ஹூண்டாய் இயான்

` 3.2 - 4.5 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


ஏப்ரல் 14, 2016: இயான் காரின் இரண்டாவது துவக்க நிலை வகையில் இருந்து, ஒரு டிரைவருக்கான ஏர்பேக்கை தேர்விற்குரியதாக ஹூண்டாய் நிறுவனம் அளிக்க துவங்கி உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் உயர்- மாதிரி வகையில் ஒரு தரமான டிரைவர் ஏர்பேக் அளிக்கப்படுகிறது. அதேபோல இந்த கார் தயாரிப்பாளரின் மற்ற மாடல்களான கிராண்டு i10 மற்றும் எக்ஸ்சன்டு ஆகியவற்றில் கூட பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. இந்த இயான் காருக்கு ஒரு 0.8- லிட்டர் மற்றும் 1.0- லிட்டர் பெட்ரோல் மில் ஆகியவை ஆற்றலை அளிக்கின்றன. இதில் உள்ள முதலாவது என்ஜின் மூலம் 55bhp/75Nm என்ற ஆற்றல் புள்ளி விபரமும், இரண்டாவது மூலம் 68bhp/94Nm என்ற ஆற்றல் வெளியீடும் பெறப்படுகிறது. இந்த இரு என்ஜின்களும், ஒரு 5- ஸ்பீடு மேனுவல கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் உள்ள முந்தைய சிறிய மில் மூலம் லிட்டருக்கு 21.1 கி.மீ மைலேஜ் பெறப்பட்டு, ஆல்டோ 800 அல்லது K10 மற்றும் ரெனால்ட் க்விட் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது.

ஹூண்டாய் இயான் விமர்சனம்

மேற்பார்வை


அறிமுகம்


Pic1
ஹூண்டாய் இயான் அறிமுகம் செய்யப்பட்ட போது, அதில் இருந்த வரவேற்பிற்குரிய கவர்ந்து இழக்கும் வடிவமைப்பின் மூலம் ஏறக்குறைய எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் இந்த பிரிவிலேயே இது ஒரு பழமையாகாத (நான்- எக்சிஸ்ட்டெட்) வடிவமைப்பாக அமைந்தது. ஆம், நம் நாட்டில் சிறப்பான விற்பனையை கொண்டிருப்பது என்னவோ மாருதி ஆல்டோ 800 ஆக இருந்தாலும், அதை ஒரு சிறப்பான தன்மை வாய்ந்தது என்று கூற முடியாது என்பதை நாம் எல்லாரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். எனவே ஹூண்டாய் நிறுவனம் மூலம் இயான் அறிமுகம் செய்யப்பட்ட நேரத்தில், மாருதி நிறுவனத்திற்கு ஒரு பலமான போட்டி ஏற்படும் என்பதால், இயான் அறிமுகம் செய்யப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, மாருதி நிறுவனம் தனது ஆல்டோவின் ஒரு சிறப்பு பதிப்பு வகையை அறிமுகம் செய்தது. இந்த கொரியன் நாட்டு கார் நிறுவனத்திற்கு ஒரு சிறப்பான வழி தடத்தை ஏற்படுத்தி தந்த பிரபல காரான சாண்ட்ரோவின் அடிசுவடிகளை பின்பற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஹூண்டாய் இயான் மீது வைக்கப்பட்டு உள்ளது.

சாதகங்கள்1. குறிப்பாக இதன் பிரிவிலேயே வைத்து பார்த்தால், அட்டகாசமான தோற்றத்தை பெற்றுள்ளது. இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இதன் வடிவமைப்பில் ஒரு பழமையான தோற்றம் ஏற்படவில்லை.
2. இதன் பிரிவில் கட்டமைப்பு தரத்தை வைத்து பார்த்தால், சிறந்து விளங்கும் கார்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிலையில் இது ஆல்டோ-வை பல மைல்கள் முந்தி பயணிக்கிறது.
3. உட்புற அமைப்பியலை பொறுத்த வரை, சிறந்த தரமான பொருட்களையும், உயர் நிலையிலான பொருத்தம் மற்றும் பணித் தீர்ப்பின் மூலம் இதற்கு ஒரு பிரிமியம் உணர்வு அளிக்க முடிகிறது.

