ஹோண்டா மொபிலியோ

` 7.5 - 12.9 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

சிறப்பம்சங்கள் :


பிப்ரவரி 28, 2015: ஹோண்டா மொபிலியோ-வுடன் புகழ்பெற்ற மேடை நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவின் நான்காவது விளம்பரத்தையும் HCIL வெளியிட்டது. இந்த 4வது வர்த்தக விளம்பரத்தில், கபில் ஒரு பெரிய குடும்பத்திற்கு பொழுதுபோக்கு அளிக்கிறார். அறிமுகத்திற்குப்பின், கார் உற்பத்தி நிறுவனம், தற்போதுள்ள MPV வகைகளுடன், இரண்டு புதிய வாகனங்களை சேர்க்கிறது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இவ்வரிசையிலேயே உயர்ந்த ஒரு புதிய வாகனம் – V(O) இதன் விலை 9.46 லட்சம் (பெட்ரோல்) மற்றும் 10.45 லட்சம் (டீசல்) மற்றும் டீசல் மட்டும் – RS(O)-வின் விலை 11.55 லட்சம் ஆகும் (இவ்வனைத்துமே புது டெல்லியில் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்). அது தற்போது 10 வகைகளைக் கொண்டுள்ளது, இவை, E,S,V மற்றும் புதிய உயர்தர வகையான V(O) (பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிற்கும்), அதே சமயத்தில் இவையல்லாத டீசல், RS மற்றும் RS(O) என்ற மேலும் இரண்டு வகைகளாகும்.

தொகுப்பு:


