ஹூண்டாய் எலன்ட்ரா

` 12.9 - 19.9 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்டுகள்:


ஏப்ரல் 20, 2015 : ஈன்டேய் இந்தியா அதன் ஃபேஸ்லிஃப்ட் வகையான Elantra-வினை ரூ. 14.13 லட்சம் முதல் ரூ. 16.67 லட்சம் விலையில் வெளிக்கொண்டுவந்துள்ளது (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). எந்திர ரீதியான எந்தவித மாற்றமும் இன்றி, ஒப்பனைப் பொருட்கள் மட்டுமே மாற்றம் பெற்றுள்ளன. 2015 Elantra LED கைடு லைட்டுடன் கூடிய புரொஜெக்டர் முகப்பு விளக்குகள், புதிய 10 ஸ்போக் 16 இஞ்ச் அல்லாய் வீல்கள், LED எஃபக்ட் பின்புற காம்பினேஷன் விளக்குகள் மற்றும் குரோம் பூசப்பட்ட எக்சாஸ்ட் ஆகிய அம்சங்களுடன் இப்போது வருகிறது. கேபினுக்குள், 2015 Elantra-வில் ஸ்போர்ட்டி கருப்பு உட்புறங்கள், தோல் இருக்கை உறை, மெட்டாலிக் ஸ்கஃப் பிளேட்டுகள் மற்றும் ஸ்போர்ட்டி அலுமினியம் பெடல்கள் உள்ளன. 4.3 இஞ்ச் கலர் TFT LCD டிஸ்பிளேயுடன் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள் வாகன ஓட்டும் சொகுசை அளிக்கின்றன. புளூடூத் இணைப்பு மற்றும் பின்புற கேமரா டிஸ்பிளேயினையும் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் வழங்குகிறது.

ஒட்டுமொத்தமாக:


உலக அளவில் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனமும், இந்தியாவில் இரண்டாவது பெரிய தயாரிப்பாளருமான ஈன்டேய் மோட்டார்ஸ் அதன் முதன்மை செடானின் மேம்பட்ட வடிவமான Elantra-வினை இந்தத் துணைக் கண்டத்தில் வெளிக்கொணர்ந்துள்ளது. சமீபத்திய வடிவத்தில் பல ஒப்பனை மாற்றங்கள் உட்புறமும் வெளிப்புறத்திலும் உள்ளன. இந்த மாற்றங்கள் இதன் நவீன தோற்றத்தினை அதிகரிக்கிறது. ஒப்பனை மாற்றங்கள் தவிர, கேமரா மற்றும் மின் உதவியால் சரிசெய்யக்கூடிய மடக்கக்கூடிய வெளிப்புற கண்ணாடிகள் உட்பட பின்புற பார்க்கிங் உதவி அமைப்பு போன்ற சில செயல்ரீதியான அம்சங்களும் இந்த வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மற்றொரு புறம், அதன் தொழில்நுட்ப விவரக்குறிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினுடன் கிடைக்கிறது. இதன் முந்தைய வகையைப் போன்றே, இந்த மாற்றம் செய்யப்பட்ட வகையும் வாங்குபவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்பத் தேர்ந்தெடுக்கும் விதத்தில் மொத்தம் ஏழு விதத்தில் வருகிறது. 1797cc இடமாற்றம் செய்யும் 1.8 லிட்டர் என்ஜின் இதன் பெட்ரோல் டிரிம்களில் உள்ளது. இதன் டீசல் டிரிம்களில் 1582cc மில் உள்ளது. இது, 126.2bhp சக்தியை 259.8Nm முறுக்கு விசையுடன் வெளியிடும் திறனுடையது. முந்தைய வகையைப் போன்றே அதன் பிரேக்கிங் தொழில் நுட்பத்தை தயாரிப்பாளர் அப்படியே வைத்திருக்கிறார். EBD-யுடன் உயர்வான ABS மற்றும் பிரேக் அசிஸ்ட் ஃபங்ஷன்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

