ஹோண்டா Jazz

` 5.8 - 9.1 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹோண்டா ஜாஸ் விமர்சனம்


கண்ணோட்டம்


அறிமுகம்:


முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது அப்போது இந்திய சந்தையில் விற்பனை ஆகிக் கொண்டிருந்த வேறு எந்த கார்களிலும்இல்லாத அளவுக்கு நிறைய தொழில்நுட்ப அம்சங்கள் இந்த ஜாஸ் கார்களில் அடுக்கப்பட்டு இருந்தன. ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயன்ற இந்த கார்கள் படுதோல்வி அடைந்தன. ஹோண்டா நிறுவனமும் விற்பனை ஆகாமல் இருந்த இந்த கார்களை அதிகப்படியான தள்ளுபடிகளை கொடுத்து ஒரு வழியாக விற்று தீர்த்தன. இப்போது இந்திய சந்தையில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் நிறைய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை ஆகி வரும் நிலையில் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஜாஸ் கார்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை விரிவாக காண்போம்.

ப்ளஸ் பாய்ன்ட்


1. இடவசதி. பின்புற பெஞ்சில் கால்முட்டி மற்றும் தலை பகுதிக்கு தாராளமான இடவசதி.
2. இதன் பிரிவில் உள்ள மற்ற எந்த கார்களையும் விட பெரிய அளவிலான (354 லிட்டர் ) டிக்கி.
3. குழிகள் நிறைந்த சாலையில் செல்லும் போது போலோ கார்களைப் போல் சத்தம் செய்யாமலும் i20 கார்களை போல் அதிகமாக மேலே எழும்பாமலும் ஸ்மூத்தாக பயணிக்கிறது.

மைனஸ் பாய்ன்ட்


1. அதிகமாக இரையும் டீசல் மோட்டார். எளிட் i20 மற்றும் பலேனோ இந்த அளவுக்கு சத்தம் செய்யாமல் ஸ்மூத்தாக உள்ளன.
2. ஸ்டார்ட் /ஸ்டாப் பட்டன் , ஸ்டீரிங் அட்ஜஸ்ட்மென்ட் வசதி மற்றும் பின்புற ஏயர் கான்வென்ட்ஸ் போன்ற சிறப்பம்சங்கள் டாப் எண்டு மாடலில் கூட கொடுக்கப்படவில்லை .

தனித்துவமான சிறப்பம்சங்கள்


1. மேஜிக் இருக்கைகள் - பின்புற இருக்கைகளை பலவிதமாக மடிக்கும் வசதி உள்ளது. தேவை ஏற்பட்டால் ஒரு சிறிய வேனாக கூட இந்த ஜாஸ் கார்களை மாற்றி கொள்ளலாம்.
2. ஆட்டோமேடிக் வேரியண்டில் பேடல் ஷிப்டர்ஸ் உள்ளது. போலோ GT TSI கார்களிலும் இந்த அம்சம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இணைக்கப்படவில்லை.

கண்ணோட்டம்


இந்த பிரிவு கார்களிலேயே நல்லதொரு பயன்பாட்டிற்கு உகந்த வடிவமைப்பை கொண்ட கார் ஜாஸ் கார்கள் தான் என்று உறுதியாக சொல்லி விட முடியும். நல்ல இடவசதி கொண்ட உட்புற வடிவமைப்பு மற்றும் கண்கவரும் வெளிப்புற அழகு ஆகியவை இந்த காரை தனித்து நிற்கச் செய்கிறது.

முதலில் பெட்ரோல் வேரியன்ட் மட்டும் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது 1.2 லிட்டர் i – VTEC பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனைத் தவிர 1.5 லிட்டர் i- DTEC டீசல் என்ஜின் ஆப்ஷன் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிப்புற வடிவமைப்பு


ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் இலக்கணத்துடன் இருக்கும் ஸ்விப்ட் மற்றும் எளிட் i20 வாகனங்களைப் போல் இல்லாமல் இந்த ஜாஸ் கார்கள் ஒரு MPV வாகனத்தைப் போன்ற சாயலில் உள்ளது. ஹோண்டா இந்த ஜாஸ் கார் வடிவமைப்பை க்ராஸ்பேட் மோனோபார்ம் வடிவமைப்பு என்று சொல்கிறது. முன்புறம் V வடிவிலான க்ரில் அமைப்பு ஒரு வரவேற்கத்தக்க புதிய மாற்றமாக தெரிகிறது. மேலும் இந்த க்ரில் அமைப்பில் ஹோண்டா சிட்டி கார்களில் உள்ளது போன்ற ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்கிர்டின் மூலையில் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது . இது பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக காட்சியளிக்கிறது. சர்வதேச வெர்ஷன்களில் drl -கள் இந்த இடத்தில பொருத்தப்பட்டுள்ளன. பலேனோ மற்றும் i 20 கார்களில் DRL கள் பொருத்தப்பட்டிருப்பது போல இந்த ஜாஸ் கார்களிலும் பொருத்தப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க தோன்றுகிறது. பக்கவாட்டு பகுதியிலும் வீல் ஆர்ச் பகுதியில் உள்ள மென்மையான வளைவுகள் மற்றும் உடல் பகுதியில் உள்ள கோடுகள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று நன்றாக பொருந்தி போகிறது. 15” அங்குல அல்லாய் சக்கரங்கள் 'டர்பைன்' வடிவமைப்பை கொண்டுள்ளது. இன்னும் தடிமனான ரப்பர் சக்கரங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. ஹோண்டா சிட்டியிலும் இதே போன்ற ஒரு எதிர்பார்ப்பு முன்பு எழுந்தது. டெயில்லேம்ப் வடிவமைப்பு முந்தைய மாடல்களில் உள்ளது போன்றே உள்ளது. டாப் எண்டு மாடல்களில் சிறிய அளவிலான ஸ்பாயிளர்கள் பொருத்தப்பட்டுள்ளது. காரின் பின்புற ¾ பகுதி தான் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது .

1 ஹோண்டா ஜாஸ் ஒரு புத்திசாலிதனமான தயாரிப்பு என்றே சொல்ல வேண்டும். இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களை விட நீளமாகவோ அகலமாகவோ இந்த ஜாஸ் கார்கள் இல்லை என்ற போதிலும் , உட்புற இடவசதி மற்றும் மேஜிக் இருக்கை போன்ற அம்சங்களினால் இந்த பிரிவில் உள்ள மற்ற எல்லா கார்களையும் பின்னுக்கு தள்ளி விடுகிறது.

உட்புற வடிவமைப்பு


கதவை திறந்தவுடன் உட்புற கேபின் ஹோண்டா சிட்டி கார்களை நினைவு படுத்தினாலும் உட்புறம் முழுதும் கொடுக்கப்பட்டுள்ள கருப்பு வண்ணம் மிக அழகான தோற்றத்தை உட்புறத்திற்கு அளிக்கிறது. மத்திய கன்சோல் பகுதியில் மிக சீராக அமைக்கப்ட்டுள்ள ச்விட்ச்கள் மற்றும் பொத்தான்கள் பளிச்சென்று கண்ணில் படுகிறது. முழுதும் கொடுக்கப்பட்டுள்ள அடர்ந்த கருப்பு வண்ணம் மொத்த கேபின் பகுதிக்கும் கூடுதல் அழகு சேர்க்கிறது. DVD ப்லேபேக், நேவிகேஷன் வசதி கொண்ட 6.2 அங்குல டச்ஸ்க்ரீன் மத்திய கன்சோல் பகுதியை அலங்கரிக்கிறது.

3 அதற்கு கீழாக கிளைமேட் கண்ட்ரோல் திரையும் அதன் கீழ்பகுதியில் அவற்றை இயக்குவதற்கான பொத்தான்களும் பொருத்தப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு நவீனமாக காட்சி அளித்தாலும் வாகனத்தை ஓட்டி கொண்டே இதனை இயக்குவது சற்று சிரமமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. குளிர் சாதன வசதியைப் பொறுத்தவரை எந்த குறையும் நமக்கு தென்படவில்லை என்றாலும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஃபேன் (விசிறி ) அதிக சத்தத்தை ஏற்படுத்துகிறது.

