ஹோண்டா அமேஸ்

` 5.5 - 8.7 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


பிப்ரவரி 20, 2016: ஜப்பான் வாகனத் தயாரிப்பாளரான ஹோண்டாவின் சிறந்த விற்பனையாகி வரும் காரான அமேஸ் என்ற கச்சிதமான சேடன், புதுப்பிக்கப்பட்ட பதிப்பை பெற உள்ளது. இந்த வெளிவரவுள்ள மேம்படுத்தப்பட்ட சேடனின் ஒளிவு மறைவற்ற தெளிவான படங்கள், ஆன்லைனில் வெளிவர துவங்கியுள்ளன. இந்த புதுப்பிக்கப்பட்ட ஹோண்டா அமேஸ், 2016 மார்ச் 3 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உறுதியான வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் அறிமுகம் புதுடெல்லியில் வைத்து நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்ற சாத்தியக்கூறு குறித்து கூறப்பட்டு வந்த நிலையில், இதை உறுதி செய்யும் வகையில் புதுடெல்லியில் ஒரு பத்திரிக்கையாளர் கருத்தரங்கம் நடைபெறும் என்று ஹோண்டா தரப்பில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் கருத்தரங்கம் நடத்தும் காரியத்தில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் விலகி கொண்டது.

ஹோண்டா அமேஸ் விமர்சனம்


மேற்பார்வை


அறிமுகம்


ஹோண்டா நிறுவனத்திற்கு இந்தியாவில் ஒரு புதிய உத்வேகத்தின் துவக்கத்தை அளித்த ஒரு கார் என்றால் அது ஹோண்டா அமேஸ் தான். இதில் டீசல் வகை துல்லியமானது. இந்த கச்சிதமான சேடன், சந்தையில் முதன் முதலாக iDTEC மோட்டார் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும். ஹோண்டா தரப்பில் மிகச் சிறப்பான கார்கள் தயாரிக்கப்பட்டாலும், அதன் பெட்ரோல்-மட்டுமே கொண்ட முதலீடு மூலம், டீசல் மாற்றிகள் கொண்ட போட்டியில் பின்தங்க நேரிடுகிறது. இந்தியா டீசலுக்கு நேரான பாதையில் பயணிக்கிறது என்ற உண்மையை, ஹோண்டா குறிப்பிட்ட காலத்திற்கு பிறகே புரிந்து கொண்டது. ஆனால் மேலும் காலதாமதம் செய்யாத வகையில், இப்போது ஹோண்டா அமேஸை நமக்கு அளித்துள்ளது.

சாதகங்கள்


1. பார்வைக்கு சிறப்பான கச்சிதமான சேடன். 2. ஆற்றல் மற்றும் செயல்திறன் 3. நாட்டின் சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட டீசல் கார்களில் இதுவும் ஒன்று. 4. விஸ்தாரமான ரேர் கேபின் மற்றும் பூட் ஸ்பேஸ். 5. ஹோண்டாவின் ரிலியபிலிட்டி.

பாதகங்கள்


1. தற்கால நவீன தோற்றத்துடன் போட்டியில் உள்ளவைகளுக்கு எதிராக, துவக்க நிலையில் அமைந்த டேஸ்போர்டை கொண்டுள்ளது. 2. இப்பிரிவில் உள்ள மற்ற கார்களை போல, அம்சங்களால் நிரம்பி காணப்படவில்லை. 3. டீசல் அமேஸின் NVH நிலைகள் மிகவும் குறைவு.

