ஹூண்டாய் ஐ10

` 4.5 - 5.3 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹுண்டாய் i10


ஹைலைட்ஸ்ஜூலை 21, 2015: ஆச்சர்யம் ஆனால் உண்மை. ஹுண்டாய் நிறுவனத்தின் மழைக்கால ஸ்ப்ளாஷ் ஆஃபரில், i10 மாடலின் அடக்க விலையில் இருந்து, ரூ. 42,500 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நம்பமுடியாத விதத்தில், இதன் பெட்ரோல் வேரியண்ட்டின் அடக்க விலையில் இருந்து ரூ. 37,500 தள்ளுபடியும், இதன் CNG வேரியண்ட்டின் அடக்க விலையில் இருந்து ரூ. 42,500 தள்ளுபடியும் தற்போது நீங்கள் பெறலாம். ஜூலை மாதத்தின் இறுதி வரை மட்டுமே, இந்த மழைக்கால அதிரடி தள்ளுபடி செல்லுபடியாகும். இத்தகைய தள்ளுபடி மூலம், i10 மாடலை மேலும் சிறந்த போட்டியாளராக மாற்றி அமைத்து, அதன் போட்டியாளர்களுடன் நேருக்கு நேர் நின்று மோதி எளிதாக வெற்றி பெறுவதே, இந்நிறுவனத்தின் திட்டமாகும். இந்திய சந்தையில், கிராண்ட் i10 விற்பனை சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், ஹுண்டாய் நிறுவனம் இதற்கு முந்தய ஜெனரேஷனான i10 மாடலையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது பெருமைக்குரிய விஷயம்.
ஹுண்டாய் i10 எனும் இந்த பிரிமியம் ஹாட்ச்பேக் கார், சான்ட்ரோ மற்றும் தற்போது வெளிவந்துள்ள கெட்ஸ் ஆகிய கார்களுக்கு நடுவே உள்ளது. இந்திய சந்தையில் ஹுண்டாய் i10 காரின் விற்பனை எண்ணிக்கையைக் கணக்கிட்டால், இது மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு என்பது நாம் அனைவருக்கும் தெரியவரும். இதனாலேயே, இந்த பிரிவில் ஒரு தன்னிகரில்லா மாடலாக பல காலங்களாக வெற்றி வாகை சூடிக் கொண்டிருக்கிறது. நகரத்திற்குள் பவனி வரும் சிறந்த கச்சிதமான கார்களுக்கு மத்தியில் ஹுண்டாய் i10 மாடலுக்கென்று ஒரு தனி இடம் உள்ளது. எளிதாக கையாள முடிவதாலும், சிறந்த இஞ்ஜின் அமைப்பினாலும், இது இந்தியர்களின் மனதைக் கவர்ந்த காராகத் திகழ்கிறது. அது மட்டுமல்ல, எரிபொருள் சிக்கனம் என்ற அம்சத்திலும், இது தனது முத்திரையைப் பதிக்கிறது. இதன் LPG வேரியண்ட், உங்களது பணத்திற்கோ, கிரெடிட் கார்டிற்கோ பங்கம் வைக்காமல், சிறப்பாக ஓடும் காம்பாக்ட் ஹாட்ச் பேக் என்ற நற்பெயரோடு வலம் வருகிறது.

சிறப்பம்சங்கள்:


