ஹூண்டாய் ஐ20-ஆக்டிவ்

` 6.7 - 9.8 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹுண்டாய் i20


ஹைலைட்ஸ்ஜனவரி 05, 2016: ஹுண்டாய் நிறுவனம், தனது எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் 2016 மாடலிகளின் முன்புறத்தில், இரட்டை காற்றுப் பைகளைப் பொருத்தி பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது. ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம், எலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் மாடல்களில் கடந்த வருடம் முதல் 7 அங்குல டச் ஸ்கிரீன் ஆடியோ-வீடியோ நேவிகேஷன் அமைப்பை இணைத்து வெளியிடுகிறது. தனது படைப்புகளை நவீனப்படுத்த, இவற்றில் வழி காட்டும் மேப்கள், செயற்கைகோள் அடிப்படையில் ஆன வாய்ஸ் கைடட் நேவிகேஷன் அமைப்பு, பின்புற காமிரா டிஸ்ப்ளே, காரில் பொருத்தப்படும் பொழுதுப்போக்கு அம்சம் மற்றும் பல ஒருங்கிணைக்கும் அமைப்புகள் (connectivity features) ஆகியவற்றை இணைத்து, போட்டியில் வெற்றிபெறத் தகுதியுடையதாக்கியுள்ளது.
தற்போது, ஹாட்ச்பேக் அடிப்படையில் ஆன க்ராஸ் ஓவர் பிரிவு கார்களின் வரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த பிரிவில் அறிமுகம் ஆன கார்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, எவ்வளவு வேகமாக இந்த பிரிவு வளர்ந்து வருகிறது என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கொரிய கார் தயாரிப்பாளரான ஹுண்டாய் நிறுவனம், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய முதல் ஹாட்ச்பேக் மாடலை அடிப்படையாகக் கொண்ட க்ராஸ்ஓவர் பிரிவில் வெளிவந்த கார் i20 ஆக்டிவ் ஆகும். மிகவும் பிரபலமான, பிரிமியம் ஹாட்ச்பேக் காரான i20 மாடலின் அடிப்படையில், தற்போது புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் அறிந்த i20 மாடலின் மரபணுவைக் கொண்டு இது உருவாக்கப்பட்டிருந்தாலும், இதன் தோற்றம் புத்துணர்ச்சி ஊட்டும் விதத்தில் உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. வெளிப்புறத்தில் ஒரு சில மாற்றங்கள், சிறிய உட்புற மாற்றங்கள் மற்றும் மிகக் குறைந்த இஞ்ஜின் மாற்றங்கள் என புதுப் பொலிவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் காரின் அடி பாகத்தில் மேட் க்ரே நிற கிளாடிங், செயற்கை ஸ்கிட் ப்ளேட்கள், ரூஃப் ரைல்கள், மறுவடிவமைக்கப்பட்டுள்ள அலாய் சக்கரங்கள், புது வடிவம் கொண்ட பம்பர்கள், முன் மற்றும் பின்புறம் உள்ள வட்ட வடிவிலான ஃபாக் விளக்குகள், DRL –கள் மற்றும் கார்னரிங் லைட்கள், கொண்ட புரொஜெக்டர் ஹெட் லைட்கள், எரிபொருள் டாங்க் மீது புது வடிவ மூடி மற்றும் பளபளப்பான கருப்பு நிற C பில்லர் என சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:


Table 1

ஹுண்டாய் i20 ஆக்டிவ் விமர்சனம்:


கண்ணோட்டம்:HMIL நிறுவனம், தனது படைப்பாற்றலை தட்டி எழுப்பி பல புதிய மாடல்களை இந்த வருடம் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட, புதிய SUV மாடலை அறிமுகப்படுத்தியது. அது மட்டுமல்ல, வேறு பல மாடல்களை இந்த வருடம் மேம்படுத்தியுள்ளது. அவற்றில், அதிக விற்பனை ஆகும் க்ராஸ்ஓவர் மாடலான ஹுண்டாய் i20 ஆக்டிவ் மாடலும் ஒன்றாகும். இதன் வேரியண்ட் வகைகளில் எந்த மாற்றமும் இல்லாமல், எந்த தொழில்நுட்ப மாற்றங்களையும் கொண்டு வராமல் தற்போது ஒரு புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது, இதன் உயர்தர SX வேரியண்ட்டில் மட்டும் பெட்ரோல் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் உயர்தர வெர்ஷன்களில் டச் ஸ்கிரீன் இணைக்கப்பட்ட அதிநவீன இன்ஃபோடைன்மெண்ட் வசதியும் இடம்பெறுகிறது. இதில் வீடியோ பிளேபேக் அமைப்பு, ஆடியோவிற்கான கண்ட்ரோல் மற்றும் நேவிகேஷன் அமைப்பு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், வெளியில் உள்ள ரியர் பார்க்கிங் காமிராவில் பதிவாகும் படங்கள் அனைத்தும் உட்புற ரியர் வியூ மிரரில் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால், அந்த காட்சிகள் அனைத்தும் இப்போது இன்ஃபோடைன்மெண்ட் திரையில் தெளிவாகத் தெரிகின்றன. இவை தவிர, i20 ஆக்டிவ் க்ராஸ்ஓவர் காரில் வேறு எந்த அம்சத்தையும் இந்நிறுவனம் மாற்றவில்லை. இதன் பெட்ரோல் வெர்ஷன்களில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது. அதே நேரம், i20 ஆக்டிவின் ஏனைய வேரியண்ட்களில், இரண்டாவது ஜெனரேஷன் 1.4 லிட்டர் CRDi இஞ்ஜின் இடம்பெறுகிறது.
புதிய i20 ஆக்டிவ் மாடலில் இஞ்ஜின் ரீதியாக எந்த மாற்றங்களும் இல்லை. ஆனால் இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவு அதிகப்படுத்தப்பட்டு, 190 மிமீ என்ற அளவில் உள்ளது. உண்மையில், தற்போதைய மாடலின் தோற்றம் முற்றிலும் வேறுபட்டதாக, அனைவரும் விரும்பும் பந்தய காரின் தோற்றத்தில் வருகிறது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள அம்சங்கள், பந்தய காரில் உள்ள அம்சங்களை ஒத்திருப்பதால், இது இளைஞர்களை எளிதாகக் கவர்ந்து விடுகிறது. புத்துணர்ச்சியூட்டும் i20 ஆக்டிவ் மாடலின் மிடுக்கான தோற்றத்திற்கு முக்கிய காரணம் எது என்றால், கருப்பு நிறத்தில் உள்ள இதன் வித்தியாசமான கிளாடிங், தனித்துவமான வார்ப்புகள் மற்றும் மெட்டாலிக் நிறத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இதன் நட்ஜ் கார்ட் போன்றவற்றை நாம் குறிப்பிட்டு சொல்லலாம். i20 ஆக்டிவ் கம்பீரமான தோற்றத்துடன் மட்டுமல்ல, ஸ்டைலான காராகவும் நகரத்தில் வருகிறது என்பது ஹுண்டாய் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். புரொஜெக்டர் ஹெட் லாம்ப்கள், LED DRLகள், டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் மற்றும் விதானத்தின் மேல் உள்ள அலுமினிய ரூஃப் ரைல்கள் என பல நவீன அம்சங்களைப் பொருத்தி, இதற்கு ஸ்டைலான பந்தய காரின் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அனைத்து வேரியண்ட்களிலும் அலாய் சக்கரங்களைப் பொருத்தி, கார் வாங்க வேண்டும் என்ற கனவில் உள்ள இன்றைய இளைஞர்களைக் கவர்ந்திழுக்கின்றனர். அதே நேரத்தில், உட்புற அமைப்பில் நம்மைக் கவரும் அம்சம் எதுவென்றால், இரண்டு விதமான ஆப்ஷன்களில் வரும் இதன் உட்புற வண்ணமாகும். டேங்ஜெரின் ஆரஞ்சு மற்றும் அக்குவா புளு என்ற இரண்டு நிறங்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் இதன் உட்புற வண்ணமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையில், கவர்ச்சியான கருப்பு வண்ணத்தில் வரும் உட்புற அமைப்புகளுடன் இந்த இரண்டு நிறங்களும் சரியாகப் பொருந்தி, இந்த காரின் நவீன தோற்றத்தை அதிநவீனமாக்குகின்றன.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள i20 காம்பாக்ட் க்ராஸ் ஓவர் மாடல், இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களுடன் போட்டியிட்டு எளிதாக வெல்லும் வாய்ப்பு இதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் ஆகியவற்றால் அதிகரித்துள்ளது. புதிய i20 ஆக்டிவ் மாடலில் உள்ள இருக்கைகளில் உயர்தரமான துணி விரிப்புகளைப் பார்க்கலாம். ஆனால், இதன் ஸ்டியரிங் வீல் மீது மட்டும் லெதர் வேலைப்பாடு உள்ளது. அது மட்டுமல்ல, ஸ்டியரிங் பொசிஷன் ரிமைண்டர், சர்வீஸ் ரிமைண்டர் மற்றும் பார்க்கிங் சென்சார் டிஸ்ப்ளே என பல புதிய கருவிகள் இணைக்கப்பட்ட நவீனமான இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டரும் இதன் உட்புறத்தில் இடம்பெறுகிறது. ஸ்டியரிங் வீலை, உங்களுக்கேற்ற சரியான நிலையில் மேனுவலாக மாற்றி அமைத்து, எளிதாகக் கையாள்வதற்காகவே, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள் இதனால் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் ஆன்டி லாக் பிரேகிங் அமைப்பு, ஓட்டுனருக்கான காற்றுப் பை மற்றும் உயர்தர வேரியண்ட்டில் பயணியருக்கான காற்றுப் பை என பல உயரிய பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறுகின்றன. தற்போது இந்திய சந்தையில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் காம்பாக்ட் க்ராஸ்ஓவர் பிரிவில், அதிரடியாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஃபியட் அவென்சுரா, வோக்ஸ்வேகன் க்ராஸ் போலோ மற்றும் டொயோட்டா எடியோஸ் க்ராஸ் போன்ற கார்களுடன் புதிய ஹுண்டாய் i20 ஆக்டிவ் நேருக்கு நேர் நின்று போட்டியிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஹுண்டாய் நிறுவனம் குறிப்பிடுகிறது.