இந்நிறுவனம், நாட்டிலேயே மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும், இது சமீபத்தில், தனது முதன்முதலான ஹோண்டா மொபிலியோ என்ற MPV மாடலை இந்நாட்டின் வாகனச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, இந்நிறுவனம் இந்த வாகனத்தை நான்கு வகைகளில், நுகர்வோர் தேர்ந்தெடுக்க ஏதுவாக பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் என்ற இரண்டு விருப்பத்தேர்வுகளிலும், விற்பனை செய்து வருகிறது. இக்கார் நிறுவனம், இந்த MPV-யை உருவாக்குவதற்காக, தங்களுடைய அமேஸ் சிறு வாகனத்தின் பாடி தளத்தைப் பயன்படுத்தியிருந்தாலும், இது மிகப் பெரிய அளவான, 4386மிமீ மொத்த நீளத்துடன் வருகிறது. இதன் வெளிப்புறங்களின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பது, அதன் பின்புற தோற்றமாகும், இதில் திடமான ஒப்பனைகள் செய்யப்பட்டிருப்பது, இவ்வாகனத்திற்கு பிரமிப்பூட்டும் தோற்றத்தைத் தருகிறது. அதன் முகப்பில் ஒரு கவர்ச்சிகரமான ரேடியேட்டர் கிரில் அமைக்கப்பட்டுள்ளது, இதில் மூன்று குரோம் பூச்சுள்ள ஸ்லாட்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மையத்தில் நிறுவனத்தின் சின்னம் பெரிதாகப் பதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட தலைவிளக்குத் தொகுதி ஒன்றையும், பாடியின் நிறத்திலேயே உள்ள பம்பர்களையும், ஓர் அகலமான வின்ட்ஸ்கிரீன் மற்றும் மேலும் பல அம்சங்களையும்கூட இது கொண்டுள்ளது. மிக உயர்ந்த மாடலில், 10-கம்பிகளையுடைய மிக அழகான அல்லாய் சக்கரங்களின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அடிப்படை மற்றும் நடுத்தர மாடல்களில், வழக்கமான ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் உட்புறத்தில், பல நுகர்பயன் அடிப்படையிலான, பகல் மற்றும் இரவு உட்புறத்தில் அமைந்த பின்புறம் பார்க்கின்ற கண்ணாடி, அறை விளக்கு, சூரியஒளி வைஸர்கள், சேமிப்புப் பகுதிகள் போன்ற மேலும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சமீபத்திய MPV-ல் மிக எளிமையாகத் தோற்றம் தருகின்ற ஒரு விசாலமான கேபின், ஓர் இரட்டைச் சாயல் வர்ண ஸ்கீம் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், டாஷ்போர்டு கருப்பு வண்ணத்தில் உள்ளது. இப்போது, மரப் பேனல்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அதன் உட்புறத் தோற்றம் அதிகபட்ச உயர்தர கவர்ச்சியைப் பெறுகிறது. அதில், ஹீட்டருடன்சகூடிய ஓர் ஏசி சாதனம், 2-DIN ஆடியோ சிஸ்டம், உயரத்தை சரிசெய்து கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை, மின்சார் முறையில் சரிசெய்யக்கூடிய வெளிப்புறக் கண்ணாடிகள் போன்ற ஏராளமான உற்சாகமூட்டும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. அதே நேரத்தில், அதன் RS வகையிலும்கூட 5.7செமீ தொடுதிரைக் காட்சியமைப்பு கொண்ட ஆடியோ வீடியோ நேவிகேஷன் சிஸ்டம் உள்ளது, பின்புற பார்க்கிங் கேமரா, மற்றும் உட்புற மர பேனல்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர, இவ்வாகனத்தில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பது, பயணிகளுக்கு உளைச்சலற்ற சுதந்திரமான ஓட்டும் அனுபவத்தைத் தருகிறது. இந்த அம்சங்களின் பட்டியலில், முன்புற பயணிகளுக்கான காற்றுப்பைகள், பாதசாரிகளுக்கு ஏற்படும் காயத்தைக் குறைக்கும் தொழில்நுட்பம் மற்றும் ACE (மேம்பட்ட ஒத்திசைவுப் பொறியியல்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. தனது டீசல் வகைகள் அனைத்திற்கும், இக்கார் உற்பத்தி நிறுவனம், எலக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷனுடன்கூடிய ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை நிலையாக வழங்குகிறது. தொழில்நுட்ப விவரங்களை எடுத்துக் கொள்ளும்போது, அதன் பெட்ரோல் மாடலில், i-VTEC பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 1497சிசி-யை இடமாற்றம் செய்கிறது மற்றும் 145Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து 117.3bhp உருவாக்கும் திறன் பெற்றுள்ளது. அதே நேரத்தில், அதன் டீசல் மாடல், எரிபொருள் சிக்கனம் கொண்ட 1.5-லிட்டர் i-DTEC மோட்டாருடன் வருகிறது, இது 200Nm உச்ச முறுக்குத்திறனை உருவாக்குவதுடன் சேர்த்து, அதிகபட்ச ஆற்றலான, 98.6bhp-ஐ உருவாக்குகிறது. இந்த மோட்டரால், லிட்டருக்கு 24.2 கிமீ என்ற அதிகபட்ச மைலேஜைத் தரமுடியும். இவ்விரு எஞ்சின்களிலுமே ஒரு மேம்பட்ட ஐந்து வேகக் கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளது, இது முன்புற சக்கரங்களுக்கு ஆற்றலை அனுப்புகிறது. இந்த MPV, டொயோட்டா மாருதி எர்டிகா, நிஸான் இவாலியா, மஹிந்திரா குவான்டோ, செவ்ரலே எஞ்சாய் போன்றவை மற்றும் இப்பிரிவிலுள்ள மற்றவற்றிற்கு சரியான போட்டியாகும். அதே நேரத்தில், இது வழக்கமான 2 ஆண்டு அல்லது 40000 கிலோமீட்டர் வாரண்டியுடன் (இதில் முன்னதாக வருவது) வருகிறது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி, இந்த வாரண்டி காலத்தை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இப்பிரிவிலேயே, இவ்வாகனத்திற்கான பராமரிப்புச் செலவு மிகக் குறைவாக இருப்பது, இதனை சரியான போட்டியாக ஆக்கியிருப்பதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

மைலேஜ்:


பெட்ரோல் எஞ்சினில் ஒரு மேம்பட்ட மின்னணு எரிபொருள் இஞ்செக்ஷன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இது நகர போக்குவரத்து சூழ்நிலைகளில் இந்த MPV லிட்டருக்கு 14.3 கிமீ வழங்க உதவுகிறது, அதே நேரத்தில், பெரிய சாலைகளில் லிட்டருக்கு அதிகபட்சமாக 17.8 கிமீ கொடுக்கும் திறன் கொண்டது, இவ்வகைக்கு அது மிகவும் சிறந்ததாகும். அதே நேரத்தில், அதன் டீசல் மோட்டார், ஒரு சாதாரண ரெயில் அடிப்படையிலான எரிபொருள் இன்ஜெக்ஷன் விநியோக அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. வழக்கமான சாலை நிலைகளில், நகர எல்லைகளுக்குள், இவ்வாகனம் லிட்டருக்கு குறைந்தபட்சம் சுமார் 20 கிமீ மைலேஜ் தருகின்ற திறன் கொண்டது மற்றும் இது நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 24.3 கிமீ வரை செல்லக்கூடும், இது மிகவும் சிறப்பானது.

