மாருதி ஆல்டோ-800

` 2.4 - 3.7 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்மே 18, 2016: மாருதி சுசுகி நிறுவனம், தற்போது சந்தையில் உள்ள அல்டோ 800 மாடலின் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டது. முதல் முறையாக கார் வாங்கும் அநேகமான இந்தியர்களின் விருப்பமாக மாருதி சுசுகி ஆல்டோ 800 திகழ்கிறது. எனினும், சில காலங்களுக்கு முன்பு ஏகபோக பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருந்த ஆல்ட்டோவிற்குப் போட்டியாக பல கார்கள் காலத்தில் இறங்கி உள்ளன. தனது நிலையை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்காகவும், புதிய போட்டிகளை சமாளிப்பதற்காகவும், புதிய ஃபேஸ் லிஃப்ட் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலையை ரூ. 2.49 லட்சங்கள் என்றும், அதிகபட்ச விலையை ரூ. 3.34 லட்சங்கள் என்றும் நிர்ணயித்துள்ளது. இது, முந்தைய மாடலை விட 9 சதவிகிதம் அதிக எரிபொருள் திறனுடன் வருகிறது. மேம்படுத்தப்பட்டுள்ள மாடலின் தோற்றத்தில் இடம்பெறும் முக்கியமான மாற்றம் என்னவென்றால், சற்றே ஒல்லியாக்கப்பட்டுள்ள இதன் கிரில் ஆகும். கிரில் பகுதியின் கீழே இந்நிறுவனத்தின் சின்னம் பொரிக்கப்பட்டுள்ளது. பம்பர் பகுதியில், ஃபாக் லாம்ப்களுக்கு என்று தனியே இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவை நன்றாகப் பொருந்தி வசீகரமாக உள்ளன. கடந்த ஜெனெரேஷன் காரில் இருந்ததை தலைகீழாக மாற்றி அமைத்து, இம்முறை பம்பரின் கீழ் பாதி விசாலமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது, இந்த காரின் கம்பீர தோற்றத்தை அதிகப்படுத்த உதவுகிறது. கம்பீரம் தோற்றத்தில் மட்டுமல்லாது, இது லிட்டருக்கு 24.7 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தந்து, எரிபொருள் சிக்கனத்தையும் அள்ளித் தருகிறது. இதன் CNG எரிபொருள் வெர்ஷனும், இதற்கு முந்தைய மாடலை விட 10 சதவிகிதத்திற்கும் அதிகமான மைலேஜ் தருகிறது, அதாவது தற்போது இது 33.44 kmpl என்ற அளவு மைலேஜ் தரும் என்று இந்நிறுவனம் உறுதியளிக்கிறது. மேலும், இதில் ரிமோட் கீ லெஸ் என்ட்ரி அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட உட்புற இருக்கை விரிப்புகள் போன்ற சிறப்பம்சங்கள், அனைத்து வேரியண்ட்களிலும் இடம்பெறுகின்றன.
மாருதி சுசுகி இந்தியாவின் மார்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பிரிவின் எக்ஸிக்யூடிவ் டைரக்டரான திரு. R. S. கல்சி, "நவீன வசதிகள் மற்றும் இதன் பிரிவிலேயே சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் புதிய ஆல்டோ 800 அறிமுகமாகிறது. புதிய ஸ்டைலான தோற்றம், புதிய உயர்தர உட்புற அமைப்புகள் மற்றும் கூடுதலான 2 புதிய நிறங்கள் ஆகியவை இணைந்து, இதை கவர்ச்சிகரமாக மற்றும் கம்பீரமாக மாற்றுகின்றன. அது மட்டுமல்ல, இதில் மேம்படுத்தப்பட்ட மைலேஜ் மற்றும் மாருதி சுசுகி நிறுவனத்தின் தன்னிகரற்ற சேவை அமைப்பின் உத்தரவாதம், அருமையான செயல்திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றுடன் வருகிறது. இவை அனைத்தும் இணைந்து, இந்தியாவில் உள்ள பணமதிப்பை உணர்ந்த அனைத்து வாடிக்கையாளர்களின் தேர்வாக புதிய ஆல்டோ 800 மாடல் இருக்கும்," என்று கூறினார்.

