மஹிந்திரா தார்

` 5.0 - 8.9 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


ஜூலை 23, 2015: சீறிப் பாயும் காளையின் தோற்றத்தில் வரும் மஹிந்த்ராவின் தார் மாடலின் தோற்றம் முழுவதுமாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் மிடுக்குடன் வரும் தாரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன், தற்போது இந்திய சந்தையில் வெளியாகி உள்ளது. நம்மை ஆச்சர்யமூட்டும் புதிய அம்சங்கள் வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமல்ல, இதன் உட்புற அமைப்புகளிலும் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு. கம்பீரமான பம்பர்கள், மறுவடிவமைக்கப்பட்ட சக்கர வளைவுகள் மற்றும் டிரிம் ஆப்ஷங்கள் என பல புதிய அமைப்புகள் இடம்பெறும் இந்த புதிய மாடல் தார், தரம் மற்றும் நுணுக்கமான அமைப்புகளின் சின்னமாகத் திகழ்கிறது என்றால் அது மிகை இல்லை. வர்த்தக ரீதியாக தனது புகழை தானே பரப்பிக் கொள்ளும் விதத்தில் தார் மாடல் உருவாக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் செல்லும் போது இதனைக் கடந்து செல்பவர்கள், கட்டாயம் தாரை இரண்டாவது முறையாகத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அற்புதமான தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்டுள்ள ஆஃப் ரோடர் மாடலான தாரில், ஒரு சில மெக்கானிக்கல் மேம்பாடுகளும் இடம்பெறுகின்றன என்பது கூடுதல் செய்தி.