அதன் வெளிப்புறங்களைப் பொருத்தவரை, இந்த சமீபத்திய தலைமுறை செடானில் புதுப்பிக்கப்பட்ட பனிமூட்ட விளக்கு கன்சோலுடன் உள்ள மேம்பட்ட பம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரம், LED கைடு லைட்டுடன் புரொஜெக்டர் முகப்பு விளக்குகளையும் பெற்றுள்ளது. இவை இதன் முகப்பிற்கு ஒரு டைனமிக் தோற்றத்தை அளிக்கின்றன. இவைதவிர, இதன் பெல்ட்லை குரோமினால் இழைக்கப்பட்டு இதன் ஃபென்டர்கள் புதிய வடிவ அல்லாய் வீல்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இதன் உட்புறங்களிலும் தயாரிப்பாளர் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். கேபினுக்கு முழுகருப்பு நிற ஸ்கீம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஒரு புதிய தரை கன்சோல் பாக்ஸ் மற்றும் அதில் ஆர்ம்ரெஸ்டுடன் அலுமினியம் பெடல்களும் இதற்குக் கிடைக்கின்றன. பின்புறம் உள்ள பயணிகளுக்காக குளிர் சாதன வென்டுகளும் இதில் உள்ளன. கூடுதலாக, இதன் டேஷ்போர்டில் ஒரு சிறிய மாற்றம் பெற்றுள்ளது. ஒரு புதிய 4.3-இஞ்ச் இன்ஃபோடெய்ன்மென்ட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாற்றம் பெற்ற கண்காணிக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளிருப்பவர்களுக்கு அருமையான தோற்றத்தை இது அளிக்கிறது. இவை தவிர, பழைய மாடலில் உள்ள சொகுசு மற்றும் பாதுகாப்பு போன்ற பிற அம்சங்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் போதுமான கேபின் இடவசதி உள்ளது. இதில் குறைந்தது ஐந்து பயணிகள் பயணிக்க முடியும். இதில் ஒரு பெரிய டிக்கி அறையும், நீண்ட தூர ஓய்வு நாள் பயணத்திற்குத் திட்டமிட உதவும் பெரிய எரிபொருள் டேங்கும் உள்ளன. மின்சார அடிமுதுகு சப்போர்ட் உள்ள 10-வழி பவர் அட்ஜஸ்டபுள் ஓட்டுனரின் இருக்கை, இரட்டைப் பகுதி முழு ஆட்டோமேட்டிக் ஏசி யூனிட், ஒரு 2-DIN ஆடியோ சிஸ்டம் மற்றும் பல இத்தகைய சாதனங்கள் அடங்கிய மேம்பட்ட சொகுசு அம்சங்களுடன் இந்த வாகனம் இப்போது கிடைக்கிறது. பாதுகாப்பைப் பொருத்தவரை, சாலைப் பாதுகாப்புக்கு அவசியமான ஆறு காற்றுப் பைகள், மின்னணு ஸ்டபிலிட்டி புரோகிராம் மற்றும் வாகன ஸ்டபிலிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றையும் தயாரிப்பாளர் இதில்வழங்கியுள்ளார். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இது டொயோடா கொரோலா, ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் செவ்ரொலெட் குரூஸ் ஆகியவற்றுக்கு இணையாக தற்போது வைக்கப்படுகிறது.

மைலேஜும் எரிபொருள் சிக்கனமும்:


என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால், இதன் முந்தைய வகையைப் போன்றே அதே மைலேஜையே தருகிறது. இதன் எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்க உதவும் ஒரு காமன் ரெயில் டிரெக்ட் இன்ஜெக்‌ஷன் எரிபொருள் சப்ளை அமைப்புடன் இதன் 1.6 லிட்டர் டீசல் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 18Kmpl மைலேஜினை வாகனம் அளிப்பதற்கு இந்த என்ஜின் உதவுகிறது. இது 22.7 Kmplவரை உயர்கிறது, இது உண்மையில் சிறந்தது. இருப்பினும், இதன் ஆட்டோமேட்டிக் வேரியன்ட் அதிகபட்சமாக 19.5 Kmpl மைலேஜை தரக்கூடியது. மற்றொரு புறம், இதன் பெட்ரோல் மில்லுடன் அதிகம் பேசப்படும் மல்டி பாய்ண்ட் எரிபொருள் இன்ஜெக்‌ஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இது அதிகபட்சமாக 16.3kmpl மைலேஜ் தரக்கூடியது. ஆனால், இதன் ஆட்டோமேட்டிக் வகை எக்ஸ்பிரஸ் சாலைகளில் 14.5 kmpl மைலேஜ் தருகிறது.