வெளிப்புறத் தோற்றம்:4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய க்ராஸ்ஓவர் கார்களின் பிரிவில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள ஹுண்டாய் i20 ஆக்டிவ் காரின் வெளிப்புறத்தில் உள்ள வியப்பூட்டும் புதிய அம்சங்களினால், இதன் ஒட்டுமொத்தத் தோற்றமும், கம்பீரமான மிடுக்குடன் உள்ளது. கருப்பு நிற பட்டைகளைக் கொண்ட அருங்கோண வடிவில் உள்ள இதன் ரேடியேட்டர் கிரில் மிரட்டும் வடிவத்தில் உள்ளது. கிரில் பகுதியின் கீழ் இரண்டு வண்ணங்களில் உள்ள பம்பரும் இதன் அச்சுறுத்தும் தோற்றத்தை அதிகரிக்கிறது. பம்பரின் இரண்டு ஓரங்களிலும் வட்ட வடிவிலான ஃபாக் விளக்குகள் மற்றும் அலுமினியத்தால் ஆன நட்ஜ் கார்ட் ஆகியவை பொருத்தப்பட்டு கம்பீரத் தோற்றத்திற்கு மெருகு சேர்க்கின்றன. அதற்கு சற்று மேலே காற்றை உள்ளிளுக்கும் சிறிய பகுதி உள்ளது. இதில்தான் ஹுண்டாய் நிறுவனம் தனது சின்னத்தை நேர்த்தியாகப் பொறித்துள்ளது. மேலும், i20 ஆக்டிவின் முகப்பில், சற்றே பின்னிழுத்த வடிவத்தில் உள்ள ஹெட் லைட் க்லஸ்டரில் புரொஜெக்டர் ஹெட் லாம்ப்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதில் ஸ்டைலான LED DRL களும் பொருத்தப்பட்டு காலையிலும் பிரகாசமாக எரிகின்றன. மேலும், இதில் பொஸிஷனிங் லாம்ப்கள் மற்றும் கார்னரிங் லாம்ப்கள் போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் நடுத்தர மற்றும் உயர்தர டிரிம்களில் மட்டுமே புரொஜெக்டர் லைட்கள் இடம்பெறுகின்றன, அடிப்படை வேரியண்ட்டில் ஹாலோஜென் விளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. I20 ஆக்டிவின் பக்கவாட்டுப் பகுதியில் கருப்பு நிற பாதுகாப்பு ஸ்ட்ரிப்கள் இணைக்கப்பட்டிருப்பதால், முன்புறத்திற்கு இணையாக இதன் பக்கவாட்டுத் தோற்றமும் மிடுக்கான பந்தய காரின் தோற்றத்தில் உள்ளது. இதன் B மற்றும் C பில்லர் பகுதிகளில் கருப்பு நிற வேலைப்பாடும், கதவு கைப்பிடிகளில் க்ரோமிய வேலைப்பாடும் இணைந்து இதன் பக்கவாட்டுத் தோற்றத்தை மிளிரச் செய்கின்றன. அதே நேரம், இதன் ORVM –கள் மீது மூடி போன்ற வடிவத்தில் உள்ள அமைப்பிலும், பாடி நிறத்தையே தீட்டியுள்ளனர். ORVM -கள் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், கூடுதல் பாதுகாப்பிற்காக டர்ன் பிளிங்கர்கள் இவை மீது இணைக்கப்பட்டுள்ளன. புதிய i20 ஆக்டிவ் மாடலின் அடிப்படை வேரியண்ட்டில் நீங்கள் தெளிவான சில்வர் அலாய் சக்கரங்களைப் பார்க்கலாம். மேலும், இதன் நடுத்தர மற்றும் உயர்தர வேரியண்ட்களில் டயமண்ட் கட் அலாய் சக்கரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. உள்ளது. புதிய i20 ஆக்டிவ் ஒரு காம்பாக்ட் க்ராஸ் ஓவர் காராக இருந்தாலும், அதிகமான கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவு, இரட்டை வண்ணத்தில் வரும் ஃபெண்டர்கள் மற்றும் கார் மேலே உள்ள அலுமினிய ரூஃப் ரைல்கள் போன்றவை இதற்கு SUV காரைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றன. மேலும், விதானத்தின் மேல் ஒரு மைக்ரோ ஆன்டெனாவும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய i20 ஆக்டிவ் மாடலைப் பற்றிய வருணனை இத்துடன் முடிவடைந்தது என்று எண்ண வேண்டாம், ஏனெனில் மேலும் ஒரு முக்கியமான அம்சத்தைப் பற்றி நாங்கள் இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, மூன்றாவது LED பிரேக் லைட்கள் கொண்ட நளினமான டெய்ல் லைட் க்லஸ்டர் பொருத்தப்பட்டுள்ள i20 ஆக்டிவின் பின்புறம் அனைவரையும் வசீகரிக்கும் அழகைக் கொண்டுள்ளது. குழிவான (concave) வடிவத்தில் உள்ள இதன் பின்புற விண்ட் ஸ்கிரீன் மீது ஸ்டைலான ஸ்பாய்லர் மற்றும் அதற்கும் மேலே மூன்றாவது பிரேக் லைட் ஆகியவை இடம்பிடித்துள்ளன. பின்புறம் உள்ள டெய்ல் கேட்டில், நேர்த்தியான பல க்ரோமிய வேலைப்பாடுகளை நீங்கள் காணலாம். இதில், ஹுண்டாய் நிறுவனத்தின் சின்னம் மற்றும் அந்த குறிப்பிட்ட வேரியண்ட்டைக் குறிக்கும் எழுத்துக்கள் ஆகியவையும் அடங்கும். பின்புற பம்பர் பகுதியில் கருப்பு நிற க்ளாடிங்க், அலுமினியத்தால் ஆன கீழ்புற க்ளாடிங்க் மற்றும் ரெப்லெக்டர்கள் ஆகியவை இணைந்து, பம்பருக்கு உறுதியான தோற்றத்தைத் தருகின்றன.

