மஹிந்திரா எக்ஸ்யூவி500

` 11.9 - 17.6 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்மே 09, 2016: 2011 –ஆம் ஆண்டு அறிமுகம் ஆனதில் இருந்து, மஹிந்த்ரா XUV 500 காரில் எப்போது ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வரும் என்று நாம் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தோம். இந்திய வாகன தயாரிப்பாளரான மஹிந்த்ரா நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், டபுள் பெடல் வெர்ஷனை அறிமுகப்படுத்தி நமது ஆசையை பூர்த்தி செய்தது. இன்றைய தேதி வரை, XUV 500 மாடலின் 3 வேரியண்ட்களில் ஆட்டோ-பாக்ஸ் இணைத்துள்ளது (W8 ஃப்ரண்ட்-வீல் ட்ரைவ், W10 ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அண்ட் W10 ஆல் வீல் ட்ரைவ்). மேலும் பலரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, மஹிந்த்ரா நிறுவனம் W6 ஃப்ரண்ட் வீல் வேரியண்ட்டுடன் தற்போது ட்ரான்ஸ்மிஷனை இணைத்து, நவி மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ. 14.29 லட்சங்கள் என்று நிர்ணயித்து, தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. ஏனைய வேரியண்ட்களைப் போலவே, W6 ஆட்டோமேடிக்கிலும் AISIN என்னும் பிரபல ஜப்பானிய நிறுவனத்தின் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு, 2.2 லிட்டர் எம் ஹாக்(mHawk) டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. உட்புற அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்து, அதை ஸ்டைலாக மாற்றி, வசதிகளை ஒரு படி மேலே இணைத்து இந்தப் புதிய XUV 500 காரை வெளியிட்டுள்ளனர்.
இந்திய வாகன சந்தையில் ஜாம்பவானாகத் திகழும் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்த்ரா, அனைவரும் வாங்கும் விலையில் நவீன சிறப்பம்சங்கள் கொண்ட காரை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. XUV 500 ஸ்டார்ட் செய்தவுடன் உடனடியாக வேகத்தை கூட்ட முடியவில்லை என்றாலும், ஓட ஆரம்பித்தவுடன் ஆக்ஸிலரேட்டரை இயக்கியதும், உடனடியாக இயங்கி, வேகமாக சீறிப் பாய்ந்து செல்கிறது. சீறிப் பாயும் குதிரையை போல பாய்ந்து செல்லும் இந்த காரில் நவீனமான டூயல் கிளட்ச் வசதி இல்லை என்றாலும், சிறப்பாகவே செயல்படுகிறது.

சிறப்பம்சங்கள்:


மஹிந்த்ரா XUV 500 விமர்சனம்


கண்ணோட்டம்


முன்னுரை


அனைவரின் எதிர்பார்ப்புக்கும் இணங்க ஒரு புதிய வெர்ஷனை வெளியிடும் மஹிந்த்ரா நிறுவனம் நம் நம்பிக்கைக்கு பாத்திரமானதாகவே உள்ளது. தற்போது, அற்புதமான செயல்திறனைக் கொண்ட பல்வேறு SUV மாடல் கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி, மஹிந்த்ரா நிறுவனம் SUV பிரிவின் முன்னிலையில் உள்ளது. ஆஜானுபாகமான SUV மாடல்களிலேயே மிகவும் வலுவான மற்றும் மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் வலம் வருவது XUV 500 மாடலாகத்தான் இருக்க முடியும். பல காலங்களுக்குப் பின், SUV கார்களின் ட்ரெண்ட்டை மாற்றி அமைக்கப் போகும் கார்களில் ஒன்றாக இது திகழும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மஹிந்த்ராவின் சீட்டா காரைப் போன்ற தோற்றத்தில் XUV 500 இருந்தாலும், இந்திய சந்தையில் இதற்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது என்பதே உண்மை. தற்போது சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கும் மாடலின் தோற்றத்தில் ஒரு சில மாற்றங்களைச் செய்து, மேலும் வசீகரமாக்கி உள்ளனர். இந்த வலுவான உறுதியான காரில் நம்மை மகிழ்விக்க பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், நம்மை ஏமாற்றிய விஷயங்களும் இருக்கின்றன. எதற்காக இது அதிக மதிப்பெண் பெறுகிறது, எந்த விஷயத்திற்காக இது மதிப்பெண்ணை இழக்கிறது என்பதைப் பற்றி இங்கே விரிவாக அலசி ஆராய்வோம்.

