மஹிந்திரா ஸ்கார்பியோ

` 9.0 - 15.5 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


ஏப்ரல் 25, 2016: இந்திய வாகனத் தயாரிப்பு ஜாம்பவனாக திகழும் மஹிந்திரா நிறுவனம், தனது பிரபலமான ஸ்கார்பியோ SUV- யின் ஒரு நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பதிப்பை ஸ்கார்பியோ அட்வென்ட்சர் என்ற பெயரில் ரூ.13.07 லட்சம் என்ற விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்து உள்ளது. வெறும் 1000 யூனிட்களுக்கு மட்டுமே தயாரிக்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ள இந்த அட்வென்ட்சர் காரில், ஒரு இரட்டை -டோன் வர்ணப் பணி, கன்மெட்டல் அலாய் வீல்கள், ரெட் பிரேக் காலிபர்கள் ஆகிய அம்சங்கள் எல்லாம் சேர்ந்து, இதை ஒரு தரமான ஸ்கார்பியோவில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இதன் உட்புறத்தை பொறுத்த வரை, சீட்களில் லேதரை ஒத்தது போன்ற அப்ஹோல்டரி, ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் கினாப் ஆகிய மேம்பாடுகளை உட்படுத்தி உள்ளது. இவைகளை தவிர, உயர்- மாதிரி S10 வகையை ஒத்தது போல, இந்த அட்வென்ட்சரும் அமைந்து உள்ளதோடு, 2WD மற்றும் 4WD என்ற இரு தரத்திலும் கிடைக்கின்றன.

மஹிந்திரா ஸ்கார்பியோ விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்:

சாதகங்கள்:


1. இந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த ஸ்கார்பியோ மிரட்டும் தோற்றத்தை கொண்டு உள்ளது. எனவே இதில் செய்யப்பட்டு உள்ள அதன் வெளிப்புற அமைப்பியல் பணிகள் அனைத்தும் வரவேற்பிற்கு உரியவை ஆகும்.
2. இதன் 2.2- லிட்டர் mஹாக் டீசல் என்ஜின் மூலம் எதிர்பார்ப்பிற்கு உரிய செயல்திறனை நாம் பெற முடிகிறது.

பாதகங்கள்:


1. இது அளிக்கும் பயண தரத்தில் இன்னும் கூட சில மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
2. இந்த வாகனத்தின் உயர் தர பதிப்பின் விலை நிர்ணயம், அதிக பண விரயத்தை உண்டாக்குகிறது.

தனித் தன்மையான அம்சங்கள்:


1. அதில் உள்ள ஒரு மேம்பட்ட 6-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மூலம் அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களின் இணைப்பையும் பெற்று கொள்ள ஏதுவாகிறது.
2. இதில் ஸ்டேடிக்- பென்டிங் தொழிற்நுட்பம், வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், இன்டெல்லிபார்க் மற்றும் GPS நேவிகேஷன் போன்ற புதுமையான அம்சங்களை இது பெற்று உள்ளது.

மேற்பார்வை:


