ஃபோர்டு ஃபீகோ

` 4.3 - 7.7 Lac*

பிராண்ட் : மாதிரி மாதிரிகள் மற்றும் விலை

பட்டியல் - கீழ்நோக்குக

விளம்பரம்

பிராண்ட் : மாதிரி வீடியோக்கள்

நாங்கள் எங்கள் கைப்பட யூட்யூப்பில் இருந்து சிறந்த வீடியோகளை எடுத்து வைத்திருக்கின்றோம் வலை - அனைத்தையும் பார்க்க

விமர்சனம் :பிராண்ட் :மாதிரி

 

ஃபோர்ட் ஃபிகோ


ஹைலைட்ஸ்


ஜனவரி 22, 2016: ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தங்களது ஃபிகோ ஹாட்ச் பேக் காரின் க்ராஸ்ஓவர் வெர்ஷனை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஃபிகோ காரின் தொழில்நுட்பம் புதிய க்ராஸ் ஓவர் வேரியண்ட்டிற்கு சிறந்த அடித்தளமாக இருக்கும். புதிய ஹாட்ச் பேக் காரில், ஏராளமான மெக்கானிக்கல் திறனுடன் உள்ள, 100 PS சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட டீசல் இஞ்ஜின் இடம்பெறும். அதே சமயம், க்ராஸ் ஓவர் பிரிவில், 100 PS சக்தியை உற்பத்தி செய்யும் ஒரு வேரியண்ட் இந்த செக்மெண்ட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த வாகனமாகச் செயல்படும்.

சிறப்பம்சங்கள்:


ஃபோர்ட் ஃபிகோ விமர்சனம்:


கண்ணோட்டம்


முன்னுரை:


இந்திய வாகன சந்தையில் மாபெரும் வெற்றி பெற்ற ஃபோர்ட் நிறுவனத்தின் சிறிய ரக காரான ஃபிகோ, தனது இரண்டாவது ஜெனரேஷனுக்குள் காலெடுத்து வைக்கிறது. 2015 வருடத்தின் ஃபிகோ மாடல் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், மிகவும் நவீனமாகவும் உள்ளது. புதிய ஃபிகோவில் உள்ள சிறப்பம்சங்களைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.

சாதகங்கள்:1. நகரங்களின் நெரிசல்களைச் சமாளிக்கும் விதத்தில் உள்ள இதன் அளவு விகிதாச்சாரங்கள்
2. 100 PS டீசல் இஞ்ஜின் சிக்கனத்தைக் கடைபிடிக்க உதவுகிறது மற்றும் இது ஓட்டுவதற்கும் எளிதாக உள்ளது
3. பாதுகாப்பு அம்சம் – அனைத்து வேரியண்ட்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ள இரட்டை காற்றுப் பைகள் மற்றும் டாப் வேரியண்ட்டில் உள்ள 6 காற்றுப் பைகள்

பாதகங்கள்1. பெட்ரோல் இஞ்ஜின் வேரியண்ட் சிறப்பாக இல்லை. நகரத்திற்குள் ஓட்டுவதற்கு மட்டுமே பயன்படுகிறது.
2. உட்புற வடிவமைப்பின் தரம் சிறந்தாக இல்லை. கிராண்ட் i10 போன்ற இதன் போட்டி கார்களின் உட்புறத் தோற்றம் சிறப்பாக உள்ளன.
3. டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் வசதி இணைக்கப்படவில்லை. எனவே, இதன் வகைகளில் காணப்படும் தலைசிறந்த சிறப்பம்சத்தை இது இழக்கிறது.