சாதகங்கள்:1. மிக அகலமான மற்றும் விசாலமான கேபின் பகுதி. முதல் இரண்டு வரிசைகளில் இடவசதி நன்றாகவே உள்ளது
2. நெடுஞ்சாலைகளிலும், நகர சாலைகளிலும் சிறந்த பயணத்தைத் தரும் நம்பகமான இஞ்ஜின்
3. இப்போது, 1997 cc திறன் கொண்ட இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள கார் மாடலை இந்தியர்கள் வாங்கிப் பயன் பெறலாம்.

பாதகங்கள்1. சாமான்களை வைப்பதற்கு கடுமையான இடப் பற்றாக்குறை இருப்பதால், அதிக பொருட்கள் எடுத்துச் செல்லும் வாடிக்கையாளர்கள் இதனை வாங்க தயக்கம் காட்டுவர்
2. மூன்றாவது வரிசை இருக்கைகள் குறுகலாக இருப்பதால், பெரியவர்கள் வசதியாக அமர்ந்து பயணம் செய்வதற்கு சிரமாக இருக்கிறது.
3. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும், மற்றைய பிராண்ட்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான பிரிமியம் சேவை பிரிவு மஹிந்த்ரா நிறுவனத்தில் இல்லை

தனித்துவமான அம்சங்கள்:1. இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பும் வாய்ஸ் மெசேஜிங் சிஸ்டம் மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெறுகின்றன.
2. ABS, EBD, ESP மற்றும் பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளதால், இதன் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.

கண்ணோட்டம்


XUV 500 மாடல் போன்ற அருமையான கார்களை வெளியிடும் மஹிந்த்ரா நிறுவனத்தின் மீது நாம் கண்களை மூடிக் கொண்டு நம்பிக்கை வைக்கலாம். புயலென உருவெடுத்து இந்திய SUV சந்தையை கலக்கிக் கொண்டிருக்கும் இத்தகைய செயல்திறன் மிகுந்த SUVயை அறிமுகப்படுத்தி, தனது போர்ட்ஃபோலியோவை இந்நிறுவனம் உறுதியாக்கிக் கொண்டுள்ளது. சீரான கட்டமைப்பு, ரா டிசைன் தீம் மற்றும் ஏராளமான நுட்பமான சிறப்பம்சங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதால், மனத்தைத் தொடும் அற்புதமான தோற்றத்துடன் வலம் வருகிறது. அதே நேரம், காரின் உள்ளே சென்றதும், உங்களை விசாலமான பெரிய கேபின் ஆச்சர்யப்படுத்துகிறது. மேலும், இந்த மாடல் சீரீஸில் உள்ள உயர்தர வேரியண்ட்களில், அதிநவீன பொழுதுப்போக்கு அம்சங்களை, உங்கள் காலடியில் வைத்து குஷி படுத்துகின்றனர். டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், வாய்ஸ் மெசேஜிங் சிஸ்டம், மஹிந்த்ராவின் தனித்துவமான புளு சென்ஸ் செயலி மற்றும் மேலும் பல ஏராளமான அற்புதமான சிறப்பம்சங்களைக் கொண்டு, போட்டியாளர்களுடன் மோதத் தயார் நிலையில் உள்ளது. ஓட்டுவதற்கான புரொப்பல்ஷன் சக்தியை வலிமையான 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் இஞ்ஜின் உற்பத்தி செய்கிறது. புதிய உறுதியான டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அருமையான சேசிஸ் அரேஞ்ச்மெண்ட் மூலம், XUV 500 -ஐ ஓட்டுவது எளிதாகவும் நிறைவு தருவதாகவும் உள்ளது. தற்போது, XUV 500 மாடலில் 2.0 லிட்டர் இஞ்ஜின் (டெல்லி நகரத்திற்கு மட்டும் பிரத்தியேகமாக) இணைக்கப்பட்டுள்ளது. 2.2 லிட்டர் எம் ஹாக் இஞ்ஜின் போலவே, இதுவும் அதே அளவு சக்தி மற்றும் டார்க்கை உற்பத்தி செய்கிறது.