ஸ்கார்பியோவின் அறிமுகம் செய்வதற்கு முன்பு வரை, அர்மாடா, பொலிரோ மற்றும் மற்றவைகள் போன்ற அடிப்படை பயன்பாட்டு திறன் வாய்ந்த மாடல்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் கொண்டு இருந்தது. ஆனால் ஸ்கார்பியோவின் வருகைக்கு பிறகு, இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குறித்த வெளிப்படையான கருத்து (பிராண்டு இமேஜ்) பெரிய அளவிலான மாற்றத்தை பெற்று, மிக குறுகிய காலக்கட்டத்தில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையிலான சிறந்த தன்மை மற்றும் பிரபல நிலையை அடைந்து உள்ளது. நம் நாட்டில் மஹிந்திரா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட முதல் நவீன SUV, இதுவே ஆகும். இந்திய நாட்டில் உள்ள வாகன ஆர்வலர்களின் எண்ணங்களையும், எதிர்பார்க்கப்பட்ட நிலைப்புத் தன்மைகளையும் இது கடந்து நிற்கிறது. ஒரு வகையில் பார்த்தால், நம் நாட்டில் அதிகமாக விற்பனையாகும் சிறந்த மாடல் மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகும். குறிப்பிட்ட காலத்தை கடந்தும் இது தொடர்ந்து நிலைத்து நின்றதோடு, கடந்த 2014 ஆம் ஆண்டில் ஒரு புதிய தலைமுறைக்குள் அடியெடித்து வைத்தது. நம் நாட்டின் தலைநகரான டெல்லியில் 2.0- லிட்டருக்கும் அதிகமான திறன் உள்ள என்ஜினை கொண்ட டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து, ஒரு ஆயில் பர்னர் உடன் 2.0- லிட்டருக்கும் குறைவான திறன் உள்ள என்ஜினை கொண்ட இந்த மாடலை சேர்ந்த வாகனத்தை, சமீபத்தில் இந்த நிறுவனம் அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இந்த வாகனத்தின் விற்பனை அளவை மேலும் அதிகரிக்கும் வகையில், இதன் வகைகளின் வரிசையில் கூடுதலாக ஒரு ஆட்டோமெட்டிக் பதிப்பும் சேர்த்து கொள்ளப்பட்டு உள்ளது. மொத்தத்தில் தற்போது விற்பனையில் உள்ள ஸ்கார்பியோ கார், 7 மற்றும் 8 சீட்களின் தேர்வுகளுடன் கூடிய 18 –க்கும் அதிகமான வகைகளில் கிடைக்கிறது.

பின்னணி மற்றும் பரிணாமம்:


கடந்த 2002 ஆம் ஆண்டு தனது முதல் நவீன SUV ஆன ஸ்கார்பியோவை, மஹிந்திரா நிறுவனம் நம் நாட்டில் முதல் முறையாக அறிமுகம் செய்தது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள ஒரு பயன்பாட்டு வாகனத்தின் (யூட்டிலிட்டி வெஹிக்கிள்) மீதான கண்ணோட்டம் வேறு விதமாக மாற்றி அமைக்கப்பட்டது. இது ஒரு உடனடி வெற்றியை இந்த நிறுவனத்திற்கு அளித்தது. இதனால் இந்த வாகனத்தின் வெளிப்புற அமைப்பியல் மற்றும் உட்புற அமைப்பியலில் சிறிய அளவிலான மாற்றங்களை செய்து, ஒரு மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஒன்றை இந்த நிறுவனம் வெளியிடுவதற்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த வாகனத்தின் வடிவமைப்பியல் மற்றும் அம்சங்களில் கண்டறியக் கூடிய வகையிலான தன்மைகளுடன் கூடிய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் விற்பனை அளவில் ஒரு சரிவு நிலையை சந்தித்ததால், கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த இந்தியாவை சேர்ந்த நிறுவனம், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஸ்கார்பியோவை அறிமுகம் செய்தது. இதன்மூலம் இந்த வாகனத்தின் போட்டி திறனை பெருக்கிக் கொள்ள பெரும் உதவியாக இருந்தது.

வெளிப்புற அமைப்பியல்:


மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் காண கிடைக்கும் நேர்த்தியான கட்டமைப்பை கொண்ட பாடி மற்றும் மிரட்டும் தடித்த உருவம் ஆகியவை மூலம் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையிலான மாய வலையை வீசுகிறது. இதில் காணப்படும் சக்தி வாய்ந்த லைன்கள் மூலம் இதன் தோற்றத்திற்கு வலிமை அளிப்பதோடு, இதிலுள்ள அதிக தடித்த அமைப்பைக் கொண்ட கட்டமைப்பு தன்மையின் மூலம் தோற்றத்தில் வேறுபடுத்தி காட்டுவதாகவும் அமைகிறது. ஸ்கார்பியோ வாகனத்தினாலும், அதன் கவர்ச்சிகரமான தோற்றத்தினாலும் நாங்கள் உண்மையிலேயே ஆட்கொள்ளப்பட்டோம் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இந்நிலையில் இது போன்ற ஒரு வாகனம், இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலான பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