ஆற்றல்:


அதன் பெட்ரோல் மில், 4600 rpm-ல் 145Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 6600 rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 117.3bhp-ஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளது, இது மிகவும் சிறந்ததாகும். அதே நேரத்தில், அதன் டீசல் மாடல், 4-சிலிண்டர் மற்றும் DOHC அடிப்படையிலான i-DTEC மோட்டாருடன் வருகிறது, இது 1498சிசி-யை இடமாற்றம் செய்கிறது. மேலும் இது, வெறும் 1750rpm-ல் 200Nm உச்ச முறுக்குத்திறனை உருவாக்குவதுடன் சேர்த்து, 3600rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 98.6bhp-ஐ உருவாக்குகிறது.

அக்ஸலரேஷன் மற்றும் பிக் அப்:


முன்புற சக்கரங்களுக்கு எஞ்சின் ஆற்றலை அனுப்பும் ஐந்து வேக கைமுறை டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் ஒன்று, பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டிலுமே பொருத்தப்பட்டுள்ளது. இது பெட்ரோல் வாகனத்தை மணிக்கு 150 முதல் 160 கிமீ வரையிலான அதிகபட்ச வேகத்தை எட்டும் வகையில் செலுத்துகிறது, இது மிகவும் சிறந்ததாகும். அதே சமயம், நின்ற நிலையிலிருந்து மணிக்கு 100கிமீ என்ற வேகக் குறியைக் கடப்பதற்கு அது 13 முதல் 12 நொடிகள் வரை எடுத்துக் கொள்கிறது. அதே நேரத்தில், டீசல் மோட்டார், இந்த MPV மணிக்கு 160 முதல் 165 கிமீ வரையிலான அதிகபட்ச வேகத்தை எட்ட உதவுகிறது. மேலும், அதே சமயம், நின்ற நிலையிலிருந்து மணிக்கு 100கிமீ என்ற வேகக் குறியைத் தொடுவதற்கு அது வெறும் 14 நொடிகளே எடுத்துக் கொள்கிறது.

வெளிப்புறங்கள்:


இந்நிறுவனம் இம்மாடல் வகைகளுக்கு கண்கவர் பாடி கட்டமைப்பைக் கொடுத்துள்ளது, இதில் மனதைக் கவரும் தோற்றத்தை அளிப்பதற்கான ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முகப்புடன் தொடங்கும்போது, அது வளைந்த தலைவிளக்கு தொகுதி பொருத்தப்பட்டு வருகிறது, இதில், ஆற்றல்மிக்க ஹாலோஜன் தலைவிளக்குகளும், பக்கவாட்டு திருப்பங்களுக்கான இன்டிகேட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இதன் RS வகையானது, புரொஜெக்டர் பாணியில் அமைந்த ஹாலோஜன் தலைவிளக்குகளைக் கொண்டுள்ளது, இவை வாகனத்திற்கு வலிமை பொருந்தி தோற்றத்தைத் தருகின்றன. இதில் ஒரு பெரிய ரேடியேட்டர் கிரில் உள்ளது, அதில் மூன்று குரோமியம் பூச்சுள்ள ஸ்லாட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கிரில்லின் மையத்தில், கண்கவர் வகையில் நிறுவனத்தின் சின்னம் பதிக்கப்பட்டுள்ளது, இது முகப்பிற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது. இதற்குக் கீழே, பாடி நிறத்திலேயே உள்ள பம்பர் இடம்பெற்றுள்ளது, இதில், ஆற்றல்மிக்க எஞ்சினைக் குளிர்விப்பதற்காக, மிகப் பெரிய காற்றை உள்ளிழுக்கும் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. உயர்ரக மாடலில் உள்ள காற்று அணைக்கு, ஒரு ஜோடி வட்ட வடிவமான பனிமூட்ட விளக்குகள் மெருகூட்டுவதுடன், இது பார்வைத்திறனை மேலும் அதிகரிக்கிறது. பானட்டில் ஒரு சில பண்பு வரிகள் உள்ளன, இவை வாகனத்தின் முன்புறத்திற்கு நல்ல தோற்றத்தைத் தருகின்றன. அதன் மிகப் பெரிய வின்ட்ஸ்கரீன், பச்சை சாயல் கொண்ட கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது, இதில் விட்டுவிட்டு அமைந்த வைப்பர்களின் தொகுதி ஒன்றுள்ளது. வாகனத்தின் பக்கவாட்டுத் தோற்றத்திற்கு வரும்போது, அது பாடி நிறத்திலேயே உள்ள கதவு கைப்பிடிகள் மற்றும் வெளிப்புறமுள்ள, பின்புறம் பார்க்கின்ற கண்ணாடிகள் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர்தர மாடலில் உள்ள கண்ணாடிகளை மின்முறையில் சரிசெய்து கொள்ளலாம் மற்றும் இவை பக்கவாட்டு திரும்புதலுக்கான இன்டிகேட்டருடன் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் நேர்த்தியாக வடிக்கப்பட்ட சக்கர வளைவுகளில், மாடலுக்குத் தக்கவாறு, வலிமை பொருந்திய ஸ்டீல் அல்லது அல்லாய் சக்கரங்களின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதன் விளிப்புகளில், உயர் செயல்திறன் கொண்ட டியூபில்லாத ரேடியல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன, இது எவ்வகையான சாலை நிலைகளிலும், இணையற்ற பிடிமானத்தைத் தருகிறது. அதன் B மற்றும் C பில்லர்கள், பளபளப்பான கருப்பு ஃபினிஷ் செய்யப்பட்டு, வாகனத்தின் பக்கவாட்டிற்கு நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன. அதன் பின்புறத்தில், மிகப் பெரிய வின்ட்ஸ்கிரீன் உள்ளது, அதற்குள் ஒரு கருப்பு சாஷ் பட்டி உள்ளது. உயர்தர மாடல்களில், பனி நீக்கி, பின்புற கழுவுதல் மற்றும் துடைத்தல் செயல்பாடு மற்றும் உயரத்தில் ஏற்றப்பட்டுள்ள நிறுத்த விளக்கு போன்ற அம்சங்கள் உள்ளன. பின்புற விளக்குத் தொகுதி, உயர் ஆற்றல் கொண்ட பிரேக் மற்றும் ரிவர்ஸ் விளக்குகளாலும், கர்ட்டஸி விளக்குகள் மற்றும் பக்கவாட்டுத் திரும்புதலுக்கான இன்டிகேட்டராலும் ஆற்றலளிக்கப்படுகிறது. டெயில்கேட் மிகப் பெரியது மற்றும் நிறுவனத்தின் சின்னம் மற்றும் மாடல் எழுத்துக்கள் போன்ற ஏராளமான குரோம் உள்ளீடுகளைக் கொண்டது. அதே நேரத்தில், எல்லா வகைகளும் நிலையாக உயரே ஏற்றப்பட்ட LED நிறுத்த விளக்கைக் கொண்டுள்ளன. இத்தனித்தன்மை வாய்ந்த RS வகை வாகனம், ஒரு கருப்பு நிற பட்டையுடன் சேர்த்து இரண்டு எதிரொளிப்பான்கள் பொருத்தப்பட்டு, அடர்த்தியான குரோம் வேலைப்பாட்டுடன்கூடிய ஓர் இரட்டை டோன் பம்பருடன் வருகிறது.

வெளிப்புற அளவீடுகள்:


இந்த பல்பயன்பாட்டு வாகனத்தை, ஒட்டுமொத்த நீளம் சுமார் 4386மிமீ மற்றும் மொத்த அகலம் 1683மிமீயுடன் இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது, இது வெளிப்புற பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள் இரண்டையும் சேர்த்து ஆகும். அதன் 1603மிமீ சிறந்த உயரமானது, உள்ளே இருப்பவர்கள் அனைவருக்கும் நல்ல தலை இடைவெளி இருப்பத உறுதி செய்கிறது. இந்த MPV-ன் சக்கர அடிப்புறம் 2652மிமீ அளவைக் கொண்டிருக்கும் வகையில் இந்நிறுவனம் உருவாக்கியிருப்பதால், கேபினுக்குள் விசாலமான இடவசதி உள்ளது. மேலும் இவ்வாகனம் 189மிமீ குறைந்தபட்ச கிரவுண்ட் கிளியரன்ஸ் வருவது மிகவும் சிறந்ததாகும். டீசல் மற்றும் பெட்ரோல் வகைகளுக்கு குறைந்தபட்சத் திரும்புகின்ற ஆரமாக முறையே 5.4 மீட்டர் மற்றும் 5.2 மீட்டர் உள்ளது.

