ஹோண்டா சிட்டி

` 8.5 - 13.6 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஹைலைட்ஸ்


ஜனவரி 22, 2016: ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தங்களது சிட்டி கார்களில் புதிய VX(O) BL வேரியண்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் முழுதும் கருப்பு நிறத்திலான இன்டீரியர்ஸ் மற்றும் தோலினால் ஆனா சீலைகள் (அப்ஹோல்ஸ்ட்ரி) கொடுக்கப்பட்டுள்ளன.. இந்தVX(O) BL ட்ரிம் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் (பெட்ரோல் மற்றும் டீசல் ) வதியுடன் முத்து வெள்ளை மற்றும் அலபாஸ்டர் வெள்ளி நிறங்களில் வெளியாகி உள்ளது. இந்த VX(O) ட்ரிம்களில் கருப்பு தவிர பழுப்பு நிற (பேய்ஜ்) இன்டீரியர்ஸ் கொண்ட ஆப்ஷனும் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இப்போது டாப்-எண்டு ஹோண்டா சிட்டி மேனுவல் கார்களின் இன்டீரியர்ஸ் முழுதும் கருப்பு மற்றும் பழுப்பு என்று இரண்டு வண்ண ஆப்ஷன்களுடன் வெளியாகி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார்களையும் இந்த வரிசையில் இணைத்து உள்ளதால் இதனுடைய விற்பனை இப்போது 1.6 லட்சங்களை தொட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி விமர்சனம்


கண்ணோட்டம்


அறிமுகம்


ஹோண்டா சிட்டி அதன் பிரிவிலேயே மிகச் சிறந்த காராக விளங்கி வருகிறது. ஆனால் பெட்ரோல் இஞ்ச்ன் ஆப்ஷன் மட்டுமே உள்ளது ஒரு குறையாக இருந்தது. இதே பிரிவில் உள்ள இதன் போட்டி வாகனங்கள் நல்ல டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ஆப்ஷன்களையும் களம் இறக்கி உள்ளனர். இப்போது இந்த டீசல் பிரிவில் ஹோண்டா சிட்டியும் நுழைந்துள்ளது. நல்ல நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த டீசல் பிரிவில் நுழைந்துள்ள ஹோண்டா சிட்டி கார்கள் எப்படி தனது பிரிவில் அதிகம் விற்பனை ஆகும் காராக தொடர்ந்து விளங்கி வருகிறது என்பதை எமது கார்தேகோ குழு அலசி ஆராய்கிறது.

ப்ளஸ் பாய்ண்டுகள்1. டீசல் மோட்டாரின் அறிமுகம் மற்றும் பெட்ரோல் CVT ஆப்ஷன் ஆகிய இவை இரண்டும் முறையே லிட்டருக்கு 26 & 18 கி.மீ. மைலேஜ் தருகிறது. இது இந்த பிரிவிலேயே மிக அதிகமாகும்.
2. நல்ல நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இன்டீரியர்ஸ் கேபின் இடவசதியையும் டிக்கி கொள்ளளவையும் பெருமளவு அதிகரித்துள்ளது.
3. ஓட்டுனருக்கான காற்று பைகள் அனைத்து வேரியண்டிலும் உள்ளது. நடுத்தர வேரியண்டில் AC வெண்ட்ஸ் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் அம்சங்களும் டாப் - எண்டு வேரியன்ட்களில் டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் , சன்ரூஃப் மற்றும் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டம் உள்ளது.
4. நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற கார் - ஓட்டுவதும் கையாளுவதும் மிகவும் எளிதாக உள்ளது.
5. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு சிறந்த தயாரிப்பு.

மைனஸ் பாய்ண்டுகள்


1. அமேஸ் கார்களில் இருந்து பெறப்பட்டுள்ள இந்த டீசல் மோட்டார் இதன் பிரிவில் உள்ள போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில் கூடுதல் செயல்திறனுடன் இல்லை. வெர்னா டீசல் என்ஜின் 126bhp சக்தியை வெளியிடும் போது இந்த சிட்டியின் டீசல் என்ஜின் 99bhp அளவு தான் சக்தியை வெளியிடுகிறது. 2. டிக்கியில் மூடப்படாத நிலையில் வெறும் உலோகம் கண்ணில் படுகிறது. உடல் பகுதியிலும் ஸ்டீல் குறைவான தடிமனுடன் இருப்பதும் ஒரு குறையே. 3. மெலிதான 175mm சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் எதிர்பார்த்த ரோட் கரிப் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். மேலும் இதன் போட்டி வாகனங்களில் சக்கரங்களின் அளவு 195 மீ.மீ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 4. லைட் ஸ்டீரிங் நகர்புற சவாரிக்கு உகந்தது தான் என்றாலும் அதிக வேகத்தில் செல்லும் போது நாம் அதிகப்படியான பீட்பேக்கை எதிர்பார்க்கிறோம்.