1
இந்த நிறுவனத்தின் மற்ற சில மாடல்களான XUV500 மற்றும் சைலோ ஆகியவற்றில் உள்ளது போல, ஸ்கார்பியோ காரின் முன்பகுதியில் அதிக அளவிலான அலங்கார பணிகள் செய்யப்படவில்லை. இந்த மாடலின் வடிவமைப்பில் அதிக அளவில் நிலத்தை நோக்கிய தன்மை (டவுன் டு எர்த்), அதாவது நிலத்தில் பதிந்த வடிவமைப்பு மொழியை (கிரவுண்டடு டிசைன் லாங்குவேஜ்) இந்த நிறுவனம் பயன்படுத்தி உள்ள அணுகுமுறை, இந்த மாடலுக்கு பெரும் பிரபலத்தை தேடி தந்து உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். இது தவிர இன்றைய வாகனங்களில் காணக் கிடைக்காத ஒரு நவீன அணுகுமுறையான, இதற்கே உரிய ஒரு தனிப்பட்ட திறனை இந்த வாகனம் தன்னகத்தே கொண்டு உள்ளது.

2
இந்த வாகனத்தின் முன்பக்கத்தின் அதிக கவனம், கிரோம் மேலோட்டங்கள் உடன் கூடிய பெரிய கிரிலின் மீது தான் விழுகிறது. இது ஒரு பெரிய மக்கள் திரளின் கவனத்தை கவர்ந்து இழுக்கும் என்பது உறுதி.

3
LED கண் இமைகள் (ஐ ப்ரோ) உடன் கூடிய ஹெட்லெம்ப்களை இது கொண்டு உள்ளது. மேற்கண்ட இந்த அம்சத்தின் மூலம் இந்த வாகனத் தோற்றத்தின் மனம் கவரும் தன்மை மேலும் அதிகரித்து உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

4
முன்பக்க முனைகளின் அடிப்பகுதியில், ஒரு பெரிய ஏர் ட்ரம் காணக் கிடைக்கிறது. இதன் உடன் இரு முனைகளிலும் ஃபேக் லெம்ப்களை கொண்டு உள்ளது. இந்த வாகனத்தின் விரிவான ஹூட்டில் நுட்பமான லைன்கள் பெற்று உள்ளது. மேலும் இதன் போனட் ஸ்னூப்பின் மூலம், இந்த வாகனத்தின் தோற்றத்தில் ஒரு ஸ்போர்ட்டியான அம்சம் அதிகரிக்கிறது.

5
இதன் முன்னோடியின் வடிவமைப்பை ஒத்தாற் போல, இதன் பக்கவாட்டு முகப்பாவனையின் பெரும்பாலான பகுதிகள் அமைந்து உள்ளன. இந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதியின் சுத்தமான பாடி கிளெட்டிங் உடன் கூட, அதன் தோற்றத்தின் கவர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில், இதன் பக்கவாட்டு பகுதியின் வழியாக கடந்து செல்லும் எளிதாக தெரியக் கூடிய வகையிலான லைன்கள் காணப்படுகின்றன.

6
இந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதியின் தோற்றத்தை ஒரு பார்வை பார்த்தால், தடித்த வீல் ஆர்ச்சுகள் மற்றும் அதன் கீழே காணப்படும் ஸ்டைலான வீல் ரிம்கள் ஆகியவை நிச்சயம் உங்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வாகனத்தின் சமீப கால பதிப்பின் உயர் தர வகைகளில், தற்போது 17- இன்ச் அலாய் வீல்கள் காணப்படுகின்றன. அதே நேரத்தில் துவக்க நிலை வகைகளில் ஸ்டீல் ரிம்களை பெற்று உள்ளன.

