ஹூண்டாய் க்ராண்ட்-ஐ10

` 4.5 - 7.3 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கியம்சங்கள்


டிசம்பர் 08,2015: 2015 நவம்பர் மாதத்தின் B-பிரிவு ஹேட்ச்பேக்குகளில் சிறப்பாக விற்பனையாகும் தயாரிப்பு என்ற பெயரை பெற்றிருந்த மாருதி ஸ்விஃப்ட் காரை, ஒரு முக்கிய எழுச்சியின் மூலம் ஹூண்டாய் கிராண்டு i10 பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை பிடித்தது. ஸ்விஃப்ட் கார் விற்பனையின் வீழ்ச்சிக்கான (34% சரிவு) முக்கிய காரணம் பெலினோவின் அறிமுகமே என்றாலும், தனது போட்டியாக இருந்த இந்த கார்களை கிராண்டு i10 பின்னுக்கு தள்ளுவதற்கு, இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டது. கடந்த 2013 செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தென் கொரிய நாட்டு கார், தனது விற்பனையில் 54% உயர்வை பதிவு செய்து, முதல் முறையாக ஸ்விஃப்ட் காரின் மீது ஆதிக்கம் செலுத்தி உள்ளது. கடந்த மாத (2015 நவம்பர்) ஒப்பீட்டில், 12,899 கிராண்டு i10 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் கிராண்டு i10 விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்


p1

இந்நிறுவனத்தின் ப்ளூய்டிக் வடிவமைப்பு தொழிற்நுட்பத்தை பெற்ற முதல் காரான ஹூண்டாய் கிராண்டு i10, அதன் திருப்திப்படுத்தும் வடிவமைப்பு மற்றும் இப்பிரிவிலேயே முதல் முறையாக வெளியிடப்படும் சில அம்சங்களை உட்படுத்திய நீண்ட அம்சங்களின் பட்டியல் ஆகியவை சேர்ந்து இந்த காருக்கு ஒரு சிறப்பான வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, இந்த புதிய கிராண்டு i10 அல்லது வெறும் i10 என்று அறியப்பட்டு, அதற்கு உலகமெங்கும் ரசிகர்களை பெற்றுள்ளது. கச்சிதமான பரிமாணங்கள், விசாலமான உட்புற அமைப்பியல், பிரிவின் முன்னணி வகிக்கும் அம்சங்கள் மற்றும் குறைந்த செலவில் அமைந்த என்ஜின்கள் ஆகியவற்றை கொண்டுள்ள ஹூண்டாய் கிராண்டு i10, 2014 இந்தியன் கார் ஆப் தி இயர் விருது பெற்றதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

p2

பிளஸ் பாயிண்ட்ஸ்1. புதுமையான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு, எல்லோரையும் திருப்திப்படுத்துமே தவிர, யாரையும் நோக செய்யாது.
2. பின்புற AC திறப்பிகள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப், கீலெஸ் என்ட்ரி, குளிர்ந்த கிளெவ் பாக்ஸ் போன்ற பிரிவின் முன்னணி அம்சங்களை கொண்டுள்ளது.
3. ஐரோப்பிய மாதிரியை விட, கிராண்டு i10-னின் இந்திய மாதிரியின் நீளம் மற்றும் வீல்பேஸ் அதிகமாக உள்ளதால், காற்றோட்டமான கேபின் மற்றும் இடவசதியை பெற்றுள்ளது.
4. வழக்கமான கையாளுதல், இதமான பயண தரம். இந்திய சாலைகளுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

மைனஸ் பாயிண்ட்ஸ்1. ABS மற்றும் ஏர்பேக்குகள் ஆகியவை உயர் வகையில் மட்டும் தேர்விற்குரியதாக அளிக்கப்படுகிறது.
2. முன்பக்க ஹெட்ரெஸ்ட்களை மாற்றி அமைக்க முடியாது.
3. தனித்து தெரியும் அம்சங்கள்
4. பிரிவிலேயே முதல் முறையாக பின்பக்க AC திறப்பிகள்.
5. பிரிவில் சிறந்த கட்டமைப்பு தரம்.

