ஹூண்டாய் வெர்னா

` 7.9 - 13.7 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


ஜூலை 21, 2015 : ஹயுண்டாய் தன்னுடைய புதிய ப்ளூயிடிக் 4S கார்கள் மீது கடந்த மழை காலத்தில் ரூ. 50,000 வரை தள்ளுபடிகளை வழங்கியது. இந்த சலுகையை வெர்னா கார்களின் அனைத்து வேரியன்ட் மீதும் ஜூலை மாத இறுதி வரை ஹயுண்டாய் வழங்கியது. கடந்த தீபாவளிக்கு முன்னதாக தன்னுடைய போட்டியாளர்களை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த சலுகைகளை அந்த சமயத்தில் இந்நிறுவனம் அறிவித்திருந்தது வெர்னா 4S கார்கள் ஸ்டைல் , வேகம், பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியற்றில் தனித்துவத்துடன் இருக்கிறது.

ஹயுண்டாய் வெர்னா விமர்சனம்


கண்ணோட்டம்


அறிமுகம் :


p1

2006 ஆம் ஆண்டிலேயே ஹயுண்டாய் ஆக்சென்ட் கார்களுக்கு மாற்றாக இந்த வெர்நாவை அறிமுகம் செய்ய வேண்டியது. பின்னர் சில காரணங்களால் இந்நிறுவனம் இரண்டு கார்களையும் தொடர்ந்து விற்பனை செய்ய முடிவு செய்தது. வெர்னா கார்களின் முதல் வெர்ஷன் வித்தியாசமான வடிவமைப்புடன் இருந்ததால் அந்த அளவுக்கு மக்களை கவரவில்லை. பின்னர் ஓரிரு முறை இந்த கார்களை மேம்படுத்தி மெருகேற்றி ஹயுண்டாய் நிறுவனம் இப்போதைய ஃப்ளூயிடிக் வெர்னாவை அறிமுகப்படுத்தியது. . நல்ல நியாயமான விலையுடனும் ,நிறைய சிறப்பம்சங்களுடனும் , புதுமையான வடிவமைப்புடனும் வெளியான இந்த வெர்னா மக்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதுமட்டுமின்றி இதன் பிரிவில் முதலிடத்தில் இருந்த ஹோண்டா சிட்டி கார்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தையும் பிடித்தது. ஆனால் ஹயுண்டாய் நிறுவனத்திற்கு இந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை . ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி கார்களில் டீசல் வேரியன்ட் ஒன்றை அறிமுகப்படுத்தி மீண்டும் இந்த முதல் இடத்தைப் பிடித்தது.

இருந்தாலும் ஹயுண்டாய் நிறுவனம் மீண்டும் முதல் இடத்தைப் பிடிக்க வெறியுடன் உழைத்து ஹயுண்டாய் வெர்னா 4S கார்களை வெளியிட்டது. ஹோண்டா சிட்டியை மீண்டும் ஒரு முறை பின்னுக்கு தள்ள தேவையான அம்சங்கள் இந்த 4S வெர்னா கார்களில் உள்ளதா ? வாருங்கள் இந்த 4S வெர்னாவின் சாதக பாதகங்களை அலசுவோம்.

ப்ளஸ் பாய்ன்ட்டுகள்1. இதன் பிரிவில் மிக அழகான தோற்றம் கொண்ட ஒரு செடான் இந்த வெர்னா என்று சொல்லலாம். இதன் ப்ளூயிடிக் வடிவமைப்பு மிகவும் அசத்தலாக உள்ளது.
2. இந்த பிரிவு கார்களிலேயே மிகவும் அதிகப்படியான சக்தி கொண்ட 1.6 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. . 126 bhp அளவு சக்தி மற்றும் 260Nm அளவு டார்க் ஆகியவற்றை இந்த என்ஜின் உற்பத்தி செய்கிறது.
3. DRL -கள் உடன் கூடிய ப்ரோஜெக்டார் ஹெட்லேம்ப்ஸ் ,கீலெஸ் என்ட்ரி உட்பட ஏராளமான சிறப்பம்சங்கள் இந்த கார்களில் உள்ளன.