மத்திய கன்சோல் பகுதியில் கியர் நாபின் முன்புறம் இரண்டு கப் ஹோல்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர ஆர்ம்ரெஸ்ட் பகுதியிலும் பொருட்கள் வைப்பதற்கான இடம் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு கூடுதல் ப்ளஸ் பாய்ன்ட் ஆகும். ஸ்டீரிங் சக்கரம் கச்சிதமாக பிடிப்பதற்கு மிகவும் வசதியாக உள்ளது . ஆனால் VW போலோ கார்களில் உள்ளது போன்ற டெலஸ்கோபிக் அட்ஜஸ்ட்மென்ட் வசதி இந்த ஜாஸ் ஸ்டீரிங் சக்கரத்தில் இல்லை. ஹோண்டா சிட்டி கார்களில் உள்ள ஸ்டீரிங் வீல் போன்றே உள்ள இந்த ஸ்டீரிங் வீலில் க்ரூஸ் கண்ட்ரோல் பொத்தான்கள் இல்லை என்பது முக்கியமான ஒரு வித்தியாசம். ஆடியோ கண்ட்ரோல் பொத்தான்கள் இடது பக்கமும் , டெலிபோன் சம்மந்தமான பொத்தான்கள் ஸ்டீரிங் வீலின் பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டரில் டயல் பகுதியில் ஹோண்டா சிட்டியில் உள்ளது போன்ற வெளிச்சம் தரும் நீல நிற வளையங்கள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. மூன்று பகுதிகளைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் முறையே டேகோமீட்டர் , ஸ்பீடோமீட்டர் மற்றும் MID உள்ளடங்கி உள்ளன. ட்ரிப் தகவல்கள் மற்றும் எரிபொருள் செயல்பாடு ஆகியவைகளை MID உணர்த்துகிறது. வெளிப்புற வெப்பநிலையை உணர்த்தும் FE மீட்டர் மற்றும் ப்யூயல் காஜ் ஆகியவைகளும் இதனுள் அடங்கி உள்ளன.

4 முன்புற இருக்கை வசதியாக அமைக்கப்பட்டுள்ளதால் எடை அதிகம் உள்ள வர்கள் கூட எந்த வித அசௌகரியமும் இன்றி அமர முடிகிறது. இருக்கைகளில் அதிக அளவு குஷன் உள்ளதால் அமர்ந்திருப்பவருக்கு நல்ல சொகுசான உணர்வு ஏற்படுகிறது. மேலும் இந்த சீட் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

5 பின்புற பென்ச் இருக்கை நல்ல இடவசதியுடன் உள்ளது . மூன்று பேர் அமரும் அளவுக்கு இடவசதி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பெஞ்ச் இருக்கையை லேசாக சாய்த்து கொள்ள முடியும் என்பது விசேஷ செய்தி. இந்த பிரிவு கார்களில் இல்லாத இந்த அம்சம் உண்மையிலேயே ஜாஸ் கார்களின் சிறப்பை மேலும் சிறப்பாக்குகிறது.

மேஜிக் சீட் என்று ஹோண்டா நிறுவனம் அழைக்கும் இந்த பின்புற இருக்கைகள் பல வித கோணங்களில் மாற்றி மடித்து ,ஏற்றப்படும் பொருட்களுக்கு ஏற்ப, மாற்றி வடிவமைத்துக் கொள்ள முடியும். ஏனோ இந்த வசதி டாப் ட்ரிம்களில் இணைக்கப்படவில்லை.

டிக்கியின் கொள்ளளவு 354 லிட்டர் . பலேனோ கார்களில் உள்ள டிக்கியின் அளவு 339 லிட்டர் .


2

பெர்பார்மன்ஸ்


டீசல்


ஹோண்டா சிட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே டீசல் மோட்டார் தான் இந்த ஜாஸ் கார்களிலும் உள்ளது. 6 - வேக மேனுவல் ட்ரேன்ஸ்மிஷன் வசதி இணைக்கப்பட்டுள்ளது. டர்போலேக் நல்ல முறையில் கட்டுபடுத்தப்பட்டு 2000 rpm வரை எந்த வித அதிர்வும் இன்றி சீராக இந்த கார் பயணிக்கிறது. 1.3 லிட்டர் DDiS /மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வேகமாக வாகனத்தை செலுத்தும் போது போலோ கார்களை போல் உங்களை இருக்கையோடு ஓட்டி கொள்ள செய்யாமல் இருப்பதும் இந்த ஜாஸ் கார்களின் சிறப்பம்சம்.200Nm அளவு டார்க் உற்பத்தி செய்யும் திறன் இந்த எஞ்சினுக்கு இருப்பதும் ஒரு ப்ளஸ் பாய்ன்ட் ஆகும். மணிக்கு 140 கி.மீ வேகம் வரை இந்த கார்கள் செல்லுகிறது. அதே வேகத்தில் சிரமமில்லாமல் தொடர்ந்து பயணிக்கும் ஆற்றலும் இந்த எஞ்சினுக்கு உள்ளது.

