மஹிந்திரா KUV 100

` 4.3 - 7.3 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


பிப்ரவரி 23, 2016: குறிப்பிட்ட அளவிலான தயாரிப்புத் திறன் மற்றும் நிரம்பி வழியும் நுகர்வோரின் தேவை ஆகிய இரண்டும் சேர்ந்து, இன்று இந்தியாவில் விற்பனையில் மிகவும் பிரபலமாக உள்ள சில கார் மாடல்களுக்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், மஹிந்திரா நிறுவனம் எல்லா விதமான தன்மைகளையும் பெற்றிருப்பதோடு, அதன் அதிக எதிர்பார்ப்புக் கொண்ட மாடலான மைக்ரோ SUV-யான KUV100-யை களமிறக்க உள்ளதாக தெரிகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி அளவான மாதந்தோறும் 5500 யூனிட்கள் என்பதை, வரும் மாதங்களில் 8,500 யூனிட்டாக விரைவில் உயர்த்த உள்ளதால், மேற்கூறிய 6-சீட்களை கொண்ட வாகனத்திற்கான ஒட்டுமொத்த காத்திருப்பு காலம் கணிசமான அளவு குறையும்.

மஹிந்திரா KUV100 விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்:


‘மஹிந்திரா’ என்ற வார்த்தைக்கு, ஒரு கூட்டம் காரியங்களின் ஒத்தத் தன்மை என்று பொருள் கொள்ள முடியும். முதலாவதாக, பெரிய முரட்டுத்தனமான உருவை கொண்டுள்ளதோடு, எங்கும் செல்லக்கூடியத் திறன்களை பெற்றது. உலகின் மிகவும் உயர்ந்த சாலைகளில் பயன்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சாதனம் இது. உங்கள் உடல் கூட அந்த வழியை கடந்து செல்ல அஞ்சக் கூடும். ஆனால் ஒரு மஹிந்திரா அதன் உச்சியை எட்டுவதில் உறுதுணையாக இருக்கும். மற்றொன்று, அரசு மற்றும் சேவை துறையினரின் வாகனங்களாக உள்ளன. உங்களை சுற்றிலும் பார்த்தால், பாதுகாப்பு வழங்கும் போலீஸ் இடைமறிப்பு பாதுகாப்பு வாகனங்கள் முதல் ஆம்புலன்ஸ் மற்றும் முப்படை வாகனங்கள் ஆகியவை தார்கள், ஸ்கார்பியோக்கள் மற்றும் பெலிரோக்கள் என்ற இதன் பல்வேறு அவதாரங்களாக தான் காணப்படுகின்றன. மஹிந்திராவின் துவக்க நிலை சப்-4m பிரிவிற்கான நுழைவிற்கு, குவான்டோ உதவியது. ஆனால் இது அவ்வளவாக வெற்றிப் பெறவில்லை. இந்த வகையில் வெளியான மூன்றாவது தயாரிப்பு தான் KUV. இந்த KUV-வின் உருவாக்கத்திற்காக, அதிகளவிலான பொருட்செலவு மற்றும் மனித உழைப்பை செலவிட்டதாக மஹிந்திரா நிறுவனம் கூறுகிறது.

P1

இந்த முறை, இளம் வயதினரை குறிவைத்து KUV1OO-யை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு நகர்புற பேக்கேஜ்ஜை அளிக்க, அவர்கள் விரும்பினர். அதன் விளைவாக, உயர் மதிப்பு கொண்ட அம்சங்களை பெற்று, பார்வைக்கு சிறப்பான தோற்றத்தோடு, அளிக்கும் பணத்திற்கு நல்ல மதிப்புக் கொண்டதாக இது அமைந்துள்ளது. இந்த வகையில் மஹிந்திராவின் சூத்திரம் சரியானதா? என்பதை ஆராய்வோம்!

பிளஸ் பாயிண்ட்ஸ்:1. இடவசதி. பின்பக்கத்தில் ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் ஆகியவை விஸ்தாரமானவை.
2. அம்சங்களில் உயர்ந்தவை: இதில் டேடைம் ரன்னிங் லைட்கள், குளிர்ந்த கிளெவ்பாக்ஸ், ஸ்டீரிங்கில் ஏறிச்செல்லும் கன்ட்ரோல்கள் உடன் ஒருங்கிணைந்த மியூஸிக் சிஸ்டம், அம்பியன்ட் லைட்கள் உள்ளிட்ட பல உள்ளன.
3. மிகச் சிறந்த எரிப்பொருள் சிக்கனம் கொண்டவைகளில் உட்படும் இதன் டீசல் மோட்டார், லிட்டருக்கு 25.83 கி.மீ அளிக்கிறது.
4. எல்லா வகைகளிலும் பொதுவானதாக ABS மற்றும் EBD ஆகியவை அளிக்கப்பட்டுள்ளதோடு, துவக்க வகையில் இருந்து ஏர்பேக்குகள் தேர்விற்குரியதாக அளிக்கப்படுகிறது.

மைனஸ் பாயிண்ட்ஸ்:1. மெல்லிய டயர்களால் சரியான பிடிப்பு (கிரிப்) கிடைப்பதில்லை. ஒரு வேகமான வளைவு அல்லது திடீர் பிரேக்கிங் சந்தர்ப்பங்களில், பயத்தை உண்டாக்குவதாக உள்ளது.
2. இதன் நெருங்கிய போட்டியாளர்களை (கிராண்டு i10/ ஸ்விஃப்ட்) விட, இதன் NVH (ஒலி அதிர்வு தொல்லை – நாய்ஸ் வைப்ரேஷன் ஹார்னஸ்) அளவு மிகவும் அதிகமாக உள்ளது – குறிப்பாக டீசல் வகை.
3. சீட்கள் கடினமானவை. இவை அதிகளவிலான ஆதரவை அளிப்பதில்லை. 3+3 சீட்டிங் கட்டமைப்பு வகையில், ஒருங்கிணைந்த ஹெட்ரெஸ்ட்கள் உள்ளன.

