மஹிந்திரா TUV 300

` 7.6 - 10.6 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

மஹிந்திரா TUV 300 விமர்சனம்


ஹைலைட்ஸ்


டிசம்பர் 10, 2015: பெருகி வரும் அமோக வரவேற்பினால் இந்த TUV 300 வாகனத்தின் தயாரிப்பு எண்ணிக்கையை மாதத்திற்கு 6,000 யூனிட்டுகள் என்னும் அளவுக்கு மேலும் அதிகரிப்பது குறித்து மஹிந்திரா தீவிரமாக யோசித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த வாகனங்களில் AMT வேரியன்ட்கள் கணிசமான எண்ணிக்கையில் புக்கிங் ஆகி உள்ளன. போட்டி மிகுந்த இந்த காம்பேக்ட் SUV பிரிவில் தற்போது மாதம் ஒன்றுக்கு சுமார் 4,000 வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது. நமக்கு கடைசியாக கிடைத்த தகவலின் படி 16,000 வாகனங்களுக்கு மேல் இதுவரை புக்கிங் ஆகி உள்ளன.

கண்ணோட்டம்


அறிமுகம்:


மஹிந்திரா நிறுவனம் SUV பிரிவில் நிறைய வாகனங்களை அறிமுகப்படுத்தி நம்மை அவ்வப்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றது. அந்த வரிசையில் புதிதாக களம் இறக்கப்பட்டுள்ள வாகனம் தான் இந்த TUV 300 SUV வாகனம். முதல் முறை பார்க்கும் போதே இந்த வாகனம் தனது வித்தியாசமான வடிவமைப்பினால் நமது கவனத்தைக் கவர்கிறது என்பதை மறுக்க முடியாது. சற்று ஆழமாக இறங்கி இந்த வாகனத்தின் ப்ளஸ் மற்றும் மைனஸ் பாய்ண்ட்களை அலசுவோம்.

நிறைகள்


1. கேபின் இட வசதி. குறிப்பாக முதல் இரு இருக்கை வரிசையில் கால் மற்றும் தலை பகுதிக்கு போதிய இட வசதி உள்ளது. 2. 384 லிட்டர் டிக்கி கொள்ளளவு என்பது இந்த பிரிவிலேயே மிக அதிகப்படியான அளவு என்பது ஒரு முக்கியமான சிறப்பம்சம். 3. அனைத்து ட்ரிம்களிலும் ABS மற்றும் EBDயுடன் கூடிய இரட்டை காற்று பைகள் .

குறைகள்


1. NVH அளவுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. வாகனம் ஐடல் நிலையில் இருக்கும் போது பெடல் மற்றும் கியர் லீவரில் அதிகப்படியான அதிர்வுகளை உணர முடிகிறது. 2. 1.5 லிட்டர் என்ஜின் தான் என்றாலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இல்லை என்பது மட்டுமின்றி நெடுஞ்சாலைகளில் அதிகப்படியான வேகத் தேவை உள்ள காலங்களில் எளிதில் சோர்ந்து விடுகிறது. 3. மூன்றாவது வரிசை ஜம்ப் -சீட்கள் உண்மையில் பார்த்தால் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை.

தனித்துவமான அம்சங்கள்


1. ஒருங்கிணைக்கப்பட்ட மியூஸிக் சிஸ்டத்தில் உள்ள ப்லூசென்ஸ் தொழில்நுட்பம் உங்கள் ஃபோனை சிஸ்டத்திற்கு தேவையான BT ரிமோட் ஆக மாற்றுகிறது. 2. இந்த பிரிவில் முதல் முறையாக மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் இந்த வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தம்