மைனஸ் பாய்ன்ட்டுகள்1. பின்புற AC திறப்பான்கள் (வெண்ட்ஸ்) இல்லை. இந்த காரை விட குறைந்த விலை உள்ள க்ரேண்ட் i10 கார்களில் பின்புறம் AC வென்ட் உள்ளன.
2. சஸ்பென்ஷன் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. குண்டு குழி மிகுந்த சாலைகளில் செல்லும் போது தூக்கி போடுதல் அதிகமாக உள்ளது.
3. பின்புற இருக்கை பயணிகளுக்கு தொடை பகுதிக்கான எந்த வித சபோர்ட் அமைப்பும் இல்லை. மேலும் பின்புற ஹெட்ரூம் போதுமானதாக இல்லை.

தனித்துவமான அம்சங்கள்1. எர்கோ லீவர் . இது ஒரு மிகவும் சிறப்பான அம்சமாகும் . அதிலும் குறிப்பாக பிரத்தியேகமாக ஓட்டுனரை அமர்த்தி பயணிக்கும் பயணிகளுக்கு இது ஒரு சிறப்பான அம்சமாகும்.
2. இந்த பிரிவில் உள்ள கார்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பாதுகாப்பான கார் இது என்று சொல்லலாம். ஆப்ஷ்ணலாக 6 காற்றுப்பைகள் , ABS மற்றும் ESP ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

பின்புலம் மற்றும் பரிணாம வளர்ச்சி


தங்களது மூன்றாவது தலைமுறை ஆக்சென்ட் கார்களை கொண்டு வருவது பற்றி ஹயுண்டாய் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது தான் வெர்னா புழக்கத்திற்கு வந்தது. இரண்டாவது தலைமுறை வெர்னா நல்ல முறையில் விற்பனை ஆகிக் கொண்டிருந்ததால் அதை நிறுத்த விரும்பாத ஹயுண்டாய் நிறுவனம் வெர்னா என்று பெயரிடப்பட்ட தங்களது மூன்றாவது தலைமுறை ஆக்சென்ட் கார்களையும் அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய தொடங்கியது.

இந்த மூன்றாவது தலைமுறை ஆக்சென்ட் ( முதல் ஹயுண்டாய் வெர்னா ) அறிமுகமான போது தன்னுடைய வித்தியாசமான வடிவமைப்பின் காரணமாக எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறியது. உடன இந்நிறுவனம் இந்த முதல் வெர்னாவை சற்று மேம்படுத்தி வெர்னா ட்ரேன்ஸ்பார்ம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்தது. ஆனால் இந்த வெர்னாவும் படு தோல்வியை சந்தித்தது. . இதைத் தொடர்ந்து நான்காவது தலைமுறை ஆக்சென்ட் ( ப்ளூயிடிக் வெர்னா ) அறிமுகப்படுத்தப்பட்டது. . வெர்னா 4S என்பது ப்லூயிடிக் வெர்னாவின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.

வெளிப்புற அமைப்பியல் (எக்ஸ்டீரியர் )


p2

இந்த பிரிவில் உள்ள கார்களுடன் ஒப்பிடும் போது ஹயுண்டா வெர்னா தான் அழகான தோற்றத்தைக் கொண்டுள்ளது என்று சொல்லலாம். இதன் ப்ளூயிடிக் வடிவமைப்பு முந்தைய தலைமுறை வெர்னா கார்களில் இருந்ததை விட இப்போது எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புதிய வடிவமைப்பு நமக்கு முந்தைய சொனாட்டா கார்களை ஞாபகப்படுத்துகிறது.

p3

முன்புரமிரண்டு அழகான ப்ரொஜெக்டர் லேம்ப்கள்நம்மை வரவேற்கின்றன. . இந்த விளக்குகள் இந்த புதிய வெர்னா கார்களுக்கு ஒரு ஆக்ரோஷமான தோற்றத்தை தருகின்றன. மேலும் ஃபாக் விளக்குகளும் முந்தைய தலைமுறை வெர்னாவில் இருந்ததை விட மாற்றி வடிவமைக்கப்பட்டு வேறு விதமாக பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு குரோம் நிற கோடுகள் க்ரில் பகுதியில் இழையோடுகின்றன. .

