ஃபோர்டு Figo Aspire

` 5.4 - 8.3 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

முக்கிய அம்சங்கள்


நவம்பர் 29, 2015 : இன்றைய காலக்கட்டத்தில் கச்சிதமான சேடனாக விளங்கும் ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர், 15,000 -க்கும் மேற்பட்ட யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. மேற்கண்ட இந்த விற்பனையின் தகவல், கடந்த 2015 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் என்ற இரு மாதங்களுக்கு இடையிலான கால அளவில் நிகழ்ந்தது ஆகும். இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் உலக தரம் வாய்ந்த தயாரிப்பு செயல்திறன்கள் உடன் கூடியதான ஃபோர்டு இந்தியாவின் முதல் வெளியீடாக இந்த கார் அமைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 1908 ஆம் ஆண்டு வெளியான பழம் பெரும் கார் மாடலான T என்ற கார் அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில், இந்த காரும் அறிமுகம் செய்யப்பட்ட சிறப்பை இது பெற்று உள்ளதோடு, ஒவ்வொரு மாதமும் சராசரி அளவிலான விற்பனையாக 5,000 யூனிட்களின் விற்பனை நடைபெறுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு காரியம் ஆகும். கடந்த 2014 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட 6,723 யூனிட்களின் விற்பனை உடன் ஒப்பிட்டால், கடந்த ஆண்டின் அதே மாதத்தில் நடைபெற்ற விற்பனையின் அளவு 10,008 யூனிட்கள் ஆக வளர்ந்து உள்ளது என்பதை அறிய முடியும். இந்த அளவிற்கு சிறப்புகளை பெறுவதற்கு ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் கார் தகுதியான தயாரிப்பாக தான் உள்ளது என்று ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையின் துணைத் தலைவரான ராகுல் கவுதம் கூறி உள்ளார்.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் விமர்சனம்