வெளிப்புறத் தோற்றம்:


ஆஜானுபாகமான தோற்றம் கொண்ட XUV 500 என்ற இந்த வாகனம் வசீகரமாக, இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. இதன் கம்பீர தோற்றத்தை சற்றே மென்மை ஆக்குவதற்காக, இந்நிறுவனம் மெலிதான வரிகள், குரோம் வேலைப்பாடுகள் மற்றும் சீரான வடிவம் ஆகியவற்றை இணைத்துளனர். இது சாலைகளில் வலம் வரும் போது, சாலையில் உள்ள அனைவரும் திரும்பிப் பார்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


புதிய XUV 500 மாடலை முன்புறம் இருந்து பார்க்கும் போது, இது ஒரு சக்திவாய்ந்த காராக உருவெடுத்துள்ளது என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. இதன் பெரிய பானேட், பெரிய கிரில் மற்றும் அழகுணர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கீழ் புறம் ஆகியவை இணைந்து இதன் முன்புற தோற்றத்திற்கு பொலிவேற்றுகின்றன. இந்த காரின் கம்பீரமான தோற்றத்தின் பிரதிபலிப்பாக இதன் முன்புற தோற்றம் திகழ்கிறது.


முகப்பின் நடுவே உள்ள பெரிய கருப்பு நிற கிரில்லில், இந்நிறுவனத்தின் சின்னம் தெளிவாகத் தெரியும் விதத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரில்லின் கருமை நிற பின்னனியில் மெல்லிய க்ரோம் நிற வேலைப்பாடுகள் சீராகப் பொருந்தி உள்ளதைப் பார்த்தால் உங்களுக்கு இதன் மீது ஆசை வருவது உறுதி. கிரில்லின் இரு ஓரங்களிலும் இடம்பெறும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஹெட் லாம்ப் க்லஸ்டரில், சராசரியான மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து லைட்டிங் அமைப்புகளும் இடம் பெறுகின்றன.


முகப்பு மீது உள்ள மெலிதான க்ளாடிங் மற்றும் நன்றாகத் தெரியும் வளைவுகள் ஆகியவை முன்புற தோற்றத்திற்கு மெருகேற்றும் விதத்தில் திறம்பட வார்க்கப்பட்டுள்ளது. பம்பர் பகுதியின் இரண்டு ஓரங்களிலும் ஃபாக் லாம்ப்கள் பொருத்தப்பட்டு, அழகாக குரோம் முலாம் பூசப்பட்டுள்ளது. கண்ணைக் கட்டிப் போடும் பேரழகுடன் இல்லை என்றாலும், இந்த காரின் கண்ணியமான தோற்றத்தை நம்மால் ரசிக்க முடிகிறது. பம்பர் பகுதியின் நிறம் பாடி நிறத்துடன் ஒத்திருக்கிறது. கதவின் வெளிப்புற கைப்பிடிகளும் பாடி வண்ணத்திலேயே வருவது, வெளிப்புற தோற்றத்திற்கு சீரான வண்ணத்தைத் தருகிறது. W10 வேரியண்ட்டில் மட்டும் ஆன்டி-பிஞ்ச் வசதி கொண்ட எலக்ட்ரிக் சன்ரூஃப் இணைக்கப்பட்டுள்ளது. வெளிச்சத்தை உணர்ந்து கொள்ளும் வசதியுடன் வரும் ஹெட் லாம்ப்கள் மற்றும் மழை துளியை உணரும் வைப்பர்கள் போன்ற ஸ்மார்ட்டான சிறப்பம்சங்கள் W4 டிரிம் தவிர மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் வருகின்றன.


மிகப் பெரிய பானேட் மீது, மென்மையான வரிகள் சிறிய கீற்று போல உள்ளன. நவீன வடிவங்களை விரும்பும் வாடிக்கையாளர்களை இத்தகைய வடிவமைப்பு நிச்சயமாகக் கவர்ந்திழுக்கும். மெட்டாலிக் சருமத்தைக் கொண்ட பானேட் நளினமாக இரு புறங்களிலும் சரிந்து, பருமனான, உறுதியான சக்கர வளைவுகளில் சென்று முடிவடைகிறது.
ரியர் வியூ மிரர்கள் மின்னியக்கம் மூலம் மாற்றி அமைக்கக் கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த அமைப்பு W8 மற்றும் W10 ஆகிய வேரியண்ட்களுக்கே உரித்தானதாகும்.