சிறப்பம்சங்கள்


Table 1 (8)

மாருதி ஆல்டோ 800 விமர்சனம்


கண்ணோட்டம்


முன்னுரை


Image 1 (9)
மாருதி சுசுகி நிறுவனம் தனது பிராண்ட்டை இந்தியாவில் வலுவாக நிறுவுவதற்கு அடித்தளமாக, மாருதி 800 மற்றும் ஆல்டோ ஆகிய மாடல்கள் பெரிதும் உதவின. அதே சமயம் ஸ்விஃப்ட், டிசயர் மற்றும் வேகன் R போன்ற மாடல்கள் இதன் அடித்தளத்திற்கு உறுதியான தூண்களாக செயல்பட்டு, மாபெரும் வெற்றி சரித்திரம் படைக்க இந்நிறுவனத்திற்கு உதவுகின்றன. மாருதியின் முதல் மாடலான 800 -ன் உற்பத்தியை நிறுத்திய பின்னர், இந்நிறுவனம் புத்தம் புதிய ஆல்டோ 800 காரை அறிமுகப்படுத்தியது. மாருதி 800 மாடலின் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைக்காமல், அதை ஆல்டோ 800 தொடர்கதையாக மாற்றியது. எனினும், இந்திய சந்தையில் சில காலமாக ஹுண்டாய் இயோன் பிரபலமாக உள்ளது. மேலும், தற்போது அறிமுகமாகி உள்ள ரினால்ட் கிவிட் மாடலும், என்ட்ரி லெவல் ஹாட்ச் பேக் பிரிவில், தன்னை ஆழமாக வேரூன்ற முயற்சி செய்து வருகிறது. டாட்சன் நிறுவனம், ரெடி-கோ ஹாட்ச்பேக் காரை, மாருதியின் ஆல்டோ 800 மாடலுக்குப் போட்டியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. முன்னணியில் இருந்தாலும், ஆல்டோ 800 மாடலில் கவர்ச்சியான தோற்றம், ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிகள், இதன் போட்டி கார்களில் உள்ளதைப் போல இல்லை என்பதால், ஒரு சில மாற்றங்களை இதன் தோற்றத்தில் ஏற்படுத்தி, புதிய வசீகரமான நிறங்களை அறிமுகப்படுத்தி, மக்களைக் கவர மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்பு ஆல்டோ 800 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இதுவரை குன்றின் மேலிட்ட விளக்கு போல பிரபலமாகவே உள்ளது. 2015- 2016 ஆண்டு மட்டும் 2,63,422 ஆல்டோ கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது ஆல்டோ. மற்றுமொரு ஆச்சர்யமான விவரம் என்னவென்றால், இந்திய சந்தையில் தற்போது உள்ள ஹாட்ச்பேக் கார்களில், 10 வெர்ஷன்கள் கொண்ட ஒரே கார் மாருதி ஆல்டோ ஆகும். 8 பெட்ரோல் வெர்ஷன்கள் மற்றும் 2 CNG வெர்ஷன்கள் கொண்டு கார் வாங்கும் மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்கிறது. CNG ஆப்ஷன் மற்றும் சக்திவாய்ந்த வேரியண்ட், எரிபொருள் சிக்கனம், சிக்கன விலையில் பராமரிப்பு மற்றும் பறந்து விரிந்திருக்கும் மாருதி நிறுவன சர்வீஸ் சென்டர்கள் என பல காரணங்களால் மாருதி நிறுவனம் மீண்டும் வெற்றி பெறுகிறது.
செரூலியன் புளு, மொஜிட்டோ க்ரீன், நியூ பிளேசிங்க் ரெட், நியூ கிரானைட் க்ரே, சில்கி சில்வர் மற்றும் சுபீரியர் ஒயிட் என்ற 6 விதமான நிறங்களில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆல்டோ அறிமுகப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனாலும், இன்றைய தேதி வரை இது இந்தியர்களின் மனதில் என்றுமே தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்து, நிலைத்துள்ளது என்பது இதன் புகழுக்குச் சான்றாகும். புதிய ஆல்டோ, இந்திய சந்தையில் தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறுமா என்பதை இங்கு காண்போம்.