மேற்பார்வைஒரு மென்மையான கச்சிதமான சேடனான ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் கார், பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு வேறு பதிப்புகளிலும் கிடைப்பதோடு, பெட்ரோல் பதிப்பில் ஒரு எடை அதிகமான என்ஜின் உடன் கூடிய ஒரு ஆட்டோமேட்டிக் தேர்வும் அளிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட இரு என்ஜின் பதிப்புகளிலும் உட்படும் வகையில் ஆம்பியன்ட், டிரென்ட், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் என்று தொடர்ச்சியாக அமைந்த பல்வேறு நிலைகளில் அமைந்த வகைகளை காண முடிகிறது. ஒரு 4 மீட்டருக்கும் குறைவான அளவில் அமைந்த சேடனான இது, ஒரு சிறந்த சேடனாக தோற்றம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்து உள்ளது. எனவே இந்த காரியத்தை கார் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிக கவனத்துடன் கையாளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் தான் இன்றைய கார் சந்தையில் இது போன்ற தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஏனெனில் இவற்றில் ஒரு மிகச் சிறப்பான தோற்றத்தை நாம் காண முடிகிறது. கிரோம் மூலம் அலங்கரிக்கப்பட்ட நிலையில் ஒரு முன்பக்க ரேடியேட்டர் கிரிலில் இருந்து துவங்கி, காரின் பாடி எந்த நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில் அமைந்த டோர் ஹேண்டில்கள் மற்றும் உயர் தர வகைகளில் காணக் கிடைக்கும் மென்மையான பூட் லிட்டிற்கு ஏற்ற வெளிப்புற மிரர்கள் ஆகியவை ஒருங்கிணைந்து வரும் போது, இந்த வாகனத்தின் ஒட்டு மொத்தமான தோற்றத்திற்கு அட்டகாசமான காட்சி அமைப்பு கிடைக்க உதவுகிறது.
இந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதியில் காணப்படும் B மற்றும் C பில்லர்கள் கருப்பு நிறத்தில் அமைந்து உள்ளதோடு, ரூஃப்பில் உள்ள ஷார்க் ஃபின் ஆன்டினா, டிக்லிட்டில் காணப்படும் பின் பக்க அப்லிக்யூ மற்றும் முன்பக்கத்தில் காணப்படும் ஹெட் லெம்ப்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள கிரோம் பிஸில்கள் ஆகிய அனைத்து அம்சங்களும், இந்த வாகனத்தில் முக்கியத்துவம் மிகுந்ததாக காட்டப்பட்டு உள்ளன. இந்த வாகனத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் இனிமையான அனுபவத்தை அளிக்கும் வகையில், டில்ட் அட்ஜஸ்டபிள் ஸ்டீரிங், எல்லா டோர்களுக்கும் பவர் விண்டோக்கள், மல்டி மீடியா உடன் கூடிய ஆடியோ மற்றும் தகுந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட மற்ற பல வசதிகளும், இதமான பயணித்திற்கான அம்சங்களாக அளிக்கப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு என்ற விஷயத்திற்கு வரும் போது, எந்த ஒரு வாடிக்கையாளரும், சமரசத்திற்கு ஒத்து வருவது குறித்து ஒன்றிற்கு இரண்டு முறை யோசிப்பது சகஜமான ஒன்று ஆகும். எனவே ஒரு வாடிக்கையாளர் வாங்க விரும்பும் தயாரிப்பை தேர்வு செய்வதில், இது போன்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காரியம் இருப்பதால், இந்த விஷயத்தில் வாகனத் தயாரிப்பாளர் மிகவும் நேர்த்தியான முறையில் செயல்பட்டு உள்ளார். இந்த வாகனத்தில் பயணிக்கும் முன்பக்க பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், இரட்டை ஏர்பேக்குகள், சுமூகமான தன்மையை அதிகரிக்கும் வகையில் கீ லெஸ் என்ட்ரி, ஏதாவது அறிமுகம் இல்லாத நபர்களின் நுழைவை கண்காணிக்கும் வகையில் அமைந்த என்ஜின் இம்மொபைலைஸர், வாகனத்தின் வேகத்தை கண்டறிந்து செயல்படும் டோர் லாக்குகள் உள்ளிட்ட அம்சங்களை, இந்த வாகனத்தின் எல்லா வகைகளுக்கும் எந்த என்ஜின் வேறுபாடும் இல்லாமல், பாதுகாப்பை மட்டுமே முன்னிறுத்தி, உறுதிப்படுத்தி பொதுவாக தன்மையோடு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வாகனத்திற்கு பெரிய அளவிலான வீல் பேஸ் காணப்படுவதால், காரின் உட்புறத்தை பொறுத்த வரை, இதன் விஸ்தாரமான சீட்டிங் அமைப்பின் மூலம் ஒருவருக்கு எளிதான உணர்வை பெற முடிகிறது. இதில் உள்ள இரட்டை டோன் நிறத் திட்டத்தின் மூலம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட டேஸ்போர்டு மற்றும் வகைகளுக்கு ஏற்ப ஃபெப்ரிக் / லேதர் சீட் கவர்கள் ஆகியவை சேர்ந்து இதன் கேபினின் தோற்றத்தை மேம்படுத்தும் காரியமாக அமைந்து உள்ளது. இதன் போட்டியாளர்களை முன்னிறுத்தி ஒப்பிட்டு பார்க்கும் போது, இதன் விலை நிர்ணய அளவு மற்ற கார்களுடன் நிகரான ஒன்றாக தான் தெரிகிறது. ஒரு இந்திய குடிமகனின் எல்லா வகையான எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதாக இந்த கார் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக எரிப்பொருள் சிக்கனத்தில் சிறப்பாக செயலாற்றுவதால், நம் நாட்டிற்கு ஃபோர்டு நிறுவனம் வழங்கி உள்ள சிறந்த தயாரிப்புகளில் இதுவும் ஒன்று என்று கருதுவதில் எந்த தவறும் இல்லை.
இந்த வாகனத்தில் காணப்படும் ஆப்லிங் உடன் கூடிய SYNC போன்ற மேம்பட்ட அம்சங்களின் மூலம், வாய்ஸ் கமெண்ட் ஹேண்ட்ஸ் -ப்ரீ செயல்பாடுகள், மை ஃபோர்டு டாக் ஆகியவை செயல்படுகின்றன. இதன் மூலம் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் மற்ற பல அம்சங்களும் ஆதரிக்கப்படுகின்றன. இது தவிர, ASB உடன் கூடிய EBD, 4.2 இன்ச் பன்முக பயன்பாட்டு (மல்டி பங்க்ஷனல்) டிஸ்ப்ளே ஸ்கிரீன், ஸ்டைலான தோற்றத்தைக் கொண்ட ஒரு ஜோடி அலாய் வீல்கள் மற்றும் லெதர் சீட்கள் ஆகியவை சேர்ந்து உயர் தர வகைகளுக்கு சிறப்பான தன்மையை வழங்குகின்றன. தரமான பொருட்களை பயன்படுத்துவதற்கு பெயர் பெற்ற இந்த கார் தயாரிப்பு நிறுவனம், விற்பனைக்கு பிறகு அளிக்கும் சர்வீஸ் பணிகளிலும் மிகவும் நிலையான தன்மையை கொண்டதாக செயல்படுகிறது. இந்த பிரிவைச் சேர்ந்த ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸ்சன்டு மற்றும் டாடா செஸ்ட் ஆகிய கார்களுடன், இந்த கச்சிதமான சேடன் நேரடியாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