p4

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை இரண்டு தெளிவான கோடுகள் பக்கவாட்டு பகுதியின் முழு நீளத்திற்கும் இழையோடுவதை காண முடிகிறது. கூரை பகுதி சரிவாக அமைக்கப்பட்டுள்ளதால் ஒரு கூப் காரைப் போன்ற தோற்றம் இந்த வெர்னா கார்களுக்கு கிடைக்கிறது. கூரை பகுதி சரிவாக அமைக்கப்பட்டுள்ளதால் பின் புற பயணிகளுக்கான ஹெட் ரூம் பெருமளவு குறைந்துள்ளது..

p5

பின்புற டெயில் விளக்குகள் எந்த ஒரு மாற்றத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்றாலும் ஒரு விரவிய LED தோற்றத்தை தரும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. . 1

இந்த வெர்னா காரின் நீளம் 4375 மி.மீ.ஆகும். இது இந்த பிரிவில் உள்ள அனைத்து கார்களையும் விட குறைவு என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அகலம் 1700 மி.மீ மற்றும் உயரம் 1475 மி.மீ ஆகும். இந்த அளவுகளும் இந்த பிரிவில் உள்ள மற்ற போட்டி வாகனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

p6

2

டிக்கியின் கொள்ளளவு 465 லிட்டர்களாகும். இந்த அளவும் இதன் பிரிவில் உள்ள மற்ற வாகனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

கார்தேகோ குழுவினரான நாங்கள் இந்த வெர்னா 4S கார்களின் வடிவமைப்பை மிகவும் ரசித்தோம். முந்தைய தலைமுறை வெர்னா கார்களை விட நல்ல முறையில் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த வெர்னா 4S சாலையில் செல்லும் போது அனைவரின் கவனத்தையும் கவரும் என்று உறுதியாக சொல்லலாம்.

உட்புற அமைப்பியல் (இன்டீரியர்)


உட்புறம் நீங்கள் நுழைந்த உடன் இரண்டு நிறங்களிலான டேஷ்போர்ட் உங்களை வரவேற்கிறது. இதைத் தவிர அனைத்து இன்டீரியர் அம்சங்களும் ஹுண்டாய் நிறுவனத்திற்கே உரித்தான தனித்தன்மையோடு படு நேர்த்தியாக காட்சி அளிக்கிறது. எந்த பிரிவு வாகனமாக இருந்தாலும் எந்த வித பேதமும் இன்றி இந்நிறுவனத்தினர் உட்புற வடிவமைப்பை கலை நயத்தடன் உயர் ரக பொருட்கள் கொண்டு உருவாக்குவதில் நல்ல பெயர் பெற்றுள்ளனர்.

p7

காரின் உள்புகுந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்வது மிகவும் எளிதாக உள்ளது. இருக்கைகள் மற்றும் ஸ்டீரிங் வீல் ஆகியவற்றின் உயரத்தை தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக் கூடிய வசதி உள்ளது.

இருக்கைகள் , முதுகின் கீழ் பகுதிக்கும் தொடை பகுதிக்கும் நல்ல சபோர்ட் தருவதுடன் அதன் உயரத்தை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