பக்கவாட்டுப் பகுதியில் உள்ள உறுதியான ஃபெண்டர்கள் இதன் பக்கவாட்டுத் தோற்றத்திற்கு அதிக சக்தி வாய்ந்த இமேஜைத் தருகிறது. இது இன்றைய வாடிக்கையாளர்கள் விரும்பும் அமைப்பாக இருக்கிறது என்பதை நாம் இங்கே குறிப்பிடாக வேண்டும். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அலாய் சக்கரங்கள் நமது கண்களுக்கு மற்றுமொரு சிறிய விருந்து வைக்கின்றன. அதே நேரம், காரின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கருப்பு வண்ண ரூஃப் ரைல்ஸ், இது பயன்கள் மிகுந்த கார் என்ற எண்ணத்தை விதைக்கின்றன.


XUV 500 காரின் முன் நின்று பார்த்தால், மஹிந்த்ரா நிறுவனம் இந்த காருக்கு கவர்ச்சிகரமான தோற்றத்தை ஏற்படுத்த ஏராளமான முயற்சி எடுத்திருப்பது நமக்கு விளங்குகிறது. ஜன்னல் மீது உள்ள க்ரோம் அவுட்லைன் அதை மேலும் உறுதி செய்கிறது. இதன் பக்கவாட்டு தோற்றத்தை சற்றே மாறுபடுத்திக் காட்டுவதற்காக கருப்பு நிறத்தில் ஜன்னல் பிரேம்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பக்கவாட்டு பகுதி முழுவதும் பாய்ந்து செல்லும் தெளிவான க்ளாடிங்க் அமைப்பும் இதற்கு உதவுகிறது.


XUV 500 காரைப் பார்த்தவுடனேயே இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள சீரான வாகனம் என்ற தோற்றத்தை தருகிறது. இதன் பின் பகுதி, முன்புறத்தை விட அகலமாகவும் பருமனாகவும் உள்ளது. மஹிந்த்ரா நிறுவனம் இந்த காருக்கு துணிச்சலான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிப்பதற்காக கவனமாக செயல்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதற்காக நாம் அதற்கு தனிப்பட்ட பாராட்டை இங்கே தெரியப்படுத்துகிறோம். பருமனான மற்றும் ஆஜானுபாகமான தோற்றம் கொண்ட SUV –யாக இருந்தாலும், இதன் நேர்த்தியான, சீரான வடிவமைப்பு இதற்கு பந்தய காரின் தோற்றத்தையும் தருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. புதிய கூடுதல் லாம்ப்கள் பொருத்தப்பட்டு, குரோம் முலாம் பூசப்பட்டிருப்பது பளபளவென்ற தோற்றத்தைத் தந்தாலும், இதன் ஜொலிப்பை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று நமக்குத் தோன்றுகிறது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள நான்கு 17 அங்குல அலாய் சக்கரங்கள் XUV 500 –ல் கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளன. எனினும், W8 மற்றும் W10 ஆகிய டிரிம்களில் மட்டுமே அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடிப்படை லெவல் டிரிம்களான W4 மற்றும் W6 ஆகியவை முழுமையான வீல் கவர்களுடன் வருகின்றன.


அகலமான பின்பகுதி ஓரங்களில் உள்ள செங்குத்தான வடிவத்திலான டெய்ல்-லாம்ப்கள் மற்றும் நடுவில் உள்ள எளிமையான பாடி லைன்கள் ஆகியவை இணைந்து பின்புற தோற்றத்திற்கு மெருகேற்றுகின்றன. மேலும், டெய்ல் கேட் மீது பூசப்பட்டுள்ள குரோம் முலாம் இதன் மொத்த உருவத்திற்கும் நேர்த்தி, செழுமையான மற்றும் நிறைவான தோற்றத்தைத் தருகின்றன.
இரட்டை எக்ஸாஸ்ட் பைப்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் கிளாடிங்க் வரிகள் ஆகியவை XUV 500 என்ற இந்த SUV காரின் கம்பீர தோற்றத்தை அதிகப்படுத்துகிறன.