செடானைப் போலவே இந்த ஜாஸ் கார்களும் நிறைய இரைச்சல் போடுகிறது. வாகனம் குறைந்த எடையுடன் இருக்க வேண்டும் என்று ஹோண்டா பயன்படுத்தி உள்ள அலுமினியம் தான் இந்த அதிக இரைச்சலுக்கு காரணம் என்று அறியப்படுகிறது. வாகனம் ஐட்லிங் நிலையில் இருக்கும் போது பெடலில் அதிர்வை நன்கு உணர முடிகிறது.

பெட்ரோல்


1199cc கொண்ட 1.2 லிட்டர் I – VTEC பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 - வேக மேனுவல் அல்லது 7 - வேக ஆட்டோமேடிக் ட்ரேன்ஸ் மிஷன் வசதி கொண்ட பெட்ரோல் ஆப்ஷனை உங்கள் தேவைகேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். முந்தைய ஜாஸ் மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே பெட்ரோல் என்ஜின் தான் இந்த கார்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. போலோ கார்களில் உள்ள 3 - சிலிண்டர் மோட்டாரை விட இது சத்தம் அதிகம் செய்யாத மோட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மோட்டாரின் லோ - எண்டு சற்று பலவீனமாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். நீங்கள் வேகமாக செல்ல அதிக த்ராடில் கொடுக்க வேண்டி இருக்கும். ஹோண்டா கார்களை இதற்கு முன் நீங்கள் ஓட்டி பழகாதவர் என்றால் நிச்சயம் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் . மிட் -ரேன்ஜ் கார்கள் தான் உண்மையில் சிறப்பாக இயங்குகிறது. நகர்புற சாலையில் ஓட்டும் போது அடிக்கடி கியரை குறைக்க வேண்டி வரும். நெடுஞ்சாலையிலும் அந்த அளவுக்கு குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் இந்த என்ஜின் செயல்பாடு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஹோண்டா சிட்டி கார்களில் உள்ள 1.5 லிட்டர் மோட்டாரை இந்த கார்களிலும் பொருத்தி இருக்கலாம் என்றே நினைக்க தோன்றுகிறது.

ஆட்டோமேடிக் வெர்ஷனில் பேடல் ஷிப்டர்ஸ் உடன் கூடிய CVT செட்டப் இணைக்கப்பட்டுள்ளது. நகர் புற பயணத்திற்கு வசதியாக உள்ள இந்த அமைப்பு நெடுஞ்சாலையில் காரை செலுத்தும் போது அந்த அளவுக்கு வசதியாக இல்லை என்பதை இங்கே சொல்ல வேண்டியுள்ளது.

ஒட்டுதல் மற்றும் கையாளுதல்


சேஸிஸின் முன்புற ஆர்ம் மேக்பெர்சன் ஸ்டரட்டும் பின்புற டார்சியன் பீம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆக்ஸல்களிலும் காயில் ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டுள்ளதால் அதிர்வு இல்லாத சுகமான பயணம் கிடைக்கிறது. மேம்படுத்தப்பட்ட புதிய சஸ்பென்ஷன் அமைப்பும் இந்த சுகமான சவாரிக்கு உறுதுணையாக உள்ளது. சீரற்ற இந்திய சாலைகளில் செல்லும் போது ஏற்படும் இரைச்சல் மற்றும் அதிர்வு முழுதும் இந்த புதிய ஜாஸ் கார்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலில், பயணம் செய்கையில் இருந்த அனைத்து வசதி குறைபாடுகளையும் பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக ஹோண்டா நிறுவனம் சரி செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இவை தவிர , முன்புற சக்கரங்களில் இணைக்கப்பட்டுள்ள டிஸ்க் ப்ரேக் மற்றும் பின்புற சக்கரத்தில் உள்ள டிரம்கள் பாதுகாப்பான, நல்ல செயல்திறனுடன் கூடிய ப்ரேக் போடும் அனுபவத்தை நமக்கு அளிக்கிறது.