தனித்தன்மையான அம்சங்கள்:1. இப்பிரிவிலேயே முதல் முறையாக – தேர்விற்குரிய 6 சீட் வகை. முன்பக்கத்தில் உள்ள சீட்களில் 3 பேர் அமர முடியும்.
2. உயர் வகையான K8-ல், எலக்ட்ரிக் ஸ்டார்ட் – ஸ்டாப் சிஸ்டம் உள்ளது. இதனால் எரிப்பொருள் மிச்சப்படுத்தப்படுகிறது.
3. மஹிந்திராவின் ப்ளூ சென்ஸ் ஆப் உள்ளது. இதன்மூலம் ஆடியோ கன்ட்ரோல்களுக்கான வசதி அளிக்கப்படுவதோடு, எரிப்பொருள் அளவு உடன் டிஸ்டென்ஸ் டு எம்ட்டி, பார்க்கிங் லெம்ப்கள், டோர் ஒப்பன் வார்னிங் மற்றும் ஒரு அமைப்பாளர் (அர்கனைஸர்) போன்ற வாகன தகவல்கள் அளிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உங்கள் ஸ்மார்ட்போனில் பெறலாம்.

வெளிப்புற அமைப்பியல்:


இந்த KUV 1OO, ஒரு பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தொழிற்சாலையை ஒட்டிய பகுதியில் சில கழுகு கண்களின் வேவுப் பார்த்த படங்களில் சிக்கிய போது, அதாவது S101 என்ற பெயரில் அழைக்கப்பட்டதில் இருந்தே இந்த சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. அதன்பிறகு முழுவதும் மூடப்பட்ட நிலையில் உலா வந்த வாகனங்களின் மூலம், அதன் ஒரு சில அமைப்புகள் எப்படி இருக்கலாம் என்று யூகிக்க மட்டுமே முடிந்தது.

அதிகாரபூர்வமான படங்கள் வெளியான பிறகும் கூட, இவ்வாகனத்தை நேரடியாக பார்த்து, அதன் அளவீடுகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஏனெனில் உங்கள் யூகங்களில் உள்ளதை விட, நேரடியாக பார்க்கும் போது உங்களுக்கு உண்டாகும் அனுபவம் என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

P2

நேரடியாக பார்க்கும் போது, இந்த KUV ஒரு உப்பிய ஹேட்ச்சை போல இல்லாமல், அளவில் குறைக்கப்பட்ட SUV-யை போன்ற தோற்றத்தை கொண்டுள்ளதை அறிய முடிந்தது. அதிலும் முக்கியமாக, முன்புறத்தின் மூன்று-பங்குகளை கூறலாம். இதன் வடிவமைப்பும், பெரும்பாலான மஹிந்திரா தயாரிப்புகளில் உள்ள பார்த்ததும் கவர்வது அல்லது வெறுப்பது என்ற தத்துவத்தை தழுவியதாக இருந்தது. இந்த KUV 1OO (அதை மஹிந்திரா அழைக்க விரும்புவது போல, கூல் யூட்டிலிட்டி வெஹிக்கிள்) மஹிந்திராவின் தொழிற்சாலையில் இருந்து நமது டிரைவ் பேக்கின் எண்ணற்ற கவனத்தை கவர்ந்திழுப்பதாக அமைந்தது. இதில் பெரும்பாலானோர் இளம்வயதினர் என்பதில் இருந்து, இளம் வயதினரை குறிவைத்தே மஹிந்திரா வடிவமைப்பாளர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. முன்பகுதியில் நேர்த்தியான ஒரு ஜோடி ஹெட்லெம்ப்கள் உடன் ஒருங்கிணைந்த டேடைம் ரன்னிங் லெம்ப்கள் காணப்படுகின்றன. இது சன்கிளாஸ்களை தழுவிய அமைப்பு என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

P3

ஹெட்லெம்ப்கள் பாதி புகைமூட்டம் கொண்டது போன்ற அமைப்பை பெற்று, முன்பக்க ஃபென்டரின் மீதான ஒரு பேனலுக்கு உள்ளே கடந்து செல்கிறது. குறிப்பாக, ஹெட்லெம்ப் கிளெஸ்டர் அமைப்பை விளக்கும் வகையில், லேசான சிவப்பு வரி கடந்து செல்வது, எங்களை கவர்ந்தது.

P4

இதன் கிரில், மஹிந்திரா குறியீட்டு டிசைன் ஆகியவை மிகவும் நேர்த்தியாக இருப்பதோடு, அதில் 6 செங்குத்தான பற்கள் போன்ற அமைப்பு கிரோம் மூலம் பணித் தீர்க்கப்பட்டுள்ளது. பெருத்த முன்பக்க பம்பரில் ஒரு எண்ணற்ற அளவிலான கிளாடிங், முன்பக்கத்தின் மொத்தமான ஒரே நிறத்தை பங்கிடுவதாக அமைந்துள்ளது. செங்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள ஃபேக்லெம்ப்கள் (சுற்றிலும் கிரோம் வரிகளை பெற்று) மற்றும் மேட்டி சில்வர் மூலம் பணித்தீர்க்கப்பட்ட ஃபிக்ஸ் ஸ்கிட் பிளேட் ஆகியவை இந்த KUV-க்கு ஒரு SUV-த்தனமான முகத்தை அளிக்கிறது.