வெளிப்புற அளவுகள்:


புதிதாக அறிமுகம் ஆகியுள்ள ஹுண்டாய் i20 ஆக்டிவ் மாடலின் மொத்த நீளம் 3995 மிமீ ஆகவும், இதன் அகலம் 1760 மிமீ ஆகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இதன் உயரம் 1555 மிமீ என்ற அளவிலும், இதன் குறைந்தபட்ச கிரவுண்ட் க்ளியரன்ஸ் 190 மிமீ என்ற அளவிலும் உருவாக்கப்பட்டு, பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. மேலும், 2570 மிமீ என்ற இதன் வீல் பேஸ் அளவு, இந்த பிரிவிலேயே நீளம் என்று கருதப்படுகிறது.

உட்புற அமைப்புகள்:கவர்ச்சிகரமான இரண்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு, இதன் பிரிவிலேயே மிகவும் இதமான உணர்வைத் தரும் உட்புற அமைப்பைக் கொண்ட கார் என்ற பெயரை ஹுண்டாய் i20 ஆக்டிவ் பெறுகிறது. காம்பாக்ட் க்ராஸ் ஓவர் பிரிவு கார்களிலேயே, வேறு எந்த மாடலிலும் இல்லாத முறையில், நீங்கள் நீலம் அல்லது டாங்ஜெரின் ஆரஞ்சு வண்ணம் என்ற இரு ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உண்மையில், இரண்டு நிறங்களுமே இதன் உட்புற அமைப்பிற்கு தனித்துவமான அழகைப் பெற்றுத் தருகின்றன. அதே சமயம், உட்புற வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டாலிக் மற்றும் க்ரோமிய வேலைப்பாடுகளும் உட்புறத்திற்கு உயர்வான தோற்றத்தைத் தருகின்றன. இங்கே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்க்கும் பொது, இதன் டாஷ்போர்டின் வடிவம் எலைட் i20 ஹாட்ச் பேக் காரில் உள்ளதைப் போலவே இருந்தாலும், இதன் சென்டர் ஃபேஷியா மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் ஆகியவை நவீனமான வடிவத்தில் உள்ளன. ஸ்டியரிங் வீல் மூன்று ஸ்போக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டு, ஆடியோ மற்றும் தொலைபேசி இணைப்பிற்கான கட்டுப்பாட்டுக் கருவிகள் பொறுத்தப்பட்டு வருகின்றது. மேம்பட்ட கருவிகள் கொண்ட பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர், அதே டயல்கள் மற்றும் பின்புற வெளிச்சம் ஆகியவை கொண்டு வருகின்றன. எனினும், இந்த அமைப்பை நீங்கள் உயர்தர வெர்ஷனில் மட்டுமே பார்க்க முடியும். இருக்கைகள் அனைத்தும் அதிக சவுகர்யத்தைத் தரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், பயணிகள் சுகமாக பயணிக்கலாம். மேலும், இந்த இருக்கைகள் மீது விரிக்க ஆரஞ்சு அல்லது நீல வண்ண உயர்தர விரிப்புகளை, உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உள்ளே காலெடுத்து வைத்தவுடன், இந்த காம்பாக்ட் க்ராஸ் ஓவர் காரின் கவர்ச்சியான உட்புற அமைப்புகள் உங்களை வசியம் செய்வது உறுதி.