வெளிப்புற அமைப்பியல்


p3

இந்த பிராண்டின் ஃப்ளூய்டிக் வடிவமைப்பு தொழிற்நுட்பத்தை, இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக வழங்கிய முதல் கார் ஹூண்டாய் கிராண்டு i10 ஆகும். இதன் முன்பக்கத்தில், ஸ்விப்ட் பேக் ஹெட்லெம்ப்கள், அறுங்கோண கிரில் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஃபேக் லெம்ப்களை தாங்கியுள்ள ஒரு தகுதியான பம்பர் ஆகியவற்றை கொண்டு பெரும்பாலான வடிவமைப்பு தாக்கத்தை பெற்றுள்ளது.

p4

இதன் பக்கவாட்டில், காரின் நீளத்திற்கு ஒத்து செல்லும் ஒரு கூர்மையான கோடு, டோர் ஹேண்டிலில் துவங்கி டெயில் லெம்ப் வரை நீண்டு செல்வதாக அமைந்து, காரியங்கள் எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது.

p5

ஐரோப்பிய பதிப்புடன் ஒப்பிடும் போது, இந்தியாவிற்கான கிராண்டு i10-னின் பக்கவாட்டு அமைப்பு ஒருசில மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த காரின் இந்திய அவதாரத்தின் நீளம் 100 mm அதிகமாகவும், வீல்பேஸில் 40 mm நீண்டதாகவும் உள்ளது. பின்பக்க டோர் மற்றும் பின்பக்க விண்டோக்கள் பெரியதாக அமைந்து, ஒரு மறுவடிவமைப்பு பெற்ற C-பில்லரை பெற்று, பின்புற கேபின் விஸ்தாரமாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்டைல் தோற்றத்தை கொண்டுள்ளதோடு, ஒரு வெஸ்ட்லைன் கருப்பு மோல்டிங்கை பெற்று, கீறல்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. டைமண்டு கட் பணித் தீர்ப்புடன் கூடிய எட்டு ஸ்போக் அலாய் வீல்கள் சிறப்பாக காட்சி அளிக்கின்றன.

p6

பின்பக்கத்தின் தகவமைப்பு எளிமையாக இருந்தாலும், சலிப்படைய செய்வதாக இல்லை. சுற்றிலும் சூழப்பெற்ற டெயில் லெம்ப்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பின்பக்கத்தில் உள்ள பம்பரில் ரிஃப்லெக்டர்கள் ஒருங்கிணைந்து காணப்பட்டு, ஸ்டைல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கூட்டும் ஒரு காரணியாக உள்ளது.

1

அளவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, அதன் போட்டியாளர்களை விட கிராண்டு i10-னின் நீளம் மற்றும் அகலம் குறைவாக இருக்கலாம். மேலும் கிராண்டு  i10-னிற்கு 2425 mm என்ற மிகச்சிறிய வீல்பேஸையும் கொண்டுள்ளது. அதற்காக கிராண்டு i10-னிற்குள் இடவசதி குறைவாக இருக்கும் என்று நினைக்க முடியாது. உண்மையில், அதன் பிரிவிலேயே அதிக இடவசதி கொண்டவைகளில் கிராண்டு i10-னின் பின்பக்க சீட்டும் ஒன்றாகும்.

2

மேலும் இதன் பிரிவிலேயே அதிக இடவசதி கொண்ட பூட்களில் கிராண்டு i10-னும் ஒன்றாகும். புதிய ஃபோர்டு ஃபிகோ மட்டுமே, இதைவிட சிறந்த பூட் இடவசதியான 257 லிட்டரை கொண்டுள்ளது. மற்றபடி டொயோட்டா லிவா 251 லிட்டரை பெற்று இதனுடன் நெருக்கமாக உள்ளது.

உள்புற அமைப்பியல்


p7

கட்டுமான தரம் மற்றும் பணித் தீர்ப்பு முறை ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, கிராண்டு i10-னின் உள்புற அமைப்பியல், பிரிவிலேயே சிறப்பானதாக விளங்குகிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் அவை கூட்டிணைக்கப்பட்டுள்ள முறை ஆகியவை வைத்து பார்த்தால், C பிரிவில் உள்ள சில கார்களோடு போட்டியிடுவதாக உள்ளது.