P5

பக்கவாட்டு பகுதிக்கு செல்லும் போது, ஹெட்லெம்ப்களில் இருந்து முன்பக்க டோர்களை நோக்கி ஒரு கூர்மையான கோடு செல்கிறது. மற்றொரு கோடு C-பில்லருக்கு சற்றுக் கீழே துவங்கி, டெயில்-லெம்ப்களின் ஆர்ச்சுகளின் மேலே பயணித்து, பூட்டில் முடிவடைகிறது. இந்த KUV-யில் ஒரு டால்-பாய் அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளதை குறிக்கும் வகையில், இதன் ரூஃப்லைன் கணிசமான அளவு உயர்ந்ததாக உள்ளது.

பின்பக்க டோரின் ஹேண்டில்கள் விண்டோக்களுக்கு அடுத்தப்படியாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வித்தியாசமான செயல்பாடாகும். மேலும் பெரிய துண்டான ரூஃப் ரெயில்கள் மற்றும் தழுவிய வீல் ஆர்ச்சுகள் ஆகியவை சேர்ந்து பக்கவாட்டு பகுதியின் விபரங்களை முழுமைப்படுத்துகின்றன.

P6

இந்த வாகனத்தில் உள்ள 14 இன்ச் ஸ்பைடர் டிசைன் வீல்கள் உடன் 185mm டயர் ஆகியவை அதன் தோற்றத்திற்கு மெருகேற்ற தவறிவிட்டது. வீல்களில் காணப்படும் டயர்கள் மிகவும் மெலிந்ததாகவும், சிறியதாகவும் இருப்பதால், இதன் SUV தோற்றத்திற்கு ஏற்றதாக அமையவில்லை. பெரிய ட்ரிம்கள் மற்றும் தடித்த டயர்கள் இருந்திருந்தால், அதன் டிசைன் மற்றும் செயல்திறனுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

P7

மஹிந்திராவின் தரத்திற்கு ஏற்ப, இதன் பின்பக்கம் சுத்தமாக உள்ளது. பிளாக் டெயில்-லெம்ப்களின் மேலே ஒரு கோடு செல்கிறது. மற்றபடி பின்பக்கம் சுத்தமாக உள்ளது. ஒருங்கிணைந்த ஸ்பாயிலர், கிளாடிங் மற்றும் இரட்டை பின்பக்க ஃபேக்லெம்ப்கள் ஆகியவை சற்று காரசாரமாக உள்ளன.

P8

KUV-யின் அளவீடுகளை பொறுத்த வரை, 3675mm நீளமும், 1655 mm உயரமும் (ரூஃப் ரயில்கள் உட்பட) மற்றும் 1715 mm அகலமும் கொண்டுள்ளது. இதன் போட்டியாளர்கள் (ஃபிகோ, கிராண்டு i10 மற்றும் ஸ்விஃப்ட்) நீளமானவை என்றாலும், KUV1OO-ல் உகந்த உட்புற அமைப்பியலை பெற்றுள்ளது. அதே நேரத்தில், இதன் உயரம் மற்றும் அகலம் ஆகியவை, பெரும்பாலானவற்றில் அதிகமானவை ஆகும்.

இதனால் அதன் அளவீடுகள் சரிவிகிதமாக அமையாத நிலையில், அதை ஈடுசெய்யும் வகையில் மஹிந்திரா நிறுவனம் மூலம் சில சிறப்பான நிறங்களில் இது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஃபிளாம்பாயண்ட் ரெட், ஃபையரி ஆரஞ்சு மற்றும் அக்குவாமரைன் ஆகியவை நாங்கள் தேர்ந்தெடுத்தவை.

1

2

உட்புற அமைப்பியல்:


KUV-ல் உள்ள டோர்கள் சிறப்பாக திறப்பதோடு, விரிவாகவும் உள்ளதால், உள்ளே செல்லும் போதும், வெளியேறும் போதும், இந்த குட்டி மஹிந்திராவில் நிச்சயமாகவே இது ஒரு உறுதியான பகுதியாக உள்ளது. வாகனாரை போல, KUV-யின் கேபின் உள்ளே நீங்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் உங்களை, ஒரு வெளிர் சாம்பல் நிற உட்புற அமைப்பியல் வரவேற்பதாக அமைந்துள்ளது.

இதன் சீட் துணிகள் கூட, சாம்பல் நிறத்தை தழுவியதாகவே பணித்தீர்க்கப்பட்டுள்ளது. இந்த ஒரே நிறத்திலான அமைப்பை பிரிக்கும் வகையில், சுற்றிலும் ஆங்காங்கே பியானோ பிளாக், மேட்டி பிளாக் மற்றும் வெளிர் சில்வர் ஆகிய நிறங்களின் குறிப்புகளை காணலாம். இந்த KUV-யில் ஒரு உயிரோட்டம் மிகுந்த உட்புற அமைப்பாக காட்சியளிக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். இளம் வாடிக்கையாளர் குழுக்களை திசைத் திருப்பும் இலக்குடன், இந்த உட்புற நிறத்திட்டத்தை மஹிந்திரா நிறுவனம் அமைத்திருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.

P9

KUV-யில் அளிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒரு அம்சம் என்னவென்றால், இதன் மாற்றியமைக்கும் வசதி கொண்ட சீட்கள் ஆகும். இதை வாங்குபவர்களுக்கு ஒரு 3+3 மற்றும் ஒரு 2+3 என்ற வேறுபட்ட கட்டமைப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒரு 3+3 கட்டமைப்பை தேர்வு செய்தால் அதனுடன் ஒருங்கிணைந்த முன்பக்க ஹெட்ரெஸ்ட்களை பெறலாம். அதே நேரத்தில் 2+3-யை தேர்ந்தெடுத்தால் முன்பக்கத்தில் உள்ள 2 நேர்த்தியான சீட்களில் மாற்றி அமைக்க கூடிய ஹெட்ரெஸ்ட்களை பெறலாம். இது முக்கியமாக கவனிக்க வேண்டிய காரியம் ஆகும்.