சிறப்பம்சங்கள்


Table 1

மஹிந்த்ரா தார் விமர்சனம்மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம், பயணிகள் மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் பயன்பாட்டு வாகனங்களைத் தயாரிப்பதில் மிகவும் பிரபலமான நிறுவனம் ஆகும். இந்திய வாகன சந்தையில், மிக மலிவான விலையில் ஆஃப் ரோடர் கார்களை அறிமுகப்படுத்துவத்தில் இது தலைசிறந்த நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள ஆஃப்- ரோடர் கார் பிரியர்களுக்காக, மஹிந்த்ரா நிறுவனம் 2010 –ஆம் வருடம் தார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அறிமுகம் ஆன பின்பு, சொகுசு வசதிகள், பாதுகாப்பு அமைப்புகள், ஸ்டைலான அம்சங்கள் மற்றும் இதன் இஞ்ஜின் திறன் போன்றவற்றில் எதுவுமே மாற்றமடையாமல் அப்படியே இருந்தது. பல வருடங்களுக்குப் பின், வெளிப்புறம் மற்றும் தரம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய தார் வெர்ஷனை மஹிந்த்ரா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. எனினும், இதற்கு முந்தைய மாடலில் இருந்த அதே டீசல் இஞ்ஜின் ஆப்ஷன்களையே தக்க வைத்துள்ளது என்பதையும் நாம் இங்கே குறிப்பிட வேண்டும். 63 bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்யும் 2.5 லிட்டர் DI (டைரக்ட் இஞ்ஜெக்ஷன்) இஞ்ஜினும் அவற்றில் ஒன்றாகும். அடிப்படை மற்றும் நடுத்தர டிரிம்களில் பொருத்தப்பட்டு வரும் இந்த இஞ்ஜின், 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இதன் உயர்தர வெர்ஷனில் 105 bhp என்ற அளவு சக்தியை உற்பத்தி செய்யும் சக்திவாய்ந்த 2.5 லிட்டர் CRDe டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.
புதிய தார் மாடலை வெளியிடும் போது, மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனருமான திரு. பிரவீன் ஷா, “அறிமுகம் ஆனா நாளில் இருந்து, தார் மாடல் மஹிந்த்ரா நிறுவனத்தின் மரபான முரட்டுத்தனமான தோற்றத்துடன் வலம் வந்து, எங்கள் மரபின் சின்னமாகவே விளங்கியது. ஏற்கனவே எங்கள் நிறுவனத்தின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கும் இந்த பிரபலமான ஆஃப்-ரோடர் மாடலின் புதிய அவதாரத்தை இன்று வெளியிடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நவீன வாழ்க்கை முறையில் உள்ள இன்றைய வாடிக்கையாளர்கள், தங்கள் பயணங்களில் சாகசம் மற்றும் வேடிக்கை அனுபவத்தை ஆர்வத்துடன் வரவேற்கின்றனர். இத்தகைய சாகச பிரியர்களுக்கு, புதிய தார் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. திறன் அதிகரிக்கப்பட்ட தார் மாடல், ஆஃப்-ரோடர்கள் மத்தியில் மேலும் அதிகமாகப் பிரபலமாவது மட்டுமல்லாது, கூடுதலாக புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுத் தரும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு,” என்று ஆர்வத்துடன் கூறினார்.
புதிய தாரின் இயக்கம், 4x4 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உள்ளதால், இதன் 4 சக்கரங்களுக்கும் சக்தி செலுத்தப்பட்டு, சிறந்த ஆஃப்-ரோடராகப் பரிமளிக்கிறது. இதன் ஆஃப்-ரோட் திறனை அதிகாரிக்கும் விதத்தில் இயாட்டன் நிறுவனம் தயாரித்துள்ள எம்லாக்கர் (Mlocker) அமைப்பு ஆப்ஷனல் அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. இது என்ன புதிய அமைப்பு என்று கேட்பவர்கள் குழப்பமடைய வேண்டாம், ஏனெனில், இது ஒரு புதுமையான மெக்கானிக்கல் லாகிங்க் அமைப்பாகும். இதன் மூலம், வழுக்கும் பாதைகளைக் கூட எளிதாகக் கடக்க முடியும். அது மட்டுமல்ல, புதிய தாரில் மறுவடிவமைக்கப்பட்ட பம்பர்கள் மற்றும் புதிய ஃபெண்டர் எக்ஸ்டென்ஷன்கள் பொருத்தப்பட்டு, கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. பின்புறத்தில், பெரிய அளவிலான சற்றே சாய்ந்த விதத்தில் படிகள் பொருத்தப்பட்டுள்ளதால், பயணியர்கள் உள்ளே சென்று வெளியே வருவது சுலபமாகிறது. உட்புற அமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாறுதல்களில், இரட்டை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள இதன் டாஷ்போர்டு, சில்வர் வேலைப்பாடுகளுடன் வரும் புதிதாக வடிவம் கொண்ட ஏர் வெண்ட்கள் மற்றும் நவீன தோற்றம் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் போன்றவை மிகவும் முக்கியமானவை ஆகும். இருக்கைகள் அனைத்தும் அகலமாக்கப்பட்டு, அதிக குஷன் பொருத்தப்பட்டு வருவதால், பயணிகள் சுகமான பயண அனுபவத்தைப் பெற முடியும். மேலும், அற்புதமான ஸ்டியரிங் வீல், குளிர்சாதன கருவியின் கட்டுப்பாட்டுக் கருவிகள், கியர் லீவர் மற்றும் ஹேண்ட் பிரேக் ஆகியவை பொலீரோ SUV மாடலில் உள்ளதைப் போன்று அப்படியே உள்ளன. பயன்பாடுகள் மிகுந்த இந்த அம்சங்கள், புதிய தாரின் அனைத்து வேரியண்ட்களிலும் இடம்பெறும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமார்ந்து போவீர்கள். ஏனெனில், உயர்தர வேரியண்ட்டில் மட்டுமே பல மேம்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைத்து வேரியண்ட்களிலும், இதற்கு முந்தைய தார் வெர்ஷனில் இடம்பெற்ற அதே அம்சங்களே இடம்பெறுகின்றன. தார் மாடலில் பயணிக்கும் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பைப் பற்றி குறிப்பிடும் போது, மாற்றி அமைக்கப்பட்டுள்ள இன்னர் ஷெல் மற்றும் உயர்தர MM பாடி ஷெல் ஆகியவை மிகச் சிறப்பாக விபத்துகளின் போது பயணிகளைப் பாதுகாக்கிறது என்பதை நாம் கட்டாயம் குறிப்பிட வேண்டும். சிறப்பான முறையில் இயங்கும் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு, அனைத்து நிலப்பரப்புகளிலும் ஸ்திரத்தன்மையுடன் பயணிக்க உதவுகிறது. கேபின் பகுதியில் தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், மஹிந்த்ராவின் க்வாண்டோவில் உள்ளதைப் போல உயர்ந்த தரத்தில் இல்லை என்பதை இங்கே எடுத்துரைக்க வேண்டும். அதே போல, இது உயர்தர பிரிமியம் பிரிவில் தார் இல்லை என்றாலும், கேபின் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் தரத்தை அதிகரித்திருக்கலாம் என்பது எமது தாழ்மையான கருத்து. ஏனென்றால், இது ஒரு பெரிய குறையாக உள்ளது. உண்மையில், இதன் பிரிவிலேயே புதிய தார் தனித்துவமான தோற்றத்துடன் வருவதால், இதனுடன் நேருக்கு நேர் நின்று போட்டியிடுவதற்கு எந்த மாடலும் இல்லை என்றே கூற வேண்டும். எனினும், ஃபோர்ஸ் நிறுவனத்தின் குர்கா மாடல், இதன் விற்பனை சதவிகிதத்தை பாதிக்கும் போட்டியாளராக உருவாகிக் கொண்டிருக்கிறது.

