மஹிந்திரா NuvoSport

` 7.6 - 10.1 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


ஏப்ரல் 05, 2016: நம் நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா தனது நுவோஸ்போர்ட் காரை ஆண்டிற்கு 18,000 யூனிட்கள் வீதம் தயாரித்து வெளியிட திட்டமிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் மேற்கண்ட இந்த SUV -யை, ரூ. 7.35 லட்சம் (எக்ஸ் –ஷோரூம், தானே) என்ற விலை நிர்ணயத்தில் இந்த இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் 4 மீட்டருக்கு குறைவான SUV –க்களின் தயாரிப்பு வரிசையில் TUV300 –க்கு அடுத்தப்படியாக மேற்கண்ட வாகனம் இரண்டாவது தயாரிப்பாக வெளியாக உள்ளது. குவான்டோ காருக்கு மாற்றாக வெளி வரும் இந்த நுவோஸ்போர்ட் கார், அதன் விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, TUV300- யையும் கடந்து நிற்பதாக தெரிகிறது. வாகனங்களின் இயந்திரவியலை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, தயாரிப்பு வரிசையில் இருந்து வெளியே செல்லும் குவான்டோ காரை இயக்கி வந்த அதே 1.5 –லிட்டர் டீசல் என்ஜினை கொண்டே இந்த வாகனமும் இயங்க உள்ளது. மேற்கண்ட இந்த டீசல் மோட்டார் மூலம் 100 bhp ஆற்றலும், 240 Nm முடுக்கு விசையையும் பெறப்படுகிறது. இதன் மூலம் இந்த வாகனம் லிட்டருக்கு 17.45 கி.மீ. என்ற ஒரு உத்திரவாதம் மிக்க மைலேஜ்ஜை அளிக்கிறது. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை பொறுத்த வரை, ஒரு 5 –ஸ்பீடு மேனுவல் மற்றும் ஒரு தேர்விற்குரிய AMT (ஆட்டோமேட்டேட் –மேனுவல் டிரான்ஸ்மிஷன்) ஆகியவற்றை உட்கொண்டு உள்ளது. இந்த நுவோஸ்போர்ட் காரில் ஆன்டி –லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உடன் எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்டிபியூஷன் (EBD) ஆகியவற்றை எல்லா தரப்பிலான வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டு உள்ளது. ஏர்பேக்குகளை பொறுத்த வரை துவக்க வகைக்கு மட்டும் தேர்விற்கு உரியதாகவும், அதற்கு மேற்பட்ட எல்லா வகைகளுக்கும் பொதுவாகவும் அளிக்கப்பட்டு உள்ளது.

மஹிந்திரா நுவோஸ்போர்ட் விமர்சனம்


மேற்பார்வை


கடந்த சில ஆண்டுகளாக, மஹிந்திரா நிறுவனம் தன்னை ஒரு SUV பிரிவை சேர்ந்த வாகனங்களை தயாரிப்பதில் நிபுணராக உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறது. கடினமான மற்றும் பயன்பாட்டிற்கு உரியதாக விளங்கும் பெலிரோ காரில் இருந்து துவங்கி, ஆடம்பரமான அதே நேரத்தில் நவீனத் தன்மையைக் கொண்ட XUV500 வரை உள்ள இந்த வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் உட்படும் எல்லா தயாரிப்புகளின் மூலமும், எந்த மாதிரியான ஒரு SUV -யை நுகர்வோர் விரும்பினாலும், அது தன்னிடம் உள்ளது என்பதை மஹிந்திரா நிறுவனம் உறுதி செய்ய விரும்புகிறது. மேற்கண்ட நுவோஸ்போர்ட் வாகனத்தை வெளியிடுவதன் மூலம் KUV100 மற்றும் TUV300 ஆகிய இரு வாகனங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. 4 மீட்டருக்கு குறைவான அளவுக் கொண்ட மஹிந்திரா நிறுவனத்தின் முதல் SUV ஆன குவான்டோ காரின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஒரு பதிப்பே மேற்கண்ட இந்த நுவோஸ்போர்ட் வாகனத்தின் அடிப்படையாக அமைந்து உள்ளது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தின் மற்றொரு கிராஸ் ஓவர் பயன்பாட்டு மாடலான TUV300 –யின் விலையை ஒட்டியே நுவோஸ்போர்ட் காரின் விலையும் அமைந்து உள்ளது. அதற்காக இது TUV –யைப் போலவே இருக்கும் என்று பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் மேற்கண்ட இந்த நுவோஸ்போர்ட் காரை ஒரு லைப் ஸ்டைல் வாகனமாக, அதே நேரத்தில் ஸ்போர்ட்டி தன்மையை கொண்டதாகவும், நீண்ட பயணங்களுக்கு ஏற்றதாகவும் அமையும் வகையில் மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி உள்ளது.