பாதகங்கள்1. நெடுஞ்சாலையில் வேகமான செல்லும் போது ஸ்டீரிங்கின் எடை அதிகரிப்பது இல்லை. இதனால் டிரைவரின் உறுதியான நம்பிக்கைக்கு பாத்திரமாக இதன் செயல்பாடு இல்லை.
2. இதில் உள்ள 3- சிலிண்டர் என்ஜின்களின் பண்பு நலன்களின் பின்னணியில், இதனுள் ஒலி மற்றும் அதிர்வு நிலைகள் அதிகமாக உள்ளது.

தனித் தன்மையான அம்சங்கள்1. டில்ட் ஸ்டீரிங் மற்றும் டிரைவர் பக்க ஏர்பேக் போன்ற அம்சங்கள், இந்த பிரிவிலேயே முதல் முறையாக இது தான் பெற்று உள்ளது.
2. இதில் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் வகைகள் காணப்படுகிறது.

வெளிப்புற அமைப்பியல்


Pic2
இந்த நிறுவனத்தின் பிளூய்டிக் வடிவமைப்பை கொண்ட மிகச் சிறிய காராக ஹூண்டாய் இயன் திகழ்கிறது. இந்த காரில் உள்ள சிறந்த தன்மையாக இந்த வடிவமைப்பு தன்மை இடம் பெற்று உள்ளது. இந்த பிரிவிலேயே அதிக லைன்களையும், அதிக வளைவுகளையும் கொண்ட கார் என்றால், அது இயன் காராக தான் இருக்கும். அல்லது இப்பிரிவிலேயே மேற்கண்டவை அதிக காண கிடைக்கும் கார் எனலாம்.

Pic3
ஹூண்டாய் இயானின் முன் பகுதியில் உள்நோக்கி அமர்ந்த நிலையிலான ஹெட்லெம்ப்கள் காணப்படுவதோடு, ஹூண்டாய் லோகோவை ஒரு நேர்த்தியான கிரோம் ஸ்ட்ரிப்கள் அலங்கரிப்பதாக உள்ளது. முன்பக்க பம்பரின் ஒரு பகுதியாக உள்ள அறுங்கோண (ஹெக்ஸாகோனல்) கிரில் பெரிய அளவில் அமைந்து, இயான் காரின் முன்பக்கத்திற்கு ஒரு பெருத்த தோற்றத்தை அளிக்கிறது.

Pic4
இந்த பிரிவைச் சேர்ந்த கார்களில் சிற்பமாக செதுக்கப்பட்ட போனட் மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஃபேக் லெம்ப்கள் ஆகியவை அரிதாகவே காண முடிகிறது.

Pic5
பக்கவாட்டு பகுதிக்கு நாம் வரும் போது, காரின் தடித்த வீல் ஆர்ச்சுகளின் வழியாக பயணிக்கும் பிளூய்டிக் வடிவமைப்பும், ஹெட்லெம்ப்களில் இருந்து டெயில் வரை கடந்து செல்லும் ஒரு ஷோல்டர் லைனையும் காண கிடைக்கிறது. இந்த காரின் முன்பக்க மற்றும் பின்பக்க வீல்களுக்கு இடைப்பட்ட நீளத்தில் மற்றொரு செதுக்கப்பட்ட லைன் பயணித்து செல்கிறது.