வெளிப்புறத் தோற்றம்:ஒரு முழுமையான பந்தய பயன்பாட்டு வாகனத்திற்குரிய அனைத்து வெளிப்புற அம்சங்களும் நிறைந்த மாடலாகப் புதிய தார் வெளிவந்துள்ளது. புதிய தாரில் மஹிந்த்ரா தனது நிறுவனத்தின் தனித்துவமான பாடி அமைப்பை மாற்றாமல், ஒரு சில போற்றத்தக்க மாற்றங்களை மட்டும் செய்து வெளியிட்டுள்ளது. அதே நேரம், பிளாஸ்டிக் வடிவத்தில் பெண்டர்கள் நீட்டிக்கப்பட்டு புதிய வடிவம் கொண்டு, தோற்றத்திற்கு பொலிவு சேர்க்கின்றன. வட்ட வடிவத்தில் வரும் இதன் ஹெட் லைட் கிளஸ்டரையும், ரேடியேட்டர் கிரில் பகுதியையும் மாற்றம் செய்யாமல், அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. பானேட்டிலும் எந்த மாற்றமும் இல்லாமல், அதே தட்டையான வடிவத்தில் ஓரங்களில் வளைந்து காணப்படுகிறது. விண்ட் ஸ்கிரீன் அகலமாகவும், சிறியதாகவும் உள்ளது. இதுவும், இதன் வெளிப்புறத் தோற்றத்திற்கு தனித்துவமான அழகைப் பெற்றுத் தருகிறது என்பதை நாம் மறுக்க முடியாது. விண்ட் ஸ்கிரீன் பகுதியின் கீழே, நடுப் பகுதியில் இந்நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டுத் தோற்றத்திற்கு கம்பீராமான அழகைப் பெற்றுத் தரும் வித்தியாசமான ஃபெண்டர்கள் பக்கவாட்டுப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. உறுதியான ஸ்டீல் ரிம்கள் மீது இந்த ஃபெண்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. தெள்ளத் தெளிவாகத் தெரியும் இந்த ஃபெண்டர்கள் மட்டுமே இதன் பக்கவாட்டில் இடம்பெறும் ஒரே மாற்றமாகும். புதிய தாரின் கதவு பேனல்களும் அதே பழைய வடிவத்தில், மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இதற்கு முந்தய வெர்ஷன் போலவே உன்னதமான வடிவத்தில் வருகின்றன. வெளிப்புறம் உள்ள ரியர் வியூ மிரர்கள் மீது தொப்பி போன்ற வடிவத்தில் உள்ள பகுதிக்கு, கருப்பு நிறம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், நவீன மின்னியக்க அட்ஜஸ்ட்மெண்ட் எதுவும் இல்லாமல், இந்த மிரர்கள் மேனுவலாக மாற்றி அமைக்கும் வசதி மட்டுமே பெற்றுள்ளன. புதிய தாரின் பின்புறத்திலும், ஒரு சில மாற்றங்களை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது, முக்கியமாக விதானத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள இதன் கானொப்பி நிச்சயமாக உங்கள் கண்களில் இருந்து தப்பாது. இந்த விரிப்பின் தரம் உயர்ந்ததாக உள்ளது. இது பின்புறம் நோக்கி வந்து, கீழிறங்கி முடிவுறும் போது சற்றே சாய்ந்து அனைவரையும் வசீகரிக்கிறது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், உங்களுக்குத் தேவை இல்லாத சமயங்களில் நீங்கள் இதைக் கழற்றி வைத்துக் கொள்ள முடியும். இது தவிர, முன்புற பம்பர் போலவே பின்புறத்திலும் நெகிழி மற்றும் உலோகத்தால் உருவாக்கப்பட்ட பம்பர், இதன் கம்பீர தோற்றத்திற்கு மெருகூட்டுகிறது. ஒரு டப்பா போன்ற வடிவத்தில் வரும் இதன் டெய்ல் லைட் க்லஸ்டரிலும் மாற்றம் எதுவும் இல்லை. இதில், பிரேக் லாம்ப்கள், கர்டிசி லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இவை, இதற்கு முந்தய வெர்ஷனில் இருந்த அதே வசதிகள் ஆகும். இதன் மோட்டார் மற்றும் வைப்பர் ப்ளேடுகள் ஆகியவை சிறப்பாக செயல்படுவதற்கு, புதிய வைப்பர் லிங்கேஜ்கள் உறுதுணையாக இருக்கின்றன.

வெளிப்புற அளவுகள்:


இதற்கு முந்தய வெர்ஷன் போலவே, புதிய மஹிந்த்ரா தாரின் மொத்த நீளம் 3920 மிமீ என்ற அளவிலும், அகலம் 1726 மிமீ என்ற அளவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. 1930 மிமீ என்ற அளவு உயரமும், குறைந்த பட்ச கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவு 200 மிமீ பெற்றுள்ளதால், கம்பீரமான தோற்றத்தில் வலம் வருகிறது. இதன் ஃப்ரண்ட் டிராக் அளவு 1445 மிமீ என்ற அளவிலும், இதன் பின்புற டிராக் 1346 மிமீ என்ற அளவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், DI இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள இதன் வேரியண்ட்களின் அகலம் 1640 மிமீ என்ற அளவிலும், ஃப்ரண்ட் டிராக் 1314 மிமீ என்ற அளவிலும், இதன் பின்புற டிராக் 1295 மிமீ என்ற அளவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வீல் பேஸ் அளவு 2430 மிமீ என்ற அளவில் இருந்தாலும், இதன் இருக்கை அமைப்புகள் வித்தியாசமான பாணியில் இருப்பதால், நாம் கவலை கொள்ளத் தேவை இல்லை. இதன் அப்ரோச் கோணம் 46 டிகிரீயாகவும், இதன் டிபர்ச்சர் கோணம் 30 டிகிரீயாகவும் இருப்பதால், எந்தவித நிலப்பரப்பிலும் சீராகப் பயணிக்க முடிகிறது.

உட்புற அமைப்புகள்:ஆசிரியர் குறிப்பு: புதிய தாரின் உட்புற அமைப்பு, அடிப்படை அம்சங்களை மட்டுமே பெறுகின்றது. மிகச் சிறந்த சொகுசு வசதிகளை உங்களுக்குக் கொடுப்பதற்காக வடிவமைக்கப்படவில்லை என்றாலும், நீங்கள் சாலைகள் இல்லாத பகுதிகளில் சாகசம் புரிவதற்கு புதிய தார் பெரிதும் உதவுகிறது என்பதுதான் உண்மை. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், உட்புறத்தில் குளிர் சாதன அமைப்பு மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.
முந்தைய வெர்ஷன்களை விட, புதிய தாரில் உள்ள உட்புற கேபின் வசீகரிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காக்பிட்டில் உள்ள புதிய டாஷ்போர்டு இரண்டு வித வண்ணங்களில் மிளிர்கிறது. அது மட்டுமல்ல, இதன் ஃபுளோர் கன்சோல் பகுதியும் மாற்றி அமைக்கப்பட்டு, ஹேண்ட் பிரேக் மற்றும் கியர் பாக்ஸ் கன்சோல் ஆகியவை பொருத்தப்பட்டு வருகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டரும் புதிதாக 3 ட்யூப் அவுட்லைன் பெற்று, க்ரோமிய வேலைப்பாடுகள் கொண்டு புதிப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ஒரு சில மாற்றங்களை நாம் இதன் சென்ட்ரல் கன்சோல் பகுதியிலும் பார்க்க முடிகிறது. இதன் மீது Thar என்னும் வார்த்தை தெளிவாகப் பொறிக்கப்பட்டு, நவீனமாக தோற்றம் அளிக்கிறது. அதே நேரத்தில், இதன் குளிர் சாதன துளைகளும் மறுவடிவம் பெற்று, அவற்றைச் சுற்றிலும் மெட்டாலிக் வேலைப்பாடு செய்யப்பட்டு பிரகாசமாக உள்ளன. பழைய ஸ்டியரிங் வீல் அமைப்பை மாற்றியமைத்து, பொலீரோவில் உள்ள ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டு, மெட்டாலிக் வேலைப்பாடுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இதன் இருக்கைகள் அகலப்படுத்தப்பட்டு, அதில் அதிக குஷன் பொருத்தப்பட்டு, பயணிகள் சுகமாக பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. காக்பிட் பகுதியில் உள்ள முன்புற இருக்கைகள் முன்புறம் பார்த்தும், பின்புறம் உள்ள இரண்டு பின்புற இருக்கை வரிசைகளும் பெஞ்ச் போல ஒன்றை ஒன்று பார்த்தும் அமைக்கப்பட்டுள்ளன என்பது புதிய தாரின் தனிச்சிறப்பாகும். மேலும், இதன் கியர்ஷிப்ட் நாப்கள் மீது செயற்கை லெதர் கவர்கள் இணைக்கப்பட்டுள்ளதால், கேபின் பகுதிக்கு உயர்தர தோற்றம் கிடைக்கிறது. இவை தவிர, இதற்கு முந்தய வெர்ஷனில் உள்ள அனைத்து அம்சங்களும் இதிலும் இடம்பெறுகின்றன. சிறிய கச்சிதமான வாகனமாகவும், குறைந்த இருக்கை வசதிகள் கொண்டதாகத் தோற்றம் அளித்தாலும், புதிய தாரில் குறைந்தபட்சம் 7 நபர்கள் அமர்ந்து பயணிக்கலாம் என்று இந்நிறுவனம் உறுதி அளிக்கிறது.