வெளி்ப்புற அமைப்பியல்:சைலோ காரின் அடிப்படை தன்மையில் சற்று மாற்றத்தை பெற்ற குவான்டோ காரை அடிப்படையாக கொண்ட இந்த நுவோஸ்போர்ட் கார், 4 மீட்டருக்கு குறைந்த அளவிலான கச்சிதமான ஒரு SUV ஆக உள்ளது. அதே நேரத்தில், தற்போதைய புதிய ஸ்கார்பியோ காரின் பிளாட்பாமை இந்த வாகனமும் பகிர்ந்து கொண்டு உள்ளது. குவான்டோ காரின் கட்டமைப்பை காப்பாற்றும் வகையிலான ஒரு கடைசிக் கட்ட வடிவமைப்பு முயற்சியான இந்த வாகனம், மஹிந்திரா நிறுவன தயாரிப்புகளின் வழக்கமான தன்மைகளை கொண்டு உள்ளது. (படிக்க: க்யூர்க்கி)
இதன் புதுப்பிக்கப்பட்ட முகப் பகுதி, இந்த வாகனத்தில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு மாற்றம் ஆகும். சைலோ காரிடம் இருந்த அதிகம் விரும்பப்படாத முகப் பகுதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ஒரு அதிக கவர்ச்சிகரமான விரும்பப்படத்தக்க மாற்றி அமைத்து, ‘உங்கள் முகத்தில்’ (இன் யூவர் ஃபேஸ்) வடிவமைப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் ஹெட்லெம்ப்கள் நிச்சயம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்து இழக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த காரின் முக்கிய லெம்ப்களுக்கு ஒரு புருவம் அமைத்து தந்தது போன்ற வடிவில் அளிக்கப்பட்டு உள்ள டேடைம் ரன்னிங் லைட்களை பார்க்கும் போது, ஒரு சாந்தமான பார்வையை செலுத்துவது போன்ற எண்ணத்தை நமக்குள் உண்டாக்குகிறது. புதுப்பிக்கப்பட்ட பம்பரின் மூலம் இந்த வாகனத்தின் சுயவிபரத்திற்கு சற்று தடித்த தன்மை கிடைத்து உள்ளது. SUV தோற்றத்தை பெற ஏற்கனவே சோதனை முயற்சியில் பரிசோதிக்கப்பட்ட மெட்டி பிளாக் உடன் கூடிய ஒரு சில்வர் ஸ்கிட்பிளேட் நிறத் திட்டத்தையே, இந்த முறையும் மஹிந்திரா நிறுவனம் பயன்படுத்தி உள்ளது.
பக்கவாட்டு பகுதி மற்றும் பின்பக்கம் ஆகியவை ஏறக்குறைய எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே விடப்பட்டு உள்ளது. இதில் மாற்றங்களாக பார்த்த உடனே நம் கண்களுக்கு தெரியும் காரியங்கள் எது என்றால், 16 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் புதிய டெயில் –லெம்ப்கள் ஆகியவை ஆகும். இவை எல்லாவற்றையும் தவிர, இந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிப்பில் இருந்து வெளியேற்றப்பட உள்ள குவான்டோ காரை, அப்படியே ஒத்ததாக நுவோஸ்போர்ட் கார் காணப்படுகிறது எனலாம்.