p8

ஸ்டீரிங் சக்கரத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வெள்ளி நிற ஆக்சென்ட்கள் மற்றும் இன்போடைன்மென்ட் அமைப்பு மற்றும் ப்ளூடூத் டெலிபோனி ஆகியவைகளை இயக்க தேவையான பொத்தான்கள் உள்ளன. இடப்பக்கம் உள்ள தண்டு வைபர் மற்றும் தானியங்கி மழை உணரும் வைப்பார்கள் போன்றவைகளை கண்ட்ரோல் செய்கிறது. வலப்பக்கம் உள்ள தண்டு இன்டிகேடர் , ஹெட்லேம்ப் மற்றும் ஃபாக் விளக்குகளை கண்ட்ரோல் செய்ய உதவுகிறது. ஆட்டோ ஹெட்லேம்ப் டாகள் இந்த ஸ்டாக்கில் (தண்டு) உள்ளது. நாங்கள் சோதித்த போது ஆட்டோ ஹெட்லேம்ப் சிஸ்டம் சுறுசுறுப்பு இல்லாமல் இயங்குவதாகவே தோன்றியது. இந்த பிரிவில் உள்ள கார் ஒன்றில் இருக்க வேண்டிய தரத்துடன் ஆட்டோ ஹெட்லேம்ப் சிஸ்டம் இல்லை என்பது எங்கள் கணிப்பு.

p9

இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டருக்கு இரண்டு வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. . பல விதமான தகவல்களை தெரியப்படுத்தும் சிறிய டிஸ்ப்ளே ஒன்றும் உள்ளது. இந்த டிஸ்ப்ளே ODO , ட்ரிப் மீட்டர் , எரிபொருள் அளவை காட்டும் இன்டிகேடர் மற்றும் என்ஜின் வெப்ப அளவு போன்ற அதி முக்கிய தகவல்களைக் காட்டுகிறது.

p10

ரியர் வியூ மிரரில் ஆட்டோ டிம்மிங் அம்சம் உள்ளது. ரிவர்சிங் கேமெரா டிஸ்ப்லே (திரை) ஒன்றும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனத்தை ரிவர்சில் எடுப்பது அத்தனை எளிதான அனுபவமாக உள்ளது. இருந்தாலும் கைடிங் லைன்ஸ் எனப்படும் இந்த திரையில் உள்ள வழிக் காட்டும் கோடுகள் ஸ்டீரிங் திருப்புதலுக்கு ஏற்றார் போல் மாறாமல் அப்படியே நிலையாக உள்ளது. அவ்வாறு இல்லாமல் மாறும் வகையில் இருந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் .

மத்திய கன்சோல் பகுதியைப் பொறுத்தவரை இன்போடைன்மென்ட் அமைப்பு 2 - டின் மற்றும் டேட்டட் யூனிட் ஆக உள்ளது. டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்பு இந்த வெர்னா 4S -ல் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது. இப்போது i20 யில் கூட இந்த அமைப்பு உள்ளது. இந்த சிஸ்டத்தில் USB, AUX மற்றும் ப்ளூடூத் மூலம் இன்புட் செய்யமுடியும்.

p11

இன்னும் சற்று கீழ் நோக்கி பார்த்தால் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டத்திற்கு தேவையான நாப் (திருகிகள்) இருப்பதைக் காணலாம். இந்த சிஸ்டம் உண்மையில் மிகச் சிறந்த முறையில் வேலை செய்கிறது. இந்த வெர்னா கார்கள் உள்ள பிரிவில் வேறு எந்த ஒரு வாகனத்திலும் கிளைமேட் கண்ட்ரோல் அமைப்பு இவ்வளவு கச்சிதமாக இல்லை. ஹோண்டா சிட்டி மற்றும் வோல்க்ஸ்வேகன் வெண்டோ கார்களில் பின்புற AC வென்ட் இருப்பதால் வாடிக்கையாளர்கள் இந்த வெர்னா கார்களிலும் அதனை எதிர்பார்த்து சற்று ஏமாற்றம் அடைகின்றனர். வெர்னாவை விட விலை குறைவான க்ரேண்ட் i10 மற்றும் எளிட் i20கார்களில் இது இருக்கும் போது ஏன் வெர்னாவில் பின்புற AC திறப்பான்கள் பொருத்தப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

p13

அனைத்து கதவுகளிலும் அரை லிட்டர் பாட்டில் வைப்பதற்கான இட வசதி உள்ளது. இருக்கைகள் மற்றும் கதவின் உட்புறம் நேர்த்தியான தோலினால் மூடப்பட்டுள்ளது.

