ஹோண்டா BR-V

` 9.0 - 13.2 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


ஏப்ரல் 14, 2016: இந்தாண்டு (2016) மே மாதம் 5 ஆம் தேதி BR-V-யை, ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த காரில் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், டைமண்டு கட் அலாய்கள் மற்றும் வெளிப்புறத்தில் முன்பக்க குடும்ப அழகியல் அம்சங்கள் ஆகியவற்றை தாங்கி வருகிறது. உள்புறத்தில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின்பக்க பார்க்கிங் கேமரா, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் மடிக்கும் வசதியை கொண்ட 3வது வரிசை சீட்கள் ஆகியவற்றை உட்கொண்டுள்ளது. இயந்திரவியலை பொறுத்த வரை, டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரு ஆற்றலகங்களும் இந்த வாகனத்திற்கு அளிக்கப்பட உள்ளது. இதில் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் 118bhp ஆற்றலும், ஒரு அதிகபட்ச முடுக்குவிசையான 145Nm-யும் பெறப்படுகிறது. 1.5-லிட்டர் டீசல் மூலம் 99bhp ஆற்றல் மற்றும் 200Nm முடுக்குவிசை பெறப்படுகிறது. ஏசியன் NCAP கிரஷ் பரிசோதனையில் உட்படுத்தப்பட்ட இந்த காருக்கு, 5-ஸ்டார் மதிப்பீடு கிடைத்துள்ளது. போட்டியிடுவதற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் இது, ஹூண்டாய் க்ரேடா மற்றும் ரெனால்ட் டஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியிட உள்ளது.

ஹோண்டா BR-V விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்:


அடுத்து நடைபெறவுள்ள ஹோண்டா BR-V-யின் அறிமுகத்தின் மூலம் SUV பிரிவில் சில கவர்ச்சிகரமான மேம்பாடுகளை ஹோண்டா நிறுவனம் செய்ய உள்ளது. இந்த வாகனத்தின் கட்டமைப்பின் சிறப்பை குறித்த கச்சிதமான செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தாலும், நம்பத் தகுந்த தகவல்கள் இந்நிறுவனத்தால் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியாகி உள்ள இந்த காரின் படங்களை நீங்கள் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தால், SUV-களுக்கும், ஹேட்ச்பேக்குகளுக்கும் இடையிலான ஏதோ ஒரு ஹைபிரிட்டை இந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது என்று உங்களுக்குள் ஹோண்டா நிறுவனத்தை குறித்த ஒரு எண்ணம் தோன்றும். இந்த மாடலை பார்த்துவிட்டு, இது மொபிலியோவின் தடித்த அமைப்பைக் கொண்ட ஒரு பதிப்பு என்று நீங்கள் நினைத்தாலும் நாங்கள் எதுவும் உங்களை குறைக் கூறமாட்டோம். ஏனெனில் பெரும்பாலானோர் அப்படித் தான் நினைக்கிறார்கள். தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள SUV பிரிவிற்குள் அடியெடுத்து வைக்கிறோம் என்பதை விட, இதன்மூலம் சந்தையில் எப்படியாவது ஒரு உறுதியான இடத்தை பிடிக்க முடியும் என்றே அந்நிறுவனம் நம்புகிறது.

p1

சாதகங்கள்:1. கவர்ந்திழுக்கும் திறன் கொண்ட வெளிப்புற தகவமைப்பு – இதன் தடித்த மற்றும் சக்திவாய்ந்த வெளிப்புற தோற்றத்தை கண்டு நாங்களே ஆச்சரியப்பட்ட நிலையில், இளம் வயதினருக்கும் இந்த நிலை தான் ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதை கூற விரும்புகிறோம்.
2. உட்புற அமைப்பியல் பெரியதாகவும், சீராகவும் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு சராசரி பயணிக்கும் சிறந்த ஒரு பயண சூழ்நிலையை உறுதி செய்வதாக உள்ளது.

பாதகங்கள்:1. இதன் உமி போன்ற பாடி வடிவத்தை கருத்தில் கொள்ளும் ஒருவருக்கு, இதன் எரிப்பொருள் சிக்கனத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற சந்தேகம் ஏற்படலாம்.
2. இப்பிரிவில் உள்ள மற்ற எல்லா மாடல்களுடன் ஒப்பிடும் போது, இந்த வாகனத்திற்கு ஒரு சுமாரான கிரவுண்டு கிளியரன்ஸ் தான் கொண்டு உள்ளது.