உட்புற அமைப்பியல்இந்த காரின் உட்புற அமைப்பியல் வடிவமைப்பு கூறுகள் பெரும்பாலானவை குவான்டோ காரை ஒத்து உள்ளது போன்றே தெரிந்தாலும், நவீன கால வாகன தொழிற்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மேம்பட்டதாக நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில், ஒரு சில நவீன கூறுகளை இந்த வாகனத்திற்குள் மஹிந்திரா நிறுவனம் புகுத்தி உள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளை போன்ற ஸ்டைலான உட்புற அமைப்பியலை இந்த வாகனத்தில் காண முடிவது இல்லை. ஆனாலும் காருக்குள் விஸ்தாரமாகவும், சுமூகமாகவும் உள்ளதை நம்மால் உணர முடிகிறது. காரில் உள்ள விண்டோக்கள் பெரிய அளவிலான கண்ணாடிகளை கொண்டிருப்பதால், வெளிப்புற காட்சிகளை பார்வையிடுவதற்கு வசதியாக உள்ளது. ஆனால் டோரில் டோர் லாக் மற்றும் ஆன் -லாக் செய்வதற்கான பட்டன்கள் இல்லாமல் இருப்பது ஒரு பின்னடைவை உண்டாக்குகிறது. அதேபோல முன்பக்க ஆம்ரெஸ்ட் தாழ்த்தப்பட்ட நிலையில் வைத்து கொண்டு சீட்பெல்ட்டின் ஹூக்கை பயன்படுத்த முடியாது. குறிப்பிட்ட இடத்தில் ஒருவரை திடீரென இறக்கி விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதற்காக சீட் பெல்ட்டை விரைவில் விடுவிக்கும் வசதி அளிக்கப்படவில்லை.
இந்த வாகனத்திற்கு அளிக்கப்பட்டு உள்ள ஒரு புதிய கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் அமைந்த நிறத் திட்டம், மங்கினது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. எங்களை பொறுத்த வரை, ஒரு முழு கருப்பு நிறத்திலான உட்புற அமைப்பியல் அல்லது ஒரு பழுப்பு மற்றும் கருப்பு நிறங்களின் ஒருங்கிணைப்பு ஆகிய ஏதாவது ஒன்றை பெற்று இருக்கும் தன்மையை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்.
இந்த வாகனத்தின் உட்புற அமைப்பியலின் மேம்பாடுகளை குறித்து பார்க்கும் போது, அதில் ஒரு புதிய 6.2 –இன்ச் டச் ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம் உடன் கூடிய ப்ளூடூத், USB மற்றும் FM ஆதரவு ஆகியவை உட்படுகின்றன. மேற்கண்ட இந்த சிஸ்டம், சாங்யாங் ரேக்ஸ்டன் SUV –யில் காணக் கிடைக்கும் அதே கென்வூட் யூனிட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாகனத்தில் ஒரு பெரிய சென்ட்ரல் டிஸ்ப்ளே இருந்தாலும், அதில் MID தகவல்கள் எதுவும் அளிக்கப்படுவது இல்லை.
அதேபோல ஏர் –கன்டீஷனிங் சிஸ்டத்திற்கு அளிக்கப்பட்டு இருந்த கன்ட்ரோல்களின் உருவம் மாற்றப்பட்டு, தற்போது உருண்ட வடிவிலான கினாப்களாக அளிக்கப்பட்டு உள்ளன. இந்த காரின் வடிவமைப்பு சிறப்பான இயல்பை பெற்று உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், வெப்பம் மிகுந்த கோடைக் காலத்தில் கூட காருக்குள் குளுமைப்படுத்தும் விதமாக சென்டர் ஏர் வென்ட்களின் செயல்பாடு அமைந்து உள்ளது. இந்த வாகனத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஒரு ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் அமைப்பை கூட, மஹிந்திரா நிறுவனம் இதில் உட்படுத்தி இருக்கலாம். ஏனெனில் விட்டாரா ப்ரீஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆகிய இரண்டு வாகனங்களிலும், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் இருப்பது கவனிக்கத்தக்கது. TUV300 காரில் இருப்பதை ஒத்துக் காணப்படும் ஸ்டீரிங் வீல்லை இந்த வாகனமும் பெற்று இருப்பதோடு, அதில் கன்ட்ரோல்கள் ஏறிச் செல்லும் வண்ணம் அமைந்து உள்ளன. தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளும் வசதியை இந்த ஸ்டீரிங் பெற்று உள்ளது.