தனிச்சிறப்புகள்:1. ஃபோர்ட் மை கீ (MyKey): வேகம் மற்றும் சத்தத்தின் வரம்பை ப்ரோகிராம் செய்து கொள்ள உதவும் இரண்டாவது கீ, ஃபிகோவின் தனிச்சிறப்பாகும். புதிதாக கார் ஒட்டக் கற்றுக் கொண்டவரிடம் உங்கள் காரைக் கொடுக்கும் போது, இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.
2. 6 பாதுகாப்புக் காற்றுப் பைகள் என்பது இந்தப் பிரிவிலேயே இல்லாத ஒரு தனிச்சிறப்பான அம்சம் ஆகும். இது, 10 லட்ச ரூபாய்க்கு குறைவான ஹாட்ச்பேக் கார்களில் இல்லாத ஒரு அரிதான அம்சமாகும்.

வெளிப்புறத் தோற்றம்:


1
பழைய ஃபிகோ மாடல், பெரும்பான்மையான மக்களின் மத்தியில் சலிப்பூட்டும் மாடலாகத் திகழ்ந்தது. இதற்கு முக்கிய காரணம் இதன் பழமையான தோற்றமாகும். ஆனால், இந்த புதிய மாடல் நிச்சயமாக எந்த விதத்திலும் அலுப்புத் தட்டும் விதத்தில் இருக்காது. முன்புறத்தில் அனைவரையும் கவரும் முன்புற விளக்குகள் மற்றும் இடைவெளிகள் நிறைந்த கிரில் போன்றவை நமக்கு ஆஸ்டன் மார்டின் கார்களை நினைவு படுத்துகின்றன. பம்பர் பகுதியின் கீழ்புறத்தில் ஃபாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் அளவுடன் ஒப்பிடும் போது, இவை சற்றே சிறிதாக உள்ளன.

2
புதிய ஃபிகோவின் பக்கவாட்டுப் பகுதி முழுவதும் மற்றும் இதன் ஜன்னல் பகுதியிலும் வித்தியாசமான ஷோல்டர் லைன் நீண்டு செல்கிறது. இது, நளினமாகச் பின்புற கதவைக் கடந்து சென்று, தடித்த C பில்லரில் சென்று முடிவடைகிறது. திரும்பும்போது குறிகாட்டும் டர்ன் இண்டிகேட்டர்கள் விங் மிரர்களில் கச்சிதமாக இடம் பெற்றிருப்பது, இந்த காரின் வெளிப்புறத் தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. எனினும், புதிய ஃபிகோவின் அழகிய தோற்றப் பொலிவைக் குறைப்பது இதன் 14 அங்குல அலாய் சக்கரங்களாகும். சற்றே பெரிய அளவில் உள்ள மற்றும் சற்றே சிறந்த சக்கரங்களைப் பொருத்தி இருந்தால், இந்த ஹாட்ச் காரின் தோற்றம் ஒப்பற்றதாக இருந்திருக்கும்.

3
மிகப் பெரிய பம்பர், பின்புற தோற்றத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. பின்புற விளக்குகள் மற்றும் பின்புற ஃபாக் விளக்குகள் போன்றவை பின்புற விளக்கு தொகுப்புகளுக்குள் அடங்கி விடுவதால், பின் பகுதியில் மிகுதியான இடம் உள்ளது. பின்புறத்தில் காணப்படும் பெரிய பகுதியை நிறைவு செய்ய இரண்டு ரிப்லெக்டர்களை இணைத்துக் கொள்ளலாம். இந்திய சந்தையில் உள்ள ஹாட்ச் பேக் வகைக் கார்களின் அளவுகளை வைத்துப் பார்க்கும் போது, மிகவும் பெரிய கார் என்ற பெருமையை, ஃபோர்ட் ஃபிகோ தட்டிச் செல்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் அளவு மைக்ரோ SUV வகையில் வரும் KUV 100 மாடல் காரை விட அதிகமானதாக உள்ளது.

T1
ஃபிகோவின் தோற்றம் வடிவமைப்புக்கான விருதுகளைப் பெறும் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில், இது எந்தவிதமான எதிர்மறை கருத்துக்களையும் உருவாக்கும் என்றும் கூற முடியாது. தற்போது 7 வித வண்ணங்களில், கோடுகள் மற்றும் வளைவுகளின் சரியான கலவையில் அனைவரையும் கவரும் விதத்தில் வெளிவருகிறது. எனவே, ஃபோர்ட் நிறுவனம் நிச்சயமாக சரியான வடிவமைப்பு தத்துவத்தைக் கையாண்டுள்ளது என்று தைரியமாகக் கூற முடியும்.