  Table 1

ஹுண்டாய் i10 விமர்சனம்


கண்ணோட்டம்


ஹுண்டாய் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் எப்போதுமே அதன் புதிய கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் திறன் காரணமாக அதன் போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்கிறது. ஹுண்டாய் நிறுவனம் பல சர்வதேச கார் சந்தைகளில் பங்குபெற்றாலும், இந்திய வாகன சந்தையில் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக சிறந்து விளங்குகிறது என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். வாகன தயாரிப்பில் பல வருடங்களாக வெற்றி வாகை சூடிக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு, உலகம் முழுவதும் ஏராளமான திருப்தியான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட உயரிய நிறுவனத்தின் வெளியீடான ஹுண்டாய் i10 மாடல் அறிமுகம் ஆனா நாளில் இருந்து இன்று வரை, வெற்றிகரமாகவும், விற்பனையில் தொய்வில்லாமலும் இருக்கிறது என்றால் அது ஆச்சர்யம் இல்லை. சீரான முறையில் இந்த கார் விற்பனையாவதால் பெரிய வரவேற்பைப் பெற்று, இன்றும் பலர் புதிய வாடிக்கையாளர்களின் பட்டியலில் இணைகிறார்கள். இது 4 பெட்ரோல் வேரியண்ட்களிலும், ஒரு LPG டிரிம்மிலும் வருகிறது. பராமரிப்பு வேலை மற்றும் அதிக பராமரிப்பு செலவு இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இதன் LPG வேரியண்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம். பாடி நிறத்திலேயே வரும் பம்பர்கள், கதவு கைப்பிடிகள் மற்றும் வெளிப்புறக் கண்ணாடிகள் போன்றவை இந்த காருக்கு மதிப்பான தோற்றத்தைப் பெற்றுத் தருகின்றன. பல்வேறு விதமான பயனுள்ள அமைப்புகளும் சிறந்த முறையில் பொருத்தப்பட்டு, இதன் உட்புற தோற்றம் வெளிப்புறத் தோற்றத்திற்கு இணையாக அற்புதமாக உள்ளன. உட்புற அமைப்புகளை வேறுபடுத்திக் காட்டுவதற்கு, பீஜ் மற்றும் ப்ரௌன் என்ற இரண்டு விதமான நிறங்களை உபயோகப்படுத்தி உள்ளனர். ஆங்காங்கே நீல வண்ணத்தில் மிளிரும் வெளிச்சங்கள், இதன் உட்புற அமைப்பிற்கு தனித்துவமான அழகைப் பெற்றுத் தருகின்றன. உலோகத்தால் ஆன சென்டர் ஃபேஷியா மொத்த உட்புற அலங்கரிப்புகளுக்கும் பேரழகைப் பெற்றுத் தருகிறது. சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ள 4 ஸ்பீக்கர்களைக் கொண்ட, பல பிளேயர்களை சப்போர்ட் செய்யும், அருமையான பொழுதுப்போக்கு அம்சமாக ஒரு ஆடியோ சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, கேபின் பகுதியில் இதமான குளிர் பரவ, டாஷ்போர்டு மீது பொருத்தப்பட்டுள்ள குளிர் சாதன துளைகள் உதவுகின்றன. பயணிகளின் பயன்பாட்டிற்காகவே, சிறிய பொருட்களை வைத்துக் கொள்வதற்கான பல சிறிய இடைவெளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்புற கதவுகளில் பாக்கெட்கள், அற்புதமான முன்புற கன்சோல் பகுதி, சென்டர் கன்சோல் ட்ரே மற்றும் பின்புற பார்செல் ட்ரே என பல இடங்களில், உங்களது சிறிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். பயணிகள் அமர்வதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்கள் கொண்டு செல்லும் பொருட்களை வைப்பதற்கு 225 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட பெரிய பூட் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் i10 மாடலின் செயல்திறன் வெகுவான பாராட்டைப் பெறுகிறது. அது மட்டுமல்ல, எரிபொருள் சிக்கனத்திற்கும் பேர் போன இந்த காரின் பெட்ரோல் வெர்ஷன் 19.8 kmpl மைலேஜும், இதன் LPG டிரிம் 19.2 kmpl மைலேஜும் தருகிறது. பல மணி நேரம் பயணிப்பதற்கு இதமான வகையில், பயணிகளுக்காக பல சொகுசு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் இருக்கைகளில் இண்டெலிஜெண்ட் ரிலாக்ஸ் சிஸ்டம் இடம்பெறுகிறது. அது மட்டுமல்ல, இதில் i-ரிலாக்ஸ் கியர் கன்சோலும் சென்ட்ரல் கன்சோலில் இடம்பெறுகிறது என்பது கூடுதல் சிறப்பு. எளிதாக வண்டியைக் கையாள்வதற்காக இணைக்கப்பட்டுள்ள பவர் ஸ்டியரிங் அமைப்பில், கூடுதலாக டில்ட் அட்ஜஸ்டபில் வசதியும் பொருத்தப்பட்டுள்ளதால், ஓட்டுனர் தனித்து இயங்கிக் கொண்டிருக்காமல், பயண குதூகலங்களை அனுபவித்துக் கொண்டே மகிழ்ச்சியாக வண்டி ஓட்ட முடிகிறது. அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோஸ் அமைப்பு பொருத்தப்பட்டு, ஓட்டுனர் அருகே உள்ள ஜன்னலில் மட்டும் ஆட்டோ டவுன் வசதி ஸ்விட்ச் பொருத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, அந்த ஸ்விட்ச் மீது வெளிச்சம் பாய்ந்து அந்த இடம் மிளிர்கிறது. ஹோண்டா நிறுவனம், ஓட்டுனருக்காகவே சிறப்பான முறையில் கூடுதல் வசதிகளை இணைத்துள்ளது. அதாவது, வெளிப்புற ரியர் வியூ மிரர்களை உள்ளிருந்தே அட்ஜஸ்ட் செய்ய முடியும். மேலும், எரிபொருள் டாங்க்கின் மூடியை மின்னியக்கம் மூலம், உள்ளிருந்தே திறந்து விடலாம் என்பதால், ஓட்டுனர் ஒவ்வொரு முறையும் எழுந்து வெளியே வர வேண்டியதில்லை. முன்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணியருக்கு முன்பு உள்ள வைசரில், முகம் பார்க்கும் கண்ணாடியும் பொருத்தப்பட்டுள்ளதை சொகுசு வசதி என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது. அனைத்து வேரியண்ட்களிலும் ஒரு இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. அதில் கியர் மாற்றுவதைக் காண்பிக்கும் கருவி, டாக்கோ மீட்டர், டிஜிட்டல் ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், டிஜிட்டல் கடிகாரம் மற்றும் எரிபொருள் குறைவதைக் காண்பிக்கும் கருவி என பல பயனுள்ள கருவிகள், ஓட்டுனருக்கு உதவும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்டுள்ள டீலர்களிடம் இருந்து புதிய ஹுண்டாய் i10 வாங்கும் போது, உங்களுக்குத் தேவையான கூடுதல் ஆக்செசரிகளை கூடுதல் பணம் செலுத்தி வாங்கி, உங்கள் காரை அலங்கரித்துக் கொள்ளலாம். பியூர் ஒயிட், வைன் ரெட், ஸ்லீக் சில்வர், ஸ்டார் டஸ்ட் மற்றும் சில்கி பீஜ் போன்ற இதமான வண்ணங்களில் வரும் இந்த கார் அழகாகவும் காண்போரைக் கவரும் விதத்திலும் உள்ளது. இதன் வீல் பேஸ் சற்றே பெரிதாக இருப்பதால், உள்ளே அமர்ந்து பயணம் செய்பவர்களுக்குத் தேவையான இடவசதி கிடைக்கிறது. இதன் பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளும் சிறப்பான முறையில் செயல்படும் விதத்திலும், நவீனமாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன்புற மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் மற்றும் ட்ரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதே நேரம், இதன் சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் என்றென்றும் புகழ் வாய்ந்த மாக் ஃபெர்சன் ஸ்ட்ரட்டும், பின்புறத்தில் டார்சன் பீம் ஆக்ஸிலும் பொருத்தப்பட்டு, அருமையாக செயல்படுகின்றன. அனைத்து சக்கரங்களும் கூடுதலாக காயில் ஸ்பிரிங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளில் பயணிக்கும் போதும் அதிர்வில்லாமல், ஸ்திரத்தன்மையுடன் பயணிக்க முடிகிறது. ஹுண்டாய் நிறுவனம், பராமரிப்பு சேவைகளுக்கும் பெயர் போன நிறுவனம் ஆகும். ஹுண்டாய் i10 காரை வாங்கிய பின் ஒரு காலவரம்பிற்கு அனைத்து சேவை மற்றும் பராமரிப்புகளுக்கும் நிலையான உத்திரவாதம் கொடுக்கப்படுகிறது. எனவே, நீங்கள் பராமரிப்பைப் பற்றிய கவலையை விட்டு விடலாம். மேலும், கூடுதல் பணம் செலுத்தி இந்த வாரண்டி காலத்தை ஒரு சில வருடங்கள் நீடித்துக் கொள்ளலாம். நீங்கள் நேரடியாக டீலரிடமே கூடுதல் பணத்தைச் செலுத்தி வாரண்டியை நீடித்துக் கொள்ளலாம்.