உட்புறம் உள்ள சொகுசு வசதிகள்:


மஹிந்த்ரா தார் என்பது ஒரு முழுமையான SUV வாகனம் ஆகும், எனவே, இது சாகசம் மற்றும் ஆஃப்-ரோடிங் போன்றவற்றிற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட வாகனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், மேம்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வெர்ஷனில், ஒரு சில சொகுசு வசதிகளையும் நீங்கள் எதிர்பார்க்கலாம். இதன் காக்பிட் பகுதியில், புதிய வடிவத்திலான இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் இடம்பெறுகிறது. ஸ்பீடோ மீட்டர், rpm மீட்டர், ஃப்யூயல் காஜ் மற்றும் மேலும் சில எச்சரிக்கை விளக்குகள் போன்றவை, முன்புறம் உள்ள மூன்று வட்ட வடிவ அனலாக் மீட்டர்களில் இடம்பெறுகின்றன. பொலீரோ SUV மாடலில் உள்ளதைப் போலவே, ஹீட்டிங், வெண்டிலேஷன் மற்றும் குளிர் சாதன கருவி என பல புதிய சொகுசு அமைப்புகள் தற்போது வெளிவந்துள்ள தார் வெர்ஷனில் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும், பயணத்தை இதமாக்குகின்றன என்றால் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இவற்றைக் கட்டுப்படுத்தும் கருவிகள் அனைத்தும் ஓட்டுனரின் கைக்கு எட்டும் தூரத்தில் இருப்பதும் கூடுதல் சவுகர்யமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் தாரின் ஃபுளோர் கன்சோல் பகுதியில், கப் ஹோல்டர்களை அமைத்துள்ளது. 5.25 மீட்டர்களை டர்னிங் ரேடியசாகக் கொண்ட பவர் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த வாகனத்தைக் கையாள்வது எளிதாகிறது. இந்த அமைப்பு நடுத்தர மற்றும் உயர்தர வேரியண்ட்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பின்புற சக்கரங்கள் மட்டும் இயக்கும் முறையில் இடம்பெறும் போது, உற்பத்தி செய்யப்பட்டுள்ள சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்தி, கையாள்வதை மேலும் எளிதாக்குகிறது. இதன் விதானம் உயர்தர பொருளினால் உருவாக்கப்பட்டுள்ளதால், சகதிக்குள் சென்று திரும்பும் போது, இந்த வாகனத்தின் வெளிப்பகுதி போல உட்பகுதி இருக்காது என்பதை இந்நிறுவனம் உறுதி செய்கிறது. ஒரு ஆஃப்-ரோட் வாகனத்திற்கு இது நிச்சயம் தேவை என்பதை மஹிந்த்ரா நிறுவனம் நன்கு அறிந்துள்ளது. மேலும், இதன் CRDe வகையில் மட்டும் 2-DIN ம்யூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது. அனைத்து பயணிகளுக்கும் இதமான குளிர் சென்றடையும் விதத்தில், இதன் AC துளைகள் சரியான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. புதிய கியர் நாப், மறுவடிவமைக்கப்பட்டுள்ள கதவு டிரிம்கள், புதுப்பிக்கப்பட்டுள்ள சென்டர் கன்சோல், புதிய உயர்தர இருக்கைகள், புதிய 3 பாட் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் தவிர இதில் கைபேசிகளை சார்ஜ் செய்து கொள்ள புதிய 12V சார்ஜிங் பாயிண்ட் மற்றும் புதிய பூட்டும் வசதி கொண்ட க்லோவ் பாக்ஸ் என பல அம்சங்கள் உங்களைக் கவரும் விதத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

உட்புற அளவுகள்:


புதிய தார் SUV மாடலில் அமர்ந்து பயணிக்கும் அனைவரும் சவுகர்யமாக அமர்ந்து பயணிக்கும் விதத்தில் விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புற கேபின் பகுதியில் உள்ளவர்கள் மட்டுமே கால்கள் இடிக்காமல், தோள்கள் உராயாமல் அமர முடிகிறது. இதன் பின்புறம் உள்ள பெஞ்ச் போன்ற சீட்களில் அமர்ந்து பயணிப்போரின் கால்கள் கட்டாயம் இடித்துக் கொள்ளும். இதன் எரிபொருள் டாங்க் 60 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருப்பதால், இதன் பிரிவிலேயே இதுதான் மிகப் பெரியது என்ற பெருமையைப் பெறுகிறது.