7
இந்த வாகனத்தின் வீல் ஃபென்டர்களில் ஒரு சில்வர் நிறத்திலான பிஸில் மேலோட்டங்களின் பணித் தீர்ப்பை காண முடிகிறது. மேலும் இது முற்றிலும் நுட்பமான ஒன்றாக இருந்தாலும், இந்த வாகனத்தின் தோற்றத்தின் பொலிவை ஒரு படி மேலும் அதிகரிக்கும் விருப்பத்தோடு இந்த நிறுவனம் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது என்பதை உங்களால் தெளிவாக கூற முடியும். உயர் தர வகைகளை பொறுத்த வரை, அதன் டோர் ஹேண்டில்கள் மற்றும் வெளிப்புற மிரர்கள் ஆகியவை பாடியின் அதே நிறத்தில் அமைந்து உள்ளன. இந்த ஒத்து சேர்ந்த தன்மையை நாங்கள் பெரிதும் விரும்புவதோடு, இந்த வாகனத்தின் தோற்றத்தை ஊக்கப்படுத்துவதாக அமைந்து உள்ளது.

8
இந்த வாகனத்தின் டெயில்- கேட் அப்லிக்யூ என்பது இதன் தோற்றத்தை மேலும் அட்டகாசமானதாக மாற்றுகிற மற்றொரு காரியம் ஆகும். அதே நேரத்தில் இதில் உள்ள கருப்பு நம்பர் பிளேட் அப்லிக்யூ பணித் தீர்ப்பு மூலம் இந்த வாகனத்தின் தனிப்பட்ட நிலையிலான தொலைநோக்கு பார்வையை முழுமைப்படுத்துவதாக அமைந்து உள்ளது.

9
இந்த ஸ்கார்பியோ காரின் நவீன பதிப்பின் நீளம் 4456mm ஆகவும், அகலம் 1820mm (ORVM- களையும் சேர்த்து) ஆகவும் உள்ளதோடு, 1975mm அளவிலான உயரத்தை பெற்று உள்ளது. இது தவிர இதற்கு உள்ள 180mm என்ற ஒரு சிறப்பான கிரவுண்டு கிளியரன்ஸ் காணப்படுவதால், கரடுமுரடான பாதைகளுக்கு இது தகுந்ததாக அமைய வாய்ப்பு இல்லை.

1
2

உட்புற அமைப்பியல்:


புதிய தலைமுறையைச் சேர்ந்த ஸ்கார்பியோ காரின் உட்புற அமைப்பியலில், அதன் வடிவமைப்பியல், அழகியல் மற்றும் பொருட்களின் தரம் ஆகியவற்றில் நுட்பமான சில மாற்றங்களை பெற்று உள்ளது. இதனால் இந்த வாகனத்திற்கு ஒரு உயர் சந்தை (அப்-மார்க்கெட்) தோற்றம் கிடைத்து உள்ளது. மேலும் இந்த வாகனத்தின் முன்னோடியின் தோற்றத்தை விட முற்றிலும் மாறுப்பட்ட ஒரு வித்தியாசமான உட்புற அமைப்பியல் வடிவமைப்பை இதில் காண முடிகிறது. இதில் உள்ள டேஸ்போர்டு அல்லது ஸ்டீரிங் வீல் அல்லது சீட்டிங் என்று இல்லாமல், இந்த வாகனத்தில் உள்ள ஒவ்வொரு காரியங்களும் புதுமையாகவே உள்ளன. இதன் கேபின் விசாலமானதாகவும், ஏழு பயணிகளுக்கு போதுமானதாகவும் உள்ளது. ஆனால் இரண்டாவது வரிசையில் உள்ள லெக் ரூம் மூலம் உங்களுக்குள் சற்று நெருக்கடியான உணர்வு ஏற்படலாம் என்றாலும், ஒரு வகையில் இது சிறப்பானது என்றே கூறலாம்.

10
இந்த வாகனத்தின் உட்புறத்திற்கு நீங்கள் அடியெடுத்து வைத்த உடனே, ஒரு இரட்டை டோன் நிறத் திட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ள டேஸ்போர்டு தான் உங்கள் கண்களில் முதலில் படுகிறது. இதன் வடிவமைப்பில் பழுப்பு மற்றும் கருப்பு ஆகியவை கலந்த கலவையிலான நிறத் திட்டத்துடன் கூடிய மெட்டாலிக் மேலோட்டங்களை கொண்ட ஒரு குறிப்பிட்ட SUV வடிவமைப்பை பெற்று உள்ளது.