உட்புற வடிவமைப்பு:


ஒரு கார் வாங்கும்போது, காரின் உட்புற உயரம் உட்பட பலவிதமான முக்கிய அம்சங்களைக் கவனித்த பின்பே, நாம் ஒரு காரைத் தேர்ந்தெடுக்கிறோம். முக்கியமாக, வயதானவர்கள் இருந்தால் இதை நாம் கட்டாயம் கவனிப்போம், ஏனெனில், மிகவும் குறைந்த உயரத்தைக் கொண்ட இருக்கைகளில் அமர்வதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.. ஃபிகோவின் உட்புறமானது, ‘இது மிகவும் பழக்கமான பகுதி’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. முக்கியமாக, சமீபத்தில் நீங்கள் ஃபோர்ட் காரில் பயணம் செய்தவராக இருந்தால், இத்தகைய உணர்வு உங்களுக்கு மேலிடுவது உறுதி.

4
ஃபோர்ட் ஆஸ்பயர் காரில் இருக்கும் முழுமையான கருப்பு நிற உட்புறத்தைப் போல அல்லாமல், ஃபிகோவில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்தில் உட்புறம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, மைய கன்சோல் மீது உள்ள வெள்ளி நிறமும், குளிர்சாதன (ஏ.சி) துளைகளின் மீது பூசப்பட்டுள்ள குரோம் கலரும், எப்போதும் உள்ள சலிப்பூட்டும் கருப்பு நிறத்தை உடைத்தெறிவதாக உள்ளது. ஆஸ்பயரில் உள்ளதைப் போல லெதர் உட்புறத்தை நாம் எதிர்பார்த்தாலும், ஃபிகோவில் உள்ள மிகச் சிறந்த துணியினால் ஆன இருக்கை விரிப்புகள் நம் மனதைக் கவர்வதாக உள்ளன. அது மட்டுமல்ல, அவை ஃபிகோவின் விலைக்கு சரியான மதிப்பளிக்கும் விதத்திலும் உள்ளன என்றே கூற வேண்டும்.

5
ஃபிகோவின் முன்புற இருக்கைகள் வசதியாக உள்ளன, எனினும் கூடுதலாக சிறிது குஷன் சேர்த்திருந்தால் மிகவும் வசதியாக இருந்திருக்கும். ஓட்டுனரின் சீட்டை நம் உயரத்திற்கேற்றார் போல மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஆனால், ஸ்டியரிங்கை சாய்க்க மட்டுமே முடிகிறது. ஓட்டு சக்கரத்தின் உயரத்தை மாற்றியமைக்கும் வசதி இல்லாத போதும், ஓட்டுவதற்கு எந்தவிதமான சிரமும் இல்லை என்றே கூற வேண்டும்.

6
பின்புற இருக்கைகள் பலகை போல தட்டையாக உள்ளன. இதிலும் கூடுதலாக குஷன் சேர்த்திருந்தால் பயண களைப்பு தெரியாமல் இருக்க உதவியிருக்கும். பின்புறத்தில் இரு நபர்கள் வசதியாக அமர்ந்து கொள்ளலாம். மூன்றாவது நபர் பின்புற இருக்கைகளில் அமரும் போது சற்றே இறுக்கமாகவே இருக்கும். இறுதியாக, கிராண்ட் i10 காரில் உள்ள பின்புற ஏ.சி துளைகள் மற்றும் இருக்கையின் நடுவே கை வைப்பதற்கு ‘ஆர்ம் ரெஸ்ட்’ போன்றவை புதிய ஃபிகோவில் பொருத்தப்படவில்லை என்றாலும், இவை பெரிய பாதிப்பை உண்டாக்கப் போவதில்லை.