இந்த காரின் வடிவமைப்பு ஏராளமான விழிகளை கவர்கிறது. பெரிய உருவம் , பளிச்சென்று உடல் பகுதியில் தெரியும் கோடுகள் , நல்ல அகலமான போனட் போன்றவை நிச்சயம் இதைக் கடந்து செல்பவர் யாரையும் திரும்பி பார்க்க செய்து விடும். இந்த அளவு விலை உள்ள வாகனத்தில் சராசரியாக மஹிந்திரா நிறுவனத்தின் இன்டீரியர் அமைப்பு எப்படி இருக்குமோ அப்படி இல்லாமல் மிகவும் சிறப்பாக இந்த TUV யின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. (படிக்கவும்:க்வாண்டோ) . வசதிக்கான அம்சங்களும் நிறைய இந்த வாகனத்தில் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு கூரை பகுதி விளக்குகள் , பொருட்களை வைக்க ஸ்டோரேஜ் ட்ரே, கப் ஹோல்டர் , பவர் ஜன்னல்கள் , ப்ளுடூத் தொடர்பு வசதி , ஸ்டீரிங் சக்கரத்துடன் இணைக்கப்பட்ட ஆடியோ சிஸ்டத்தை இயக்க தேவையான பொத்தான்கள் போன்ற அம்சங்களை சொல்லலாம். டீசல் மோட்டார் பொருத்தப்பட்ட மாடலுடன் ஆப்ஷ்னலாக AMT தொழில்நுட்பம் கொண்ட ட்ரிம் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. வாருங்கள் பார்க்கலாம்.

வெளிப்புற தோற்றம்


மஹிந்திரா இந்த TUV 300 வாகனத்தை ஒரு முரட்டுதனமான , கடினமான வாகனமாக உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த வாகனத்தின் வடிவமைப்பை ஒரு ராணுவ கவச வாகனத்தை முன் மாதிரியாக கொண்டு வடிவமைத்துள்ளதாக மஹிந்திரா தெரிவிக்கிறது. உண்மையா ? உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? இந்த வாகனத்தின் முன்புறம் மத்திய பகுதியில் அகலமான 5 – ஸ்லேட் க்ரில் பொருத்தப்பட்டு அதில் குரோம் செருகல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு இரண்டு பக்கங்களிலும் ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள் உள்ளன. மஹிந்திரா நிறுவனம் இந்த TUV வாகனங்களில் DRL களை பொருத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இதை விட விலை குறைவான KUV 100 வாகனங்களில் DRL களை பொருத்தி இருக்கும் போது இந்த வாகனத்தில் ஏன் பொருத்தவில்லை என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. ஃபாக் விளக்குகள் பம்பரின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஃபாக் விளக்குகளை சுற்றியும் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் முகத் தோற்றம் மற்ற மஹிந்திரா SUV வாகனங்களுடன் ஒப்பிடுகையில் அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக இல்லை என்பது இங்கே கவனிக்கதக்கது. அப்படி இல்லை என்பதாலேயே பலர் இந்த வாகனத்தை விரும்புகின்றனர் என்பது வியப்பான உண்மை. சதுர வடிவிலான வீல் ஆர்ச்கள் ஒரு புதுமையான வடிவமைப்பு உத்தியை நமக்கு அறிமுகம் செய்கிறது. இந்த புதிய முறை வடிவமைப்பு, ஆர்ச் மற்றும் சக்கரத்திற்கு இடையே நிறைய இடைவெளி இருக்குமாறு செய்கிறது. சக்கரங்களைப் பொறுத்தவரை இன்னும் சிறப்பானதாக இந்த வாகனங்களில் பொருத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த வாகனத்தில் அனைத்து பாகங்களும் நல்ல பெரியதாக இருக்கையில் சக்கரங்கள் மட்டும் வெறும் 15” அல்லாய் சக்கரங்களாக இருப்பது ஒரு குறை என்றே சொல்ல வேண்டும். கருப்பு நிற சைட் ஸ்டெப்ஸ் கருப்பு நிறத்தில் உள்ள கூரை பகுதி ஸ்கி ரேக் உடன் நன்கு பொருந்தி போகிறது. காரின் பின்புற வடிவமைப்பு சற்று பருமனாக இருப்பது மொத்தத்தில் இந்த வாகனத்தின் தோற்றத்தை சிறப்பாக்கி காட்டுகிறது என்றே சொல்ல வேண்டும். எளிமையான வடிவமைப்பே இந்த TUV 300 வாகனம் நம்மைக் கவர முக்கிய காரணம் ஆகும். டெயில் விளக்குகளைச் சுற்றி மெலிதான ஒரு பூச்சு கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்க படு நேர்த்தியாக உள்ளது . உபரி சக்கரம் டெயில் கேட்டிற்கு வலது பக்கமாக பொருத்தப்பட்டுள்ளது.