வெளிப்புற அமைப்பியல்


முன்காலத்தில், கச்சிதமான சேடன் என்றாலே, ஒரு ஹேட்ச்பேக்கின் பணித் தீர்க்கப்படாத நிலையில் சோர்வாக விடப்பட்டவை போல காணப்படும் (டாடா இண்டிகோ மற்றும் மாருதி டிசையர் அப்படியல்ல). ஆனால் தற்போது அந்த போக்கு மாறியுள்ளது. தற்போது சிறப்பான தோற்றம் கொண்ட கச்சிதமான சேடன்களான எக்ஸ்சென்ட், ஆஸ்பியர் உள்ளிட்ட கார்களை, ஹோண்டா அமேஸின் அமைப்பு தழுவியுள்ளது. இளம் பார்வையாளர்களை கவரும் வகையில், அமேஸில் வரிகள் மற்றும் மடிப்புகளை கொண்டு நேர்த்தியாகவும், நவீன தன்மையுடனும் காணப்படுகிறது.

அமேஸின் முன்பகுதியை பார்த்தால், ஒரு புதிய இரட்டை ஸ்லாட் கிரோம் கிரில் மற்றும் ஒற்றை நிற முன்பக்க பம்பர் ஆகியவை தவிர, அடிப்படையில் ஹோண்டா பிரியோவை ஒத்ததாக காட்சி அளிக்கிறது. பிரியோவில் இருந்து திசைத்திருப்புவதாக அமைந்துள்ள முரண்பாடான கருப்பு ஃபேக் லெம்ப் உள்ளீடுகளை நாம் விரும்பக் கூடும். மற்றவை எல்லாம் அப்படியே அமேஸில் காணப்படுகிறது.

பக்கவாட்டு பகுதியில், அமேஸின் B-பில்லர்கள் வரை பிரியோவின் உருவம் பிரதிபலிக்கப்பட்டு, அதன்பிறகு சேடன் உடன்பிறப்புகளின் வழக்கமான வேறுபாட்டை காட்டுகிறது. அமேஸில் பாடியோடு சேர்ந்த லைன்களுக்கு குறைவே இல்லை. இதில் உள்ள இரு லைன்களில், ஒன்று முன்பக்க வீல்களில் இருந்து ஆரம்பித்து, பின்பக்க விண்டோ வரை செல்கிறது. மற்றொரு லைன், முதல் லைனின் முடிவில் இருந்து சற்று கீழே துவங்கி, டெயில் லெம்ப்-பில் சென்று ஐக்கியமாகிறது. இந்த பட்டொளி வீசும் வீல் ஆர்ச்சுகள் மற்றும் ஒரு ஆழமான வெஸ்ட்லைன் ஆகியவை கூடுதல் பொலிவை அளிக்கின்றன. உயரும் விண்டோ லைன் பார்வைக்கு நேர்த்தியாக அமைந்து, பின்பக்க விண்டோக்களின் அதிகளவை மறைக்காமல் உள்ளது. இந்த உயரும் லைனில் டோர் ஹேண்டல்களும் அமைந்து, பக்கவாட்டு தகவமைப்பிற்கு ஒத்து காணப்படுகிறது.

ஒரு பெரிய பூட் மற்றும் ஒரு மீள்கட்டமைப்பு உள்ள பின்புற பம்பர் ஆகியவற்றை கொண்டு, குட்டையாகவும், விளிம்புகளை பெற்றதாகவும் இதன் பின்புறம் அமைந்துள்ளது. கிரோம் பிரியர்களை திருப்திப்படுத்தும் வகையில், அமேஸில் ஒரு தடித்த கிரோம் லைன் காணப்படுகிறது. காருக்கு பின்புறத்தில் நடைபெறும் காரியங்களை தடையின்றி காணும் வகையில், பின்பக்க கிளாஸ் பெரிய அளவில் போதுமானதாக உள்ளது. ஆனால் பார்சல் செல்ஃப் உயரமாக வைக்கப்பட்டுள்ளதால், பின்புற காட்சியை காண்பதில் சிக்கல் ஏற்படலாம்.

உள்புற அமைப்பியல்


பிரியோவில் உள்ளது போலவே, அமேஸின் உட்புறமும் ஒத்து காணப்படுகிறது. இந்நிலையில் பிரியோவில் உள்ள டேஸ்போர்டின் தன்மையை குறித்து அது துவக்க நிலையிலும், வழக்கத்திற்கு மாறான லேஅவுட்டையும் கொண்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டியுள்ளது.