இதனுடன் ஒரு சமகால ஸ்டைலிங், கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிறத்திலான உள்புற அமைப்பியல் ஆகியவை சேர்ந்து பொருட்களின் தரம் மற்றும் ஒரு செயல்பாட்டிற்குரிய லேஅவுட் ஆகியவற்றை அளிக்கிறது.

p8

உள்புறத்தின் மேல் மற்றும் கீழ்புறங்களில் கருப்பு லேஅவுட்டும், மத்தியில் வெளிர் பழுப்பு நிறத்தையும் கொண்டுள்ளது. இதிலுள்ள எல்லா பட்டன்களும் சரியான அளவில் தகுந்த இடத்தில் அமைந்து பயன்பாட்டிற்கு எளிதாக உள்ளன. முன்பக்க சீட்கள் தகுந்த அளவிலான குஷனை பெற்று உங்களை அரவணைத்து கொள்வதாகவும், தொடைகளுக்கு சிறந்த ஆதரமாகவும், லெக் ரூம்மையும் வழங்குகிறது.

டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் வசதி வரவேற்கத்தக்கது. ஆனால் ஹெட்ரெஸ்ட்கள் நிலையாக வைக்கப்பட்டிருப்பது ஒரு இழப்பாக கருதப்படுகிறது.

p9

இதன் ஸ்டீரிங் வீல் பிடிப்பதற்கு ஏற்ப ஒரு சிறந்த அளவில் அமைந்து, டில்டிற்கு ஏற்ப மாற்றி அமைக்க முடியுமே தவிர, நம்மை எட்டும் வகையில் மாற்ற முடியாது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர், நாம் பெறும் வழக்கமான இரு வட்ட லேஅவுட்டாக இல்லை. அதற்கு பதிலாக மத்தியில் ஒரு பெரிய ஸ்பீடோமீட்டர் ஆக அமைந்து, அதனுடன் ஒரு அரை வட்ட டச்சோ-வை இடதுபுறமும், என்ஜின் தட்பவெப்பநிலை மற்றும் எரிபொருள் அளவு ஆகியவற்றை காட்டும் இரு அளவுக்காட்டிகள் (டயல்ஸ்) வலதுபுறமும் கொண்டுள்ளது. மேலும் ஒரு மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளேயின் கீழே ஓடோமீட்டர், இரு ட்ரிப் மீட்டர்கள் மற்றும் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் ஆகியவை உள்ளன. மியூஸிக் மற்றும் டெலிபோன் பயன்பாட்டிற்கான கன்ட்ரோல்கள், ஸ்டீரிங் வீல்லில் கொண்டுள்ளன.

p10

ஒரு நேர்த்தியான வடிவமைப்பை கொண்ட சென்டர் கன்சோலின் மேற்புறம், பொழுதுப் போக்கு சிஸ்டத்தை கொண்டுள்ளதோடு, இரண்டு பக்கத்திலும் இரு வட்ட வடிவிலான AC திறப்பிகள் உள்ளன. சென்டர் கன்சோலின் கீழ் பாதியில், வழக்கமான 3 டயல் லேஅவுட் உடன் கூடிய AC கன்ட்ரோல்கள் அமைந்துள்ளன. கிளொவ் பாக்ஸ் பெரியதாக அமைந்து, வெளிப்புற வெப்பம் உங்களுடைய பொருட்களை தாக்காத வகையில், அதனுள்ளே குளுமையாக வைத்து பாதுகாக்க முடியும்.

p11

இப்பிரிவிலேயே முதல் முறையாக பின்புற AC திறப்பிகளை பெற்று, கேபின் விரைவில் குளுமை அடையும் வகையில் கட்டமைப்பை கொண்டு, பின்புறத்தில் இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி கூடுதலாக 100 mm நீளத்தையும், 40 mm நீளமான வீல்பேஸையும் பெற்றுள்ளதால், பின்புற சீட் இடவசதிக்கு பெரும் உதவியாக உள்ளது. 3 முதியவர்கள் இடநெருக்கடி இல்லாமல் பயணிக்க கூடிய வகையில், இதன் லெக்ரூம் மற்றும் ஷோல்டர் ரூம் ஆகியவற்றை கொண்டுள்ளது. பின்புற சீட்களை மடக்கி கொண்டு கூடுதல் சரக்குகளை ஏற்றும் வகையிலான இடவசதியை பெற முடியும் என்றாலும், அவை 60-40 பிளவுத் தன்மையை கொண்டவை அல்ல.

p12

எல்லா ஹூண்டாய் கார்களை போல, இந்த கிராண்டு i10-லும் இப்பிரிவிலேயே முன்னணி வகிக்கும் பல்வேறு அம்சங்களின் நீண்ட ஒரு பட்டியலை கொண்டுள்ளது.

p13

பின்பக்க AC திறப்பிகள், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், கீலெஸ் என்ட்ரி, கூல்டு கிளொவ் பாக்ஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

p14

ஆச்சரியப்படுத்தும் வகையில், இதில் கிளைமேட் கன்ட்ரோல் வழங்கப்படவில்லை. மேலும் ஸ்போர்ட்ஸ் வகையில் மட்டும் பின்புற டிஃபோக்கர் அளிக்கப்படுகிறது.