Pic6
பின்பக்கத்தை நோக்கி செல்லும் ஷோல்டர் லைன் பின்பக்கத்தில் சற்று மேல்நோக்கி உயர்த்தப்பட்டதாக அமைக்கப்பட்டு உள்ள தன்மை காரின் பக்கவாட்டு பகுதிக்கு ஒரு ஸ்போர்ட்டியான தன்மையை அளிக்கிறது. ஆனால் மேற்கண்ட இந்த அமைப்பினால், பின்பக்க விண்டோவின் மூலம் கிடைக்கும் காட்சி அமைப்பியலில் (விசிபிலிட்டி) சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேபோல டோர் ஹேண்டில்கள் கூட இந்த ஷோல்டர் லைனின் வழியை சரியான முறையில் பின்பற்றுவதாக அமைந்து உள்ளது. இதனால் முன்பக்க ஹேண்டில்களை விட, பின்பக்க ஹேண்டில்கள் சற்று உயரத்தில் வைக்கப்பட்டு உள்ளதை காணலாம்.

Pic7
பின்பக்கத்தை பொறுத்த வரை, பெரிய அளவிலான டெயில் லெம்ப்கள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, காரின் எக்ஸ்ட்ரோவெர்ஸீவ் பண்பை தகுந்த முறையில் பின்பற்றி உள்ளது. பின்பக்க கிளாஸ் தகுந்த அளவில் விசாலமாக இருப்பதோடு, பின்பக்க ஸ்பாயிலர் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. பின்பக்க பம்பர் மிகவும் தடித்ததாக உள்ளது. இது தேவைக்கும் சற்று அதிக அளவில் பெரியதாக உள்ளதோடு, இந்த அளவை கொண்டு இருப்பதால் பூட் பயன்பாட்டின் அளவை குறைப்பதாகவும் உள்ளது. இதன் எக்சாஸ்ட் பைப்-பை பின்பக்க பம்பரின் கீழாக நேர்த்தியான முறையில் வைத்து, ஒரு தகுந்த லேஅவுட் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Pic8
இந்த இயானின் D- லைட், D- லைட்+ மற்றும் ERA+ ஆகியவற்றில் 12 இன்ச் ரிம்கள் கொடுக்கப்பட்டு, அதற்கு 145mm டயர்கள் அளிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் மேக்னா+ மற்றும் ஸ்போர்ட்ஸ் வகைகளில் 13 இன்ச் ரிம்கள் கொடுக்கப்பட்டு, 155mm டயர்கள் அளிக்கப்பட்டு உள்ளன. மேற்கண்ட இரண்டும் மிகவும் மெல்லியதாக உள்ள நிலையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு டயர்களின் அளவை 165mm அல்லது அதற்கும் அதிகமாக அளவு கொண்ட ஒரு மேம்பாட்டை அளிக்குமாறு, நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

1

உள்புற அமைப்பியல்


இந்த காரின் உள்ளே நீங்கள் நுழைந்த உடன், சிறந்த வடிவமைப்பியலில் அமைந்த ஒரு காரின் உட்புற அமைப்பியலுக்கு தேவையான தரமான பொருத்தம் மற்றும் பணித் தீர்ப்பு ஆகியவை உங்களை வரவேற்பதாக அமைந்து உள்ளது. இந்த பிரிவிலேயே சிறந்த தோற்றம் கொண்ட டேஸ்போர்டை (சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் க்விட் கார் இதற்கு நிகராக இருப்பதாக தெரிகிறது) இயான் பெற்று உள்ளது. மேலும் இந்த பிரிவில் இது போன்ற தன்மை அளிக்கப்பட்டு இருப்பதை நம்பவும் அரிதாக உள்ளது. அட்டகாசமான கட்டமைப்பு தரத்தின் மூலம் சிறப்பாக காட்சி அளிக்கும் உட்புற அமைப்பியலை அள்ளி வழங்குவதில் ஹூண்டாய் நிறுவனம் சிறந்தது என்பதை நிரூபித்து உள்ளது.

Pic9
இதன் உட்புற அமைப்பியலில் ஒரு கருப்பு மற்றும் வெளிர் பழுப்பு நிற லேஅவுட்டை பெற்று உள்ளது. இதன் டேஸ்போர்ட் ஒரு பறவையின் சிறகை போல விரிந்த நிலையில் அமைந்து, அதன் நடுவே ஒரு V வடிவத்திலான சென்டர் கன்சோலை கொண்டு உள்ளது.

