மஹிந்திரா சைலோ

` 8.1 - 11.8 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

சிறப்பம்சங்கள்:


டிசம்பர் 8, 2014:ஸைலோ MPV மஹிந்திராவின் ஒரு மிகச் சிறந்த தயாரிப்பாகும். இது, BSIII மற்றும் BSIV சான்றளிக்கப்பட்ட மாசு வெளிப்பாட்டு நிர்ணயங்கள் இரண்டிலுமே கிடைக்கிறது. BSIII சான்றளிக்கப்பட்ட மாடல்கள் பெரும்பாலும் பெருநகரங்களுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் விற்கப்படுகின்ற அதே நேரத்தில்,மேலும் கண்டிப்பான BSIV மாடல்கள், பெரும்பாலும் பெருநகரங்களிலேயே உள்ளன. இது இரண்டு டீசல் எஞ்சின் வகைகளில் வருவதுடன், D2, D4, H4, H8 மற்றும் H9 என்ற ஐந்து வேறுபட்ட வகைகளில் வழங்கப்படுகிறது.

தொகுப்பு:


மஹிந்திராபல ஆண்டு காலமாக நிலையான நான்கு சக்கர வாகனங்களின் உற்பத்தி நிறுவனமாக இருந்து வருவதுடன், அக்காலம் முதல் வலிமை பொருந்திய வாடிக்கையாளர் அடித்தளத்தையும் உருவாக்கிக் கொண்டுள்ளது. தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, மற்ற வகைகள் விலை வகைகள் மற்றும் இதர பிரிவுகளிலிருந்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வாகனங்களை அது தன்னிடம் குவித்து வைத்துள்ளது. மஹிந்திராஸைலோ என்ற இக்குறிப்பிட்ட மாடல், அதன் வலிமையான கட்டமைப்பிற்காக மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது மேலும் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாடலின் வெளிப்புறத் தோற்றம் கம்பீரமானது மற்றும் மிகப் பெரியது. இப்பல் பயன்பாட்டு வாகனம் மிக அதிக எண்ணிக்கையில் நபர்களை ஏற்றிச் செல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுவதால், அது அவ்வாறுதான் தோற்றமளிக்க வேண்டும் மற்றும் அதற்கேற்றவாறு பெரிதாகவும் இருக்க வேண்டும். அது, மாடல்களுக்கிடையிலுள்ள வேறுபாட்டிற்கேற்ப, ஏழு முதல் ஒன்பது பயணிகளுக்கான இடவசதி கொண்டது. இவை கூடுதலாக முன்னோக்கிய (கேப்டன்) இருக்கைகள் அல்லது பக்கவாட்டில் நோக்கிய இருக்கைகள் என்ற தேர்வினையும் கொண்டுள்ளன. இவ்வாகனம் பெரியது மட்டுமின்றி, தனது அலங்காரத்தில் காணப்படும் நேர்த்தியின் காரணமாக பணிவான தோற்றத்தையும் பெற்றுள்ளது. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் காணப்படும் குரோம் அலங்காரங்கள் மற்றும் கிராஃபிக்ஸ், அதனை ஒரு நவநாகரீகமான வாகனமாக மிளிரச் செய்கின்றன. ஒரு ஜோடி கூரைக் கம்பிகள் மற்றும் ஒளி பொருந்திய ஸ்பாயிலர் அதற்கு ஒரு குதூகலமான தோற்றத்தைத் தருகிறது. வெளிப்புற கதவுக் கைப்பிடிகள் மற்றும் வெளிப்புற விங் கண்ணாடிகள் கருப்பு வர்ணம் பூசப்பட்டிருக்கும் அதே நேரத்தில், இரு பக்கங்களிலும் உள்ள பம்பர்கள், ஒரு மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டிருக்கும் வகையில் பாடியின் வண்ணத்தில் காணப்படுகின்றன. முன்புற மற்றும் பின்புற பம்பர்களிலுள்ள ஒரு ஜோடி பனிமூட்ட விளக்குகளும் இவ்வடிவத்திற்கு மேலும் எழில் சேர்க்கின்றன, அதே சமயம், சக்கரங்களிலுள்ள