உட்புறம்:


MPV-ன் உயர் ரக மாடலின் உட்புறம் இரட்டை சாயல் வண்ண ஸ்கீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை மற்றும் நடுத்தர வகைகள் ஒரே சாயலில் வெளிர் பழுப்பு வண்ண ஸ்கீமைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள V விருப்பத்தேர்வு மற்றும் RS விருப்பத்தேர்வு வாகனங்கள், தங்கள் டாஷ்போர்டு மற்றும் கதவு பேனல்களில் மர ஃபினிஷைக் கொண்டிருப்பது, உட்புறங்களுக்கு உயர்தரத் தோற்றத்தைத் தருகிறது. டாஷ்போர்டு, கருப்பு வண்ணத்தில், பிரஷ் செய்யப்பட்ட வெள்ளி வடிவங்களுடன் மேலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் மேம்பட்ட அம்சங்களான, சாதன பேனல், ஏசி யூனிட், மூன்று கம்பியுள்ள ஸ்டியரிங் வீல் மற்றும் திறன்மிக்க ஆடியோ அமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில், விருப்பத்தேர்வுக்குட்பட்ட மாடல்களில், 15.7செமீ தொடுதிரைக் காட்சியமைப்பு கொண்ட மேம்பட்ட AVN சிஸ்டமும் உள்ளது, இது காரின் உள்ளமைந்த கேளிக்கை மற்றும் நேவிகேஷன் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அதன் மூன்று கம்பியுள்ள ஸ்டியரிங் வீல், நிறுவனத்தின் குரோம் பூச்சுள்ள வில்லையுடன் சேர்த்து வெள்ளி உள்ளமைவுகளைக் கொண்டுள்ளது. இதில் ஆடியோ கட்டுப்பாட்டு விசைகளும் ஏற்றபட்டிருப்பது, வசதியை அதிகரிப்பதாக உள்ளது. கேபினில் அமைந்திருக்கும் நல்ல, குஷன் பொருத்தப்பட்ட இருக்கைகள், துணி உறைகளால் மூடப்பட்டுள்ளன. கூடுதல் வசதிக்காக, இருக்கைகள் அனைத்தும், தலைக் கட்டுப்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஓட்டுனரின் இருக்கை, மின்முறையில் சரிசெய்யக்கூடிய செயல்பாடு கொண்டது, அதே சமயத்தில், இரண்டாவது வரிசை 60:40 என பிரித்து மடிக்கின்ற வசதியைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், மூன்றாவது வரிசை இருக்கைகள் 50:50 என பிரித்து மடிக்கின்ற வசதியைக் கொண்டிருப்பது, பொருட்கள் வைக்கும் பகுதியை அதிகரிக்க உதவும். இரண்டாவது வரிசையிலுள்ள சிறப்பு இருக்கை அமைப்பின் காரணமாக, கால் வைப்பதற்கு ஏராளமான இடவசதி உள்ளது. V வகை வாகனம், மையத்திலும், முன்புற மற்றும் நடு வரிசைகளிலும் ஆர்ம் ரெஸ்டைக் கொண்டுள்ளது. இக்கார் உற்பத்தி நிறுவனம், பாட்டில் ஹோல்டர்கள், மிகப் பெரிய கிளவ் பாக்ஸ் யூனிட், பயணி பக்கத்திலுள்ள வானிட்டி கண்ணாடியுடன் சேர்த்து சூரியஒளி வைஸர்கள், தானியங்கு இறக்கும் செயல்பாட்டுடன்கூடிய ஓட்டுனர் பக்கத்திலுள்ள நான்கு பவர் ஜன்னல்கள், பகல் மற்றும் இரவு உட்புறத்தில் அமைந்த பின்புறம் பார்க்கின்ற கண்ணாடி போன்ற பல நுகர்பயன் அடிப்படையிலான அம்சங்களை இம்மாடலில் வழங்கியுள்ளது.

உட்புற வசதி:


இக்கார் உற்பத்தி நிறுவனம், பயணத்தின்போது பயணிகளுக்கு இனிய உணர்வைத் தருகின்ற ஏரளமான மேம்பட்ட அம்சங்களை இம்மாடல் வரிசைக்கு வழங்கியுள்ளது. விரைவாக கேபின் முழுவதையும் குளிரச் செய்வதற்காக, பின்புற ஏசி வெளியேற்றத் துளைகளுடன்கூடிய ஓர் ஆற்றல்மிக்க குளிர்சாதன அமைப்பினை இது கொண்டுள்ளது. இதில் தூசு மற்றும் மகரந்தத் துகள்களின் வடிகட்டியும் இடம் பெற்றிருப்பதால், இது கேபினிலுள்ள காற்றைத் தூய்மையாக வைக்கிறது. மேம்பட்ட சாதனங்களின் பேனலில், எரிபொருள் உபயோகம், டிஜிட்டல் கடிகாரம், மின்னணு டிரிப் மீட்டர், டிஜிட்டல் டாக்கோமீட்டர், எரிபொருள் குறைவதை எச்சரிக்கும் விளக்கு, கதவு திறந்திருப்பதன் எச்சரிக்கை, மற்றும் ஓட்டுனரின் இருக்கை பெல்ட் எச்சரிக்கை அறிவிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. சாய்வான, டெலஸ்கோபிக் முறையில் சரிசெய்யக்கூடிய ஸ்டியரிங் வீல், மிகவும் நெரிசலான போக்குவரத்துச் சூழலிலும், வாகனத்தை சுலபமாகக் கையாள உதவுகிறது. RS மாடல், தொடுதிரையுடன், ப்ளூடூத் இணைப்பு மற்றும் SVCயுடன்கூடிய (ஸ்பீட் வால்யூம் காம்பன்ஸேஷன்) AVN அமைப்புடன் வருகிறது. இதில் MP3 பிளேயர், FM/AM வானொலி போன்ற சில அம்சங்கள் இருப்பதுடன், ஐ-பாட் மற்றும் USB சாதனங்களுக்கான போர்ட்டுகளும் உள்ளன. அதே நேரத்தில், மற்ற மாடல்கள், கேபினின் சூழலை மேம்படுத்துவதற்காக, மேம்பட்ட 2-DIN மியூசிக் சிஸ்டத்தைப் பெறுகின்றன, இது CD பிளேயர், AM/FM டியூனருடன்கூடிய வானொலி, USB/ ஐ-பாட் இணைப்புக்கு ஆதரவளிப்பதுடன், ஆறு ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. உயர்ரக மாடலில் ஒரு பல செயல்முறைகள் கொண்ட ஸ்டியரிங் வீலும் இடம்பெற்றுள்ளது, இது ஆடியோ மற்றும் அழைப்புக் கட்டுப்பாட்டு பட்டன்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, அதில் கால் வைக்கும் வசதி, சரிசெய்யக்கூடிய தலைக் கட்டுப்பாடுகள், கிளவ் பாக்ஸில் சன்கிளாஸ் ஹோல்டர், சூரிய ஒளி வைஸர்கள், விளக்குடன்கூடிய வானிட்டி கண்ணாடிகள் மற்றும் பல அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

உட்புற அளவீடுகள்:


இவ்வாகனத்திற்கு இந்நிறுவனம் விசாலமான உட்புற கேபினை வழங்கியுள்ளது, இதில் கால்களுக்கான நிறைய இடவசதியுடன், தலை மற்றும் தோள்களுக்கும் போதிய இடவசதி உள்ளது. இதில், மிகப் பெரிய பொருள் வைக்கும் அறையும் உள்ளது, பின்புற இருக்கையை மடக்கிவிடுவதன் மூலம் இதனை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். இதில், 42 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை சேமிக்கக்கூடிய மிகப் பெரிய எரிபொருள் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட பயணங்களை திட்டமிடுவதற்கு இது மிகவும் சிறந்ததாகும்.

எஞ்சின் மற்றும் செயல்திறன்:


இந்த சமீபத்திய MPV, வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக, பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டின் விருப்பத்தேர்வுகளிலும் கிடைக்கிறது. அதன் பெட்ரோல் மாடலில், i-VTEC 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது, இது 1497சிசி-யை இடமாற்றம் செய்கிறது. இதில் நான்கு சிலிண்டர்களும், பதினாறு வால்வுகளும் உள்ளன மற்றும் இது ஒற்றை ஓவர்ஹேட் கேம்ஷாஃப்ட் அடிப்படையிலான வால்வு உள்ளமைவைப் பயன்படுத்துகிறது. 4600 rpm-ல் 145Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 6600 rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 117.3bhp-ஐ இதனால் உருவாக்க முடியும். இதில் ஒரு ஐந்து வேகக் கைமுறை கியர்பாக்ஸ் நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ளது, இது முன்புற சக்கரங்களுக்கு முறுக்குதிறன் வெளிப்பாட்டை அனுப்புகிறது. அதே நேரத்தில், அதன் டீசல் மாடல், 1.5-லிட்டர் i-DTEC எஞ்சினுடன் வருகிறது, இது DOHC வால்வு உள்ளமைவின் அடிப்படையிலானது. மேலும் இதில் ஒரு சாதாரண ரெயில் எரிபொருள் இஞ்செக்ஷன் அமைப்பும், ஒரு டர்போ சார்ஜிங் அமைப்பும் இடம்பெற்றுள்ளன. இந்த 1498சிசி எஞ்சினில், 4-சிலிண்டர்களும், 16-வால்வுகளும் உள்ளன, இது, வெறும் 1750 rpm-ல் 200Nm உச்ச முறுக்குத்திறனுடன் சேர்த்து, 3600 rpm-ல் அதிகபட்ச ஆற்றலான, 98.6bhp-ஐ உருவாக்க உதவுகிறது. இந்த டீசல் மோட்டாருடன், ஐந்து வேகக் கைமுறை கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது, இது லிட்டருக்கு 24.3 கிமீ என்ற அதிகபட்ச மைலேஜை உருவாக்குவதற்கு உதவுகிறது.