Pic10
இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரில், ஒரு பெரிய அளவிலான பாட் அமையப் பெற்று, அதில் ஸ்பீடோமீட்டரும், கீழே ஒரு MID- யையும் கொண்டு, அதன்மூலம் ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் ஷிஃப்ட் இன்டிகேட்டர் ஆகிய அம்சங்களை கொண்டு உள்ளது. மேலும் இதில் உள்ள இரு சிறிய வட்ட வடிவிலான பாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புறம் அமைந்து, எரிப்பொருள் அளவு மற்றும் என்ஜின் தட்பவெப்ப நிலை ஆகியவற்றை காட்டும் அளவுக்காட்டிகளை (கெஜ்ஜஸ்) கொண்டு உள்ளது. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, இதில் உள்ள எல்லா மீட்டர்களும் எளிதாக படிக்கும் வகையில், நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் டச்சோமீட்டர் இல்லாத தன்மையை எளிதில் உணர முடிகிறது. மேலும் உயர் வகைகளில் கூட இதற்கு எந்த ஒரு தேர்வும் அளிக்கப்படாமல் விடப்பட்டு உள்ளது.

Pic11
இதில் சில்வர் மேலோட்டங்கள் உடன் கூடிய ஒரு V- வடிவிலான நேர்த்தியான வடிவமைப்பை கொண்ட ஸ்டீரிங் வீல் காணப்படுகிறது. இது சரியான அளவில் அல்லது, சற்று பெரிய அளவில் அமைந்து உள்ளது எனலாம். இந்த பிரிவிலேயே முதல் முறையாக இந்த காரின் ஸ்டீரிங் வீல்லில் டில்ட் அட்ஜஸ்ட்மெண்ட் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Pic12
இதன் சென்டர் கன்சோலில் நடுப்பக்க (மிடில்) AC திறப்பிகள் மற்றும் ஒரு 2- டின் ஆடியோ சிஸ்டம் மற்றும் கீழே ஏர் கண்டீஷனிங் கன்ட்ரோல்கள் ஆகியவை காணப்படுகின்றன. இதில் உள்ள சுவிட்ச்சுகள் மற்றும் கினாப்கள் ஆகியவை தகுந்த அளவு மற்றும் தரத்தில் அமைந்து உள்ளன.

Pic13
இதன் கிளோவ் பாக்ஸ் விரிவாகவும், ஆழமாகவும் அமைந்து, உங்களுக்கு தேவைப்படும் அதிக இடவசதியை அளிக்கிறது. மற்றபடி டேஸ்போர்டின் மேற்புறம், முன்பக்க டோர்களில் உள்ள பாட்டில் ஹோல்டர்கள், டோர் பாக்கெட்கள் மற்றும் நடுபக்கத்தில் அமைக்கப்பட்டு உள்ள கப் ஹோல்டர்கள் ஆகிய உருவங்களில், பொருள் வைக்கும் இடங்களை காண முடிகிறது.

Pic14
இந்த பிரிவில் குறிப்பாக முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஆகிய இரண்டிலும் உள்ள சீட்கள், பயணிகளின் தொடைகளுக்கு அடியில் சிறப்பான ஆதாரத்தை அளிப்பவையாக உள்ளன. முன்பக்க சீட்களில் ஒருங்கிணைந்த ஹெட்ரெஸ்ட்கள் காணப்படுவதோடு, அவை மிகவும் கச்சிதமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளதோடு, அதன் குஷனிங் கூட சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவிலேயே பின்பக்கத்தில் சிறந்த இடவசதி கொண்ட கார்களில் இதுவும் என்ற சிறப்பை பெற்று உள்ளது (சாண்ட்ரோ மற்றும் i10 ஆகியவற்றின் அதே அளவிலான வீல்பேஸை, இயான் கொண்டு இருப்பதை வைத்து ஒப்பிட்டாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை).