வெளிப்புற அமைப்பியல்


இந்த காரில் காணப்படும் அதற்கே உரிய கூடுதல் தகவமைப்புகளின் மூலம் இதன் ஒட்டு மொத்த வடிவமைப்பின் தோற்றத்தை பார்க்கும் போது, ஸ்டைலாகவும், முழுமைப் பெற்றதாகவும் உள்ளதை அறிய முடிகிறது. முன் பக்கத்தின் முகப் பகுதி சற்று சாய்ந்த நிலையில், பாடியின் நிறத்தில் அமைந்து உள்ள பம்பரில் ஒரு கிரில் தரிக்கப்பட்டதாக தோற்றம் அளிக்கிறது. மேலும் அதில் உள்ள குறுக்கு கம்பிகளும் (பார்கள்) சுற்றுப்புறமும் கிரோம் அமைப்பின் மூலம் சூழப்பட்டதாக காணப்படுகிறது. இந்த காரில் எந்த குறைப்பாடும் இல்லாமல் வடிவமைக்கப்பட்ட ஒரு ஜோடி ஹெட் லெம்ப்கள் காணப்படுகின்றன. அவை பம்பரின் மீது ஏறிச் செல்வதாக அமைந்து உள்ளன. இதற்கு சரியான கீழ் பகுதியில் ஒளிரும் தன்மைக் கொண்ட ஒரு ஜோடி ஃபேக் லெம்ப்களை காண முடிகிறது. பின் பக்கத்தை பொறுத்த வரை, இதன் பூட் லிட்டில் அமைந்து உள்ள ஒரு அப்ளிக்யூ ஆதிக்கம் செலுத்துகிறது. இது கிரோம்களால் நிறைந்ததாக இருபுறமும் காணப்படுவதோடு, ஃபேக் லெம்ப்களும் இடம் பெற்று உள்ளன. பக்கவாட்டு சுயவிபரத்தின் தோற்றத்தை பார்க்கும் போது, B மற்றும் C ஆகிய பில்லர்கள் ஒரு முக்கிய இடத்தை பெறுகின்றன. இது தவிர, வெளிபுற பின்பக்கத்தை பார்க்கும் கண்ணாடிகள் (அவுட் சைடு ரேர் வியூ மிரர்ஸ்) மற்றும் டோர் ஹேண்டில்கள் ஆகியவை பாடிக்கு ஒத்த நிறத்தில் காணப்படுகின்றன. இந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதியில் கிரோம்களின் உள்ளீடுகளுடன் கூடிய BSMP (பாடி சைடு பிரோட்டேக்ஷன் மோல்டிங் – பாடியின் பக்கவாட்டு பாதுகாப்பிற்கான தகவமைப்பு) காணப்படுகிறது. இது மிக அடர்த்தியான கோடுகளாக காணப்படுவதால், காரின் பக்கவாட்டு பகுதிக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, வாகனத்தின் ஒட்டு மொத்த உருவ அமைப்பையே அழகு மிகுந்ததாக மாற்றுவதாக உள்ளது. இந்த மாடல் சீரிஸில் நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில், மொத்தம் 7 நிறத் திட்டங்களில் இது வழங்கப்படுகிறது.

வெளிப்புற அமைப்பியலின் அளவீடுகள்:


இந்த காரின் ஒட்டு மொத்த நீளம் 3995 mm என்பதால், இது 4 மீட்டருக்கு குறைவான அளவில் அமைந்த கார்களின் பட்டியலிற்குள் இணைந்து கொள்கிறது. இந்த வாகனத்தில் உள்ள ORVM –கள் சேர்க்கப்படாத நிலையில், இதன் மொத்த அகலம் 1695 mm ஆகும். இந்த நீள, அகலத்தில் அமைந்து உள்ள இந்த கார், சுமார் 1525 mm என்ற அளவிலான உயரத்தில் நின்று, கச்சிதமான சேடனின் பிரிவில் ஒரு பெரிய உருவத்தை கொண்டதாக காட்சி அளிக்கிறது. நமது இந்திய நாட்டில் உள்ள சாலைகளுக்கு போதுமானதாக அமையும் வகையில், கிரவுண்டு கிளியரன்ஸ் அளவாக 174 mm என்ற அளவை கொண்டு உள்ளது. மிகக் கடினமான வளைவுகளையும் எளிதாகவும் சிறப்பாகவும் எதிர்கொள்ளும் வகையிலான ஒரு குறைந்தபட்ச வளைவு ஆரம் (டேனிங் ரேடியஸ்) 4.9 மீட்டரை பெற்று உள்ளது.