தனித் தன்மையான அம்சங்கள்:1. இதில் ஒரு மேம்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் டச்ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டத்தை பெற்றுள்ளதால், எல்லா நிலையில் உள்ள இதன் நேயர்களையும் மதிமயங்க செய்யும் தன்மை இதற்கு உண்டு என்பது உறுதி செய்யப்படுகிறது.
2. உட்புற அமைப்பியலின் வடிவமைப்பு கண்களை வெகுவாக கவர்ந்து இழுப்பதாக உள்ளதால், இந்நிறுவனத்தின் மற்ற பல மாடல்களையும் இது பின்னுக்கு தள்ளுவதாக அமையும் என்று எங்களுக்கு தோன்றுகிறது.

பின்னணி மற்றும் பரிணாமம்:


சமீபகாலமாக இந்த வாகனத்தை குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. ஹோண்டா நிறுவனம் SUV பிரிவிற்குள் நுழைவதை குறித்து நாங்கள் கேள்விப்பட்ட போதே, இதுவரை உலகில் எங்கும் இல்லாத சில வடிவமைப்பு தன்மைகளை இந்த வாகனம் தாங்கி வரும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான மக்களிடையே ஏற்பட்டது. நாங்கள் அப்படி தான் நினைத்தோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் நாங்கள் மவுனம் சாதித்து வந்ததோடு, ஹோண்டா நிறுவனம் SUV பிரிவில் எந்த மாதிரியான கவர்ச்சித் தன்மையை ஏற்படுத்தும் என்பதை காண மிகுந்த ஆவலோடு காத்திருந்தோம். ஆனால் இவ்வாகனத்தை குறித்த அதிகபடியான தகவல்கள் நீண்டகாலமாக வெளியாவதோடு, இவ்வாகனத்தின் தொழிற்நுட்ப வரைப்படத்தின் சில தோற்றங்களை வாகன-உலகிற்கு கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த மாடலின் ஆரம்பக் கட்ட தொழிற்நுட்பங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தாலும், இந்த மாடலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது போது, அதிகபடியான அம்சங்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டதை கண்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆட்டோ ஷோ 2016-ல் இவ்வாகனத்தை ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு வைத்த போது, இந்த தொழிற்துறையில் உள்ள பலருக்கும் ஒரு பெரிய ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் அவர்கள் தற்போது இதைவிட ஒரு அதிக சம்பூர்ணமான தயாரிப்புகளை அளித்து வருவதால், இவ்வாகனத்தின் தொலைநோக்கு பார்வை மற்றும் அதன் அம்சங்கள் பாதிப்பிற்கு உள்ளாகின.

ஒட்டுமொத்தம்:


இந்த வாகனத்தை குறித்து நாங்கள் சேகரித்த தகவல்களை தொகுத்து, எங்களால் முடிந்த வரை ஒரு சிறந்த மேலோட்டத்தை அளிக்க முயற்சி செய்து உள்ளோம். தற்போது மற்ற பல வாகனங்களிலும் பயன்பாட்டில் உள்ள சமீப காலத்தை சேர்ந்த 1.5-லிட்டர் டீசல் என்ஜினை, இதுவும் கொண்டிருக்கும் என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மெக்பியர்சன் சஸ்பென்ஸன் உடன் திடமான டிஸ்க் பிரேக்குகளும் இணைந்து செயல்பட்டு, ஒரு மென்மையான மற்றும் இதமான பயணம் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் ABS/EBD, ப்ரீடென்ஷனர் ஆர்ம்டு சீட்பெல்ட்கள், சைல்டு ஆங்கர்கள் மற்றும் பல அம்சங்களை உட்கொண்ட ஒரு உறுதியான பாதுகாப்பு கூறுகளின் கூட்டணி மூலம் கிடைக்கும் பலன்களையும் எதிர்பார்ப்பிற்குரிய நுகர்வோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மற்ற கார்களை வைத்து பார்க்கும் போது, இவ்வாகனத்தின் உட்புற அமைப்பியலின் வடிவமைப்பு திரும்பி பார்க்க வைக்கும் தன்மையை அளிக்க வாய்ப்புள்ளதோடு, சிட்டி மற்றும் ஜாஸ் ஆகியவற்றின் உட்புற வடிவமைப்பின் சிறப்புத் தன்மையுடன் ஒப்பிட்டால், இந்நிறுவனத்தின் மூலம் இதுவே பெரும்பாலும் பாதுகாப்பான தயாரிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதமான வசதிகளை பொறுத்த வரை, ஒரு டச்ஸ்கிரீன் சிஸ்டம், USB, ஆக்ஸ்-இன் மற்றும் மற்றவைகளில் காணப்படும் நேவிகேஷன் ஆகிய அதிக முக்கியத்துவம் வாய்ந்த சில அம்சங்களை இது கட்டாயம் கொண்டிருக்கும். ஒவ்வொரு வாகனத்தை நாங்கள் ஊடுருவி ஆராய்ந்து பார்க்கும் போது, முடிந்த வரை நாங்கள் கூறும் கருத்துக்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பதற்கு முயற்சி செய்கிறோம். ஆனால் இதை பொறுத்த வரை, தகவல்கள் என்பதை விட, பெரும்பாலான காரியங்கள் சுற்று வட்டாரத்தில் கேள்விப்பட்டவையாகவும், யூகிக்கப்பட்டவையாகவும் உள்ளன.