அலங்காரங்கள், பக்கவாட்டுத் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. கருப்பு பில்லர்கள் மற்றும் பக்கவாட்டு ஒப்பனை நிச்சயமாக இதன் பக்கங்களில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன, அதே நேரத்தில் பின்புறமுள்ள டெயில்கேட்டின் அப்ளிக் அலங்காரம் மற்றும் காற்றணைக்குள் செல்லும் பனி உள்ளீடுகள், அது ஒரு சிறிய வேறுபாடு அல்ல என்பதை எடுத்துக் கூறுகின்றன. இநத ஆடம்பரங்கள் அனைத்தும் அதன் பாடிக்கு அதற்கு உரித்தான அழகை மேலும் கூட்டுகின்றன. அதன உட்புறங்கள், அதனுடைய வெளிப்புற கட்டைமைப்புகளுக்கு ஒத்த வகையில் அமைந்துள்ளன. அடிப்படை மாடலில் PVC மூலப்பொருளில் தொடங்கி, உயர்தர மாடலில் புதிய உயர்ரக துணி முதல் இத்தாலிய லெதர் வரையிலான பல்வேறு விருப்பத்தேர்வுகளில் வழங்கப்படும் வசதியான இருக்கைகளை இவ்வாகனம் கொண்டுள்ளது. இவ்வரிசையில் கிடைக்கும் மிகப் பெரிய நன்மை தட்டையான படுக்கை இருக்கைகள் முதல் கேப்டன் இருக்கைகளிலுள்ள இடுப்பு ஆதரவு வரையிலான அம்சங்களாகும். பாதுகாப்புப் பிரிவு மிகவும் கவர்ந்திழுப்பதாக அமைந்துள்ளது, ஒரு நுகர்பயன் வாகனத்திற்கு அவ்வாறு இருப்பதுதான் சரியாகும். முன்புற பயணிகளுக்கு பாதுகாப்பிற்காக இரட்டை காற்றுப்பைகள், திருட்டிலிருந்து பாதுகாக்கும் ஓர் எஞ்சின் இம்மொபிலைஸர், ABS மற்றும் EBD கொண்ட ஒரு மேம்பட்ட பிரேக் அமைப்பு மற்றும் அதன் ஓட்டுனருக்கு ஒரு புத்திசாலித்தனமான பார்க்கிங் உதவி ஆகியவை இவ்வாகனத்தில் உள்ளன. இவ்வரிசை மற்றும் உயர் மாடல்களில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களில் இவை அடங்கும். தனது பயணிகளின் வசதிக்காக, கேபினில் மேலும் பல வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ப்ளூடூத் இணைப்புடன்கூடிய ஒரு 2-DIN ஆடியோ அமைப்பை ஒருங்கிணைத்துள்ளதன் மூலம் பொழுதுபோக்கிற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குரல்ஒலி ஆணை தொழில்நுட்பம் ஒன்றும் உள்ளது, இதன் கட்டுப்பாடுகள், மேலும் வசதிக்காக, ஸ்டியரிங் வீல் மீது அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ள பவர் ஸ்டியரிங், சாய்வை சரிசெய்யும் வசதி கொண்டது, இது வசதியை மேலும் அதிகரிக்கிறது. கதவுகள் அனைத்திலும் பவர் ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருப்பதுடன், ஓட்டுனர் பக்கத்திலுள்ள விசை மூலம் ஒரே தொடுதலில் இறக்கும் செயல்முறையைக் கொண்டுள்ளன. மையப் பூட்டமைப்பு மற்றும் சாவியின்றி நுழைதல் ஆகியவை, ஓட்டுனரின் பணியை சுலபமாகவும், சிரமம் இல்லாமலும் ஆக்குகின்றன. இவ்வரிசை இரண்டு வேறுபட்ட டீசல் எஞ்சின்களுடன் வழங்கப்படுகிறது மற்றும் பல மாடல்களில் கிடைக்கிறது, மேலும் தேர்ந்தெடுப்பதற்கு ஐந்து கவர்ச்சிகமான வண்ணங்களும் உள்ளன. பல அம்சங்கள் கொண்ட இந்த மாடல், சந்தையில் கிடைக்கும் வகைகளில் தனித்துவமானது மற்றும் இது ஒரு வருத்தமடையச் செய்யாத தேர்வாகவும் இருக்கும். மேலும், மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ, இதில் முன்னால் வருவது என்ற தேர்வையும் கொண்டுள்ளது.