உட்புற அமைப்புகள்:


XUV 500 –ன் கேபின் பகுதி விசாலமாக இருக்கிறது. எனவே, உயரமான, குண்டான மற்றும் பருமனான நபர்களுக்கு உள்ளே வருவது சிரமமாக இருக்காது. உள்ளே சென்று, இருக்கையில் அமர்ந்தவுடன், உங்களால் காருக்குள் உள்ள செழுமையை உணர முடியும்.

XUV 500 –ன் உட்புற அமைப்பு மேனுவல் வெர்ஷனில் உள்ளதைப் போலவே உள்ளது. பல இடங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், சற்றே அதிக தரத்தில் உள்ள பொருட்களை உபயோகித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு சில குறைகள் இருந்தாலும், கேபின் உள்ளே உள்ள அற்புதமான அம்சங்கள் மற்றும் சரியான விதத்தில் பொருத்தப்பட்டிருக்கும் விதம் ஆகியவை இணைந்து குறைகளை மறக்கச் செய்து விடுகின்றன. முக்கியமாக, சென்டர் கன்சோல் பகுதியில் உள்ள வசதிகளைப் பார்க்கும் போது நமது உற்சாகம் அதிகமாகிறது. ஃபார்சூனரை விட குறைவான விலையில், அதாவது ரூ. 9 லட்சங்கள் என்ற இதன் விலையை வைத்துப் பார்க்கும் போது, இதில் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியவில்லை என்றே கூற வேண்டும். இதற்கு முன்பு இருந்த நிறத்தை விட, தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள இரட்டை வண்ண கருப்பு மற்றும் பீஜ் காம்பினேஷன் இனிமையான தோற்றத்தைத் தருகிறது. டாஷ் போர்டின் மேல் பாதியில் பளபளக்கும் கருப்பு வண்ணத்திலும், கிலோவ் பாக்ஸ் மற்றும் அதனைச் சுற்றிலும் உள்ள இடம் ஆகியவை பீஜ் நிறத்திலும் வருகிறது. அகலமான டாஷ் போர்டின் இரு ஓரங்களிலும், செங்குத்தான வடிவத்தில் ஏசி துளைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பு, ஒரு வித்தியாசமான தனித்துவமான தோற்றத்தை அந்த இடத்திற்கு அளிப்பதாக நமக்குத் தோன்றியது.


சென்டர் கன்சோல் மேல் பகுதியில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே அமைப்புடன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. அவற்றின் கட்டுப்பாட்டுக் கருவிகள் கீழே உள்ளன. இவற்றிற்கு கீழே சுழலும் முறையில் இயங்கும் ரோட்டரி கண்ட்ரோல் கொண்ட குளிர் சாதன அமைப்பு இடம்பெறுகிறது. இது ஸ்டைலாகவும், உயர்தரமாகவும் தோற்றம் அளிக்கிறது.


வலது புறத்தில் உள்ள ஸ்டியரிங் வீல் நமது கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மட்டுமல்ல, பிடித்து ஓட்டுவதற்கும் இது அருமையாக உள்ளது. W10 வேரியண்ட்டில் டெலெஸ்கோப்பிக் ஸ்டியரிங் பொருத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, W4 டிரிம்மில் 6 விதமாக மாற்றி அமைக்கக் கூடிய டிரைவர் சீட்டும், ஏனைய டிரிம்களில் 8 விதமாக மாற்றி அமைக்கக் கூடிய டிரைவர் சீட்டும் இடம்பெறுகிறது.


கேபின் பகுதியில் மிகவும் ஸ்டைலான அம்சம் எது என்று கேட்டால், இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் அமைப்பை அனைவரும் கை காட்டுவர். ஏனெனில், இதில் உள்ள டாக்கோமீட்டர் மற்றும் ஸ்பீடோமீட்டர் ஆகியவை சாதாரணமாக இல்லாமல், சற்றே எலிவேஷன் செய்யப்பட்டு பிரமாதமான தோற்றத்துடன் உள்ளன.