1 2

இன்டீரியர்ஸ்


TUV யின் உட்புற கேபின் கருப்பு மற்றும் பழுப்பு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதனுடன் மங்கலான வெள்ளி நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது. . மஹிந்திரா வாகனங்களில் பொதுவாக உள்ள நேர்த்தியான வண்ண கலவை அளவுக்கு இந்த TUV யில் சிறப்பாக இல்லை என்றாலும் , இந்த வாகனத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இந்த இன்டீரியர் நன்றாகவே இருக்கிறது என்று சொல்லலாம். தாராளமான இடவசதி மற்றும் சரியான அளவுகளில் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நமது குழுவில் இருந்த உயரமான மற்றும் பருமனான உடல் வாகு கொண்ட உறுப்பினர்கள் டிரைவர் இருக்கையில் அமர்ந்த போது எந்த விதமான அசௌகரியமும் இருப்பதாக கூறவில்லை என்பதில் இருந்தே நன்கு புரிந்துக் கொள்ள முடிந்தது . டேஷ்போர்ட் பகுதி மிக நேர்த்தியாக வடிவைக்கப்பட்டுள்ளது என்று நிச்சயமாக சொல்லலாம். கருப்பு மற்றும் பழுப்பு வண்ணங்கள் இந்த டேஷ்போர்ட் பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மத்திய பகுதி கருப்பு வண்ணத்திலும் , மேல் மற்றும் கீழ் பகுதி பழுப்பு வண்ணத்திலும் மிக அழகாக காட்சியளிக்கிறது. இந்த கருப்பு டிஸைனானது முன்புற கன்சோல் பகுதியில் உள்ள இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஸ்டீரிங் வீல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மதிய கன்சோல் பகுதி எளிய முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளது. இந்த கன்சோல் பகுதிக்கு கொடுக்கப்பட்டுள்ள கருப்பு வண்ணமும் வெள்ளி நிற பூச்சும் இந்த பகுதியை மேலும் மெருகேற்றி காட்டுகிறது. கன்சோல் பகுதியின் மேலே இரண்டு AC டக்ட்ஸ் உள்ளது. அதற்கு நேர் கீழே ப்ளூடூத், ஆக்ஸ், USB மற்றும் இன்னும் சில அம்சங்களை உள்ளடக்கிய 2 DIN ஆடியோ சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. ரேடியோவை இயக்குவதற்குரிய பொத்தான்கள் இந்த சின்ன திரையை சுற்றி பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஃபேசியா பகுதியின் கீழே மூன்று பெரிய AC யை இயக்க தேவையான குரோமால் மூடப்பட்ட நாப் (திருகிகள் ) பொருத்தப்பட்டுள்ளன. கியர் லிவருக்கு முன்பாக 12V பவர் சாக்கெட் USB மற்றும் ஆக்ஸ் - இன் போர்ட் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு முன்புற இருக்கைக்கு நடுவே சற்று பின்னுக்கு தள்ளி கப் ஹோல்டர்கள் மற்றும் வேறு பொருட்களை வைப்பதற்கான இடவசதி செய்யப்பட்டுள்ளது. நான்கு ஜன்னல்களையும் இயக்க தேவையான பவர் ச்விட்ச்கள் இரண்டு இருக்கைக்கும் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. ஹேன்ட் ப்ரேக்குக்கு பின்புறம் சிறிய அளவிலான ஸ்டோரேஜ் பாக்கெட் ஒன்றும் உள்ளது. இது எந்த வித பெரிய பயன்பாட்டிற்கும் உதவாது. சில்லறை , சாவி அல்லது மிகச் சிறிய அளவிலான பொருட்களை வைத்து கொள்ள பயன்படும் . கேபின் பகுதியின் மேற் கூரையில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு ஸ்கார்பியோவில் உள்ள விளக்கை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அதைத் தவிர ஸ்வைவல் மற்றும் ப்ளுடூத் மைக் ஒன்றும் கூரைபகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் , சினிமா தியேட்டரில் கதவு மூடப்பட்ட நிலையில் மங்கும் விளக்குகளைப் போன்று வாகனத்தின் கதவு மூடப்பட்ட நிலையில் தானாக மங்கும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக கேபின் பகுதி வித்தியாசமான ஒளியால் ரம்மியமாக தோற்றமளிக்கிறது. ஆக உட்புற வசதிகளைப் பொறுத்தவரை எந்த விதமான குறைபாடும் இல்லை என்று சொல்லலாம். முன்புற பயணிக்கு தனித்தனி ஆர்ம்ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. வினைல் மற்றும் துணி கொண்டு செய்யப்பட்டுள்ள சீலைகள் மிகுந்த நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது. ஆனால் சீலைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள துணி இன்னும் தரமானதாக இருந்திருக்கலாம் என்பது எங்கள் தனிப்பட்ட கருத்தாகும். ஸ்டீரிங் சக்கரத்தின் வலது கை பக்கத்தில் உள்ள பகுதி ஸ்கார்பியோ மற்றும் XUV 5௦௦ வாகனங்களில் உள்ள அதே வடிவமைப்பையே கொண்டுள்ளது. பளபளக்கும் மஹிந்திரா நிறுவன சின்னம் ஸ்டீரிங் சக்கரத்தின் நடுவே இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீரிங் சக்கரத்தை பிடிக்கும் போது நல்ல கைக்கு இதமாக, மென்மையாக உள்ளதை உணர முடிகிறது. டாப் - எண்டு வேரியன்ட்களில் ஸ்டீரிங் சக்கரத்தின் கீழ் பகுதியில் வெள்ளி நிற பூச்சு கொடுக்கப்பட்டு ஒரு ப்ரீமியம் காருக்கான தோற்றத்தைக் கொடுக்கிறது. ஸ்டீரிங் சக்கரத்தின் முன்புறம் ஸ்பீடோமீட்டர் மற்றும் டேகோமீட்டர் இணைக்கப்பட்டுள்ளது. சற்று உற்று பார்த்தால் இந்த இரண்டுக்கும் கூட சுற்றி குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