சாதகங்கள்:1. சிக்கனத்தை முக்கிய இலக்காகக் கொண்ட இதன் இஞ்ஜின், சிறந்த எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது.
2. நகர போக்குவரத்தைச் சமாளிக்க சிறந்த கார்; அருமையான பயண அனுபவத்தை தருகிறது
3. மாருதி சுசுகியின் தன்னிகரில்லாத விற்பனை மற்றும் சேவை பிரிவு
4. குறைந்த செலவில் நீங்கள் கார் உரிமையாளராகலாம்

பாதகங்கள்:1. இதன் வடிவமைப்பு, முக்கியமாக தற்போது சந்தையில் பிரபலமாக உள்ள இயோன் மற்றும் கிவிட் போன்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது கவர்ச்சிகரமாக இல்லை,
2. ரினால்ட் கிவிட்டின் உயர்தர மாடலில் உள்ள நவீன டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது.
3. ஒல்லியான மற்றும் இறுக்கமான பின்புற இருக்கைகள். கால்கள் வைப்பதற்கான இட வசதி மற்றும் தோள்பட்டை அளவு ஆகியவை அற்பமாக உள்ளன.
4. மிகக் குறைவான நெடுஞ்சாலை செயல்திறன். கண்டிப்பாக நகரங்களின் உள்ளே மட்டுமே பயன்படுத்த முடியும்.

தனித்துவமான சிறப்பம்சங்கள்1. ஒவ்வொரு வேரியண்ட்டுடன் இணைந்து வரும் ஆப்ஷனல் காற்றுப் பைகள். இது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும்.
2. பயணத்தின் தரம் அற்புதமாக உள்ளது. திடீரென்று வரும் குழிகளினால் தூக்கி எறியப்படுவது போன்ற அதிர்வு ஏற்படுவதில்லை.

கண்ணோட்டம்


Image 2 (9)
2004 –ஆம் ஆண்டில் இருந்து, இந்திய சந்தையில் மிக அதிகமாக விற்பனை ஆகும் கார் என்ற பெருமையை ஆல்டோ பெறுகிறது. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான ஆண்டுகளாக, வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்பது சுலபமான காரியம் இல்லை. தொடர் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போது வெளியாகி உள்ளது. முந்தைய ஆல்டோ 800 மாடலில் பின்பற்றப்பட்ட அதே தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே புதிய ஆல்டோவும் உருவாக்கப்பட்டுள்ளது, எனினும், இது சற்றே வலுவாக உள்ளது. மாருதி நிறுவனத்தினர் ஆல்டோவின் வெற்றி சூத்திரத்தை மாற்றாமல், வடிவமைப்பில் மட்டும் ஒரு சில மாற்றங்களைச் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர். நீளமான காராக இருந்தாலும், இதன் வீல் பேஸ் மாற்றம் அடையாமல் அதே 2369 மிமீ என்ற அளவில் உள்ளது. அதனால்தான், கால் வைப்பதற்கு தேவையான இட வசதி இல்லை. எனினும், புதிய ஆல்டோ எளிமையான தோற்றத்துடன், அடிப்படை தேவைகளை மட்டுமே எதிர்பார்க்கும் மிகப் பெரிய நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் கூட்டத்தைக் கவரத் தயார் நிலையில் உள்ளது.