Pic15
இதில் உள்ள 215 லிட்டர் அளவிலான பூட் ஸ்பேஸ் மூலம் உங்களிடம் உள்ள எல்லா சரக்குகளையும் காரின் பின்பக்கத்தில் நேர்த்தியாக அடுக்கி வைத்து விட்டு, எளிதாக நீங்கள் பயணிக்க முடியும். ஆல்டோ காரில் உள்ள 177 லிட்டர் மற்றும் நானோவின் மோசமான 80 லிட்டர் ஆகியவற்றை முன் நிறுத்தி பார்க்கும் போது, பல மைல்களை கடந்து இந்த பிரிவிலேயே மிகப்பெரிய பூட் ஸ்பேஸை கொண்ட கார்களில் ஒன்றாக இது திகழ்கிறது. சமீபத்தில் புதிதாக வெளியிடப்பட்ட ரெனால்ட் க்விட் கார் மட்டுமே தனது 300 லிட்டர் பூட் ஸ்பேஸ் மூலம் இயானை முறியடித்து முன்னணி வகிக்கிறது.

2

செயல்திறன்


தற்போது ஹூண்டாய் இயானில் 0.8L iRDE என்ஜின் மற்றும் 1.0L காப்பா என்ஜின் என்ற இரு பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் உடன் கிடைக்கிறது.

இயான் 0.8L iRDE


Pic16
இந்த ஹூண்டாய் இயான் 0.8 லிட்டர் iRDE, ஒரு 814 cc, 3- சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் ஆற்றலை பெற்று, 5500 rpm-ல் ஒரு அதிகபட்ச ஆற்றலான 55 bhp- யும், 4000 rpm-ல் அதிகபட்ச முடுக்குவிசையான 76 Nm- யும் வெளியிடுகிறது. இதே யூனிட்டை பயன்படுத்தி ஆற்றலை பெறும் i10-ல் இதில் இருந்து ஒரு சிலிண்டர் பறிக்கப்பட்ட நிலையில், ஒரு 5- ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டதாக செயல்படுகிறது. இந்த என்ஜின் சிறப்பான முறையில் ரிபைன் செய்யப்பட்டதாக இருந்தாலும், கியர் லிவர் மூலமே என்ஜின் ஸ்டார்ட் ஆகும் என்பது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்கிறது. அதிகபட்ச எரிப்பொருள் சிக்கனத்தை அளிக்கும் வகையில் இந்த என்ஜின் வடிவமைக்கப்பட்டு உள்ளதால், இதில் தனித்தன்மை வாய்ந்த செயல்திறனை நாம் எதிர்பார்க்க முடியாது. நகரப் பகுதிகளில் ஓட்டுவதற்கு இந்த 3- சிலிண்டர் யூனிட் மிகவும் ஏற்றதாக இருக்கிறது. இதன் தொரோட்டில் செயல்பாடு மற்றும் லோ என்டு ஆற்றல் வெளியீடு ஆகியவை மிகவும் மோசமானதாக இல்லை. குறுகலான அளவில் அமைந்த ஆக்சிலரேஷனுக்கு இந்த என்ஜின் சிறப்பான செயல்பாட்டை அளிப்பதோடு, நெடுஞ்சாலைகளில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் எந்த தடையும் இன்றி சீறிப் பாய்ந்து செல்வதிலும் சளைப்பது இல்லை. ஆனால் இது ஒரு நெரிசல் மிகுந்த நகரச் சாலை அல்லது நெடுஞ்சாலை என்று எதுவாக இருந்தாலும், நீங்கள் விரும்பும் ஒரு சிறப்பான செயல்திறனை பெறுவதற்கு, உங்களிடம் இருந்து கியர்பாக்ஸ் ஒரு ஆரோக்கியமான செய்முறையை எதிர்பார்க்கிறது. உங்களின் வாகனம் ஓட்டும் அனுபவத்திலேயே மிகவும் இலகுவான கிளெச்சுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். மேலும் இது ஒரு இலகுவான ஸ்டீரிங் உடன் இணைந்து செயலாற்றும் போது, நகர் பகுதியில் இந்த காரை ஓட்டுவதற்கு எந்த கடினத் தன்மையையும் உணர முடிவதில்லை. நமது விருப்பதற்கு ஏற்ப, இதன் ஸ்டீரிங் வீல் சிறியதாகவும், மிகவும் எடைக் குறைந்தாகவும் அமைந்து உள்ளதால், நெடுஞ்சாலையில் நீங்கள் மூன்று இலக்க வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும் போது, இது ஒரு பெரிய பிரச்சனையாக நிலை நிற்கிறது. ஸ்டீரிங் குறித்த விமர்சனங்கள் குறைவாக இருப்பதால், உயர் வேகங்கள் மற்றும் வளைவுகளில் பயத்தை ஏற்படுத்துவதாக அமைந்து உள்ளது.