பெர்ஃபார்மன்ஸ் (செயல்திறன்)


இந்த TUV வாகனத்தில் மஹிந்திரா தனது எம்ஹாக்80 மொடாரைப் பொருத்தி உள்ளது. 84bhp மற்றும் 230 nm அளவு டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 1.5 லிட்டர் 3 -சிலிண்டர் என்ஜின் இதுவாகும். இது முந்தைய குவாண்டோ வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 16bhp மற்றும் 10 nm டார்க் குறைவாகும் . இந்த என்ஜின் 5 - வேக மேனுவல் ட்ரேன்ஸ்மிஷன் வசதி கொண்டுள்ளது. கியர் மாற்றுவது மிக சுலபமாக உள்ளது. இந்த வாகனத்தை நீங்கள் ஓட்டும் பொழுது ,குறைவான வேகத்தில் இந்த என்ஜின் படு நேர்த்தியாக செயல்படுவதை உணர முடிகிறது. இந்த எஞ்சினின் செயல்பாடு 100 கி.மீ வேகத்தை தொடும் போது உச்சத்தை அடைகிறது. அதற்கு மேல் குறைய தொடங்குகிறது. 100 கி.மீ வேகத்தை தொடுகையில் என்ஜின் 2000rpm வேகத்தில் சுழல்கிறது. அதையும் விட வேகாதை நீங்கள் விரும்பி A - பெடலுக்கு அழுத்தம் தந்தால் இந்த என்ஜின் இரைச்சலைத் தான் வெளியிடுகிறது. இதன் மூலம் , 100 கி.மீ வேகம் வரை இந்த என்ஜின் சுகமாக இயங்குகிறது என்று நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