தனித்துவமான அம்சங்கள்1. இதில் உள்ள 6.2” இன்போடைன்மென்ட் அமைப்பு.
2. பெட்ரோல் CVT மாடலில் பொருத்தப்பட்டுள்ள பேடல் ஷிப்டர்ஸ் ஸ்டீரிங் சக்கரத்திலிருந்து கையை எடுக்காமலே நீங்கள் கியர் மாற்ற உதவுகிறது.
3. இந்த பிரிவு கார்களிலேயே முதல் முறையாக ஸ்க்ரீன் உடன் கூடிய ஃபெதர் டச் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் அதன் செட்டிங்ஸ் - ஐ மாற்றுவதற்கான பொத்தான்களும் உள்ளன.

கண்ணோட்டம்


இந்த பிரிவில் சிறிது காலம் டீசல் என்ஜின் கார்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் ஹோண்டா சிட்டி சற்று பின் தங்கியது. ஹோண்டா தனது கார்களில் டீசல் என்ஜின் ஆப்ஷன் எதையும் அப்போது வெளியிடவில்லை. விட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டு என்று மும்முரமாக களத்தில் இறங்கிய ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்கான தங்களது திட்டங்களை மறு வடிவமைப்பு செய்தது, இதன் விளைவாக 1.5L i-DTEC டீசல் என்ஜின் தயாரிப்புக்கு ஏராளமான முதலீட்டை செய்தது. முதலில் இந்த 1.5L i-DTEC டீசல் என்ஜினை தங்களது அமேஸ் கார்களில் பொருத்தினர். பின்பு இந்த எஞ்சினையே இப்போது ஹோண்டா சிட்டி புதிய வெர்ஷனிலும் பொருத்தி உள்ளனர். இந்த புதிய ஹோண்டா சிட்டி கார்களின் நான்காம் தலைமுறை அவதாரம் புதிய வடிவமைப்பு மற்றும் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வெளியாகி உள்ளது. பெரும் பகுதி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் கச்சிதமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஹோண்டா சிட்டி கார்கள் மேல் தட்டு வாடிக்கையாளர்களை குறிவைத்து களம் இறக்கபட்டுள்ளதால் அமேஸ் கார்களில் இருந்து இந்த கார்கள் பெருமளவு வித்தியாசப்பட்டு தெரிகிறது. அதுமட்டுமின்றி சிவிக் கார்கள் விட்டு சென்ற இடத்தை இந்த நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி நிரப்பும் என்றும் ஹோண்டா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

பின்புலம் மற்றும் எவல்யூஷன்


ஹோண்டா சிட்டி முதல் முதலாக 1998 ஆம் ஆண்டு நடுத்தர அளவு செடான் பிரிவில் அறிமுகப்படுதப்பட்டது. இந்த வரிசையில் இப்போது அறிமுகமாகி உள்ள இந்த நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார்களில் ஹோண்டாவின் புதிய H வடிவமைப்பு கோட்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய H வடிவமைப்பு கோட்பாடானது இனி எதிர் காலத்தில் வர உள்ள அனைத்து ஹோண்டா தயாரிப்புக்களிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. ஹோண்டா சிட்டியின் பரிணாம வளர்ச்சியை முழுதும் இங்கே படியுங்கள்.

எக்ஸ்டீரியர் (வெளிப்புற அமைப்பியல் )


கடைசியாக விற்பனை ஆகிக் கொண்டிருந்த ஹோண்டா சிட்டி கார்களின் வடிவமைப்பு நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் இந்த புதிய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டியின் வடிவமைப்பும் முந்தைய மாடலை ஒத்தே இருந்தது. இந்த நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி ஒரு பேஸ்லிப்ட் ( மேம்படுத்தப்பட்ட ) வெர்ஷன் இல்லை. முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு காராகும்.