p14 காரின் பின்புறம் நுழைந்து அமர்வது எளிதாக உள்ளது என்றாலும் அமர்ந்த பின் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தரையோடு இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது சற்று அசௌகரியமான உணர்வை தருகிறது. காரின் கூரை பகுதி தாழ்வாக உள்ளதால் ஹெட்ரூம் குறைந்துள்ளது. மேலும் தொடை பகுதிக்கான சபோர்ட் இல்லை. இரு இருக்கைகளுக்கும் நடுவே கப் ஹோல்டர் உடன் கூடிய பொதுவான ஒரு ஆர்ம்ரெஸ்ட் உள்ளது. இருவர் வசதியாக அமரலாம். மூன்றாவது பயணி இட நெருக்கடியில் அசௌகரியமாக உணருவார்.

p15

பின்புற இருக்கைகளிலேயே மிகச் சிறப்பான அம்சம் எது என்றால் எர்கோ லீவர் இருப்பதைத் தான் சொல்ல வேண்டும். இந்த லீவரைப் பயன்படுத்தி முன்புற இருக்கையை தேவையான அளவுக்கு முன் தள்ளி உங்கள் கால்களுக்கு தேவையான இடவசதியை செய்துக் கொள்ளலாம். பின்புற AC வென்ட் இல்லை என்பதை முன்பே சொல்லி இருந்தோம். முன்புற AC வென்ட்கள் தேவையான அளவு குளிர்ச்சியை சமமாக வெளியிடும் என்று ஹயுண்டாய் தெரிவித்துள்ளது.

முதல் பார்க்கும் போது உட்புற அமைப்பியல் (இன்டீரியர்) பெரிய அளவில் மாற்றப்படவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. மிகக் குறைந்த அளவிலான மாற்றங்களையே பார்க்க முடிகிறது.

பெர்பார்மன்ஸ் (செயல்திறன்)


டீசல் 1.6:


3 இந்த 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் தான் இந்த புதிய வெர்னாவில் மிகவும் சிறந்தது. மிக அற்புதமாக இந்த என்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் நபருக்கு தான் ஒரு பெட்ரோல் என்ஜின் வாகனத்தில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படும். அந்த அளவுக்கு இந்த டீசல் என்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. டீசல் என்ஜின் வாகனங்களில் உள்ள சற்று கடினத் தன்மையுடன் கூடிய க்ளட்ச் போல் இல்லாமல் இயக்குவதற்கு மிகவும் எளிதாக இந்த டீசல் என்ஜின் வெர்னாவில் உள்ள க்ளட்ச் அமைப்பு இருக்கிறது.

இந்த டீசல் 126bhp சக்தி மற்றும் 260nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறன் பெற்றது. வெறும் அளவுகளின் அடிப்படையில் மட்டுமல்ல காரின் எடை மற்றும் அதன் சக்தி ஒப்பீட்டின் அடிப்படையிலும் இந்த பிரிவிலேயே கூடுதல் திறன் கொண்ட என்ஜின் இது தான் என்று சொல்லி விடலாம். ARAI அமைப்பின் புள்ளி விவரங்களின் படி லிட்டருக்கு 23.9 கி.மீ. மைலேஜ் தரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதி கொண்ட மாடல்களில் வெளிவந்துள்ளது.

1800 rpm - ல் இந்த என்ஜின் இயங்கும் போது வெகு எளிதில் 100 கி.மீ வேகத்தை தொட்டு விடுவது மட்டுமல்லாமல் அதையும் விட அதிக வேகத்தில் தொடர்ந்து பல மணி நேரம் பயணிக்கும் திறன் பெற்றுள்ளது.