3

ஒட்டுதல் மற்றும் கையாளுதல்


மஹிந்திரா நிறுவனம் இந்திய சாலைகளை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சரியான முறையில் சேஸிஸ் வடிவமைப்பை செய்துள்ளனர். இந்த வாகனத்தில் பயணம் செய்த பின் ஒட்டுமொத்தத்தில் பயண தரத்தை இன்னும் சற்று கூடுதலாக மேம்படுத்தி இருக்கலாம் என்றே என்ன தோன்றுகிறது. ஆனால் குவாண்டோ வாகனங்களை விட TUV வாகனத்தின் பயண தரம் மிக நன்றாக உள்ளது என்றே கூற வேண்டும். ரைடு குவாலிட்டி என்று சொல்லப்படும் பயண தரம் இந்த வாகனத்தில் சராசரியாக தான் உள்ளது என்று உறுதியாக சொல்லலாம். அதிகமான கிரௌண்ட் கிளியரன்ஸ் மட்டுமே ஸ்மூத்தான சவாரிக்கு போதுமானது என்று சொல்லி விட முடியாது. அதிலும் குறிப்பாக பின்புற இருக்கைகள் பல்ல மேடான சாலைகளில் செல்கையில் அதிகம் மேலெழும்புகிறது. எடை குறைவான ஹைட்ராலிக் ஸ்டீரிங் இந்த குழந்தை SUV வாகனத்தை கையாளுவதை எளிதாக்குகிறது என்று சொல்லலாம். நீங்கள் ஈகோஸ்போர்ட் போன்ற கார்களில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்டீரிங்கை பயன்படுதியவரானால் இந்த TUV ஸ்டீரிங்கை சற்று எடை கூடுதல் உள்ளதாக உணருவீர்கள். மொத்தத்தில் இந்த ஸ்டீரிங் நல்ல முறையில் பேலன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். ப்ரிசிஷன் சற்று மேம்படுத்தப்படிருக்கலாம் என்று தோன்றுகிறது.

பாதுகாப்பு


பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து ட்ரிம்களிலும் இருக்கிறது. கொலேப்ஸிபல் ஸ்டீரிங் காலம்ன் உட்பட நிறைய பாதுகாப்பு அம்சங்கள் நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. பக்கவாட்டு பகுதி இன்ட்ரூஷன் பீம்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் விளக்கு, தானியங்கி டோர் லாக் வசதி மற்றும் டிஜிடல் இம்மொபிலைசர் போன்ற அம்சங்கள் அனைத்து ட்ரிம்களிலும் வருகிறது. எந்த வேரியன்ட்டை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் ட்யூயல் காற்று பைகள் மற்றும் ABS அமைப்பு முதலியவைகளை ஆப்ஷ்ணளாக பெற்றுக்கொள்ளலாம் .