ஆக்ஸெலரேஷன் மற்றும் பிக்அப்ஆசிரியர் குறிப்பு: தாரின் ஆக்ஸெலரேஷன் சிறப்பாகவே உள்ளது. இதன் டார்க்கும் நன்றாகவே தன் வேலையைச் செய்கிறது. DI வேரியண்ட்டில், முன்புற லீஃப் ஸ்பிரிங்குகள் இணைக்கப்பட்டுள்ளதால், இது சிறப்பாக செயல்படுகிறது.
புதிய தார் ஒரு முழுமையான ஆஃப்-ரோடு SUV வாகனமாக இருப்பதால், சிறந்த ஆக்ஸெலரேஷன் மற்றும் பிக்அப்பை நாம் இதில் எதிர்பார்க்கக் கூடாது. தாரின் DI வகை இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள வேரியண்ட், அதிகபட்சமாக சுமார் 150 kmph வேகத்தில் சீறிப் பாயும் தன்மை கொண்டது. அதே நேரம், இது 16 வினாடிகளில் 100 kmph வேகத்தை எட்டிவிடும் என்று இந்நிறுவனம் குறிப்பிடுகிறது. 2498 cc திறன் கொண்ட CRDe இஞ்ஜின் வெறும் பதிமூன்றில் இருந்து பதினாலு வினாடிகளுக்குள் 100 kmph வேகத்தை எட்டிவிடுகிறது. இது அதிகபட்சமாக 160 kmph வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. இதன் 2.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் 3800 rpm என்ற அளவில் 105 bhp சக்தி மற்றும் 1800 – 2000 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 247 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இந்த சக்திவாய்ந்த டீசல் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய லாக்கிங் டிஃப்பரென்ஷியல் அமைப்பு, இதன் ஆஃப்-ரோடு திறனை கணிசமான முறையில் அதிகரிக்கிறது. பொதுவாக, DI இஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் 2 வீல் ட்ரைவ் அமைப்பும், CRDe இஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் 4 வீல் ட்ரைவ் அமைப்பும் பெற்று இயங்குகின்றன.

இஞ்ஜின் மற்றும் செயல்திறன்:ஆசிரியர் குறிப்பு: புதிய தாரின் செயல்திறன் பாராட்டும் விதத்தில் உள்ளது. கூடுதல் கியரில் செலுத்தும் போதும், இதன் இஞ்ஜின் சிறப்பாகவே செயல்படுகிறது. எனவே, சாலைகள் இல்லாத கரடு முரடான பாதைகளிலோ, சகதியைத் தாண்டிச் செல்லும் போதோ, அவற்றில் மாட்டிக் கொள்ளாமல் எளிதாக கடந்து செல்ல இந்த அமைப்பு உதவுகிறது.
இதற்கு முந்தைய வெர்ஷன் போலவே, புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள தாரிலும் இரண்டு விதமான டீசல் இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படை மற்றும் நடுத்தர வேரியண்ட்களில் 2523 cc திறன் கொண்ட 2.5 லிட்டர் MDI 320 TC L இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச செயல்திறனை ஊக்குவிக்க, 4 சிலிண்டர்கள் கொண்ட இந்த இஞ்ஜின் டைரக்ட் இஞ்ஜெக்ஷன் ஃப்யூயல் சப்ளை தொழில்நுட்ப அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. வெறும் 1500 – 1800 rpm என்ற அளவில் இது 63 bhp சக்தி மற்றும் 1500 – 1800 rpm என்ற அளவில் 182.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும், இது NGT 520 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் நடுத்தர வேரியண்ட்டில் மட்டும், கூடுதலாக 2 –ஸ்பீட் கியர் லெவல்களுக்கு மேனுவல் ஷிப்ட் ட்ரான்ஸ்பர் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உற்பத்தி செய்யப்பட்டுள்ள டார்க் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. அதே நேரம், இதன் 2.5 லிட்டர் CRDe மோட்டார் காமன் ரைல் டைரக்ட் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் டெக்னாலஜியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகளைக் கொண்ட இந்த இஞ்ஜின் DOHC அடிப்படையிலான வால்வ் கான்ஃபிகரேஷன் கொண்டு இயங்குகிறது. இது 3800 rpm என்ற அளவில் 105 bhp சக்தி மற்றும் 1800 – 2000 rpm என்ற அளவில் 247 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. CRDe இஞ்ஜினுடன் மேம்பட்ட NGT 530R 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சக்கரங்களுக்கும் சக்தியை செலுத்துவதற்கு BORGWARNER மேனுவல் ஷிப்ட் ட்ரான்ஸ்பர் அமைப்பு பயன்படுகிறது. எனினும், இதன் முன் மற்றும் பின்புற ஆக்ஸில் கான்பிகரேஷனில் எந்த மாற்றமும் இல்லை.

மைலேஜ்:ஆசிரியர் குறிப்பு: மஹிந்த்ரா தாரின் எரிபொருள் சிக்கனம் பாராட்டைப் பெறுகிறது. ஏனெனில், ஒவ்வொரு லிட்டருக்கும் சராசரியாக 9 கிலோமீட்டர் வரை இந்த ஆஃப்-ரோடர் பயணம் செய்கிறது. இரண்டு இஞ்ஜின்களையும் ஒப்பிடும் போது, இதன் DI இஞ்ஜின் அதிக எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது.
மஹிந்த்ரா நிறுவனம் புதிய தார் இஞ்ஜின்களில் எந்த புதிய மாற்றங்களையும் இணைக்காமல் வெளியிட்டுள்ளது. இதன் MDI 3200 TC L இஞ்ஜினில் டைரக்ட் ஃப்யூயல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. 2523 cc திறன் கொண்ட இந்த இஞ்ஜின் அதிகபட்சமாக 18.06 kmpl (4x2 வகைகளுக்கு) என்ற அளவு மைலேஜும்; 16.55 kmpl (4x4 வகைகளுக்கு) என்ற அளவு மைலேஜும் தருகிறது.