டீசல் 1.4


மற்றுமொரு டீசல் என்ஜின் ஆப்ஷனான 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 89bhp அளவு சக்தி மற்றும் 220Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. இந்த இஞ்சின் 6 - வேக கியர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. நெருக்கடி மிகுந்த நகர்புற சாலைகளில் ஊர்ந்து செல்ல நேர்ந்தாலும் நல்ல லோ - எண்டு டார்க்கை கொண்டுள்ளதால் மிகவும் ஸ்மூத்தாக பயணிக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 1.6 லிட்டர் டீசல் என்ஜின் போல் நெடுஞ்சாலைகளில் சீறிப் பாய்ந்து செல்லவில்லை என்றாலும் இந்த 1.4 லிட்டர் டீசல் என்ஜின் உங்களை ஏமாற்றாது என்று உறுதியாக சொல்லலாம்.

இந்த 1.4 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் அடிப்படை வேரியண்டில் மட்டுமே உள்ளதால் குறைந்த விலையிலான காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளருக்கு இது சரியான தேர்வாக இருக்கும். அதே சமயம் இந்த மாடலை நீங்கள் தேர்வு செய்தால் சில பல சிறப்பம்சங்களை தியாகம் செய்ய வேண்டி வரும் என்பது மட்டுமின்றி இந்த என்ஜின் நகர்புற சவாரிக்கு மிகப்பொருத்தம் தானே தவிர நெடுந்தூர பயணத்திற்கு அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இல்லை.

p16

பெட்ரோல் 1.6


4 டீசல் 1.6 லிட்டர் ஆப்ஷனைப் போலவே இந்த பெட்ரோல் 1.6 லிட்டர் எஞ்சினும் இதன் பிரிவிலேயே அதிகப்படியான 121.3 bhp அளவுக்கு சக்தியையும் 155 nm அளவுக்கு டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. ஹோன்டா சிட்டி கார்களில் உள்ள I – VTEC என்ஜினுடன் ஒப்பிடுகையில் கூடுதல் திறன் இந்த வெர்னா பெட்ரோல் எஞ்சினுக்கு உண்டு என்று புள்ளி விவரங்கள் சொன்னாலும் இவை இரண்டின் செயல்பாடும் கிட்டத்தட்ட ஒரே அளவு தான் உள்ளது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெட்ரோல் வேரியன்ட் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வசதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. நகர்புற சாலைகளில் ஓட்டும் போது ஆட்டோமேடிக் வேரியண்டில் பொருத்தப்பட்டுள்ள 4 கியர்கள் போதுமானதாக தெரிந்தாலும் நெடுஞ்சாலைகளில் 5 வது கியர் வசதி இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

மொத்தத்தில் இந்த பெட்ரோல் என்ஜின் சத்தமில்லாமல் மென்மையாக தனது பணியை சிறப்பாக செய்கிறது. மொத்தத்தில் நாங்கள் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனைத் தான் பரிந்துரை செய்வோம். அதே சமயம் நீங்கள் பெரும்பான்மையான சமயங்களில் நகர்புறத்தில் மட்டும் காரை பயன்படுத்துபவர் என்றால் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்ட வேரியண்டை வாங்குவது சரியாக இருக்கும்.

இந்த 4S வெர்னாவை ஹோண்டா சிட்டியுடன் நேரிடையாக ஒப்பிட்டு பார்த்தால் ஹோண்டாவின் CVT என்ஜின் கூடுதல் மைலேஜ் தருவதுடன் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் வேரியன்ட் இரண்டுமே நகர்புற மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறப்பாக செயல்படுவதை அறியலாம்

பெட்ரோல் 1.4


இதே 1.4 லிட்டர் டீசல் எஞ்சினைப் போலவே இந்த 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் முந்தைய i20 கார்களில் பயன்படுத்தப்பட்டு வந்தவை தான் . 5 - வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் 105.5 bhp அளவு சக்தியையும் 135.3Nm அளவு டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

இந்த என்ஜின் தொடர்ச்சியான பயணத்தில் பலவீனமாகி வேகம் குறைகிறது. தொடர்ந்து நீங்கள் விரும்பும் வேகத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து இஞ்சின் வேகத்தை அதிகரிக்க வேண்டி உள்ளது. அது மட்டுமின்றி அதிக வேகத்தில் செல்லும் போது இந்த என்ஜின் இரைகிறது. க்ளட்ச் மிகவும் இலகுவாக உள்ளதால் நகர்புற பயணத்திற்கு உற்ற நண்பனாக திகழ்கிறது. NVH அளவுகள் நல்ல முறையில் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் கேபின் உட்புறம் என்ஜின் சத்தம் மிக மிக குறைந்த அளவே கேட்கிறது.