இந்த வாகனத்தின் முன்னோடியைப் போலவே, இந்த நுவோஸ்போர்ட் காரும் ஒரு 7 –சீட்களை கொண்ட வாகனமாக தொடர்கிறது. இதற்கு ஒத்தாற் போல TUV300 கார் மட்டுமே 5+2 சீட்டிங் வசதியை பெற்று உள்ளது. ஆனால் இதில் சீட் பெல்ட்கள் அளிக்கப்படாமல் விட்டிருப்பது ஒரு பாதுகாப்பற்ற நிலையை உண்டாக்குகிறது. இந்த காரின் முதல் இரண்டு வரிசைகளின் லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் ஆகியவை விஸ்தாரமான முறையில் அமைந்து உள்ளதால், தேவைக்கு அதிகமான இடவசதியை பெற்று உள்ளது. அதற்கு பின்னால் உள்ள மூன்றாவது வரிசையில் காணப்படும் ஜம்ப் சீட்கள், சின்னச் சிறு பிள்ளைகளுக்கு ஏற்றதாக மட்டுமே கணக்கில் கொள்ள முடியும். இந்த மூன்றாவது வரிசையில் உள்ள இந்த ஜம்ப் சீட்களை கீழ் நோக்கி மடித்துக் கொண்டு, இரண்டாவது வரிசையை நீங்கள் விரிவுப்படுத்திக் கொள்ளும் வசதியும் காணப்படுகிறது. நீண்ட தொலைவில் அமைந்த பயணங்களுக்கு செல்லும் போது, இது ஒரு கூடுதல் வசதியாக இருக்கும்.
தொலைத் தூர பயணங்களை பற்றி கூறும் போது, இதன் பூட்டின் மொத்த அளவாக 412 லிட்டர் காணப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பின்பக்கத்தில் உள்ள பெஞ்ச்சை 60: 40 என்ற அளவில் மடித்து விடுவதன் மூலம் இந்த அளவை மேலும் விரிவுப்படுத்த முடியும். பின்பக்க சீட்களை மொத்தமாக மடித்து விடுவதன் மூலம் ஒட்டு மொத்தமாக உங்களுக்கு 850 லிட்டர் வரை பூட்டில் இடவசதியை பெற முடிகிறது. இதை தவிர கேபினில் ஆங்காங்கே எண்ணற்ற பொருள் வைப்பு இடவசதிகள் காணப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, கியர் –லிவரை ஒட்டிய பகுதியில் ஒரு கூட்டம் கப் ஹோல்டர்களும், டோர் பேட்களில் பாட்டில் ஹோல்டர்களும், ஒரு கவர்ச்சிகரமான சன் கிளாஸ் ஹோல்டரும் காணப்படுகிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, நுவோஸ்போர்ட் காருக்குள் இருக்கும் உட்புற அமைப்பியல், உண்மையிலேயே நடைமுறைக்கு ஏற்றதாக அமைந்து உள்ளது எனலாம். மேலும் இந்த பிரிவில் உள்ள மற்ற எல்லா வாகனங்களிலும் வைத்து பார்க்கும் போது, நுவோஸ்போர்ட் கார் விரிவானதாகவும், உயரம் மிகுந்ததாகவும் உள்ளது. இதனால் வாகனத்தின் உள்ளே உள்ள இடவசதி மற்றும் சாதனங்களின் பங்களிப்பு போன்றவற்றில், இந்த வாகனத்திற்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கிறது. அதே நேரத்தில் பொருட்களின் தரத்தை மதிப்பிட்டால், மற்றவைகளுக்கு முன்னால் இது சிறந்தது என்று கூற முடியாது. இந்த காரின் டாஸ்போர்ட் மற்றும் மற்ற பொருட்களின் உருவாக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு உள்ள பிளாஸ்டிக்கின் தரத்தை பார்த்தால், அது குவான்டோ காரின் தரத்தை ஒத்து உள்ளது. இருப்பினும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் விட்டாரா ப்ரீஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆகிய இரண்டு கார்களின் கட்டமைப்பிலும் நமக்கு சிறந்த உணர்வை அளிக்கின்றன.