P10

டிரைவர் சீட்டின் உயரத்தையும், பயணத்திற்கு தகுந்தாற் போலவும் மாற்றியமைத்து கொள்ளலாம். இவ்விரண்டும் குள்ளமான டிரைவர்களுக்கு கூட உயரத்திலும், எட்டுவதிலும் போதுமானதாக உள்ளது. ஆனால் சீட்கள் தயாரிக்கப்பட்டுள்ள பொருள் சற்று கடினமானதாக உள்ளது. இது நீண்டப் பயணங்களுக்கு ஏற்றது என்றாலும், தினமும் பயன்படுத்துவதற்கு இவ்வளவு கடினமான தன்மை கொண்ட சீட் தேவையில்லை. இந்த சீட்களை சற்று குஷன் கொண்டதாக அமைத்து, தோளுக்கு ஆதரவும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டியவை ஆகும்.

P11

நடுவில் உள்ள சீட் பயனுள்ளதாக இருந்தாலும், அரிதாகவே தேவைப்படுகிறது. முன்பக்கத்தில் உள்ள மூன்று பயணிகளும், தோல்பட்டை இடத்திற்காக நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் நடுவில் உட்காரும் பயணிக்கு துல்லியமாக நேராக கியர் லிவர் அமைந்துள்ளதால், இது டிரைவரை பெருமளவில் பாதிப்பதாக அமையும். கியரை 2வது / 4வது / ரிவெர்ஸ் போடும் போது, டிரைவரின் முழங்கை சரியாக நடுவில் உள்ள பயணியின் நெஞ்சில் இடிப்பதாக அமையும். மேலும், மத்தியில் உள்ள பயணிக்கு போதுமான அளவு லெக்ரூம் கிடைக்கும் வகையில், முன்பக்க வரிசையை சற்றும் பின்னோக்கி நகர்த்த வேண்டியுள்ளது. இல்லையெனில், அந்த பயணியின் முழங்கால், சென்டர் கன்சோலில் மோதும் நிலை உருவாகும்.

இந்த சீட்டை கீழே படுக்க வைப்பதன் மூலம் இதை ஒரு ஆம்ரெஸ்ட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி செய்யும் போது, ஹேண்டு பிரேக்கை எட்டுவதற்கு சிரமமாக உள்ளது. மேலும், முன்போலவே 2வது அல்லது 4வது அல்லது ரிவெர்ஸ் கியர்களை போடும் போது, இந்த ஆம்ரெஸ்ட்டின் மீது டிரைவரின் முழங்கை மோதுகிறது. அதேபோல, இந்த 6-சீட்கள் கொண்ட ஏற்பாட்டின் மூலம், எண்ணற்ற பொருட்கள் வைக்கும் இடவசதியையும் நீங்கள் இழக்க நேரிடும். 5 சீட்கள் கொண்ட பதிப்பில் நாகரீகமான தளத்தில் ஏறிச்செல்லும் சிறிய துளைகள் காணப்படுகின்றன.

P12

உங்களுக்கு கூடுதலாக ஒரு விருந்தாளி இருக்க, அதற்காக மற்றொரு காரை எடுக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவிர்க்கவே இந்த மத்தியில் உள்ள சீட் அளிக்கப்பட்டுள்ளதாக, மஹிந்திரா தெரிவித்துள்ளது. அவ்வப்போது பயன்படுத்தும் வகையில், ஆயத்தப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மத்தியில் அமரும் பயணிக்கு ஏர்பேக் குஷன் கிடையாது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், இதில் ஒரு லேப் பெல்ட்டை பெற்றுள்ளது. மேலும் மத்தியில் உள்ள பயணிக்கு எந்த காயத்தையும் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், சென்டர் கன்சோல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, மஹிந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது. ஆச்சரியப்படுத்தும் வகையில் பின்புறம் விஸ்தாரமாக உள்ளது. அதிகளவிலான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் காணப்படுகிறது. ஒப்பீட்டில், ஸ்விஃப்ட்/ டிசையரை விட குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகவும், கிராண்டு i10-யை விட அதிகமாகவோ அல்லது சமநிலையை விட சற்று குறைவாகவோ காணப்படுகிறது.

P13

இப்பிரிவிலேயே ஒரு சில கார்களில் மட்டுமே உள்ளதை போன்று இதிலும், இரு 6 பூட்டர்கள், ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ளது. பின்புறத்தில் 3 பேர் அமர்வதற்கு அதிக வாய்ப்பை தரும் வகையில், மத்தியில் உள்ள பயணியின் கால்களை இதமாக வைப்பதற்கு ஏற்ப தளம் சமமாக உள்ளது. பின்பக்க சீட்களில் உள்ள பயணிகளுக்கு ஒரு சென்ட்ரல் ஆம்ரெஸ்ட் உடன் கூடிய கப் ஹோல்டரும் அளிக்கப்படுகிறது.