மைலேஜ்:


இதன்mDI CRDE டீசல் எஞ்சினில் ஒரு பொது ரெயில் அடிப்படையிலான நேரடி எரிபொருள் விநியோக அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது நகரங்களில், லிட்டருக்கு 9.1 கிமீ எரிபொருள் சிக்கனத்தையும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு சுமார் 12.2கிமீ வரையிலான மைலேஜையும் கொண்டுள்ளது. மற்றொரு விருப்பத்தேர்வான mHAWKமோட்டாரும் பொது ரெயில் அடிப்படையிலான நேரடி எரிபொருள் இன்ஜெக்ஷன் அமைப்பின்அடிப்படையிலானது. இது, நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 15 கிமீ அளிப்பதுடன், நகரச் சூழல்களில் லிட்டருக்கு 10 கிமீ தருகிறது.

ஆற்றல்:


இதன் 2.2-லிட்டர் டீசல் எஞ்சின், இரட்டை ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வு அமைப்பின் அடிப்படையிலானது. இது, 2400முதல் 2800 rpm-க்கு இடையில் 280Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 4000rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 118.35bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு மோட்டாரான, 2.5-லிட்டர் டீசல் எஞ்சினும் இரட்டை ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வு அமைப்பின் அடிப்படையிலானது. அதில் நான்கு சிலிண்டர்களும் பதினாறு வால்வுகளும் உள்ளன. இது, 1400முதல் 2800 rpm-க்கு இடையில் 218Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 3600rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 93.7bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளது.

அக்ஸலரேஷன் மற்றும் பிக் அப்:


mHAWKஎஞ்சினில், ஓர் ஆற்றல்மிக்க ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்து, வெறும் 15 முதல் 16 நொடிகளிலேயே இதனால் மணிக்கு 100 கிமீ வரையிலான அதிகபட்ச வேகத்தை எட்ட முடியும். அதே சமயம், மணிக்கு 150முதல் 156 கிமீ வரையிலான அதிகபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. mDi CRDE எஞ்சினிலும், ஓர் ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 17 நொடிகளில் இதனால் மணிக்கு 100 கிமீ குறியைக் கடக்க முடியும் மற்றும் மணிக்கு 150முதல் 160 கிமீ என்ற அதிகபட்ச வேகத்தையும் எட்ட முடியும்.

வெளிப்புறம்:


மஹிந்திராஸைலோ வரிசையின் ஒட்டுமொத்த அம்சங்களும், நல்ல தோற்றத்தையும் கொண்ட ஓர் அரிய நுகர்பயன் வாகனத்தை உருவாக்கும் மிகப் பெரிய முயற்சிக்கு உட்படுத்தப்பட்டன. அதன் விரிவான அலங்காரத்திற்கு, அதன் பக்கவாட்டுத் தோற்றமானது முதல் தோற்ற விளக்கமாக அமைந்துள்ளது. அதன் பக்கங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராஃபிக்ஸ், அதற்கு இணையற்ற தோற்றத்தைத் தந்துள்ளது. அதன் பின்புற ஓரங்களில் உள்ள வரி வடிவங்கள், திறன் மற்றும் அதீத ஆர்வத்துடன் பூசப்பட்டுள்ளன. கூடுதல் அலங்காரத்தை கருப்பு வண்ணத்தில் ஸ்டீல் உள்ளீடுகளுடன்கூடிய பக்கவாட்டு பாடி அமைப்பு மேற்கொள்கிறது. வெளிப்புற பில்லர்கள் சாதாரண மாடல்களில் கருப்பு வண்ணத்தில் மற்றும் மற்ற மாடல்களில் பாடி வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. உயர் ரக மாடல்களில், முன்புறத்தில் மட்டுமல்லாது பின்புறத்திலும் குரோம் வேலைப்பாடுகளுடன் இவ்வாகனங்கள் மிகப் பிரகாசமாகத் தோற்றமளிக்கின்றன. அதன் கூரையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஜோடி கம்பிகள் மிகவும் நேர்த்தியானவை. அதே நேரத்தில் அதன் பின்புறம் உள்ள ஸ்பாயிலர் ஒளிவீசியபடி மனதைக் கவர்ந்திழுக்கிறது. அடிப்படை மாடலில் பம்பர்கள் கருப்பு நிறத்தில் இருந்தாலும், மற்ற மாடல்களில் முன்புறமும், பின்புறமும் பாடி நிறத்திலேயே பம்பர்கள் உள்ளன. முகப்பில் கவர்ந்திழுக்கும் அம்சமாக இருப்பது அதன் அகலமான கருப்பு நிற கிரில்லாகும், இதற்கு உயர் ரகங்களில் பியானோ கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. கதவுகளுக்கு வெளியே உள்ள கைப்பிடிகள் உயர்ரக மாடல்கள் நீங்கலாக, மற்ற எல்லா மாடல்களிலும் கருப்பு வண்ணத்தில் உள்ளன. அதே நேரத்தில், வெளிப்புறமுள்ள பின் பக்கம் காணும் கண்ணாடிகள் உயர் ரக மாடல்களில் பாடி வண்ணத்திலும், குறைந்த வகை மாடல்களில் கருப்பு வண்ணத்திலும் அமைந்துள்ளன. இந்த மாடல்களில், அவற்றின் முன்புறம் மற்றும் பின்புறத்திலும்கூட, கூடுதலாக ஒரு ஜோடி பனிமூட்ட விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, வாகனத்தின் இருபுறமும் தங்கள் தனித்துவமான வடிவத்தின் மூலம் நவநாகரீகத் தோற்றத்தைத் தந்த வண்ணம் உள்ளன. ஒட்டுமொத்த தோற்றத்தையும் மேம்படுத்துவதற்காக, சக்கரங்களுக்கு ஏராளமான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அடிப்படை மாடலில், அதன் ஸ்டீல் சக்கரங்களுக்கு சில்வர் பூச்குள்ள விளிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் நடுத்தர மாடல்களுக்கு முழு சக்கர மூடிகள் உள்ளன. H8 மாடலுக்கு காற்றுப்பைகளுக்கான விருப்பத்தேர்வு உள்ளது மற்றும் உயர்தர மாடலில், மிக அழகுடன் காட்சிதரும் அல்லாய் சக்கரங்களின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து மாடல்களிலுமே பனிமூட்ட விளக்குகள் பொருத்திய அகலமான காற்றணை உள்ளது. இது முன்புறத் தோற்றத்தின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்புற வின்ட்ஸ்கிரீனில் வைப்பர் மற்றும் வாஷர் பொருத்தப்பட்டுள்ளது.