பாதுகாப்பு


ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை இந்த புதிய ஜாஸ் கொண்டுள்ளது. இதனுடைய உடல் பகுதி வடிவமைப்பு விபத்து சமயத்தில் பெரும்பான்மையான அழுத்தங்களை தன்னுள் வாங்கிக் கொண்டு காரின் உட்புற கேபினுக்கோ அல்லது அதில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கோ எந்த வித பெரிய ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாத்து விடுகிறது. முன்புற பயணிகளை SRS காற்று பைகள் விபத்து நேரத்தில் ஒரு கேடயம் போல் இயங்கி பாதுகாக்கிறது. இதத் தவிர ஆன்டி -லாக் ப்ரேகிங் அமைப்பு , மற்றும் மின்னணு முறையில் இயங்கும் ட்ரைவ் ஸ்டேபிலிட்டி ஆகிய அம்சங்கள் பெரிய விபத்து நடப்பதை பெருமளவு தடுக்கிறது. இவை தவிர , பின்புற பார்கிங் கேமெரா , முன்புற பாக் லேம்ப் , ஓட்டுனர் சீட்பெல்ட் ரிமைன்டர் , கி - ஆப் ரிமைன்டர் , இரண்டு வகை ஹாரன் , பின்புற வின்ட் ஷீல்ட் டீபாகர் , சற்று உயரமாக பொருத்தப்பட்டுள்ள LED ஸ்டாப் விளக்குகள் , பகல்/இரவு ரியர்வியு கண்ணாடி மற்றும் இம்மொபிளைசர் போன்ற ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் அடுக்கப்பட்டுள்ளன.

வேரியன்ட்கள்


விலை குறைந்த லோயர் எண்டு வேரியன்ட்களான E மற்றும் S வேரியன்ட்களில் குறைவான சிறப்பம்சங்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. ஒளிரும் மல்டி இன்பர்மேஷன் காம்பி மீட்டர் , எரிபொருள் அளவை காட்டும் டிஸ்ப்ளே , லேன் சேன்ஜ் இன்டிகேடர் மற்றும் ஈகோ அஸிஸ்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களை இந்த லோ எண்டு மாடல்களில் காண முடிகிறது. அதே சமயம் நடுத்தர வேரியன்டான SV வேரியண்டில் எரிபொருள் சிக்கன அளவை உடனுக்குடன் தெரிவிக்கும் டிஸ்ப்ளே , வெளிப்புற வெப்ப அளவை காட்டும் டிஸ்ப்ளே , ட்யூயல் ட்ரிப் மீட்டர் , ஒளிரும் லைட் அட்ஜஸ்டர் டயல் மற்றும் லேன் சேன்ஜ் இன்டிகேடர் ஆகிய கூடுதல் அம்சங்கள் இனைகப்பட்டுல்லதை காண முடிகிறது. டாப் -எண்டு வேரியன்ட்களான V மற்றும் VX வேரியன்ட்களில் அதி நவீன ஆடியோ வசதி இணைக்கப்பட்ட 15.7 செ.மீ டச்ஸ்க்ரீன் , ஹேண்ட்ஸ் - ப்ரீ டெலிபோன் , CD ப்ளேயர் உட்பட ஏராளமான சிறப்பம்சங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

தீர்ப்பு


ஹோண்டா நிறுவனத்தினர் இந்த ஜாஸ் கார்களில் தங்களது பழமையான ஆனால் இது வரை வெற்றிகரமாக உள்ள கோட்பாடுகளை மாற்றாமல் பின்பற்றி உள்ளனர். இந்த ஜாஸ் கார்களின் தனித்துவம் எது என்றால் விசாலமான உட்புற இட வசதி மற்றும் பெரிய டிக்கி என்று உறுதியாக சொல்லலாம். ஆகவே , இடவசதி தாரளாமாக உள்ள ஒரு ஹேட்ச் கார் தான் உங்கள் தேவை என்றால் கண்ணை மூடிக் கொண்டு இந்த காரை நீங்கள் வாங்கலாம். அதுவே , இடவசதி ஒரு பெரிய பொருட்டு இல்லை என்று சொல்பவராக நீங்கள் இருந்தால் ஹயுண்டாய் அல்லது மாருதி தயாரிப்புக்கள் மீது உங்கள் கவனத்தை திருப்புவது நல்லது.