3

Eon 1.0L Kappa


Pic17
ஆல்டோ காருக்கு சரியான போட்டியாக அமையும் வகையில், ஹூண்டாய் நிறுவனத்தின் மூலம் இயான் காருக்கு 1.0- லிட்டர் காப்பா என்ஜினும் அளிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த காருக்கு ஒரு 0.8- லிட்டர் மற்றும் ஒரு 1.0- லிட்டர் என்று இரு வகையான என்ஜின் தேர்வுகளை வழங்குகிறது. இந்த இயான் 1.0- லிட்டர் காப்பா காருக்கு ஆற்றலை அளிக்கும் ஒரு 998 cc, 3- சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் 6200 rpm-ல் 68 bhp ஆற்றலும், 3500 rpm-ல் ஒரு அதிகபட்ச முடுக்குவிசையான 94 Nm-யும் அளிக்கிறது. இயானின் 0.8- லிட்டர் காரின் சற்று வேகம் குறைந்ததாக கருதுபவர்களுக்கு, ஒரு 5- ஸ்பீடு மேனுவல் கியர் உடன் பொருத்தப்பட்ட இயான் 1.0- லிட்டர் கார் பொருத்தமாக இருக்கும். 1.0- லிட்டர் என்ஜினில் ஒரு பெரிய அளவிலான வேறுபாடு இல்லாவிட்டாலும், இன்னும் சிறப்பாக செயல்படும் என்ஜினாக செயல்படுகிறது. மேலும் சிறிய என்ஜின் மூலம் ஏற்படும் வழுக்கல் தன்மையின் மீது ஹூண்டாய் அதிக கவனம் செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இயந்திரவியலில் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில் இயான் 1.0 லிட்டர் கூட 0.8 லிட்டரை போலவே தான் செயல்படுகிறது என்றாலும், சற்று அதிக திடமான செயல்பாட்டை கொண்டு உள்ளது. இந்த 1.0 லிட்டர் இயான் கார், மேக்னா+(O) வகையில் மட்டுமே கிடைக்கிறது.