வெளிப்புற அளவீடுகள்:


ஒரு பல்நுகர்பயன் வாகனமாக உள்ள அதன் வகைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இவ்வரிசை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் மிகப் பெரிய பரிமாணங்களைக் கொண்டிருப்பது, பல பயணிகளுக்கு இடவசதி அளிக்கும் திறனை இதற்கு வழங்கியுள்ளது. இவ்வாகனத்தின் ஒட்டுமொத்த நீளம் சுமார் 4520மிமீ, மற்றும் மொத்த அகலம் 1850மிமீ, இது வெளிப்புற பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள் இரண்டையும் சேர்த்து ஆகும். இது மிகச்சிறந்த உயரமான1880மிமீ-யைக் கொண்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ், சாதாரண மாடல்களுக்கு சுமார் 160மிமீ மற்றும் உயர்ரக மாடல்களுக்கு சுமார் 186மிமீ ஆகும். சக்கரத்தின் அடித்தளம் 2760மிமீ ஆக இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உட்புறம்:


இந்தமஹிந்திராஸைலோ வரிசையின் உட்புற அறை, வழக்கமானவை மட்டுமின்றி கூடுதல் அம்சங்கள் கொண்ட பல்வேறு சிறப்புகளுடன் மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. உட்புற வண்ணத் தீம் கருப்பு மற்றும் வெளிர் பழுப்பாகும், இது துணி மற்றும் PVC சேர்ப்புகளுடன் ஒருங்கிணைந்து, நவநாகரீக தோற்றத்தைத் தருகிறது. H8 மாடலுக்கு முதல்தர துணி வழங்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், உயர்ரக மாடல்களின் இருக்கைகள் இத்தாலிய லெதரால் மூடப்பட்டுள்ளன. கூடுதலாக, பயணிகளின் வசதிக்காக தட்டையான படுக்கை இருக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. H8 மற்றும் H9-ன் உயர்ரக மாடல்கிலுள்ள இருக்கைகளுக்கு மேலும் பல செயல்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. கேப்டன் இருக்கைகளில், மூன்று நிலைகளைக் கொண்ட இடுப்பு ஆதரவு உள்ளது. அதன்பின், ஓட்டுனர் இருக்கையில் சரிசெய்யும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனருக்கும் கைச்சட்டங்கள் பொருத்தப்பட்டிருப்பதுடன், இரண்டாவது வரிசையிலும் கேப்டன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல்முனை சரிசெய்யும் வசதி உள்ளது. கூடுதல் சேர்ப்பாக, ஓட்டுனர் இருக்கைக்கு ஒரு சேமிப்பு டிரேயும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள்மேலும் கவர்ச்சிகரமாத் தோன்றுவதற்காக, பல்வேறு இதர அம்சங்களைக் கொண்டு கூடுதலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதனங்களின் தொகுதி, புதிய வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மையத்திலுள்ள பிஸல், சாதாரண மாடல்களில் கருப்பு வண்ணத்திலும், மற்ற மாடல்களில் இருண்ட சாம்பல் வண்ண மர ஃபினிஷிலும் வழங்கப்பட்டுள்ளது. உயர்ரக மாடல்களில் டிஜிட்டல் தகவல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ள அதே நேரத்தில், மற்றவைகளில் டிஜிட்டல்/அனலாக் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. கூரை கான்சோலில், கண் கண்ணாடி வைப்பதற்கான ஹோல்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அறயிலுள்ள கான்சோலில், மொபைல் சார்ஜ் செய்வதற்கான மின் துளையும் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை மாடல்களில் PVC மூலப்பொருளால் ஆன இருக்கைகளும், நடுத்தர மாடல்களில் துணி மற்றும் PVC கலவையாலான இருக்கைகளும் உள்ளன. உயர் மாடல்களில், இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. அனைத்து மாடல்களிலும், ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனர் ஆகிய இருவருக்குமே சூரியஒளி வைஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், உயர்தர மாடல்களில், பயணிகள் பக்கத்திலுள்ள வைஸருடன் ஒரு வானிட்டி கண்ணாடியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடி ஒளியமைப்புடன் கூடுதலாக வழங்கப்படுகிறது. நிலையான அம்சமாக, கேபினின் முன்புற மற்றும் பின்புற பகுதிகளில் ஒரு கர்ட்டஸி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. உயர்ரக மாடல்களில் உள்ள வெளிச்சமானது, மூன்றாவது வரிசைக்கும் மேலும் கூடுதலாக இரண்டு விளக்குகளை வழங்கியதன் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்களில், அவற்றின் பின்புற வின்ட்ஸ்கிரீன்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஆன்டெனாவையும் கூடுதலாகக் கொண்டுள்ளன.