உட்புற சொகுசு வசதிகள்:புதிய ஹுண்டாய் i20 ஆக்டிவ் அடிப்படை வெர்ஷனில் உள்ள கதவுகளில் சிறிய பாக்கெட்கள், முன்புற இருக்கைகளில் பின்புற பாக்கெட்கள், பின்புற பார்செல் ட்ரே, டூயல் ட்ரிப் மீட்டர், டாக்கோ மீட்டர் மற்றும் டிஜிட்டல் கடிகாரம் போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன. இது தவிர, இந்த வேரியண்ட்டில் மாற்றி அமைக்கும் விதத்தில் உள்ள முன்புற ஹெட் ரெஸ்ட்ரைண்ட்கள், ஆர்ம் ரெஸ்ட் வசதியுடன் வரும் முன்புற இருக்கைகள், பவர் விண்டோஸ், மேனுவலாக இயக்கக் கூடிய குளிர் சாதன கருவி, மோட்டார் ட்ரைவென் எலக்ட்ரிக் பவர் ஸ்டியரிங் மற்றும் குளிரூட்டப்பட்ட க்லோவ் பாக்ஸ் போன்ற சொகுசு வசதிகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும். கூடுதலாக, கிளட்ச் ஃபூட் ரெஸ்ட், பயணியருக்கான முகம் பார்க்கும் கண்ணாடி, டிக்கெட் ஹோல்டர், ஆக்ஸெசரி பவர் அவுட்லெட், பேட்டரி சேவர், உட்புறம் இருந்து மாற்றி அமைக்கும் வசதி கொண்ட வெளிப்புற கண்ணாடிகள் மற்றும் பயணம் செய்யும் போது சாலையில் பிரிவு (லேன்) மாறப் போவதை உணர்த்தும் இன்டிகேட்டர் என பல நவீன அம்சங்கள் நிரம்பி வழிகின்றன. அதே நேரம், ஹுண்டாய் i20 ஆக்டிவ் நடுத்தர வெர்ஷன்களில், மின்னியக்கம் மூலம் மாற்றி அமைக்கும் வசதி கொண்ட வெளிப்புற கண்ணாடிகள், பூட் பகுதியில் விளக்கு, முன்புற மேப் லாம்ப், ஓட்டுனரின் இருக்கை உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி மற்றும் குளிர் கண்ணாடியை வைக்க ஒரு சிறிய ஹோல்டர் என பல அம்சங்கள் நம்மை அசர வைக்கின்றன. அதே போல, SX டிரிம்மிலும் பல அசத்தும் அம்சங்கள் இடம்பெறுகின்றன. லெதர் வேலைப்பாடு கொண்ட ஸ்டியரிங் வீல், கியர் நாப், (ஸ்டியரிங் பொசிஷன் ரிமைண்டர், சர்வீஸ் ரிமைண்டர் மற்றும் பார்க்கிங் சென்சார் டிஸ்ப்ளே அமைப்புகளைக் கொண்ட) மேம்பட்ட சூப்பர்விஷன் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர், 60:40 என்ற விகிதத்தில் பிரித்து மடக்கும் வசதி கொண்ட பின்புற இருக்கை, ஓட்டுனருக்கு மட்டும் ஆட்டோமேட்டிக் அப்/டவுன் வசதி கொண்ட ஜன்னல், ஸ்டாப்/ஸ்டார்ட் வசதி கொண்ட புஷ் பட்டன், பின்புறம் வைப்பர் மற்றும் வாஷர் வசதி மற்றும் க்லஸ்டர் அயனைசர் கொண்ட முழுமையான ஆட்டோமேடிக் குளிர் சாதன கருவி ஆகியவை பொருத்தப்பட்டு, வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும், இதில் பார்க்கிங் சென்சார்களுடன் இணைந்து செயலாற்றும் ஓட்டுனருக்கு பேருதவியாக இருக்கும் டில்ட் மற்றும் டெலெஸ்கோபிக் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டு வருகிறது. உயர்தர டிரிம்களில் மட்டும் ஆட்டோ அன்லாக் வசதி மற்றும் IC லைட் அட்ஜஸ்ட்மெண்ட் வசதிகள் இடம்பெறுகின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் சென்டர் ஃபேஷியா பகுதிகளில் நீல நிறத்தில் ஒளியூட்டும் பின்புற விளக்குகள், டூயல் ட்ரிப் மீட்டர், டாக்கோ மீட்டர், கியர் மாற்றுவதை காட்டும் எச்சரிக்கை கருவிகள், எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி, கதவு மற்றும் பூட் பகுதி கதவுகள் சரியாக மூடாமல் இருப்பதை உணர்த்தும் கருவி, இம்மொபிலைசர் அமைப்பு மற்றும் ஓட்டுனர் சீட் பெல்ட் அணிய ஞாபகப்படுத்தும் கருவி என பல கருவிகள் இணைக்கப்பட்டு, i20 ஆக்டிவைக் கையாள்வது எளிதாக இருக்கும்படி செய்துள்ளனர்.
சொகுசு வசதிகளைப் பற்றி பேசும் போது, இதில் உள்ள பொழுதுப்போக்கு அம்சங்களைப் பற்றியும் விவரிக்க வேண்டும். இதில் ரேடியோ, MP3 பிளேயர், AUX மற்றும் USB ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் 2-DIN ஆடியோ அமைப்பு, CD பிளேயர், பின்புற ஸ்பீக்கர்கள், ட்வீட்டர்கள் மற்றும் ஸ்டியரிங் மீது ஆடியோ மற்றும் புளுடூத் கட்டுப்பாட்டுக் கருவிகள் என உங்கள் நேரத்தை முழுமையாக ஆக்ரமிக்கும் கருவிகள் கேபின் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன.