நம் விருப்பத்திற்கு ஏற்ப, பின்பக்க இருக்கை சற்று அதிகமாகவே சாய்ந்திருப்பதாக, எங்களுக்கு தோன்றுகிறது. இப்பிரிவிலேயே முதல் முறையாக பின்பக்கத்தில் உள்ள மூன்று பயணிகளின் ஹெட்ரெஸ்ட்களையும் மாற்றியமைக்கும் வசதியை பெற்றுள்ளது, மற்றொரு சிறப்பாகும். டேஸின் லேஅவுட் முன்னோக்கி நேராக அமைந்து சிறப்பாக உள்ளதால், அதன் அமைப்பை விட இருப்பிடம் நன்றாக உள்ளது. இதன் சென்டர் கன்சோல், மேட்டி பிளாக்கிலான ஒரு செங்குத்தான பிளாஸ்டிக் ஸ்லாப் மூலம் பணித்தீர்க்கப்பட்டு, அதில் KUV1OO என்ற பேட்ஜ்ஜை கொண்டுள்ளது. இதில் எண்ணற்ற AC திறப்பிகளை கொண்டு, ஒரு ஒருங்கிணைந்த மியூஸிக் சிஸ்டம், ஏர் கண்டீஷனிங்கிற்காக செங்குத்தாக அமைக்கப்பட்ட கன்ட்ரோல்கள் மற்றும் டேஸில் ஏறிச்செல்லும் கியர் லிவர் ஆகியவை உள்ளன. கியர்-லிவர் சரியான இடத்தில் அமைந்து, முன்பக்கத்தின் பணிச்சூழலியலில் எந்த தொந்தரவையும் ஏற்படுத்துவதில்லை.

P14

இதன் ஏர் கண்டீஷனிங் சிஸ்டம், தற்போதுள்ள சிறந்த ஏர்-கண்டீஷனிங் யூனிட்களில் ஒன்றாக திகழ்கிறது. KUV-யில் பின்பக்க AC திறப்பிகள் இல்லாவிட்டாலும், இதன் கேபின் மிக விரைவில் குளுமை அடைந்து விடுகிறது. இதில் உள்ள ஃபேன் அதிக சத்தத்தை உண்டாக்குவது மட்டுமே, இதன் பின்னடைவு எனலாம்.

P15

இதன் மியூஸிக் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் எண்ணற்ற டிவிட்டர்களுடன் இணைந்து செயலாற்றுகிறது. ஒலியின் தரம் சாதாரணமாக இருக்கிறதே தவிர, உங்களை ஆச்சரியப்படுத்துவதாக எதுவுமில்லை. இசை விரும்பிகளை பொறுத்த வரை, ஒரு மேம்பாட்டை செய்து கொள்ளலாம். சாதாரணமாக FM கேட்பதிலும், ப்ளூடூத் பயன்பாட்டிலும் மகிழ்ச்சி அடையும் ஒருவருக்கு, இந்த சிஸ்டம் சிறப்பாகவே இருக்கும்.

P16

3.5 இன்ச் ஸ்கீரின் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட்டின் ஒரு வெளிர்-சாம்பல்/கருப்பு பின்னணியின் மீது, வெள்ளை எழுத்துக்களை கொண்டுள்ளது. இந்த எழுத்துக்கள் படிக்கும் வகையில் உள்ளது (நேரடியான சூரிய ஒளியில் கூட). இந்த சிஸ்டத்தை பயன்படுத்த அதிக உள்ளுணர்வு கொண்டதாக உள்ளது. உயர் மாதிரி வகைகளான K6 மற்றும் K8 ஆகியவற்றில், மஹிந்திராவின் ப்ளூ சென்ஸ் ஆப் பொருத்தக் கூடியதாக அமைந்து, மியூஸிக் மற்றும் மற்ற அம்சங்களுக்கு ஒரு ப்ளூடூத் ரிமோட்டாக செயல்படுகிறது.

ஒரு எளிய மூன்று-ஸ்போக் யூனிட்டாக அமைந்த இதன் ஸ்டீரிங்கில், சில சில்வர் மேலோட்டங்களை கொண்டுள்ளதோடு, மியூஸிக் மற்றும் அழைப்புகளுக்கான கன்ட்ரோல்களை பெற்றுள்ளது. இந்த சுவிச்சுகளின் தரம் அவ்வளவு சிறப்பானது என்று கூற முடியாது. தரக்குறைந்த மற்றும் பிளாஸ்டிக்கால் ஆனது போன்ற உணர்வை அளிக்கிறது. ஸ்டீரிங் வீல்லின் பின்புறத்தில் உள்ள ஸ்டாக்களும், இதே போன்ற உணர்வை அளிக்கிறது. மஹிந்திரா தரப்பில், இதற்கு சிறந்த தரம் பயன்படுத்தப்படவில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்த ஸ்டீரிங் வீல்லின் கோணத்தை மாற்றி அமைக்கலாமே தவிர, எட்டி சேரும் வகையில் மாற்றியமைக்க முடியாது.

P17

ஸ்டீரிங் வீல்லுக்கு பின்புறத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் அமைந்துள்ளது. இதில் ஒரு ரிவ்-கவுண்டர், ஒரு ஸ்பீடோமீட்டர் மற்றும் ஒரு மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (MID) ஆகியவை உள்ளன. இரு தொடர்முறை (அனலாக்) டயல்களின் கலவையாக அமைந்துள்ள இந்த MID-யில், தட்பவெப்பநிலை, எரிப்பொருள், தற்போதைய கியர், ஓடோமீட்டர் மற்றும் ஒரு கூட்டம் ட்ரிப் மீட்டர்கள் ஆகியவற்றை காட்டுகிறது.

இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் மீது உள்ள சிவப்பு மேலோட்டங்கள், நவீனத் தன்மையோடு காட்சி அளிக்கின்றன. மற்ற எல்லா மஹிந்திரா தயாரிப்புகளை போல, டயல்கள் ஒரு முழுமையான சுற்றை கொண்ட துவக்கத்தை பெற்றுள்ளன.

P18

KUV-யின் உள்ளே, அம்சங்களின் பங்குகளை கூட பெற்றுள்ளது. இதில் குளுமையான கிளோவ்பாக்ஸ், ஒளிரும் கீ ரிங், சன்கிளாஸ் ஹோல்டர்கள், லிட் ரூஃப் லெம்ப் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

P19

பொருட்கள் வைப்பு இடவசதி அதிகமாக இல்லை என்றாலும், உள்ளதை அறிவுப்பூர்வமாக அமைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, 4 டோர்களிலும் ஒரு 1 லிட்டர் பாட்டில் ஹோல்டர் காணப்படுகிறது. பயணிகள் சீட்டின் அடியில் சில பொருள் வைப்பு இடம், டிரைவருக்கு பக்கத்திலேயே ஒரு சில்லரை வைப்பு ஹோல்டர் மற்றும் 2வது வரிசையின் கீழ்-தளத்தில் ஒரு பொருள் வைப்பு வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது.

