ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

` 5.3 - 8.4 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 


ஹைலைட்டுகள்:


செப்டம்பர் 17, 2014: ஈன்டேய் இந்தியா தன்னுடைய கச்சிதமான செடானான - ஈன்டேய் Xcent-க்கு பிராண்டு அம்பாசடராக பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷா ரூக் கானை நியமித்துள்ளது. 'உங்கள் வாழ்க்கையைப் பெருக்குங்கள்" என்ற அவர்களுடைய தத்துவத்தைச் சொல்லும் SRK நடிக்கும் ஒரு புதிய தொலைக்காட்சி விளம்பரத்தையும் Xcent-காக ஈன்டேய் வெளியிட்டுள்ளது. ஷா ரூக் கான் கடந்த 16 ஆண்டுகளாக ஈன்டேயின் தயாரிப்புகளுக்கு சான்ட்ரோ முதல் i10 வரை இப்போது Xcent-க்கும் விளம்பரமளிக்கிறார். எந்திர ரீதியாக, கிராண்டு i10-ல் உள்ள அதே டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்கள் Xcent-லும் உள்ளன. முதல் அம்சங்கள் பல இதில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக:


ஈன்டேய் அதன் ஈன்டேய் Xcent-னைக்கொண்டு காம்பேக்ட் செடானின் ஸ்டிரீட் டிரிப்பிளோடு போட்டியிடத் தயாரிகிவிட்டது. ஈன்டேயின் இந்த ஐந்து இருக்கை வாகனம் அதன் மிகத் துல்லியமான தயாரிப்புக்காக பெரும்பான்மையான பார்வையாளர்களின் வாக்குகளையும் பெற்றுள்ளது. வாங்குபவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்பத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் இந்த மாடல் வருகிறது. கிராண்டு i10-க்கு மேற்பட்டதாக உள்ளது. இரு வகைகளில் வருவதால் இதன் தேர்வு பட்டியல் பெரிதாகியுள்ளது. இந்தப் புதிய Xcent அவ்வளவு புதியதல்ல. ஏனெனில், அனைவரும் அறிந்த வழக்கமான விஷயங்கள் தக்க வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவில் வழக்கமாகக் காணப்படாத பயன்பாட்டு அம்சங்களைக்கொண்டு மனதில் பதியச் செய்கிறது. வெளிப்புறம் எங்கும் குரோம், குரோம் என எங்கும் குரோமாகவே உள்ளது. உயர்ந்த விலை வகைகளில் ஸ்டைலாக உள்ள 15 இஞ்ச் அல்லாய் வீல்கள் வருகின்றன. ஆனால், நடுத்தர வகைகளில்14 இஞ்ச் சுத்தமான சில்வர் அல்லாய் வீல்களே பொருத்தப்பட்டுள்ளன. டீசல் டிரம்களில் இரண்டாம் தலைமுறை 1.1 லிட்டர்CRDi என்ஜின் பொருத்தப்பட்டு 1120cc சக்தியை அளிக்கிறது. 5-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸும் இணைந்துள்ளது. அதே என்ஜின்களைத் தக்க வைப்பதன் மூலம் கிராண்டு i10 மரபினைத் தொடர்கிறது. பெட்ரோல் டிரிம்களில் முறுக்குவிசை பகிர்வைப் பொருத்தவரை தானே இயங்கும் ஒரு 5-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸுடன் DOHC வால்வு வடிவமைப்பின் அடிப்படையில் 1.2 லிட்டர் கப்பா டூவல் VTVT பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதனிடம் உள்ள மோட்டார் அதிக ஆற்றல் மிக்கதாக உள்ளது. சொகுசும் செயல்திறனும் ஒருங்கமைந்த Xcent-ல் இடவசதிமிக்க கேபினும் ஒரு ஓய்விருக்கை என பாதுகாப்பாக அழைக்கத்தக்க இருக்கையும் உள்ளன. பெரும்பான்மையான கார்களை பின்னுக்குத் தள்ளும் செயல்திறன்மிக்க என்ஜின் இதில் உள்ளது. அதன் பெருமைக்கு ஏற்றபடி, எந்த ஒரு வகையிலும் எளிதில் பொருந்தக்கூடியதாக இந்த எந்திரம் உள்ளது. சக்கரங்களுடைய மாளிகை போன்ற தோற்றம் கொண்டதாக இந்த வாகனத்தை மாற்றும் நீல ஒளிதரும் டூவல் டோன் பீஜ் மற்றும் கருப்பு நிற ஸ்கீமினை உட்புறத்தில் பரப்பி ஒரு திகைப்பூட்டும் உட்புறத்தை உருவாக்குவதற்காக டேஷ் குறைக்கப்பட்டுள்ளது. குளிர் சாதன வசதி, ஆட்டோமேட்டிக் வெப்பநிலை கட்டுப்பாடு, மின் பவர் ஸ்டீயரிங் மற்றும் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் போன்ற ஃபங்ஷன்களுடன் உள்ள இந்த கார் ஓட்டுவதற்கு மகிழ்ச்சி தருவதாக ஆக்குவதோடு, தோற்றத்திற்கு அழகானதாகவும் ஒரு சரியான பிரிட் தசையாக ஆக்குகிறது. சிறந்த முகப்புடனும் அதிக வேக திறனுடனும் அடுத்த தலைமுறை வாகனத்தை வெளியிடுவதன் வழியாக நடைமுறைகளை மாற்றியமைக்கும் ஈன்டேயின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. 'X- காரணியை அதிகரிக்கும் ஒரு 4-வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் நடுத்தர மற்றும் உயர்ந்த வகை வேரியன்டுகளில் உள்ளன. சிறிது ஸ்டைலாகவும் திறன்மிக்க வாகனத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் மற்றவற்றைவிட இந்த கார் ஒரு நல்ல மாற்றாகும். ஒரு விலை உயர்ந்த ஆனால் அருமையான எந்திரம். நகரத்திற்கு வசதியானது. பொருங்கள். கூடுதல் அம்சங்களுக்கு விலை உண்டு. டீசல் வகை 24.4 kmpl மைலேஜும் பெட்ரோல் வகை 19.1 kmpl மைலேஜும் தரும்போது எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என இன்னும் கூற வேண்டுமா?.