என்ஜின் மற்றும் செயல்திறன்இந்த வாகனத்திற்கான என்ஜினை பொறுத்த வரை, TUV –யில் உள்ளதையே இதுவும் பெற்று உள்ளது. ஆனால் TUV உடன் ஒப்பிடும் போது, காகித தாளில் ஒரு வித்தியாசமான ட்யூனிங் உடன் கூடிய சிறந்த தயாரிப்பாக மிளிர்கிறது. இந்த மாற்றம் என்பது ஒரு பெரிய அளவிலானது என்று கணக்கில் கொள்ள முடியாது. ஏனெனில் என்ஜினில் mஹாக் 100 என்ற முத்திரையை பெற்று உள்ளதோடு, 100 bhp ஆற்றலையும், 240 Nm முடுக்கு விசையையும் வெளியிடுவதாக அமைந்து, இன்றைய காலக்கட்டத்தில் விற்பனையில் உள்ள அதிகபட்ச ஆற்றல் கொண்ட கச்சிதமான SUV ஆக திகழ்கிறது. இந்த என்ஜினில் ஒரு ஈகோ தேர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அப்போது திறனை குறைத்து கொண்டு 73 bhp ஆற்றலையும், 180 Nm முடுக்கு விசையையும் மட்டுமே வெளியிட்டாலும், எரிப்பொருள் சிக்கனத்தில் கண்டிப்பாக செயல்படுகிறது. இதற்கு நெருங்கிய இரண்டாவது இடத்தை 99 bhp ஆற்றலையும், 215 Nm முடுக்கு விசையையும் வெளியிடும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் பெறுகிறது.
நுவோஸ்போர்ட் காரின் மொத்த எடை எவ்வளவு என்பது குறித்து மஹிந்திரா நிறுவனம் தரப்பில் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் நாங்கள் இந்த வாகனத்தை எடையிட்டு பார்த்த போது, இந்த வாகனத்தின் எடை ஏறக்குறைய 1.7 டன் என்று அறிய முடிந்தது. இந்த வாகனத்தின் செயல்திறனை பாதிக்க கூடிய காரியங்களில், இதன் இந்த எடை அளவு கூட ஒரு காரணமாக அமையலாம் என்று எங்களுக்கு தோன்றுகிறது.
எரிப்பொருள் சிக்கனத்தை குறித்த எல்லா முக்கியத்துவம் வாய்ந்த கூறுகளையும் வைத்து பார்க்கும் போது, நுவோஸ்போர்ட் காரின் ARAI மதிப்பீட்டு அளவின்படி லிட்டருக்கு 17.45 கி.மீ. என்று குறிக்கப்படுகிறது.
ஒப்பீட்டில் மிகக் குறைந்த அளவான 1600 rpm என்ற நிலையில் கூட, முடுக்குவிசையை அளிக்கிறது. இதன் மூலம் ஆங்காங்கே நின்று நின்று செல்லும் சாலை நெரிசலில் கூட ஓட்டுவதற்கு உதவிகரமான உள்ளது. அதேபோல மற்ற வாகனங்களுடன் ஒப்பிடும் போது, இந்த வாகனத்திற்கு அளிக்கப்பட்டு உள்ள கிளெச் மிகவும் மென்மையாக உள்ளது என்பது ஓட்டுநருக்கு பெரும் உதவியாக இருக்கும் மற்றொரு காரியம் ஆகும்.
நுவோஸ்போர்ட் காரில் ஒரு கிளெச்சை பயன்படுத்தாமல் செலுத்துவதற்கான மற்றொரு தேர்வாக, இதன் AMT (ஆட்டோமேட்டிக்) வகை பயன்படுகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள பெரும்பாலான AMT வாகனங்களில் வழக்கமான பிரச்சனையாக மாறி உள்ள நேரம் கடந்த கியர் மாற்றங்கள் (டிலேடு ஷிஃப்ட்ஸ்), இந்த நுவோஸ்போர்ட் காரிலும் காணப்பட்டதால், அது எங்களுக்கு எந்த விதமான ஒரு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாக தெரியவில்லை.