வெளிப்புற அமைப்புகள்:அறிமுகம் ஆன வேளையில், ஹுண்டாய் i10 கார் அதன் போட்டியாளர்களைப் போல கவர்ச்சிகரமாக இல்லை. எனினும், அடுத்தடுத்து வந்த இதன் மேம்படுத்தப்பட்ட மாடல்களில் பல மாற்றங்கள் செய்து ஹுண்டாய் நிறுவனம் இதன் வசீகரத்தை அதிகப்படுத்திவிட்டது. தற்போது, ஸ்மார்ட்டான கார்களின் வரிசையில் ஹுண்டாய் i10 மாடலும் நிற்கிறது. இதன் முன்பகுதியில் உள்ள பெரிய ஹெட் லாம்ப்கள், இருளில் வண்டி ஓட்டும் போது சாலைகள் தெளிவாகத் தெரிய உதவுகின்றன. ஹெட் லாம்ப் க்லஸ்டர் பெரிய அளவில் வருவதால், கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. புதிய ஃப்ளூயிடிக் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள பாடி வடிவத்துடன் வரும் i10 மாடலுக்கு, முன்புறத்தில் உள்ள அருங்கோண வடிவத்தில் உள்ள கிரில் மற்றும் பம்பர் ஆகியவை இணைந்து புதிய தோற்றத்தைத் தருகின்றன. அது மட்டுமல்ல, இதன் பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளிலும் தெளிவான மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. ஸ்டைலான சக்கரங்கள், மறுவடிவமைக்கப்பட்டுள்ள பின்புற விளக்குகள், மற்றும் பம்பர் என பல புதிய அம்சங்களால், புதிய i10 நவீனமாகவும், சாலைகளில் கடந்து செல்வோர் அனைவரும் திரும்பிப் பார்க்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள டெய்ல் லாம்ப் க்லஸ்டரில் ஏராளமான பயனுள்ள விளக்குகள் இடம்பெறுகின்றன. அடுக்கடுக்காக பொருத்தப்பட்டுள்ள விளக்குகளைக் கொண்ட டெய்ல் லாம்ப் க்லஸ்டர், இதன் பின்புற தோற்றத்திற்கு பொலிவு தருகின்றது. அது மட்டுமல்ல, வெளிப்புறத்தில் இரண்டு பக்கவாட்டுப் பகுதிகளிலும் ரியர் வியூ மிரர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நடுத்தர மற்றும் உயர்தர டிரிம்களில் உள்ள வெளிப்புற கண்ணாடிகளை, பாடி நிறத்திலேயே வண்ணம் தீட்டி அழகு படுத்தி உள்ளனர். முன்புறம் உள்ள ரேடியேட்டர் கிரில் மிகப் பெரிதாக இருப்பதால், இதன் முகப்பு அகலமாகத் தோற்றம் அளிக்கிறது. இதனை மேலும் பிரகாசமாக்க, இரட்டை வண்ண க்ரோமிய முலாம் பூசப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் உயர்தர வேரியண்ட்களில் பாடி வண்ணத்திலேயே பம்பர்கள் உள்ளதால் மொத்த அமைப்பிற்கும் சீரான தோற்றம் கிடைக்கிறது. காரின் மேல் பகுதியில் ஒரு ஆன்டெனா பொருத்தப்பட்டு, உள்ளிருக்கும் ரேடியோவிற்கு சிக்னல் பெற்றுத் தருகிறது. வெயிஸ்ட்லைன் மோல்டிங்க் அமைப்பு i10 மாடலின் பக்கவாட்டுத் தோற்றத்தை அழகு படுத்துகிறது. அது மட்டுமல்ல, உயர்தர டிரிம்களில் உள்ள பாடி நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்ட கதவு கைப்பிடிகள் அசத்துகின்றன. பூட் பகுதி கதவும் கூட பாடி நிற பெயிண்ட்டில், இந்நிறுவனத்தின் சின்னத்தைச் சுமந்து, பின் பகுதிக்கு ஸ்மார்ட்டான தோற்றத்தைப் பெற்றுத்தருகிறது. அநேகமாக அனைத்து டிரிம்களிலும், நவீனமான ஃபுல் வீல் கவர்கள் இணைக்கப்பட்டு, ஒட்டுமொத்த வடிவத்திற்கும் கூடுதல் அழகு சேர்க்கப்பட்டுள்ளது. 1.1 iTech SE டிரிம்மில் மட்டும் கூடுதலான பாடி கிராஃபிக்ஸ் மற்றும் சிறப்பு அம்சங்கள் வெளிப்புறத்தில் இடம்பெற்று, அவற்றை வித்தியாசப்படுத்திக் காண்பிக்கின்றன. உயர்தர வெர்ஷன்களில் மட்டும் பின்புற ஸ்பாய்லர் மற்றும் பிரேக் லாம்ப் பொருத்தப்பட்டு, நவநாகரீக தோற்றத்தில் வலம் வருகின்றன. ஒரு சில உயர்தர வெர்ஷன்களில் மட்டும் ரியர் வியூ மிரர்களின் மீது இன்டிகேட்டர்களும் இணைக்கப்பட்டுள்ளன.