மைலேஜ்:


இந்த வேரியன்டின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் DOHC வால்வு வடிவமைப்பில் உள்ளது. இது பல புள்ளி எரிபொருள் இன்ஜெக்‌ஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேனுவல் டிரிம்கள் 19.1 Kmpl மைலேஜைத் தருகின்றன. ஆட்டோமேட்டிக் வகை 16.9 kmpl எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது. ஆனால், டீசல் வகையில் இரண்டாம் தலைமுறை CRDI என்ஜின் உள்ளது. இது மலைக்க வைக்கும் 24.4 kmplமைலேஜைத் தருகிறது.

சக்தி:


1.2-லிட்டர் கப்பா டூவல் VTVT பெட்ரோல் என்ஜின் 6000 rpm-ல் அதிகபட்ச சக்தியான 82bhp-யினை தரக்கூடியது. 4000 rpm-ல் 114Nm மலைக்க வைக்கும் முறுக்கு விசையை இது உருவாக்குகிறது. டீசல் டிரிம்மும்கூட 2750rpm-ல் 180nm அதிகபட்ச முறுக்கு விசையை அளிப்பதுடன் 4000rpm-ல் அதிகபட்சமாக 70bhp உச்சபட்ச சக்தியினை அளிக்கவல்லதாக உள்ளது.

அக்சிலரேஷனும் பிக்கப்பும்:


ஐந்து வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸோடு டீசல் வகையில் இரண்டாம் தலைமுறை 1.1 லிட்டர் என்ஜினும் உள்ளது. ஏறக்குறைய 16 முதல் 17 நொடிகளுக்குள் 100Kmph வேகத்தை இந்த வாகனம் எட்ட முடிவதோடு இதன் அதிகபட்ச 160 Kmph வேகத்தையும் எட்ட முடியும். இதன் பெட்ரோல் என்ஜின் உள்ள வேரியன்டுகள் 100 Kmph தடையை 16 நொடிகளில் அடைய முடியும் அதன் உச்ச வேகமான 145 முதல் 155 Kmphவேகம் வரையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்ல முடியும்.