மஹிந்த்ரா தாரின் சக்தி:ஆசிரியர் குறிப்பு: புதிய தாரின் இஞ்ஜின் பாராட்டும்படியான சக்தியை உற்பத்தி செய்தாலும், இதன் டார்க் உற்பத்திதான் அதை விடச் சிறந்ததாக உள்ளது. CRDe இஞ்ஜினுடன் ஒப்பிடும் போது, DI இஞ்ஜின் உற்பத்தி செய்யும் சக்தி குறைவாக இருந்தாலும், இது போதுமான அளவு உற்பத்தி செய்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.
தாரில் உள்ள இரண்டு டீசல் இஞ்ஜின்களிலும் 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகள் கொண்ட டபுள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வ் கான்ஃபிகரேஷன் இணைக்கப்பட்டு இயங்குகின்றன. இதன் அடிப்படை மற்றும் நடுத்தர இஞ்ஜின்கள் 2523 cc திறன் கொண்டவை. இவை அதிகபட்சமாக 63 bhp சக்தி மற்றும் 182.5 Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றன. எனினும், இதன் 2498 cc திறன் கொண்ட இஞ்ஜின்தான் அதிக திறன் வாய்ந்தது, ஏனென்றால், இது 105 bhp சக்தியும், 247 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

ஸ்டீரியோ மற்றும் ஆக்ஸெசரிகள்:ஆசிரியர் குறிப்பு: புதிய தாரின் உயர்தர வேரியண்ட்டில் ம்யூசிக் சிஸ்டம் மற்றும் AC வசதி பொருத்தப்பட்டு வருகிறது. இவை தவிர, நீங்கள் வேறு எந்த சொகுசு வசதிகளையும் தாரில் பயணம் செய்யும் போது எதிர்பார்க்க முடியாது.
ஆஃப்- ரோடு வாகன பிரிவில் ராஜாவாகத் திகழும் தாரின் உட்புறத்தை உங்களுக்கேற்ற விதத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளும் விதத்தில் தயாரித்துள்ளனர். இதன் சென்ட்ரல் கன்சோல் பகுதியில் 2 DIN டச் ஸ்கிரீன் ஆடியோ அமைப்பு இடம்பெறுகின்றது. இதனுடன் GPS அமைப்பு மற்றும் MP3 பிளேயர் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர, உங்களுக்குத் தேவை என்றால் AUX-in, USB மற்றும் பல உபயோகமான இணைப்புகளை இணைத்துக் கொள்ளலாம். சென்ட்ரல் கன்சோல் பகுதியில் பாட்டில் ஹோல்டர்கள், சிறிய பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடைவெளிகள், ஸ்டியரிங் வீல் மீது லெதர் கவர் மற்றும் பல, இவற்றில் மிக முக்கியமானவைகளாம். உட்புறத்தை மாற்றி அமைக்கும் வசதி மட்டுமல்லாமல், இதன் வெளிப்புறத் தோற்றத்தையும் வாடிக்கையாளர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். பல ஸ்டைலான அமைப்புகளை வைத்து இதன் கிரில், சக்கரங்கள், டயர்கள் மற்றும் ஃபெண்டர்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