சக்தி:


பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் DOHC வால்வு வடிவமைப்பின் அடிப்படையில் 4 சிலிண்டர்கள், 8 வால்வுகள் உள்ளன. இருப்பினும், இதன் பெட்ரோல் மில் 1797cc சக்தியை அளிக்கிறது. அதிகபட்சமாக 147.5bhp-யுடன் 177.5Nm உச்ச முறுக்கு விசையை அளிக்கக்கூடியதாக உள்ளது. மற்றொரு புறம், இதன் 1582cc டீசல் மில்லினால் 126.3bhp உச்ச சக்தியை அளிப்பதோடு 259.9Nm உயர்ந்த முறுக்கு விசையைத் தர முடியும்.

அக்சிலரேஷனும் பிக்கப்பும்:


இந்த இரு என்ஜின்களையும் ஆறு வேக மேனுவல் மற்றம் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டையும் தேர்ந்தெடுக்கும் விதத்தில் நிறுவனம் வழங்குகிறது. டீசல் மோட்டாருடன் உள்ள வேரியன்டினால் 0 முதல் 100Kmph வேகத்தை 15 நொடிகளில் அடைய முடியும். அதே நேரம், இதன் உச்ச வெகமான ஏறக்குறைய 190Kmph வேகத்தை வாகனம் எட்டச் செய்கிறது. மற்றொரு புறம், பெட்ரோல் வேரியன்டுகள் அதன் உச்ச வேகமான 195Kmph வேகத்தை எட்ட முடிவதோடு நிற்கும் நிலையிலிருந்து 100Kmph வேகத்தை ஏறக்குறைய 12 நொடிகளில் கடக்கச் செய்கிறது.

வெளிப்புறங்கள்:


ஈன்டேய் Elantra-வின் சமீபத்திய வடிவத்திற்கு தயாரிப்பாளர் சிறு மாற்றங்களைக் கொடுத்து அதன் பாடி அமைப்பை 'ஃபுளூயிடிக்' டிசைன் தத்துவத்தையும் தக்க வைத்துள்ளார். முதலில், முன்புறத்தைப் பொருத்தவரை, இதில் சிறிது மாற்றம்பெற்ற பம்பர் உள்ளது. இதில் பனிமூட்ட விளக்கு கன்சோல்கள் ஒரு புதிய வடிவமைப்புடன் உள்ளன. அதே நேரம், பனிமூட்டட விளக்குகள் சிறிது பெரியதாக இருப்பதால் இதன் ஸ்டைல் கூடியுள்ளது. இதன் முகப்பு விளக்கு கிளஸ்டர் தக்க வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் LED கைடு லைட்டுகளுடன் புரொஜெக்டர் முகப்பு விளளக்குகள் உள்ளன. இது முகப்பிற்கு ஒரு டைனமிக் தோற்றத்தை வழங்குகிறது. ஆச்சரியமூட்டும் வகையில், இந்த சீரீஸின் எல்லா வேரியன்டுகளும் இந்த லைட்டிங் அம்சத்தைப் பெறுகின்றன. இவை தவிர, வேறு எந்த மாற்றமும் முகப்பில் செய்யப்படவில்லை. இதன் மேல் ரேடியேட்டர் கிரில் மிகச் சீறியதாகத் தோன்றுகிறது. ஒரு குரோம் பிளேட் பட்டையுடன் அழகாக இது பொருத்தப்பட்டுள்ளதோடு மேலும் கம்பெனியின் லோகோ இதில் பொறிக்கப்பட்டுள்ளது. கீழ் கிரில் பெரியதாக உள்ளது. இதில் படுக்கை வச பட்டைகள் கருப்பு நிறத்தில் உள்ளன.