சீட்கள் பொருத்தப்பட்டுள்ள விதம் அருமையாக இருப்பதால், புகார் செய்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை. மஹிந்த்ரா நிறுவனம் இதை கச்சிதமாகச் செய்வதற்கு துல்லியமான நேர்த்தியான வடிவமைப்பு தத்துவத்தைக் கையாண்டுள்ளது. சீட் மீது உள்ள பீஜ் வண்ண விரிப்புகள் பரவசம் தருவதாக உள்ளது. இவை சாதாரண துணியாக இல்லாமல் லெதராக இருப்பதால், கண்களுக்கு இதமாக உள்ளன. W10 டிரிம்மில் மட்டுமே லெதர் விரிப்புகள் வருகின்றன. W4 வேரியண்ட்டில் ஜக்கார்ட் விரிப்புகளும், W6 டிரிம்மில் உயர்தர துணி விரிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், முன் வரிசையில் ஹெட் ரெஸ்ட்கள் மற்றும் ஆர்ம் ரெஸ்ட்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதால், சொகுசான பயணம் உறுதியாகிறது.

XUV 500 –ன் முன் வரிசையில், சென்ட்ரல் ஆர்ம் ரெஸ்ட் பகுதியின் கீழே, பொருட்களை வைத்துக் கொள்வதற்காக புத்திசாலித்தனமாக ஒரு சிறிய இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, உள்ளே உள்ள இதமான நீல வண்ண லைட்டிங் பயணத்தை இனிமையாக்குகிறது.


முதல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளில், கால் வைப்பதற்கான இடவசதி நன்றாகவே உள்ளது. ஆனால், மூன்றாவது வரிசையில் குழந்தைகள் அல்லது சிறிய உடல்வாகு கொண்ட பெரியவர்கள் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும்.
XUV 500 –ன் இருக்கைகள் சிறந்த முறையிலும், வசதியாக இருக்கும் விதத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, XUV 500 காரின் உயர்தர வேரியண்ட்டில், கிளைமேட் கண்ட்ரோல், புளு டூத் இணைக்கும் வசதி, க்ரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் காமிரா ஆகியவை பொருத்தப்பட்டு அனைவரையும் ஈர்க்கின்றன. இதற்கு முன்பு வந்த மேனுவல் வெர்ஷனில் உள்ள, ஆனால் இதில் இல்லாத ஒரே அமைப்பு எது என்று கேட்டால், இதன் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் ஆகும். XUV 500 மாடலை இயக்க, பழைய இக்னிஷன் முறையையே உபயோகிக்க வேண்டியுள்ளது.

செயல்திறன்:முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட XUV 500 –ல் பொருத்தப்பட்டுள்ள mHawk டீசல் இஞ்ஜினும் அதற்கு இணையாக முரட்டுத்தனமான 2179 cc திறன் கொண்டு வருகிறது. மேலும், சக்திவாய்ந்த இந்த இஞ்ஜினுடன் டர்போ சார்ஜர் இணைக்கப்பட்டுள்ளதால், இதன் செயல்திறன் அதிகரிக்கப்படுகிறது. இஞ்ஜின் விவரங்களும் நம்மை கவர்வதாக உள்ளன. அதாவது, இந்த இஞ்ஜின் 3750 rpm என்ற அளவில் 140 bhp சக்தி மற்றும் 1600 rpm – 2800 rpm என்ற அளவில் 330 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இஞ்ஜினை ஸ்டார்ட் செய்யும் போது, மிகக் குறைந்த டர்போ லாக் (lag) மட்டுமே இருப்பதை உங்களால் உடனடியாக உணர முடியும். நகர்புற சாலைகளில் XUV 500 –இல் பயணிப்பது சுகமான அனுபவமாகும், ஏனெனில், இதன் வலிமை மிக்க இஞ்ஜினை அனுதினமும் பயணம் செய்வதற்கு வசதியாக உருவாக்கியுள்ளனர். காருக்குத் தேவையான சக்தி அனைத்து நேரங்களிலும் சீராகச் செல்வதால், திடீரென்று இஞ்ஜினில் இருந்து சத்தம் ஏற்படுவது அரிதாகவே உள்ளது. இதில் உள்ள 6 ஸ்பீட் மேனுவல் சிங்க்ரோமேஷ் கியர் பாக்ஸ் பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளது. முதல் மற்றும் இரண்டாவது கியர் ஆகியவற்றிக்கு நடுவே மிகச் சிறிய இடைவெளியே உள்ளது. எனவே, நெரிசலான போக்குவரத்தில் பயணிக்கும் போது, கையாள்வது மிகவும் எளிதாக உள்ளது. நீங்கள் அந்த குளறுபடியான நேரத்தில் குழப்பமாகாமல் இயல்பாக ஓட்டலாம். சிறந்த திறனுடன் இயங்கும் வகையில் இதன் டார்க் கண்வெர்டர் கியர்பாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வேளைகளில் கிடைக்கும் மைலேஜில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.
டெல்லியில் இருப்பவர்களுக்கு மட்டும், புதிய XUV 500 மாடலில் 1997 cc திறன் கொண்ட டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. 2.2 லிட்டர் mHawk இஞ்ஜினின் உற்பத்தி திறனுடனேயே இந்த புதிய இஞ்ஜினும் வருகிறது. எனினும், புதிய இஞ்ஜினுடன் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2.0 லிட்டருக்கும் அதிகமான கொள்ளளவைக் கொண்ட டீசல் இஞ்ஜினை உச்சநீதி மன்றம் தடை விதித்த பின்பே, இத்தகைய புதிய இஞ்ஜினை மஹிந்த்ரா அறிமுகப்படுத்துகிறது. இது, டெல்லி நகரத்திற்கு மட்டும் பிரெத்தியேகமாக வழங்கப்படுகிறது.
XUV 500 SUV கார் லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் வரை செல்லக் கூடிய மைலேஜ் தருகிறது என்று ARAI எடுத்துரைக்கிறது. இதற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது, இதில் சற்றே அதிகமாக, அதாவது 0.9 kmpl அதிக மைலேஜ் தருகிறது.