இந்த உள்புற அமைப்பியலில், ஒரு கருப்பு-பழுப்பு நிற கலவையில் காணப்படும் சில்வர் நிற வரிகளை பெற்று, நாம் வழக்கமாக ஹோண்டா கார்களில் காண்பதை காண கிடைக்கிறது. இவ்வாகனத்தின் இந்த டேஸ்போர்டு வடிவமைப்பை தவிர, மற்ற எதிலும், இதை நம்மால் அவ்வளவு பெரிதாக குற்றப்படுத்த முடியாது. இதன் கட்டமைப்பு தரம் சிறப்பாக இருப்பதோடு, உட்புற அமைப்பில் பார்வைக்கு சிறப்பான பொருட்களின் பயன்பாட்டை கொண்டு, ஒரு கச்சிதமான சேடனின் உணர்வை நமக்கு அளிக்கிறது. இதன் ஸ்டீரிங் கச்சிதமாகவும், பிடிப்பதற்கு நல்ல உணர்வையும் அளிக்கிறது. இதன் 3 ஸ்போக் வீல்களில் சில்வர் மேலோட்ட வரிகளை பெற்று, தகுந்த ஓட்டும் நிலை கிடைக்கும் வகையில் டில்ட் அட்ஜெஸ்ட் கொண்டுள்ளது. மேலும் டிரைவர் அமர்ந்துள்ள உயரத்தை மாற்றியமைக்கும் வசதி இதை உறுதி செய்கிறது.

ஒரு எளிய அமைப்பை கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரின் மத்தியில் ஒரு பெரிய ஸ்பீடோமீட்டரும், அதன் கீழே ஒரு சிறிய MID-யும் காணப்படுகிறது. கிளெஸ்டரின் இடதுபுறம் ஒரு டச்சோமீட்டரும், வலதுபுறம் வார்னிங் லைட்களின் குழுமத்தையும் காண முடிகிறது. இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரில் ஒரு ஆரஞ்சு நிற பேக்லைட் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அடிப்படை MID-யில் ஒரே ஒரு ட்ரிம் மீட்டர் மட்டுமே கொண்டு, டிஸ்டன்ஸ் டூ எம்டி போன்ற வழக்கமான சில அம்சங்கள் இல்லாமல், ஒரு முகஸ்துதி அளிக்கும் யூனிட்டாக அமையவில்லை. சென்டர் கன்சோலில், ஒரு 2- DIN மியூஸிக் சிஸ்டம் உடன் MP3, USB மற்றும் ஆக்ஸ்-இன் சப்போர்ட் கொண்டிருந்தாலும், CD சப்போர்ட் இல்லை. இப்போதைக்கு VX(O) வகையில், ஒரு டச்ஸ்கிரீன் AV நேவிகேஷன் சிஸ்டத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். சென்டர் கன்சோலின் பழுப்பு நிற பணித்தீர்ப்பு, அப்பகுதியுடன் ஒவ்வாதது போல தெரிகிறது.

சென்டர் கன்சோலின் அடிப்பகுதியில் HVAC கன்ட்ரோல்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள எல்லா பட்டன்களும் பெரியதாக காணப்பட்டு, பயன்படுத்த எளிதாக உள்ளது. இந்த கன்ட்ரோல்கள் மற்றும் அதன் இருப்பீடம் ஆகியவை பயன்பாட்டிற்கு மிகவும் எளிதானவை. சாதாரண அளவிலான ஒரு கிளவ் பாக்ஸின் வடிவில் வரும் வைப்பு இடத்தில், கியர் லிவருக்கு முன்புறம் கப் ஹோல்டர்களும், ஹேண்டு பிரேக்கிற்கு பின்னால் ஒரு பாட்டில் ஹோல்டர், பின்புற சீட்களின் ஆம்ரெஸ்ட்டில் 2 கப் ஹோல்டர்கள், முன்புறம் மற்றும் பின்புற டோர்களில் பாட்டில் ஹோல்டர்கள் ஆகியவை உள்ளன.