செயல்திறன்


3

இந்த கிராண்டு i10-ல், பயன்படுத்தி சோதிக்கப்பட்ட 1.2-லிட்டர் கப்பா இரட்டை VTVT பெட்ரோல் என்ஜின் மற்றும் புதிய 1.1-லிட்டர் 2வது தலைமுறை U2 டீசல் என்ஜின் ஆகிய இரு என்ஜின் தேர்வுகள் அளிக்கப்படுகிறது.

பெட்ரோல்


கிராண்டு i10 பெட்ரோலை, ஒரு 1.2-லிட்டர் கப்பா இரட்டை VTVT என்ஜின் இயக்கி, அதன்மூலம் 6000 rpm-ல் 82 bhp ஆற்றலையும், 4000 rpm-ல் ஒரு அதிகபட்ச முடுக்குவிசையான 114 Nm-யையும் அளிக்கிறது. ஒரு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஒரு 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஏற்கனவே மற்ற வாகனங்களுக்கு இடையே தனது ஆற்றலை நிரூபித்துள்ள இந்த பெட்ரோல் யூனிட், வழக்கம் போல i10-யை இயக்க உள்ளது. சாதாரண நிலைக்கு ஏற்ப சிறப்பாக ரீபைன் செய்யப்பட்டுள்ள இந்த என்ஜினை, குறிப்பிட்ட வேகம் வரை இயக்கினாலும் தாக்குபிடிக்கும் திறனை கொண்டுள்ளது. அதுவும் நீங்கள் சிகப்பு கோட்டை நெருங்கினால் மட்டுமே, இந்த என்ஜின் சத்தம் எழுப்ப துவங்குகிறது. இந்த என்ஜின் ஆர்வத்துடன் கூடிய செயல்பாட்டையும், நடுநிலையில் ஆரோக்கியமாகவும் செயல்படுகிறது.

p15

நெடுஞ்சாலையில் செல்லும் போது, இந்த யூனிட் சோர்வுடன் செயல்படுவதில்லை. மேலும் ஓவர்டேக்கிங் செய்யும் போது, ஒரே மூச்சில் நேர்த்தியாக பணியாற்றுகிறது. இந்த 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஒரு ரேவ் ஹேப்பி யூனிட்டாகவும், குறைந்த rpm-களில் முடுக்குவிசையை அளிக்க துவங்குவதாகவும் அமைந்து, நகரப் பகுதியில் ஒரு சிறப்பான செயல்பாட்டை அளிக்கிறது. 5-ஸ்பீடு மேனுவல், கியர்களை மென்மையாக மாற்றும் வகையில், ஒரு நேர்த்தியாக செயல்பாட்டை கொண்டுள்ளது.

டீசல்


4

இந்த புதிய 1.1-லிட்டர் 2வது தலைமுறை U2 டீசல் என்ஜின், கிராண்டு i10 மூலம் தனது அறிமுகத்தை பெறுகிறது. இந்த 1.1-லிட்டர் என்ஜின் மூலம் 4000 rpm-ல் ஒரு அதிகபட்ச ஆற்றலான 70 bhp-யையும், 1500-2750 rpm-ல் ஒரு உன்னத முடுக்குவிசையான 160 Nm-யும் பெற முடிகிறது. இதற்கு போட்டியாக உள்ள பெரும்பாலான வாகனங்களை வைத்து பார்த்தால், இந்த 3-சிலிண்டர் என்ஜின் பலவீனமானதாக தெரியலாம். ஆனால் அதன் லேசான எடையின் மூலம் பெறப்படும் செயல்திறனை கொண்டு, அது சமரசம் செய்யப்படுகிறது. ஆற்றல் வெளியீடு நேரடியானது. சாதாரண டர்போ யூனிட்களை போல மாறுபாடுகளை கொண்டது அல்ல. டர்போ லாக் குறைந்தபட்சத்தில் வைக்கப்பட்டுள்ளதால், நின்ற நிலையில் இருந்து உந்துவது இந்த என்ஜினுக்கு எளிதாக உள்ளது.