இந்த குறைந்த சக்தி கொண்ட வேரியண்டை நீங்கள் ஒதுக்கி விட்டு 1.6 லிட்டர் வேரியண்டை வாங்குவதே சரியான தீர்வாக இருக்கும் என்பதே எங்கள் பரிந்துரை. ஏனெனில் 1.6 லிட்டர் வேரியண்டிற்கு நீங்கள் கூடுதல் பணம் செலுத்தினாலும் அதற்கேற்ற சிறப்புகள் அந்த வேரியண்டில் இருக்கிறது என்பது எங்கள் கருத்தாகும்.

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


நகர்புற சாலைகள் மற்றும் போக்குவரத்து தன்மைகளுக்கு ஏற்ற வகையில் மிகச் சிறப்பாக ட்யூன் செய்யப்பட்ட கார் இந்த வெர்னா என்றால் அது மிகையில்லை. நகர்புற சாலைகளில் தன்னிகரில்லா தலைவனகாக ஹயுண்டாய் வெர்னா உலா வருகிறது. நாங்கள் இந்த காரை எடுத்துக் கொண்டு வேகத் தடைகளும், குண்டு குழிகளும் நிறைந்த சாலைகளில் ஓட்டி செல்லும் போது பயணிப்பவருக்கு கொஞ்சமும் அசௌகரியத்தை கொடுக்காமல் சர்வ சாதரணமாக அவைகளை இந்த வெர்னா கடந்தது. பளுவற்ற ஸ்டீரிங் அமைப்பும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும்.

p17

நெடுஞ்சாலையில் வெர்னாவின் செயல்பாடு சற்று ஏமாற்றம் தருவதாகவே உள்ளது. ஸ்டீரிங் அமைப்பு அழுத்தம் குறைவாக உள்ளதால் வேகமாக செல்லும் போது வாகனம் உருண்டு விடுமோ என்ற அச்சம் லேசாக மனதில் தோன்றுகிறது. வெண்டோ கார்கள் நெடுஞ்சாலையில் வெர்னாவை விட சிறப்பாக செயல்படும் என்ற எண்ணம் எழுகிறது. அதே சமயம் வேகத்தைப் பொறுத்தவரை வெர்னா கார்களில் எந்த ஒரு குறையும் இல்லை.

பாதுகாப்பு


5 p18 வெர்னா சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களில் ஒன்று என்று உறுதியாக சொல்லலாம். ஆன்டி - லாக் ப்ரேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ப்ரேக் டிஸ்ட்ரிப்யூஷன் ஆகிய அம்சங்களை குறிப்பாக சொல்லலாம். இதைத் தவிர 6 காற்றுப்பைகள் கொண்ட வேரியன்ட் ஒன்றும் வெளியாகி உள்ளது. இரண்டு முன்புற மற்றும் நான்கு கர்டன் காற்றுபைகள். ஹோண்டா சிட்டி, வோல்க்ஸ்வேகன் வெண்டோ மற்றும் சியஸ் கார்களில் இரண்டு மட்டுமே உள்ளது.

இந்த சிறப்பம்சம் பாதுகாப்பை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்திழுக்கும்.

வேரியன்ட்கள்


மொத்தம் 4 ட்ரிம்களில் 4 என்ஜின் ஆப்ஷனுடன் வெர்னா வெளியிடப்பட்டுள்ளது. பெரிய அளவிலான பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் (1.6 லிட்டர் ) மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ்கள் உடன் வெளியாகி உள்ளது. சிறிய 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே உள்ளது.