வெளிப்புற அளவுகள்:


ஹுண்டாய் i10 மாடலின் மொத்த நீளம் 3585 மிமீ என்ற அளவிலும், மொத்த அகலம் 1595 மிமீ என்ற அளவிலும், 1550 மிமீ என்ற உயரத்திலும் வருகிறது. இதன் வீல் பேஸ் 2380 மிமீ என்ற அளவில் உள்ளதால், இதன் உட்புறம் மிகவும் விசாலமாக இருப்பதால், பயணிகள் சவுகர்யமாக அமர்ந்து பயணம் செய்ய முடிகிறது. 165 மிமீ என்ற அளவு கிரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்ற இந்த காரின் ஃப்ரண்ட் ட்ராக் 1400 மிமீ என்ற அளவும், அதன் பின்புற ட்ராக் 1385 மிமீ என்ற அளவும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புற அமைப்புகள்:ஆசிரியர் குறிப்பு: புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள i10 தோற்றத்தில் அருமையாக இருப்பது போலவே, பயணம் செய்வதற்கும் அற்புதமாக உள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள சொகுசு வசதிகளும் இதம் தருவனவாக உள்ளன. இதில் 4 நபர்கள் சவுகர்யமாக அமர்ந்து பயணிக்கலாம்; ஐந்தாவது நபரும் அமரலாம், ஆனால், சற்றே இடித்துக் கொண்டு அமர வேண்டும்.
கேபின் பகுதியில் உள்ள தாராளமான இடவசதி மற்றும் தரமான பொருட்கள் ஆகியவை ஹுண்டாய் i10 காரின் பலங்களில் ஒன்றாகும். செவ்ரோலெட் பீட் மற்றும் மாருதி ரிட்ஸ் போன்ற கார்களின் வீல் பேஸை விட இதில் அதிகமாக உள்ளதால், உட்புற அமைப்பு விசாலமாக உள்ளது. உயரமானவர்கள் மற்றும் 3 நடுத்தர அளவிலான நபர்கள் i10 காரின் பின்புறத்தில் அமர்ந்து பயணிக்கலாம். உட்புற அமைப்புகளைத் துல்லியமாக வடிவமைக்க இந்நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் அனைத்தும் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. பட்டன்கள் மற்றும் கன்சோல் பகுதி முழுவதும் நீல நிறத்தில் ஒளியூட்டப்பட்டுள்ளதால், நமக்கு ஒரு நவீன இசைக் கச்சேரியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. i10 மாடலின் 1.1 iTech SE ட்ரிம்மில் உள்ள இருக்கைகள் சிவப்பு மாற்று பீஜ் வண்ணத்தில் வருவது, பந்தய கார்களை நினைவு படுத்துகின்றன. ஹுண்டாய் நிறுவனம், நவீன தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இரட்டை நிறங்களை பயன்படுத்தவில்லை, மாறாக உட்புற அமைப்புகளை பிரித்துக் காட்டுவதற்கும் இது உபயோகப்படுகிறது. கேபினுக்குள், முன்புற விதானத்தின் மேல் பிரகாசமாக எரியும் விளக்கு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் புத்தகம் வாசிக்க மற்றும் வேறு சில பயன்பாடுகளுக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். சென்டர் கன்சோல் பகுதியில் உள்ள ட்ரே நமக்கு பல விதங்களில் பயன்படுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர் அமைப்பிலும் நீங்கள் ஏராளமான இன்டிகேட்டர்களைப் பார்க்க முடியும். கியர் மாற்றுவதை உணர்த்தும் கருவி, டாக்கோ மீட்டர், டிஜிட்டல் ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் எரிபொருள் குறைவதை உணர்த்தும் விளக்கு என பலவிதமான விவரங்களைக் காட்டும் கருவிகள் மூலம் ஓட்டுனர் பயனடைகிறார். இவை தவிர, உயர்தர வேரியண்ட்டில் டிஜிட்டல் கடிகாரமும் ஆடியோ டிஸ்ப்ளேயில் பொருத்தப்பட்டுள்ளது. டாஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ள சென்டர் ஃபேஷியாவின் விளிம்பில் மெட்டல் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளதால், உட்புற அமைப்பின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நடு மாற்று உயர்தர டிரிம்களில் கூடுதல் வேலைப்பாடுகளை நீங்கள் காணலாம். இதே விலையில் உள்ள ஏனைய கார்களுடன் ஒப்பிடும் போது, இதன் சென்ட்ரல் கன்சோல் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் க்லஸ்டர் ஆகியவை சிறந்தமுறையில் உள்ளன. உயர்தர வேரியண்ட்களில் ஸ்டியரிங் வீல் மீது ஆடியோ சிஸ்ட்டத்திற்கான கட்டுப்பட்டுக் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. குளிர் சாதன கருவிக்கான ரோட்டரி நாப்கள் பார்ப்பதற்கும் இயக்குவதற்கும் அருமையாக உள்ளன. முன்புற கதவுகளில் பாக்கெட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மீது, சிறிய பொருட்கள் அனைத்தையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்ல, இதில் உள்ள அழகிய தோற்றம் கொண்ட டீலக்ஸ் ஃபுளோர் கன்சோல் பகுதியில் நீங்கள் சிறிய பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். கதவு மீது உள்ள ஆர்ம் ரெஸ்ட்கள் மீது பயணிகள் தங்கள் கைகளை வைத்துக் கொண்டு சுகமாக பயணிக்கலாம். பெரிய அளவில் வரும் கதவு மீது உள்ள ஆர்ம் ரெஸ்ட்கள், முன் மற்றும் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல ஹேண்ட் பிரேக்கிற்கு முன் மற்றும் பின்புறத்தில் இரண்டு கப் ஹோல்டர்கள் மற்றும் சிறிய இடைவெளிகள் உள்ளன. உயர்தர வேரியண்ட்டில், உட்புற கதவு கைப்பிடிகள் க்ரோம் முலாம் பூசப்பட்டு வருகின்றன. இவை கதவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உட்புற அமைப்பிற்கே வசீகரமான தோற்றத்தைத் தருவனவாக உள்ளன. கதவு கைப்பிடிகள் மட்டுமல்ல, AC துளைகள் மீதும் க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, இதற்கு உயர்தர தோற்றத்தைத் தருகின்றன. பின்புற பார்சல் பகுதியிலும், நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பயன்படுத்தும் பொருட்களை வைத்துக் கொள்ளலாம். 225 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் பகுதியிலும் தேவையான பொருட்களை வைத்துக் கொள்ளும் இடவசதி உள்ளது. மொத்தத்தில், உட்புற அமைப்பின் தரம் மற்றும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக்கின் தரம் என அனைத்தும் ஹுண்டாய்யின் தரத்தை மேம்படுத்துகின்றன.