ஹோண்டா நிறுவனத்தின் புகழ் பெற்ற கோட்பாடான 'அதிகபடியான மனித சக்தியும் குறைந்த எந்திர உதவியும்' கொண்டு இந்த புதிய ஹோண்டா சிட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலின் அளவுகளே இந்த புதிய அவதாரத்திலும் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. வீல்பேஸ் அளவு 50 மில்லி மீட்டரும் உயரம் 10 மில்லி மீட்டரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயரம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக உட்புற கேபின் இடவசதியும் சற்று அதிகரித்துள்ளது. கிரௌன்ட் கிளியரன்ஸ் 165 மீ.மீ ஆகும். இதே அளவு தான் வெர்னா கார்களிலும் உள்ளது. இந்த பிரிவில் மாருதி நிறுவனத்தின் சியஸ் கார்கள் தான் பெரிய அளவுகளை கொண்டு உள்ளது என்றாலும் ஒட்டுமொத்த தோற்றத்தில் ஹோண்டா சிட்டி சிறப்பாக உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

image 1

1

ஹோண்டா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு குரோம் பூச்சு மீது ஒரு தணியாத மோகம் உண்டு என்பதை நன்கு புரிந்துக் கொண்டு காரின் முகப்பு பகுதியில் பெரிய அளவிலான குரோம் ஸ்ட்ரிப் ஒன்றை இணைத்துள்ளது. சிலர் இதனை பிடிக்கவில்லை என்று சொன்னாலும் பெரும்பாலானோர் இந்த இறக்கை வடிவிலான குரோம் நான்றாக இருப்பதாகவே கருத்து தெரிவித்துள்ளனர். முன்புறத்தில் உள்ள கருப்பு நிற பகுதிகளும் அழுத்தமான கோடுகளும் காரின் முன்புற தோற்றத்திற்கு ஒரு ஆழமான அழகை தருகிறது. இந்த அனைத்து அம்சங்களும் சேர்ந்து இந்த புதிய ஹோண்டா சிட்டி காரை ஒரு சொகுசு ப்ரீமியம் காருக்கான தோற்றத்தை தருவதுடன் பலரது கவனத்தை கவர்கிறது.

image 2

ஹெட்லேம்பில் மூன்று பிரிவுகள் உள்ளன.ஒன்று ஹை -பீம், மற்றொன்று லோ - பீம் மற்றும் டேர்ன் இன்டிகேட்டர்கள். பக்கவாட்டு பகுதியில் காரின் முழு உடல் பகுதிக்கும் இரண்டு கூடுகள் இழையோடுகின்றன.

image 3

15 அங்குல அல்லாய் சக்கரங்கள் டாப் இரண்டு ட்ரிம்களில் மட்டுமே உள்ளன. இதில் எந்த குறையும் இல்லை என்றாலும் மைலேஜ் அதிகம் தர வேண்டும் என்பதை மனதில் கொண்டு மெலிதான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று உணர முடிகிறது. இன்னும் கொஞ்சம் ஸ்டைலாக அல்லாய்கள் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பெட்ரோல் எஞ்சினின் முழு சக்தியையும் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்றும் நினைக்க தோன்றுகிறது. ஆனால் ஹோண்டா நிறுவனத்தினர் அவ்வாறு செய்தால் அது மைலேஜ் -ஐ பெருமளவு பாதிக்கும் என்று கூறுகின்றனர்.

image 4

பின்புறம் உள்ள டெயில் விளக்குகளைப் பார்க்கையில் ஒரு BMW காரை போன்ற உணர்வை தருகிறது. முன்புறத்தில் உள்ளது போன்றே பின்புறத்திலும் இரண்டு டெயில் விளக்குகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குரோம் ஸ்ட்ரிப் பொருத்தப்பட்டுள்ளது. அனைவருமே இந்த காரின் பின்புற தோற்ற பொலிவில் மெய் மறக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது.

image 5

டிக்கியின் கொள்ளளவு, இந்த பிரிவிலேயே பெரிய அளவுகளைக் கொண்ட சியஸ் கார்களுக்கு இணையாக 510 லிட்டர்களாக உள்ளன . லோடிங் லிப் இதன் பிரிவு போட்டி கார்களுடன் ஒப்பிடுகையில் சற்று உயரமாக உள்ளதால் பைகளை சற்று உயரமாக தூக்கி தான் டிக்கியில் வைக்க வேண்டி உள்ளது. இது ஒரு பெரிய குறை என்று சொல்லிவிட முடியாது.

image 6

எமது கார்தேகோ குழுவினரை இந்த புதிய டிஸைன் வெகுவாக கவர்ந்துள்ளது என்றாலும் முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் சட்டென்று பார்வைக்கு வெளிப்புற மாற்றங்கள் பெரிய அளவில் புலப்படவில்லை. ஆனால் இதற்கு முந்தைய மாடல்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பெரிய அளவிலான வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்களை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2