7
நீங்கள் ஹாட்ச் பிரிவு காரில் என்ன வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தும் ஃபிகோவின் டாப்-ஸ்பெக் டைட்டானியம்+ வேரியண்ட்டில் கிடைக்கிறது என்றால் அது மிகை ஆகாது. டைட்டானியம்+ வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி தட்பவெப்ப கட்டுப்பாட்டு கருவி (ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்) நிச்சயமாக தகிக்கும் வெயிலில் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் வரப்பிரசாதமாக இருக்கும். MAX A/C என்னும் பட்டனைத் தட்டிவிட்டால் போதும், கேபின் முழுவதும் அதிவிரைவில் குளிரூட்டப்படுகிறது. பயணத்தைக் குதூகலமாக்க ஃபிகோவில் புளு டூத், AUX மற்றும் USB இணைப்பு போன்றவை இணைக்கப்பட்ட ஒருங்கிணைந்த இசை அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ஃபோர்ட் நிறுவனத்தின் தனித்துவமான SYNC அமைப்பு இணைக்கப்பட்டுள்ளதால், உங்கள் குரலின் உதவியுடன் கால் செய்யவும், இசையை பிளே செய்யவும் முடியும் என்பது ஆச்சர்யமான உண்மை.

8
ஸ்டியரிங் சக்கரத்தில், எக்கோ ஸ்போர்ட் காரில் வருவது போல தொலைபேசி மூலம் கால் செய்ய வசதியாக பல பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மீது உள்ள நெருநெருவென்ற அமைப்பு, ஓட்டுனர் இறுக்கிப் பிடித்து வண்டியை ஓட்ட உதவுகிறது. இருந்தாலும், ஃபோர்ட் நிறுவனத்தின் தரத்துடன் ஒப்பிடும் போது, இது சற்றே குறைவாகவே உள்ளது.

9
டைட்டானியம்+ வேரியண்ட்டை விடுத்து, டைட்டானியம் வேரியண்ட்டை நீங்கள் தேர்ந்தெடுத்தால், ஃபோர்ட் நிறுவனத்தின் தனித்துவமான SYNC சிஸ்டம் மற்றும் மியூசிக் சிஸ்டத்துக்கான ஸ்கிரீன் போன்றவை உங்களுக்குக் கிடைக்காது. அதற்குப் பதிலாக, உங்களது ஃபோனை ஸ்டைலாக வைத்துக் கொள்ள ஒரு டாக் பொருத்தப்பட்டுள்ளது. மை டாக்கைப் (MyDock) போன்ற இந்த வசதி, உங்களது ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொள்ள ஒரு சிறந்த பாதுகாப்பான மற்றும் ஸ்டைலான இடமாக இருக்கிறது. இன்னிசையை ரசிக்கும் போதோ அல்லது நேவிகேஷன் அமைப்பை உபயோகிக்கும் போதோ, நீங்கள் உங்கள் தொலைபேசியை அதில் இருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

10
ஃபிகோவில் 4 நபர்கள் வசதியாக அமர்ந்து பயணம் செய்யத் தேவையான இட வசதி, பயணத்தின் போது எடுத்துச் செல்லும் சிறிய பொருட்களை உள்ளே வைத்துக் கொள்ள சிறிய இடங்கள் மற்றும் பெரிய சாமான்களை வைத்துக் கொள்ள 257 லிட்டர் பூட் பகுதி போன்றவை உள்ளதால், ஹாட்ச் காரில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளையும் ஃபோர்ட் உங்களுக்கு வழங்குகிறது. இதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு என்னவென்றால், ஆடம்பரமாக இல்லாமல் இருப்பதுதான். தரமான கிராண்ட் i10 அல்லது போல்ட் கார்களைப் போல இல்லாமல், சற்றே குறைந்த தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை விடுத்துப் பார்த்தால், ஃபிகோ மாடல் தற்போது சந்தையில் உள்ள மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ள ஹாட்ச் பேக் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