P20

P21

இது 243 லிட்டர் பூட்ஸ்பேஸை கொண்டுள்ள நிலையில், கிராண்டு i10-ல் உள்ள 256 லிட்டர் உடன் ஒப்பிட முடியாது என்றாலும், ஸ்விஃப்ட்டின் 204 லிட்டர் பூட்டை விட இது எவ்வளவோ பரவாயில்லை எனலாம். அதே நேரத்தில் பூட்டின் வாய்ப் பகுதி மிகவும் குறுகலாக உள்ளதோடு, ஹூண்டாய் அல்லது மாருதி உடன் ஒப்பிட்டால், நிலத்தில் இருந்து சுமையேற்றும் இடைவெளி (லோடிங் பே) கணிசமான அளவு அதிகமாக உள்ளது.

P22

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, சம்பால் நிறத் தீமையும், கடினமான சீட்களையும் பெற்று, அமர்ந்து செல்ல ஒரு இதமான இடம் எனலாம். இதன் விலைக்கு ஏற்ப, சரியான அளவில் அமைந்த அம்சங்களும், இடவசதியும் காணப்படுகிறது.

செயல்திறன்:


பெட்ரோல்:


இதன் பெட்ரோல் மோட்டார், முழுமையான ஒரு அலுமினிய யூனிட் ஆகும். இதன்மூலம் என்ஜினின் ஒட்டுமொத்த எடையில் பெருமளவு குறைக்கப்படுகிறது. ஆனால் இது, என்ஜினின் சத்தத்தை அவ்வளவு சிறப்பாக அடக்குவதாக இல்லை. டீசலை போலவே, இந்த பெட்ரோல் என்ஜினும் ஸ்டார்ட் ஆகும் போதும், நிறுத்தும் போதும் அதிகளவிலான அதிர்வுகளை உண்டாக்குகிறது.

டீசலை போல இல்லாமல், பெட்ரோல் என்ஜினில் முடுக்குவிசையை எளிதாக அடைய முடிவதில்லை. துவக்க வகையில் உள்ள பெட்ரோல் மோட்டார், ஒரு சக்திவாய்ந்த அமைப்பு என்று கூற முடியாது. ஏனெனில் சரியான கிரண்ட் நிலைக் கொண்டுள்ள இடைநிலை வேகத்தை நிலைநிறுத்தும் வகையில், நீங்கள் அவ்வப்போது கியரை குறைக்க (டவுன்ஷிஃப்ட்ஸ்) வேண்டியுள்ளது. அதிகபட்ச முடுக்குவிசையை, ஒப்பீட்டில் அதிகமான 3500 rpm-ல் தான் கிடைக்கிறது. செயல்திறனை பெறும் வகையில், நீங்கள் அந்த நிலைக்கு அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது. என்ஜின் சூடான இருக்கும் போது நன்கு சுறுசுறுப்பாக இயங்கினாலும், ஸ்விஃப்ட் காரின் நிலைக்கு வந்து எட்டுவதில்லை. பெட்ரோல் மோட்டாரை பொறுத்த வரை, தடையில்லாத செயல்திறன் கிடைப்பது இல்லை எனலாம். ஒரு நாள் முழுவதும் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் அது பயணிக்கும் என்றாலும், அதற்கு மேல் சென்றால், சரிவை சந்திக்கிறது. இந்த என்ஜினை பொறுத்த வரை நகர் எல்லைக்குள் ஏற்றதாக உள்ளதே தவிர, நெடுஞ்சாலைகளில் மூச்சு வாங்கும் தன்மையை உணர்கிறது. இதை எளிதாக எடுத்து கொள்ளுங்கள், பெட்ரோல் KUV-யின் மூலம் லிட்டருக்கு 18.15 கி.மீ. மைலேஜ் கிடைக்கிறது என்று மஹிந்திரா கூறுகிறது.

3

டீசல்:


டெல்லியில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட டீசல் தடையின் விளைவாக, மஹிந்திராவின் முதலீடுகளில் பாதி விற்பனையின்றி தவிக்கும் நிலையில், 1.2 லிட்டர் டீசல் மோட்டார் ஒரே மூச்சாக கொண்டு வரப்பட்டுள்ளது. வாகனத்தின் சாவியை திருகியவுடன் அசைவுகள் மற்றும் நடுக்கத்துடன் என்ஜின் உயிரடைகிறது. 3 சிலிண்டர் ட்ரோன் மற்றும் ஹம் ஆகியவற்றின் பண்புநலன்களை பெற்றுள்ளதை, அதன் பெடல்கள் மற்றும் கியர் லிவரில் உணர முடிகிறது. காரை நிறுத்தும் போது (ஸ்கார்பியோ/ XUV போல) கியர் லிவரின் குட்டி நடனத்தை இதில் காண முடிவதில்லை. இதன் அதிர்வுகளை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. உயர் rpm-களில், இந்த என்ஜின் சற்று கரடுமுரடாக செயல்படுவதை உணரலாம். இதில் ஏற்படும் ஒலி கட்டுப்படுத்தப்பட்ட தன்மை பாராட்டத்தக்கது.