இன்டீரியர் (உட்புற அமைப்பியல் )


இந்த ஹோண்டா சிட்டி கார்களின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்றால் அது இந்த கார்களின் உட்புற வடிவமைப்பு (இன்டீரியர்ஸ் ) என்று சொல்லலாம். பழுப்பு - கருப்பு - வெள்ளி நிறங்களின் நேர்த்தியான அணிவகுப்பை இந்த புதிய ஹோண்டா சிட்டி கார்களின் உட்புறத்தில் காண முடிகிறது. நிச்சயம் நம்மை மட்டுமின்றி அனைவரையும் இந்த வண்ண கலவை கவருகிறது. இந்த மூன்று வண்ணங்களுக்கும் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் உள்ள மோகத்தை நன்கு ஹோண்டா நிறுவனம் உணர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த பிரிவில் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வெர்னா அறிமுகமான பிறகு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் பெருமளவு கூடியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை ஹோண்டா தனது புதிய சிட்டி கார்களில் பெருமளவு பூர்த்தி செய்துள்ளது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு ஸ்டீரிங் சக்கரத்தில் இணைக்கப்பட்டுள்ள கண்ட்ரோல்கள் , ஃபெதர் டச் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் , ஆடியோ வீடியோ நேவிகேஷன் சிஸ்டம் & ரிவர்சிங் கேமெரா, என்ஜின் ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் , நிறைய வசதிகள் கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் தோல் கொண்டு மூடப்பட்ட இருக்கைகள் போன்ற சிறப்பம்சங்களை சொல்லலாம்.

image 7

டேஷ்போர்ட் சமச்சீர்மையற்ற முறையில் உள்ளது. டேஷ்போர்டில் உள்ள AC திறப்பான்கள் (வெண்ட்ஸ்) வித்தியாசமான வடிவமைப்புடன் காட்சியளிக்கிறது. இதில் லேசான குரோம் பூச்சும் உள்ளது. இந்த குளிர்சாதன வசதி நல்ல சக்தி கொண்டதாக உள்ளது. குறுகிய நேரத்தில் முழு கேபின் பகுதியையும் குளிரூட்டுகிறது. பின்புறமும் AC வென்ட்கள் உள்ளன. டேஷ்போர்டில் உள்ள ப்லேஸ்டிக்கினால் ஆனா பகுதியை தொடுவதற்கு மென்மையாக இல்லை.

image 8

கன்சோல் மற்றும் ஸ்டீரிங் சக்கரத்தில் உள்ள பொத்தான்கள் நல்ல முறையில் உள்ளன. ஆனால் ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் சரியான இடத்தில் பொருத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. குழந்தைகள் விளையாட்டாக அதனை இயக்கி விட வாய்ப்புள்ளதால் ஓட்டுனர் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டீரிங் சக்கரத்தில் உள்ள பொத்தான்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை இயக்குவது எளிதாக உள்ளது.

image 9

இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் நீல நிறத்தில் ஒளிர்கிறது. இது நமக்கு ஹோண்டா சிவிக் கார்களை நினைவு படுத்துகிறது. இந்த இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் தரும் தகவல்கள் எளிமையாக புரிந்துக் கொள்ளும் வகையில் உள்ளது. எவ்வளவு தூரத்தில் எரிபொருள் தீர்ந்து போகும் என்பதை காட்டும் மானி , கடிகாரம் , காரின் வெளிப்புற வெப்ப அளவு , மற்றும் மைலேஜ் அளவு ஆகிய தகவல்களையும் இந்த க்ளஸ்டர் காட்டுகிறது. டாக்கில் தண்டை அட்ஜஸ்ட் செய்வதன் மூலம் க்ளஸ்டரின் ஒளி அளவை கூட்டவோ குறைக்கவோ முடிகிறது.

image 10

உங்கள் காருக்கான சாவி உங்கள் சட்டை பாக்கெட்டில் இருந்தாலும் கதவின் கைப்பிடியில் உள்ள பொத்தானை அழுத்தி காருக்குள் நீங்கள் நுழையலாம். இந்த பொத்தானை அழுத்தும் போது அது காரின் சாவி அருகில் இருக்கிறதா என்பதை சரியாக கண்டுபிடித்து விடுகிறது. ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் கூட இந்த முறையிலேயே இயங்குகிறது. ஃபெதர் டச் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் பார்பதற்கு மிகவும் வசீகரமாக உள்ளது. இந்த பிரிவு கார்களில் முதல் முதலாக ஹோண்டா சிட்டியில் தான் இந்த அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. நாம் வாகனத ஓட்டுகையில் செட்டிங்க்ஸ் - ஐ அட்ஜஸ்ட் செய்வதற்காக சாலையில் இருந்து பார்வையை திருப்பி அட்ஜஸ்ட் செய்ய வேண்டி உள்ளது. இது ஒரு பாதுகாப்பு குறைபாடாகும்.