p16

ஆனால் இந்த காரை நெடுஞ்சாலைக்கு கொண்டு வரும் போது, உங்களுக்கு இன்னும் கூடுதலாக ஏதோ ஒன்று தேவைப்படுவதாக உணர முடியும். 3700 rpm-யை நெருங்கும் போது, இந்த U2 யூனிட் தனது கொந்தளிக்கும் தன்மையை விரைவில் இழந்து, அதற்கு மேல் அதை வேகமாக இயக்கி எந்த பயனும் இல்லை என்பதை உணர வைக்கிறது. எனவே ஓவர்டேங்கிங் செய்யும் போது கவனமாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஏனெனில் நீங்கள் வேகத்தை (ஸ்பீடு) இழந்தால், அதை மீண்டும் அதிகரிக்க நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்த கிராண்டு i10 டீசலின் உட்புறத்து கேபினில் இருந்து நன்றாக ரீஃபைன் செய்யப்பட்டு. கியர்பாக்ஸ் மென்மையாக உள்ளது.

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


p17

கிராண்டு i10-னின் முன்புறத்தில் ஒரு மெக்பெர்சன் ஸ்ட்ரூட் மற்றும் பின்புறத்தில் உள்ள டோர்சன் பீம் ஆக்ஸில் ஆகியவை ஒருங்கிணைந்து, இதன் சஸ்பென்ஸன் செட்அப் செயல்படுகிறது. கையாளும் திறனை காட்டிலும் இதமான பயணத்திற்கே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராண்டு i10-னின் பின்புறம் குலுங்கும் போது, ஒரு மெல்லிய சத்தம் கேட்கிறது. அதிக வேகத்தில் சீரான லைன் தகவமைப்பு (ஸ்ட்ரேய்ட் லைன் எபிலிட்டி) சிறப்பாக உள்ளது. ஆனால் வளைவு மற்றும் திருப்பங்களில், நீங்கள் நினைப்பதை விட அதிகமாகவே பாடி திரும்புவதை உங்களால் உணர முடியும்.

ஆனால் பெரும்பாலான நேரங்களில் கிராண்டு i10-னின் செயல்பாட்டில், எந்த ஆச்சரியமும் குதூகலமும் இல்லாமல் நடுநிலையுடன் செயல்பாட்டை காண முடிகிறது. இந்த காரின் கையாளும் திறன் கணிக்கக் கூடிய நிலையில் இருப்பதோடு, ஆர்வலர்களையும் (ஸ்விஃப்ட் அல்லது புதிய ஃபிகோ-வை விரும்பி செல்வோர்) தடுத்து நிறுத்தக் கூடியதாக உள்ளது. கிராண்டு i10-னின் தனித்தன்மை வாய்ந்த விற்பனை விகித அடிப்படையில், இதன் பயணத் தரத்தை பெரும்பாலானோர் விரும்புவார்கள். ஒருமுறை நீங்கள் கூர்மையான பிரேக்கிங் பயன்பாட்டை பெற்றால், அதில் எந்த ஒளிவு மறைவுமின்றி நடைபெறுவதை அறியலாம்.

பாதுகாப்பு


p18

ஐரோப்பிய மாதிரியான கிராண்டு i10-னில் ஆறு ஏர்பேக்குகள் பெற்றிருந்தாலும், இந்திய கிராண்டின் முன்புறம் ஒரே ஒரு இரட்டை ஏர்பேக்குகள் மட்டுமே கொண்டுள்ளது. மேலும் ஆஸ்டா வகையில் மட்டுமே காணப்படும் ABS கூட, தேர்விற்குரியதாகவே அளிக்கப்படுகிறது. இதில் பின்பக்க டிஃபோக்கர் மற்றும் ரிவெர்ஸ் பார்க்கிங் சென்ஸர்கள் ஆகியவை ஸ்போர்ட்ஸ் வகையில் வழங்கப்படுகிறது. மற்றபடி, இம்மொபைலைஸர், முன்பக்க ஃபேக் லெம்ப்கள், டே அண்டு நைட் இன்சைடு ரேர் வியூ மிரர் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

வகைகள்


ஹூண்டாய் கிராண்டு i10-ல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு பதிப்புகளையும் சேர்த்து, மொத்தம் 5 வகைகளில் கிடைக்கிறது. ஆஸ்டா வகையில் மட்டும் ஒரே ஒரு 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் பதிப்பு அளிக்கப்படுகிறது.