11
இதில் எங்கள் கண்களை உண்மையில் கவர்ந்து இழுந்த ஒரு காரியம் எது என்றால், இதில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் ஆகும். இதில் ஒரு திடமான வடிவமைப்பை பெற்ற இரு அனலாக் கெஜஸ்கள் மற்றும் ஒரு டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவற்றை பெற்று உள்ளது. மேலும், டிரைவருக்கு அவ்வப்போது தகவல்கள் கிடைக்க உதவும் வகையிலான, ஒரு சில எச்சரிப்பு லெம்ப்களை (நோட்டிஃபிக்கேஷன் லெம்ப்கள்) முழுமையாக பெற்ற ஒரு அமைப்பாக இது விளங்குகிறது.

12
XUV500 வாகனத்தில் காண கிடைக்கும் ஒரு நவீன காலத்தை சேர்ந்த 4- ஸ்போக் வடிவமைப்பை, இந்த வாகனத்திலும் காண முடிகிறது. இதில் ஆடியோ கன்ட்ரோல் மற்றும் அழைப்பு செயல்பாடுகள் (கால் ஃபங்க்ஷன்ஸ்) போன்ற செயல்பாடுகளுக்கான பன்முக பயன்பாட்டு (மல்டி ஃபங்க்ஷனல்) சுவிட்ச்சுகள், இதன் மீது ஏறிச் செல்வதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் எல்லா சுவிட்ச்சுகளிலும் பேக்- லைட் வசதி செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13
ஒரு ஆறு இன்ச் டச்ஸ்கிரீனை கொண்ட காருக்குள் அமைந்த பொழுதுபோக்கு சாதனத்தை (இன்- கார் என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம்), இதன் சென்டர் கன்சோலில் பெற்று உள்ளது. இந்த அமைப்பு, 10 வேறுபட்ட மொழிகளின் தேர்வுகளுடன் கூடிய நேவிகேஷன் உடன் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. மேலும் டயர் அழுத்தம் மற்றும் வெப்பநிலை, சராசரி எரிப்பொருள் பயன்பாடு, GPS நேவிகேஷன், மற்றும் மற்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு SUV-யின் புள்ளி விபரங்கள் ஆகியவற்றின் வெளியீடுகளை இதில் பெற முடிகிறது.

14
ஸ்கார்பியோவின் முன்பக்க சீட்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையிலான இதமான தன்மையைக் கொண்டு உள்ளது. இதன் வரவேற்கக் கூடிய இர்கோநோமிக் லேஅவுட்டின் மூலம் அருமையான ஆதாரமும் நமக்கு கிடைக்கிறது. இதன் தூக்கலான உயர் நிலைப்பாடு என்ற மற்றொரு முக்கிய காரணத்தின் மூலம் உங்களை ஒரு இதமான அனுபவத்தை உணர வைக்கிறது.

15
இந்த வாகனத்தின் இரண்டாம் வரிசையில் முட்டி உயரத்திலான காற்றுத் திறப்பிகள் (ஏர் வென்ட்கள்) கன்சோலில் குடிக்க கூடிய பொருட்களின் ஹோல்டர்களை (டிரிங் ஹோல்டர்ஸ்) கொண்டு உள்ளது. இவை தகுந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளதோடு, லெக் ரூம்மை அதிகமாக ஆக்கிரமித்து விடாத வகையில் உள்ளன.