வெளிப்புறங்கள்:


ஈண்டேய் Xcent என அழைக்கப்படும் இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட உருவத்தை முதலில் பார்த்தவுடனேயே கார் விரும்பிகளின் மனதினைக் கொள்ளை கொண்டு விடும். இந்த அதிகமான வசதியளிக்கப்பட்ட வாகனத்திற்கு பெரிய அளவில் தோற்றத்தை மாற்றுவதற்காக அதிக அளவு குரோம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஒரு அகன்ற விண்டுஷீல்டுடன் இரு வைப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிக ஒளிதரும் முகப்பு விளக்குகள் உள்ள முகப்பு விளக்கு கிளஸ்டர் அதன் ஒரு டிரென்டியான தோற்றத்திற்காக அனைத்து பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதைச் சுற்றி ஒரு ரேடியேட்டர் கிரில் குரோமில் உள்ளது. அதன் மையத்தில் கம்பெனியின் ஒருபேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது. பாடி நிறத்தில் உள்ள பம்பரில் சரிவாக உள்ள ஏர் டேம் குரோம் விளிம்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஸ்டைலை அதிகரிக்கும் வகையில் முன் பம்பரில் வட்ட வடிவ இரு பனிமூட்ட விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. பானெட்டில் அருமையான எழுத்து வரிகளைக்கொண்டு முன்புறம் மெருகேற்றப்பட்டுள்ளது. வெளிப்புற பின்பக்கப் பார்வை கண்ணாடிகளும் கதவு கைப்பிடிகளும் பாடியின் நிறத்தில் காரின் ஒட்டுமொத்த படத்தில் ஒரு சீரான படிவமாக அமைகிறது. பின்புற பம்பர் பாடியின் நிறத்தில் இரு பிரதிபலிப்பான்களுடன் உள்ளது. உயர்ந்த விலை வேரியன்டுகளில் ORVM-கள் பாடியின் நிறத்தில் இருந்தாலும் கதவு கைப்பிடிகள் குரோமில் வருகின்றன. வெளி கண்ணாடிகள் சைடு டர்ன் இன்டிகேட்டர்களுடன் உள்ளன. ஒரு பாதுகாப்பு அம்சமாக ஒரு சைடு மோல்டிங்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு தனித்துவமான பின்புற விளக்கு கிளஸ்டடர் பின்புறமிருந்து பார்க்கும்போது காரின் தோற்றத்தை முற்றிலும் மாற்றி விடுகிறது. ஒரு குரோமிலான பட்டையில் ஈன்டேய் என எழுதப்பட்டு டிக்கியின் மூடியில் இணைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற அளவுகள்:


இதன் ஒட்டுமொத்த நீளம் 3995 மி.மீ., அகலம் 1660 மி.மீ, உயரம் 1520மி.மீ. 2425 மி.மீ அளவு நீண்ட வீல்பேஸ் கால் பகுதியில் இடவசதிமிக்க உட்புறத்தை அளிக்கிறது. முன்புற டிராக்கின் அகலம் 1479 மிமீ, இதன் பின்புற டிராக் 1493 மிமீ அளவில் உள்ளது. 43 லிட்டர் எரிபொருள் டேங்க் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறம்:


ஈன்டேய் Xcent-ன் உட்புறங்கள் யாரையும் மயக்காமல் விடாத துல்லியமான அழகினைப் பெற்றுள்ளன. ஆடியோ மற்றும் புளூடூத் கட்டுப்பாடுகள் பொருத்தப்பட்டுள்ள பல செயல்பாட்டு ஸ்டீயரிங் வீல் இதில் உள்ளது. USB, Aux-in போர்ட்டு மற்றும் CD மற்றும் MP3 பிளேயர் ஆகியவை உள்ள ஒரு மேம்பட்ட 2-DIN மியூசிக் பிளேயரில் ரேடியோ டியூனரும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. இரு பக்கமும் மின்சாரத்தால் சரிசெய்யக்கூடிய வேளிப்புற பின்பக்கப் பார்வை கண்ணாடிகளும் உள்ளன. இதன் ஸ்விட்சுகள் ஓட்டுனரின் கதவு ஆர்ம் ரெஸ்டில் கையாளும் வகையில் உள்ளது. ஒரு புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டனும் கொடுக்கப்பட்டு பயனபாட்டு மதிப்பை அதிகரிக்கிறது. குளிர்விக்கும் கிளவ் பாக்ஸ் யூனிட்டும் உள்ளது. பின்புற இருக்கைகளுக்கு சரிசெய்யத்தக்க தலை ரெஸ்டிரெய்ன்டுகள் இருப்பது பயணிகளின் சொகுசை அதிகரிக்கின்றன. ஓட்டுனர் பக்க பவர் விண்டோ ஆட்டோ டவுன் ஃபங்ஷனுடன் உள்ளது. மின் உதவியால் இயக்கப்படம் ஸ்டீயரிங் அமைப்பு வாகனம் ஓட்டுவதை மிக சுலபமானதாகவும் எளிதானதாகவும் ஆக்குகிறது. பயணியின் பக்க சன் வைசரில் ஒரு வேனிட்டி கண்ணாடியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி தனி நபரின் விருப்பத்திற்கேற்ப இருக்கைகளை வரிசையாக்கும் விதத்தில் உள்ளது.

உட்புற சொகுசு:


ஒரு சிறந்த இருக்கை நிலையை அளிக்கும் சரிசெய்யத்தக்க பின்புற இருக்கை ஹெட் ரெஸ்ட்டுகள் போன்றவற்றால் பயணிகளுக்கு சௌகரியங்கள் அள்ளி வழங்கப்படுகின்றன. முன் இருக்கையின் பின்புற பாக்கெட் முக்கியமான உடனடியாக எடுக்க வேண்டிய பொருட்களை வைத்துக்கொள்ள உதவுகிறது. பின் இருக்கை மத்திய அர்ம் ரெஸ்டில் கப் ஹோல்டரும் உள்ளது. முன் மற்றும் பின் கதவு மேப் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பது சேமிப்பின் கொள்ளளவை மேலும் அதிகரிக்கிறது. முன் மற்றும் பின் அறை விளக்குகளாலும், கூடுதலாக நீல நிற உட்புற ஒளிர்வினாலும் கேபினில் ஒளியூட்டப்படுகிறது.

உட்புற அளவுகள்:


இந்த கச்சிதமான செடானின் டிக்கி அளவு 407 லிட்டர்கள். இதன் எரிபொருள் டேங்கின் கொள்ளளவு 43 லிட்டர்கள். இந்த கேபினில் உள்ள போதுமான கால் மற்றும் தோள்பட்டை இடவசதி எல்லா பயணிகளுக்கும் சௌகரியத்தை அளிக்கும் வகையில் உள்ளது.

என்ஜின்:


இந்த பெட்ரோல் மாடலில் 1197cc சக்தியை அளிக்கும் 1.2 லிட்டர், கப்பா டூவல் வேரியபுள் டைமிங் வால்வு டிரெய்ன் என்ஜின் உள்ளது. 6000rpm-ல் 82bhp அதிகபட்ச சக்தியை இதனால் அளிக்க இயலும். 4000rpm-ல் 114Nm அதிகபட்ச முறுக்குவிசையை இது உருவாக்குகிறது. இந்த மோட்டார் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் கிடைக்கிறது. 1120cc இடமாற்று திறனுடைய 1.1 லிட்டர்,U2, காமன் ரெயில் டிரெக்ட் இன்ஜெக்‌ஷன் எரிபொருள் சப்ளை சிஸ்டம் டீசல் வேரியன்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த மோட்டாரினால் அளிக்கப்படும் அதிகபட்ச சக்தி 4000rpm-ல் 715bhp. மற்றும் 1500 முதல் 2750rpm-ல் 180Nm உச்ச முறுக்கு விசை ஆகும். சாதாரண சூழலில், 5 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் சேர்ந்து CRDI 24.4kmpl ஓரளவு நல்ல மைலேஜை அளிக்கிறது.