image 11

உட்புற இடவசதி தாரளமாக உள்ளது. முன்புற ஆர்ம்ரெஸ்ட் பகுதியின் கீழே பெரிய அளவிலான கூடை (பின்) ஒன்றும் ஹேன்ட்ப்ரேக் பகுதியை சுற்றி சிறிய குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் உள்ள கப் ஹோல்டர்கள் உங்கள் போன் அல்லது ஐ பாட் வைப்பதற்கு உதவுகிறது. USB மற்றும் துணை சாகெட்டுகள் இதற்கு மேல்புறம் உள்ளது.

image 11

பக்கெட் போன்ற முன்புற இருக்கைகள் நல்ல குஷன் வசதியுடன் கைகளால் உயரத்தை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளும் வசதியுடன் உள்ளது. ஓட்டுனர் தனக்கு வசதியான முறையில் எளிதாக அமர்ந்து வாகனத்தை ஓட்டலாம்.

image 12

முன்புறம் அமர்ந்து பயணிப்பது எந்த அளவுக்கு வசதியாக இருந்ததோ அதே அளவு வசதியுடனும் மகிழ்ச்சியாகவும் பின்புற இருக்கைகளில் அமர்வதும் இருந்தது. பின்புறம் அமரும் பயணிகளுக்கு கால் நீட்டிக் கொள்வதற்கான இட வசதி மிகவும் சிறப்பாக உள்ளது. தொடை பகுதிக்கான சபோர்ட் நல்ல முறையில் உள்ளது. எங்கள் கார்தேகோ குழுவின் உயரமான உறுப்பினர் ஒருவர் அமர்வதற்கு சற்று அசௌகரியமாக உணர்ந்தார். பின்புற பெஞ்சில் கப் ஹோல்டருடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் உள்ளது . இந்த பெஞ்சை மடித்து ஐந்தாவதாக ஒரு பயணிக்கும் அமர இடவசதி செய்து தர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரேன்ஸ்மிஷன் டனல் துருத்திக் கொண்டு இல்லை ஆனால் ஐந்தாவது பயணியின் கால் முட்டி பின்புற AC வென்ட்டை தட்டுகிறது.

image 14

பின்புறம் உள்ள காற்று திறப்பான்கள் உங்களது வசதியான பயணத்திற்கு துணை நிற்கிறது. இரண்டு சார்ஜிங் பாய்ன்ட் உள்ளது. அது உங்கள் செல் போன் மற்றும் ஐ பாட போன்ற கருவிகளை சார்ஜ் செய்துக் கொள்ள உதவுகிறது. திருப்பும் வசதியுடன் கூடிய சன்ரூஃப் டாப் வேரியண்டில் மட்டுமே உள்ளது. இதில் உள்ள காற்று டிப்லேக்டார்கள் டர்ப்யூலன்ஸ் - ஐ கட்டுபாட்டிற்குள் வைக்க உதவுகிறது.

பெர்ஃபார்மன்ஸ் (செயல்திறன்)


3

டீசல்:


இந்த வெர்ஷனில் மிக முக்கியமான ஒரு அம்சம் என்றால் அது சக்தி வாய்ந்த டீசல் மோட்டார் என்று சொல்லலாம். அமேஸ் கார்களில் இருந்து பெறப்பட்ட இந்த என்ஜின் எவ்வாறு செயலாற்றப் போகிறது என்பது குறித்த சந்தேகங்கள் எங்களிடம் நிறையவே இருந்தது. எப்படி இருப்பினும், இந்த டீசல் மோட்டார் அமேஸ் கார்களில் இருந்ததை விட சற்று வேறு விதமாக ட்யூன் செய்யப்பட்டு ஹோண்டா சிட்டியில் பொருத்தப்பட்டுள்ளது. 6 - வேக கியர் பாக்ஸ் அமைப்புடன் இந்த டீசல் என்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. அமேஸ் கார்களில் 5 - வேக கியர் பாக்ஸ் அமைப்பு தான் உள்ளது. நகர்புற மற்றும் நெடுஞ்சாலை பயணங்கள் என்று இரண்டுக்குமே பொருந்தி போகும் அளவுக்கு கியர் ரேஷியோகள் உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 163 கி.மீட்டர் வேகத்தை தொடும் இந்த டீசல் ஹோண்டா சிட்டி கார்கள் 0-100கி.மீட்டர் வேகத்தை தொட 12.3 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. இன்னொருபுறம் வெர்னா கார்கள் அதிகபட்சமாக மணிக்கு 190 கி.மீட்டர் வேகத்தை தொடுகிறது. 0 -100 கி.மீட்டர் வேகத்தை தொட வெறும் 10 நொடிகளே எடுத்துக் கொள்கிறது.

இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் வெர்னா கார்களை விட சிட்டி சிறிது பின்தங்கி இருப்பதாக தெரிந்தாலும் மைலேஜ் விஷயத்தில் லிட்டருக்கு 26 கி.மீ. (ARAI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ) தந்து வெர்னா கார்களை மட்டுமல்ல இந்த பிரிவில் உள்ள அனைத்து கார்களையும் பின்னுக்கு தள்ளி விடுகிறது ஹோண்டா சிட்டி. நீங்கள் எரிபொருள் சிக்கனத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர் என்றால் இது ஹோண்டா சிட்டி கார்களுக்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்டாக அமையும் என்று உறுதியாக சொல்லலாம்.

image 15

டீசல் என்ஜின் சிட்டியில் உட்புறம் என்ஜின் சத்தம் அதிகம் கேட்கக் கூடாது என்பதற்காக கூடுதல் வசதிகள் செய்யபட்டிருந்தாலும் டீசல் என்ஜின் சத்தம் தொடர்ந்து கேபின் உட்புறம் கேட்கிறது. இதன் பிரிவில் உள்ள மற்ற டீசல் என்ஜின் கார்களை விட சிட்டியில் இந்த சத்தம் அதிகமாக உள்ளது.

மொத்தத்தில் நகர்புற போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் இந்த என்ஜின் நல்ல முறையில் ரிபைன் செய்யப்பட்டு உள்ளது. நல்ல லோ - எண்டு பவர் டெலிவரி கிடைப்பது மட்டுமின்றி டர்போலேக் சிறிதும் இல்லை என்பது ஆறுதல் தரும் விஷயம். இந்த டீசல் என்ஜின் உண்மையிலேயே ஹோண்டாவின் ஒரு சிறந்த தயாரிப்பு என்றாலும் இது வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

பெட்ரோல்: i - VTEC பெட்ரோல் மோட்டார் முந்தைய ஹோண்டா சிட்டி மாடலில் இருந்தே பெறப்பட்டுள்ளது. கூடுதல் மைலேஜ் மற்றும் செயல்திறனை தருவதற்காக இரட்டை நீடில் ஸ்பார்க் ப்ளக் இணைக்கப்பட்டுள்ளதுடன் வால்வ் டைமிங்கும் அட்ஜஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த என்ஜின் 6600rpm -ல் 117 bhp அளவு சக்தியையும் அதிகபட்சமாக 4600rpm -ல் 145 nm அளவு டார்க்கையும் வெளியிடுகிறது. ஆனால் இன்னொருபுறம் இந்த கார்களின் பிரிவில் அதிகப்படியாக வெர்னா VTVT 6300 rpm -ல் 120 bhp சக்தியை வெளியிடுகிறது. அதிகப்படியான வேகதிப் பொறுத்தவரை தனது போட்டியாளர்களுக்கு இணையாக மணிக்கு 195 கி.மீட்டராக உள்ளது.

image 16

தன்னுடைய ஸ்மூத்தான பவர் டெலிவரி மூலம் ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் வேரியன்ட் சந்தேகத்திற்கு இடமின்றி முன்னணியில் உள்ளது.5 - வேக கியர் பாக்ஸ் நல்ல மைலேஜ் தரும் வகையில் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் ஆப்ஷனைப் பொறுத்தவரை 5 - வேக ஆட்டோமேடிக் கியர் அமைப்புடன் கூடிய CVT என்ஜின் கொண்ட வேரியன்ட் ஒன்று புதிதாக வரிசையில் சேர்ந்துள்ளது. இந்த யூனிட்டில் D அல்லது S மோடில் பயன்படுத்தக்கூடிய ஷிப்டர்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. S மோட் காரை ரெட்லைன் செய்ய அனுமதிக்கிறது. ஆனாளிது மைலேஜ் அளவை குறைக்கிறது. ARAI அமைப்பின் கூற்று படி , CVT லிட்டருக்கு 18 கி.மீட்டர் மைலேஜூம் மேனுவல் ஆப்ஷன்கள் லிட்டருக்கு 17.8 கி.மீட்டர் மைலேஜும் தரும் என்று தெரிவித்துள்ளது.