4

வேரியன்ட்கள்


மொத்தம் ஏழு ட்ரிம் அளவுகளில் இந்த துவ் வெளியிடப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை வேரியன்ட்களான T4 மற்றும் T4 ப்ளஸ் ஆகிய வேரியன்ட்களில் ஓரளவுக்கு சராசரியான அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பவர் ஸ்டீரிங் . டில்ட் ஸ்டீரிங் , AC யூநிட், முன் மற்றும் பின்புறங்களில் பவர் விண்டோஸ் மற்றும் கேபின் உட்புற கூரை பகுதியில் ஒரு விளக்கு ஆகியவை உள்ளன. இதற்கு அடுத்தபடியாக T6 ,T6 ப்ளஸ் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதி கொண்ட T6 ப்ளஸ் ஆகிய வேரியன்ட்களில் பின்புற டிஃபாகர் , பின்புற வைபர் மற்றும் வாஷர் வசதியுடன் வருகிறது. மேலும் நல்லதொரு இனிமையான பொழுதுபோக்கு அனுபவத்தை தரவல்ல மஹிந்திரா ப்ளுசென்ஸ் மொபைல் ஆப் , ஆக்ஸ் -இன் , ப்ளுடூத் மற்றும் USB ஆகிய வசதிகளை உள்ளடக்கிய 2 டின் இந்போடைன்மென்ட் அமைப்பு இதில் உள்ளது. கடைசி இரண்டு டாப் - எண்டு வேரியன்ட்களான T8 மற்றும் T8 AMT ஆகியவை தான் இந்த TUV ட்ரிம் வகைகளிலேயே மிகவும் சிறப்பானதாக தெரிகிறது. இந்த இரண்டு ட்ரிம்களிலும் பிரத்தியேகமான டிரைவர் இன்பார்மேஷன் சிஸ்டம் , வாய்ஸ் மெசேஜிஞ் சிஸ்டம் , ரிமோட் லாக், கீலெஸ் என்ட்ரி, உயரம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை, ஆர்ம்ரெஸ்ட், முன்புற இருக்கையில் உள்ள பயணிக்கு கால் பகுதிக்கான சபோர்ட் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் எந்த ட்ரிம் வாங்குவது என்று முடிவு செய்வதற்கு , முதலில் எந்தெந்த அம்சங்கள் உங்களுக்கு தேவை , என்னென்ன வசதிகள் தேவை இல்லை என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் அனைத்து சிறப்பம்சமும் வேண்டும் , விலை ஒரு பொருட்டு இல்லை என்று நினைத்தால் டாப் - எண்டு வேரியன்ட்டை வாங்குவது சரியான முடிவாக இருக்கும். உங்களால் குறைந்த அளவு விலை தான் கொடுக்க முடியும் என்றால் நீங்கள் சில பல சிறப்பம்சங்களை தியாகம் செய்துக் கொண்டு விலை குறைந்த லோ -எண்டு வேரியன்ட்களை வாங்கலாம். சிறப்பம்சங்கள் விஷயத்திலும் அதிகமாக சமாதானம் செய்துக் கொள்ளாமல் விலையும் ஓரளவு உங்களால் அதிகம் செலுத்த முடியும் என்றால் நீங்கள் நடுத்தர ட்ரிம் வாகனத்தை தேர்ந்தெடுப்பது சரியான முடிவாக இருக்கும்.

5

தீர்ப்பு


எங்கள் இறுதி தீர்ப்பை இப்படி சொல்லுகிறோம். நல்ல இடவசதி கொண்ட , 5 நபர்கள் வசதியாக அமர்ந்து பயணிக்க கூடிய ஒரு காம்பேக்ட் SUV வாகனம் ஒன்று வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த TUV 300 வாகனத்தை வாங்குவதே சரியான தீர்வாக இருக்கும். இந்த வாகனத்தின் கட்டமைப்பும் ,இஞ்சின் திறனும் மிகச் சிறந்ததாக இல்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக இந்த TUV யை இதன் முக்கிய போட்டியாளரான ஈகோஸ்போர்ட் கார்களுடன் ஒப்ப்பிடுகையில் நிச்சயம் தரத்தில் சற்று பின்தங்கி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மாருதி நிறுவனம் இதே பிரிவில் அறிமுகப்படுத்த உள்ள விடாரா பரீஸா கார்களும் களத்தில் இறங்கி விட்டால் மஹிந்திரா நிறுவனத்தினர் இந்த TUV 300 வாகனத்தை நிலை நிறுத்த நிச்சயம் சில மேம்பட்டுகளை இந்த வாகனங்களில் செய்தே ஆக வேண்டியது கட்டயாமாகி விடும்.