அதே நேரம், ஃபுளூயிடிக் வரிகளோடு உள்ள தெளிவான பானெட் அதன் காற்றியக்க அமைப்பை மேம்படுத்துகிறது. இந்த பக்கத் தொற்றத்தைப் பொருத்தவரை, அதன் ஃபுளூயிடிக் வரிகளின் காரணமாக மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. இந்த வரிகள் முன் வீல் ஆர்ச்சிலிருந்து பின் கேட்வரை உள்ளது. குரோம் பிளேட்டாலான கதவு கைப்பிடிகள் மற்றும் பெல்ட் லைன் மோல்டிங் மற்றும் கருப்பு நிற B பில்லர்கள் போன்ற டிரென்டியான வெளிப்புற அம்சங்களும் இதற்கு உள்ளன. வெளிப்புற கண்ணாடி மூடிகள் பாடி நிறத்திலேயே சைடு டர்ன் பிளிங்கர்களுடன் இணந்துள்ளது. இந்த மாடலில் உள்ள எல்லா வேரியன்டுகளிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட 10 ஸ்போக் வடிவமைப்பு 16-இஞ்ச் அல்லாய் வீல்கள் வருகின்றன. இவை இதன் ஸ்டைலை மேம்படுத்துகின்றன. பின் முனையைப் பொருத்தவரை, இரட்டை டோன் பம்பரில் கருப்பு நிற கீழ் கிளாடிங்குடன் குரோம் பிளேட்டாலான எக்சாஸ்ட் பைப்பும் இப்போது பொருத்தப்பட்டுள்ளன. டெயில் லைட் கிளஸ்டரின் வடிவமைப்பு அதே அப்படியே தோன்றினாலும் LED ரேக் லைட்டுகள் இதில் உள்ளன. டெயில்கேட் ஒரு தனித்த அமைப்புடன் ஒரு கூபேயின் நிழற்சாயலை அளிக்கும் விதத்தில் இருக்கும். இது மேலும் குரோம் பிளேட் ஸ்டிரிப்பினால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது மேலும் கம்பெனியின் லோகோவினால் பொறிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற அளவுகள்:


இதன் பம்பர்களில் செய்யப்பட்ட மாற்றத்தைத் தவிர அதன் வெளி பரிமாணங்களில் கம்பெனி வேறு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதன் ஒட்டுமொத்த நீளம் 4530 மி.மீ. இதன் அகலம் 1775 மி.மீ (வெளிப்புற கண்ணாடிகள் உட்பட). இந்த சொகுசு செடானின் உயரம் 1470 மி.மீ., வீல்பேஸ் 2700 மி.மீ. இது உண்மையில் நல்ல நீளமாகும்.

உட்புறங்கள்:


இதன் உட்புற வடிவமைப்புகளில் தயாரிப்பாளர் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். கேபினுக்கு முழுகருப்பு நிற ஸ்கீம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், கேபினுக்கு ஒரு ராஜ தோற்றத்தை அளிக்கும் 'Elantra' என்ற எழுத்துகளுடன் பிரிமியம் டோர் ஸ்கஃப் பிளேட்ஸ் மற்றும் அலுமினியம் பெடல்கள் ஆகிய ஸ்டைலான அம்சங்களும் இதில் உள்ளன. இதன் காக்பிட் பகுதியில் ஒரு கப் ஹோல்டர் மற்றும் ஒரு மத்திய ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை உள்ள மாற்றியமைக்கப்பட்ட ஃபுளோர் கன்சோல் இப்போது பொருத்தப்பட்டுள்ளது. இதன் டேஷ்போர்டும்கூட மாற்றம் பெற்றுள்ளது. ஒரு 4.3-இஞ்ச் கலர் டிஸ்பிளே உள்ள ஒரு நல்ல தரமான இன்ஃபோடெய்ன்மென்ட் இப்போது பொருத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக வாடிக்கையாளரை ஆச்சரியப்படுத்தும் வகையில், இந்த வாகனத்தில் ஒரு குளிர்விக்கப்படும் கிளவ் பாக்ஸ் அறையும் உள்ளது. ஸ்டியரியங் வீல் வடிவமைப்பு தக்க வைக்கப்பட்டிருந்தாலும் இதை தோல் உறை மூடியுள்ளது. மேலும், குரோம் அக்சென்டுகளால் அழகுபடுத்தப்பட்டு ஆடியோ கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிது மாற்றம் செய்யப்பட்ட சூப்பர்விஷன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இந்த செடானில் இப்போது பொருத்தப்பட்டு அவர்களுடைய Santa Fe SUV-யில் பயன்படுத்தப்பட்டுள்ளது போன்றே தோன்றுகிறது. இவை தவிர, இதன் முன் கேபினில் மின் சக்தியால் 10 பல்வேறு வழிகளில் சரிசெய்யத்தக்க ஓட்டுனரின் இருக்கையும் இப்போது பொருத்தப்பட்டுள்ளது. உள்ளிருக்கும் எல்லா இருக்கைகளும் மெத்தென்று உள்ளன. பயணிக்கும்போது நல்ல சொகுசு கிடைப்பதற்காக ஹெட் ரெஸ்ட்ரெய்ன்டுகளுடன் சைடு போல்ஸ்டர்களும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றுக்கு பிரிமியம் தோல் உறைகள் கொடுக்கப்பட்டுள்ள. இருப்பினும், இதன் தொடக்க மற்றும் நடுத்தர வேரியன்டுகளின் இருக்கைகள் நல்ல தரமான துணி உறைகளால் உறையிடப்பட்டுள்ளன. இப்போது, பின் கேபினிலும் குளிர் சாதன வென்டடுகள் கொடுக்கப்பட்டு வாகன ஓட்டும் சுகத்தை மேலும் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த செடானில் ஒரு பின் இருக்கை மைய ஆர்ம் ரெஸ்டும் அதில் சேமிப்புப் பெட்டியும், 12V மின் துளையும் உள்ளன. முன் இருக்கைகளின் பின்புறம் பேக் பாக்கெட்டுகளும் பாட்டில் ஹோல்டர்களும் பல பயன்பாட்டு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை, பயணிகளுக்கான வசதியை மேலும் அதிகரிக்கிறன.

உட்புற சொகுசு:


இந்த செடான் மொத்த நான்கு டிரிம்களில் கிடைக்கிறது. அவையாவன Base, S, SX and SX (AT). இதன் பேஸ் வெரியன்டில் உயரத்தை சரிசெய்யத்தக்க ஓட்டுனரின் இருக்கை, டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஃபங்ஷனுடைய மின் உதவிபெறும் ஸ்டீயரிங், பின்புற ஏசி வென்டுகள், சாவியில்லா நுழைவோடு மடிக்கக்கூடிய சாவி மற்றும் பல செயல்பாட்டு ஸ்டீயரிங் வீல் உட்பட்ட பல அம்சங்கள் உள்ளன. இவற்றோடு, ஆட்டோ டிஃபாகர், இரவு / பகல் உட்புற பின்புறம் காணும் கண்ணாடி, ஆல்டர்நேட்டர் மேலான்மை அமைப்பு, மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஷிஃப்ட் இன்டிகேட்டரோடு இக்கொ டிரைவிங், பாதுகாப்பு எஸ்கார்ட் முகப்பு விளக்குகள், ஒன் டச் செயல்பாட்டோடுகூடிய பவர் விண்டோக்கள் மற்றும் சேமிப்பு பெட்டியோடு பின்புற இருக்கை ஆர்ம் ரெஸ்ட் ஆகியவையும் உள்ளன. மேலும், சேமிப்புப் பெட்டியுடன் ஸ்லைடிங் முன் மைய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களுடன் உள்ள மின்சாரத்தால் சரிசெய்யத்தக்க வெளிப்புற கண்ணாடிகள் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. உட்புறத்தில் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த உதவும் கிளஸ்டர் அயோனைசருடன் உள்ள தானாக வானியை கட்டுப்படுத்தும் அமைப்பும் இந்த தொடக்க வேரியன்டில் உள்ளது. புஷ் பொத்தான் ஸ்டார்ட்டுடன் உள்ள ஸ்மார்ட் கீ, ECM-ல் டிஸ்பிளேயுடன் பின்புற பார்க்கிங் கேமரா, ஹீட்டிங் ஃபங்ஷனுடன் உள்ள மின்சாரத்தால் மடிக்கக்கூடிய வெளிப்புற கண்ணாடிகள், மற்றும் கொக்கியுடன் உள்ள லக்கேஜ் நெட்டுகள் போன்ற அம்சங்கள் இதன் நடுத்தர S டிரிம்மில் உள்ளன. மற்றொரு புறம், இதன் உயர் வகையான SX வேரியன்டில், ஓட்டுனர் இருக்கை பின்புற பாக்கெட், ஆடியோ ஸ்கிரீனில் டிஸ்பிளேயுடன் பின்புற பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் மோதல் கட்டுப்பாட்டு ஃபங்ஷனுடன் விண்டுஸ்கிரீனுக்கும் கதவுக்கும் சோலார் கண்ணாடி ஆகியவை உள்ளன. அடிமுதுகு சப்போர்ட் உள்ள 10-வழி மின் அட்ஜஸ்டபுள் ஓட்டுனரின் இருக்கையுடன் முன் வென்டிலேட்டட் இருக்கைகளும் இதில் உள்ளன. அதே நேரம், இதன் இருக்கைகள் தோல் உறைகளால் உறையிடப்பட்டுள்ளன. சொகுசினை இது மேலும் அதிகரிக்கிறது.

உட்புற அளவுகள்:


மேலே குறிப்பிட்டது போன்று, இந்த செடான் உட்புறத்தில் அதிக இடவசதியுடையது. குறைந்தது ஐந்து பயணிகள் சௌகரியமாக அமர முடியும். இதில் மிகப் பெரிய 56 லிட்டர் எரிபொருள் டேங்கும் 420 லிட்டர் கொள்ளளவுள்ள டிக்கி அறையும் உள்ளன.

என்ஜினும் செயல்திறனும்:


ஏற்கனவே கூறியது போல், அதன் தொழில்நுட்ப விவரக்குறிப்பில் எந்த மாற்றமும் தயாரிப்பாளரால் செய்யப்படவில்லை. இது தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினுடன் கிடைக்கிறது. 1.8 லிட்டர் NU என்ஜின் இதன் பெட்ரோல் டிரிம்களில் உள்ளது. இதில் 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகள் உள்ளன. DOHC வால்வு வடிவமைப்பை இது பயன்படுத்துகிறது. மேலும், இதில் இரட்டை VTVT (வேரியபுள் டிரிமிங் வால்வ டிரெய்ன்) தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 1797cc என்ஜினால் 6500rpm-ல் 147.4bhp சக்தியை வெளிப்படுத்த முடிவதோடு 6500rpm-ல் 177.5Nm கடுமையான முறுக்குவிசையையும் தர முடியும். ஒரு MPFI (மல்டி பாய்ண்ட் ஃபூயல் இன்ஜெக்‌ஷன்) சப்ளை சிஸ்டமும் இந்த மோட்டாரில் உள்ளது. எரிபொருள் சிக்கனத்தை இதனால் அதிகரிக்க முடியும். மற்றொரு புறம், 1582cc இடமாற்று திறனுடன் உள்ள 1.6-லிட்டர் மோட்டார் டீசல் வகைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் வகையைப் போன்றே அதே DOHC வால்வு வடிவமைப்பின் அடிப்படையிலேயே நான்கு சிலிண்டர்கள் மற்றும் பதினாறு வால்வுகளுடன் இதுவும் உள்ளது. இந்த என்ஜினில் ஒரு காமன் ரெயில் இன்ஜெக்‌ஷன் அமைப்பும் இதன் மின வெளியீட்டை மேம்படுத்தும் ஒரு வேரியபுள் ஜியோமெட்ரி டர்போசார்ஜரும் உள்ளது. 1900 முதல் 27500rpm-ல் 259.9Nm உச்ச முறுக்குவிசையை அளிப்பதுடன் 4000rpm-ல் அதிகபட்சமாக 126.2bhp சக்தியினை அளிக்கவல்லதாக இந்த மோட்டார் உள்ளது. இந்த இரு பவர் பிளான்டுகளுமே ஆறு வேக ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டு அதன் முன் வீல்களுக்கு டார்க்கினை அளிக்கின்றன.