ஸ்டீரியோவும் பிற இணைப்புகளும்:


CD/MP3 பிளேயர், ஒரு Aux-in துளை, ஒரு USB போர்ட் மற்றும் ஒரு ரேடியோ டியூனர் ஆகிய அனைத்து அவசியமான பொழுதுபோக்கு ஃபங்ஷன்கள் உள்ள DIN மியூசிக் சிஸ்டம் இதில் உள்ளது. ஆடியோ ஸ்டிரீமிங்கினை அனுமதிக்கும் ஒரு புளூடூத் இணைப்பும் இதில் உள்ளது. புளூடூத் அழைப்பு இணைப்பும் ஆடியோ கட்டுப்பாடுகளும் ஸ்டீயரிங் வீலில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு தோல் இருக்கை உறை, டேஷ்போர்டில் ஒரு மர இழைப்பு, சிகரெட் லைட்டர் மற்றும் ஆஷ்டிரே, கால் வரிப்புகள், வெளிப்புற டிகேல்கள், பல்வேறு அல்லாய் வீல்கள், மொபைல் ஹோல்டர்கள், ஜன்னல்களுக்கும் விண்டுஸ்கிரீனுக்கும் சூரிய ஒளி மறைப்புகள் போன்ற கூடுதல் அம்சங்களை தங்கள் வாகனங்களுக்கு அளிக்க விரும்பினால் விரும்பும்போது சேர்த்துக்கொள்ளலாம். இவை அனைத்தும் மற்றும் இவை போன்ற மற்ற பொருட்களையும் இணைத்து தன்னுடைய கார் டிரென்டியாக அல்லது தங்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

வீல்கள்:


தொடக்க வேரியன்டில் 14 இஞ்ச் ஸ்டீல் வீல்கள் முழு உறைகளுடன் கொடுக்கப்படுகின்றன. நடுத்தர டிரிம்மில் 14 இஞ்ச் அல்லாய் வீல்கள் உள்ளன. இதன்மீது 165/65 அளவுள்ள ரேடியல் டியூபில்லாத டயர்கள் கொடுக்கப்படுகின்றன. உயர் விலையுடைய டிரிம்மில் ஒரு பலமான 15 இஞ்ச் வைரத்தால் செதுக்கப்பட்டதுபோன்ற அல்லாய் வீல்கள் 175/60 R15 அளவுடைய ரேடியல் டயர்களோடு வருகின்றன. இவை, சாலைகளில் நல்ல கட்டுப்பாட்டை வழங்குகின்றன.

பிரேக்கும் கையாளலும்:


ஒரு ஆட்டோமொபைலின் செயல்திறன் அதன் பிரேக்கிங் சிஸ்டத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளது. இந்த ஈன்டேய்Xcent தயாரிப்பாளர்களால் இது சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. S மற்றும் SX தெரிவு டிரிம்களில் ஒரு மேம்பட்ட ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது திறன்மிக்க எந்திரத்திற்கு உதவுகிறது. மரபு ரீதியான டிஸ்க் பிரேக்குகள் முன் வீல்களிலும் டிரம் பிரேக்குகள் பின் வீல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. கரடு முரடான சாலைகளில் மென்மையாகச் செல்லுவதற்கு ஒரு திறன்மிக்க சஸ்பென்ஷன் தேவை. இதை வடிவமைப்பாளர்கள் சிறந்த முறையில் கையாண்டுள்ளனர். முன் ஆக்சிலில் காயில் ஸ்பிரிங்குகளுடன் உள்ள ஒரு மேக்பர்சன் ஸ்டிரட்டும் பின் ஆக்சிலில் டிவிஸ்ட் பீம் வகையான ஒரு தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கச்சிதமான செடானைக் கையாளுவதை மகிழ்ச்சிகரமானதாக்குவதில் மின் சக்தி உதவி பெறும் ஸ்டீயரிங் சிஸ்டத்திற்கு ஒரு பங்கு உண்டு. சாய்க்கத்தக் ஸ்டீயரிங் தொழில்நுட்பம் இருப்பதால், ஓட்டுனரின் விருப்பத்திற்கு ஏற்ப சரிசெய்ய முடியும்.