உட்புற அமைப்பியல்


இந்த காரின் உள்ளே ஏராளமான சாதனங்களால் நிரப்பப்பட்டு உள்ளதால், காரை ஓட்டுவதற்கு இனிமையான அனுபவம் கிடைப்பதோடு, இதன் உட்புற அமைப்பியலும் ஒரு மேம்பட்ட தோற்றத்தையும் பெற்று தருகிறது. உயர் தர வகையில் உள்ள சீட்கள் லெதர் அப்ஹோல்டரியினால் நிறைந்ததாக இருக்க, மற்ற எல்லா வகைகளின் சீட்களும் ஃபேப்ரிக் மூலம் மூடப்பட்டு காணப்படுகிறது. இந்த வாகனத்தின் சீட்களில் ஹெட் ரெஸ்ட்கள் பொருத்தப்பட்டதாக உள்ள நிலையில், அவைகளின் உயரத்தை தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளும் வசதியை பெற்று உள்ளது. இதில் கூடுதல் கவர்ச்சியை அளிக்கும் வகையில், முன்பக்க டோர்களில் ஃபேப்ரிக்கினால் ஆன பேனல் உள்ளீடுகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த காரில் காணப்படும் ஒரு பொதுவான அம்சமாக, உட்பகுதியில் இருந்தே பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடி (இன்சைடு ரேர் வியூ மிரர்) உள்ளது. அதனுடன் கூடுதலாக ஒரு கேமரா உடனான GPS டிஸ்ப்ளேயும் இணைந்து கொள்ள, வாகனத்தை பின்னோக்கி செலுத்துவது மிக எளிதான ஒரு காரியமாக மாறி விடுகிறது. இந்த காரின் முழு கேபினும் சார்கோல் பிளாக் மற்றும் வெளிர் ஓக் ஆகிய இரு நிறங்களின் கலவையாக காணப்படுவது, ஒரு மென்மையான தோற்றத்தை அளிப்பதாக உள்ளது. இந்த காரின் ஆடியோ பிசில், உட்புற டோர் ஹேண்டில்கள் மற்றும் ஸ்டீரிங் வீல் ஆகியவை ஒரு பிரிமியம் ப்ரோடியஸ் பிளாக் உட்புற அமைப்பியல் பயன்பாட்டை பெற்று உள்ளதை காண முடிகிறது. முன் பக்கத்தில் உள்ள இரு சன்விஸர்களுக்கும் ஒரு வெனிட்டி மிரர் பொருத்தப்பட்டு உள்ளது. பின்பக்க சீட்களின் நடுப் பகுதியில் சென்டர் ஆம்ரெஸ்ட் அளிக்கப்பட்டு உள்ள தன்மை, பின்பகுதியில் உள்ள பயணிகளின் செளகரியத்தை அதிகரிப்பதாக அமைந்து உள்ளது. முன்பக்க டோர் வகைகளுக்கு மேப் பாக்கெட்கள் இருப்பது, பொருள் வைப்பு இடவசதிக்கு கூடுதல் ஆதரவாக அமைகிறது. பார்க்கிங் லிவரின் முனைகளில் ஒளிரும் கிரோம் காணப்படுவது காரின் ஆடம்பர தன்மையை அதிகரிப்பதாக உள்ளது. சார்ஜ் செய்யக் கூடிய பொருட்களின் பயன்பாட்டிற்காக, முன் பக்கத்தில் காணப்படும் ஒரு 12 V பவர் சாக்கெட் பெரும் உதவியாக உள்ளது.

உட்புற அமைப்பியலின் இதமான தன்மை:


இந்த காரில் ஏராளமான அம்சங்கள் நிறைந்து காணப்படுவதால், இந்த கச்சிதமான சேடனில் உள்ள இதமளிக்கும் காரியங்களின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. துவக்க வகைகளில் நாமாக இயக்க கூடிய ஏர் –கன்டீஷனர் உள்ள நிலையில், இடைப்பட்ட மற்றும் உயர் தர வகைகளில் ஒரு ஆட்டோமேட்டிக் AC யூனிட் காணப்படுகிறது. காருக்குள் பணிகளை மேலும் எளிதாக்கும் வகையில், ஆடியோ மற்றும் போன் கன்ட்ரோல்கள், ஸ்டீரிங் வீல் மீது ஏறிச் செல்வதாக அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர, இதில் உள்ள டில்ட் ஸ்டீரிங் மூலம் வாகனத்தை ஓட்டும் போது டிரைவருக்கு தனது கைகளின் நிலைகளை எளிதாக மாற்றி கொள்ள வசதியாக அமைகிறது. இதில் காணப்படும் ஒரு இன்ஸ்ட்ருமெண்ட் கிளெஸ்டர் மூலம் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், டிஸ்டென்ஸ் டு எம்ட்டி, மெயின்டனன்ஸ் வார்னிங், டோர் அஜார் வார்னிங், லோ ப்யூயல் வார்னிங், தண்ணீர் தட்பவெப்ப நிலை எச்சரிப்பு விளக்கு (வாட்டர் டெம்பரேச்சர் வார்னிங் லைட்) மற்றும் மற்ற பல எச்சரிப்பு அம்சங்கள் ஆகியவை முழுமையாக இடம் பெற்று உள்ளதால், வாகனம் ஓட்டும் டிரைவருக்கு பெரும் உதவியாக உள்ளது. இந்த காரில் உள்ள பவர் அட்ஜஸ்டபிள் அவுட்சைடு ரேர் வியூ மிரர்களில் ஒருங்கிணைந்ததாக டேன் இன்டிகேட்டர்கள் காணப்படுகின்றன. இந்த காரின் துவக்க வகையில் முன்பக்க டோர்களும், மீதமுள்ள மற்ற வகைகளில் முன்பக்கம் மட்டும் இல்லாமல் பின்பக்கமும் சேர்த்து இரண்டிலும் பவர் விண்டோக்களின் வசதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள ஒரு மியூஸிக் சிஸ்டம் மூலம் CD / MP3 ஆகியவை தவிர, USB மற்றும் ஆக்ஸ் -இன் ஸ்லாட்களும் ஆதரிக்கப்படுகின்றன. இது மட்டும் இல்லாமல், இதில் ப்ளூடூத் இணைப்பும் அளிக்கப்பட்டு இருப்பது ஒரு சாதகமான காரியம் ஆகும். இந்த காரில் பொருட்களை வைப்பதற்கான இடவசதியின் ஒரு பகுதியாக, உட்புற அமைப்பியலில் உள்ள கிரப் ஹோண்டில்களில் கோட் ஹூக்குகள் காணப்படுகின்றன. முன்பக்க விண்டு ஸ்கிரீனில் 6 –ஸ்பீடு வேறுபட்ட பகுதிகளை கொண்ட வைப்பர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேற்கண்ட இதை எல்லாம் தவிர, ஃபோர்டு நிறுவனத்தின் மூலம் இந்த சிரீஸில் ஒரு அதிக அளவிலான அம்சங்களால் நிரப்பி அளிக்கப்பட்டு உள்ளது.

உட்புற அமைப்பியலின் அளவீடுகள்:


இந்த கச்சிதமான சேடனில் மொத்தம் 5 பயணிகள் வரை தாராளமான நிலையில் ஏற்றி செல்ல முடியும். இதில் உள்ள 2491 mm என்ற அளவிலான விஸ்தாரமான வீல் பேஸ் மூலம் பரந்த லெக்ரூம் மற்றும் ஷோல்டர் இடவசதி ஆகியவை இருப்பதால், பயணிகள் இடையே எந்த விதத்திலும் நெருக்கடி என்ற நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த காரில் சிறப்பான ஹெட் ரூம் காணப்படுவதால், கேபினிற்குள் அதிக உயரம் கொண்ட நபர்கள் கூட சுமூகமான முறையில் அமர்ந்து செல்ல முடிகிறது. பொருட்களை வைக்கும் டிரங்க் ரூம்மின் மொத்த கொள்ளளவு 359 லிட்டர் ஆகும். இதில் ஏராளமான பேக்குகளை வைத்து கொள்வதற்கான இடவசதி கிடைக்கிறது. இது தவிர, உங்களிடம் அதிக அளவிலான சரக்குகள் இருக்கும் பட்சத்தில், பின்பக்கத்தில் உள்ள சீட்களை மடித்து கொள்வதன் மூலம் பொருட்களை வைப்பதற்கான கூடுதல் இடவசதியை பெற்று கொள்ளலாம்.

அக்ஸிலரேஷன் மற்றும் பிக் –அப்


இந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் Ti -VCT பெட்ரோல் வகையின் மூலம் மணிக்கு 0 –விலிருந்து 100 கி.மீ. என்ற வேக அளவை எட்டிச் சேர 15 வினாடிகள் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் இந்த காரில் மணிக்கு 145 கி.மீட்டருக்கும் - 155 கி.மீட்டருக்கும் இடைப்பட்ட அதிகபட்ச வேக அளவு வரை செலுத்த முடியும். இதன் மற்றொரு வகையான 1.5 –லிட்டர் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் வகையில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 160 கி.மீ. வரை செல்ல முடியும். அதே நேரத்தில் இந்த என்ஜின் மூலம் மணிக்கு 100 கி.மீ. என்ற அளவை எட்டுவதற்கு 12 வினாடிகள் எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில் டீசல் வகைகளை குறித்து பார்க்கும் போது, நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து மணிக்கு 100 கி.மீ. என்ற அளவை எட்டுவதற்கு 11.5 வினாடிகளை எடுத்துக் கொண்டு, அதிகபட்சமாக மணிக்கு 165 கி.மீ. என்ற அளவிலான வேகம் வரை செல்ல முடிகிறது.