உட்புற அளவுகள்:


புதிய i20 ஆக்டிவின் உட்புறம் விசாலமாக வடிவமைக்கப்பட்டு, 5 நபர்கள் சவுகர்யமாக அமர்ந்து பயணிக்கலாம். நீண்ட பயணமாக இருந்தாலும் களைப்பு தெரியாமல் இருப்பதற்கு, கால்கள் இடிக்காமல், தோள்கள் உராயாமல் மற்றும் தலை தட்டாமல் பயணிக்கும் விதத்தில் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 285 லிட்டர் கொள்ளளவைக் கொண்ட பூட் கம்பார்ட்மெண்ட்டை பெரிதாக்க, நீங்கள் பின்புற இருக்கைகளை மடித்துக்கொள்ளலாம். நீண்ட தூரம் பயணம் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், இதில் உள்ள பெரிய எரிபொருள் டாங்க் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஆக்ஸெலரேஷன் மற்றும் பிக்அப்:புதிய i20 ஆக்டிவின் ஆக்ஸெலரேஷனை அதிகாரிப்பதற்காக, இதன் டீசல் இஞ்ஜினின் அமுக்க விகிதத்தை (கம்ப்ரெஷன் ரேஷியோ) மேம்படுத்தியுள்ளதாக ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, இந்த காரை அதிகபட்சமாக 180 kmph வேகத்தில் செலுத்த முடியும். ஸ்டார்ட் செய்த வெறும் 11.9 வினாடிகளில் இது 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடுகிறது. ஆனால், இதன் பெட்ரோல் இஞ்ஜினில் எந்த மாற்றங்களோ மேம்பாடுகளோ இல்லாமல், 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 170 kmph வேகத்தை எட்ட உதவும் இந்த இஞ்ஜின், வெறும் 13.2 வினாடிகளில் 100 kmph வேகத்தை எட்டிவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஞ்ஜின் மற்றும் செயல்திறன்:


புதிய ஹுண்டாய் i20 ஆக்டிவின் பெட்ரோல் டிரிம்களில் 1197 cc திறன் கொண்ட 1.2 லிட்டர் கப்பா 5 இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகள் பொருத்தப்பட்டு, டபுள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் அடிப்படையிலான வால்வ் கான்பிகரேஷனில் இயங்குகிறது. இந்த பெட்ரோல் இஞ்ஜின், 6000 rpm என்ற அளவில் 81.8 bhp அதிகபட்ச சக்தி மற்றும் 4000 rpm என்ற அளவில் 114.7 Nm அதிகபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்ததாகும். மேலும், இந்த இஞ்ஜினை 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் சாதுர்யமாக இணைத்து, முன்புற சக்கரங்களுக்கு டார்க்கை செலுத்தும்படி செய்துள்ளனர். அதே நேரம், மற்ற அனைத்து டிரிம்களிலும் 1396 cc திறன் கொண்ட இரண்டாவது ஜெனரேஷன் 1.4 லிட்டர் இஞ்ஜின் இணைக்கப்பட்டு வருகிறது. இத்துடன் காமன் ரைல் அடிப்படையில் இயங்கும் டைரக்ட் இன்ஜெக்ஷன் சப்ளை அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், இந்த கார் சிறந்த எரிபொருள் சிக்கனத்தைத் தருகிறது. 4000 rpm என்ற அளவில் 88.7 bhp சக்தி மற்றும் 1500 rpm என்ற அளவில் 220 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதை 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸுடன் இணைத்துள்ளதால், சாலைகளில் இதன் செயல்திறன் சிறப்பாக உள்ளது.