உட்புற வசதி:


உயர்ரக மாடலில் உள்ள அம்சமான குரல்ஒலி ஆணை தொழில்நுட்பமானது, இவ்வரிசையை உருவாக்குவதற்கு எந்த அளவிற்கு முயற்சிகளும் கவனமும் செலுத்தப்பட்டுள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஓட்டுனருக்குப் பலவித வசதி விருப்பத்தேர்வுகள் வழங்கப்பட்டிருப்பதற்கும் மேலாக, இதன் பயணிகள் தங்களுக்காக உள்ள பல சொகுசு செயல்பாடுகளை ஓய்வாக அமர்ந்து அனுபவித்து மகிழலாம். மேலும், இம்மாடலில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ மற்றும் பயணக் கட்டுப்பாடுகள், ஸ்டியரிங் வீலில் அமைக்கப்பட்டுள்ளன. இது ஓட்டுனரை அதிக சிரமத்திலிருந்து காக்கிறது. இந்த மாடலில் உள்ள மேலும் ஒரு நல்ல அம்சம் என்னவெனில், இதன் வகைகள் அனைத்திலுமே குளிர் சாதன அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதுதான். இதில் ஒரு ஹீட்டரும், காற்றோட்ட வசதியும்கூட உள்ளதால், கேபினின் வெப்பநிலை ஒழுங்கமைப்பு மேலும் வசதியாக அமைந்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட தனி ஏசி வென்ட்கள் இவ்வரிசை வாகனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கிற்காக, உயர்ரக மாடல்களில் ஒரு 2-DIN ஆடியோ அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. மேலும், மிக உயர்ந்த மாடலில், ப்ளூடூத் இணைப்பும் உள்ளது. எல்லா வாகனங்களிலுமே பவர் ஸ்டியரிங் உள்ளது. அது ஓட்டும் பிரயத்தனத்தை வெகுவாகக் குறைப்பதால், ஓட்டுனர்கள் அனைவருமே விரும்பும் ஓர் அம்சமாக அமைந்துள்ளது. கூடுதலாக, சாய்வை சரிசெய்யக்கூடிய ஸ்டியரிங் வீலையும் கொண்டுள்ளது. கதவுகள் அனைத்திலும் பவர் ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. எந்தவொரு வாகனத்திற்கும் இது மிகப் பெரிய நன்மையையும் வசதியையும் வழங்குகிறது. மேலும், ஓட்டுனரின் பக்கத்திலுள்ள ஜன்னலில், ஒரே தொடுதலில் கீழிறங்கும் செயல்பாட்டைக் கொண்ட விசை ஒன்றுள்ளது. கூடுதலாக,பாதுகாப்பிற்காக இந்த ஜன்னல் கிள்ளிப்பிடிக்காத தன்மையையும் கொண்டுள்ளது. இந்த அம்சம் உயர் மாடல்களில் மட்டுமே உள்ளது மற்றும் அடிப்படை மாடல்களில் உள்ள ஜன்னல்கள் கையால் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில், எல்லா மாடல்களுக்கும் மையப் பூட்டு வசதி அளிக்கப்பட்டிருப்பது, அதனை மேலும் வசதியானதாக ஆக்குகிறது. இதற்கும் மேலாக, உயர்தர மாடல்களில், ஓட்டுனருக்கு மேலும் நன்மை தரும் வகையில், சாவியின்றி நுழையும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வசதியை அதிகரிக்கும் வகையில் சாவியின் வளையத்திற்கு ஓர் ஒளியமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை மற்றும் நடுத்தர வகைகளில் பாதியளவு கான்சோல் வழங்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில் மற்றவைகளில் ஒரு முழு கான்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த உயர்ரக மாடல்கள், தங்களுடைய பின்புற வின்ட்ஸ்கிரீனில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பனிநீக்கியையும் கூடுதலாகக் கொண்டுள்ளன. அனைத்து மாடல்களிலும், மின் முறையில் இயக்கக்கூடிய எரிபொருள் மூடி திறப்பு அமைப்புள்ளது. மேலும் உயர்ரக மாடலில், முன்புறத்தில் மட்டுமின்றி, பின்புறக் கதவுகளிலும்கூட நீர் தேக்க விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