என்ஜின் மற்றும் செயல்திறன்


இந்த கச்சிதமான சேடன் சீரிஸை வாங்கும் நுகர்வோருக்கு தேர்ந்தெடுப்பதற்கு எதுவான வகையில், இரண்டு பெட்ரோல் என்ஜின்களும், ஒரு டீசல் என்ஜினும் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் டீசல் வகையில் ஒரு 1.5 –லிட்டர் TDCi என்ஜினை பெற்று, ஒரு ஒற்றை ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட் வால்வு கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இந்த என்ஜினின் மூலம் ஒரு அதிகபட்ச ஆற்றலாக 3750 rpm-ல் ஏறக்குறைய 99 bhp –யும், அதனோடு கூட 215 Nm என்ற அளவிலான முடுக்குவிசையும் வெளியிடுகிறது. மேலும் இந்த என்ஜினை பயன்படுத்தி ஒரு அதிகபட்ச வேகமாக மணிக்கு 165 கி.மீ. வரை செல்ல முடியும். அதேபோல மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டி சேர வெறும் 11.5 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது ஒரு மேனுவல் டிரான்ஸமிஷன் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு செயல்படுகிறது. மற்றொரு என்ஜின் வகையான 1.2 –லிட்டர் Ti -VCT பெட்ரோல் மோட்டாரின் ஒரு மாற்றாக 1196 cc அளவிலான என்ஜினின் செயல்பட்டின் மூலம் 6300 rpm-ல் 86.8 bhp ஆற்றலையும், 112 Nm முடுக்கு விசையையும் வெளியிடுகிறது. இந்த ஆற்றலகத்தில் மொத்தம் 4 –சிலிண்டர்களை கொண்டு, இரட்டை ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட் வால்வு கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. இதன் மூலம் மணிக்கு 145 முதல் 155 கி.மீ. என்ற அளவிலான அதிகபட்ச வேகத்தை எட்டி சேரும் திறனை பெற்று உள்ளது. மேலும் நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகம் என்ற அளவிலான வேகத்தை எட்டி சேர சுமார் 15 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. மேற்கண்ட இந்த என்ஜின் வகை ஒரு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸை கொண்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது. 1499 cc திறன் கொண்ட மற்றொரு பெட்ரோல் என்ஜின், ஒரு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டு, 6300 rpm–ல் போதுமான அளவிலான ஆற்றல் என்ற வகையில் 110.5 bhp -யும், 4250 rpm -யில் 136 Nm முடுக்கு விசையையும் வெளியிடும் திறனை பெற்று உள்ளது. இந்த ஆற்றலகம் கூட மணிக்கு 160 கி.மீ. வேகத்தை எட்டி சேரும் திறனை கொண்டு உள்ளது. மேலும் மணிக்கு 100 கி.மீ. என்ற வேக அளவை அடைய 12 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது.

மைலேஜ்


ஒரு 1196 cc பெட்ரோல் என்ஜினை பெற்று உள்ள இந்த வாகனம் மூலம் சாலை நெரிசல் மிகுந்த நகரப் பகுதிகளில் பயணிக்கும் போது, லிட்டருக்கு 14.68 கி.மீ. மைலேஜ் கிடைக்கிறது. அதே நேரத்தில் இந்த என்ஜினை பயன்படுத்தி விரிவான, சாலை நெரிசல் குறைந்த பகுதிகளில் செல்லும் போது இந்த அளவு மேலும் அதிகரித்து லிட்டருக்கு 18.16 கி.மீ. வரை மைலேஜ் கிடைக்கிறது. மற்றொருபுறம் இதன் அதிக ஆற்றல் மிகுந்த பெட்ரோல் என்ஜினாக திகழும் 1499 cc -யின் ஆட்டோமேட்டிக் வகையின் மூலம் நெடுஞ்சாலைகளில் செல்லும் போது, லிட்டருக்கு 17.01 கி.மீ. மைலேஜை அளிக்கும் திறனை பெற்று உள்ளது. இதே என்ஜின் மூலம் நகரப் பகுதிகளில் ஒரு தரமான ஓட்டும் சூழ்நிலையில் பயணிக்கும் போது, லிட்டருக்கு 13.09 கி.மீ. என்ற அளவிலான மைலேஜை அளிக்கிறது. அதே நேரத்தில் டீசல் வகைகளின் மூலம் நகர பகுதிகளில் பயணிக்கும் போது லிட்டருக்கு 22.4 கி.மீ. என்ற ஒரு எரிப்பொருள் சிக்கன அளவையும், வாகனங்கள் சீறிப் பாய்ந்து செல்லும் நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 25.83 கி.மீ. என்ற மைலேஜையும் அளிக்கிறது.

ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியரின்

ஆற்றல்இதன் நான்கு சிலிண்டர்கள் உடன் கூடிய 1.2 –லிட்டர் பெட்ரோல் வகைகளின் மூலம் 6300 rpm-ல் 86.8 bhp என்ற அளவிலான ஆற்றல் மற்றும் 112 Nm என்ற ஒரு அதிகபட்ச முடுக்கு விசையையும் வெளியிடும் திறனை பெற்று உள்ளது. அதே நேரத்தில் ஒரு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டு உள்ள 1499 cc பெட்ரோல் என்ஜின் 6300 rpm-ல் ஒரு அதிகபட்ச ஆற்றல் அளவான 110.5 bhp -யும், அதன் உடன் உயர்ந்த முடுக்குவிசை வெளியீடான 136 Nm –யும் அளிக்கிறது. 1498 cc-ல் அமைந்த ஆயில் பர்னர் மூலம் 3750 rpm-ல் 99 bhp ஆற்றலையும், அதன் உடன் 215 Nm என்ற அளவிலான முடுக்கு விசையையும் வெளியிடும் திறனைப் பெற்று உள்ளது.

ஸ்டீரியோ மற்றும் உதிரிப் பாகங்கள்இந்த குறிப்பிட்ட காரியத்திற்காக மேற்கண்ட கச்சிதமான சேடனுக்கு, பல புதுமையான அம்சங்களை, கார் தயாரிப்பு நிறுவனம் வழங்கி உள்ளது. இதில் டிரென்ட் மற்றும் டைட்டானியம் ஆகிய இரு வகைகளிலும் மேம்பட்ட அமைப்பான மை ஃபோர்டு டாக் அளிக்கப்பட்டு உள்ளது. இது FM / AM ட்யூனர் மற்றும் ஒரு 2 –வரிசையில் அமைந்த பன்முக பயன்பாட்டை (2 லைன் மல்டி –ஃபங்க்ஷனல்) கொண்ட டிஸ்ப்ளே ஸ்கிரீன் உடன் கூடிய நான்கு ஸ்பீக்கர்களை பெற்று உள்ளது. இது தவிர, கூடுதல் வசதியை அளிக்கும் விதமான, USB –யை இணைக்கவும், பயன்பாட்டை அடிப்படையாக கொண்ட சாதனங்களை இணைக்கவும் கூடிய மற்ற போர்ட்களையும் இது கொண்டு உள்ளது. மேலும் இதில் ப்ளூடூத் இணைப்பு வசதியை ஒரு பொதுவான வசதியாக பெற்று உள்ளதோடு, இதன் கன்ட்ரோல் சுவிட்ச்சுகள் அனைத்தும், காரின் ஸ்டீயரிங் வீல்லின் மீது ஏறிச் செல்லும் முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் உயர் தர வகையில் ஒரு CD பிளேயரை பெற்று உள்ளது. இதில் MFD (2 –லைன்) உடன் கூடிய மேம்பட்ட SYNC மற்றும் ஆப்லிங் அம்சங்கள் மட்டும் இல்லாமல், வாய்ஸ் ஆட்டிவேட்டேடு சிஸ்டமும் இடம் பெற்று உள்ளது. மேற்கண்ட இந்த வசதியின் மூலம் உங்களுக்கு பிடித்தமான பாடல்களை தேர்வு செய்யவும், போன் அழைப்புகளை செய்யவும், எளிய முறையிலான வாய்ஸ் கமெண்ட்கள் போதுமானது. மேலும் நீங்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் போது, உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் அவசர உதவி சேவைகளுக்கு அழைத்து, நீங்கள் இருக்கும் GPS பகுதியை அறிவித்து, உங்களுக்கு உதவியாக செயல்படுகிறது.
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் காருக்கான உதிரிப் பாகங்களை இப்போது நீங்கள் ஆன்லைன் மூலமே வாங்கலாம். ஏனெனில் இதில் அதிக அளவிலான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பிரேக்கிங் மற்றும் கையாளுதல்