வெளிப்புற அமைப்பியல்:


SUV பிரிவிற்குள் அதிக அளவிலான வாகனங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் தனித்தன்மை மற்றும் போலித்தன்மை இல்லாதது என்று சிலவற்றை மட்டுமே உங்களால் கண்டறிய முடிகிறது என்பதை நாம் எல்லாரும் முதலில் ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் ஹோண்டா BR-V-யை பொறுத்த வரை, இதன் போட்டியாளர்களாக உள்ள மாடல்களின் வழக்கமான பாணியில் இருந்து வழிவிலகி, ஒரு கூர்மையான மற்றும் சிக்கலான வடிவமைப்பை பெற்று, புதிரானதாகவும், பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் காட்சி அளிக்கிறது. இணையதளத்தில் உலா வரும் படங்களை பார்த்த பிறகு நாங்கள் கூற நினைப்பது என்னவென்றால், மற்ற பல ஹோண்டா மாடல்களில் காணப்படும் காரியங்களையும் இந்த வாகனம் ஒருமித்து பெற்றுள்ளது. சிட்டி, ஜாஸ் மற்றும் பல வாகனங்களில் உள்ள வடிவமைப்பு அடையாளங்களை ஒரு SUV-யில் கொண்டு வந்து குவித்ததாக காணப்படும் இதை, நாங்கள் இணையதளத்தில் நாங்கள் பார்த்ததை விட, ஆராய்ந்த போது சிறப்பான சித்திரமாக கிடைத்துள்ளது.

p2
முன்பக்கத்தில் உள்ள பளபளப்பான கிரிலில் ஒரு பிரகாசமான கிரோம் மேலோட்டம் காணப்படுவதன் மூலம் ஒரு சராசரி நபரின் கவனத்தை கவர்ந்து இழுப்பது உறுதி செய்யப்படுகிறது. மேலும் இதன் மேலே ஹோண்டாவின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது, மற்றொரு தனித்தன்மையான செயல்பாடு ஆகும். கிரிலின் நிலையோடு, இருபுறமும் பக்கவாட்டு பகுதிக்கு இழுக்கப்பட்டுள்ள ஹெட்லெம்ப்கள் மிக கச்சிதமான முறையில் பொருந்துகிறது. கிரிலின் லேஅவுட் மற்றும் முன்பக்க லெம்ப்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து, இவ்வாகனத்தின் முன்பக்கத்திற்கு ஒரு கம்பீரமான தன்மையை அளித்துள்ளது. இதை பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. இதன் முன்புறத்தின் திகிலை மேலும் அதிகரிக்கும் வகையில், விரிவான ஹூட் காணப்பட்டு, அதன் வழியாக கடந்து செல்லும் நேர்த்தியான லைன்கள் மூலம் ஒரு அதிக கவர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

p3
இதன் முன்பக்க முனை ஒரு பெரிய பகுதியாக காணப்பட்டு, ஏர் டேமை சூழ்ந்து அமையப் பெற்றுள்ளது. இதன் ஃபேக் லெம்ப்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பேஷனில் அமைந்துள்ளது. மேற்கண்ட படங்களின் மூலம் நாங்கள் பார்த்த வரை, இவ்வாகனத்தின் பக்கவாட்டு பகுதி மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டுள்ளது. அமைதியான பாடி லைன்கள் டோர்-சைடுகளை கடந்து செல்வதோடு, வீல் ஆர்ச்சுகளை சூழ்ந்து காணப்படும் நேர்த்தியான வளைவுகள் ஆகியவை பார்வைக்கு அழகை கூட்டுவதாக உள்ளன.