உட்புற அளவீடுகள்:


நிஙையப் பயணிகளை மட்டுமின்றி பொருட்களையும் உள்ளடக்கும் இடவசதிக்காக, மஹிந்திராஸைலோவரிசை வாகனங்கள் மிகவும் சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் மாடலுக்கேற்ப, இருக்கை வசதி ஏழு முதல் ஒன்பது இருக்கைகள் கொண்டதாக இருக்கும். பயணிகள் அனைவருக்கும் உரசல் இல்லாத வசதியான இருக்கையை வழங்கும் வகையில் இருக்கைகள் அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனம், மிகப் பெரிய வீல் பேஸான 2760மிமீ அளவைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமாகிறது. கால் இடவசதி, முன்புறத்தில் 1260மிமீ மற்றும் பின்புறத்தில் 1050மிமீ ஆகும். ஏராளமான பெட்டி படுக்கைகளை உள்ளடக்கும் 376 லிட்டர் பூட் இடவசதியும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசையை மடக்குவதன் மூலம், இந்த இடத்தை 900 லிட்டர் வரை அதிகரித்துக் கொள்ள முடியும். தலைக்கான இடவசதி, கால் இடவசதி மற்றும் தோள் இடவசதி மிகவும் தாராளமாக இருப்பதால், பயணிகள் மிகவும் சௌகரியமாக உணரமுடியும். எரிபொருள் டேங்க் 55 லிட்டர் கொள்ளளவு கொணடிருப்பது, நீண்ட பயணங்களுக்கு இதனை பயனுள்ளதாக ஆக்குகிறது.

எஞ்சின்:


இவ்வரிசை டீசல் பதிப்பில் மட்டுமே வழங்கப்பட்டாலும், பல்வேறு மாடல்களில் இருவேறு எஞ்சின் விருப்பத்தேர்வுகளில் இது கிடைக்கிறது. இதன் 2.2-லிட்டர் டீசல் எஞ்சின், இரட்டை ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வு அமைப்பின் அடிப்படையிலானது. இரட்டை ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வு அமைப்பின் அடிப்படையிலானது இதன் 2.2-லிட்டர் டீசல் எஞ்சின், 2400முதல் 2800 rpm-க்கு இடையில் 280Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 4000rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 118.35bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. இது சுமார் 2179சிசி இடமாற்றத்திறனைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, இது ஒரு பொது ரெயில் அடிப்படையிலான நேரடி எரிபொருள் விநியோக அமைப்பின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. மேலும் இதில் ஓர் ஆற்றல்மிக்க ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்து, வெறும் 15 முதல் 16 நொடிகளிலேயே இதனால் மணிக்கு 100 கிமீ வரையிலான அதிகபட்ச வேகத்தை எட்ட முடியும். அதே சமயம், மணிக்கு 150முதல் 156 கிமீ வரையிலான அதிகபட்ச வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. இது, நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 15 கிமீ அளிப்பதுடன், நகரச் சூழல்களில் லிட்டருக்கு 10 கிமீ தருகிறது. இதன் 2.2-லிட்டர் டீசல் எஞ்சின், இரட்டை ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வு அமைப்பின் அடிப்படையிலானது மற்றும் இதில் நான்கு சிலிண்டர்களும் பதினாறு வால்வுகளும் உள்ளன. இது, 1400முதல் 2800 rpm-க்கு இடையில் 218Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 3600rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 93.7bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த mdi crdeஎஞ்சினில் ஓர் ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸும் பொருத்தப்பட்டுள்ளது. 17 நொடிகளிலேயே இதனால் மணிக்கு 100 கிமீ வரையிலான அதிகபட்ச வேகத்தை கடக்க முடியும்,அதே சமயம், மணிக்கு 150முதல் 160கிமீ வரையிலான அதிகபட்ச வேகத்தை எட்டும் திறனையும் கொண்டுள்ளது.இதில் ஒரு பொது ரெயில் அடிப்படையிலான நேரடி இன்ஜெக்ஷன் எரிபொருள் விநியோக அமைப்பும் இடம்பெற்றுள்ளது. இது, நகரச் சூழல்களில் எரிபொருள் சிக்கனமாக, லிட்டருக்கு 9.1 கிமீ அளிப்பதுடன், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு சுமார் 12.2 கிமீ தருகிறது.

ஸ்டீரியோ மற்றும் துணைப்பொருட்கள்:


உயர்தர மாடல்கள், H8 மற்றும் H9 ஆகியவற்றில் பல பிளேயர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு 2-DIN மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. H9 வகைகளில், ப்ளூடூத் இணைப்பும்கூட வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இம்மாடலில் குரல்ஒலி ஆணை தொழில்நுட்பம் ஒன்றும் உள்ளது. இதன் கட்டுப்பாடுகள், ஸ்டியரிங் வீல் மீது அமைக்கப்பட்டுள்ளன. இதர மாடல்களில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் வழங்கப்பட்டிராவிட்டாலும், கூடுதல் செலவில், வாங்குவோர் தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு தங்களுடைய வாகனத்தை அமைத்துக் கொள்ள முடியும். உயர்தரத் தோற்றம் மற்றும் வசதிக்காக, கூடுதல் துணைப் பொருட்களான லெதர் உறைகள் போனறவற்றையும் இருக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தரை மிதியடிகள், மண் ஃபிளாப்கள், நவீன அலங்காரஙகள் மற்றும் கூடுதல் மின் துளைகள் போன்ற இதர அம்சங்கள் மிகவும் உதவிகரமான மற்றும் வசதிக்குரிய அம்சங்களாக இருப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த வாகனத்திற்கு ஓர் அலங்காரமாகவும் அமைகின்றன. இத்துணைப் பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

சக்கரங்கள்:


D2 மற்றும் D4 வகைகளில், 15 அங்குல ஸ்டீல் சக்கரங்களின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது மற்றும் இது 205/65 R15 அளவு கொண்ட டியூபில்லாத ரேடியல் டயர்களால் மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், H8 மற்றும் H9 வாகனங்களில், எழில்மிகு அல்லாய் சக்கரங்களின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டு 215/75 R15 அளவுள்ள டியூபில்லாத ரேடியல் டயர்களால் மூடப்பட்டுள்ளது. H4 வாகனத்தில் வலிமை பொருந்திய சக்கரங்கள் பொருத்தப்பட்டு, 215/75 R15 அளவு கொண்ட டியூபில்லாத ரேடியல் டயர்களால் மூடப்பட்டுள்ளது. முழு அளவிலான மாற்றுச் சக்கரம் மற்ற கருவிகளுடன் சேர்த்து, எந்தவொரு உதவிக்காவும், பொருட்கள் வைக்கும் அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது, எல்லா மாடல்களிலும் நிலையாக உள்ள அம்சமாகும்.