வெளிப்புறத் தோற்ற அமைப்பு:


Image 3 (9)
புதிய ஆல்டோ 800 மாடல், அனைத்து தரப்பு மக்களையும் கவர வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தனித்துவமான அமைப்பிலும் இல்லாமல், மிகச் சாதாரணமான தோற்றத்துடனும் இல்லாமல் ஒரு நடுநிலை வடிவமைப்பைப் பெற்றுள்ளது. ஒரு சில சின்னஞ்சிறு மாற்றங்களே இடம்பெற்றாலும், அவை ஆல்டோவின் தோற்றத்தை அதிக கம்பீரமாக மாற்றி அமைத்துள்ளன என்பது உண்மை. வேவ்ஃப்ரண்ட் வடிவமைப்பு என்று மாருதி நிறுவனம் குறிப்பிடும் புதிய வடிவமைப்பின் படி, புதிய ஆல்டோவின் வளைவுகள் மற்றும் மடிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய ஆல்டோ 800 மாடலின் முன்புறத் தோற்றம் இரட்டை கிரில் மற்றும் சரிவாக வடிவிலான பம்பர் ஆகியவை நமக்கு பழைய ஃபிகோ மாடலை நினைவு படுத்துகின்றன. இதழ் வடிவத்தில் உள்ள இதன் முன்புற விளக்குகள் சற்றே பின்புறம் சென்று, அழகாகப் பொருந்தியுள்ளன. மடிப்புகள் எதுவும் இல்லாததால், இதன் பம்பர் அதிக அழகுடன் கூடியதாக இல்லாமல் தட்டையாக இருக்கிறது. K10 மாடலைப் போல இல்லாமல், ஆல்டோ 800 மாடலில் ஃபாக் லாம்ப்களோ அல்லது ஃபாக் லாம்ப்பிற்கான தனி இடமோ ஒதுக்கப்படாமல் உள்ளது.
பக்கவாட்டு பகுதியில் பார்க்கும் போது, காரின் முழு நீளத்திற்கு, தெள்ளத்தெளிவாக ஒரு ஷோல்டர் லைன் நீண்டு செல்கிறது. இதன் பொலிவான சக்கர வளைவுகள் இதன் தோற்றத்திற்கு கூடுதலான அழகைச் சேர்க்கின்றன. எனினும், இதன் சிறிய சக்கரங்கள் கார்ட்டூனில் வருவது போல இருந்தாலும், இந்த காருக்கு உயரமான தோற்றத்தைத் தருகின்றன. ஜன்னல் பகுதி அழகாகவும், பெரிதாகவும் உள்ளதால், பக்கவாட்டு தோற்றத்தில், கிட்டத்தட்ட மொத்த இடத்தையும் இதுவே அபகரித்து விடுகிறது. கார் மீது ஏதாவது லேசாக மோதிவிட்டால் ஏற்படும் சிறிய பள்ளம் அல்லது கீறல்களில் இருந்து பாதுகாக்க, மேல்புறத்தில் கருப்பு நிற மொல்டிங்க் செய்யப்பட்டுள்ளது.

Image 4 (8)
பின்புறத்தில், மேல் விதானம் சற்றே தாழ்ந்து வருவதாலும், பக்கவாட்டு மடிப்புகள் (ஷோல்டர் க்ரீஸ்) மேலே செல்வதாலும், பின்புற ஜன்னல் பழைய காரை விட சிறியதாகவே உள்ளது. பின்புறம் இருந்து பார்க்கும் போது, புதிய ஆல்டோ 800 சாதாரணமான தோற்றத்துடனேயே உள்ளது. இதன் சாதாரண தோற்றத்திற்கு, அதிக உயரம் மற்றும் சிறிய டயர்கள் ஆகியவை வித்தியாசமாகவே உள்ளன. காரின் இலகுவான கதவுகளின் மூலம் இலகுவான எடையை நாம் நன்கு உணரலாம், ஏனெனில் அவை உடைந்து விடுவது போல உள்ளன. இதன் ரூஃப் பகுதி விலாவைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பது, காரின் உறுதியான தன்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
புதிய ஆல்டோ 800 சற்றே குறுகிய வடிவமுடைய கார். உண்மையில், இதன் அகலம் டாடா நானோவை விட குறைந்ததாகவே இருக்கிறது! எனவே, கேபின் உள்ளே உள்ள இடம் விசாலமானதாக இல்லை. ஆனால், இதன் நேரடி போட்டியாளர்களான க்விட் மற்றும் டாட்சன் கோ போன்ற கார்கள் இடவசதியில் தாராளமாக இருக்கின்றன.