p4
விண்டோ ப்ரேம்களின் மீதான கருப்பு நிறத் தன்மை உடன் மேலே காணப்படும் ரூஃப் ரெயில்கள் மூலம் பக்கவாட்டு பகுதியின் வடிவமைப்பிற்கு ஒரு வேறுபட்ட அமைப்பு கிடைத்துள்ளது என்பது எங்களின் தனிப்பட்ட கருத்து ஆகும். இணையதளத்தில் வெளியாகி உள்ள சில தகவல்களின் அடிப்படையில், இதன் டோர் ஹேண்டில்கள் மற்றும் வெளிப்புற மிரர்கள் ஆகியவை கூட பாடியின் நிறத்திலேயே அமைந்திருக்கும் என்று தெரிய வருவதால், இதன்மூலம் பக்கவாட்டு பகுதிக்கு மேலும் ஒரு கவர்ச்சிகரமான தோற்றம் கிடைக்கும். இவ்வாகனத்தின் படங்களில் இருந்து நாங்கள் கவனித்த எல்லா காரியங்களையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்த போது, அதன் சுயவிபரத் தகவல் வடிவம் பெற்றது. இதன் ரூஃப்லைன் ஸ்லைடுகள் முன்பக்கத்து தோற்றத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், பின்னால் உள்ள போனட்டை நோக்கி தங்குதடையின்றி செல்லும் தன்மை, உண்மையிலேயே ஒரு நேர்த்தியான வடிவமைப்பை காட்டுகிறது.

p5
பின்பக்கத்தில் உள்ள டெயில்-லெம்ப் கிளெஸ்டர்கள், டெயில்-கேட்டின் இருபுறமும் வரும் வகையில் புத்திசாலிதனமாக வடிவமைக்கப்பட்டு, அதனுடன் நடுவே கடந்து செல்லும் ஒரு மெல்லிய லைன் வந்து இணைகிறது. இதன்மீது ஒரு அடர்த்தியான கிரோம் விரிவாக்கத்தை பெற்ற நம்பர் பிளேட் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நம் சந்தையில் உள்ள ஒவ்வொரு சராசரி கிரோம் விரும்பிகளுக்கும் பெரும் மகிழ்ச்சி உண்டாகும் என்பதை நாங்கள் உறுதியாக கூற முடியும்.

p6

1

2

உட்புற அமைப்பியல்:


உட்புற அமைப்பியலை குறித்த நம்பகமான தகவல்களை அதிக அளவில் சேகரிக்க எங்களால் முடியவில்லை. ஆனால் இணையதளத்தில் வெளியான தகவல்களில் இருந்து நாங்கள் அறிந்து கொண்ட காரியங்களை உங்களுக்கு அளிக்கிறோம். முதலாவதாக, இதன் கேபின் அமைப்பு குறித்து பார்த்தால், ஏற்கனவே பிரபலமாக உள்ள மற்ற வாகனங்களின் வரிசையிலேயே பெரும்பாலும் அமையலாம். எங்களுக்கு கிடைத்த சில படங்களில் இருந்து, முக்கியமாக ஜாஸ் மற்றும் சிட்டி ஆகியவற்றின் ஆதிக்கம் இதில் அதிகமாக இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது. ஒரு விசாலமான 7 சீட்களை கொண்டு, 7 பெரியவர்கள் இதமாக அமரும் வகையிலான விசாலமான ரூம்மை பெற்றிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். சில தகவல்களின் அடிப்படையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் கூட விரிவான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் ஆகியவை காணப்படும் என்று தெரிகிறது.