ஸ்டீரியோ மற்றும் துணைப்பொருட்கள்:


இதன் நடுத்தர மற்றும் உயர்தர மாடல்களில், மேம்பட்ட 2-DIN மியூசிக் சிஸ்டம் இடம் பெற்றுள்ளது, இதில் MP3/CD பிளேயர், வானொலி இருப்பதுடன், இது USB/AUX-இன் ஸ்லாட்டுகளுக்கான இணைப்பிற்கும் ஆதரவளிக்கிறது. இதன் அடிப்படை மாடலானது, முன்புற ஸ்பீக்கர்களைக் கொண்டிருப்பதுடன், மியூசிக் சிஸ்டத்தை நிறுவும் வசதியையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில், அதன் RS விருப்பத்தேர்வு வாகனம், தொடுதிரை, ப்ளூடூத் இணைப்பு மற்றும் SVC செயல்பாட்டுடன்கூடிய (ஸ்பீட் வால்யூம் காம்பன்ஸேஷன்) AVN அமைப்புடன் வருகிறது. இதில் MP3 பிளேயர், FM/AM வானொலி போன்ற சில அம்சங்கள் இருப்பதுடன், ஐ-பாட் மற்றும் USB சாதனங்களுக்கான போர்ட்டுகளும் உள்ளன. அதே சமயத்தில், மொபைல் ஹோல்டர்கள், லெதர் இருக்கை உறை, ஆர்ம்ரெஸ்ட், வீடியோ பிளேயர் மற்றும் பல இதர விருப்பத்தேர்வுகள் போன்ற உற்சாகமூட்டும் அம்சங்களுடன் இந்த வாகனத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றவாறு அமைத்துக் கொள்ளலாம். மேலும், அதன் வெளிப்புறத்தையும், கூரைச் சட்டங்கள், ஸ்பாயிலர், பக்கவாட்டு பாடி வார்ப்புகள், கதவு வைஸர்கள், மட் கார்டுகள் மற்றும் பல கூடுதல் சேர்ப்புகளைக் கொண்டு விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம்.

சக்கரங்கள்:


இந்நிறுவனம், E மற்றும் S வகைகளுக்கு வழக்கமாக உள்ள 15-அங்குல ஸ்டீல் சக்கரங்களை வழங்குகிறது, அதே நேரத்தில் தனது உயர்ரக மாடல்களுக்கு, 10-கம்பி பாணியிலுள்ள 15-அங்குல அல்லாய் சக்கரங்களை வழங்கியுள்ளது. இதன் விளிம்புகள், டியூப் இல்லாத 175/65 R15 அளவுள்ள ரேடியல் டயர்களால் மூடப்பட்டிருப்பது, சாலை நிலைகளில் மேம்பட்ட பிடிமானத்தை அளிக்கிறது. இந்நிறுவனம், முழு அளவிலுள்ள மாற்றுச் சக்கரம் ஒன்றையும் வழங்கியுள்ளது, இச்சக்கரம், காற்று இறங்கிய சக்கரத்தை மாற்றுவதற்குத் தேவைப்படும் மற்ற கருவிகளுடன் சேர்த்து, பொருட்கள் வைக்கும் அறையில் பொருத்தப்பட்டுள்ளது. இது, எல்லா மாடல்களிலும் நிலையாக உள்ள அம்சமாகும்.

பிரேக் போடுதல் மற்றும் கையாளுதல்:


இவ்வாகன உற்பத்தி நிறுவனம், இந்த MPV-க்கு சிறந்த சஸ்பென்ஷன் அமைப்புடன்கூடிய பல ஆற்றல்மிக்க பிரேக் அமைப்புகளை வழங்கியுள்ளது. இதன் முன்புற சக்கரங்களில் வழக்கமான டிஸ்க் பிரேக்குகளின் தொகுதி ஒன்றும், பின்புற சக்கரங்களில் டிரம் பிரேக்குகளின் தொகுதி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. உயர்ந்த ரக பெட்ரோல் மாடல் உட்பட, அனைத்து டீசல் மாடல்களுமே ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் மின்னணுசார் பிரேக் விசை விநியோக அமைப்பினை நிலையாகப் பெறுகின்றன. இது, அவசலநிலை பிரேக் பேடப்படும்போது, வழுக்கல் மற்றும் சக்கரம் லாக் ஆவதைத் தடுக்கிறது. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, அதன் முன்புற ஆக்சில் ஒரு மெக்ஃபெர்ஸன் ஸ்டிரட்டினால் ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதுடன், பின்புற ஆக்சிலில் டார்ஸியன் பீம் வகையிலான அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இது வாகனத்தை நிலையாகவும், நல்ல சமநிலையிலும் வைக்கிறது. அதே நேரத்தில், இந்த மாடலில், மிகவும் உயர்ந்த செயல்திறன் கொண்ட மின்னாற்றலால் ஈயங்கும் ஸ்டியரிங் உள்ளது, இது குறைந்தபட்சத் திரும்புகின்ற ஆரமாக முறையே 5.2 மீட்டர் (பெட்ரோலுக்கு) மற்றும் 5.4 மீட்டர் (டீசலுக்கு) கொண்டுள்ளது. இந்த சாய்வைச் சரிசெய்யக்கூடிய ஸ்டியரிங் வீல், நெரிசலான போக்குவரத்து சூழ்நிலைகளிலும் கையாள்வதற்கு எளிதானது.

பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மை:


பாதுகாப்பைப் பொறுத்த வரை, HCIL நிறுவனம், பல முக்கிய பாதுகாப்பு அம்சங்ளை இந்த மாடல் வரிசைக்கு வழங்கியுள்ளது, இது வாகனத்தையும், பயணிகளையும் பாதுகாப்பாக வைக்கிறது. இதில், எல்லா பயணிகளுக்கும் 3-முனை ELR இருக்கை பெல்ட்டுகள் இருப்பதோடு, சாதன பேனலில், ஓட்டுனர் இருக்கை பெல்ட் எச்சரிக்கை அறிவிப்பையும் கொண்டுள்ளது. பிரேக் போடும் முறையை மேம்படுத்துவதற்கு, அதில் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் மின்னணுசார் பிரேக் விசை விநியோக அமைப்பு உள்ளது (எல்லா டீசல் வகைகளுக்கும் நிலையானது). இவை தவிர, குழந்தை பாதுகாப்பு பூட்டுகளுடன்கூடிய பின்புற கதவுகள், மையப் பூட்டமைப்பு, திருட்டு மற்றும் சாவியில்லாத நுழைவிலிருந்து வாகனத்தைப் பாதுகாப்பதற்காக, ஒரு மேம்பட்ட எஞ்சின் இம்மொபிலைஸர் ஆகியவையும் உள்ளன. மேலும், கூடுதலாக, உயர்தர வாகனங்களில், இரட்டையான இரட்டை SRS காற்றுப்பைகள், இரட்டை ஹாரன், முன்புற பனிமூட்ட விளக்குகள், ஓட்டுனர் இருக்கை பெல்ட் நினைவூட்டி, வேகத்துடன்கூடிய தானியங்கு கதவுப் பூட்டு மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இப்பலபயன்பாட்டு வாகனம், வலிமை பொருந்திய பாடியைக் கொண்டிருப்பதுடன், கிரம்ப்பிள் மண்டலங்கள் மற்றும் பக்கவாட்டு தாக்க சட்டங்களுடன் வருகிறது.

நேர்மறை அம்சங்கள்:1. நிறைய உட்புற இடவசதி மற்றும் நல்ல இருக்கை அமைப்பு ஒரு பெரிய நேர்மறை அமசமாகும்.
2. டீசல் எஞ்சினின் எரிபொருள் சிக்கனம் சிறப்பாக உள்ளது.
3. விற்பனைக்குப்பின் சேவை மிக நன்றாக உள்ளது.
4. பெட்ரோல் எஞ்சினின் செயல்திறன், நல்ல அக்ஸலரேஷன் மற்றும் பிக் அப் உடன் நன்றாக உள்ளது.
5. பாதுகாப்பு அம்சங்கள் மற்ற போட்டியாளர்களுக்கு இணையாக உள்ளன.

எதிர்மறை அம்சங்கள்:1. விலைகள் சற்று அதிகமாக உள்ளன.
2. பரமரிப்புச் செலவு மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வாக உள்ளது.
3. உட்புற பிளாஸ்டிக், சராசரி தரத்தில் உள்ளது.
4. அடிப்படை மாடலில் பின்புற ஏசி வெளியேற்றத் துளைகள் இல்லை.
5. அடிப்படை மாடலில் ஆடியோ சிஸ்டம் இல்லாதது ஒரு பெரிய குறையாகும்.