16
இந்த வாகனத்தின் மூன்றாவது வரிசையை, இரு ஜம்ப் சீட்கள் அலங்கரித்து உள்ளன. அதே நேரத்தில் உயர் தர வகைகளில், முன்பக்கத்தை நோக்கிய மூன்றாவது வரிசை சீட் உடன் மடிக்கக் கூடிய ஆம்ரெஸ்ட் வசதியை தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

17
அக்சஸரி பவர் சாக்கெட், கப் ஹோல்டர்கள், கிளோவ் பாக்ஸ், சன் விஸர்கள் மற்றும் ஒரு சில மற்ற பொருட்கள் வைக்கும் யூனிட்கள் உள்ளிட்ட எண்ணற்ற பயன்பாட்டு அம்சங்களை இந்த வாகனம் பெற்று உள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்த வாகனத்தின் உட்புற அமைப்பியல் மிகவும் சிறப்பாக அமைந்து உள்ளது. ஆனால் அதற்கு பயன்படுத்தி உள்ள பொருட்களின் தரத்தை உயர்த்தும் வகையில், மிக அதிக அளவிலான பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.

செயல்திறன்:


இந்த புதிய தலைமுறையை சேர்ந்த ஸ்கார்பியோவில், அதே 2.2- லிட்டர் mஹால்க் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், அதில் சிறிய அளவிலான ரீபைன்மெண்ட் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எனவே இந்த என்ஜினை ஆன் செய்யும் போது, ஒரு லேசான அதிர்வு உடன் கூட இந்த SUV கர்ஜித்து உயிர் பெறுகிறது. இந்த வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், மெதுவாக மற்றும் இதமான உணர்வை நமக்கு அளிக்கிறது. இதன் பிக் அப் மிகவும் சிறப்பாக உள்ளதோடு, எந்த அளவிலான தள்ளாடும் அனுபவங்களையும், இதில் காண்பதற்கு உங்களுக்கு அரிதான வாய்ப்புகளே கிடைக்கின்றன. வரவேற்பிற்கு உரிய இதன் ரீபைன்டு கியர் பாக்ஸ் மூலம் கியர் மாற்றங்கள் மென்மையான உணர்வை நமக்கு அளிக்கின்றன. மேற்கண்ட இந்த 2179cc என்ஜின் மூலம் 4000rpm-ல் ஒரு அதிகபட்ச ஆற்றல் அளவிலான 120bhp –யையும், 1800-ல் இருந்து 2800rpm வரையிலான அளவில் ஒரு போட்டியிடும் தன்மைக் கொண்ட முடுக்குவிசையான 280Nm –யையும் அளிக்கும் திறனை கொண்டதாக உள்ளது. டெல்லி மற்றும் NCR பகுதிக்கு என்று குறிப்பாக, ஸ்கார்பியோவின் வழக்கமான 2.2 –லிட்டர் யூனிட்டிற்கு பதிலாக, ஒரு 2.0 –லிட்டர் என்ஜினை மஹிந்திரா நிறுவனம் அளித்து உள்ளது. இதை உண்மையில் ஒரு 1997cc திறன் கொண்ட என்ஜின் என்று தான் கூற வேண்டும். இந்த என்ஜினும், இதன் சக என்ஜினாக உள்ள mஹால்க் அளிக்கும் அதே அளவிலான ஆற்றல் மற்றும் முடுக்குவிசையை வெளியிடுகிறது. இதன் ஆக்ஸிலரேஷனை பொறுத்த வரை, மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு 14 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. நகர் பகுதியில் அமைந்த சாலைகளில் ஓட்டுவதற்கு இது சிறப்பாக உள்ளது. ஆனால் ஸ்கார்பியோவின் உண்மையான செயல்திறனை நெடுஞ்சாலைகளில் தான் நமக்கு நிரூபணம் ஆகிறது. ஏனெனனில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை கடந்து செல்லும் போது கூட, இதில் எந்த பதட்டத்தையும் காண முடிவதில்லை. இந்த என்ஜினுக்கான டிரான்ஸ்மிஷன் பணியை, ஒரு 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் கையாளுகிறது. இந்த வாகனத்தின் உயர் மாதிரியான S10 வகையில், ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் தேர்விற்குரியதாக அளிக்கப்பட்டு உள்ளது. இந்த SUV-க்கு லிட்டருக்கு 13 முதல் 15 கி.மீ. மைலேஜ் அளிக்கும் திறன் காணப்படுகிறது. அதே நேரத்தில் இதன் ஆட்டோமேட்டிக் பதிப்பில் மேற்கண்ட புள்ளி விபரங்கள் சரிவை சந்தித்து, லிட்டருக்கு 13.5 கி.மீ மட்டுமே கிடைக்கிறது.