Table2

இஞ்ஜின் மற்றும் செயல்திறன்:
இரண்டு பெட்ரோல் இஞ்ஜின்கள் மற்றும் ஒரு டீசல் இஞ்ஜின் என்ற ஆப்ஷன்களில் புதிய ஃபிகோ சந்தையில் கிடைக்கின்றது. இவற்றில் மிகப் பெரிய பெட்ரோல் இஞ்ஜின் மட்டும் 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், மற்ற இரண்டு இஞ்ஜின்களும் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸூடன் இணைக்கப்பட்டு வருகின்றன.

Table3

11

1.2 லிட்டர் Ti-VCT
1.2 லிட்டர் Ti-VCT பெட்ரோல் இஞ்ஜின் நகரங்களில் பயணம் செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது, ஆனால் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு ஏதுவானதாக இல்லை. இந்த இஞ்ஜினை அதிகபட்ச வேகத்தில் இயக்குவது மிகவும் கடினமாக உள்ளது. மற்றுமொரு வித்தியாசமான அம்சத்தையும் நாம் ஃபிகோவில் கவனித்தோம். அதாவது, அதிகப்படியான சுழற்சியில் இஞ்ஜின் எவ்வாறு சத்தம் ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் கவனித்தோம். மேலும், வேகமாக ஓடவில்லை என்றால், ஃபிகோ திருப்தியான எரிபொருள் சிக்கனத்தைத் தருவதில்லை. இதிலிருந்து, மிகச் சரியாகத் தன் கடமையைச் செய்யும், ஒரு பயணிகள் வர்க்க இயந்திரம் தான் இந்த இஞ்ஜின் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஸ்விஃப்ட் காரின் இஞ்ஜின் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் K-சீரிஸ் மோட்டார், இந்த பிரிவில் உள்ள பெட்ரோல் இஞ்ஜின்களுக்கு அளவுகோலாகச் செயல்படும் அளவிற்கு மிகச் சிறந்த பெட்ரோல் இஞ்ஜினாக இது திகழ்கிறது.

12

1.5 லிட்டர் Ti-VCT
1.5 லிட்டர் Ti-VCT இஞ்ஜின் தற்போது டைட்டானியம் டிரிம்மில் உள்ள 6 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டு வருகிறது. உச்சரிக்கும் போது கவர்ச்சிகரமாக இருக்கும் இந்த இஞ்ஜின், சிறந்த செயல்திறனைக் கொடுப்பதில்லை. ஏட்டுச் சுரக்காய் கரிக்கு உதவாது. கியர்பாக்ஸ் சிறந்த முறையில் செயல்பட்டு, தேவையான அளவு டார்க்கை உற்பத்தி செய்யவில்லை. எனினும், வசதி அடிப்படையில் பார்க்கும் போது, இந்த இஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் கலவை வெற்றி பெற்றதாகவே இருக்கிறது. வாகன இயக்கம் மிருதுவாக இருந்தால், ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் நிச்சயமாக உங்களது பணப்பைக்கு வேலை வைக்காது. மேலும், இந்த பிரிவிலேயே பெட்ரோல் இஞ்ஜினுடன் இணைக்கப்பட்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் வரும் ஒரே மாடலான கிராண்ட் i10 காரில் உள்ள இஞ்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் கூட்டணியை விட ஃபிகோவில் இணைக்கப்பட்டுள்ள இந்தக் கலவை பல மடங்கு மேலானதாக இருக்கிறது.