மஹிந்திரா நுவோஸ்போர்ட் காரின் AMT வசதியை கொண்டதாக N6 மற்றும் N8 என்ற இரு வகைகள் விற்பனைக்கு வருகின்றன. இதில் N8 வகையில் DRL –கள், அலாய் வீல்கள், ஸ்பாயிலர், பக்கவாட்டு பாடி டிக்கேல், கருப்பு நிறத்தில் அமைந்த B மற்றும் C பில்லர்கள் ஆகியவற்றை பெற்று உள்ளது. மேலும் அலுமினியம் பெடல்கள், ஒரு 6.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ரிவெர்ஸ் பார்க் அசிஸ்ட் ஆகிய வசதிகளை நீங்கள் பெற முடிகிறது. இது தவிர ஸ்டீரிங்கில் ஏறிச் செல்லும் கன்ட்ரோல்கள், டிரைவர் சீட் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி, லும்பர் ஆதரவு, இரண்டாவது வரிசையில் உள்ள சீட்களை நகர்த்த கூடிய வசதி, முன்பக்க ஆம் ரெஸ்ட் மற்றும் ஃபேக் லெம்ப்கள் ஆகியவை கிடைக்கின்றன. மேற்கண்ட இவை அனைத்திற்கும் சேர்த்து காரின் விலையை தவிர கூடுதலாக ரூ.77 ஆயிரம் மட்டும் நீங்கள் செலவு செய்தால் போதுமானது. நுவோஸ்போர்ட் காரை மிஞ்சிய ஆர்வத்தோடு சென்று ஓட்டி பார்க்க வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்க கூடியது ஆகும்.
அதே நேரத்தில் AMT வாகனத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய வேறொரு காரியமும் உள்ளது. மேனுவல் முறையில் இயக்கப்படும் வாகனம் மணிக்கு 0 –வில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்ட எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட ஆட்டோமேட்டிக் வசதிக் கொண்ட வாகனம் கூடுதலாக 4.44 வினாடி அதிகமாக எடுத்துக் கொள்கிறது. ஆனால் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய இரு வகையான இயக்க முறைகளில் செயல்படும் வாகனங்களும், மணிக்கு 20 முதல் 80 கி.மீ வேகம் மற்றும் மணிக்கு 40 முதல் 100 கி.மீ. வேகம் ஆகியவற்றில் ஒத்த கியர் முடுக்குவிசையையே அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட இந்த காரணத்தினால் ஆட்டோமேட்டிக் வகையின் மீதான மதிப்பு குறைகிறது. இதனால் ஆட்டோமேட்டிக் இயக்கம் கொண்ட வாகனத்தின் விரைவான இயக்கத்திற்கு இன்னும் சில மேம்பாடுகள் அவசியமாக உள்ளது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மஹிந்திராவின் நுவோஸ்போர்ட் காரின் AMT உடன் போட்டியிடும் வகையில் இந்த பிரிவில் எந்த வாகனமும் இல்லை. இதனால் தனது நிலையான விற்பனையை பெற்ற தயாரிப்பான TUV300 –க்கு சற்று மேலாக ரூ. 23,000 அதிகமான விலை நிர்ணயத்தோடு இந்த வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் களமிறக்கி உள்ளது. AMT -யின் வகைகளில் ஒன்றான N6 -ன் விலை ரூ. 9.10 லட்சமும் (எக்ஸ் –ஷோரூம் டெல்லி), N8 –ன் விலை ரூ. 9.87 லட்சமும் (எக்ஸ் –ஷோரூம் டெல்லி) எனவும் விலை நிர்ணக்கப்பட்டு உள்ளது.

பிரேக்கிங் மற்றும் கையாளுதல்இந்த வாகனத்தில் செய்யப்பட்டு உள்ள மிகப் பெரிய மேம்பாடு என்பது இதில் உள்ள பயணம் மற்றும் கையாளும் திறன் ஆகும். ஸ்கார்பியோ காரை அடிப்படையாக கொண்ட சேசிஸை, நுவோஸ்போர்ட் காரும் பெற்று உள்ளது.
இந்நிலையில் குவான்டோ காருடன் ஒப்பிட்டால், நுவோஸ்போர்ட் காரின் அளவீடுகளில் சில முன்னேற்றமான காரியங்களை காண முடிகிறது. இந்த வாகனத்தின் சஸ்பென்ஸன் மேம்படுத்தப்பட்டு உள்ளதன் மூலம் பாடி உருண்டு செல்லும் தன்மைக்கு தற்போது தீர்வு காணப்பட்டு உள்ளது. இதனால் இதன் முன்னோடி உடன் ஒப்பிடும் போது, இந்த காரின் மீது அதிக அளவிலான நம்பிக்கையை செலுத்த ஏதுவாக உள்ளது.