Table 2 (7) Table 3 (7)

உட்புறத் தோற்றம்


Image 5 (9)
ஆல்டோ 800 மாடலில், முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள உட்புறத் தோற்றத்தையும், அமைப்புகளையும் நாம் மெச்ச வேண்டும். அவை நவீனமாகவும் உபயோகமாகவும் உள்ளன. நீங்கள் ப்ரௌன் அல்லது க்ரே நிறத்தில் ஒன்றை காரின் கேபின் பகுதிக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனினும், இருக்கைகளும், ஸ்டியரிங் வீலும் கருப்பு நிறத்திலேயே உள்ளன. புதிய ஆல்டோ 800 35 மிமீ அதிக நீளமாக உள்ளது, எனவே இதற்கு முந்தைய மாடலை விட கேபின் பகுதி பெரிதாக உள்ளது.

Image 6 (9)
அதிகப்படியான குஷன் இல்லாததால், இருக்கைகள் தட்டையாகவே உள்ளன. சிக்கன விலையில் வரும் இந்த காரில் இதை விட அதிகமாக நாம் எதிர்பார்க்கக் கூடாது. முன்புற பயணி இருக்கையில் சீட் பாக்கெட் பொருத்தப்பட்டுள்ளது. இருக்கைகள் சற்றே தாழ்வான விதத்தில் பொருத்தப்பட்டுள்ளன. அது போலவே, ஸ்டியரிங் வீலும் தாழ்வாகவே உள்ளது.
பின்புற இருக்கைகளில் இரண்டு நபர்களுக்கு மேல் அமர்ந்து பயணம் செய்வது கடினம். அதுவும், முன்புற பயணி மற்றும் ஓட்டுனர் ஆகியோர் பருத்த உடல்வாகுடன் இருந்தால், சவுகர்யமான பயணத்திற்கு நாங்கள் உறுதி அளிக்க முடியாது. நீங்கள் உயரமானவராக இருந்தால், உங்கள் நிலைமை மேலும் மோசமாகிவிடும். உங்களின் தலை விதானத்தில் இடிக்கும் அளவிற்கு குறைந்த உயரத்திலேயே உள்ளது. சராசரிக்கும் அதிக உயரத்தில் இருப்பவர்களுக்கு, இருக்கை மேல் உள்ள ஹெட் ரெஸ்ட்கள் கழுத்துக்கு வந்து விடுகின்றன. உயரமானவர்களின் தேர்வாக இது எப்போதும் இருக்கப் போவதில்லை.
ஸ்டியரிங் வீல் சரியான அளவில், நன்றாகப் பிடித்துக் கொள்ளும் விதத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டியரிங் வீல் மீது உள்ள நெருநெருவென்ற தன்மை விரும்பத் தகுந்ததாக இல்லை. எனினும், இது இந்தப் பிரிவில் உள்ள அனைத்து கார்களிலும் இடம்பெறும் ஒரு பொதுவான அம்சமாகும். ஹார்ன் பொருத்தப்பட்டுள்ள இடம் கைக்கு எட்டும் விதத்தில் உள்ளது. மேலும், பெடல்களும் சிறப்பாகவே பொருத்தப்பட்டுள்ளன என்பதால் மிகவும் உபயோககரமான வடிவமைப்பாக இது கொண்டாடப்படுகிறது.
இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டரின் தோற்றம் எளிமையானதாக காட்சி அளிக்கிறது. ஒரே ஒரு அனலாக் ஸ்பீடோமீட்டர் தவிர மற்ற அனைத்தும் டிஜிட்டல் முறையில் உள்ளது. இதில் ஒரு ஓடோமீட்டர் மற்றும் இரண்டு ட்ரிப் மீட்டர்கள் ஆகியவை உள்ளன, ஆனால் டாக்கோமீட்டர் இடம்பெறவில்லை. எளிமையான வடிவமைப்பில் உபயோகமான விவரங்கள் – இதுவே புதிய மாருதி ஆல்டோ 800 மாடலில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் ஆகும்.