உட்புற சொகுசு வசதிகள்:முன்புற இருக்கைகளுக்கென்று பிரத்தியேகமாக i-ரிலாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, i-ரிலாக்ஸ் அமைப்பு இதன் கியர் கன்சோலிலும் இணைக்கப்பட்டுள்ளதால், கியரை இயக்குவது எளிதாகவும் உராய்வின்றியும் உள்ளது. கேபின் பகுதியின் தட்பவெட்பத்தை இதமாக்குவதற்காக, குளிர் சாதன கருவி பொருத்தப்பட்டுள்ளது. உங்களுக்குத் தேவையென்றால், இதனுடன் நீங்கள் ஹீடிங் வசதியையும் இணைத்துக் கொள்ளலாம். அனைத்து டிரிம்களிலும் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங் ஓட்டுனர்களுக்கான வரப் பிரசாதம் என்றே கூற வேண்டும். முக்கியமாக, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வேளைகளில் ஓட்டுனருக்கு இது மிகவும் உதவியாக உள்ளது. ஓட்டுனரின் வேலையை மேலும் எளிதாக்க, எரிபொருள் டாங்க்கை திறப்பதற்கும் ஒரு ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் இரண்டு புறங்களிலும் பொருத்தப்பட்டுள்ள ரியர் வியூ மிரர்களை மின்னியக்கம் மூலம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இவை மட்டுமல்லாது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டுவதற்காக நடுத்தர மற்றும் உயர்தர ட்ரிம்களில் பல கூடுதல் சிறப்பம்சங்களை ஹுண்டாய் நிறுவனம் இணைத்துள்ளது. இவைகளின் அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோஸ் வசதி உள்ளது. ஓட்டுனர் பக்கம் உள்ள ஜன்னலில் மட்டும் ஒன் டச் ஆட்டோமேடிக் அப்/டவுன் வசதி இடம்பெறுகிறது. இதன் ஸ்விட்ச்சும் கூடுதலாக ஒளிரூட்டப்படுவதால், பயன்படுத்துவதும் எளிதாக உள்ளது. ஓட்டுனர் மற்றும் முன்புற பயணி என இருவருக்கும் சன் வைசர்கள் இணைக்கப்பட்டுள்ளன. முன்புற பயணிக்கான சன் வைசரில் முகம் பார்க்கும் கண்ணாடியும் பொருத்தப்பட்டுள்ளது. உயர்தர வேரியண்ட்களில் மட்டும் கூடுதலாக சாய்க்கும் வசதி கொண்ட ஸ்டியரிங் வீல் அமைக்கப்பட்டுள்ளதால், ஓட்டுவது எளிதாக உள்ளது. இந்த டிரிம்மில் 2 DIN ம்யூசிக் சிஸ்டமும் இணைக்கப்பட்டிருப்பது, பயணிகளுக்கு குதூகலத்தைத் தருகிறது. இதில் நீங்கள் CD மற்றும் MP3 ஃபைல்களை இயக்கலாம். மேலும், இதில் ஒரு Aux-in மற்றும் USB போர்ட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதால் கூடுதல் நன்மை பயக்கிறது. மொத்தம் 4 ஸ்பீக்கர்கள் கேபின் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டை முன்புறத்திலும், இரண்டை பின்புறத்திலும் பொருத்தியுள்ளனர். இதன் மூலம், கேபின் முழுவதும் ஒலி சீராகப் பரவி சிறப்பாக இயங்குகின்றன. மேலும், 1.1 iTech SE வேரியண்ட்டில், புளுடூத் இணைப்பு மற்றும் ஸ்டியரிங் மீது பொருத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் கருவிகள் என பல வசதிகள் ஓட்டுனருக்கு பக்க பலமாக உள்ளன. அது மட்டுமல்ல, இதில் உள்ள ரியர் வியூ காமிரா உட்புறம் இடம்பெறும் ரியர் வியூ மிரருடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறிய இடத்தில் கச்சிதமாக பார்க் செய்வதற்கும் மற்றும் பலவற்றிற்கும் இது மிகுந்த உதவியாக உள்ளது.