இந்த காரின் முன்பக்க வீல்களில் வென்டிலேட்டேட் டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்க வீல்களுக்கு தரமான டிரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த காரின் உயர் தர வகைகளில் ஒரு ஆன்டி –லாக் பிரேக்கிங் சிஸ்டம் உடன் கூடிய எலக்ட்ரானிக் பிரேக் –ஃபோர்ஸ் டிஸ்டிபியூஷன் அமைப்பும் அளிக்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஸனை பொறுத்த வரை முன்பக்க ஆக்ஸிலுக்கு மெக்பேர்சன் ஸ்ட்ரூட் டைப் அமைப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இவை காயில் –ஸ்பிரிங்கள் மற்றும் ஆன்டி –ரோல் பார் ஆகியவை உடன் பொருத்தப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் பின்பக்க ஆக்ஸிலில் பாதி –சுதந்திரமான திருகிய தூண் வகை (செமி –இன்டிபென்டன்ட்டு ட்விஸ்ட் பீம்) சஸ்பென்ஸன் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரட்டை –கியாஸ் மற்றும் ஆயில் நிரம்பிய அதிர்வு தாங்கிகள் (ஆயில் –பில்டு ஷாக் அப்சார்பர்ஸ்) ஆகியவையும் இணைக்கப்பட்டு உள்ளன. ஆட்டோமேட்டிக் வகையில், ஒரு எலக்ட்ரிக் பவர் அசிஸ்ட்டு ஸ்டீரிங், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய அம்சங்களும் கூட்டி வழங்கப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு


இந்த காரின் எல்லா வகைகளுக்கும் பொதுவான அம்சங்களாக இருக்கும் வகையில், முன்பக்கத்தில் உள்ள டிரைவர் மற்றும் அவருடன் பயணிக்கு பயணி ஆகியோருக்கான இரட்டை ஏர் பேக்குகள், என்ஜின் இம்மொபைலஸர், 3 –பாயிண்டு சீட் பெல்ட்கள், கீ லெஸ் என்ட்ரி மற்றும் 20 கி.மீ. வேகத்திற்கு மேல் இணைந்து செயல்படும் ஸ்பீடு சென்ஸிங் டோர் ஆகியவை அளிக்கப்பட்டு உள்ளன. இந்த காரின் டைட்டானியம் வகைகளில் ஒரு ப்ரீமீட்டர் அலாரம் மற்றும் ஒரு டிரைவர் சீட் பெல்ட் ரிம்மைன்டர் ஆகிய அம்சங்கள் அளிக்கப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றையும் தவிர இன்னும் மற்ற பல அம்சங்களின் குவியலை இந்த கார் பெற்று, இதன் உறுதியான பாதுகாப்பிற்கு பெரும் உதவியாக உள்ளன.

வீல்கள்


இந்த காரின் துவக்க வகைகளை பொறுத்த வரை, 14 இன்ச் அளவில் அமைந்த ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டு, அதை 175 / 65 R14 என்ற அளவில் அமைந்த ஒரு ஜோடி டியூப் லெஸ் ரேடியல் டயர்களால் மூடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் உயர் தர வகைகளில் மேற்கண்ட அதே அளவில் அமைந்த அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

சாதகங்கள்1. இந்த காருக்கான உரிமையாளராக மாறுவதற்கான துவக்க நிலை விலை நிர்ணயம் மிகவும் போட்டி மிகுந்ததாக உள்ளது.
2. டீசல் என்ஜினின் மூலம் கிடைக்கும் மைலேஜ் மிக சிறப்பாக உள்ளது.
3. மை ஃபோர்டு டாக் மற்றும் சைன்க் உடன் கூடிய வாய்ஸ் கமெண்ட் போன்ற அம்சங்களின் மூலம் இதற்கு போட்டியாக உள்ள மற்ற வாகனங்களுக்கு நிகரான நிலையை இந்த கார் பெற்று உள்ளது.
4. இந்த காரின் வெளிப்புற அமைப்பியல் மூலம் அழகியலில் ஒரு சிறப்பான இடத்தை பெற்று உள்ளது.
5. உட்புற அமைப்பியலில் லெக் மற்றும் ஷோல்டர் ரூம் ஆகியவை போதுமான அளவு விஸ்தாரமாக உள்ளது.

பாதகங்கள்1. இந்த காரின் விற்பனைக்கு பிறகு அளிக்கப்படும் சர்வீஸ் மற்றும் உதிரிப் பாகங்களுக்கான செலவு சற்று அதிகமாக அமைகிறது.
2. இதன் உட்புற அமைப்பியலை இன்னும் கூட மேம்பட்டதாக மாற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.
3. ஆட்டோமேட்டிக் வகையின் மைலேஜ் அளவு மிகவும் பின்தங்கிய நிலையில் அமைந்து உள்ளது.
4. துவக்க மற்றும் இடைப்பட்ட நிலையில் அமைந்த வகைகளில் ABS மற்றும் EBD ஆகிய அம்சங்களை பொருத்திக் கொள்ள முடியும்.
5. உயர் தர வகையிலாவது சன் ரூஃப் அம்சத்தை கூடுதல் இணைப்பாக அளித்து இருந்து இருக்கலாம்.