சிறிய 1.4 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் பேஸ் (அடிப்படை) ட்ரிம் மட்டுமே சில அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் வசதி கொண்ட 1.6 லிட்டர் என்ஜின் டாப் 3 ட்ரிம்களில்

பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஆட்டோ S(O) ட்ரிம்மில் மட்டுமே உள்ளது. டீசல் ஆட்டோமேடிக் டாப் -எண்டு SX வேரியண்டில் மட்டும் உள்ளது.

பேஸ் வேரியன்ட்களில் ABS & EBD மற்றும் சென்ட்ரல் லாகிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர விங் மிரருடன் ஒருங்கிணைக்கப்பட்ட டேர்ன் இன்டிகேட்டர்கள் , மேனுவல் குளிர் சாதன அமைப்பு , மின்சார உதவியுடன் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக் கூடிய வெளிப்புற கண்ணாடிகள், எர்கோ லீவர் மற்றும் 2 டின் மீடியா சிஸ்டம் ஆகிய அம்சங்களும் உள்ளன. இந்த மீடியா சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்வதற்கான பொத்தான்கள் ஸ்டீரிங் சக்கரத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

S வேரியன்ட்டை பொறுத்தவரை ஓட்டுனர் பக்க காற்று பைகள் சென்சாருடன் கூடிய ரிவர்சிங் கேமரா ,ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் வைபர்கள். R15 அல்லாய் சக்கரங்கள் , மரப்பூச்சு கொடுக்கப்பட்ட பேனல்கள், மேம்படுத்தப்பட்ட ஓட்டுனர் தகவல் அமைப்பு (டிரைவர் இன்பர்மேஷன் சிஸ்டம் ), தானியங்கி கிளைமேட் கண்ட்ரோல் , சன் கிளாஸ் ஹோல்டர் , உயரம் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வசதியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் ஆடியோ சிஸ்டத்தை கண்ட்ரோல் செய்வதற்கான பொத்தான்கள் ஸ்டீரிங் வீலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

p19

S(O) வேரியண்டைப் பொறுத்தவரை R16 டைமண்ட் கட் அல்லாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கதவு கைபிடிகளுக்கு குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்டில் இரண்டு காற்றுப்பைகள் (ஓட்டுனர் மற்றும் பயணி ) உள்ளது. புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியுடன் கூடிய கீலெஸ் என்ட்ரி மற்றும் குளிரூட்டப்பட்ட கையுறை பெட்டி ஆகியவையும் இந்த வேரியண்டில் உள்ளது.

6 டாப் SX வேரியன்ட்டில் 6 காற்று பைகள் உள்ளது. அது மட்டுமின்றி தோலினால் ஆன இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது.

தீர்ப்பு


தோற்றத்தை பொறுத்த மட்டில் முந்தைய மாடலை விட இந்த வெர்னா 4S சிறப்பாக இருந்தாலும், பொருத்தப்பட்டுள்ளன சாதனங்கள் அளவை வைத்து பார்த்தால் நிச்சயம் இந்த 4S வெர்னா பின்தங்கி விடுகிறது. இந்த காருக்கு கொடுக்கப்படும் விலைக்கு இன்னமும் ஏராளமான தொழில்நுட்ப விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க வாய்ப்பிருக்கிறது . இதே கார் தான் சில காலம் ஹோண்டா சிட்டியை பின்னுக்கு தள்ளி இந்த பிரிவில் முதல் இடத்தில் இருந்தது என்பதை ஹயுண்டாய் நிறுவனமும் நன்கு உணர்ந்தே இருக்கும்.

2016 ஆம் ஆண்டின் முதல் பாதியில் களமிறங்க உள்ள இந்த கார்களில் மேலும் நிறைய தொழில்நுட்ப அம்சங்களை ஹயுண்டாய் இணைக்க வேண்டும் என்றும் பயண மற்றும் கையாளும் அனுபவத்தை மேம்படுத்தவேண்டும் என்றும் நாம் எதிர்பார்க்கிறோம். அப்போது தான் இந்த பிரிவில் ஒரு நல்ல போட்டி உருவாகும். இப்போதைக்கு ஹோண்டா சிட்டி தான் இந்த பிரிவில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.