பிரேக் அமைப்பு மற்றும் கையாளும் விதம்:ஆசிரியர் குறிப்பு: தாரைக் கையாளும் விதம் எளிமையானதாக இருக்க முடியாது ஏனெனில், இது சாலைகள் இல்லாத கரடு முரடான பாதைகளில் செல்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக, சாலைகளில் எளிதாக இல்லை என்றாலும், சாலைகளில் இருந்து விலகி ஓடும்போது இது சிறப்பாகவே செயல்படுகிறது என்பதுதான் உண்மை.
DI அடிப்படையிலான வேரியண்ட்களில் டாண்டெம் மாஸ்டர் சிலிண்டர் மற்றும் வாக்கும் அஸிஸ்டட் செர்வோ ஆகியவற்றைக் கொண்ட டூயல் சர்க்யூட் பிரேகிங் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இதன் உயர்தர டிரிம்மில், LCRV வால்வ் கொண்ட டாண்டெம் மாஸ்டர் சிலிண்டர் இணைக்கப்பட ஹைட்ராலிக் பிரேக் அமைப்பு இடம்பெறுகிறது. இரண்டு வேரியண்ட்களிலும் பொதுவான விஷயம் எது என்றால், முன்புற சக்கரங்களுக்கு டிஸ்க் ப்ரேக்குகளும், பின்புற சக்கரங்களுக்கு ட்ரம் ப்ரேக்குகளும் பொருத்தப்பட்டு இவை இரண்டும் சிறப்பாக செயல்படுகின்றன. அடிப்படை மற்றும் நடுத்தர டிரிம்களில் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பை, முன் மற்றும் பின்புற ஆக்ஸிலில் பொருத்தி உள்ளனர். அதே நேரம், இதன் உயர்தர டிரிம்மில், இன்டிபெண்டன்ட் ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறம் செமி எலிப்டிகள் லீஃப் ஸ்பிரிங் அமைப்பும் இணைக்கப்பட்டு, பிரேக் போட்டு நிறுத்தும் வேளைகளில், உடனடியாகவும், சிறப்பாகவும் செயல்படுகின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்:ஆசிரியர் குறிப்பு: தாரில் பாதுகாப்பு காற்றுப் பைகள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் லாடர் ஃபிரேம் கட்டமைப்பில் ஏராளமான உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இதில் க்ரம்ப்பில் ஜோன் எதுவும் இல்லை.
இந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்படும் நம்பகமான லாட்டர் ஃபிரேம் முறையிலான கட்டமைப்பின் படி தயாரிக்கப்பட்டுள்ளதால், கடந்து செல்லும் நிலப்பரப்புகளில் உள்ள தடைகளை புதிய தார் எளிதாகத் தாண்டி வருகிறது. இதன் பிரிவிலேயே அகலமான டயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால், வழுக்கும் ரோடுகளில் கூட அற்புதமான ஸ்திரத்தன்மையுடன் பயணிக்கிறது. இதில் நவீன இஞ்ஜின் இம்மொபிலைசர் பொருத்தப்பட்டுள்ளதால், திருட்டைத் தவிர்க்க முடியும். இது தவிர, சீட் பெல்ட்கள், டிஸ்க் பிரேக்குகளுடன் வரும் 9 அங்குல பூஸ்டர்கள், ஹாலோஜென் ஹெட் லாம்ப்கள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் என பல விதமான பாதுகாப்பு அம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

சக்கரங்கள்:


ஒட்டுமொத்த தார் சீரீஸுக்கும் 16 அங்குல ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டு, கம்பீரமாக வலம் வருகின்றன. அதே சமயம், இதன் உயர்தர டிரிம்மில் சற்றே பெரிய அளவிலான P235/70 R16 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற இரண்டு டிரிம்களிலும் உறுதியான P185 R16 அளவு டயர்கள் இடம்பெறுகின்றன. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால், அகலமான ரேடியல்கள் கொண்ட அலாய் ரிம்களை இணைத்து, தாரின் புதிய வெர்ஷனின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் மாற்ற முடியும்.

தீர்ப்பு:


தோற்றத்திற்கு முக்கியத்துவம் தராமல், செயல்திறனுக்கு முக்கியத்துவம் தருபவர்களுக்காகவே புதிய மஹிந்த்ரா தார் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த செயல்திறன், அருமையான ஆஃப்-ரோடிங் அமைப்புடன் இணையும் போது நமக்கு அற்புதமான பயண அனுபவம் கிடைக்கிறது. புதிய மேம்பாடுகள் இந்த வாகனத்தின் புகழை உயர்த்தும் திறன் வாய்ந்தவை என்பதில் சந்தேகம் இல்லை. நவீன கார்களில் உள்ள பல சிறப்பம்சங்கள் இதில் இடம்பெறவில்லை என்றாலும், இதன் விலையைப் பார்த்து வாங்குபவர்கள் ஏராளம். இந்திய சந்தையில் உள்ள ஏனைய ஆஃப்-ரோடர்களுடன் ஒப்பிடும் போது, இது சிறந்த ஆஃப்-ரோடிங்க் திறன் பெற்று வருகிறது என்றே கூற வேண்டும்.

சாதகங்கள்:1. இதன் ஆஃப்-ரோட் திறன் பாராட்டை அள்ளுகிறது.
2. CRDe இஞ்ஜினின் செயல்திறன் வியத்தகு முறையில் உள்ளது.
3. குறைந்த பராமரிப்பு செலவு, இதன் அனுகூலமான அம்சம் ஆகும்.
4. மிகவும் மலிவான விலையில், எவரும் ஆஃப் ரோடர் காரின் உரிமையாளராக மாற முடியும்.
5. விற்பனைக்குப் பின்னர், இந்நிறுவனத்தினரின் சேவை குறிப்பிடும்படி உள்ளது.

பாதகங்கள்:1. வெளிப்புறத் தோற்ற மேம்பாடுகள் எதிர்பார்த்த அளவு கவர்ச்சிகரமாக இல்லை.
2. பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளை சற்றே அதிகப்படுத்தியிருக்கலாம்.
3. ஆப்ஷனல் அம்சங்களை கட்டாயமான அம்சங்களாக்கியிருக்கலாம்.
4. பின்புற கேபின் பகுதியில் உள்ள இருக்கைகள் சவுகரியமாக இல்லை
5. DI இஞ்ஜினின் சக்தி மற்றும் ஆக்ஸெலரேஷன் ஆகியவற்றை மேம்படுத்தியிருக்கலாம்.