இந்த அமேஸ் காரின் உட்புறத்தை பொறுத்த வரை, இடவசதி கொண்டதாக அமைந்து, ஹோண்டாவின் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துகிறது. ஸ்விஃப்ட்டை விட வீல்பேஸின் நீளம் குறைவாக இருந்தாலும், அமேஸில் ஒரு சிறப்பான இடவசதியை, அதிலும் முக்கியமாக பின்புறத்தில் காண கிடைக்கிறது. ஒதுக்கப்பட்ட டேஸ்போர்டின் மூலம் முன்பக்க சீட்களுக்கு சிறப்பான லெக்ரூம் கிடைக்கிறது. பின்புறத்திலும் தாராளமான லெக்ரூம் இருப்பதால், இடவசதியை குறித்து பயணிகளுக்கு எந்த புகாரும் கூறுவதற்கு இல்லை. பின்புற சீட்கள் தாழ்வாக அமைந்து, சிறப்பான ஹேட்ரூம் கிடைக்க உதவுகிறது. இந்த காருக்குள் அதிகபட்ச இடவசதியை கொண்டு வரும் வித்தையை, ஜாஸில் இருந்து கற்றுக் கொண்ட ஹோண்டா நிறுவனம், இதில் செயல்படுத்தி உள்ளது. அமேஸில் உள்ள 400 லிட்டர் பூட் மூலம், பெரும்பாலான பயணிகளின் சரக்குகளை, எந்த சங்கடமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது. அமேஸின் பூட் ஸ்பேஸை, ஹூண்டாய் அசென்ட் மட்டுமே சிறிய அளவில் முந்துகிறது.

1

செயல்திறன்


ஹோண்டா அமேஸ், ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் பெட்ரோல் அமேஸை, ஒரு 1.2-லிட்டர் என்ஜின் இயக்க, டீசல் அமேஸை ஒரு 1.5-லிட்டர் யூனிட் இயக்குகிறது. பெட்ரோல் வகையில் ஒரு 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஒரு 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. டீசல் வகையில், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கிறது.

அமேஸ் பெட்ரோல்


அமேஸில் உள்ள 1198 cc பெட்ரோல் என்ஜின் மூலம் 6000 rpm-ல் ஒரு அதிகபட்ச ஆற்றலான 87 bhp-யும், 6000 rpm-ல் ஒரு உயர்ந்த முடுக்குவிசையாக 108 Nm-யும் கிடைக்கிறது. இதே என்ஜின் தான், பிரியோவையும் இயக்குகிறது. இக்காரின் எரிப்பொருள் சிக்கனம் குறித்து ARAI, மேனுவல் பதிப்பிற்கு லிட்டருக்கு 18 கி.மீட்டரும், ஆட்டோமேட்டிக் பதிப்பில் லிட்டருக்கு 15.5 கி.மீட்டரும் கிடைப்பதாக கணக்கிட்டுள்ளது. பெட்ரோல் யூனிட்டின் ரிஃபைன்மெண்ட்டை பொறுத்த வரை வழக்கமான ஹோண்டா தயாரிப்பாக விளங்கி, வேகத்தால் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. துவக்க வகை மோசமான முடுக்குவிசையை அளிப்பதில்லை. இதனால் நகர்புறத்தில் ஓட்டுவதற்கு எளிதாக உள்ளது. இந்த மோட்டாரை கொண்டு நெடுஞ்சாலைகளில் செல்லும் போது, 3 இலக்க வேகத்தில் சென்றால் கூட வீட்டில் இருக்கும் அனுபவத்தை அளித்து, நம்மை கவர்கிறது.