ஆனால் நுவோஸ்போர்ட் காரில் மேல் நோக்கி செல்லும் (அப்சைடு) போது தேவைப்படும் கையாளும் திறன் அளிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. அதேபோல வாகனத்தை திருப்பும் போது மந்தமாக செயல்படுவதால் (லேசி டேன்), திடீர் திருப்பங்களை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே நுவோஸ்போர்ட் காரில் மிக குறுகிய விரைவான வளைவுகளை எடுக்கும் போது, மென்மையான அணுகுமுறை கடைபிடிப்பது சிறந்த பலனை தரும். ஏனெனில் இது போன்ற சூழ்நிலைகளில் பிரேக்கிங் அவ்வளவு சிறப்பான செயல்பாட்டை கொண்டிருப்பதாக கருத முடியாது. அதே நேரத்தில் இந்த வாகனத்தில் கடினமான பிரேக்கிங் சந்தர்ப்பங்களில் உதவும் வகையில் ABS வசதி காணப்படுவதோடு, எச்சரிப்பு விளக்குகளும் (வார்னிங் பிலிங்கர்ஸ்) உள்ளன.
இந்த வாகனத்தில் இருந்து எழும்பும் ஒலியின் நிலைகளில் கூட ஒரு மேம்பாட்டை பெற்று உள்ளது. இதன் என்ஜின் மென்மையாக செயல்படும் வகையில் இருந்து மாற்றப்பட்டு உள்ளதோடு, கேபினிற்குள் வரும் ஒலியின் அளவை கூட வடிகட்டி உள்ளே வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்திய சாலைகளில் நீங்கள் தினமும் எதிர்கொள்ளும் கடினமான சாலைகள் மற்றும் வேகத் தடைகள் போன்றவற்றின் வழியாக நுவோஸ்போர்ட் காரை ஓட்டி செல்லும் எப்படி அவற்றை எதிர்கொள்கிறது என்பதை பொறுத்தே, நாங்கள் வழங்கும் தீர்ப்பு அமையும். ஆனால் அதற்கு எங்கள் கைகளை அந்த வாகனத்தின் மீது வைத்து ஒரு சோதனை ஓட்டத்தை செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

பாதுகாப்பு மற்றும் பாதுகாவல்மஹிந்திரா நிறுவனத்தின் சமீப கால தயாரிப்புகளில் உள்ளது போலவே, இந்த வாகனத்தில் உள்ள எல்லா வகைகளுக்கும் பொதுவாக ABS மற்றும் EBD ஆகிய இரண்டும் வழங்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மற்றபடி இந்த காரின் எல்லா வகைகளுக்கும் இரட்டை ஏர்பேக்குகள் தேர்விற்குரிய ஒன்றாக அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நுவோஸ்போர்ட் காரை, ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் மாருதி சுசுகி விட்டாரா ப்ரீஸ்ஸா ஆகிய வாகனங்களுக்கான தகுந்த போட்டியாளராக விளங்கும் வகையில், மஹிந்திரா நிறுவனம் களமிறக்கி உள்ளது.

தீர்ப்புஒரு இதமான நகர்புற வாகனத்தை குறிப்பாக எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுக்கு, நுவோஸ்போர்ட் ஒரு அட்டகாசமான பேக்கேஜ் ஆகும். தற்போதைய மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு கவர்ச்சிகரமான ஒன்றாகவும், சேசிஸ் மற்றும் சஸ்பென்ஸன் ஆகியவற்றில் செய்யப்பட்ட மேம்பாடுகள் மூலம் குவான்டோ காரை, பல மைல்களுக்கு பின்னுக்கு தள்ளி முன்னேறியதாக திகழ்கிறது. மேலும் இந்த வாகனத்தின் உள்புறத்தில் அதிக அளவிலான இடவசதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான மேம்படுத்தப்பட்ட அம்சங்களின் பட்டியல் ஆகியவற்றை கொண்டு உள்ளது.
மேற்கண்ட இந்த நுவோஸ்போர்ட் காரை ஒரு முறை கொஞ்ச தூரத்திற்கு ஓட்டி சென்று ஒரு சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள எங்களுக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது. எனவே எங்களின் சோதனை ஓட்டத்திற்கு பிறகு உங்களை மீண்டும் சந்திக்க உள்ளோம். மற்றபடி மேலோட்டமான முறையில் பார்க்கும் போது, இந்த வாகனம் உண்மையிலேயே நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.