Image 8 (7)
V வடிவத்தில் உள்ள சென்டர் கன்சோல் பகுதியில், HVAC கட்டுப்பாட்டுக் கருவிகளுக்கான இடம் அழகாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆல்டோவின் எந்த டிரிம்மிலும் ம்யூசிக் சிஸ்டம் இடம்பெறவில்லை. எனவே, நீங்கள் புதிய ம்யூசிக் சிஸ்டத்தை வாங்கிய பின், அம்சமாகப் பொருத்திக் கொள்ளும் விதத்தில் ஒரு தனி இடவசதி சென்டர் கன்சோலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. AC கட்டுப்பாட்டு கருவிகளுக்கு மேல்புறத்தில், நடுவில் அமைந்துள்ள ஏசி துளைகள், கலசம் போல அமைந்துள்ளன. காருக்குள் உள்ள வெப்பத்தைத் தணிக்க அடிக்கடி குளிர்சாதன வசதியை உபயோகித்து குளிரூட்டிக் கொள்ளும் அளவிற்கு இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். எனினும், இதன் சென்டர் ஏசி துளைகளை, முழுவதுமாக மூட முடியாது.

image 9 (9)
சிறிய பொருட்களை வைத்துக் கொள்ள இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, ஆனால், அது மிகச்சிறிய அளவிலேயே இருக்கின்றது. எனினும், கிலோவ் பாக்ஸ் பெரிதாக உள்ளது. கிலோவ் பாக்ஸின் மேல் பகுதி மற்றும் சென்டர் கன்சோல் பகுதியின் கீழ் பகுதி ஆகியவற்றில், உங்களது வித்தியாசமான பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Image 10 (9)
177 லிட்டர் என்ற பூட் பகுதியின் கொள்ளளவு, இந்த பிரிவிலேயே சிறந்த அளவாகும். மேலும் அதனை விரிவு படுத்த, பின்புற இருக்கையை மடித்துக் கொள்ளும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

செயல்திறன்:


Table 4 (7) Image 11 (8)
மாருதி ஆல்டோ 800 ஃபேஸ்லிஃப்ட் மாடல் அதே 800 cc திறன் கொண்ட 3 சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. எனினும், இதன் கட்டுமானத்திற்கு இலகுவான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது முக்கியமான மேம்பாடாகக் கருதப்படுகிறது. சக்தி வாய்ந்த இதன் இஞ்ஜின், 6000 rpm என்ற அளவில் 47 hp சக்தி மற்றும் 3500 rpm என்ற அளவில் 69 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. குறைந்த வரம்பில், இந்த இஞ்ஜின் திறம்பட செயல்பேருவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் இந்த்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும், கியர் பாக்சையும் இதனுடன் இணைத்து, இதன் சக்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மெதுவாக பயணிக்கும் போது, இதன் இஞ்ஜின் சீராக இயங்குகிறது, ஆனால் இதன் 3 சிலிண்டர் அமைப்பின் வழக்கமான தடதடவென்ற சத்தம், வேகம் அதிகமாகும் போது நன்றாகக் கேட்கிறது. இன்சுலேஷன் இல்லையென்றாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த இஞ்ஜின் 9 சதவிகிதம் அதிக எரிபொருள் திறனுடன் வருகிறது என்றும், ARAI சான்றளிக்கும் லிட்டருக்கு 24.7 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது என்றும் இந்நிறுவனம் உறுதியளிக்கிறது.
சிறப்பம்சங்களை வைத்துப் பார்க்கும் போது, நகர்புறங்களில் பயணிப்பத்தில், இது ஒரு வல்லமை மிக்க காராகத் திகழ்கிறது. இதில் இணைக்கப்பட்டுள்ள புதிய கேபிள் வகை கியர் பாக்ஸ் என்பது மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருத்தப்படுகிறது. இது கியரை இயக்குவதும், மீண்டும் அவற்றின் இடத்தில் சேர்ப்பதும் சுமுகமாக உள்ளது. புதிய 6.5 அங்குல பிரேக் பூஸ்டர் சிறந்த முறையில் பிரேக் போடுவதற்கு உதவுகிறது.