உட்புற அமைப்பின் அளவுகள்:


ஹுண்டாய் i10 எரிபொருள் டாங்கின் கொள்ளளவு சுமார் 35 லிட்டர் ஆகும். முன்புற கேபின் பகுதியில் ஹெட் ஸ்பேஸ் அளவு 990 மிமீ ஆகவும், பின்புறத்தில் அதுவே 940 மிமீ ஆகவும் உள்ளது. பின்புறம், கால்கள் வைக்கும் இடமும் வசதியாகவே உள்ளது, ஏனெனில், குறைந்தபட்சம் 115 மிமீ மற்றும் அதிகபட்சம் 1190 மிமீ என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் முழங்கால்கள் வைக்கும் இடமும் குறைந்தபட்சம் சுமார் 640 மிமீ என்ற அளவும், அதிகபட்சமாக 819 மிமீ என்ற அளவும் உள்ளது. தோள்பட்டைகள் உராயாமல் பயணிக்கும் விதத்தில், அதன் அகலம் 1225 மிமீ என்ற அளவில் உள்ளது. பூட் பகுதியில் ஏராளமான பைகளை வைத்துக் கொள்வதற்கு வசதியாக, இதில் 225 லிட்டர்கள் கொள்ளளவு இடம் உள்ளது.

ஆக்ஸெலரேஷன் மற்றும் பிக்அப்ஆசிரியர் குறிப்பு: ஹாட்ச்பேக் பிரிவில் i10 மாடலின் இஞ்ஜின் திறன் சற்றே குறைந்ததாக இருந்தாலும், இதன் ஆக்ஸெலரேஷன் சிறப்பாக உள்ளது.
I10 இஞ்ஜினுடன் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இஞ்ஜின் 1086 cc திறனுடன் வருகிறது. ஸ்டார்ட் செய்த 14.3 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தைத் தொட்டு விடுகிறது. i10 இஞ்ஜின் அதிகபட்சமாக சுமார் 165 kmph வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

இஞ்ஜின் மற்றும் செயல்திறன்:ஆசிரியர் குறிப்பு: i10 மாடலில் தற்போது 1.1 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டு வருகிறது. இது மிகவும் தரமான, சிறந்த செயல்திறன் மிகுந்த மற்றும் வேகமாக செயலாற்றும் திறன் வாய்ந்த இஞ்ஜினாகும். கொரிய கார் தயாரிப்பாளரான ஹுண்டாய் நிறுவனத்தின் மிகச் சிறந்த, பழமை வாய்ந்த இஞ்ஜின்களில் இதுவும் ஒன்றாகும்.
i10 சீரீஸில் 1086 cc திறன் வாய்ந்த 1.1. லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5500 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 68.1 bhp சக்தி மற்றும் 4500 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 99.04 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. VTVT தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்த iRDE இஞ்ஜினில் 4 சிலிண்டர்கள் மற்றும் 12 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இது ஒரு சிங்கிள் ஓவர்ஹெட் கேம்ஷாஃப்ட் வால்வ் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வெர்ஷன் தவிர, இதில் ஒரு LPG ஆப்ஷனும் உள்ளது. உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் உங்களுக்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். LPG டிரிம் மிகச் சிறந்த எரிபொருள் திறனைத் தருவதோடு, பராமரிப்பு செலவும் மிகக் குறைந்த அளவே வருவதால் பட்ஜெட் பத்மநாபன்களை இது ஈர்க்கிறது. இதன் LPG டிரிம்களில் 19.2 kmpl மைலேஜும், பெட்ரோல் வேரியண்ட்களில் 19.8 kmpl மைலேஜும் கிடைக்கிறது. மேலும், இந்த இஞ்ஜின் உடனுக்குடன் செயல்படக் கூடிய தன்மை உடையது என்பதால், குறுகலான ரோடுகளையும் போக்குவரத்து நெரிசல்களையும் எளிதாக கடந்து செல்ல முடிகிறது. குளிர் சாதன கருவி முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் இதன் இஞ்ஜின் திறன் குறைவதில்லை என்பது இதன் சிறப்பு.