P23

கிளெச் லேசாகவும், நீங்கள் விரும்பும் நிலையில் பிடிப்புக் கொண்டதாகவும் செயல்படுகிறது. ஆற்றல் வெளியீடு நேரடியாகவும், டர்போ அதிகரிக்க (எடுத்துக்காட்டாக ஸ்விஃப்ட்டில் உள்ளது போல) ஒரு எதிர்பார்க்கும் ஆற்றல் எழுச்சியை இதில் பெற முடிவதில்லை. டர்போ லெக் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்படுவதோடு, என்ஜினுக்கு ஒரு சிறந்த தாழ்ந்த நிலை காணப்படுகிறது. நகர் பகுதியை சுற்றி வலம் வருவதற்கு, இந்த டீசல் என்ஜின் மிகவும் எளிதாக உள்ளது. ஏறக்குறைய 2500rpm-ல் 5வது கியரில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை பெற முடிகிறது. இந்த வேகத்தில் செலுத்த KUV-க்கு மிகவும் எளிதாக உணர்கிறது. திடக்காத்திரமான 3 பேரை ஏற்றிக் கொண்டு நடத்தப்பட்ட மஹிந்திராவின் சோதனை ஓட்டத்தில், அது மணிக்கு 130 கி.மீ வேகத்தை எட்டியது. இந்த வேகப் புள்ளியில் வரும் போது என்ஜினுக்கு சற்று சிரமமாகவும், இன்னும் வேகத்தில் செல்ல விருப்பமில்லாத நிலையையும் உணர்கிறது. மைக்ரோஹைபிரிடு தொழிற்நுட்பத்தின் உதவியுடன் லிட்டருக்கு 25.32 கி.மீ என்ற தனித்தன்மையான மைலேஜ்ஜை அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த டீசல் மோட்டாரில் ஈகோ மற்றும் பவர் மோடுகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன. இந்த மோடுகளின் இடையிலான மாற்றத்தில் இதன் இழுவைத் தன்மையில் வித்தியாசத்தை உணர முடிகிறது. நெடுஞ்சாலைகளில் ஒரு நிலையான வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்ல இந்த ஈகோ மோடு சிறப்பாக செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் நகர்புறங்களில் ஈகோ மோடு மூலம், இதன் இழுவை தன்மை சற்று பின்தங்கிய நிலையில் அமையலாம்.

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்:


இந்த கார் மெதுவாக செல்லும் போது, இதன் ஸ்டீரிங் மிகவும் எடைக் குறைந்ததாக உள்ளது. இதனால் பார்க்கிங், திடீர் யூ-டேன்கள் எடுப்பது ஆகியவற்றிற்கும், ஒரே கையில் கையாளுவதற்கும் எளிதாக உள்ளது. வேகம் அதிகரிப்பதற்கு ஏற்ப, இதன் எடையும் சிறப்பாக அதிகரிக்கிறது. இதனால் கிராண்டு i10-யை விடவும், நிர்ணயிக்கப்பட்ட நிலையை விட பல படிகள் கீழே உள்ள ஸ்விஃப்ட்டை விடவும், (குறிப்பாக அதிக வேகத்தில்) உணர்விலும், உட்கருத்திலும் கணிசமான அளவு சிறப்பாக உள்ளது. இந்த காரை வேகமான வளைவுகளில் செலுத்தும் போது, உங்களை சற்று மிரள வைக்கிறது. அதை வேறெந்த முறையிலும் போட முடியாது. இந்த காரை விவேகமாகவும், தைரியமாகவும் கையாண்டு ஓட்டும் போது, சிறப்பாக அமையும். அதிக தைரியத்தோடு கூடுதல் வேகத்தில் ஒரு முனையை நோக்கி செல்லும் பயணம், ஒரு கவலைக்கிடமான விபத்திற்கு வழிவகுக்கும் எனலாம். காரின் பாடி உருண்டு, விலகி செல்லும் தன்மை கொண்டது. என்னை பொறுத்த வரை, KUV-களின் கையாளும் திறனை குறித்த இரு காரியங்களை எழுதி வைத்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் உயரம் பாடியை உருண்டு செல்ல செய்ய வகையிலும், மெல்லிய டயர்கள் விலகி செல்லவும் செய்கிறது. எனவே இதற்கு ஒரு சிறந்த ஜோடி டயர்களை அளித்து மேம்படுத்த வேண்டும் என்று நாங்கள் பரிந்துரை செய்கிறோம். ஏனெனில் இதில் காணப்படும் 185/65 R14 டயர்கள், இக்காருக்கு தேவையான பிடிப்பு மற்றும் கையாளும் திறனை அளிக்க போதுமானதாக இல்லை.

P24

இந்த குட்டி மஹிந்திரா தயாரிப்பின் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கத்தில் ட்ரம் பிரேக்குகளையும் கொண்டுள்ளது. பிரேக்குகள் மிகவும் விரைவாக செயல்பட்டு, ஆற்றலை நிறுத்தும் தன்மை அற்புதமாக உள்ளது. அதே நேரத்தில், குறிப்பாக பிரேக்கை மிதிக்கும் போது, சத்தத்தை உண்டாக்குகிறது. திடீர் பிரேக்கிங் சந்தர்ப்பங்களில், இதன் மெல்லிய டயர்களின் மீது நம்பிக்கை வைக்க முடியவில்லை. இதன் பெடல் இன்னும் கூட சிறப்பானதாக அமைத்திருக்கலாம். KUV-யின் சஸ்பென்ஸன், ஒரு நீண்டதூரத்தை கொண்டது. சாலையில் உள்ள மேடு-பள்ளங்களை எதிர்கொண்டாலும், பயணிகளை லேசாக தூக்கிப் போடும் தன்மையை உணர வைக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு வேகத்தடையின் மீது ஏறக்குறைய மணிக்கு 10 கி.மீ வேகத்தில் சென்றால், காரில் உள்ள பயணிகள் சற்று இங்குமங்குமாக சாய நேரிடுகிறது. மென்மையான இடத்தில் ட்யூன் செய்யப்பட்டு, இதமான பயணத்திற்கு வழிவகுக்கிறது. அதே நேரத்தில், இந்த மென்மையான செட்அப் உடன் அதிக உயரமும் சேர்ந்து, பாடி உருண்டு செல்ல ஒரு கச்சிதமான அமைப்பாக மாறி விடுகிறது. இந்த KUV-யை ஒரு தொலைநோக்கு பார்வையுடன் கூடிய அதிக இயக்கவியல் கொண்ட வாகனமாக வெளியிடவில்லை. ஸ்விஃப்ட்டிடம் கூட அந்த தகுதி இருப்பதை காணலாம். அதே நேரத்தில் நகர் பகுதிகளுக்கும், அவ்வப்போது நெடுஞ்சாலை பயணங்களுக்கும் ஏற்றதாக உள்ளது. ஆனால் திருப்பங்களில் மட்டும் சற்று கவனமாக செயல்பட வேண்டும்.