18
3

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்:


ஹைட்ராலிக் இரட்டை செயல்பாடு கொண்ட டெலிஸ்கோபிக் அதிர்வு நீக்கிகள் (ஹைட்ராலிக் டபுள் ஆக்டிங் டெலிஸ்கோபிக் ஷாக் அப்சார்பர்ஸ்) என்ற அம்சத்தை கொண்ட ஒரு உறுதியான சஸ்பென்ஸன் அமைப்பை, இந்த வாகனத்தில் காண முடிகிறது. சுதந்திரமாக செயல்படும் காயில் சஸ்பென்ஸன் உடன் கூடிய ஒரு இரட்டை விஸ்- போன் சஸ்பென்ஸன் லேஅவுட், வாகனத்தின் முன்பகுதி ஆக்ஸில் கொண்டு உள்ளது. அதே நேரத்தில் பின்பகுதியில் பன்முக (மல்டி) லிங் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஸன் கொண்ட ஒரு ஆன்டி ரோல் பார் உடன் கூட இணைந்து செயலாற்றுகிறது. மேற்கொண்ட சிறப்பு அம்சங்களின் மூலம் அதற்கு நெருக்கமான எந்த போட்டியாளர் வாகனத்தை போலவும் இல்லாமல், ஒரு சிறப்பான பயணத் தரத்தை உங்களுக்கு அளிக்கிறது. இந்த SUV வாகனத்தில் ஒரு சுமூகமான டிஸ்க் மற்றும் ட்ரம் பிரேக்கிங் மெக்கானிஷத்தை, மஹிந்திரா நிறுவனம் அளித்து உள்ளது. அதே நேரத்தில் இதன் ஒட்டுமொத்தமான செயல்பாட்டிற்கு ஏற்றதாக அமையும் வகையில் இதில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் தகவமைப்பை கொண்டு உள்ளது. இதன்மூலம் உங்களின் நெடுஞ்சாலை பயணங்களை முழுமையான அளவிலான குதூகலத்தை அனுபவிக்க செய்கிறது. மற்றொரு புறத்தில் இந்த வாகனத்தை கையாளுவதற்கு குறைந்த அளவிலான உழைப்பு மட்டுமே செலுத்தும் வகையில் இதன் ஸ்டீரிங் வீல் மிகவும் சிறப்பான செயல்பாட்டை கொண்டு உள்ளது. நெருக்கமான பார்க்கிங் இடத்தில் கூட இதை ஒரே கையால் கையாள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

19

பாதுகாப்பு:


இந்த புதிய தலைமுறையை சேர்ந்த ஸ்கார்பியோவில் உள்ள எல்லா வகைகளுக்கும் பொதுவான முறையில், டிஜிட்டல் இம்மொபைலைஸர் மற்றும் கொலாப்ஸிபிள் ஸ்டீரிங் வீல் உள்ளிட்ட எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்களை காண முடிகிறது. தற்போதைய ஸ்கார்பியோ மொத்தம் 6 தர நிலைகளில் அளிக்கப்படும் நிலையில், S4+ வகைக்கு மேற்பட்ட எல்லா வகைகளிலும் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் மற்றும் ABS உடன் EBD ஆகியவை காணப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் ஆட்டோ டோர் லாக்கிங் போன்ற மேம்பட்ட அம்சங்கள் அளிக்கப்படும் நிலையில், ஓட்டுவதற்கு உதவும் வகையில், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரில் சீட் பெல்ட் ரிமைன்டர் லெம்ப் மற்றும் பார்க்கிங் பிரேக் இன்டிகேட்டர் ஆகியவற்றை பெற்று உள்ளது. அதே நேரத்தில் உயர் மாதிரியான S10 வகையில், மேற்கண்ட அம்சங்களுடன் ஸ்பீடு அலர்ட் செயல்பாட்டையும் கொண்டு காணப்படுகிறது.