பிரேக் போடுதல் மற்றும் கையாளுதல்:


மஹிந்திராஸைலோவின் இவ்வகை வாகனங்களில், சிறந்த கட்டுப்பாடு மற்றும் நிலைத்த்தன்மையின் பொருட்டு, ஓர் ஆற்றல்மிக்க பிரேக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஓர் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்அமைக்கப்பட்டு, அது ஓர் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷனுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புற சக்கரங்களில் வலிமை பொருந்திய டிஸ்க் பிரேக்குகளின் தொகுதி ஒன்றும், பின்புற சக்கரங்களில் வழக்கமான டிரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் முன்புற ஆக்சிலில் தனி முன்புற சஸ்பென்ஷனுடன், இரட்டை விஷ்போன் வகையிலான அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது மற்றும் இதன் பின்புற ஆக்சிலில் ஒரு பல்லிணைப்பு காயில் ஸ்பிரிங் பொருத்தப்பட்டுள்ளது. எல்லா மாடல்களுக்குமே பவர் ஸ்டியரிங் வழங்கப்பட்டிருப்பதுடன், சாய்வைச் சரிசெய்யக்கூடிய ஸ்டியரிங் வீலும் பொருத்தப்பட்டுள்ளது. இது கையாள்வதை சுலபமாக்குவதுடன், குறைந்தபட்ச திரும்புதல் ஆரமான 5.5 மீட்டருக்கும் ஆதரவளிக்கிறது.

பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மை:


நுகர்பயன் வாகனங்கள் பெரும்பாலும் கரடுமுரடான நிலங்களிலும், கடினமான சாலைகளிலுமே பயன்படுத்தப்படுவதால், குறிப்பாக அச்சுறுத்தல்களுக்கு எதிராக அவற்றிற்கு எதிர்ப்புத்தன்மை இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. MPV-க்களின் இச்சூழ்நிலைக்குப் பொருந்தும் வகையில், பாதுகாப்புப் பிரிவு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட நுட்பங்களைக் கொண்டு பிரேக் அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. உயர்ரக மாடல்களில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, சிறந்த ஆதரவிற்காக, எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இது அனைத்து வகையான சாலைகளிலும் வாகனத்திற்கு பிடிமானத்தையும், அதன் மீது சிறந்த நிலைத்ததன்மை மற்றும் கட்டுப்பாட்டையும் அளிக்கிறது. இந்த அம்சம், அடிப்படை மாடல்களில் வழங்கப்படவில்லை மற்றும் H4 வாகனத்திற்கு இது விருப்பத்தேர்வுக்குட்பட்டதாகும். முன்புற இருக்கையிலுள்ள பயணிகளுக்கு பாதுகாப்பளிப்பதற்காக, ஒரு ஜோடி காற்றுப்பைகள் பொருத்தப்பட்டுள்ளன. H8 வாகனத்திற்கு இது விருப்பத்தேர்வின் அடிப்படையில் கிடைக்கிறது, அதே நேரத்தில் உயர்ரக மாடல்களில் இது ஒரு நிலையான அம்சமாகும். வாகனத்தைத் திருட்டிலிருந்து பாதுகாக்க உதவும் எஞ்சின் இம்மொபிலைஸர் ஒன்று அனைத்து மாடல்களிலுமே பொருத்தப்பட்டுள்ளது. வாகனம் அங்கீகாரமற்ற முறையில் அணுகப்படுவதாகக் கண்டறியப்படும்போது எஞ்சினை உறைய (செயலிழக்க) வைப்பதற்கு இந்நுட்பம் இயக்கப்படுகிறது. உயர் ரக மாடல்களான H8 மற்றும் H9 ஆகியவற்றில் சாதுர்யமான ரிவர்ஸ் பார்க்கிங் உதவி அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய ஏராளமான பாதுகாப்பு அம்சங்களுடன், ஓட்டுவதற்கு மிகவும் பாதுகாப்பான வாகனமாக இந்த MPV கருதப்படுகிறது.

நேர்மறை அம்சங்கள்:


1. இருக்கை வசதி ஒரு நல்ல அம்சமாகும்.
2. பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் உள்ளன.
3. வெளிப்புறத் தோற்றம் மிகவும் நேர்த்தியாகவும் எழிலுடனும் உள்ளது.
4. உயர்தர சஸ்பென்ஷன் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
5. மிகத் தாரளமான வீல்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்மறை அம்சங்கள்:


1. சாதாரண மாடல்களில் காற்றுப்பைகள் இல்லாமை.
2. மிகக் குறைந்த வண்ண விருப்பத்தேர்வுகளில் மட்டும் வழங்கப்படுகிறது.
3. எல்லா வாகனங்களிலுமே ABS மற்றும் EBD -யை வழங்கலாம்.
4. கிரவுண்ட் கிளியரன்ஸை மேம்படுத்தலாம்.
5. அடித்தட்டு வாகனங்களிலும் ஆடியோ யூனிட்டை வழங்கலாம்.