சவாரி மற்றும் கையாளும் திறன்:


மஹிந்த்ரா XUV 500 காரின் சேசிஸ் அமைப்பு அருமையாக அமைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எதிர்பார்ப்பதை விட பயணம் இதமாகவே அமைகிறது. அது மட்டுமல்ல, சக்திவாய்ந்த கட்டமைப்பு மற்றும் அகலமான அளவு ஆகியவை இணைந்து, பயணம் செல்லும் வேளைகளிலும், இதன் ஸ்திரத்தன்மையை அதிகப்படுத்துகிறது. SUV தரக் கட்டுப்பாட்டின்படி, இதன் பாடி ரோல் மிகவும் குறைவாகவே உள்ளதால், ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. எனினும், திருப்பங்களில் மட்டும் நீங்கள் கவனமாகவே இருக்க வேண்டும். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போதும், XUV 500 தடுமாறாமல் சீராகச் செல்கிறது. ஒருவேளை இந்த கார் தரையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு தடுமாறாமல் ஸ்திரத்தன்மையுடன் செல்கிறது.


XUV 500 காரில், 3 இலக்க வேகத்தில் பயணம் செய்வது கடினமானது அல்ல. மேக் ஃபெர்சன் முன்புற ஆக்ஸில் மற்றும் மல்டி-லிங்க் வகையில் வரும் பின்புற ஆக்ஸிலுடன் இணைந்த, தனித்து இயங்கும் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு சிறப்பான முறையில் செயலாற்றுகிறது. இதன் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க ஆன்டி ரோல் பார்கள் இரண்டு ஆர்ம்கள் மீதும் பொருத்தப்பட்டுள்ளன. அது போலவே, இதில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்க் மற்றும் கேலிப்பர் வகை பிரேக்குகள் அற்புதமாக இயங்குகின்றன. காரின் வேகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் போதும், உடனடியாக நிறுத்தும் போதும் இது சிறந்த முறையில் செயல்படுவதால், மொத்தத்தில், இந்த கார் மிகச் சிறந்த கையாளும் திறனுடன் வருகிறது என்றே கூற வேண்டும்.

பாதுகாப்பு அமைப்புகள்:


முன்புறத்தில் வரும் இரட்டை காற்றுப் பைகள் மற்றும் பக்கவாட்டு, கர்ட்டன் காற்றுப் பைகள் உட்பட, பயணிகளைப் பாதுகாப்பதற்காக பல வலுவான பாதுகாப்பு அம்சங்களை XUV 500 காரில் இணைத்துள்ளனர். அனைத்து வேரியண்ட்களும் ABS மற்றும் EBD போன்ற சிறந்த பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதே நேரம், உயர்தர டிரிம்களில் ரோல்ஓவர் மிடிகேஷன் வசதியுடன் வரும் எலெக்டிரானிக் ஸ்டெபிலிட்டி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, மலை மீது பயணம் மேற்கொள்ளும் வேளைகளில் பாதுகாப்புக்கு ஹில் ஹோல்ட் மற்றும் டிசெண்ட் கண்ட்ரோல் அமைப்பு, சைட் இம்பாக்ட் பீம்கள், விபத்துகளைத் தடுக்கும் கிராம்ப்பில் ஜோன்கள் மற்றும் ஓட்டும் வேளைகளில் கட்டுப்பாட்டை அதிகரிக்க ட்யூப்லெஸ் ரேடியல்கள் ஆகியவை இணைந்து இனிய அமைதியான பயணத்திற்கு துணை நிற்கின்றன.