மைலேஜ்:ஆசிரியர் குறிப்பு: ஹுண்டாய் i10 மாடலில் உள்ள இரண்டு இஞ்ஜின்களும் செயல்திறன் மிகுந்தவை. தற்போது, 1.1 லிட்டர் இஞ்ஜின் மட்டுமே இணைக்கப்பட்டு வருகிறது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் வருவதில்லை.
அனைத்து வேரியண்ட்களிலும் 1.1 லிட்டர் iRDE2 பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஹுண்டாய் i10 இஞ்ஜின், மல்டி பாயிண்ட் இன்ஜெக்ஷன் அடிப்படையிலான எரிபொருள் சப்ளை அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. நகர சாலைகளில் 14 kmpl என்ற அளவு மைலேஜும், நெடுஞ்சாலைகளில் 19.8 kmpl என்ற அளவு மைலேஜும் தருகிறது.

ஹுண்டாய் i10 மாடலின் சக்திஆசிரியர் குறிப்பு: ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. ஆனால், ஏட்டில் எழுதப்பட்டுள்ள 1.1 லிட்டர் இஞ்ஜினின் உற்பத்தி திறன், உண்மையிலும் உண்மையாக உள்ளது.
I10 சீரீஸில் உள்ள இஞ்ஜினுடன், 4 சிலிண்டர்கள் மற்றும் 12 வால்வுகள் இணைக்கப்பட்டு, சிங்கிள் ஓவர்ஹெட் கேம் ஷாஃப்ட் வால்வ் அமைப்பின் அடிப்படையில் இயங்குகிறது. 1.1 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 5500 rpm என்ற அளவில் அதிகபட்ச 68.05 bhp சக்தி மற்றும் 4500 rpm என்ற அளவில் அதிகபட்சமாக 99.04 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

ஸ்டீரியோ மற்றும் ஆக்செசசரீஸ்:ஆசிரியர் குறிப்பு: i10 கேபின் பகுதியில் ம்யூசிக் சிஸ்டம், புளு டூத் இணைப்பு, ஸ்டியரிங் வீல் மீது ஆடியோ சிஸ்டத்துக்கான கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் மிரர் மீது டெமிஸ்டர் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது.
ஹுண்டாய் i10 மாடலின் உயர்தர வெர்ஷனில் CD மற்றும் MP3 பிளேயர்கள் கொண்ட 2-DIN ஆடியோ சிஸ்டம் இணைக்கப்பட்டு வருகின்றது. இதில் Aux-in மற்றும் USB போர்ட்டும் இடம்பெறுகின்றன. இதில் உள்ள 4 ஸ்பீக்கர்களும், பயணிகள் அனைவருக்கும் சிறந்த விதத்தில் கேட்கும் விதத்தில், சரியான இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. 1.1 iTech SE டிரிம்மில் புளு டூத் இணைப்பு மற்றும் இவற்றின் கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் ஸ்டியரிங் வீல் மீது பொருத்தப்பட்டுள்ளன. மற்ற வேரியண்ட்களில் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட ம்யூசிக் சிஸ்டம் பொருத்தப்படவில்லை என்றாலும், ஒரு ஆடியோ யூனிட்டை இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பல ஆக்ஸெசரீஸ்களை இணைத்துக் கொள்ளும் வசதியையும் ஹோண்டா நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வெளிப்புறத்தில், நவீன டிகால்களை ஒட்டி, i10 மாடலை மிகவும் ஸ்டைலாக மாற்றிக் கொள்ளலாம். கூடுதலாக ஃபுளோர் மேட்கள் இணைத்து, காரை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். லெதர் விரிப்புகளை வாங்கி இருக்கைகளில் விரித்து, பயணிகள் சுகமாக பயணிக்க வசதி செய்யலாம். அது மட்டுமல்ல, நேவிகேஷன் அமைப்பு அல்லது டச் ஸ்கிரீன் அமைப்பையும் இணைத்து, உங்கள் டாஷ்போர்டின் தரத்தை உயர்த்தலாம். மேலும், கூடுதல் பவர் சாக்கெட்கள், கோட் ஹூக்குகள் மற்றும் பாக்கெட்களை, உங்கள் தேவைக்கேற்றவாறு இணைத்துக் கொள்ளலாம்.

பிரேக் மற்றும் கையாளும் விதம்:ஆசிரியர் குறிப்பு: i10 காரில் பயணம் செய்வது இதமானது. இதைக் கையாள்வதும் சுலபமாகவே உள்ளது. ஸ்டியரிங் வீலும் சிறப்பாகவே செயல்படுகிறது. நமக்கு நெருடலாக இருக்கும் ஒரே பகுதி இதன் ஒல்லியான டயர்கள் ஆகும்.
I10 ஹாட்ச்பேக்கில் சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் அமைப்பு பொருத்தப்பட்டிருப்பது, சாலைகளில் பயணிக்கும் போது நம்மால் உணர முடிகிறது. இதன் முன்புற சக்கரங்களில் வெண்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகளும், இதன் பின்புற சக்கரங்களுக்கு ட்ரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன. முன்புற ஆக்ஸிலில் மேக் ஃபெர்சன் ஸ்டரட்கள் இணைக்கப்பட்டு, அவை மீண்டும் காயில் ஸ்பிரிங்குகளுடன் இணைக்கப்பட்டு; பின்புற ஆக்ஸிலில் டார்சன் பீம் ஆக்ஸிலுடன் இணைக்கப்பட்டு, பின்பு அவை முன்புறம் பயன்படுத்தப்பட்டுள்ள அதே வித காயில் ஸ்பிரிங்குடன் இணைக்கப்பட்டு சிறப்பாக செயலாற்றுகின்றன. I10 ஸ்டியரிங் வீல் குறைந்தப்சம் 4.75 மீட்டர் விட்டத்தில் திரும்புகிறது. இந்த பிரிவில் இது சிறந்த விட்டமாகக் கருதப்படுகிறது.