சவாரி மற்றும் கையாளும் திறன்


Image 12 (8)
புதிய ஆல்டோவின் முன் மற்றும் பின்புறத்தில் கேஸ் சார்ஜ்ட் டம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பிரிவில் நீங்கள் கண்டுபிடிக்கவே முடியாத அருமையான தரத்துடன் கூடிய பயணத்தை நீங்கள் இந்த காரில் அனுபவிக்கலாம். கிட்டத்தட்ட சாலைகளில் உள்ள அனைத்து மேடு பள்ளங்களையும் சமாளித்து, சீரான பயணத்தைத் தருகிறது. நகரத்திற்குள் இருக்கும் வரை, ஆல்டோ 800 மாடல் உங்களது பயண தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது. ஆனால், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, ஆல்டோ சீராக இயங்குவதற்கு அவதிப்படுகிறது. டயர்களும் சிறியதாக இருப்பதால், தன்னம்பிக்கையுடன் இந்த காரை நெடுஞ்சாலைகளில் செலுத்த முடியாது.
நகரத்திற்குள் எளிதாக ஓட்டுவதற்கு இலகுவான ஸ்டியரிங் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இது நெடுஞ்சாலைகளை எளிதாகக் கடக்க உதவுவதில்லை என்பதே உண்மை. வேகத்தை அதிகரிக்கும் போதும் ஸ்டியரிங் தடுமாறுகிறது. எனவே, இந்த காரை நகரத்தில் ஓட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தலாம், அல்லது, நீங்கள் நெடுஞ்சாலையில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்பவர் என்றால், இது உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும். இதன் ஏரோ எட்ஜ் டிசைன் சிறந்த ஏரோடைனமிக் பெர்ஃபார்மன்ஸ் தருகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்


Image 13 (6)
நகரத்திற்குள் சென்று வருவதற்கு, புதிய ஆல்டோ 800 சிறந்த கார் என்ற புகழைப் பெற்றிருந்தாலும், ஓட்டுனருக்கான ஒரு காற்றுப் பையைத் தவிர வேறு எந்த பாதுகாப்பு அம்ஸங்களும் இதில் இணைக்கப்படவில்லை. நல்ல வேளை, காற்றுப் பைகள் அனைத்து வேரியண்ட்டிலும் ஆப்ஷனலாகத் தரப்படுகிறது. காற்றுப் பை வேண்டும் என்றால், கூடுதலாக ரூ. 1000 கொடுத்து நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம். கண்களை மூடிக் கொண்டு இந்த ஆப்ஷனை நீங்கள் டிக் செய்யலாம். மேலும், அனைத்து வேரியண்ட்களிலும் பின்புற கதவுகளுக்கு சைல்ட் லாக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Table 5 (7)