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


Pic18
ஓட்டும் தரம் மற்றும் கையாளும் திறனை பொறுத்த வரை, 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் ஆகிய இரு வகைகளும் ஒரே மாதிரியான செயல்பாட்டையே கொண்டு உள்ளன. எனவே சஸ்பென்ஸன் செட்அப்பில் எந்த வித வேறுபாடும் இல்லை. இந்த ஹூண்டாய் இயானின் முன்பக்கத்தில் குறிப்பிட்ட மெக்பியர்சன் ஸ்ட்ரூட்டையும், பின்பக்கத்தில் டார்சன் பீம் ஆக்ஸிலும் சேர்ந்து சஸ்பென்ஸன் பணியில் ஈடுபடுகின்றன. சாலைகள் நேர்த்தியாக இருக்கும் வரை, இயானும் இதமான பயணத்தை அளிக்கிறது. அதே நேரத்தில் எளிய அதிர்வுகளை எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இவை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் ஒரு கடினமான குண்டும் குழியும் உள்ள கடினமான சாலையில் பயணிக்கும் போது, இயானில் ஒவ்வொரு பெரிய குழிகளின் அதிர்வுகளையும் அணு அணுவாக உங்களால் உணர முடிகிறது. இயான் காரின் கையாளும் திறனை குறித்து பார்க்கும் போது, நம்மால் கூட முடியும் ஒரே ஒரு காரியம் என்றால், அது யூகிக்கக் கூடியது ஆகும். நகர் புறத்தில் உள்ள சாலை நெரிசலிலும் எந்த பிரச்சனையும் செய்யாமல், ஹூண்டாய் இயான் தனது பணியை நேர்த்தியான முறையில் மேற்கொள்கிறது. நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, நேர்க் கோட்டு நிலைப்புத் தன்மை (ஸ்ட்ரேய்ட் லைன் ஸ்டேபிலிட்டி) நன்றாக உள்ளது. ஆனால் வளைவுகளில் திரும்பும் போது, நமது நம்பிக்கையை நிலைக் குழைந்து போகும்படி நடந்து கொள்கிறது. இந்த காரில் உள்ள மெல்லிய டயர்களே, இதற்கு முக்கிய காரணமாக இருப்பதால் தான், இதை எவ்வளவு சீக்கிரத்தில் விரிவான டயர்களாக மேம்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். இந்த கார்களின் டயர்கள் அதிக அழுத்தத்திற்கு உட்படும் போது, அதை தாக்குபிடிக்க நேரம் எடுத்துக் கொள்வதில்லை என்பதால், காரின் பாடி சுழன்றுவிடும் (பாடி ரோல்) அபாயமும் நேரிட வாய்ப்பு உள்ளது. இந்த எடைக் குறைந்த ஸ்டீரிங்கை பயன்படுத்தி நகர் வலம் வருவது எளிதாக இருந்தாலும், நெடுஞ்சாலை பயணங்களுக்கு இது ஏறக்குறைய ஏற்புடையது அல்ல என்ற விமர்சனத்தை பெறுகிறது. இதில் உள்ள பிரேக்குகளுக்கு ஒரு நல்ல பிடிப்பு காணப்படுவதோடு, அதிக வேகத்தில் செல்லும் போதும் பிரேக் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்கிறது.

பாதுகாப்பு


Pic19
ஹூண்டாய் இயானின் பாதுகாப்பு அம்சங்களில், ரீஇன்ஃபோர்ஸ்டு பாடி அமைப்பு, முன்பக்க மற்றும் பின்பக்க சீட் பெல்ட்கள், குழந்தைகள் பாதுகாப்பு (சைல்டு சேஃப்ட்டி) பின்பக்க டோர் லாக்குகள், என்ஜின் இம்மொபைலைஸர், முன்பக்க ஃபேக் லெம்ப்கள் மற்றும் ஒரு வகையில் மட்டும் (ஸ்போர்ட்ஸ்) டிரைவர் ஏர்பேக் ஆகியவை உட்படுகின்றன.

4

வகைகள்


ஹூண்டாய் இயான் காரின் ஆறு வகைகளில், 0.8 லிட்டர் பதிப்பிற்கு D- லைட், D- லைட்+, இரா+, மேக்னா+ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய ஐந்தும், 1.0 லிட்டர் பதிப்பிற்கு மேக்னா+ (O) என்ற ஒன்றும் அளிக்கப்பட்டு உள்ளது.

