM பாண்ட் ஆன்டென்னா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், நடுத்தர மற்றும் உயர்தர மாடல்களில், CD பிளேயர் மற்றும் ஆடியோ டியூனருடன்கூடிய ஓர் ஆடியோ அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் கூடுதலாக USB உள்ளீடும் உள்ளது. இந்த மாடல்கள் நான்கு ஸ்பீக்கர்களுடன் வருகின்றன, இவற்றில் இரண்டு முன்புற கேபினிலும், மற்ற இரண்டு பின்புற கேபினிலும் பொருத்தப்பட்டுள்ளன. உயர்ரக வாகனத்தில் இரண்டு ட்வீட்டர்களும் உள்ளன. வாங்குபவர் இந்த வாகனத்தை நாகரீக பாடி அலங்காரஙக்கள், கூரைக் கம்பிகள், ஸ்பாயிலர்கள், தரை வரிப்புகள் மற்றும் பல கூடுதல் துணைப் பொருட்களைக் கொண்டு தனது விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம்.

சக்கரங்கள்:


உயர்தர வாகனங்களில், 15 அங்குல அளவுள்ள அல்லாய் சக்கரங்களின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அடிப்படையான மற்றும் நடுத்தர மாடல்களில் 15 அங்குல அளவுள்ள வலிமை பொருந்திய, ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இவை, எல்லாவிதமான சாலைகளிலும் நல்ல பிடிமானத்தைத் தரும் 185/65 R15 அளவு கொண்ட நல்ல தரமான டியூபில்லாத ரேடியல் டயர்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஒரு மாற்று சக்கரம் வழங்கப்பட்டு, இது பூட் அறையில் மற்ற உதவிக் கருவிகளின் தொகுப்புடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.

பிரேக் போடுதல் மற்றும் கையாளுதல்:


இவ்வகை வாகனங்களில், எல்லாவிதமான சாலைகளிலும் வாகனத்திற்கு நிலைத்ததன்மையை வழங்கக்கூடிய ஓர் ஆற்றல்மிக்க பிரேக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதன் முன்புற ஆக்சிலில் மெக்ஃபெர்ஸன் ஸ்டிரட்டும், பின்புற ஆக்சிலில் ஒரு டார்ஸியன் பீமும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகளின் தொகுதி ஒன்றும், பின்புற சக்கரங்களில் வழக்கமான டிரம் பிரேக்குகளின் தொகுதி ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு மின்னணுசார் பிரேக்-ஃபோர்ஸ் விநியோக அமைப்புடன் சேர்ந்த ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பும், உள்ளது. இந்த ஆற்றல்மிக்க பிரேக் அமைப்பானது, பிரேக்கிற்கு உதவும் ஒரு செயல்பாட்டுடன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டியரிங் வீல் சாய்வைச் சரிசெய்யும் வசதியுடன் 5.2 மீட்டர் குறைந்தபட்ச திரும்புதல் ஆரத்தைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்:


பாதுகாப்பு செயல்பாடுகளைப் பொறுத்த வரை, இவ்வகை வாகனங்கள் நன்கு அமையப் பெற்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்நுட்பங்கள் வாகனத்திற்கு பாதுகாப்பை அளிப்பது மட்டுமின்றி, அதன் பயணிகளுக்கும் நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. வாகனத்தின் பாடி முழுவதும் வலிமை பொருந்திய ஸ்டீலினால் உருவாக்கப்பட்டுள்ளது, மற்றும் பக்கவாட்டு தாங்கும் பீம்கள் மோதல்கள் மற்றும் அதிர்ச்சிகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நடுத்தர மற்றும் உயர்ரக வாகனங்களில், துணைக் கட்டுப்பாடு அடிப்படையிலான காற்றுப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பைகள் ஓட்டுனருக்கு மட்டுமின்றி, சக பயணிக்கும் உள்ளன. மின்னணுசார் பிரேக்-ஃபோர்ஸ் விநியோக அமைப்புடன் சேர்ந்த ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பானது, பிரேக்கிங் நுட்பத்தின் ஒரு கலவையாகும், இது ஓட்டும்போது மேம்பட்ட கட்டுப்பாட்டை வழங்குவதில் மிகவும் ஆற்றல்மிக்கது. டீசல் பதிப்பின் அனைத்து மாடல்களிலும் இந்த அம்சம் உள்ளது. அதே நேரத்தில், பெட்ரோல் பதிப்பின் அடிப்படை மாடலில் இந்த அம்சம் இல்லாதிருந்தாலும், நடுத்தர வகைகளில் இது விருப்பத்தேர்வுக்குட்பட்டு வழங்கப்படுகிறது. மும்முனை அவசரக்கால லாக்ரிட்ராக்டர் செயல்படுத்தப்பட்ட இருக்கை பெல்ட்டுகள், இருக்கைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், பின்புற இரண்டாவது வரிசை இருக்கைகளில் கூடுதலாக ஓர் இருமுனை தொடை பெல்ட்டும் உள்ளது. மேலும், இந்த பெல்ட்டுகளில் ப்ரீடென்ஷனர்களும், விசைக் கட்டுப்பாடுகளும் உள்ளன, இவை உயர்தர வாகனங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. கதவு திறந்திருக்கும் எச்சரிக்கை, குறைந்த எரிபொருள் உபயோகம், இருக்கை பெல்ட் நினைவூட்டல் போன்ற அறிவிப்புகளைக் காட்டும் சாதன பேனல், கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. அனைத்து மாடல்களிலும் ஓர் எஞ்சின் இம்மொபிரலஸர் பொருத்தப்பட்டுள்ளது. வாகனத்திற்குள் அங்கீகாரமற்ற நுழைவு இருப்பதை இது கண்டறியும்போது, எஞ்சினை உறைய வைக்கின்ற திறனை இது கொண்டுள்ளது. திருட்டு சம்பந்தப்பட்ட கவலைகள் பலவற்றையும் தவிர்ப்பதற்கு இச்செயல்பாடு உதவுகிறது. நடுத்தர மற்றும் உயர்தர வாகனங்களில், ஒர பாதுகாப்பு எச்சரிக்கை ஒலியமைப்பு உள்ளது, இது கதவுகள் மற்றும் முன்புறத்துடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உயரத்தில் ஏற்றப்பட்டுள்ள நிறுத்த விளக்கு, வாகனத்தின் பின்புறக் கோடியில் பொருத்தப்பட்டு, இந்த வாகனம் இருப்பதை நீண்ட தூரத்திலேயே மற்ற வாகனங்களுக்கு எச்சரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

நேர்மறை அம்சங்கள்:1. விசாலமான உட்புறம் மிகப் பெரிய வசதியாகும்.
2. பிரேக் ஆதரவுடன்கூடிய ABS மற்றும் EBD ஒரு நன்மையாகும்.
3. ஏழு பிரகாசமான வண்ணங்களில் வழங்கப்படுகிறது.
4. மிகப் பெரிய பூட் இடவசதி உள்ளது.
5. ஏராளமான வசதி அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

எதிர்மறை அம்சங்கள்:1. அடிப்படை மற்றும் நடுத்தர மாடல்களில் அல்லாய் சக்கரங்கள் அளிக்கப்படாதிருத்தல்.
2. நுழைவு நிலை மாடலில் மியூசிக் சிஸ்டம் இல்லை.
3. லெதர் உறைகள் வழங்கப்படலாம்.
4. வெளிப்புறத் தோற்றம் இன்னும் நன்றாக மேம்படுத்தப்படலாம்.
5. எரிபொருள் சிக்கனம் திருப்திகரமாக இல்லை.