மைலேஜ்:தற்போது, i20 ஆக்டிவ் இரண்டு விதமான இஞ்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு, 1.2 லிட்டர் இஞ்ஜின் சக்தி தருகிறது. கூடுதல் எரிபொருள் சிக்கனம் தருவதற்காக, இதை MPFI எரிபொருள் சப்ளை அமைப்புடன் இணைத்துள்ளனர். எனவே, பெட்ரோல் வெர்ஷன் அதிகபட்சமாக சுமார் 17.19 kmpl மைலேஜ் (ARAI சான்றளித்துள்ளது) தரும் என்று இந்நிறுவனம் உறுதி கூறுகிறது. அதே நேரம், இதன் டீசல் வெர்ஷன்களில் 1.4 லிட்டர் U2 CRDi இஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. நெரிசலான நகர சாலைகளில் குறைந்தபட்சம் 16 kmpl மைலேஜும், நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 21.19 kmpl மைலேஜும் இந்த இஞ்ஜின் தருகிறது.

ஹுண்டாய் i20 ஆக்டிவின் சக்தி:


இதற்கு முன்பு சொன்னது போலவே, எலைட் i20 ஹாட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருந்த இஞ்ஜின்களையே இந்நிறுவனம் இதிலும் பயன்படுத்தியுள்ளது. பெட்ரோல் ஆப்ஷனில் DOHC வால்வ் கான்ஃபிகரேஷன் அடிப்படையிலான 1.2 லிட்டர் 4 சிலிண்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 81.86 bhp சக்தி மற்றும் 114.7 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதன் டீசல் வெர்ஷன்களில் 1396 cc திறன் கொண்ட 1.4 லிட்டர் CRDi இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 88.76 bhp சக்தி மற்றும் வெறும் 1500 – 2750 rpm என்ற அளவில் 219.7 Nm டார்க்கையும் இந்த இஞ்ஜின் உற்பத்தி செய்கிறது.

ஸ்டீரியோ மற்றும் ஆக்ஸெசரீஸ்:FM பிளேயர், AUX-in மற்றும் USB இணைப்புகள் போன்றவற்றைக் கொண்ட உயர்தரமான 2-DIN ம்யூசிக் சிஸ்டம் அனைத்து டிரிம்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய i20 ஆக்டிவ் அடிப்படை வேரியண்ட்டில், நூற்றுக்கும் அதிகமான ஆடியோ ஃபைல்களைச் சேமித்து வைக்கும் 1 GB மெமரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், முன் மற்றும் பின்புறங்களில் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு முன்புற ட்வீட்டர்கள் ஆகியவை இணைக்கப்பட்டு, இதன் ஆடியோ சிஸ்டம் அற்புதமாக இயங்குகிறது. நடுத்தர மற்றும் உயர்தர i20 ஆக்டிவ் வேரியண்ட்களில் ஆடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைபேசி இணைப்புகள் ஆகிய வசதிகள் இடம்பெறுகின்றன. இவற்றின் உட்புறத்தில் உள்ள ஸ்டியரிங் வீல் மீது, ஆடியோ ஸ்விட்ச்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இது தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப காரின் வெளிப்புரத்தையும், உட்புறத்தையும் அலங்கரித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. உட்புற அமைப்பை ஸ்டைலாக மாற்றுவதற்கு லெதர் இருக்கை விரிப்புகள், ஃபுளோர் மேட்கள் மற்றும் வீடியோ ப்ளேபேக் மற்றும் நேவிகேஷன் அமைப்புகள் இணைந்த டச் ஸ்கிரீன் அமைப்பு போன்றவற்றை நீங்கள் கூடுதலாக இணைத்துக் கொள்ளலாம். இவை தவிர, வெளிப்புற அழகை நவீனப்படுத்த, நீங்கள் உங்கள் விருப்பத்திற்கேற்ற டீகால்களையும் ஒட்டிக் கொள்ளலாம்.

பிரேக் அமைப்பு மற்றும் கையாளும் விதம்:


புதிய ஹுண்டாய் i20 ஆக்டிவில் நம்பகமான பிரேக் அமைப்பு மற்றும் செயல்திறன் மிகுந்த சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை உள்ளன. இதன் முன்புற சக்கரங்கள் டிஸ்க் பிரேக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன; பின்புற சக்கரங்கள் ட்ரம் பிரேக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அடிப்படை டிரிம் தவிர மீதி அனைத்து டிரிம்களிலும் ஆன்டி லாக் பிரேகிங் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதால், வழுக்கும் சாலைகளிலும் ஸ்திரத்தன்மையுடன் பயணிக்க முடிகிறது. மற்றொருபுறம், இதன் முன்புற ஆக்ஸில் மேக் ஃபெர்சன் ஸ்ட்ரட் இணைக்கப்பட்டும், இதன் பின்புற ஆக்ஸில் டார்சன் பீம் வகை அமைப்புடன் இணைக்கப்பட்டும் வருகிறது. இது தவிர, இந்த இரண்டு ஆக்ஸில்களும் காயில் ஸ்பிரிங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், பிரேக் அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகின்றன. ஹுண்டாய் நிறுவனம், இதை அதிக செயல்திறன் மிக்க மோட்டார் ட்ரிவென் எலக்ட்ரிக் பவர் ஸ்டியரிங்குடன் இணைத்துள்ளதால், நீங்கள் நெரிசலான போக்குவரத்தையும் எளிதாகக் கையாண்டு சிரமில்லாமல் பயணம் செய்வீர்கள்.