p7
இதன் கேபின், சீட்கள், டேஸ்போர்டு மற்றும் டோர்-சைடுகள் ஆகியவை ஒரு வெளிர் பழுப்பு நிறத்திலான ஆடையை அணிந்ததாக காட்சி அளிக்க உள்ள நிலையில், இந்த ஆடம்பரமான தோற்றத்தை நாங்கள் விரும்புகிறோம். இதன் விரிவான டேஸ்போர்டின் முனையில் சிறிய அளவிலான AC திறப்பிகளை கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதன்மூலம் இந்த பகுதியின் தோற்றத்தை வேறுபடுத்தி காட்டுவதாக அமையும்.

p8
இவ்வாகனத்தின் நடுவே மேலே ஏறிச்செல்வதாக ஒரு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அமைந்திருப்பதோடு, அதனுடன் நடுப்பகுதியில் ஒரு பெரிய அளவிலான டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேயும் காணப்படலாம். அதை சுற்றிலும் டிஸ்ப்ளேயின் பட்டன்கள் அடுக்கி வைக்கப்பட்டதாக அமைந்து, வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு எளிதாக அமையும் என்று தெரிகிறது.

p9
இதை தவிர, டிரைவரின் வசதியை அதிகரிக்கும் வகையில், ஒரு புஸ் ஸ்டார்ட் பட்டன் வசதியை கொண்டிருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற ஹோண்டா வாகனங்களில் காணக் கிடைப்பது போலவே, டேஸ்போர்டின் வலதுபுறத்தில் உள்ள ஸ்டீரிங் வீல்லில் நிறுவன அடையாள வடிவமைப்பை (ஸிக்னேச்சர்) பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில் இது பெரும்பாலான மக்களின் இடையே சிறப்பாக செல்ல வேண்டியுள்ளது. மேலும் இணையதளத்தில் வெளியான குறிப்புகளின் மூலம் இதன் ஸ்டீரிங் வீல்லில் ஏறிச்செல்லும் கன்ட்ரோல்கள் காணப்பட்டு, பயணிகளின் செயல்பாடுகளுக்கு எளிதாக இருக்கும் என்று தெரிகிறது.

p10
இவ்வாகனத்தின் ஆடம்பர பயணத்தை பொறுத்த வரை, சீட்கள் நேர்த்தியான லெதர் அப்ஹோல்டரியை அணிந்தவையாக காணப்படலாம். இந்நிலையில் ஒருவரின் இதமான பயணத்தையும் அதிகரிக்கும் காரணிகளாக ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் ஆம்ரெஸ்ட்களும் அமைய உள்ளன.

செயல்திறன்:


ஒரு தயாரிப்பு தொழிற்சாலைக்குள் கடந்து சென்று, காரின் ஹூட்டை திறந்து பார்க்காத வரை, காரின் என்ஜினை குறித்த விபரங்களை மிக கச்சிதமாக எங்களால் கூற முடியாது. ஆனால் சில இடங்களில் இருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்களுடன், சில அறிவுப்பூர்வமான யூகங்களை ஒருங்கிணைத்து எங்களால் கூற முடியும். முதலாவதாக, ஹோண்டா மொபிலியோவை தற்போது இயக்கி வரும் 1.5-லிட்டர் i-VTEC என்ஜின் தான், இந்த வாகனத்திலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த அமைப்பில் 4 சிலிண்டர்கள் மற்றும் 16 வால்வுகள் ஆகியவை ஒருங்கே பெற்று, இரட்டை ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட் கூட்டமைப்பாக இருக்கும் என்பதை மட்டும் எங்களால் அடித்து கூற முடியும். மேற்கண்ட என்ஜின் மூலம் இயக்கப்படும் மற்ற மாடல்களை பொறுத்த வரை, முடுக்குவிசை அளவு 4800rpm-ல் ஏறக்குறைய 145Nm-யை ஒட்டியும், ஆற்றல் அளவு 6,600 rpm-ல் 118bhp-யும் காணப்படலாம். இந்த ஆற்றல் மிகுந்த என்ஜினுக்கு தகுந்த வழித்தடமாக அமையும் வகையில், ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை இதனுடன் இணைந்து செயலாற்ற செய்வதால் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

4

பாதுகாப்பு:


இந்த காரில் இரட்டை ஏர்பேக்குகள், ஒரு சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஒரு என்ஜின் இம்மொபைலைஸர், திறந்திருக்கும் கதவுகள் மற்றும் பக்குள் போடப்படாத சீட்பெல்ட்கள் ஆகியவை குறித்து எச்சரிக்கும் வசதி, மற்றும் மற்ற பல அம்சங்களை உட்கொண்ட பல்வேறு சாதகமான பாதுகாப்பு வசதிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். நிரந்தர அம்சங்களான ABS மற்றும் EBD ஆகியவற்றை கொண்டிருப்பதன் மூலம் ஒரு விரிவான பாதுகாப்பு வசதியை கொண்டிருக்கிறது என்ற நினைப்பை அளிக்கிறது. ஆனால் துவக்க நிலை வகைகளில் இவை காணப்படாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.

வகைகள்:


இப்போதைக்கு இந்த காரை குறித்த ஒவ்வொரு காரியங்களும் மிக கச்சிதமான முறையில் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளன. ஆனால் இந்த மாடல் சீரிஸில் 4 முதல் 5 வகைகள் வரை கொண்டு வரப்படலாம் என்பதை எங்களால் உறுதியாக யூகிக்க முடிகிறது. இந்நிறுவனத்தின் மற்ற மாடல்களின் மூலம் அளிக்கப்படும் அம்சங்கள் மற்றும் அழகியல் கூறுகள், இந்த வகையின் லேஅவுட்டில் அதிகளவில் பெறப்பட்டுள்ளதை காண கிடைக்கிறது. இந்த வாகனத்தில் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்தே, உங்களுக்கான சரியான வகையை தேர்வு செய்து கொள்ள நாங்கள் ஆலோசனை கூற முடியும். ஒரு உண்மையான ஜாஸை எதிர்நோக்கி உள்ள மக்களுக்கு, நீங்கள் இதன் உயர்தர வகைகள் ஒரு சிறந்த தேர்வாக அமையும். ஒரு பொங்கி வழியும் அளவிலான வசதிகளை இந்நிறுவனம் அளிக்க முன் வந்தாலும், அதற்கான விலை வேறுபாடுகளை நீங்கள் தான் ஏற்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றொருபுறம், நீங்கள் ஒரு சுமாரான ஓட்டும் திறனை அளிக்கும் காரில் சில குறைந்தபட்ச இதமான அம்சங்களை கொண்டதாக எதிர்நோக்குவதோடு, உங்களை நீங்களே பெரிய அளவில் விளம்பரப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட விரும்பவில்லை என்றால், இந்த காரின் துவக்க நிலையில் அமைந்த வகைகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இவைகளில் ஒரு சாதாரண அம்சங்களை கொண்ட பட்டியல் காணப்பட்டாலும், அதில் சில மிக முக்கியமாக பயன்பாட்டு அம்சங்களும், பாதுகாப்பு வசதிகளும் உட்படுகின்றன. ஆனால் அவை மேலோட்டமாக மட்டும் சற்று செலவை ஏற்படுத்தலாம் என்பதால், அதிக அளவிலான மக்கள் இடையே இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தீர்ப்பு:


மேற்கண்ட கருத்துகளுடன் எங்களின் தொகுப்பை முடித்து கொண்டு, விரைவில் இந்திய மண்ணில் வந்து களமிறங்க உள்ள இந்த புத்தம் புதிய தோற்றத்தை கொண்ட வாகனத்தை வரவேற்பதற்கு நாங்கள் பெரும் ஆவலோடு இருக்கிறோம் என்று கூற விழைகிறோம். ஒரு அட்டகாசமான வெளிப்புற அமைப்பு, உட்புறத்தில் பரந்து விரிந்த இடவசதி, ஒரு சிறப்பான பொழுதுப்போக்கு வசதி மற்றும் ஒட்டுமொத்தத்தில் ஓட்டுவதற்கு ஒரு உறுதியான தன்மை ஆகிய சிறப்புகளை பெற்ற இதை குறித்து எள் அளவும் நம் மனதில் சந்தேகம் எழ வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால் கடைசியாக, இந்த மாடலின் அறிமுகத்தின் மூலமும், அதன் அம்சங்களின் மூலமும் சந்தையில் கைப்பற்ற நினைக்கும் தயாரிப்பாளரின் திட்டம் நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா என்பதை அறிய நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

p11