5
மிகவும் அடிப்படை வகையான உள்ள D- லைட் காரில், முன்பக்க மற்றும் பின்பக்க சீட் பெல்ட்கள், என்ஜின் இம்மொபைலைஸர், ஒருங்கிணைந்த ஸ்பாயிலர், இருக்கையை மடிக்க கூடிய வசதி கொண்ட பின்பக்க சீட், இரட்டை ட்ரிப் மீட்டர் மற்றும் ரிமோட் பியூயல் லிட் ஓப்பனர் மற்றும் டெயில் கேட் ரிலீஸ் ஆகிய அம்சங்களை கொண்டு உள்ளது. D- லைட்+ வகையில் முன்பக்க ஸ்பீக்கர் கிரில், மிகவும் தேவைப்பட்ட ஏர் கண்டீஷனர் மற்றும் பவர் ஸ்டீரிங் ஆகிய அம்சங்களை கொண்டு உள்ளது. இரா+ வகையில் டின்ட்டு கிளாஸை தவிர, LPG எரிப்பொருள் மூலம் (பியூயல் சோர்ஸ்), பாடி நிறத்தில் அமைந்த பம்பர், சென்டர் பெஸ்சிக்காவில் உள்ள சில்வர் பயன்பாடு, முன்பக்க டோர் மேப் உடன் பாட்டில் ஹோல்டர், ஆற்றல் வெளியீடு, முன்பக்க பவர் விண்டோக்கள் மற்றும் முன்பக்க டோர் ஆம்ரெஸ்ட் போன்ற அம்சங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த கும்பலில் எங்களுக்கு பிடித்தமான தேர்வாக உள்ள மேக்னா+ வகையில், சென்ட்ரல் லாக்கிங், உள் இருந்து கொண்டே மாற்றி அமைக்கும் வசதி கொண்ட விங் மிரர்கள், பயணிகள் பக்க விங் மிரர், டில்ட் ஸ்டீரிங், ரூஃப் ஆன்டினா, முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்பீக்கர் கிரில், பின்பக்க பார்சல் ட்ரே, 2 டின் ரேடியோ + MP3 ஆடியோ ஆகிய அம்சங்கள் அளிக்கப்படுகிறது. உயர் தர வகையான ஸ்போர்ட்ஸ் மூலம் உங்களுக்கு கீ லெஸ் என்ட்ரி, முன்பக்க ஃபேக் லெம்ப்கள், டிரைவர் ஏர்பேக், பாடி நிறத்தில் அமைந்த ORVM-கள் மற்றும் டோர் ஹேண்டில்கள் மற்றும் மெட்டாலிக் பணித் தீர்ப்பை பெற்ற 3- ஸ்போக் ஸ்டீரிங் வீல் ஆகிய அம்சங்கள் கிடைக்கின்றன. மேக்னா+ (O) வகையில், கீ லெஸ் என்ட்ரி போன்ற மற்ற எல்லா வகைகளில் உள்ள அம்சங்களையும் கடந்து நிற்கும், முன்பக்க ஃபேக் லெம்ப்கள், பாடி நிறத்தில் அமைந்த விங் மிரர்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள் ஆகியவையும் கூட்டி அளிக்கப்படுகிறது.

தீர்ப்பு


Pic20
ஹூண்டாய் இயான் கார் அறிமுகமான அதே காலக் கட்டத்தில் களமிறக்கப்பட்ட மற்ற பல கார்களிலும், மற்ற நிறுவனங்களால் (க்விட் மூலம் ரெனால்ட் நிறுவனம் களமிறக்கியது) அளிக்கப்படாத பல காரியங்களையும் அளித்து, இந்த பிரிவிலேயே சிறந்த தன்மையிலான கட்டமைப்பு தரம், சிறந்த எரிப்பொருள் சிக்கனம் மற்றும் எண்ணற்ற அம்சங்களின் மூலம் ஒரு பார்வைக்கு இனிதான காரை அளித்து உள்ளது. இது ஹூண்டாயின் குறிப்பிடத்தக்க பாணி ஆகும். முடிவில்லா காலமாக முன்னணி வகித்து வரும் ஆல்டோ காரில் அளிக்கப்படுவதை விடவும், ஏறக்குறைய முன்னணியை எட்டிவிட்ட ரெனால்ட் க்விட் காரை விடவும், இயான் கார் சிறந்ததாக உள்ளது. ஏனெனில் மேற்கூறிய இரண்டிற்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறைவாக காணப்படுவதால், நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. க்விட் காரை விட இயானில் உள்ள ஒரு மிகப்பெரிய லாபகரமான விஷயம் என்னவென்றால், இதை நாம் எந்த காத்திருப்பு காலமும் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடிகிறது. அதே நேரத்தில், இந்த பிரிவில் கத்துக் குட்டியாக உள்ள க்விட் காருக்கு அதிக தோற்ற பொலிவு இருப்பது குறிப்பிடத்தக்கது.