பயணித்தல் மற்றும் கையாளுதல்


சஸ்பென்ஷனில் முன்புறம் மேக்பெர்சன் ஸ்ட்ரட் மற்றும் பின்புறம் டார்ஷன் பீம் உள்ளது. சஸ்பென்ஷன் சற்று மென்மையாக உள்ளதால் நகர்புற போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது. சஸ்பென்ஷன் எந்த வித சத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல முந்தைய மாடலுடன் ஒப்பிடிகையில் சற்று மேம்படுதப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் அதிக வேகத்தில் ஸ்டீரிங் ஃபீட்பேக் சரிவர கிடைக்கவில்லை. மேலும் லேசான பாடி ரோல் டைட் கார்னர்களில் ஏற்படுகிறது . ஆனால் இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் சிட்டி இந்த விஷயத்தில் எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்ல முடிகிறது. இருந்தாலும் இந்த பிரிவில் ஓட்டுனர் வசதி மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பில் வெண்டோ கார்கள் முதலிடம் பிடிக்கின்றன.

image 17

ஷார்ட் டர்னிங் ரேடியஸ் மற்றும் லைட்டான ஸ்டீரிங் வீல் நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் வசதியாக உள்ளது. டீசல் என்ஜின் மாடல் பெட்ரோல் மாடலை விட முன்புறம் சற்று கூடுதல் எடையுடன் உள்ளது. வெர்னாவை விட ஓட்டுவதற்கு வசதியாக இந்த சிட்டி கார்கள் இருந்தாலும் கையாளும் விஷயத்தில் வெண்டோ மற்றும் ரேபிட் கார்கள் சில கூடுதல் மதிப்பெண்களை பெற்று விடுகிறது.

4

5

பாதுகாப்பு


உடல் பகுதி வடிவமைப்பை பொறுத்தவரை ஹோண்டாவின் தனித்துவமான ACE உடலமைப்பை கொண்டு இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உடலமைப்பானது பல்வேறு மூலக்கூறுகளை (எலிமென்ட்) கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதனால் வாகனம் முன்புறம் விபத்துக்குள்ளாகும் போது அந்த விபத்தின் காரணமாக வெளியாகும் சக்தி சமமான விகிதத்தில் காரின் அனைத்து முன்புற பகுதிகளுக்கும் பரவுகிறது. இதன் காரணமாக பயணிகள் பெரிய அளவிலான பாதிப்பில் இருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். அனைத்து வேரியன்ட்களும் ABS, EBD மற்றும் இரண்டு காற்றுபைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.

image 18

ASEAN NCAP சோதனையில் டாப் -எண்டு மாடல் (ஓட்டுனர் மற்றும் முன்புற பயணிக்கான காற்று பைகள்) 5 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல் பேஸ் வேரியன்ட் ( ஓட்டுனர் பக்க காற்று பையுடன் மட்டும் ) 4 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றது. குழந்தை பயணியின் பாதுகாப்பில் 4 நட்சத்திர ரேட்டிங்கை ஹோண்டா சிட்டி பெற்றுள்ளது. இந்த சோதனை முடிவுகள் ஹோண்டா சிட்டி ஒரு பாதுகாப்பான கார் என்பதற்கு சான்றாக விளங்குகிறது.

வேரியன்ட்கள் (வகைகள்)


6

ஓட்டுனர் பக்க காற்றுப்பைகள் ,ABS& EBD அனைத்து வேரியன்ட்களிலும் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாகும். திடீர் என்று ப்ரேக் போட வேண்டிய அவசர சூழ்நிலையில் வாகனத்தின் கண்ட்ரோல் நல்ல முறையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்கச் செய்ய இந்த ABSமற்றும் EBD உதவுகிறது. நடுத்தர SV வேரியண்டில் வாகனத்தை ஓட்டும்போது தேவைப்படும் அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளன என்றாலும் டாப் -எண்டு VX வேரியண்டில் தான் அதிநவீன அசத்தலான பல சிறப்பம்சங்கள் உள்ளன.