பாதுகாப்பு அம்சங்கள்:விபத்து ஏற்படும் போது அடிபடும் பகுதிகளில், க்ரம்ப்பில் ஜோன்கள் மற்றும் இம்பாக்ட் ப்ரொடெக்க்ஷன் பீம்கள் போன்றவை கொண்ட வலுவான கட்டமைப்பின் உதவியுடன் i20 ஆக்டிவ் காம்பாக்ட் க்ராஸ் ஓவர் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் விபத்துகளிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர். இதன் அடிப்படை டிரிம்மில் சென்ட்ரல் லாக்கிங் வசதி, ஸ்மார்ட் பெடல், காலை/இரவுகளில் செயல்படும் உட்புற ரியர் வியூ மிரர், எஸ்கார்ட் அமைப்புடன் வரும் ஹெட் லாம்ப்கள், டூயல் ஹாரன் மற்றும் மடக்கும் வசதி கொண்ட சாவியுடன் வரும் கீலெஸ் என்ட்ரி வசதி என பல அம்சங்கள் இடம்பெறுகின்றன. கூடுதலாக, இதில் மேம்பட்ட இஞ்ஜின் இம்மொபிலைசர் பொருத்தப்பட்டுள்ளதால், தெரியாத நபர்கள் காருக்குள் வருவதும், திருட்டும் தவிர்க்கப்படுகிறது. இது தவிர, நடுத்தர டிரிம்களில் பின்புற டி-ஃபாகர், உட்புறத்தில் எலக்ட்ரோ-க்ரோமிக் ரியர் வியூ மிரர், இம்பாக்ட்டை உணரும் ஆட்டோ டோர் அன்-லாக் வசதி, முன்புற ஃபாக் விளக்குகள் மற்றும் ஓட்டுனருக்கான காற்றுப் பை என பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன. மேலும், இந்த வேரியண்ட்டில் ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் காமிராவுடன் வரும் எலக்ட்ரோக்ரோமிக் மிரரில் டிஸ்ப்ளே ஆகியவையும் இடம்பெறுகின்றன. உயர்தர வேரியண்ட்டில் முன்புறத்தில் இரட்டை காற்றுப் பைகள், ஆட்டோமேடிக் ஹெட் லாம்ப்கள், கிளட்ச் லாக் மற்றும் ஸ்மார்ட் கீ கொண்ட கீலெஸ் என்ட்ரி அமைப்பு ஆகியவையும் இடம்பெறுகின்றன.

சக்கரங்கள்:I20 அடிப்படை வேரியண்ட்டில், ஹுண்டாய் நிறுவனம் வலுவான 15 அங்குல அளவிலான க்ளீன் சில்வர் அலாய் சக்கரங்களை கட்டாயமாக்கியுள்ளது. இதன் ரிம்கள் மீது 185/65 R15 அளவிலான ட்யூப்லெஸ் டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் செல்லும் போது இவை இந்த காரின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கின்றன. அதே நேரம், இதன் நடுத்தர மற்றும் உயர்தர ஆப்ஷன்களில் 16 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரங்கள் காட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதன் ரிம்கள் மீது பொருத்தப்பட்டுள்ள அதிக செயல்திறன் வாய்ந்த ட்யூப்லெஸ் ரேடியல்கள், எப்படிப்பட்ட சாலைகளிலும் வழுக்காமல், ஸ்திரத்தன்மையுடன் பயணிக்க உதவுகின்றன.

சாதகங்கள்:1. ஸ்டியரிங் வீல் சென்சார்கள் கொண்ட புதுமையான பார்க்கிங் அஸிஸ்டன்ஸ் பேக்கேஜ்
2. 4 மீட்டருக்கும் குறைவான க்ராஸ் ஓவர் பிரிவில் இதன் போட்டியாளர்களுக்கு இணையான சொகுசு வசதிகள் இதில் இடம்பெறுகின்றன.
3. அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ் இதற்கு மிகப் பெரிய பலம்
4. இதை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் அற்புதமான வெளிப்புறத் தோற்றம்
5. டீசல் இஞ்ஜினின் சக்தி மற்றும் ஆக்ஸெலரேஷன் ஆகியவை பாராட்டும் வகையில் உள்ளன.

பாதகங்கள்:1. உட்புறத்தில் அக்வா புளு வண்ணம் தரமான தோற்றத்தைத் தரவில்லை.
2. புரொஜெக்டர் ஹெட் லாம்ப்கள் அனைத்து வேரியண்ட்களிலும் கட்டாயமாக்கப்பட்டிருக்கலாம்
3. முக்கிய பாதுகாப்பு அம்சமான EBD வசதி இல்லை
4. விலை சற்றே அதிகமாக உள்ளது.
5. எதிர்பார்த்தது போல எரிபொருள் சிக்கனம் இல்லை.