வேரியண்ட் வகைகள்:


மஹிந்த்ரா XUV 500 மாடல் W4, W6, W8 மற்றும் W10 என்று 4 வகை வேரியண்ட்களில் வருகிறது. அடிப்படை டிரிம் என கூறப்படும் W4 வேரியண்ட்டில் மிகக் குறைவான சிறப்பம்சங்களே இடம்பெறுகின்றன. W4 -ல், ஒரே ஒரு வரிசை LCD டிஸ்ப்ளே, புரொஜெக்டர் ஹெட் லாம்ப்கள், மின்னியக்கம் மூலம் இயங்கும் தட்பவெட்ப கட்டுப்பாட்டு கருவி, சாய்க்கும் வசதி கொண்ட டில்ட் பவர் ஸ்டியரிங், டிவின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர், பவர் விண்டோஸ் மற்றும் பின்புற டெய்ல் கேட்டை திறப்பதற்கு ரிமோட் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். நீங்கள் உயர்தர வசதிகள் கொண்ட ஆடம்பர காரை விரும்பினால், XUV 500 –ன் டாப் வேரியண்ட்டை நாம் உங்களுக்கு பரிந்துரைப்போம். அதே சமயம், ஆடம்பர வசதிகள் இல்லாமல் சிறந்த விலையில் உள்ள கார் வேண்டும் என்பவர்களின் ஆசைகளை, இந்த மாடலின் லோயர் எண்ட் டிரிம்கள் நிவர்த்தி செய்கின்றன.

தீர்ப்பு:


XUV 500 மாடல் அனைவரும் போற்றும் காரல்ல, ஆனால் ஒரு சில குறிப்பிட்ட வர்கத்தில் உள்ளவர்கள் இதன் மீது அதீத மோகம் கொண்டுள்ளனர், குறிப்பாக இளைஞர்கள். இதன் ஆஜானுபாகமான வெளிப்புற தோற்றம், விசாலமான மற்றும் சொகுசான உட்புற அமைப்புகள் மற்றும் கையாள்வதில் மிகுந்த நம்பகத்தன்மை போன்ற காரணங்களால், இந்த பிரிவில் உள்ள இதன் போட்டியாளர்களிடம் இருந்து இது தனித்து நிற்கிறது. அதே நேரம், மற்றொரு புறம் பார்த்தால், மிகக் குறைவான சாமான்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் வசதி, ஸ்டைலாக இல்லாமல் பயன்பாட்டுக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ள உட்புற கேபின் பகுதி வடிவமைப்பு, மூன்றாவது இருக்கை வரிசையில் உள்ள குறைந்த இட வசதி மற்றும் சற்றே குறைந்த செயல்திறன் போன்றவை கார் வாங்க நினைப்பவர்களை, வாங்க வேண்டுமா என்று யோசிக்க வைக்கும் அம்சங்களாக இவை இருக்கின்றன. வேண்டாம் என்று சொல்ல சில காரணங்கள் இருந்தாலும், வேண்டும் என்று சொல்வதற்கு சிறந்த தோற்ற அமைப்பு, சிறந்த இயக்கம், மற்றும் நியாயமான விலை ஆகியவை இணைந்து, இந்த காரை வாங்கத் தூண்டுகின்ற கவர்ச்சிகரமான அம்சங்கள் என்றால் அது மிகை இல்லை என்றே கூற வேண்டும். XUV 500 காரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்து உணர்ந்த பின்பும், உங்களுக்கு இதைவிட பெரிய பேக்கேஜ் தேவை என்றால், நீங்கள் தாராளமாக வேறு மாடல் காரைத் தேர்வு செய்து கொள்ளலாம்.