நீங்கள் கார் வாங்குவதில் அதிக முதலீடு செய்ய விரும்பாதவர் என்றால் நீங்கள் அடிப்படை (பேஸ்) வேரியன்டான E வேரியண்டை வாங்கலாம். ஆனால் அதில் இன்போடைன்மென்ட் அமைப்பு இருக்காது. வேண்டும் என்றால் காரை வாங்கி பின் வெளியில் கொடுத்து ம்யூஸிக் சிஸ்டம் பொருத்தி கொள்ள நீங்கள் தயார் என்றால் எந்த பேஸ் E வேரியண்டை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். அதே சமயம் ஓட்டுனரை அமர்த்தாமல் நீங்களே சுயமாக ஓட்டி செல்பவர் என்றால் என்ட்டர்டெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய S ட்ரிம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். நீங்கள் ஓட்டுனரை அமர்த்தி பின்புறம் அமர்ந்து வசதியாக பயணம் செய்யும் விருப்பம் கொண்டவர் என்றால் பின்புறம் AC திறப்பான்கள் (வெண்ட்ஸ்) உடன் கூடிய நடுத்தர - லெவல் SV ட்ரிம்கள் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். இந்த ட்ரிம்மில் டச்ஸ்க்ரீன் என்ட்டர்டெயின்மென்ட் சிஸ்டம் , அல்லாய் சக்கரங்கள் , ஃபாக் விளக்குகள் மற்றும் ரிவர்சிங் கேமெரா ஆகிய அம்சங்களும் உள்ளன. சொகுசு ப்ரீமியம் கார்களில் காணப்படும் அம்சங்களான சன்ரூஃப், தோலினால் மூடப்பட்ட இருக்கைகள் மற்றும் ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் ஆகியவை டாப் எண்டு வேரியண்டில் மட்டுமே உள்ளது. எங்களது கணிப்பு படி நடுத்தர SV வேரியண்டில் தான் கொடுக்கும் காசுக்கு ஏற்ற அம்சங்கள் நிறைவாக உள்ளன. டாப் -எண்டு V மற்றும் VX வேரியண்டில் முறையே இன்போடைன்மென்ட் அமைப்பை உங்கள் தேவைகேற்ப டச்ஸ்க்ரீன் யூனிட்டாக அப்க்ரேட் செய்துக் கொள்ளும் வசதியும், சன்ரூப் பொருத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.

தீர்ப்பு


ஹோண்டா சிட்டி கார்கள் தனது பிரிவில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டீசல் என்ஜின் ஆப்ஷன் மேலும் இந்த காரின் விற்பனையை அதிகரிக்கும் என்பதே எங்கள் கணிப்பு . செயல்திறன் புள்ளி விவரங்கள் இதன் பிரிவில் உள்ள மற்ற போட்டி கார்களுடன் ஒப்பிடுகையில் சற்று ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும் மைலேஜ் விஷயத்தில் இந்த ஹோண்டா சிட்டி முன்னணியில் உள்ளது, இதன் பிரிவில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டியின் பெட்ரோல் ஆப்ஷன் நகர்புற பயணத்திற்கு மிகவும் ஏற்புடைய வாகனமாக இருக்கிறது. அதே சமயம் வார கடைசியில் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் எண்ணம் இருந்தால் நிச்சயம் இந்த கார் உங்களுக்கு உற்ற தோழனாக இருக்குமே தவிர ஏமாற்றாது என்று சொல்லலாம். மற்றொருபுறம் டீசல் என்ஜின் சிட்டி கார்கள் இதன் பிரிவில் உள்ள மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகப்படியான என்ஜின் சத்தத்தை ஏற்படுத்தினாலும் லிட்டருக்கு 26 கி.மீ மைலேஜ் தருவதால் மற்ற எந்த கார்களையும் விட முன்னணியில் இந்த டீசல் என்ஜின் ஹோண்டா சிட்டி உள்ளது. அதிகப்படியான மைலேஜ் மற்றும் வசதிகள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த டீசல் என்ஜின் ஹோண்டா சிட்டி மிகவும் பொருத்தமாக இருக்கும். நீங்கள் உங்களுக்கு ஏற்ற ஒரு ஹோண்டா சிட்டி வேரியண்டை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் விரிவான எங்கள் ஒப்பீட்டை ஆழ்ந்து படியுங்கள் . மொத்தத்தில் ஹோண்டா சிட்டி கார்கள் அதன் பிரிவில் உள்ள டீசல் கார்களையும் பின்னுக்கு தள்ளி , கடும் போட்டி நிலவும் டீசல் கார் பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் என்றே தோன்றுகிறது.