வேரியண்ட்கள்


Table 6 (7)
ஆல்டோ 800, LX, LXi மற்றும் VXi என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் புதிய மாருதி ஆல்டோ 800 கிடைக்கிறது.
அடிப்படை ஆல்டோ 800 வேரியண்ட்தான் இருப்பத்திலேயே மிகவும் எளிமையான, அடிப்படையான வசதிகள் மட்டுமே கொண்டது. சன் வைசர் வசதி கூட ஓட்டுனருக்கு மட்டும்தான். இதன் உட்புற அமைப்பு க்ரே வண்ணத்திலும், கால் வைக்கும் இடத்திற்கு கார்பெட் வசதி, பாட்டில் மற்றும் கேன்களை வைத்துக் கொள்ள ஹோல்டர்கள், இஞ்ஜின் இம்மொபிலைசர், முன்புற வைப்பர் மற்றும் வாஷர் மற்றும் மாற்றி அமைக்கும் வசதி கொண்ட ஸ்டியரிங் ஆகியவை இதன் சிறப்பம்ஸங்களாம்.
LX வேரியண்ட்டில் உள்ள B மற்றும் C பில்லர்கள் உயர்தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஹீட்டர் வசதியுடன் வரும் குளிர் சாதன கருவி, முன்புற கதவில் மேப் பாக்கெட், தரமான துணியில் இருக்கை விரிப்புகள், ரிமோட் மூலம் எரிபொருள் டாங்கை திறக்கும் வசதி மற்றும் முன்புறத்தில் உள்ள பயணிக்கும் சேர்த்து சன் வைசர் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.
உங்களுக்கு வசீகரமான வெளிப்புறத் தோற்றம் கொண்ட கார் வேண்டும் என்றால், நீங்கள்ள் தாராளமாக LXi வேரியண்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம். வெளித்தோற்றத்தைக் கவர்ச்சியாக்க, பாடி நிறத்திலேயே பம்பர்கள், குரோம் முலாம் பூசப்பட்ட முன்புற கிரில், முழுமையான வீல் கவர்கள், முன்புறத்தில் பவர் விண்டோ (எந்த வேரியண்ட்டிலும் பின்புற பவர் விண்டோ வசதி இல்லை), உட்புறத்தை ஆங்காங்கே மெருகூட்டும் வெள்ளி நிற வேலைப்பாடுகள், பவர் ஸ்டியரிங் மற்றும் ரிமோட் மூலம் பின்புற கதவைத் திறக்கும் தொழில்நுட்பம் ஆகியவை இந்த வேரியண்ட்டில் இடம்பெறும் சிறப்பம்ஸங்கள்.
மனதைக் கவரும் சிறப்பம்ஸங்களுடன் வரும் VXi வேரியண்ட்டில் பின்புற ஸ்பாய்லர், உட்புறம் இருந்து மாற்றி அமைக்கும் வசதி கொண்ட ORVM, USB Aux-in மற்றும் ரேடியோ வசதி கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட ஆடியோ சிஸ்டம், முன்புற ஸ்பீக்கர்கள், ஆக்செசரி சாக்கெட், பின்புற பார்சல் ட்ரே மற்றும் சென்ட்ரல் டோர் லாக்கிங் வசதி ஆகியவை இடம்பெறுகின்றன.

தீர்ப்பு:


Image 14 (5)
மாருதி ஆல்டோ 800 நகரங்களுக்குள் பயணிக்க சிறந்த கார். எந்த பிரச்சனையும் இன்றி, சிக்கனமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஒரு சிறந்த வண்டி உங்களுக்கு தேவை என்றால், நிச்சயமாக ஆல்டோ 800 மாடலை நாங்கள் உங்களுக்கு பரிந்துரைப்போம். ஆனால், சற்றே ஸ்டைலாகவும், அதிக திறன் வாய்ந்ததாகவும் வேண்டும் என்ற ஆசையுடன் வாகன சந்தையை நீங்கள் முற்றுகையிட்டால், உங்களுக்காக ஆல்டோவின் பெரிய உருவம் காத்துக் கொண்டிருக்கிறது, அதுதான் ஆல்டோ K10.