ஸ்டீரியோவும் பிற இணைப்புகளும்:


ஒரு உயர் ரெசொலூஷன் 4.3 இஞ்ச் தொடுதிரை கலர் டிஸ்பிளேயினால் திரையை மாற்றி தயாரிப்பாளர் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டத்தினை மேம்படுத்தியுள்ளார். MP3/CD பிளேயர் மற்றும் FM டியூனர் உள்ள ஒரு மேம்பட்ட 2-DIN மியூசிக் சிஸ்டம் இந்த இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டத்தில் உள்ளது. தடையற்ற ஆடியோ ஸ்டிரீமிங்கிற்கு உதவும் புளூடூத், AUX-In, மற்றும் USB போர்ட்டுக்கான இணைப்புகளும்கூட இதில் உள்ளது. இவை தவிர, தரமான ஒலியை வெளியிடும் இரு டுவீட்டர்களும் உள்ளன. அதே நேரம், இதன் ஸ்டீயரிங் வீலில் பல செயல்பாட்டு ஸ்விட்சுகளும் பொருத்தப்பட்டுள்ளன. அழைப்புகளை ஏற்கவும் தண்டிக்கவும் ஒலி அளவை சரிசெய்யவும் இவை ஓட்டுனருக்கு உதவுகின்றன. மற்றொரு புறம், வாடிக்கையாளர்கள் இந்த பிரிமியம் செடானில் விரும்பிய மாற்றங்களையும் செய்துகொள்ள முடியும். குறிப்பாக அதன் தொடக்க மாடல்களில் தரை விரிப்புகள், பின் பம்பர் பாதகாப்பு, கார்கோ லைனர், முன் பின் மட் ஃபிளாப்புகள், பின்புற ஸ்பாய்லார் மற்றும் பாடி கிராஃபிக்குகள் பொன்றவற்றை இணைத்துக் கொள்ள முடியும்.

வீல்கள்:


இந்த மாடலில் உள்ள எல்லா வேரியன்டுகளிலும் ஸ்டைலான 16-இன்ச் அல்லாய் வீல்கள் 10 ஸ்போக் வடிவில் வருகின்றன. இந்த ஓரங்களில் உயர் திறனுள்ள 205/16 R16 அளவு டியூபில்லாத டயர்கள் உள்ளன. சாலை எந்த நிலையில் இருந்தாலும் வாகனத்தை வழுக்காமல் நல்ல பிடிமானத்துடன் நிலையாக இருக்கவும், இந்த செடானின் ஒட்டுமொத்த விரைவு திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன.

பிரேக்கும் கையாளலும்:


இந்த ஈன்டேய் Elantra மாடலில் மிகச் சிறந்த பிரேக்கிய நுட்பம் உள்ளது. எந்த ஒரு வானிலை சூழலிலும் மிகச் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. இதன் எல்லா வீல்களிலும், உறுதியான டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனோடு மேம்பட்ட பிரேக் கேலிப்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன.' இவற்றோடு ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டமும் மின்னணு பிரெக் அழுத்த பகிர்வும் இவற்றுக்கு உதவுகின்றன. இவை இந்த நுட்பத்தை மேம்படுத்த உதவுகின்றன. முன் ஆக்சிலில் காயில் ஸ்பிரிங்குடன் உள்ள ஒரு மேக்பர்சன் ஸ்டிரட்டும் பின் ஆக்சிலில் டார்ஷன் பீம் வகையான ஒரு சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மேடு பள்ளமான சாலைகளில் வாகனத்தின் நிலைப்புத்தன்மையை அதிகரிக்க இந்த சஸ்பென்ஷன் அமைப்பு உதவுகிறது. வளைவுகளில் வாகனத்தின் நிலைப்புத் திறனை மேம்படுத்தும் ஒரு மின்னணு நிலைப்புத் திறன் திட்டத்துடன் உள்ள வெஹிக்கிள் ஸ்டபிலிட்டி மேனேஜ்மென்ட்டினை இதன் SX வேரியன்டில் தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். துல்லியமாகப் பதிலிருக்கும் மற்றும் கையாளலை எளிதாக்கும் ஒரு உயர் பதிலிருப்பு பவர் அசிஸ்டட் ஸ்டீயரிங் அமைப்பும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு:


Base, S, SX மற்றும் SX (AT) போன்ற பல டிரிம்களில் இந்த ஸ்டைலான செடான் கிடைக்கிறது. பேஸ் டிரிம்மில் இரட்டை முன் காற்றுப் பைகள், மின்னணு பிரேக் ஃபோர்ஸ் பகிர்வுடன் உள்ள ஆன்டி லாக் பிரேக்கிங் அமைப்பு, பின்புற பார்க்கிங் சென்சார்கள், மோதலை உணர்ந்து கதவு திறப்பதும் கிளட்ச் லாக் ஆவதும் போன்ற முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. பின்புற டிஸ்க் பிரேக்குகள், இக்னிஷன் சாவி ரிமைன்டர், டைமருடன் பின்புற டிஃபாகர் மற்றும் உயரத்தைச் சரிசெய்யத்தக்க இருக்கை பெல்ட்டுகள் போன்ற அம்சங்களும்கூட உள்ளன. இவை தவிர, இதன் நடுத்தர வைகையான S டிரிம்மில் பார்க்கிங்கிற்கு பார்வை உதவியை அளிக்கும் எலக்ட்ரோ-குரோமிக் கண்ணாடி போன்ற அம்சங்களும் உள்ளன. மற்றொரு புறம், இதன் SX டிரிம்மில், ஆட்டோமேட்டிக் முகப்பு விளக்குக் கட்டுப்பாடு, வெஹிக்கில் ஸ்டபிலிட்டி மேனேஜ்மென்ட், ஸ்பீடு சென்சிங் ஆட்டோமேட்டிக் டோர் லாக்குகள், பக்க மற்றும் கர்டெய்ன் காற்றுப் பைகள் மற்றும் மின்னணு நிலைப்புத் திறன் திட்டம் ஆகிய அம்சங்கள் உள்ளன.

நிறைகள்:


1. வெளிப்புறங்களும் உட்புறங்களும் ஒரு புத்துணர்ச்சிதரும் புதிய தோற்றம் கொண்டுள்ளன.
2. எல்லா வேரியண்டுகளுக்கும் புரொஜெக்டர் விளக்குகள் ஒரு ஸ்டான்டர்டு அம்சமாக வருகின்றன.
3. பெட்ரோல் என்ஜினின் செயல்திறன் நன்றாக உள்ளது.
4. ஒட்டுனரின் இருக்கை இப்போது 10-வழி மின்சார உதவியால் சரிசெய்யும் வசதி பெற்றுள்ளது.
5. 4.3 இஞ்ச் தொடுதிரை மூலம் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் ஒரு பதிய தோற்றத்தைப் பெற்றுள்ளது.

குறைகள்:


1. டிக்கியின் அளவும் குறைந்தபட்ச கிரவுண்டு கிளியரன்சும் குறைவு.
2. விலை இன்னும் மிக அதிகமாகவே உள்ளது.
3. எரிபொருள் சிக்கனம் மோசமாகவே உள்ளது.
4. தொழில்நுட்ப ரீதியாக புதிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.
5. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை இணைக்க முடியும்