4

பாதுகாப்பு:


பாதுகாப்பு அம்சங்களை பொதுவானதாகவோ அல்லது எல்லா வகைகளிலும் தேர்விற்குரியதாகவோ அளிப்பதை, எல்லா தயாரிப்பாளர்களும் துவங்கியுள்ள நிலையில், இந்த கும்பலில் மஹிந்திராவும் இணைந்துள்ளது. எல்லா வகைகளுக்கும் பொதுவாக ABS உடன் EBD அளிக்கப்பட்டுள்ளது. எல்லா வகைகளிலும் தேர்விற்குரிய கூடுதல் அம்சமாக முன்பக்க ஏர்பேக்குகள் வழங்கப்படுகிறது.

P25

முன்பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் சீட்டை ஒட்டியே, நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்த பயணிக்கு ஒரே ஒரு லேப் பெல்ட் மட்டுமே அளிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து ஏற்பட்டால் அவருக்கு அருகில் உள்ள டேஸ்போர்டு அல்லது கியர் லிவர் மூலம் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை தேர்வு செய்வதை தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக வழக்கமான 2+3 சீட்டிங் வசதி கொண்டதையே தேர்வு செய்யலாம் என்று நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

5

வகைகள்:


பட்ஜெட் மிகவும் நெருக்கடியாக அமைந்தாலும், தங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, துவக்க வகை சிறந்த தேர்வாக அமையும். இதில் பாடி நிறத்திலான பம்பர்கள், பவர்-ஸ்டீரிங், பின்பக்க ஸ்பாயிலர் மற்றும் மேனுவல் AC உடன் கூடிய ஹீட்டர் ஆகிய அம்சங்களை பெற்று, துவக்க நிலையில் உள்ளவர்களுக்கும், முதல் முறையாக வாங்குபவர்களுக்கும் சிறப்பான தேர்வாக அமையும். K4 வகைக்கு செல்லும் போது, வெளிப்புற அமைப்பியலில் ஒரு SUV-த்தனமான உணர்வை அதிகமாக அளிக்க கூடியதாக, கூடுதல் வீல் ஆர்ச்சு கிளெட்டிங்கை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக உள்ள K6 வகை, எங்களுக்கு மிகவும் பிடித்தமானது என்பதோடு, இதில் ஒரு கச்சிதமான பிரிமியம் நிலை கிடைப்பதோடு, அளிக்கும் பணத்திற்கு மதிப்புக் கொண்டதாக உள்ளது. இந்த வகையில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குளிர்ந்த கிளெவ்-பாக்ஸ், பன்முக டிரைவிங் மோடுகள் மற்றும் பல்வேறு அம்சங்களை தாங்கி வருகிறது. உயர் வகை முழுவதும் அதிக அம்சங்களால் நிரம்பியுள்ளது. இதில் முக்கியமாக டேடைம் ரன்னிங் LED-க்கள், மைக்ரோ-ஹைபிரிடு அம்சம் (என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப்) மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன. இந்த உயர் வகையில் பொதுவாக அளிக்கப்படும் இரட்டை முன்பக்க ஏர்பேக்குகளை கொண்டுள்ளது. எல்லா வகைகளிலும் ஏர்பேக்குகளை சேர்க்க ஒரு தேர்வு அளிக்கப்பட்டுள்ளது.

6

தீர்ப்பு:


மஹிந்திராவில் உள்ள விஞ்ஞானிகள், KUV-க்காக சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இந்த KUV என்பது ஒரு நரைத்த முடிகளை கொண்ட பெரியவர் ஓட்டுவதற்கான கார் அல்ல. ஒரு விளையாட்டுத்தனமான சாதனைகளையும், ஒரு கூட்டம் நண்பர்களை கொண்ட அவரது 18 வயது மகனுக்கான கார் இது. இப்பிரிவில் விறுவிறுப்பான ஸ்டைலிங் மற்றும் ஆறு சீட்கள் வசதி ஆகியவை கேள்விப்படாத ஒன்றாகும். இப்போது, உங்களுக்கு ஒரு பட்ஜெட்டில் அமைந்த 6 சீட்களை கொண்ட கார் வேண்டுமெனில், அதுவே உங்களுக்கான சிறப்பான தேர்வாக அமையும்.

P26

உங்களுக்கு அறிவுப்பூர்வமான ஹேட்ச்பேக் தேவை என்றால், கிராண்டு i10 மற்றும் ஸ்விஃப்ட் ஆகியவற்றை அணுகலாம். இந்த ‘கூல் யூட்டிலிட்டி வெஹிக்கிள்’ என்பது ஒரு விறுவிறுப்பான கச்சிதமான ஹேட்ச் என்பதால், அதற்கு எண்ணற்ற வாடிக்கையாளர்களை பெற உள்ளது.