பாதுகாப்பு அமைப்புகள்:ஆசிரியர் குறிப்பு: i10 பாதுகாப்பு அம்ஸங்களில் முக்கியமானது ABS அமைப்பு மற்றும் இரட்டை காற்றுப் பைகள் ஆகும்.
ஒவ்வொரு பயணத்தையும், அதில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணியையும் பாதுகாக்க ஹுண்டாய் நிறுவனம் i10 காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை இணைத்துள்ளது. மேம்பட்ட இஞ்ஜின் இம்மொபிலைசர் அனைத்து வேரியண்ட்களிலும் பொருத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தெரியாத நபர் உள்ளே நுழைவதை உணர்ந்த அடுத்த நொடி, இம்மொபிலைசர் அமைப்பு இஞ்ஜினை அணைத்துவிடுகிறது. இதன் மூலம், திருட்டுகளைத் தவிர்த்து விடலாம். நடுத்தர மற்றும் உயர்தர வேரியண்ட்களில் காலை மற்றும் இரவுகளிலும் தெளிவாகக் காண்பிக்கும் உட்புற ரியர் வியூ மிரர், கேபின் பகுதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், பூட் பகுதி கதவு உட்பட அனைத்து கதவுகளையும் மொத்தமாக பூட்டும் வசதியான சென்ட்ரல் லாக்கிங்க் அமைப்பு மூலம் இந்த இரண்டு வேரியண்ட்களும் பாதுகாக்கப்படுகின்றன. உயர்தர டிரிம்மில் கூடுதலாக வட்ட வடிவத்தில் பிரகாசமாக எரியும் இரண்டு ஃபாக் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஓட்டுனருக்கு மிகுந்த வெளிச்சத்தைத் தந்து, பனி மிகுந்த வேளைகளிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கின்றன. மேலும், ஒரு சில டிரிம்களில் மட்டும் மடக்கி வைக்கக் கூடிய சாவி கொடுக்கப்படுகிறது. இது பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு அம்சமாகவும் விளங்குகிறது. சாவி இல்லாமல் உள்ளே நுளையும் அம்சத்தில் கூடுதலாக ஒரு அலாரம் பொருத்தப்பட்டுள்ளதால், திருடர்கள் உள்ளே நுழைந்துவிடாமல் பாதுகாக்கலாம்.

சக்கரங்கள்:
ஹுண்டாய் i10 சீரீஸில், உறுதியான 13 அங்குல ஸ்டீல் சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது 155/80 R13 அளவிலான ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதன் உயர்தர ஸ்போர்ட்ஸ் டிரிம்மில் ஸ்டைலாக தோற்றமளிக்கும் முழுமையான வீல் கவர்கள் உள்ளன.

தீர்ப்பு:


மாருதி சுசுகி ரிட்ஸ், மாருதி சுசுகி வேகன் R, டாடா இண்டிகா விஸ்டா மற்றும் ஃபோர்ட் ஃபிகோ ஆகிய கார்களுடன் போட்டியிடும் ஹுண்டாய் i10 வெளியில் இருந்து பார்த்தால் சிறியதாக இருந்தாலும், உட்புறத்தில் விசாலமாக உள்ளது. இந்திய சந்தையில் நீங்கள் ஒரு என்ட்ரி லெவல் காரைத் தேடினால், ஹுண்டாய் i10 மாடலையும் நிச்சயமாகப் பார்க்க வேண்டும், ஏனெனில், இது இந்த பிரிவிலேயே தலைசிறந்த கார்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

சாதகங்கள்:1. இதில் உள்ள சிறப்பம்சங்களைப் பார்க்கும் போது, இதன் விலை மிகவும் நியாயமானதாக உள்ளது.
2. பயணத்திற்கு ஏற்றவாறு அதிக குஷானுடன் உள்ள இருக்கைகள் சுகமாக உள்ளன.
3. இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் ஏராளமான இன்டிகேட்டர்கள் உள்ளன.
4. சொகுசு அம்சங்கள் நிறைந்து வழிகின்றன.
5. கேபின் பகுதி விசாலமாக உள்ளது.

பாதகங்கள்:1. கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவு மிகுதியாக இல்லை
2. வெளிப்புற வடிவமைப்பை இன்னும் சற்றே மேம்படுத்தி இருக்கலாம்
3. எரிபொருள் திறனை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம்.
4. உயர்தர வேரியண்ட்டில் கூட அலாய் சக்கரங்கள் பொருத்தப்படவில்லை
5. பாதுகாப்பு அம்சங்களை மேலும் அதிகப்படுத்தி இருக்கலாம்.