பாதுகாப்பு:


அனைத்தும் சொல்லப்பட்டு செய்யப்பட்டாலும், பயணிகளுக்கு வாகனம் அளிக்கக்கூடிய பாதுகாப்பே எப்போதும் முக்கியமானது. அதிக எடையுடன் கட்டமைக்கப்பட்டுள்ள ஈன்டேய் Xcent நீங்கள் எப்போதும் புவியில் நிலைத்திருப்பதையும் வாகனம் நிலையாக எல்லா வேகத்திலும் சமநிலையிலும் இருப்பதை உறுதி செய்கிறது. உட்புறத்தில், முன் பயணிகளுக்கு காற்றுப் பைகள் உள்ளன. ஒருவேளை நேரடியாக மோதும் சூழலில், இவை அவர்களின் பாதுகாப்பினை மேலும் அதிகரிக்கிறது. வாகனம் எங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும் காருக்கு ஏற்படக்கூடிய வாய்ப்புமிக்க அபாயங்களை எதிர்கொள்ள இயலும். அத்தகைய திருட்டுப் பிரச்சனைகள், அனுமதியற்ற நுழைவுகள் போன்றவற்ற என்ஜின் இம்மொபிலைசர் அம்சத்தால் கையாள முடியும். இவை இந்த கச்சிதமான செடானில் இணைக்கப்பட்டுள்ளன. வழுக்கும் சாலைகளைச் சமாளிக்க உதவும் ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பு இருப்பது மிகப் பெரிய அம்சமாகும். பின்புற பம்பரில் இரு பிரதிபலிப்பான்கள் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு பாதுகாப்பு அம்சமாகும். ஒரு மத்திய கதவு பூட்டும் அமைப்பும் உள்ளது. ஓட்டுனர் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒரே நேரத்தில் எல்லா கதவுகளையும் திறக்கவோ பூட்டவோ முடியும். இரு முன்புற பனிமூட்ட விளக்குகள் பம்பரில் பொரத்தியிருப்பதும், மோசமான வானிலை சூழலில் உதவும் பின் விண்டுஸ்கிரீன் டீஃபாகர் ஆகியவை மற்ற இரு முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாகும். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பல செயல்பாடுகளைச் செய்கிறது. இதில் பல எச்சரிக்கைகளும் ஓட்டுனரின் கவனத்தை ஆர்க்கும் பஸ்ஸர்களும் உள்ளன. கதவு அ'ஜார் எச்சரிக்கை விளக்கு மற்றும் ஓட்டுனர் இருக்கை பெல்ட்டு நோட்டிஃபிகேஷன் ஆகியன இவற்றுள் அடங்கும். ஒரு மிடுக்கான சாவியற்ற நுழைவு, ECM டிஸ்பிளேயில் காட்டுகையில் பின்புறம் செல்லும்போது அங்குள்ள பொருட்களை அடையாளம் காட்டும் பார்க்கிங் சென்சார்கள் ஆகியன பிற அறிவுப்பூர்வமான பயன்பாடு சார்ந்த அம்சங்களாகும்.

நிறைகள்:1. முகப்பு ஆச்சரியமளிக்கும் வகையில் அழகாக உள்ளது.
2. நல்ல எரிபொருள் சிக்கனம். எப்படியானாலும் மைலேஜ் முக்கியமே!!!
3. பெட்ரோல் வகை அதிக செயல்திறனுடையதாக உள்ளது.
4. கேபின் நல்ல வசதியாக உள்ளது.
5. அதிகமான கால் இடவசதி உள்ளது.

குறைகள்:1. தோலால் ஆன உறைகள் வழங்கப்படலாம்.
2. இதன் பெட்ரோல் வகையின் மைலேஜ் மேலும் அதிகரிக்கப்படலாம்.
3. அக்சிலரேஷன் சரியாக இல்லை.
4. டீசல் என்ஜினின் இறைச்சல் தொந்தரவாக உள்ளது.