அமேஸ் டீசல்


அமேஸில் உள்ள 1498 cc டீசல் என்ஜின் குறித்து நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஹோண்டா நிறுவனம் அளிக்கும் முதல் டீசல் என்ஜின் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஹோண்டாவின் வரலாற்றிலேயே மிகச்சிறியதான இந்த டீசல் என்ஜின், 3600 rpm-ல் 99 bhp ஆற்றலையும், 1750 rpm-ல் ஒரு அதிகபட்ச முடுக்குவிசையான 200 Nm-யையும் அளிக்கிறது. என்ஜினின் போக்குகளை பொறுத்த வரை, பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தீவிரமாக செயல்படுகின்றன. இதே நேரத்தில் பெட்ரேல் ஹோண்டாக்கள் வேகத்திற்காக உழைப்பதை விரும்பும் நிலையில், அது அதிகபட்ச அளவில் ஆற்றலை வெளியிடுகிறது. இந்த 1.5-லிட்டர் டீசல் யூனிட் குறைவான முடுக்குவிசையை வெளியிடும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

இந்த அமேஸில் உயர் கியர்களில் கூட குறைவான வேகத்தில் ஓட்டி செல்ல மிகவும் எளிதாக உணரப்படுகிறது. இந்த ஓட்டுவதற்கு எளிதான தன்மையின் மூலம் போட்டியில், இந்த என்ஜின் தனித்தன்மையுடன் நிற்பதோடு, ஒரு டீசல் என்ஜினை கொண்டிருந்தாலும் நகர்புற டிரைவிங் எளிதாக உள்ளது. இதன் டர்போ லாக் மிகக் குறைந்ததாக இருந்தாலும், இந்த டீசல் என்ஜினின் NVH நிலைகள், நமது எண்ணற்ற விருப்பத்தை நிறைவு செய்வதாக உள்ளது. இந்த அமேஸ் டீசல் நெடுஞ்சாலைகளில் பின்தங்கியதாக செயல்படுவதில்லை. மேலும் அதிக வேகத்திலும், சாய்வான தளங்களிலும் ஓட்டுவதற்கு எளிதான உணர்வை அளிக்கிறது.

2

ஓட்டுதல் மற்றும் கையாளுதல்


ஹோண்டா அமேஸின் முன்புறத்தில் வழக்கமான மெக்-பியர்சன் ஸ்டர்ட் மற்றும் பின்புறத்தில் டார்சன் பீம் ஆகியவற்றை பெற்றுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மெதுவான சஸ்பென்ஸன், ஓட்டும் தரத்தை உயர்த்துவதாக உள்ளதோடு, கையாளுதலில் ஊக்கம் அளிப்பதாகவோ அல்லது மந்தமாகவோ இல்லாமல், நடுநிலை கொண்டதாக அமைகிறது. நகர்புற இயக்கத்தில் ஸ்டீரிங் லேசானதாக இருந்தாலும், சில நேரடி விமர்சனங்களை தொடர்ந்து நெடுஞ்சாலை பயணத்தில் தேவைப்படும் எடையை பெறுகிறது. ஆனால் அது அதிகமான அளவில் இல்லை. அமேஸில் நடைபெறும் பிரேக்கிங் பணிகள், நமது நம்பிக்கையை இழக்க செய்வதில்லை.

பாதுகாப்பு


ஹோண்டா அமேஸில் உள்ள பாதுகாப்பு அம்சங்களில், முன்பக்க இரட்டை ஏர்பேக்குகள், என்ஜின் இம்மொபைலைஸர், பிரி-டென்ஷனர் சீட் பெல்ட்கள் உடன் லோடு லிமிட்டர்கள் மற்றும் ABS உடன் EBD ஆகியவை உள்ளன.