4

வகைகள்:


இந்த கட்டுரையில் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மஹிந்திரா ஸ்கார்பியோ வாகனத்தில், S2, S4, S4+, S6+, S8 மற்றும் S10 போன்ற மொத்தம் ஆறு வகையான நிலைகளில் கிடைக்கிறது. இந்த வாகனத்தின் துவக்க பதிப்பான S2-ல் ஹைட்ராலிக் பவர் அசிஸ்டேட் ஸ்டீரிங், ஒரு மேனுவல் ஏர் கண்டீஷனிங் யூனிட் உடன் கூடிய ஹீட்டர், சென்ட்ரல் கன்சோலில் உள்ள சுவிட்ச்சுகள் உடன் கூடிய பவர் விண்டோக்கள், அக்சஸரி பவர் சாக்கெட் மற்றும் ஒரு சில பொருட்கள் வைக்கும் யூனிட்கள் ஆகிய ஒரு ஜோடி அடிப்படை அம்சங்களை பெற்று உள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிலான பட்ஜெட்டில் ஒதுக்க விரும்புபவராக இருக்கும் பட்சத்தில், மேற்கண்ட S2 வகையை தேர்வு செய்வது ஒரு அறிவுப் பூர்வமான செயலாக இருக்கும். ஏனெனில் உங்கள் எல்லா அடிப்படை தேவைகளையும் பூர்த்திச் செய்வதாக அமைந்து உள்ளது. இந்நிலையில் நீங்கள் ஒரு இசைப் பிரியராக இருந்தால், S6+ வகையாவது நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் அதில் ஒரு 2 –டின் ஆடியோ சிஸ்டம் மூலம் ஒரு CD பிளையர், USB மற்றும் ஆக்ஸ்- இன் ஆகிய அம்சங்களை செயல்படுத்துகிறது. அதே நேரத்தில் இந்த வாகனத்தின் உயர் –தர வகையான S10-ல், ஒரு 6 –இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், GPS நேவிகேஷன், ஒரு டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், பார்க்கிங் அசிஸ்டென்ட் மற்றும் ஒரு வாய்ஸ் அசிஸ்டென்ட் சிஸ்டம் போன்ற சில மேம்பட்ட அம்சங்களைக் கொண்டு உள்ளது.

5

தீர்ப்பு:


இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மஹிந்திரா ஸ்கார்பியோ கார், வடிவமைப்பு, இதமான தன்மை, கையாளும் திறன் மற்றும் டைனாமிக்ஸ் போன்ற காரியங்களில் ஒரு பெரிய அளவிலான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ள போட்டியிடும் தன்மை வாய்ந்த துவக்க நிலை விலை நிர்ணயம் மூலம், துவக்க நிலை SUV பிரிவில், இது ஒரு சிறந்த தேர்வாக அமைந்து உள்ளது. அதே நேரத்தில் அடுத்தடுத்த வகைகளின் நிலை உயர உயர, விலை நிர்ணயமும் வேதனை அளிக்கும் வகையில் அதிகரிக்கிறது. இந்த வாகனத்தின் உயர் தர மாதிரி மாடலில் உள்ள அம்சங்கள், தரம் மற்றும் கட்டமைப்பு ஆகியவை அதிக செலவை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், அந்த வகையைத் தேர்வு செய்யும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை நீங்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. இந்த கார் உட்பட்டுள்ள பிரிவில் காணப்படும் டஸ்டர், இதற்கு நெருங்கிய போட்டியாளராக நமக்கு தென்படுகிறது. ஆனால் அது ஒரு 5 சீட்கள் மட்டுமே கொண்ட வாகனம் என்பதோடு, அதன் என்ஜின் அளவும் குறிப்பிட்டத்தக்க வகையில் சிறியது ஆகும். இந்நிலையில் டாடா சஃபாரி ஸ்டோர்ம் மட்டுமே, ஸ்கார்பியோ காருக்கு நிகரான ஒரே வாகனமாக உள்ளது. ஆனால் அந்த வாகனத்தில் அதற்கே உரிய சில குறைப்பாடுகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.