Table4

13

1.5 லிட்டர் TDCi
நீங்கள் கார் ஓட்டுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நபராக இருந்தால், நிச்சயமாக டீசல் இஞ்ஜினையே தேர்வு செய்ய வேண்டும். 100 PS சக்தியை உற்பத்தி செய்யும் இந்த இஞ்ஜின், இலகுவான பாடி மற்றும் கச்சிதமான அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளதால், உங்களது கையைக் கடிக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்ச டார்க் அளவே சிறந்ததாக இருக்கிறது. ஏனெனில், அப்போதுதான் இந்த இஞ்ஜின் சுழற்சி அதிகமாகும் போது வண்டி சீராக ஓடுகிறது. சத்தம், அதிர்வு மற்றும் கடுமையின் (NVH) அளவு கேபினுக்குள் சற்றே அதிகமாக உள்ளன. எனினும், இஞ்ஜினின் சீரிய திறனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தப் பிரச்சனையை ஒதுக்கிவிடலாம். ஓட்டுவதற்கு இன்பமாக, பயணம் செய்ய வசதியாக மற்றும் சிக்கனம் போன்றவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது ஃபிகோவின் டீசல் வேரியண்ட் மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது.

சவாரி மற்றும் கையாளும் திறன்:


14
ஸ்விஃப்ட் காரில் உள்ளதை விட ஃபிகோவில் உள்ள சஸ்பென்ஷன் குறிப்பிடத்தக்க வகையில் மென்மையாக உள்ளது. சொகுசான பயணத்தை உறுதி செய்வதற்காகவே சஸ்பென்ஷன் இணைக்கப்பட்டுள்ளதால், மேடுகளில் ஏறி இறங்கும் போது அதிர்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. எனினும், உடைந்த சாலைகளின் மீது பயணம் செய்யும் போது, பின்புறம் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகள், தூக்கிப் போடும் உணர்வை அனுபவிக்கின்றனர். ஃபோர்டின் தரமான எலெக்ட்ரானிக் பவர் ஸ்டியரிங் அமைப்புடன் ஒப்பிடும் போது, ஃபிகோவில் சற்றே இலகுவாக உள்ளது. மேலும், பழைய தலைமுறை ஃபிகோ மாடலின் ஹைட்ராலிக் அமைப்புடன் ஒப்பிடும் போது, புதிய ஃபிகோ ஏற்படுத்தும் உணர்வு மற்றும் கருத்து எதிரொலி ஆகியவை நேர்மறையாக இல்லை. நெடுஞ்சாலைகளில் மூன்று இலக்க வேகத்தில் செல்லும் போது, சற்றே அச்சுறுத்தும் விதத்தில் இருந்தாலும், எத்தகைய கடுமையான போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்கும் விதத்தில் புதிய ஃபிகோ உருவாக்கப்பட்டுள்ளது.. எவ்வளவு வேகமாக சென்றாலும், ஃபிகோவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனினும், வேகமாகச் செல்லுவதற்கு முன், தடியான ரப்பரை வாங்கிப் பொருத்திய பின்பு அதைச் செய்து பார்க்கவும். இதன் டயர்கள் சிறந்த கிரிப் தருவதாக இல்லை. முன்புறத்தில் உள்ள பிரேக் பகுதிகளை டிஸ்க் பிரேக் நிர்வாகிக்கிறது. அதே சமயம், பின்புற பிரேக் பகுதிகளை ட்ரம் பிரேக்குகள் நிர்வகித்து வருகிறன. பிரேக் அமைப்பு இதில் கடுமையாக இல்லை. மேலும், பெடல் அமைப்பின் மீது, ஃபிகோவின் வாடிக்கையாளர்களின் கருத்தும் சாதகமாக உள்ளது. பல முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பும், பிரேக்குகள் எந்த வித தொந்தரவும் இல்லாமல் சிறந்த முறையில் செயல்படுகின்றன.