5

துவக்க நிலை வகையான இரா-வில் என்ஜின் இம்மொபைலைஸர், கிரோம் ரேடியேட்டர் கிரில், 2-டோன் பிளாக் மற்றும் வெளிர் பழுப்பு உட்புற அமைப்பியல், முன்பக்க மற்றும் பின்பக்க டோர் மேப் பாக்கெட்கள், டச்சோமீட்டர், MID, பவர் ஸ்டீரிங், மேனுவல் AC உடன் ஹீட்டர், முன்பக்க பவர் விண்டோக்கள், உள்புறமாக அட்ஜஸ்டபிள் ORVM-க்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இந்த வரிசையில் அடுத்தப்படியாக இருப்பது, அதிக பயன்பாடுமிக்க அம்சங்களை அளித்து, சிறந்த விற்பனையை பெறும் வகைகளில் ஒன்றான மேக்னா ஆகும். இந்த மேக்னாவில் சென்ட்ரல் லாக்கிங், முன்பக்க ஃபேக் லெம்ப்கள், டே அண்ட் நைட் இன்சைடு ரேர் வியூ மிரர், தரமான கீலெஸ் என்ட்ரி, பாடி நிறத்திலான டோர் மிரர்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள், முழு வீல் கவர்கள், பின்பக்க பவர் விண்டோக்கள், எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் ORVM-கள், பின்புற AC திறப்பிகள் ஆகியவற்றை பெற்றுள்ளது.

இவற்றுடன் ஸ்போர்ட்ஸ் வகையில், ரிவெர்ஸ் பார்க்கிங் சென்ஸர்கள், ரேர் டிஃபோக்கர், ரூஃப் ரெயில்கள், ORVM-களின் மீது டேன் இன்டிகேட்டர்கள், மெட்டல் மூலம் பணித் தீர்க்கப்பட்ட உட்புற டோர் ஹேண்டில்கள், 2-DIN ஒருங்கிணைக்கப்பட்ட சிஸ்டம் உடன் ரேடியோ, CD, MP3, ஆக்ஸ்-இன், ப்ளூடூத் இணைப்பு, ஸ்டீரிங் வீல் கன்ட்ரோல்கள், மின்னோட்டத்தால் மடக்க கூடிய ORVM-கள், டில்ட் ஸ்டீரிங் ஆகியவற்றை கொண்டுள்ளது.

உயர்தர வகையில் சேர்ந்த ஆஸ்டாவில், ஸ்மார்ட் கீ, கிரோம் வெளிபுற டோர் ஹேண்டில்கள், பின்புற ஸ்பாயிலர், தெளிவான சில்வர் அலாய் வீல்கள், லெதர் சூழ்ந்த ஸ்டீரிங் வீல், பின்பக்க வாஷர் மற்றும் வைப்பர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப், டிரைவர் சீட் உயரம் மாற்றும் வசதி, அட்ஜஸ்டபிள் பின்புற சீட் ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவை உள்ளன.

இதுதவிர உங்களுக்கு, டிரைவர் மற்றும் முன்பக்க பயணிக்கான ஏர்பேக்குகள், ABS, டைமண்டு கட் அலாய் வீல்கள் ஆகியவை தேவைப்பட்டால், நீங்கள் ஆஸ்டா (O)-வை தேர்வு செய்ய வேண்டும்.

தீர்ப்பு


p19

ஹூண்டாய் நிறுவனம் எவ்வளவு காலமாக, சிறந்த ஓட்டும் அனுபவத்தையும், எண்ணற்ற அம்சங்களையும் உடைய பார்வைக்கு சிறந்த கார்களை அளிக்கிறது என்பதை கிராண்டு i10 மூலம் மீண்டும் நிரூபித்துள்ளது.

பல தயாரிப்பாளர்களுக்கும் மேற்கூறிய சமன்பாடு சரியாக பொருந்தாத நிலையில், அங்கே தான் ஹூண்டாயின் வெற்றி சூத்திரம் நிலைநிற்கிறது.