3

வகைகள்


ஹோண்டா அமேஸ் E, EX, S, SX, VX மற்றும் VX (O) என 6 வகைகளில் கிடைக்கின்றன. அமேஸின் எல்லா டீசல் வகைகளிலும் பொதுவாக ABS உடன் EBD-யை பெற்றுள்ளன (சில மாறுபட்ட காரணங்களுக்காக, பெட்ரோல் வகைகளில் இவை அளிக்கப்படவில்லை) என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதில் E என்பது துவக்க வகையாக இருந்தாலும், முன்பக்க கிரோம் கிரில், ரேர் மைக்ரோ ஆன்டினா, பாடி நிற பம்பர்கள், பவர் ஸ்டீரிங், AC உடன் ஹீட்டர், முன்பக்க மற்றும் பின்பக்க பவர் விண்டோக்கள், டே/நைட் உள்புற பின்பக்க வியூ மிரர்கள் மற்றும் என்ஜின் இம்மொபைலைசர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

EX வகையில், பாடியின் நிறத்தில் அமைந்த டோர் ஹேண்டில்கள் மற்றும் ORVM-கள், டச்சோமீட்டர், 1DIN ஆடியோ உடன் AM/FM, MP3, USB & ஆக்ஸ்-இன் சப்போர்ட் மற்றும் முன்பக்க ஸ்பீக்கர்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அதிகளவில் விற்பனையாகும் வகையில் ஒன்றான S-யில், முன்பக்க/பின்பக்க மட்கார்டுகள், கீலெஸ் என்ட்ரி, டிரைவர் சீட் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி, எலக்ட்ரிக் ORVM-கள், ரேர் சீட் சென்டர் ஆம்ரெஸ்ட், 2 DIN இன்டிகிரேட்டேட் ஆடியோ உடன் AM/FM, MP3, USB & ஆக்ஸ்-இன் சப்போர்ட், ஸ்டீரிங்கில் ஏறுமுகத்தில் அமைந்த ஆடியோ கன்ட்ரோல்கள், முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்பீக்கர்கள் மற்றும் ஏர் வென்ட்களில் உள்ள கிரோம் ரிங்கள்

4

ஆகியவற்றை கொண்டுள்ளது.


SX-ல் ORVM-களில் டேன் இன்டிகேட்டர், ரேர் டிஃபாக்கர், எலக்ட்ரிக் ஃபோல்டபிள் ORVM-கள், முன்பக்க இரட்டை ஏர்பேக்குகள் மற்றும் முன்பக்க சீட் பெல்ட் பிரி-டென்ஷனர் உடன் லோடு லிமிட்டர் ஆகியவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

உயர் வகையான VX-ல் அலாய் வீல்கள், முன்பக்க ஃபேக் லெம்ப்கள், சில்வர் உட்புற டோர் ஹேண்டில்கள் மற்றும் வெளிர் பழுப்பு நிற கார்பேட் ஆகியவை

அளிக்கப்படுகிறது.


5

உங்களுக்கு இன்னும் சில நிறங்களை சேர்த்த டேஸ்போர்டை பெற வேண்டுமானால், VX (O)-ல் ஒரு 15.7 செ.மீ டச்ஸ்கிரீன் ஆடியோ விஷுவல் நேவிகேஷன் உடன் DVD/CD, ப்ளூடூத், USB, ஆக்ஸ்-இன், ஐபாட், MP3, FM/AM சப்போர்ட் ஆகியவற்றை பெற முடிகிறது.

6

தீர்ப்பு


இந்தியாவிற்கான ஹோண்டா நிறுவனத்தின் முதல் டீசல் வாகனம் என்ற வகையில், ஹோண்டா அமேஸ் தனது தோளில் எண்ணற்ற அம்சங்களை சுமந்து வருகிறது. மேலும் எடையையும் சிறப்பான முறையில் பெற்றுள்ளது. NVH நிலைகளை வைத்து பார்த்தால் இந்த டீசல் என்ஜின் சற்று அதிகமாக ரீஃபைன் செய்யப்பட்டதாக இருந்தாலும், இதமான முறையில் ஓட்டி செல்ல தேவையான ஒரு நல்ல பேக்கேஜ்ஜை அமேஸ் உள்ளது.