வேரியண்ட்கள்


மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் புதிய ஃபிகோ மாடல் வெளிவருகிறது. அடிப்படை வேரியண்ட்டில், கட்டாய தேவையான குளிர்சாதன வசதி கூட இடம்பெறவில்லை. ஆம்பியண்ட் வேரியண்ட்டில் இரட்டைக் காற்றுப் பை வசதி கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பயணிகள் பகுதியில் பக்கவாட்டுக் கண்ணாடி, முன்புறத்தில் பவர் விண்டோஸ் மற்றும் கிரில் மீது வெள்ளி நிறத்தில் வேலைப்பாடு போன்றவை உள்ளன. கார் வாங்கும் போது உங்கள் பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருக்கவேண்டும் என்றால், நீங்கள் ஆம்பியண்ட் மாடலைத் தேர்ந்தெடுக்கலாம், ஏனெனில், இதில் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. அதே சமயம், ஃபிகோவின் ட்ரெண்ட் வேரியண்ட்டை நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் ரிமோட் மூலம் திறக்கும் வசதி மற்றும் ஸ்டியரிங் மேல் கட்டுப்பாட்டுக் கருவிகளைக் கொண்ட, அருமையான 4 ஸ்பீக்கர்களைக் கொண்ட தரமான ஆடியோ சிஸ்டத்தின் பயன்களை அனுபவிக்கலாம். மேலும், விங் மிரர்கள் மற்றும் 4 பவர் விண்டோக்களிலும் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. டைட்டானியம் டிரிம்மில், முன்புறத்தில் ஃபாக் விளக்குகள், பின்புறத்தில் டிஃபாகர் மற்றும் தட்பவெப்பத்தை கட்டுப்படுத்தும் கருவி போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, இந்த வேரியண்ட்டில் EBD இணைக்கப்பட்ட ABS வசதி இடம்பெறுகின்றது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். உயர்தர மாடலான டாப் ஸ்பெக் டைட்டானியம்+ வேரியண்ட்டில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன. இதில், பக்கவாட்டு மற்றும் கர்ட்டன் காற்றுப் பைகள் பொருத்தப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது, மியூசிக் சிஸ்டம் மற்றும் வாய்ஸ் கமாண்ட் போன்ற பல அம்சங்கள் 4.2 அங்குல திரையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Table5

பாதுகாப்பு அம்சங்கள்:
15
பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, ஃபிகோவின் டாப் வேரியண்ட்டான டைட்டானியம்+ -ல் வரும் 6 பாதுகாப்புக் காற்றுப் பைகளை நாம் குறிப்பிட்டுக் கூற வேண்டும். அனைத்து வகைகளிலும் இரட்டைக் காற்றுப் பைகள் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் EBD அம்சம் இணைந்த ABS வழங்கப்படுகிறது. ஃபோர்ட்டின் ஆட்டோமேடிக் வேரியண்ட்டில் ஹில் லாஞ்ச் அஸ்சிஸ்ட் மற்றும் ESP அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

Table6

தீர்ப்பு:
நகரத்திற்குள் பயணிக்க ஃபோர்ட் ஃபிகோ சிறந்த வாகனமாகும். அது மட்டுமல்ல, அதிக வசதி, சிக்கனம் மற்றும் ஓட்டும் போது இன்பம் தருவதாக உள்ளது. உள்ளேயும் வெளியேயும் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், மொத்தத்தில் பார்க்கும் போது, அனைவரையும் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபிகோ மாடல், நகரத்தில் உள்ள நெருக்கடியான போக்குவரத்தைச் சமாளிக்க உதவும் ஹாட்ச் என்ற பெயரை எடுத்துள்ளது. இதன் பெட்ரோல் இஞ்ஜின்கள் தரமானவையாக இருப்பதால், நகரங்களுக்குள் ஓட்டுவதற்கு வசதியாக உள்ளன. ஓட்டுவதற்கு மிகவும் அருமையாக இருக்க வேண்டும் என்பது உங்களது இலக்குகளில் ஒன்றாக இருக்குமென்றால், ஃபிகோ டீசல் இஞ்ஜின் உங்களுக்கானதாக இருக்கும். மொத்தத்தில், கிராண்ட் i10, போல்ட் மற்றும் ஸ்விஃப்ட் போன்ற கார்களை நேருக்கு நேர் நின்று சமாளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.